Apr 24, 2009

நயன்தாராவும் ஞானும் இன்னபிறவும் பகுதி II

பதிவுலக பிரபலங்களுக்காக ஒரு முன் குறிப்பு;

இது ஒரு மொக்கைப்பதிவு மட்டுமே, யார் மனதையும் புண்படுத்துவதற்காக அல்ல. எனது இப்பதிவுகளினால் யாருடைய மனதையேனும் காயப்படுத்தியிருந்தேனேயானால், வருந்துகிறேன்.

நீண்ட நாட்களாகவே பதிவுலகின் வெளி வாசகனாயிருந்து, நமக்கெல்லாம் தமிழ் எழுத (லகர, றகர மற்றும் தட்டச்சு) வராது என்றிருந்த போது, நண்பர் கோவி.கண்ணனின் பிழைகளுடன் எழுதுபவர்கள் இனி எழுத வேண்டாம் ? மற்றும் முன்முடிவு ! ஆகிய பதிவுகள்தான் என்னையும் இங்கு எழுதத்தூண்டியது.

இந்தக்கடை விரிப்பினால் எனக்கு பைசா பிரயோசனமில்லை, ஆனாலும் ஒரு அரிப்பு... (விரிப்பு, அரிப்பு.... அதா வருது) அதுதான் என்னை எழுதச்சொல்வது, மற்றபடி எழுத்து என் தொழில் அல்ல. நான் வேறு துறையைச்சார்ந்தவன்.

******************************************************

பின் குறிப்பு; (இத கடைசிலதான சொல்லணும்னு கேட்காதீங்க) இந்த பதிவு பற்றி கண்ணன் என்ற நண்பனிடம் மின்அளவலாவிக்கொண்டிருந்தேன், (ஆள் பேருக்கேத்த மாதிரி, புரிஞ்சிருச்சில? இதுக்கும்மேல விளக்கினா... அடிய அட்டாச்மென்ட்ல அனுப்புவான்) அவன், 'உனக்கு ஏன்டா இந்த தேவையில்லாத வேலை, பைசா பிரயோசனமா ஏதாவது பண்ணுன்னு சொல்லிட்டு... சரி, என்ன தலைப்பு வைக்கப்போறன்னு கேட்டான்,' 'நயந்தாராவும் ஞானும் இன்னபிறவும்' என்று சொன்னேன். அவன் உடனே, டேய்..பார்த்துடா.. ஏற்கெனவே உனக்கு தமிழ் தகராறு, நயன்தாரவும் ஞானும் இன்ன பிராவும் ன்னு டைப் பண்ணிடாத அடி விழுந்திடும்' அப்டின்னான்.

என்ன கருமம்டா இது.. இதுல இவ்லோ சட்டச்சிக்கல் இருக்கறது தெரியாம போச்சே... பேசாம தலைப்ப மாத்திவச்சுடுவோம்னு நினைச்சேன். ஆனாலும் நம்ம குறிக்கோள் (கடை, சரக்கு, ஹிட், பத்து கோடி நோட்..) அதுக்கு இடம் குடுக்கல...

நிற்க! சம்பவத்திற்குள் நுழைவோம்.

இந்த பதிவின் முதல் பாகமாகிய பதிவுலகினர்காக - நயந்தாராவும் ஞானும் இன்னபிறவும் :) வாசிக்க இங்கே சொடுக்கவும்

ஞான் - எனக்கு எப்படியோ மலையாளத்தின் மீது காதல் வந்துவிட்டது. எதனால் அது? தமிழ்நாட்டு எழவு அரசியல் மீதுள்ள வெறுப்பா? அல்லது அங்குள்ள எளிய அரசியல்வாதி, உண்மையான வேற்றுமையில் ஒற்றுமை, இயற்கைச்சூழல், திரைப்படம், அழகான பெண்கள் இன்ன பிறவற்றின் மீதுள்ள ஈர்ப்பா? தெரியவில்லை. ஆனால் காதல்.. கேரளத்தின் மீது பற்று ஒரு ஈர்ப்பு.

மலையாளம் கற்கத்தொடங்கிய ஆரம்பக்காலங்களில் ஏசியா நெட் டில் வரும் தொடர்களையும், விளம்பரங்களையும் ஒன்றும் புரியாவிட்டாலும் ரசித்துக்கொண்டிருப்பேன். அந்த பேச்சுநடை என்னை கவர்ந்தது. குறிப்பாக பெண் குரல். அப்படியிருக்கும் பொழுது முதன் முதலில் நேரில் பேச வாய்ப்புக்கிட்டிய இச்சந்தர்பத்தை நழுவ விட மனமில்லாமல் (மொழியின் மீதிருந்த காதல், தவறாக ஏதும் நினைக்கவேண்டாம்) நீட்டிக்கொண்திருந்த போது,

