Showing posts with label பதிவுலகம். Show all posts
Showing posts with label பதிவுலகம். Show all posts

Oct 28, 2010

ஜிகர்தண்டா - மீண்டு மீண்டும்

நீண்ட நாட்களுக்குப் பிறகு...


மீண்டும் எழுத வேண்டும் என்ற எண்ணம் வந்து ஏறக்குறைய ஒரு வருடமாகிறது. ஒரு பத்தி எழுதியதும் பணிச்சுமை, அலுப்பு, எனக்கே வாசிக்க விருப்பமின்றி என பல காரணங்களால் அத்தோடு குப்பைக்கு சென்ற எழுத்துக்கள் ஏராளம். இதை சிசுக்கொலை அல்லது கருக்கலைப்பு என்றும் சொல்லிக் கொல்லலாம். இம்முறை சாண் பிள்ளையானாலும் என் பிள்ளை என்ற எண்ணத்திலேயே எழுத ஆரம்பிக்கிறேன். இது நான் வீட்டிற்கு சென்று உண்டுறங்கும் நேரம். இதற்கு மேலும் யாரும் வந்து என் அலுவலகத்தில் 'க்யூ' வரிசையில் நிற்க மாட்டார்கள். என் வீட்டிலிருந்து அழைப்பு வருவதற்குள் இதை எழுதி பதித்து விட வேண்டும் என்றே எழுதுகிறேன். அப்படியொன்றும் அவசரமாகச் சொல்வதற்கொன்றுமில்லை. இது ஒரு மீள் தொடக்கமாக இருக்கட்டும் என்பதற்காகவே இதை எழுதுகிறேன். இதில் ஏதும் விஷயத்தை தேடாதீர்கள், தொலைந்த நான் இங்கு மீண்டு வந்ததாக எண்ணம் கொள்ளலாம்.

ஒரு வருடமாக இங்கு ஏதும் எழுதவில்லையே தவிர வாசிக்க வேண்டிய பதிவுகளை வாசித்து வந்திருக்கிறேன். நேரமிருக்கும் போது தேவைப்படும் இடங்களில் மறுமொழியும் இட்டுவந்திருக்கிறேன்.

கடந்த வருடத்தை திரும்பி பார்க்கிறேன்-
குவைத்தில் இருந்து இந்தியா திரும்பியதும், நண்பர் நர்சிம் உதவியால் கிழக்கு பதிப்பகத்துடனான நட்புறவில் சிறிய வியாபாரம் செய்தது. சென்னையில் சில மாதங்கள் இருந்த போது ஒரு பதிவர் சந்திப்பில் கலந்து கொண்டது. அங்கு சற்றே கலவரச்சூழல் நிலவிய போது ஆளவிடுங்கப்பா என்று அடிபடாமல் திரும்பியது. மறுநாள் பதிவுச் செய்திகளில் எந்த வித சம்பாவிதமும் நடக்கவில்லை என்பதை வாசித்தறிந்து சற்றே ஏமாற்றம் அடைந்தது.

சற்றும் எதிர்பாராத நிகழ்வு நண்பர் நர்சிம் சர்ச்சையில் சிக்கிக்கொண்டது. எதிர்பார்த்தது போலவே அதிலிருந்து அவர் மீண்டு வந்தது. அந்த சர்ச்சையின் போதும் எதிர்பாராத திருப்பங்களும் சில பூனைகளும் வெளியே வந்தது. எப்போதும் போலவே லக்கி அதிஷா பெயர் கடிபட்டது.

அதைத் தொடர்ந்து இப்போதும் அடிக்கடி பிரிந்து சேரும் பதிவுலக பிதாமகன்கள் அவ்வப்போது அடித்துகொள்வது.

மதுரையில் நடந்த புத்தக கண்காட்சியில் ஞாநியுடனான சந்திப்பு மறக்க முடியாதது. மீண்டும் பதிவர்களை சந்தித்துக்கொண்டது. இடுகை, பின்னூட்டம் என்ற சொற்களை ஏற்றுக்கொள்ளாத ஞாநி, பதிவு, மறுமொழி என்பதே சரி என்பதை சரியாகச் சொல்லி விளக்கியது. மீண்டும் சீனா ஐயா வீட்டில் பதிவர்களை சந்தித்தது.

இடையே நடந்த ஆல் இன் ஆல் ராஜன் திருமண நிகழ்வு. (வாழ்த்துகள் ராஜன், நீங்கள் இருவரும் எல்லா வளமும், நம்பிக்கையும் பெற்று வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். நன்றி திருமதி. ராஜன், அவரை 'மனம்' மாற்றியதற்காக)

-------------

சமூக ஆர்வலர் அருந்ததி ராய் பொது நிகழ்ச்சி ஒன்றில் பேசியதற்காக தேச பிரிவினைவாத சட்டத்தில் கைது செய்யப்படலாம் என்ற செய்தியை தொடர்ந்து கஷ்மீரில் இருந்து அறிக்கை வெளியிட்டுள்ளார். 'இந்த நாட்டை நினைத்தால் வெட்கமாக இருக்கிறது' என்கிறார். ஒடுக்கப்பட்டவர்களின் குரலாக ஓங்கி ஒலிக்கும் அவருடைய குரல் அரசியல்வாதிகளுக்கு தொண்டையை அடைக்கிறது. அ.மார்க்ஸ் எழுதியிருக்கும் காஷ்மீர்- என்ன நடக்குது அங்கே? என்ற புத்தகம் வாசித்துக்கொண்டிருக்கிறேன். அதை விரிவாக பிறகு அலசுவோம்.

அடுத்த மாதம் மதுரை அழகர் மகனுக்கு திருமணமாம், இப்போதே பெரிய போஸ்டர்கள் சுவர்களை ஆக்கிரமிக்கத்தொடங்கிவிட்டன. அவர் ஹனிமூன் போகும் வரை மதுரை விழி பிதுங்கி திணரப் போகிறது. நகரெங்கும் வளரும் பெரிய பெயர் தாங்கிகளைத் தவிர ஒன்றும் வளர்ந்துவிடவில்லை. சூரியன் ஆட்சி செய்தும் மதுரைக்கு விடியல் இல்லை.

ஐந்து வருடங்களுக்குப்பிறகு மழையில் நனைகிறேன். போகும் இடமெல்லாம் கிடைக்கும் தண்ணீர் குடிக்கிறேன். நேரம் தவறிவிட்டால் கிடைப்பதை சாப்பாடாக்கிக் கொள்கிறேன். இப்போதெல்லாம் என் வயிற்றில் கடலை மிட்டாயும், கமர்கட்டுமே அதிக இடங்களை நிரப்பிக் கொள்கிறது. இப்போதும் 21;15 இரவு உணவு பற்றிய நினைப்பின்றி எழுதிக்கொக்..கொ.. கொண்டிருக்க முடியாமல் இத்தோடு பப்ளிஷ் பட்டனை அழுத்திவிடுகிறேன்.

Dec 25, 2009

டைம் மேனெஜ்மண்ட்

சென்ற மாதம் நான் கலந்துகொண்ட ஒரு ஓரியண்டேஷனை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட பதிவு. டைம் மேனெஜ்மண்ட் -  இதை நம்முடைய தனிப்பட்ட வாழ்விலும் நடைமுறைப்படுத்தி பயனடையலாம் என்பதால் இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

டைம் மேனெஜ்மண்ட் - சமய | கால | நேர மேலாண்மை என்று பெயர்த்தெடுக்கலாமா? இல்லை டைம் மேலாண்மை? எதுவாகவும் இருந்துவிட்டு போகட்டும், எந்த மொழியில் இருந்தாலும் நம் தினசரி வாழ்வில் நமக்கான நேரத்தை திட்டமிட்டு செயல்படுத்துவதை டைம் மேனெஜ்மண்ட் எனலாம்.

டைம் மேனெஜ்மண்ட் ஏன்?
தினசரி வாழ்வில் நம்முடைய செயல்களை முறையாக திட்டமிடவும், பகுக்கவும். முக்கிய வேலைகளை கண்டறிந்து செயல்படுத்தவும்,
நம்முடைய மற்றும் நம் குழுவுடைய வேலைகளை கொடுக்கப்பட்ட நேரத்திற்குள் முடிக்கவும், செயல்திறன் மற்றும் எண்ணிக்கையை வளர்த்துக்கொள்ளவும் டைம் மேனெஜ்மன்ட் அவசியமாகிறது.
காலம் - சேமித்து வைக்க முடியாது, வெகு விரைவில் அழிந்து போகக்கூடியது. இறந்து போகக்கூடியது, அளவானது. அதனால் தான் அதை சரியாக திட்டமிடுவதும் பகுப்பதும் மிக அவசியமாகிறது.

பொதுப்பிரச்சனைகள்
தெளிவற்ற எதிர்பார்ப்புகள், குறிக்கோள்கள்.
போதிய தொடர்பின்மை.
வீணாகும் முயற்சிகள்.
முறையற்ற திட்டமிடல், முக்கியப்படுத்தல்.
மன அழுத்தம்.

சரியான திட்டமிடல் என்பது; ஆற்றல் மிக்கதாகவும், பயிற்சிக்குகந்ததாகவும், வலைவுதன்மை மிக்கதாகவும், இலகுவானதாகவும், எளிதில் நடைமுறைப்படுத்தக் கூடியதாகவும் இருக்க வேண்டும்.

நேரத்தை திட்டமிடும் போது கவனிக்க வேண்டியவை;
சந்திப்புகள், தொடர்புகள்
காலாவதி தேதி குறிக்கப்பட்டவை
நடந்து கொண்டிருக்கும் வேலைகளில் தற்போது செய்யவேண்டியவை
குறிப்புகள், எண்ணங்கள், ஆலோசனைகள்
நிதி நிலைகள்
சொந்த வேலைகள்
சமுதாய வேலைகள்
பொழுது போக்கு

குறிப்பாக நேரத்தை திட்டமிடும் போது, அவற்றை முடிக்க வேண்டிய காலத்தையும் வரையருக்க வேண்டும். உதாரணமாக செய்து முடிக்க வேண்டிய வேலை, ஒரு மணி நேரத்திலா, ஒரு நாளிலா அல்லது ஒரு வாரத்திலா என்பதையும் வரையருக்க வேண்டும். அவை அலுவலக வேலையா, சொந்த வேலையா, சமுதாய வேலையா என்பதை பொருத்து அவற்றிற்கான முக்கியத்துவத்தையும் வகைப்படுத்தலாம். இவை ஒவ்வொன்றிலிருந்தும் அவசரமாக செய்து முடிக்க வேண்டியதையும் பகுக்க முடியும். உதாரத்திற்கு; அலுவலகப் பணியில் நமக்கு அவசரமானதையும் முக்கியமானதையும் முதலில் செய்து முடிக்கவேண்டும்.

மேலாளருக்கு செய்து தரவேண்டிய பணிகள் = முக்கியம் ஆனால் அவசரமில்லை. (அது அவருக்கு அவசரமாகவும் முக்கியமானதாகவும் கூட இருக்கலாம்... நமக்கில்லை) இதற்கான முக்கியத்துவத்தை இரண்டாவதாக்கலாம். இதே போல ஒவ்வொறு பணியையும் வகைப்படுத்தி திட்டமிடலாம்.

கீழிருக்கும் மேட்ரிக்ஸ் பாருங்கள்.


