Jun 5, 2009

மீண்டும் சிக்கிக் கொண்டேன்.

வந்துட்டேங்க… இருபது நாள் விடுப்பில் இந்தியா சென்று மீண்டும் இங்கு (குவைத்) வந்துவிட்டேன்.

இருந்தது இருபது நாட்கள் தான் என்றாலும் பல நிகழ்வுகள்.

  • எனது வாக்குக்காய் திணிக்கப்பட்ட 500 ரூபாய் கவர், என்னிடம் தரப்பட்டது.
  • வெற்றி பெற்றபின் ஒரு சேலையும், வேட்டியும் வீட்டில் எறியப்பட்டது.
  • என் சகோதரியின் மகளின் மகனுக்கு எல்.கே.ஜி அட்மிஷனுக்கு அலைந்த போது, ஒவ்வோரு பள்ளியிலும் ஒவ்வோரு பதில். தாயும் தந்தையும் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். 60,000 ரூபாய் டொனேஷன், அதுவும் ஜனவரியிலேயே அட்மிஷன் முடிந்து விட்டது. உங்களுக்கான இட ஒதுக்கீடான 3.5 % முடிந்துவிட்டது. முதலில் ப்ரி.கே.ஜி யில் தான் சேர்ப்போம். மற்றும் பல…
  • மழையில் நனைந்தது. மகனோடு நனைந்தது.
  • வெட்டியாய் சுற்றி வெய்யிலை வெறுப்பேத்தியது.
  • குற்றாலத்திற்கு செல்லும் வழியிலேயே அருவியில் தண்ணீர் இல்லை என்று செய்திவர, அப்படியே திரும்பியது.
  • மதுரை போத்தீஸ்ற்கு திறப்பு தினத்தன்று சென்று கூட்ட நெரிசலில் சாறானது.
  • 2 அரியர் குறுஞ்செய்தியோடு எழுதியது.
  • இன்னும் பல… (பிறகு)

அத்தனையையும் விட பதிவர் சகாக்களை சந்தித்தது மறக்க முடியாதது. அவற்றையெல்லாம் பிறகு பதிக்கிறேன்.

மீண்டும் அதே இயந்திரப் பற்களில் சிக்கிக் கொண்டேன். இனி அது தான் என்னை, என் வாழ்வை சுழற்றும். ஆனாலும் ஒரே மகிழ்ச்சி, பதிவுலக தொடர்பு தொடரும்.