என் மனைவியின் குரல், "ஏங்க, ரொம்ப நேரம் இங்கயே உக்காந்து பேசிட்டிருந்தாச்சு, வீட்ல இன்னும் சாப்பாடு ரெடி பண்ணல.. வாங்க போகலாம்" "

அப்போதுதான் உரைத்தது. மாலை நேரம் வந்தோம், இரவு நெருங்கிவிட்டதென்பது. 'சரிம்மா...வா, போகலாம்'

அவள் பக்கம் திரும்பி, 'அப்பச்சரி, ஞங்களு போகுந்நு... ஒருபாடு சமயாயி, அவிட கய்கானொன்னு வச்சிட்டில்ல'

அதற்கவள், 'ஒ.. இவிடதன்ன கயிகாமாயிருந்நு, ஞானு மறந்நு போயி... சாரி எட்டோ...'

'எய்......அதொன்னு கொழப்பல்ல, இநி சமயுண்டுல்லோ' என்று நானும் விடைபெற்றேன்.

விடிவதற்குள் அவள் பயொடேடா,

ஊர் த்ரிசூராம், அங்கு கோயில்களில் நடக்கும் த்ரிசூர் பூரம் மிக பிரசித்தி, அதில் கலந்துகொள்வதற்காகவே யானைகள் ப்ரத்தியேகமாக வளர்க்கப்படுகின்றன. அந்த யானைகளில் அவள் பகுதி யானை தான் முதல் பரிசு பெறுமாம். பி. ஃபார்ம் படிப்பு. கணவன் இங்கிருப்பதால், இங்குள்ள மருத்துவமனையில் வேலை கிடைத்தால், இருவரும் இங்கேயே நிரந்தரமாய் தங்கிவிடலாமென திட்டமாம். ஆனால், பி. எஸ். ஸி நர்ஸிங் முடுத்திருந்தால், எளிதில் வேலை கிடைக்குமெனவும். நர்ஸூக்கான வேலை வாய்ப்புதான் உலகெங்கும் அதிகமாக உள்ளதாகவும், மற்றும் பல இன்ன பிறக்களும் சொல்லிக்கொண்டிருந்தாள், அவையனைத்தையும் சொல்லலாமென்றால்..... அதற்குள், விடிந்துவிட்டது. இன்று அலுவலகம் செல்லவேண்டும்.

அலுவலகம் கிளம்பிக்கொண்டிருக்கையில், 'ஏம்மா...உனக்கு போரடிச்சுச்சுன்னா... பக்கத்து ஃப்ளாட்ல போயிருந்துக்கோ...டைம் பாஸாகும்' என்றுதான் சொன்னேன்.

'உங்க வேலைய பாத்துகிட்டு போங்க, எங்களுக்கு தெரியும்...என்ன செய்யணும்னு...நாங்க பாத்துக்குறோம்...... &@#$%&# பொரித்து தள்ளிவிட்டாள்.

ஆரம்பத்துலயே ஆரம்பிச்சுட்டாங்ஞலா... என நினைத்துக்கொண்டு, அலுவலகம் வந்துவிட்டேன்.

அவுட்லுக் திறந்தால் முதல் மடல், என் மனைவியிடமிருந்து வந்து வழுகிறது. திகிலுடன் திறந்தேன், '

அன்புள்ள கணவனுக்கு,

நீங்கள் அடுத்த ஃப்ளாட்டுக்கு போவதோ, அந்த பெண்ணிடம் பேசுவதோ எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. (அவளும் அவள் மொகரகட்டையும்... எப்படி இளிச்சு இளிச்சு பேசுகிறாள். இந்த மலையாளி பொண்ணுங்களே இப்படித்தான், யாரையாவது வலைச்சு போட பாப்பாளுக...)தயவுசெய்து இனியும் அந்த பக்கம் செல்லவேண்டாம். மீறிச்சென்றால் விபரீத விளைவுகளை சந்திக்க நேரிடும்.

இப்படிக்கு,

அன்புள்ள மனைவி,

அதன் பிறகுதான் தெரிந்துகொண்டேன், நம் பெண்களிடம் மலையாள பெண்களுக்கு இருக்கும் மதிப்பை?.

இனியும் அந்த பக்கம் செல்ல நான் என்ன மடையனா? அதோடு அந்த பெண் அங்கிருப்பதை மறந்துவிட்டேன்.

நயன்தாரா - என்னமோ தெரியலங்க நயன்தாராவ பிடிச்சிருந்துச்சு. ஒரு வா......ர்த்த சொல்.....ல ஓடி வந்தாங்களே.... அப்பத்லருந்து. என்ன காரணம்னு சொல்ல தெரியல, ஆனா பிடிச்சிருந்துச்சு.