ஒரு பதிவர் என்ன வகையில்...
  1. அலுவலகப் பணி = முக்கியமானது+அவசரமானது - முதலில் செய்து முடிக்கப்பட வேண்டியது.
  2. சொந்த மடல்கள் வாசிப்பது = முக்கியமானது ஆனால் அவசரமில்லை - அடுத்ததாகச் செய்யலாம்.
  3.  பதிவு எழுதுவது = அவசரம் ஆனால் முக்கியமில்லை - மதியத்திற்கு மேல் வைத்துக்கொள்ளலாம்.
  4. பின்னூட்டம் | கும்மி | ஜங்க் மெயில் ஃபார்வட் = அவசரமுமில்லை முக்கியமுமில்லை - நேரமிருந்தால் செய்யலாம்.
[யாருப்பா அது... தீர்ப்ப மாத்தி எழுதச் சொல்றது :)]
  • ஒரு வேலையை செய்து முடிக்க நம்மிடம் இருக்கும் காலமும் இன்னபிற சாதனங்களையும் பொருத்து அவற்றிற்கான திட்டத்தை பகுக்க வேண்டும். - ஆள், பொருள், பண பலம்
  • ஒரு வேலையில் நமக்கான பங்களிப்பை பொருத்தே அவற்றின் முக்கியத்துவத்தை அமைக்க வேண்டும் - பணியிடம், குடும்பம், சமூகம்
  • ஒரு வேலையில் நமக்கான பொறுப்பு - மேலாண்மை, உறவு, பொதுநலன்
  • ஒரு வேலையை செய்து முடிக்கும் போது அதற்கிருக்கும் மதிப்பையும் கவனத்தில் கொண்டே நேரத்தையும் திட்டமிட வேண்டும்.
குறைந்தபட்சம் நம்முடைய அன்றாட வேலைகளை ஒரு வாரத்திற்கேனும் சரியாக திட்டமிட்டுச் செய்தால், அடுத்துவரும் வாரத்தில் முந்தைய (திட்டமிட்ட) வார பலன் கண்கூடாகத்தெரியும்.

ஆயிரம் மைல்களுக்கான பயணம் முதல் ஒரு அடியில் இருந்தே ஆரம்பிக்கிறது என்று யாரோ சொல்லியிருக்கிறார். நமக்கான பலன் தரக்கூடிய நம் வாழ்வின் திட்டமிடுதலை இன்றிலிருந்தே ஆரம்பிப்போம்.




Dec 21, 2009

பேயோன், விளம்பரம், பதிவர்கள் - மினி ஜிகர்தண்டா


விஜய் டிவி நீயா நானாவில் நேற்றைய தலைப்பு; வாழ்கையை அதிகம் ரசிப்பது - சோம்பேறிகளா? சுறுசுறுப்பானவர்களா?. தலைப்புக்கு பஞ்சம் வந்துவிட்டதோ என்று நினைத்துக்கொண்டே, சுறுசுறுப்பான நம்ம அணிதான் வெற்றிபெரும் என்ற முன்முடிவோடு பார்த்துக்கொண்டிருக்கையில், கோபிநாத் உடைய ஆதரவு சோம்பேறிகளுக்கு இருந்தது அதிர்ச்சியளிக்கவில்லை. ஒரு சுறுசுறுப்பானவரை பார்த்து கேட்டார், 'இன்று உங்களை கடந்து சென்ற பெண்ணை ரசித்தீர்களா? அதை வர்ணிக்க முடியுமா?' நம்மாள் அதான் சுறுசுறுப்பானவரால் முடியவில்லை. ஒரு மழையைக்கூட அவரால் வர்ணிக்க முடியவில்லை. இவரையெல்லாம் யார் சுறுசுறுப்பானவர் பக்கம் சேர்த்தது? இவர்களுக்கு சுறுசுறுப்பிற்கும் துறுதுறுவிற்கும் வித்தியாசம் தெரியவில்லை. அவசரக்குடுக்கைகளைத்தான் சுறுசுறுப்பானவர் என்று நினைத்தே பேசிக்கொண்டிருந்தனர். இடையிடையே ஐ.டி கடைக்காரர்கள் சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்டே இருந்தனர். கடைசியில் ஒரு சுறுசுறுப்பானவர், 'அவரிடம் கேட்டீர்களே, இன்று கடந்து சென்ற ஒரு பெண்ணை ரசித்தீர்களா? அதை வர்ணிக்க முடியுமா என்று, என்னால் முடியும். நான் ஒரு பெண்ணை ரசித்தேன், இப்போதும் ரசிக்கிறேன்.' என்று தனக்கு முன் சோம்பேறிகள் அணியில் இருந்த ஒரு பெண்ணைக் காட்டினார். இருவரும் தங்களுக்குள் ஜாடையில் பேசிதையும் சொன்னார். அருமை... நிகழ்ச்சியில் ரசிக்கும்படியாக இருந்த செக்மண்ட் அதுதான்.

வந்தாச்சு வந்தாச்சு... ஒரு குண்டு மல்லிகா... என தொடங்கும் ஏதோவொரு சோப்பு விளம்பரம் என்னை மிகவும் கவர்ந்தது. ரசிக்கும்படியான காட்சியமைப்பு, த்ரிஷாவும் வருகிறாள், தேவையில்லாமல்.
பசங்க ஷோபிக்கண்ணு வரும் ஒரு விளம்பரமும் நைஸ்.
பிங்கோ சிப்ஸ் விளம்பரத்தில் ஒரு பெண் சிப்ஸ் தின்றுகொண்டே பாய் ஃப்ரெண்டிற்கு பறக்கும் முத்தம் கொடுக்கிறாள், அதை காதலன் தன் சட்டைப்பைக்குள் போட்டதும் தீப்பிடிக்கிறது. அவ்வளவு ஹாட்டாம்... சிப்ஸ். சூப்பர் தீம் இல்லையா? எவ்வளவு அதிகப் பொருட்செலவில் தயாரிக்கப்பட்டாலும் ஒருசில விளம்பரங்களே மனதைக் கவர்கின்றன, பதிகின்றன. அதிலும் மிகச்சில மட்டுமே ப்ராண்ட் நேமையும் சேர்த்து மனதில் பதிக்கின்றன. அந்த வகையில் நிர்மா, லக்ஸ் ஸோப், வோடாபோன், வேட்டைக்காரன் போன்றவற்றிற்கு முதலிடம் தரலாம். சில விளம்பரங்கள் ப்ராண்ட் நேமையும் கெடுத்துவிடும் என்பதற்கு கடைசி விளம்பரமும் ஒரு உதாரணம்.

ஈரோடு வாழ் பதிவர்களால் 'ஈரோடு தமிழ் வலைப்பதிவர் குழுமம்' அமைக்கப்பட்டுள்ளது. உங்களுடைய குறிக்கோள்கள், திட்டங்களை அறியவும் ஆவலாய் உள்ளேன் ஐயா. (இந்த உள்ளேன் போட்டாலே.. ஐயா அதுவா வந்து ஒட்டிக்கிடுது) குறிக்கோள்கள், செயல் திட்டங்களை இல்லாத எந்த குழுமமும் வரலாற்றில் இடம் படித்ததில்லை தெரிந்திருப்பீர்கள். உங்களுடைய பணிகள் சிறக்கவும், தொய்வடையாமல் தொடந்து நடைபெறவும் வாழ்த்துக்கள் நண்பர்களே. சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் அண்ணன் கார்த்திகை பாண்டியன் தலைமையில் நாங்களும் ஒன்று கூடுவோம்ல.

அமீரகப் பதிவர்களும் ஒரு மாநாடு நடத்தியுள்ளனர். அதன் ஒரு பகுதியாக அவர்களே தயாரித்து(?) இயக்கி(?) நடித்து(?) இசையமைத்து(?) கட்டமைத்து(?) பிரியாணி சாப்பிட்டு விளம்பரப்படுத்திய(!) மெகா திரைப்படமும் வெளியிடப்பட்டுள்ளது. வாழ்த்துக்கள். ஜோலி போயாலும் ஜீவிக்காம்... இல்லே. (அலுவலகத்தில் ஊடூப் காத்து புடுங்கிட்டானுக... வீட்டில போய்தான் பார்க்கணும்)

தமிழ்மணம் விருது 2009 க்கான வாக்கெடுப்பு நடந்து வருகிறது. சில ஆயிரம் தமிழ் வலைப்பதிவர்கள் இருந்தும் மிகச்சில இடுகைகளே விருதிற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது ஏன் என்பது புரியவில்லை. தங்கள் எழுத்தின் மேல் தங்களுக்கே நம்பிக்கை இல்லாத பதிவர்களா? அல்லது இணையத்தில் எழுதுவதெல்லாம் எழுத்தே அல்ல என்ற வகையில் இருப்பவர்களா என்பதும் தெரியவில்லை. பரிந்துரைக்கப்பட்டுள்ள இடுகைகளில் நான் முன்பே வாசித்திருப்பவை மிகச்சில மட்டுமே. அவற்றிற்கு எனது வாக்கை யோசிக்காமல் அளித்துவிட்டேன். அதில் என்னுடைய இரண்டு இடுகைகளும் அடங்கும். நான் நேசிக்கும் என் எழுத்து.

ஒரு பாடல் தொலைக்காட்சியிலோ, வானொலியிலோ அல்லது வேறு ஊடகத்திலோ ஒலிபரப்பாகும் போது அதனுடன் நாமும் சேர்ந்து பாடினாலோ அல்லது குளியலரையில் பாடினாலோ இனிமையாக ஒலிக்கும் நம் குரலை தனியாக பாடும்போது நாமே சகிக்க முடியவதில்லையே... ஏன்? - சின்னப்பையன்.

ட்விட்டரில பல சுவாரஸ்யத் தகவல்கள் பகிர்ந்துகொள்ளப்படுகின்றன என்பது அறிந்ததே. writerpayon மிகவும் சுவாரஸ்ய ட்விட்டியாக இருக்கிறார். அவருடைய சமீபத்திய சில ட்விட்ஸ்;

எனக்குள்ள சுதந்திரம் என் கதைகளுக்கு இல்லை. நான் எழுதுவதால் நன்றாக இருப்பது தவிர அவற்றுக்கு வேறு வழி இல்லை. வருத்தமாக, மகிழ்ச்சியாக உள்ளது. - 

புத்தக வெளியீடு என்றாலே லாரியில் அனுப்பியது போல் வந்துவிடுகிறார்கள் கூட்டமாய். இங்கே என்ன அவிழ்த்துப் போட்டா ஆடுகிறோம்? வருகைக்கு நன்றி. - 

வானம் மிக இருளும்போதெல்லாம்.... உலகம் அழிந்து எனது டிவிடி தொகுப்பு சேதமடைந்துவிடுமோ என்கிற பயம். சிறுவயதிலிருந்தே இந்த பயம் இருக்கிறது. - 

நான் ட்விட்டரில் ஆள் மற்றும் புத்தக பெயர்களை உதிர்ப்பதை பார்த்து சிலர் நான் நிறைய தெரிந்தவன் என நினைக்கிறார்கள். நடக்கட்டும், நடக்கட்டும். - 

டிஸ்கி: குளிர் அதிகமாக இருப்பதால் மினி ஜிகர்தண்டா. கண்டெண்ட் இல்லை என்றோ, ஆணி அதிகம் என்றோ நினைத்துவிட வேண்டாம் என்றால் நம்புவீர்களா? :) நம்பவில்லை என்பவர்களுக்காக மின்மினி ஜிகர்தண்டா, மின்னாமினி ஜிகர்தண்டா, மி.ஜி கூட வருங்காலத் திட்டத்தில் இருக்கிறது.

Dec 14, 2009

கடவுள் மறுப்பு - நம்பிக்கையாளன் பார்வையில்

என் மதம் சிறந்தது என்று சொல்லும் வரை பிரச்சனை இல்லை. உன் மதம் தாழ்ந்தது என்று சொல்லும் போதுதான் பிரச்சனைகள் ஆரம்பமாகிறது என்று எங்கோ யாரோ சொல்லியிருந்தார். இந்தக்கூற்றை இனம், மொழி, சாதி, மாநிலம், நாடு என பல விஷயங்களோடு பொருத்திப்பார்க்கலாம். குறிப்பாக பன்முகைத்தன்மை கொண்ட இந்தியா போன்ற நாடுகளின் ஒறுமைப்பாட்டிற்கு இதைப் பொருத்திப்பார்க்க வேண்டியது அவசியமாகிறது.

மதவாதிகள் என அடையாளம் காட்டப்படுவோரும், காட்டுவோரும் மேற்சொன்ன வாக்கியத்திலிருக்கும் உண்மையை உணர்ந்து கடைபிடித்தால் யாருக்கும் எந்த பிரச்சனையும் எழுப்போவதில்லை. மதவாதிகளுக்கு இவற்றை உணரும் தன்மை இல்லையென்று 'இவர்கள்' சொல்லிக்கொள்வதால், அவர்களை ஒரு பக்கமாக ஒதுக்கிவைத்துவிடலாம். கடவுள் நம்பிக்கை இல்லாதவன், பகுத்தறிவாளி, மூட நம்பிக்கைகளின் எதிரி , முற்போக்குச் சிந்தனையாளன் என்று தனக்குத் தானே சொல்லிக்கொள்ளும் 'நியாயவான்கள்' இவ்விசயத்தை உணர்ந்தபாடில்லை. கடவுள் இல்லை என்பதற்கு ஆதாரமாக கடவுளையே சொல்வது இவர்களுடைய தொன்றுதொட்ட தொண்ணூற்றியெட்டு  வழக்கத்தில் ஒன்றாக இருக்கிறது. அதாவது, கடவுள் இருந்தால் அவனை இதை செய்து காட்டச்சொல், அதை நிறுத்திக்காட்டச்சொல் என்பதாகவே வாதிடுகிறார்களே தவிர ஒருபோதும் அதைவிடுத்து வெளியே வருவதில்லை.
கடவுளையும், கடவுள் நம்பிக்கையாளர்களையும் சாடுவதே இவர்களுடைய முழுநேரத் தொழிலாக இருக்கிறது.
கடவுள் இருக்கிறான் என்பதை என்னால் நிரூபித்துவிட முடியும் என்றால் அவன் கடவுளாக இருக்க முடியாது. அவனை சிந்தித்துணரலாம், சந்தித்தல்ல. அதனாலேயே நான் கடவுளை நம்புகிறேன். கடவுள் இல்லையென்று சொல்பவர்களுக்கு பலமுறை விடப்பட்ட சவால், நிரூபிக்க முடியாத சவாலாக இன்னும் தொடர்கிறது.
ஒன்றும் இல்லாததிலிருந்து ஏதாவதொன்றையோ அல்லது ஏதாவதொன்றை ஒன்றும் இல்லாததாகவோ ஆக்கிக்காட்டுங்கள். இது கடவுளால் மட்டுமே முடியும்.
இதற்கு ஒரே ஒரு கேள்வியைத்தான் திரும்ப திரும்ப வைக்கிறார்கள். 'கடவுள் எங்கிருந்து வந்தான்?' என்று. யாரும் படைக்க வேண்டியதில்லை என்பதாலேயே அவன் கடவுள், 'தி சூப்பர் நேச்சர் பவர்' என்கிறோம். மனித கற்பனைக்கு எட்டாத சக்தி அவனிடம் இருக்கிறது. சற்றே வேறு விதமாக வாசிக்க..
அவன் எத்தேவையும் அற்றவன். அவன் யாரையும் பெறவும் இல்லை. யாராலும் பெறப்படவும் இல்லை. அவனுக்கு நிகராக யாரும் இல்லை.
அதனாலேயே அவனை வணங்குகிறோம். அவனிடத்தில் உதவி தேடுகிறோம்.

ஐயாமார்களே, உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என்பதற்காக வேறு யாருக்கும் இருக்கக்கூடாது என்று நினைப்பது வாத நியாயமாகுமா? சரி..  நியாயமாமென்று ஏற்றுக்கொண்டாலும், முதலில் நீங்கள் அதை ஒழுங்காக கடைபிடிக்கிறீர்களா?  கடவுள் நம்பிக்கை இல்லையென்றால் கடவுள் சார்ந்த மத விழாக்களில், சடங்குகளில், கலந்து கொள்வதிலிருந்து தவிர்ந்திருக்க வேண்டும். இதைச்சொன்னாலும், 'உங்கள் வீட்டு விழாக்களில் கலந்து கொள்ளக்கூடாதா?' என்று கேட்கின்றனர். தாராளமாக வந்து கலந்துகொண்டு சிறப்பிக்கலாம். ஆனால், எங்கள் வீட்டு பிரியாணியில் ஆட்டுக்கறி போட்டிருப்போம். அந்த ஆட்டை இறைவனின் பெயர் சொல்லி அறுத்திருப்போம். இவ்வளவும் தெரிந்து கொண்டு பிரியாணியில் ஆட்டுக்கறி போட்டிருக்கிறார்கள் அந்த ஆட்டை இறைவனின் பெயர் சொல்லி அறுப்பது மூட நம்பிக்கை. அந்த வீட்டிற்கு வரும் பெண்கள் பர்தா போட்டிருப்பது பெண்ணடிமைத்தனம். இஸ்லாமிய பெண்கள் பர்தாவை வீசியெறிய வேண்டும் என்றெல்லாம் பகுத்தறிவு கொள்கைகளை அவிழ்த்து விடுகின்றனர். பர்தா அணியும் பெண்கள் அனைவரும், 'நான் விரும்பியே பர்தா அணிகிறேன்' என்று சொன்ன பிறகும், இவர்களுக்கு அதற்கும் பின்னால் என்ன வேண்டிகிடக்கு என்பதும் புரியவில்லை.

ஒருவர் பொதுவில் ஒரு கருத்தை/கொள்கையை சொல்லும் முன்பு, தான் அந்தக்கொள்கையை கடைபிடிக்க வேண்டும். மாற்று மதத்தவரின் கடவுள் நம்பிக்கையை நான் மதிக்கிறேன். அவர்களுடைய வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்கிறேன். அங்கு கடைபிடிக்கப்படும் மதம் சார்ந்த சில நிகழ்வுகளில் எனக்கு விருப்பம் இல்லாததால் அவற்றில் இருந்து மட்டும் விலகி இருப்பேன். அது அவர்களுடைய நம்பிக்கை. அதனாலேயே வேறு எங்கும் சென்று அவற்றை  நான் குறை கூறுவதில்லை. ஆனால், வரதட்சணை வாங்கப்படும் கொடுக்கப்படும் சில திருமணங்களுக்குச் செல்லாமல் என்னை கட்டுப்படுத்திக்கொள்கிறேன். என் சொந்த சகோதரனுடைய திருமணத்தில் வரதட்சணை வாங்கப்பட்டாலும் என்னுடைய நிலை அதுவாகவே இருக்கும். இந்நிலையில்  இருக்கும் நான் வரதட்சணைக்கெதிராக எழுதுவது நியாயமாகும். அந்த கொடுமையை, மூட நம்பிக்கையையை எதிர்ப்பதில் அர்த்தம் இருக்கிறது. வரதட்சணை ஒரு சமூக குற்றம், கொடுமை, பெண்ணடிமை, ஆணாதிக்கம் என்றெல்லாம் கருத்துக்களை வாரிவழங்கிவிட்டு, அக்கா சொன்னாள், அம்மா அழுதாள் என்பதற்காக நானும் வரதட்சணை வாங்கினால் என்னை எதைக்கொண்டு அடித்தாலும் தகும். இன்னும் சொல்வதென்றால், நான் வரதட்சணையில் இருந்து விலகி இருக்கிறேன். அதையே மற்றவருக்கும் நாடுகிறேன் என்றால் முதலில் என் குடும்பம், சுற்றத்திற்கே அதைச் சொல்லி நடைமுறைப்படுத்த வேண்டும். கேட்காத பட்சத்தில் அங்கிருந்த வெளியேறி ஊருக்கு உபதேசம் செய்ய வரவேண்டும். மாறாக, என் சுற்றத்தில் இதைச்சொல்லி கெட்ட பெயர் வாங்கிக்கொள்ள விருப்பமில்லை என்ற நிலையிலிருப்பவர்களுக்கும் மேற்சொன்ன தண்டனை பொருந்தும். அதேபோல் விபச்சாரம் சம்பந்தப்பட்ட எந்த நிகழ்வுகளிலும் நான் கலந்துகொள்வதில்லை. அதனாலேயே விபச்சாரத்தை எதிர்க்க எனக்கு முழுத்தகுதி இருக்கிறது. அதைப்பற்றிய எனது எண்ணத்தைப் பதிவு செய்திருக்கிறேன்.
'ஊருக்கு ஒரு கருத்தை சொல்லும் முன், நீ முதலில் கடைபிடியப்பா' என்று சொன்னால் மூக்கிற்கு மேல் கோபம் பொத்துக்கொண்டு வருகிறது.
தனக்கென்று வரும்போது தான் வலி தெரியும். மதவாதிகளைவிட கடவுள் நம்பிக்கை இல்லையென்று சொல்லிக்கொள்பவர்களே விஷக் கருத்துக்களை பரப்பி பயங்கரவாதம் செய்கிறார்கள். சமீப காலமாக வட மாநிலங்களில் நடந்து வரும் குண்டுவெடிப்புகளும் கடத்தல் கொலைகளும் கடவுள் நம்பிக்கை இல்லையென்று சொல்லிக்கொள்பவர்களாலேயே நடந்தேருகிறது. தெலுங்கானா பிரச்சனையிலும் நக்ஸலைட்டுகள் ஊடுருவல் இருப்பதாக செய்திகள் சொல்கிறது.

கடவுள் நம்பிக்கையில்லாதவர்கள் எந்நேரமும் அணியும் கருப்புசட்டையை விட்டுவிடுவார்கள், முஸ்லீம்கள் அணியும் வெள்ளைச்சட்டை மீது இவர்களுக்கு எந்த வெறுப்போ தெரியவில்லை. மட்டுமல்லாது...
முஸ்லீம்கள் அமர்ந்து சிறுநீர் கழிப்பதிலும்,
தாடி வைத்துக்கொள்வதிலும்,
மெக்காவிலிருக்கும் காபா 'வை முகம் நோக்கி வணக்குவதிலும்,
அரபியில் வணக்க வழிபாடுகளை செய்வதிலும்,
பின்னர் பிராத்தனைகளை தமிழில் செய்தாலும்,
பிரியாணியில் உப்பு குறைந்துவிட்டாலும்... என ஆகாத மருமகள் போல தொட்டதற்கெல்லாம் குற்றம் சொல்வதையே முழு நேரத்தொழிலாக வைத்திருக்கிறார்கள். குறைகளை கண்டுபிடிப்பதற்கென்றே பெயர் தெரியாதவர்கள் எழுதும் புத்தகங்களை வாங்கிப் படித்து தங்களைத் தாங்களே மெச்சிக்கொள்கிறார்கள்.

இன்னும் சிலர், தங்களுக்கிருக்கும் உயர்சாதி/சமஸ்கிருத வெறுப்பை சொல்லும் போது தன்னை நடுநிலையாளன் என காட்டிக்கொள்ளும் முயற்சிக்காக இஸ்லாமியர்களையும், கிறித்துவர்களையும் வலிந்து இழுத்து கருத்துச் சொல்வதை வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறார்கள். நான் கடவுள் மறுப்பாளன் என்று சொல்லிக்கொண்டே 'தமிழில் வழிபாடு' எனும் கோஷத்தையும் முன்வைக்கிறார்கள். மூட நம்பிக்கையின் எதிர்ப்பவன் என்று சொல்லிக்கொண்டே குடும்பத்தினர் சந்தோஷத்திற்காக அதை செய்பவர்களும் உண்டு. குடும்பத்தினர் சந்தோஷத்திற்காக சில பழக்கங்கள் கடைபடிப்பதை சரி என்று ஏற்றுக்கொண்டாலும், அதே பழக்கத்தை 'மூடநம்பிக்கையின் உச்சம்' என்று பொதுத்தளத்தில் முழங்குவதை என்னவென்று சொல்வது.