நான் அதிகமாக திரைப்படம் பார்ப்பதில்லை. நல்ல பாடல்கள் ரசிப்பேன். விதிவிலக்காக நயன்தாரா ஆடிய சில குப்பை பாடல்களும். அந்த வரிசையில், சத்யம் ல் ஒரு நயன்தாரா பாடல் வருமே அதுகூட.. அதில தான் ஆரம்பித்தது வினை,

ஒரு நாள் அந்த பாடலுக்கு நயன்தாரா ஏசியா நெட் டில் ஆடிக்கொண்டிருந்தாள், நானும் பழக்கதோஷத்தில், 'நயன்தாரா.... ச்சும்மா..... சொல்லக்கூடாது...' என்று சும்மா சொல்லிவிட்டேன். டங்ங்ங்ங்ங....பின்னாலிருந்து விழுந்தது மண்டையில் கொட்டு. 'என்னைய பக்கத்ல வச்சுக்கிட்டே நயன்தாரா.... ச்சும்மா..... சொல்லக்கூடாதா... அப்ப நான் இல்லாதப்ப... என்னல்லாம் செஞ்சிருப்பீங்க? ம்ம்ம்ம்ம....' அப்பா அப்படி ஒரு முறைப்பு... அதற்கு முன் எப்போதும் பார்த்ததில்லை.

அடி வாங்கறது நமக்கென்ன புதுசா? இதெல்லாம் சகஜம்பா....

பிறகொருநாள், நயன்தாரா பல்லேரிக்கா விற்கும் பாடல்... பழைய அடி மறந்துபோய், 'ஐ... நயன்தாரா' என்று கத்திவிட்டேன். என் மனைவி ஒன்றும் சொல்லவில்லை, எனக்கு ஆச்சரியம். அனுமதி கிடைத்துவிட்டதோ?...

அடுத்த பாடல், கா.....ற்றின்.... மொழி....ஒலியா... இசையா...

பின்னாலிருந்து சத்தம் வந்தது, 'ஐ.. ப்ருத்வி ராஜ்'

******************************************************

ஐயா... யாரவது, 30 நாளில் மலையாளம் மறப்பது எப்படி ன்னு புத்தகமோ, பதிவோ... போட்டிருத்தால்... தயவுசெய்து லிங்க் அனுப்பிவைக்கவும்.

******************************************************

அன்பார்ந்த வாக்காள பெருங்குடிமக்களே..

ஒங்க பொன்னான வாக்குகள்ல ஒண்ண எனக்கும் போடுங்க...

16 comments:

  1. பொட்டாச்சு...

    (போட்டாச்சு...)

    வாழ்த்துக்கள்..,

    ReplyDelete
  2. இத.. இத.. இத.. இதத்தான் நான் எதிர்பார்த்தேன். பொட்டாச்ச தூக்கி போட்டாச்சு :)
    வருகைக்கும் குத்துக்கும் நன்றி தெய்வம்!!!

    ReplyDelete
  3. //டேய்..பார்த்துடா.. ஏற்கெனவே உனக்கு தமிழ் தகராறு, நயன்தாரவும் ஞானும் இன்ன பிராவும் ன்னு டைப் பண்ணிடாத அடி விழுந்திடும்' அப்டின்னான்.//

    டைமிங் கலக்கல் !

    :)

    //ஞான் - எனக்கு எப்படியோ மலையாளத்தின் மீது காதல் வந்துவிட்டது. எதனால் அது?//

    எனக்கும் தான் ஒரே ஒருமுரை எர்ணாகுளம் போய் வந்த பிறகு மலையாளம் மேல எனக்கும் அளவு கடந்த காதல் வந்துவிட்டது.

    இதை தட்டச்சும் இப்பக் கூட மலையாளப் பாடல்கள் தான் கேட்டுக் கொண்டு இருக்கிறேன். நம்புங்க !
    :)

    ReplyDelete
  4. மலையாளம்... ம்ம்ம்.... அப்படியே கொழஞ்சி கொழஞ்சி பேசுவாங்களே... சரி.. விடுங்க... அப்புறம் பசங்க எல்லாரும் 'எப்படிட்டா மலையாளம் கத்துகிட்டா'ன்னு விபரீதமா முடிச்சுப் போட்டுருவாய்ங்க...

    அப்புறம் ஜெய்ஹிந்த்புரம் சுப்ரமணியபுரம் பக்காத்துலதான் இருக்கா?

    ReplyDelete
  5. வாங்க ஜி முதல் வருகைக்கு நன்றி...
    ஆமாங்க..ஜெய்ஹிந்த்புரம் பக்கத்துலதான் சுப்ரமணியபுரம் இருக்கு.

    அடிக்கடி வருக! ஆதரவு தருக!!!