மதவாதிகளை விட அதி மூட நம்பிக்கையில் இருப்பது இவர்களே
  • பெரியார் என்ற மனிதருக்கு மாலை மரியாதை செய்து வழிபடுவது. அவரது எழுத்தையே வேதமாக கடைபிடிப்பது.
  • திருமணம் சட்டவிரோதமாக்கப்பட வேண்டும், பெண்களின் கருப்பையை அறுத்தெறிய வேண்டும் என்ற பெரியாரின் கூற்றை எதிர்க்காதது.
  • கடவுள் நம்பிக்கையில்லாதவர்கள் என்றாலும் சிவில் சட்டத்தில் அவர்களுடைய சொத்து ஏதாவதொரு மதச் சட்டதை சார்ந்தே கையாளப்படும். சொத்துக்காக்க ஏதாவதொரு மதச்சட்டத்தை ஏற்க தயாராயிருப்பது.
  • இந்துவின் வாரிசு இந்து, முஸ்லீமின் வாரிசு முஸ்லீமாக வருவதைப்போல அல்லாமல் கடவுள் நம்பிக்கையில்லாதவரின் வாரிசுகளில் பெரும்பாலானவர்கள் பகுத்தறிந்து கடவுள் நம்பிக்கையுள்ளவர்களாகவே வளர்வதைப் பார்க்கிறோம்.
  • இவர்களுக்கிருக்கும் முக்கியமான பிரச்சனை கட்டுப்பாடு.  'என்னை யாரும் கட்டுப்படுத்தக்கூடாது. நான் தான்தோன்றியாக வாழப்பிறந்தவன்' என்றுச் சொல்லி, மதங்கள் மனிதர்களை கட்டுப்படுத்துவதாக நினைக்கிறார்கள். இவர்களை கட்டுப்படுத்த யாரும் தேவையில்லை என்று நினைத்துக்கொண்டால் அப்படியே இருந்துவிட்டு போக வேண்டியதுதானே. கட்டுப்பாடாக வாழ நினைப்பவனை ஏன் நொட்டை சொல்ல வேண்டும்?
  • கடவுள் நம்பிக்கை இல்லாவிட்டால், பலர் காட்டுமிராண்டிகளாக போயிருப்பார்கள். 
கடவுள் நம்பிக்கையையும், வேத வாக்கையும் சரியாக கடைபிடிப்பவர்கள் நிச்சயம் மதவாத செயல்களில் ஈடுபட மாட்டார்கள். கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களும் அவ்வாறென நிரூபித்துக்காட்டவேண்டிய கட்டாயம் அவர்களுக்கு வந்திருக்கிறது, நியாயவான்களாக இருக்கும்பட்சத்தில்.
பல தளங்களில் நான் சொன்னதையே இங்கும் பதிக்கிறேன்.
நான் மனிதனாக இருக்கக் காரணம் என் கடவுள் நம்பிக்கையே என்று திடமாக நம்புகிறேன். இந்த கடவுள் நம்பிக்கையிலிருந்து மாறிவிட்டால் மிருகமாகிவிடுவேனோ என்று அச்சப்படுகிறேன்.
அதைவிட, எனக்கும் கடவுள் நம்பிக்கை அற்றுப்போனால், இப்போதிருக்கும் 'கடவுள் நம்பிக்கையில்லாதவன்' என்று சொல்லிக் கொள்பவர்களைப் போல அடுத்தவர்களை குறை சொல்லியே காலம் கடத்த வேண்டுமோ என்ற பயமே அதிகமாக இருக்கிறது. நான் இங்கு முன்மாதிரியாகவே இருக்க எண்ணுகிறேன். அது கடவுள் நம்பிக்கையாளனுக்கான முன்மாதிரியா அல்லது நம்பிக்கை இல்லாதவனுக்கா என்பதற்கு அவர்களுடைய வாழ்வையே பார்க்க வேண்டியிருக்கிறது. இதுவரை பார்த்த வரையில் கடவுள் நம்பிக்கையாளனுக்கு முன்மாதிரியாக வாழ்ந்துவிடவே ஆசைப்படுகிறேன். ஏனென்றால் கடவுள் நம்பிக்கையாளனை விட நம்பிக்கை இல்லாதவன்  என்று சொல்லிக்கொள்பவன் போலி வேஷம் போட்டுச் செய்யும் மதவாதமே மிகவும் கொடியதாகத் தெரிகிறது.

மனிதர்களுக்கிடையே கடவுள் பெயரால் துவேஷத்தைப் பரப்பும் அனைவரும்  மதவாதிகளே. அது, கடவுள் நம்பிக்கை இல்லையென்று சொல்லிக்கொண்டு பரப்பினாலும் சரியே.


முக்கிய டிஸ்கி: உண்மையில் மூட நம்பிக்கையை எதிர்க்கும் பல சகோதரர்கள், பதிவுலகிலும், அதற்கு வெளியிலும் எனக்கு நட்பாய் இருக்கிறார்கள். அவர்களிடம் நானும் பாடம் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது.

Dec 4, 2009

வரலாறு முக்கியம் அமைச்சரே - மீண்டும் தொடர்

பதிவர் தன் வரலாறு கூறுதல் என்ற தொடர் பதிவு, ஊர் உலகமெல்லாம் சுற்றி நண்பர் ஊர்சுற்றி முலமாக என் காலை சுற்றியிருக்கிறது. இல்லாத ஒன்றை எழுதுவதன் வலி எழுதும் போதுதான் உணர்கிறேன்.  இது முன்பே தெரிந்திருந்தால் ஒருவேளை யோசித்திருப்பேனா தெரியாது. ஆனாலும் அண்ணன் ஊர்சுற்றியுடைய அப்ரோச் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. அதற்காகவாவது இதை எழுதுவது என்று முடிவுசெய்துவிட்டேன். ஆரம்பிதாகவிட்டது.. எதை எழுதுவது எங்கிருந்து தொடங்குவது  என்பதுதான் இன்னமும் பிடிபட மாட்டேன் என்கிறது.

முதலில் ஒன்றை சொல்லிவிடுகிறேன், நான் இலக்கியவாதியோ, பின்/முன் நவீனத்துவவாதியோ, தீவிர இலக்கிய வாசகனோ, எழுத்தாளனோ அல்ல. இணையத்தில் எழுதுவது சுயநலத்திற்காக மட்டுமே. பின்நவீன மொழியில் சொல்வதென்றால் சுய அரிப்பை தீர்த்துக்கொள்ளும் ஒரு சுய சொறிதல் தளம், அவ்வளவே. தமிழில் பிழையின்றி எழுத வேண்டும், தட்டச்ச வேண்டும் என்ற ஆசை மட்டுமே இச்சுய சொறிதலுக்கான காரணமாக இருக்கலாம் அல்லது வேறு எதுவாகவும் இருக்கலாம். உலகத்தை புரட்டும் நெம்புகோலை தோளில் சுமந்து கொண்டு எதை உருட்டிப்புரட்டலாம் என்று விதிவழி தேடித்திரிபவன் அல்ல. ஆனால் அத்தகைய சூழல் வந்தால்  'என்னால் முடியும்' என்று திடமாக நம்புபவன். நான் கொண்டிருக்கும் நம்பிக்கைக்கோ அல்லது கருத்திற்கோ தவறான புரிதலில் மாற்றுக்கருத்து சொல்லப்படும் போது (கருத்து சொல்வது அவரவர் உரிமை என்றாலும்) அவற்றை பண்போடு எடுத்துச்சொல்லி புரிய வைப்பதும் என் உரிமையாகிறது. குறிப்பாக நான் அதிகம் நேசிக்கும்/வாசிக்கும் அன்பு நண்பர்கள் அதை சொல்லும் போது அவர்களுக்கு விளக்க வேண்டியது என் கடமையாகிறது.

இனி வரலாறு :) அப்போது அணி அதிகம் இல்லாத காலம். இணையத்தில் எதையோ தேடிக்கொண்டிருக்கையில் எதுவோ கிடைத்தது போலத்தான் தமிழ் வலைப்பூ உலகம் அறிமுகமானது. எழுத்துறு இன்ஸ்டால் செய்துவாசிக்க வேண்டியிருந்த நேரத்தில், (என் அலுவலக கணினியில் ஒன்றையும் இன்ஸ்டால் செய்துவிட முடியாது என்பதால்) தமிழ் ஒருங்குறி எழுத்துக்களைத் தேடி வாசித்து வந்தேன். அப்போது நண்பர் அய்யனார் எழுதும் தனிமையின் இசை  வாசிக்க நேர்ந்தது. அதற்கு முன்னர் தமிழ் வலைப்பூ வாசித்திருக்கிறேனா என்பதை சரியாக நினைவுபடுத்த முடியவில்லை. தனிமையின் இசையை ஃபேவரிட்டில் வைத்து அவ்வப்போது வாசித்து வந்தேன். அதில் சிலருடைய மறுமொழிகளை வாசிக்கையில் சுவாரஸ்யமாக இருந்தது. யார் இவர்கள் என்று தொட்டு தேடிச்செல்கையில் பரந்த உலகம் அறிமுகமானது. தொடர்ச்சியாக ஆசிஃப் மீரான், சுகுணா திவாகர், லக்கிலுக், அறிவிழி, தமிழச்சி, விடாதுகருப்பு என்று நீண்டது. அந்தச்சூழலில் ஆணிகள் அதிகமாகிவிட்டாலும் இதற்கென நேரம் ஒதுக்கி வாசித்து வந்தேன். ஒருநிலையில் ஆணி மலைகளாகி விட்டதால் அறையில் இணைய இணைப்பு இழுக்க வேண்டியதாகிப்போனது. அரையிருட்டறையில் அதிக நேரம் அமர்ந்து வாசித்ததில் முதுகுத்தண்டு உராயத்தொடங்க, அப்போது மாறியதுதான் இந்த மடிக்கணினி 'தாரா' வுக்கு. மடியில் வைத்தால் சூடா(க்)கி விடுகிறது என்பதால் தலையணை மேல் வைத்திருக்கிறேன். அப்போ தலையணை கணினியா..? (அட.. போதும்பா கொசுவெல்லாம் ஆல்அவுட் ஆகிடுச்சு... விஷயத்துக்கு வா.) ஆமால்ல... டாபிக்க விட்டு வெளிய போயிட்டேனோ. இட்ஸ் ஓகே.. கயிறு கட்டிடலாம்.

தொடர்ந்து பதிவுகளை வாசித்து வந்தாலும் யாருக்கும் பின்னூட்டமிட்டதில்லை. சொல்வதற்கென்று கருத்து இருந்தாலும் அதை எப்படி சொல்வது என்பதில் குழப்பமும் கூடவே இருந்தது. அதாவது சொல்லும் முறை தெரியாதிருந்ததும் தமிழில் தட்டச்ச போதிய அறிவு இல்லாதிருந்ததுமே காரணம். அதற்கிடையில் ப்ளாக்ஸ்பாட் டாட் காம் 'ல் ஒரு கணக்கும் தொடங்கி வைத்திருந்தேன். என்ன எழுதுவது எப்படி எழுதுவது என்று தெரியாமல்  கூகுல் ட்ரான்ஸ்லிட்ரேட்டில் தட்டுத்தடுமாறிக் கொண்டிருந்தேன். பிறகு, தமிழ்99 பற்றி ஒரு வலைப்பூவில் தெரிந்து கொண்டு W9 விசையை பயன்படுத்த ஆரம்பித்தேன். தமிழ்99 இலகுவாகவும் வேகமாகவும் தட்டச்ச உதவியது. ஆரம்பத்தில் எனக்கு வந்த சில மின்மடல்களை காப்பி பேஸ்ட் செய்து கடை நடத்திக்கொண்டிருந்தேன். அதற்கே தாவு தீர்ந்தது. எத்தனை முறை ப்ரூஃப் ரீட் செய்தாலும் மீண்டும் மீண்டும் தவறு தென்பட்டது. அதில் நானாக எழுதிய பல இடுகைகளை வெளியிடாமலேயே இருந்துவிட்டேன். இப்போது நான் பாவிக்கும் NHM Writer நண்பர் வால்பையன் அறிமுகப்படுத்தினார். மிகவும் இலகுவான தமிழ் எழுதி. நன்றி NHM, நன்றி வால். நான் பலருக்கும் இதை அறிமுகப்படுத்தியிருக்கிறேன், பரிந்துரைத்திருக்கிறேன். அதில் சில மலையாள, தெலுகு, ஹிந்தி மொழி நண்பர்களும் அடக்கம்.

இவ்வாறு தட்டுத்தடுமாறிக்கொண்டிருந்த போது பதிவர் கோவி. கண்ணனுடைய பதிவுகளை வாசிக்க நேர்ந்தது. இவருடைய எழுத்து நடையில் சுண்டி இழுக்கும் சுவாரஸ்யம் இல்லையென்றாலும், கருத்து விமர்சனம் கவனிக்கத்தக்கது. அதற்காகவே வாசித்துக்கொண்டிருந்தேன். தமிழில் சந்தி/இலக்கணப் பிழையின்றி எழுதுவதை குதிரைக்கொம்பென நினைத்துக்கொண்டிருந்த போது, கோவி.கண்ணனுடைய ஒரு பதிவு அட... நாமளும் எழுதலாமோ என்று நம்பிக்கையைத் தூண்டியது. சின்னச்சின்ன தவறாக இருந்தாலும் காலம் செல்லச்செல்ல திருத்திக்கொள்ளலாம் என்றே எழுதினேன். இன்றளவும் திருந்திக்கொண்டே இருக்கின்றேன் 'கல்லாதது உலகளவு'. எழுத்தாளர் 'குரு' பாரா சொல்லுவார், 'என் எழுத்தில் ஒரு பிழையை கூட கண்டுபிடிக்க முடியாது' என்று. இதே போன்று நானும் ஒருநாள் சவால் விடுவேன் என்று நம்புகிறேன்.  அதுவரை, என் எழுத்தில் இருக்கும் பிழைகளை சுட்டிக்காட்டுங்கள். என் எழுத்தை திருத்திக்கொள்ள உதவி செய்யுங்கள். ஆரம்பத்தில் நண்பர் டக்ளஸ் ராஜூ சிலவற்றை சுட்டிக்காட்டியிருக்கிறார். இப்போது குஜராத்தில் ஆணி அதிகம் போலிருக்கிறது. ஆளைக்காண முடியவில்லை... பாதகமில்லை மெதுவா வாங்க ராஜூ.. ஆனா வந்துடணும். :) 

முதலில் உற்சாகமூட்டிய பலரில் என் ஊர்வாசி, சகோதரர் கார்த்திகை பாண்டியன் பின்தொடருவோர் கேட்ஜட் இணைக்கச்சொல்லி ஜெய்ஹிந்த்புரத்தை பின் தொடர்ந்து ஊக்கமளிக்கிறார். சென்ற முறை நான் ஊருக்குச் சென்ற சமயத்தில் இவர் ஏற்பாடு செய்திருந்த ஒரு பிரமாண்ட பதிவர் சந்திப்பில் கலந்து கொண்டேன். அதன் பிறகே உருப்படியாக ஏதாவது எழுதுவது என்று எண்ணிக்கொண்டேன். (இதுவரை அப்படி ஏதாவது  எழுதியிருக்கேனா?) அன்றுவரை அறிமுகமில்லாத பலரும் நீண்ட நாள் நண்பர்கள் போல பேசி பழகியது மகிழ்ச்சியாக/நெகிழ்ச்சியாக இருந்தது.  இணைய வெளியில் நடக்கும் விவாதங்கள் பல நேரங்களில் எனக்கு பயனுள்ளதாக இருந்திருக்கிறது. நானும் பலவற்றில்  பங்கு பெற்றிருக்கிறேன். ஏதோ ஒரு விவாதத்தில் நான் சொன்ன ஏதோ ஒரு வார்த்தை, நான் எழுத காரணமான மூத்த பதிவர் கோவி.கண்ணனுடைய மனதை புண்படுத்தியிருக்க வேண்டும். அதற்காக வருந்துகிறேன் என்று முன்பே அவரிடம் சொல்லியிருக்கிறேன். ஆனாலும் என்னுடன் விவாதிப்பதில்லை என்று அவர் சொல்லியது மீண்டும் என்னை வருந்தச் செய்தது. :(

நான் எழுத ஆரம்பித்த சிலகாலம் வரையிலும் திரட்டிகளை பற்றிய அறிமுகம் இல்லை. திரட்டிகளுடைய அறிமுகம் கிடைத்தபிறகு, ஓட்டுகளில் ஆர்வம் இருந்தது. தினமும் ஹிட்ஸ்க்காகவும் பின்னூட்டத்திற்காகவும்  கல்லாப்பெட்டியை திறந்து வைத்து காவ காத்திருந்திருக்கிறேன். இப்போதும் கூட பின்னூட்டம் எனக்கு உற்சாகம் அளிக்கிறது என்றாலும் ஹிட்ஸ் மற்றும் திரட்டி குறித்த ஆர்வம் இல்லை. துளியும் இல்லை என்று சொல்வதற்கில்லை ஆனாலும் இல்லை. பதிவுகளை வாசிக்க கூகுள் ரீடர், ஃபீட், ஃபாலோ ஆப்ஷன் என்று பல வழிகள் இருந்தும் திரட்டிகளை தெய்வமாக நினைப்பதும் ஏன் என்பதும் புரியவில்லை. சந்தேகமில்லாமல் திரட்டிகளுடைய சேவை மிகப்பெரியது, பாராட்டத்தக்கது. ஆனாலும் திரட்டிகள் இல்லையென்றால் பதிவுலகம் அழிந்துவிடும் என்பது போன்ற இமேஜ் சரிதானா என்பதில் புரியாத புதிர் இருக்கிறது. எழுத்தாளர் யுவகிருஷ்ணா திரட்டிகளிலிருந்து விலகிய பிறகு சொன்னார், 'திரட்டிகளில் இருந்தாலும் 1000 ஹிட்ஸ், இல்லாவிட்டாலும் 1000 ஹிட்ஸ் என்பதை தெரிந்து கொள்ள இவ்வளவு நாட்களானது'. இது பலருக்கும் புரிவதில்லை என்றே நினைக்கிறேன். பதிவர்கள் தங்கள் எழுத்துக்களை மட்டுமே நம்ப வேண்டும், திரட்டிகளையோ பின்னூட்டங்களையோ நம்பி எழுதினால் வெகுஜன எழுத்தாளர்களின் வசவு கேட்க வேண்டிவரும்.

இந்தப்பத்தி எழுதுவதில் கர்வப்பட்டுக்கொள்கிறேன். இதுவரை  பதிவுகளில் எழுதவும், பின்னூட்டமிடவும் ஒரே பயனர் பெயரைத்தான் பாவித்து வருகிறேன். எங்கும் எதற்கும் அனானியாகவோ, வேறு பெயரிலோ பின்னூட்டியதில்லை, பதிவிட்டதில்லை என்று சொல்வதில் நேர்மையான பெருமை  இருக்கிறது. காதைக் கொண்டுவாங்க.. ஒரு பிரபல பதிவர் 25 ஐடி வைத்திருக்கிறாராம்.

சொல்வதற்கு பல விஷயங்கள் கிடப்பில் இருந்தாலும், அறையில் கிடைத்துக்கொண்டிருந்த இலவச இணைய இணைப்பு தடைபட்டு விட்டதால் இடுகைக்கான தகவல்களை திரட்ட முடியாது அத்தனையும் முடங்கிப் போய் கிடக்கிறது. புதிதாய் இணைப்பு வழங்குபவரும் ஊரில் இல்லை. அதனாலேயே இந்த தொடர் இடுகைகளை எழுதி உங்களை படுத்த வேண்டிதாகிப்போனது. தொடர் என்றதும நினைவு வருகிறது..

பதிவர் தன் வரலாறு கூறுதல் என்ற தொடர் இடுகையை தொடர்ந்து நடத்திச்செல்ல நான் அழைப்பது...
ஒரு வரியை வைத்தும் ஒரு இடுகையை எழுதிவிடலாம் என்பதற்கு இதுவும் ஓர் உதாரணம். நீங்களும் எழுதுங்க... இது ஒண்ணும் பெரிய விஷயம் இல்ல.

Nov 26, 2009

ஓடுங்க.. ஓடுங்க... தொடர் இடுகை தாக்க வருது

1. அன்புக்குரியவர்: நீங்கள்தான்

2. ஆசைக்குரியவர்: அவுகதான்.

3. இலவசமாய் கிடைப்பது: ஏகப்பட்ட அறிவுரை

4. ஈதலில் சிறந்தது: தனக்குப் போக மீதி

5. உலகத்தில் பயப்படுவது: பயமா.. எனக்கா... ஹே ஹே ஹேய்

6. ஊமை கண்ட கனவு: எனக்கும் புத்திவரும்.

7. எப்போதும் உடனிருப்பது: அவுகதான்.

8. ஏன் இந்த பதிவு: வேறு வேலை இல்லை

9. ஐஸ்வர்யத்தில் சிறந்தது: Btemplates.com நிறைய டிசைன்ஸ் தாராங்க.

10. ஒரு ரகசியம்: நான் கெட்டவன்

11. ஓசையில் பிடித்தது: உளியின் ஓசை

12. ஔவை மொழி ஒன்று: மலையாளம்

13. (அ)ஃறிணையில் பிடித்தது: அது


1. A – Available/Single? Available as single

2. B – Best friend? : She..

3. C – Cake or Pie?: Cake

4. D – Drink of choice? : Dark Smiron

5. E – Essential item you use every day? : Easy to use

6. F – Favorite color? : Full Black

7. G – Gummy Bears Or Worms?: ???????

8.  H – Hometown? : (HomeVillage) Madurai

9.  I – Indulgence?: Intelligence

10. J – January or February? - ???????

11. K – Kids & their names? Kamal Farhan

12. L – Life is incomplete without? – Love

13. M – Marriage date? Month of Dec

14. N – Number of siblings? Not much..

15. O – Oranges or Apples? O..

16. P – Phobias/Fears? - Politics

17. Q – Quote for today? : Quite

19. R – Reason to smile? : Re-tired

20. S - Season? : Shut the door

21. U – Unknown fact about me : Unknown??? me???

22. V – Vegetable you don't like? : Veal

23. W – Worst habit? : Wrong Question

24. X – X-rays you've had? : Xavier's

25. Y – Your favorite food? : Yolk

26. Z – Zodiac sign? - Zoo Zoo

இத்தொடர் எழுத அழைத்தது ; சகோதரி சுமஜ்லா (எங்க போய்டீங்க?) மற்றும் சகோதரர் ராஜூ.



டிஸ்கி அ; நான் சொன்னதெல்லாம் பொய்.. பொய்யைத்தவிர வேறெதுவும்  உங்களுக்குத் தென்பட்டால் நிர்வாகம் பொறுப்பல்ல.

டிஸ்கி இ; டிஸ்கி அ வாசித்ததும் மீண்டும் பதிவு வாசிக்கச்செல்லும் அனைவருக்கும் டி.ஹெச்.எல் 'ல் உதை அனுப்பப்படும்.

டிஸ்கி உ; பதிவு வாசிக்காமல் டிஸ்கி மட்டும் வாசிப்பவர்களுக்கு தொடர் இடுகை ஓலை அனுப்பப்படும்.

Nov 25, 2009

அன்புக்காக - தீபாவளி சிறப்புப் பதிவு 2009 - நம்புங்க


இந்த வாரம்... தொடெர்ர்ர்ர்ர் வாரம்.... ம்ம்ம்ம் மாட்னீங்க.

அருமை தம்பி அன்பு அவர்களின் அழைப்பை ஏற்று இந்த பதிவினை தொடர்கிறேன்..ஏனெனில் அவர் எனக்கு அடுத்த தீபாவளிக்கு சிவகாசி பட்டாசு தர இருப்பதால்…
பதிவிற்கான விதிமுறைகள் :
1. கேள்விக‌ளுக்கு உங்க‌ள் வ‌லைத்த‌ள‌த்தில் புதிய பதிவில் ப‌திலளியுங்கள். –
அளிச்சாச்சு.. அளிச்சாச்சு.
2. 'தீபாவளி சிறப்புப் பதிவு - 2009' என்று தலைப்பிட்டால் நலம்.
இட்டாச்சு... இட்டாச்சு.
3. இத்தொடர் தொடருவதைத் தெரிவிக்க, இங்கிருக்கும் தீபப் படத்தை உங்கள் வலைத்தளத்தில் ஒட்டி, உங்கள் பதிவிற்கான சுட்டியும் தரவும்.
படம் காட்ட.. விளம்பர கட்டணம் டிடி எடுத்து அனுப்பவும்.
4. அனைத்து கேள்விகளுக்கும் (மனம் திறந்து) பதில் அளியுங்கள்.
திறப்பதற்கு மனம் இருந்தால்.. திறந்துவிடலாம்.
5. உங்கள் நண்பர்கள் நால்வரைத் தேர்ந்தெடுத்து தொடரைத் தொடர அழையுங்கள்.. அவங்க எழுதறதுக்குள்ள அடுத்த தீவாளி வந்துடும்றதால... ஆணியே புடுங்க வேண்டாம்.