    ReplyDelete
  6. சரியான ராவடி.. நிறைய டைமிங் ஜோக் அடிக்கிறீங்க.. தொடர்ந்து எழுதுங்க.. இங்க எழுதுற எல்லாருக்குமே இது தொழில் கிடையாதுங்கோ.. ஆனா இணையம் மூலமா உங்களுக்கு நிறைய நண்பர்கள் கிடைப்பாங்க.. ஆமா நீங்க எந்த ஏரியா? நான் ஜீவா நகர்ல இருபத்து வருஷமா இருந்திருக்கேன்..

    ReplyDelete
  7. //கார்த்திகைப் பாண்டியன் said...
    சரியான ராவடி.. நிறைய டைமிங் ஜோக் அடிக்கிறீங்க.. தொடர்ந்து எழுதுங்க.. இங்க எழுதுற எல்லாருக்குமே இது தொழில் கிடையாதுங்கோ.. ஆனா இணையம் மூலமா உங்களுக்கு நிறைய நண்பர்கள் கிடைப்பாங்க.. ஆமா நீங்க எந்த ஏரியா? நான் ஜீவா நகர்ல இருபத்து வருஷமா இருந்திருக்கேன்..//


    நன்றி கார்த்திகைப் பாண்டியன், நிச்சையமாக, நல்ல நண்பர்கள் கிடைப்பார்கள் கிடைத்துள்ளார்கள், அதற்கு நீங்கள் ஒரு சான்று.


    நான் அதிகமாய் இந்தியாவிற்கு வெளியே இருந்துவிட்டதால், ஊருக்குள் நண்பர்கள் குறைவு. பாருங்கள்... நானும்தான் ஜீவாநகர் முதல் தெருவில் பிறந்து வளர்ந்தேன்.(உங்களுக்கு சீனியர்) நம்மிருவருக்கும் அறிமுகமில்லை.... என்ன கொடுமை... கார்த்தி இது.:)

    ReplyDelete
  8. யேய்..என்ட ஓமனக்குட்டி..
    "ஞான் நாள தனிச்சு வரும்.".னு சொல்லலயா?
    சொன்னா அண்ணிக்கிட்ட குத்து விழுமா?

    ReplyDelete
  9. \\அடி வாங்கறது நமக்கென்ன புதுசா? இதெல்லாம் சகஜம்பா....\\
    வாய்யா..வாய்யா..கைப்புள்ள!

    ReplyDelete
  10. Many creative friends are from Jaihindpuram, Jeeva nagar and so on. I am also from Jaihindpuram right from my birth. pl give your contact ID. let`s chat.

    p viswanathan

    ReplyDelete
  11. This is in continuation of my previous comments. In fact i got attracted by very name of this blog. I am 42 years old now. during my school and college day, jaihindpuram was very notorious for rowdism. Two groups will fight betweent them always. But it will not affect the general public. A live, always busy area even during midnight. We used to plan our dinner after seeing second show cinema. The parotta taste (samaya sanjeevi in particular in those days) is lingering in my mind. The tea stalls with quality audio system playing ilayaraja songs were our favourite time passing places both for chitchat and to wait for our favourite girls. Playing cricket at madura college ground, enjoying pattimandrams and orchestra (Anitha) during veerakaliamman temple festival, theepori arumugams political utterings etc., were very enjoyable.

    About my self: I studied at TVS School and then at TCE, thiruparankundram. My residence was at Aruna stores, 2nd main street.

    Any feedback? pl post it in this same blog.

    ReplyDelete
  12. //டக்ளஸ்....... said...
    ...வாய்யா..வாய்யா..கைப்புள்ள!//

    ஊர்ல வந்து உன்ன பார்த்துக்கிறேன்யா...

    ReplyDelete
  13. //தமிழன்-கறுப்பி... said...
    :)//

    புன்னகைக்கு நன்றி! தமிழன்-கறுப்பி,
    அடிக்கடி வந்து புன்னகையேனும் விட்டுச்செல்க!!!

    ReplyDelete
  14. அன்பின் விஸ்வநாதன், ரவுடியிசம் குறித்து தாங்கள் சொல்வது மிகச்சரியாயிருந்து பத்து பதின்ஐந்து வருடம் முன்புவரை, D2 (இப்ப மாத்திட்டாங்களோ?) காவலர்கள் அவற்றை கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டார்கள் அல்லது நம்மவர்கள் நாகரிகமடைந்துவிட்டார்கள் எனலாம்.

    இரண்டாம் காட்சி திரைப்படம், சமய சஞ்சீவி பரோட்டா, இளையராஜா பாடல்கள் // and to wait for our favourite girls.// இவையெல்லாம், நான் வேறொரு தலைப்பில் இன்று எழுதுவதாயிருந்த பதிவை மறக்கச்செய்துவிட்டது. நன்றி அடிக்கடி வருக!

    ReplyDelete

மனம் திறந்து செதுக்குங்கள், என் எழுத்துக்களை.