**************************
1) உங்க‌ளைப் ப‌ற்றி சிறு குறிப்பு ?
பெயர் பீர் முஹம்மத். ஊர் மதுரை, குடிசை குவைத்.
**************************
2)தீபாவ‌ளி என்ற‌வுட‌ன் உங்கள் நினைவிற்கு வ‌ரும் (ம‌ற‌க்க‌ முடியாத‌) ஒரு ச‌ம்ப‌வ‌ம் ?
தளபதி.. அபூர்வ சகோதரர்கள்.
**************************
3)2009 தீபாவ‌ளிக்கு எந்த‌ ஊரில் இருக்கிறீர்க‌ள்/இருந்தீர்க‌ள் ?
குவைத்.
**************************
4)த‌ற்போது இருக்கும் ஊரில் கொண்டாடும் தீபாவ‌ளி ப‌ற்றி ஒருசில‌ வ‌ரிக‌ள்?
குவைத்ல பட்டாசு வெடிச்சா உள்ள தூக்கி போட்றுவானுக.. அதுமட்டுமில்லாம குடும்பத்த விட்டு பிரிஞ்சிருக்கிறப்போ (இப்பல்லாம்) எந்த பண்டிகையும் கொண்டாடுறதில்ல...
**************************
5)புத்தாடை எங்கு வாங்கினீர்கள் ? அல்லது தைத்தீர்க‌ளா ?
வாங்கவும் இல்லை. தைக்கவும் இல்லை.
**************************
6)உங்கள் வீட்டில் என்ன‌ ப‌ல‌கார‌ம் செய்தீர்க‌ள் ? அல்ல‌து வாங்கினீர்க‌ள் ?
மஃபின் பனானா நட் மற்றும் பேஸ்கின் ராபின்ஸ் ப்ராலின் க்ரீம் வாங்கினேன்.
**************************
7)உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் எவ்வாறு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறீர்கள். (உ.ம். மின்னஞ்சல், தொலைபேசி, வாழ்த்து அட்டை) ?
மின்னஞ்சல், தொலைபேசி, வாழ்த்து அட்டை.
**************************
8)தீபாவ‌ளி அன்று வெளியில் சுற்றுவீர்க‌ளா ? அல்ல‌து தொலைக்காட்சி நிக‌ழ்ச்சிக‌ளில் உங்க‌ளைத் தொலைத்துவிடுவீர்க‌ளா ?
தொலைக்காட்சி.
**************************
9)இந்த‌ இனிய‌ நாளில் யாருக்கேனும் ஏதேனும் உத‌வி செய்வீர்கள் எனில், அதைப் ப‌ற்றி ஒருசில‌ வ‌ரிக‌ள் ?
புதிய இடுகை வெளியிடுவதில்லை.
**************************
10)நீங்க‌ள் அழைக்க‌விருக்கும் நால்வ‌ர், அவர்களின் வ‌லைத்த‌ள‌ங்க‌ள் ?
அதுதான் சொல்லிட்டோம்ல... இதுவரை புடுங்கின ஆணியே ஒருவருஷத்துக்கு தாங்கும்...

Nov 24, 2009

விபச்சாரம் - சேவையா - தொழிலா

வெவ்வேறு அல்லது ஒத்த பாலினத்தைச் சார்ந்த (சிறியவரோ பெரியவரோ) இருவர் மனமுவந்து அல்லது மனம் வெறுத்து எதிர்வரும் லாபத்திற்காக தன் உடலை விற்பதும் வாங்குவதும் விபச்சாரம் எனப்படுகிறது. இதில் லாபம் என்பதில் பணம் பொருள் பதவி-உயர்வு சுகம் தன்மானம் மற்றும் உயிர்-பயம் ஆகியவை அடங்கும். இத்தொழில் உலகம் முழுக்க மலிந்து கிடப்பதாகவும் அதன் வரலாறையும் விக்கி சொல்கிறது. பண்டைய இந்தியாவில், மருத்துவம் புரோகிதம் நாவிதம் சலவை இடையம் போன்றவற்றோடு தேவதாசி முறையும் குலத்தொழிலாக இருந்திருக்கிறது. கடவுளுக்கு சேவையாற்றல் எனும் பெயரில் ஒரு பெண் பதின் வயதை அடைந்ததும் (அல்லது அதற்கு முன்னரே) அரண்மனைக்கு கொண்டுவரப்படுவாள். அவள் அரண்மைனையில் புளிக்கும்வரை சேவையாற்றிவிட்டு பிறகு பொதுச்சொத்தாக வீதிக்கு தள்ளிவிடப்படுவாள். தேவதாசியாக அரண்மனைக்கு சென்ற பெண் பிறகு நாட்டை ஆண்ட(பெட்டிகோட்) வரலாறும் உண்டு. இன்னும் சிலர் உயர்சாதியினருக்கு மட்டும் சேவை செய்பவளாக இருந்திருக்கிறார்கள்.

புத்த மதம் இந்தியாவில் அழியத்தோன்றியதும் தேவதாசி முறை பரவலாக்கப்பட்டுள்ளது. மடாலயங்கள்,  கோயில்களாக மாற்றப்பட்டபிறகு அங்கிருந்த துறவிகள் உயர்சாதியினரால் இத்தொழிலுக்கு (சேவைக்கு) இழுத்துவரப்பட்டிருக்கிறார்கள். மேலும் கோவில்களின் நடனப்பெண்களே தேவதாசிகளாக உயர் சாதியினருக்கு சேவை செய்திருக்கிறார்கள். இதை தேவதாசிகளே நடனப்பெண்களாகவும் இருந்திருக்கிறார்கள் என்றும் கொள்ளலாம். தென் மாநிலங்களில் பரவலாக இருந்த தேவதாசி முறை பிற்பாடு சோழர் காலத்தில் வட மாநிலங்களுக்கும் பரவியுள்ளது. பிறகு இந்தியாவை கொள்ளையடிக்க வந்து, இந்தியாவின் செல்வ செழிப்பிலும், பெண்களின் அழகிலும் மயங்கிய முகலாயர்கள் இங்கேயே தங்கிவிட்டனர். முகலாய மன்னர்கள், தங்களுக்கு பல மனைவிகளை வைத்துக்கொண்டனர். முகலாய மன்னன் ஜஹாங்கீருக்கு ஆயிரங்கணக்கில் மனைவிகள் இருந்ததாகவும் சொல்லப்படுவதுண்டு. எனில் முகலாயர்களுடைய அரண்மனையே விபச்சார விடுதியாக இயங்கியிருக்கிறது போல. ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில் படைவீரர்களுக்கு இளைப்பாறுதலுக்காக 'காமதிபுரா' என்ற விபச்சார சேவை நகரம் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. பிறகு சுதந்திர இந்தியாவில் அதே பாலியல் தொழிலாளர்களால் சிவப்பு விளக்கு பகுதியாக பரிணாமம் பெற்றிருக்கிறது.

நாளடைவில் நாகரீக வளர்ச்சியில் மற்ற தொழில்கள் போலவே தேவதாசியும் குலத்தொழில் என்ற நிலையிலிருந்து மாறிவிட்டிருக்கிறது. ஏனைய தொழில்கள் போல மாற்றத்திற்கு நீண்ட காலம் எடுக்காமல் மன்னராட்சி ஒழிந்த சில ஆண்டுகளிலேயே பாலியல் தொழிலாக முழுப்பரிணாமம் பெற்றுவிட்ட தேவதாசி முறையை, 1934 இந்திய தேவதாசிகள் பாதுகாப்பு சட்டம், முற்றிலும் தடைசெய்துவிட்டது. பிறகு, 1980ல் இச்சட்டம் மீண்டும் வலுப்படுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் ஆந்திர கர்னாடக மாநிலங்களின் சில மாவட்டங்களில் இப்போதும் நடைமுறையில் இருப்பதாக சொல்லப்படுகிறது. கடவுள் சேவையாக இப்போதும் அது நம்பப்படுவதே காரணம்.

அண்மையில் மக்களவையில் அளிக்கப்பட்ட தகவல், இந்தியாவில் 28 லட்சம் பாலியல் தொழிலாளர்கள் இருப்பதாக சொல்கிறது. இதில் 35 சதவிகிதத்தினர் குழந்தை தொழிலாளர்களாம். இந்த எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிப்பதாகவும் சொல்கிறது. புதிதாக இத்தொழிலுக்கு நேபாளம் மற்றும் பங்களாதேஷிலிருந்து அதிகமான பெண்கள் மற்றும் குழந்தைகள் இறக்குமதியாவதும், மத்தியகிழக்கு நாடுகளுக்கு வீட்டு வேலை என்ற பெயரில் ஏற்றுமதி செய்யப்படுவதும் தொடர் நிகழ்வு. வீட்டு வேலைக்கு அனுப்பப்படும் பெண்களுக்கான 'வெளிநாட்டு டொமஸ்டிக் ஒர்கர்ஸ்' விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டிருந்தாலும், சென்னை விமானநிலையத்தில் விதிமுறை கடுமையாக பின்படுவதால் திருவனந்தபுரத்திலிருந்து விமானமேற்றுகிறார்கள். வீட்டு வேலைக்கு அனுப்பப்படும் பெண்களில் பெரும்பாண்மையோர், உழைப்போடு உடலையும் விற்கவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறார்கள், அறியாமலேயே இத்தொழிலுக்கு தள்ளிவிடப்படும் அப்பாவி பெண்கள் இவர்கள். இதை தவிர்த்துப் பார்த்தால், சுய விருப்பத்திற்காகவும், அதீத உடல் இச்சையை தீர்த்துக்கொள்ளவும், பதவி உயர்விற்காக அவ்வப்போது இத்தொழிலில் நுழைபவர்களையும் தனிவகைப்படுத்தலாம். அண்மையில் பரவிவரும் எஸ்காட்ஸ் எனப்படுகிற பணத்திற்காக ஊர் சுற்றும் விபச்சார வகையும் வேகமாக பரவிவருகிறது.

விபச்சாரி என்ற வார்த்தையே பெண்களுக்குள் இருக்கும் வலியையும் சிரமத்தையும் சொல்கிறது. பாலியல் தொழிலில் புதியவர்கள் வருகைக்கு மிக முக்கிய காரணமாக இத்தொழிலில் கிடைக்கும் உடனடி வருமானத்தை சொல்லலாம். மற்ற தொழில்களைப்போல உடல் உழைப்பையோ அதிகாரத்தையோ பணத்தையோ மூலதனமாக கொள்ளாமல் உடலையே மூலதனமாக கொண்டுள்ளதும் இத்தொழிலுக்கு பெரும்பாண்மையோரை இழுத்துவரக்காரணம். மேலும்,
  • கூடா நட்பு.
  • மகிழ்ச்சியற்ற திருமண வாழ்வு.
  • பெற்றோர்களால் மூன்றாம் தரமாக நடத்தப்படுவது.
  • போதிய பாலியல் கல்வி அறிவின்மை.
  • இத்தொழில் குறித்தான விழிப்புணர்வின்மை.
  • ஊடகங்கள்.
  • வன்புணர்ச்சி.
  • காதல், 'ஓடிப்போதல்'.
  • சமுதாய தொடர்பு/பழக்கத்திற்காக.
  • மகிழ்ச்சி, ஆசை, விருப்பம், தேடல்.
  • பணியிடங்களில் மிரட்டல், பதவி உயர்விற்காக இசைதல்.
போன்ற பல காரணங்களே விபச்சாரத்தில் நுழைய காரணமாக இருந்தாலும், அதன் பிறகு இத்தொழிலிலேயே நீடித்திருக்க முழு முதல் காரணமாக இருப்பது மேற்சொன்னவாறு உடனடி லாபம் மட்டுமே. இதற்காக குழந்தைகள் கல்வி, தங்கை திருமணம், அம்மா மருத்துவம் போன்ற அழுவாச்சி காரணங்களும் சொல்லப்படுவதுண்டு. இத்தகைய காரணங்களையே பிடித்து தொங்கிக்கொண்டிருக்கும் சில சென்டிமெண்டல் இடியட்ஸ், இட்லி வியாபாரம் செய்து மகனை ஐஐடியில் படிக்க வைத்த தாயை வசதியாக மறந்துவிடுகிறார்கள். பாலியல் தொழில் செய்பவளுடைய மகன்/மகள் சாதனையாளராகும் போது, 'என் தாய் விபச்சாரம் செய்து என்னை படிக்க வைத்தாள்' என்று சொல்லிக்கொள்ள முடியாது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். மட்டுமல்லாது பாலியல் தொழிலாளியுடைய குழந்தைகளும் இத்தொழில் தவறென்பதை உணராது (அல்லது உணர்ந்தாலும்) கண்முன் கிடைக்கும் நிகர லாபத்தால் சட்டென விழுந்துவிடும் ஆபத்தும் அதிகம் இருக்கிறது.

இவற்றையெல்லாம் பாலியல் சேவை என்றும் இச்சேவையை நடைமுறைப்படுத்தி அங்கீகரிக்கப்பட்ட சட்டம் கொண்டுவர வேண்டும் என்று ஒரு சாரார் சொல்லி வருகிறார்கள். அதாவது, குடும்ப பொறுப்புகளாலும், இன்னபிற சமுதாய சூழல்களாலும் திருமணம் செய்யாமல் இருப்பவர்களுக்கும், திருமண வாழ்கையில் சுகம் கிடைக்காதவர்களுக்கும், குடும்ப வாழ்வை சுமை என்பவர்களுக்கும் சேவை செய்யவதற்காகவே இயங்கும் இந்த பாலியல் தொழிலை அனுமதிக்க சட்டம் வேண்டும் என்கின்றனர். இன்னும் சிலர், நமக்கு வேண்டாம் என்றால் போகாமல் இருந்துவிடலாம், யாரும் போக வேண்டாம் என்று சொல்வது நியாயமில்லை என்கின்றனர்.

ஊரான் வீட்டு பெண்களிடம் சுகம் அனுபவிக்க நினைக்கும் இவர்களிடம் சில கேள்விகள்,
  1. பாலியல் தொழில் நடைமுறைப்படுத்தப்பட்டால், குடும்ப சூழல் காரணமாக கைதொழில் செய்து பிழைக்கும் பல பெண்களை "அங்கீகரிக்கப்பட்ட தொழில்" உள்ளே இழுத்துவரும் என்பதை சிந்தித்ததுண்டா?
  2. ஊருக்கு நியாயம்/கருத்து சொல்லும் இவர்களால் பாலியல் தொழிலில் இருப்பவர்களை சகோதரிகளாக நினைக்க முடியுமா? எனில்...
  3. இதே சட்டம் அவர்களுடைய குடும்ப பெண்களுக்கும் பொருந்திவரும் என்பதை ஏற்றுக்கொள்கிறார்களா?
  4. தாய்லாந்து, இந்தோனேஷிய பாடாய் தீவு போன்ற பாலியல் தொழில் அங்கீகரிக்கப்பட்ட நாடுகளுக்கு பாலியல் சுகம் அனுபவிக்கவே சுற்றுலா பயணிகள் போவது போல இந்தியாவிற்கும் வருவது இந்தியாவின் எதிர்காலத்திற்கும், பண்பாட்டிற்கும் நல்லதா?
முறையான பாலியல் கல்வி மூலம், திருமண வாழ்வின் மீதிருக்கும் பயத்தை போக்கலாம். குடும்ப வாழ்வை சுமையாக நினைப்பது ஒரு வகை மன வியாதியே, இவர்களுக்கு கவுன்ஸ்லிங் கொடுக்கலாம். இத்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களின் மீள்வாழ்விற்கும் மாற்று தொழிலுக்கு ஏற்பாடு செய்யலாம், கடனுதவி வழங்கலாம். துரதிஷ்டவசமாக இவர்களை மீட்டு வருவது அவ்வளவு எளிதல்ல. ஆனாலும், புதியவர்கள் நுழையாமல் தடுக்க பாலியல் கல்வியும் கவுன்ஸ்லிங்கும் நிச்சயம் உதவும்.

நடைமுறையில் இருக்கும் இந்திய தண்டனை சட்டம் என்ன சொல்கிறது?
விபச்சார தடுப்புச்சட்டம் 1956 தான் விபச்சார வழங்குகளில் பரதானமாக பயன்படுத்தப்படுகிறது. இச்சட்டப்படி, பாலியல் தொழிலோ, தொழிலாளர்களோ குற்றவாளிகளாக கருதப்படுவதில்லை. மாறாக விபச்சாரத்திற்கு உதவி செய்யும் மூன்றாம் ஆட்கள், அதாவது விபச்சார விடுதி நடத்துவது, விபச்சாரத்திற்கு இடம் வாடகைக்கு விடுவது மற்றும் விபச்சாரத்திற்கு அழைப்பது போன்றவையே குற்றம் என இச்சட்டம் தண்டிக்கிறது. இவ்வகையில் கைது செய்யப்படுவோர், பரஸ்பர ஒப்பந்த (நீ பணம் தா, நான் உடல் தருகிறேன்) அடிப்படையில் தொழில்/சேவை பெற்றாலும் தண்டனை வழங்கப்படலாம். (கீழே பிடிஎஃப் இணைக்கப்பட்டுள்ளது) இப்போதிருக்கும் சட்டம், விபச்சாரத்தில் ஈடுபடும் பெண்களை தண்டிப்பதாகவே இருக்கிறது அல்லது இச்சட்டத்தால் பெரும்பாலும் பெண்களே பாதிக்கப்படுகிறார்கள். விபச்சாரத்தில் ஈடுபடும் ஆண்களின் போட்டோக்களையோ கைது தகவல்களையோ பார்க்க முடிவதில்லை. முன்பு ரேணுசா சவுத்ரி சொல்லியிருந்தார், 'விபச்சாரத்தில் ஈடுபடும் ஆண்களுக்கும் 7 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கும்படியான சட்டத்திருத்தம் வேண்டும். விபச்சார விடுதியில் 18 வயதுக்குட்பட்ட பெண்ணுடன் விபச்சார உறவு கொண்டு பிடிபடும் ஆண்களுக்கு கற்பழிப்பு அல்லது கற்பழிப்பு முயற்சி என வழக்கு தொடரப்பட வேண்டும்' என்பதாக.

ஆம். இது போன்று விபச்சார தடுப்பு சட்டம் கடுமையாக்கப்பட வேண்டும். கடுமையான சட்டத்தாலேயே குற்றத்தை கட்டுப்படுத்த முடியும் என்றாலும் திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால்... :(

விபச்சாரம்- சேவையாக இருந்தாலும், தொழிலாக இருந்தாலும் கண்டிப்பாக ஒடுக்கப்பட வேண்டும். அது உண்மையில் சிலருடைய வாழ்வாதார பிரச்சனையாக இருந்தாலும் சரியே. உதாரணமாக சிலருடைய வாழ்வை பிரகாசிக்கச்செய்தாலும், பலருடைய வாழ்வை இருளச்செய்ததால் தடைசெய்யப்பட்டு ஒழிக்கப்பட்ட லாட்டரியை சொல்லலாம்.

The Immoral Traffic Prevention) Act, 1956

Nov 5, 2009

பத்துக்கு பத்து - பிடித்ததும் பிடிக்காததும்

1. அரசியல் தலைவர்
பிடித்தவர்: ஸ்டாலின்
பிடிக்காதவர்: அன்புமணி

2. எழுத்தாளர்
பிடித்தவர்: எஸ்.ராமகிருஷ்ணன்
பிடிக்காதவர்: ஞாநி

3. கவிஞர்
பிடித்தவர்: மு.கருணாநிதி
பிடிக்காதவர்: உயிரோடு இல்லை

4. திரைப்பட இயக்குனர்
பிடித்தவர்: அமீர்
பிடிக்காதவர்: மணிரத்னம்

5. நடிகர்/கை
பிடித்தவர்: ஜெயலலிதா
பிடிக்காதவர்: விஜயகாந்த்

6. விளையாட்டு வீரர்
பிடித்தவர்: விஸ்வநாதன் ஆனந்த்
பிடிக்காதவர்: அஜீத்

7. தொழில் அதிபர்
பிடித்தவர்: கலாநிதி மாறன்
பிடிக்காதவர்: ஷங்கர்

8. மதத் தலைவர்
பிடித்தவர்: கி.வீரமணி
பிடிக்காதவர்: இராமகோபாலன்

9. மருத்துவர்
பிடித்தவர்: புருனோ
பிடிக்காதவர்: ராமதாஸ்

10. வலைபதிவர்
பிடித்தவர்: லக்கிலுக்
பிடிக்காதவர்: யுவகிருஷ்ணா

என்னைத் தொடர அழைத்தது:  நாடோடி இலக்கியன்

நான் தொடர அழைப்பது:
விதி இங்க இருக்கு. 

டிஸ்கி: பிடித்த/பிடிக்காதவர் எந்த நிமிடமும் மாற்றப்படலாம்.

Oct 18, 2009

நட்பு என்பது...

நட்பு என்பது... 'மன்னிச்சுக்கோங்க பாஸ்' என்பதல்ல, 'தப்பு உம்மேல தான்டா' என்பது.
நட்பு என்பது... 'உனக்காக நான் இருக்கிறேன்' என்பதல்ல, 'எங்கடா அடி வாங்குன' என்பது
நட்பு என்பது... 'நான் புரிந்து கொண்டேன்' என்பதல்ல, 'எல்லாம் உன்னாலதான்டா' என்பது
நட்பு என்பது... 'உன்னை நான் கவனமாக பார்த்துக்கொள்வேன்' என்பதல்ல,'நாயே, உன்ன விட்டுட்டு எங்கடா போகப்போறேன்' என்பது
நட்பு என்பது... 'உன் வெற்றியில் மகிழ்கிறேன்' என்பதல்ல. 'பார்ட்டிக்கு ஏற்பாடு பண்றா மாப்ள' என்பது.
நட்பு என்பது... 'நான் அவளை காதலிக்கிறேன்' என்பதல்ல, 'டேய் மரியாதையோட பாருடா.. அவ உன் அண்ணி' என்பது
நட்பு என்பது... 'நாளைக்கு வெளிய போகலாமா?' என்று கேட்பதல்ல, 'நடிக்காதடா... நாளைக்கு நாம வெளிய போறோம்' என்பது
நட்பு என்பது... 'விரைவில் குணமடையணும்' என்பதல்ல, 'ஜாஸ்தி குடிச்சா இப்டித்தான் ஆகும், என்பது
நட்பு என்பது... 'உன் பதவி உயர்வுக்கு வாழ்த்துக்கள்' என்பதல்ல, 'வண்டி ஓவர் ஸ்பீட்ல போகுது, ப்ரேக் போட்றா' என்பது
 நட்பு என்பது... 'அம்மா செலவுக்கு பணம் அனுப்பு' என்பதல்ல, 'அடுத்த தடவ போன் பண்ணும் போது மனசுவிட்டு பேசுடா, சின்ன வயசில பார்த்த சூப்பர் வுமன் இல்ல.. அம்மா, பக்கத்தில இருந்து கவனிச்சுக்கணும், உடனே ஊருக்கு கிளம்பி போ, காசு நாளைக்கு சம்பாதிக்கலாம்' என்பது.
 இத்தகைய நட்பை எனக்கு பெற்றுத்தந்த இணையத்திற்கு.... ஐ... நன்றி சொல்வேன்னு நெனச்சீங்களா... போய் வேலைய பாருங்க... 

Oct 12, 2009

ஓசியில் ஓர் உலகத் தந்தி - ட்விட்டர்

ஓசியில் ஓர் உலகத் தந்தி - ட்விட்டர்

மாலையில் அலுவலகம் சென்று விட்டால், ஒரு காஃபி குடிக்கக்கூட வெளியில் செல்ல முடிவதில்லை. பின்ன.. அந்த கேப்புல நம்ம பசங்க ஏதாவது ட்விட்டுறாங்களே. நேத்து அப்டித்தான் 'சின்ன வேலையா' போயிட்டு வரதுக்குள்ள, நம்ம மேல அபாண்டமா குற்றம் சொல்லிட்டாங்க.. சாரி.. ட்விட்டிட்டாங்க. ஆனாலும் சில உண்மைகள், 'பெண்களுக்கு ரொம்ப பிடிச்சவன்'. அப்டிங்கிற ரேஞ்சில் ட்விட்டினதுனால போனாபோகுதுன்னு விட்டுட்டேன். நான் பொறுமையா இருந்ததால அத்தோட போச்சு இல்லைன்னா.. போன், பார், குத்து, ரத்தம், ஆஸ்பத்திரி அளவுக்கு பெருசா போயிருக்கும்.

அப்போ ட்விட்டர் அவ்ளோ மோசமானதா? இல்லைங்க...  நம்ம வீட்டு வேலைக்காரி மாதிரி, அக்கம் பக்கம் நடக்கிற விஷயத்தையெல்லாம் நம்ம அடுப்பங்கறையில வந்து சொல்லும். அண்டார்டிகாவில் இருந்து ஆஸ்டின்பட்டி வரை எல்லாமே ட்விட்டருக்கு அக்கம் பக்கம்தான்.
  • தலைமை அலுவலகத்தில் இருந்து மேனேஜர், என் அலுவலகம் வர ஆயத்தமாகிறார்.
  • சென்னையில் இரு முக்கிய பதிவர்களுக்கிடையே கைகலப்பு, ரத்தம்.
  • தேக்கடியில் படகு கவிழ்ந்தது.
  • சோழவந்தானில் பட்டாசுவெடி விபத்து.
  • திருப்பூர் அரசாங்க கடை எண் 214க்கு எதிரில் இருக்கும் பாட்டிக்கு அழகான பேத்தி இருக்கிறாள்.
  • பெங்களூருவில் மழை, விமான நிலையம் செல்ல பேருந்து இல்லை.
  • தமிழில் கிரந்தம் தேவையா?
  • புட்டு என்பதை இலங்கையில் பிட்டு என்று சொல்வார்கள்.
  • பாராக் ஒபாமாவிற்கு நோபல் பரிசு.
  • அடுத்த நோபல் ஒசாமாவிற்கு வழங்கப்படுமா?
  • சுமத்ராவில் சுனாமி எச்சரிக்கை.
  • அமெரிக்க சூறாவளிக்கு பெயர் கேத்ரீனா என்றால், தமிழக சூறாவளிக்குப் பெயர் புவனா?
  • வெண்பாம்... 
இது போன்ற அவசியமான மொக்கைகளும், அவசியமில்லாத குப்பைகளும் ட்விட்டரில் உடனுக்குடன் பரிமாறப்படும். ஆற்றுநீரில் அனைத்தையும் அள்ளிக் குடிக்க முடியாது, நமக்கு வேண்டியதை எடுத்து பயன்பெறலாம்.

யாரேனும் எனக்கு செய்தி சொல்ல வேண்டும் என்றால், நான் 24 மணி நேரமும் ஆன்லைனில் இருப்பேனே.. சாட்டிங்கில் சொல்லலாமே. என்றால், அங்குதான் ட்விட்டர் மாறுபடுகிறது, இது உங்களுக்கென்று சொல்லப்படும் செய்தியல்ல, ஆனால் உங்களுக்காகவும் சொல்லப்படும் செய்தி. உங்களுக்குத் தேவையானதை நீங்கள் எடுத்துக்கொண்டு மேலே உரையாடலாம்.

ட்விட்டரில் கணக்கு துவங்குவது எப்படி? 

http://twitter.com/ நுழைந்து பயனர் கணக்கு துவங்கி கொள்ளுங்கள். உங்களுக்கு தெரிந்தவர்களை, உங்களை தெரிந்தவர்களை பின் தொடருங்கள்.  உங்கள் சகோதரனான என்னை பின்தொடர, http://twitter.com/PeerMhd சென்று Follow வை க்ளிக் செய்ய வேண்டியதுதான்.
Follow
இனி எனது ட்விட் (மெஸேஜ்) எல்லாம் உங்களுக்கும் தெரியவரும். உங்கள் (அடுப்பங்கறை) தளத்திற்கே வரும். நானும் உங்களை தொடர்ந்தால், உங்கள் ட்விட்களும் எனக்கு தெரியவரும்.
உங்கள் ட்விட்டர் தளத்தின் Home  சென்றால், கீழுள்ளவாரு பெட்டி வரும்.
twitting
பெட்டிக்குள் உங்களது ட்விட்டை எழுதி அப்டேட் செய்யுங்கள். அவ்வளவுதான்.. உங்கள் ட்விட் உலகத்திற்கு சொல்லப்பட்டுவிட்டது. ஓசியில் ஒரு உலக தந்தி. ம்.. ஒரு விஷயம், ஒரு ட்விட்டில் 140 எழுத்துக்களுக்கே அனுமதி. அதே நேரம், நீளமான சில சுட்டிகள் இணைக்கப்படும் போது, அவை தானாக சுருங்கிக்கொள்கிறது. (அதன் நுட்பம் தெரிந்தவர்கள் சொல்லவும்)

ட்விட்டர் ட்ரிக்ஸ்...
  • ஒருவர் பெயருக்கு முன்னால் @ சேர்த்தால், அது அவருக்கு சொல்லப்படும் செய்தி, ஆனாலும் அனைவரும் படிக்கலாம். எ.கா; @PeerMhd
  • ஒருவர் பெயருக்கு முன்னால் d சேர்த்தால், அது அவருக்கு மட்டும் சொல்லப்படும் நேரடி செய்தி, வேறு யாருக்கும் தெரியாது. (அவரும் நம்மை பின்தொடர வேண்டும்) எ.கா d peermhd (no case sensitive)
  • ஒரு வார்த்தைக்கு முன்னால் # சேர்த்தால் பிற்பாடு தேடி எடுக்க உதவும். எ.கா #Nobel
இவற்றை  செய்யலாம்..
  • எளிதாகவும் சிறியதாகவும் பயனர் பெயர் வைத்துக்கொள்ளலாம் 
  • உங்கள் எண்ணத்தோடு ஒத்துப்போகும் மற்ற ட்விட்டர்களை தொடரலாம்.
  • அடிக்கடி ட்விட்டுங்க..
  • இடையிடையே எதிர்வினைக்கு இடமளிங்க..
  • ஆசுவாசமா இருங்க..
  • ஒவ்வொரு எழுத்துக்கும முக்கியத்துவம் கொடுங்க.. 
  • ஒவ்வொரு ட்விட்டுக்கும் / வார்த்தைக்கும் மதிப்பு கொடுங்க..
  • பீக் அவர்ல ட்விட்டுங்க..
  • நேர்மையா இருங்க, சந்தோசமா இருங்க..
  • எந்தப்பொருளையும் விற்பனை செய்ய முயற்சிக்காதீங்க..
  • ஒரு பொருளுக்கும் நமக்கும் உண்டான தொடர்பை சொல்லலாம், தொடர்பு இல்லாததையும் சொல்லலாம்.
  • சுட்டிகளை பரிமாறலாம்,
  • நேரத்திற்கு ஏற்றாற்போல் சூடான தகவல்களை பரிமாறலாம்.
  • கேள்வி கேட்கலாம், பதில் சொல்லலாம்..
  • என்ன செய்துகொண்டிருக்கிறோம் என்று சொல்லலாம்..
  • நம்மை பின் தொடருபவர்களையும் மதிக்க வேண்டும்,
இவற்றை தவிர்க்கலாம்...
  • உங்களால் சமாளிக்க முடியாத அளவிற்கான ட்விட்டர்களை பின்தொடரவேண்டாம். 
  •  யாரையும், எதையும் குறை சொல்ல வேண்டாம். 
  •  ஒவ்வொரு ட்விட்டுக்கு முன்பும் கவனம். 
  •  140 எழுத்துக்கள்.. மற்றவருக்கு உதவியாகவோ, காயப்படுத்தவோ, ஆறுதலாகவோ அல்லது தவறான புரிதலாகவோ இருக்க முடியும்.
சரி.. ட்விட்டரினால் கிடைக்கும் லாபம் என்ன?
  • ஒத்த கருத்துக்களுடனான அறிவு பலப்படும். 
  •  மாற்று கருத்து குறித்தான பரவலான மனநிலை அறியலாம் 
  •  சமகால நிகழ்வுகளை உடனுக்குடன் அறியலாம். 
  •  வலைப்பக்கத்தின் தரம் உயரும். 
  •  வலைப்பக்க ஹிட்ஸ் அதிகரிக்கும் 
  •  மற்ற பதிவர்களுடனான தொடர்பு ஏற்படுத்தலாம்.
  •  ஒத்த கருத்துடையவர்களுடனான நட்பு பெருகும். 
  •  ட்விட்டர் விளம்பரத்தின் மூலம் பணமும் பண்ணலாம்.
Firefox நெருப்புநரி பாவிப்பவர்கள் http://twitterfox.net/ Addon இன்ஸ்டால் செய்துகொள்ளலாம். TwitterFox இப்போது EchoFon என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

echo

http://www.tweetdeck.com/beta/ இன்ஸ்டால் செய்துகொள்ளலாம். TweetDeck ப்ரௌஸர் இல்லாமலேயே இயங்கக்கூடியது. ரிப்ளை ஆல், வியூ ப்ரோஃபைல் போன்ற பல பில்ட்இன் ஆப்ஷன்ஸ் உள்ளது.
TwitterDeck
    ட்விட்டர் தளத்தின் ஸ்டேட்ஸ் தெரிந்து கொள்ள http://tweetstats.com/ செல்லலாம். அங்கு கீழுள்ளது போன்ற விபரங்கள் திரட்டி தரப்படுகிறது.
    tweetstats
    tweetstats1 tweetstats2

    ட்விட்டர் பிரபலங்களின் முகவரி,
    http://twitter.com/PeerMhd – பீர் | Peer [Its Me… :-)]

    http://twitter.com/BarackObama – ஒபாமா
    http://twitter.com/schwarzenegger - அர்னால்ட்
    http://twitter.com/mrskutcher – டெமிமூர்
    http://twitter.com/britneyspears – ப்ரிட்னி ஸ்பியர்ஸ்

    http://twitter.com/SMKrishnaCong – எஸ்.எம். கிருஷ்ணா
    http://twitter.com/ShashiTharoor – சசி தரூர்
    http://twitter.com/chetan_bhagat – சேட்டன் பகத்
    http://twitter.com/PrabhuChawla – பிரபு சாவ்லா
    http://twitter.com/MallyaMan – விஜய் மல்லையா
    http://twitter.com/heshpathi – மகேஷ் பூபதி
    http://twitter.com/mdhoni – ம. சிங் தோனி
    http://twitter.com/Aamir_Khan – ஆமிர்கான்
    http://twitter.com/amitabh_bachan – அமிதாப் பச்சன்
    http://twitter.com/preityzinta – ப்ரீதி ஜிந்தா
    http://twitter.com/DuttaLara லாரா தத்தா
    http://twitter.com/arrahman – ஏ ஆர் ரஹ்மான்
    http://twitter.com/aishwarya_rai - ஐஷ்வர்யாராய்
    http://twitter.com/Shahrukh_Khan – ஷாருக்கான்
    http://twitter.com/R_Khanna – ராகுல் கண்ணா
    http://twitter.com/konkonas – கொங்கனா சென்
    http://twitter.com/priyankachopra – ப்ரியங்கா சொப்ரா
    http://twitter.com/MallikaLA – மல்லிகா ஷெராவத்
    http://twitter.com/Neha_Dhupia – நேஹா தூபியா
    http://twitter.com/kunal_deshmukh – குனால் தேஷ்முக்
    http://twitter.com/emraanhashmi – இம்ரான் ஹாஷ்மி
    http://twitter.com/Asin_Thottumkal – அசின்
    http://twitter.com/chinmayi – சின்மயி
    http://twitter.com/shrutihaasan – ஷ்ருதிஹாசன்
    http://twitter.com/shreyaghoshal – ஷ்ரேயா கோஸல்
     
    http://twitter.com/nramind – ஹிந்து ராம்
    http://twitter.com/maalan – மாலன்
    http://twitter.com/writerpara – பா.ராகவன்
    http://twitter.com/nchokkan - சொக்கன்
    http://twitter.com/luckykrishna – யுவகிருஷ்ணா
    http://twitter.com/snapjudge – பாஸ்டன் பாலா
    http://twitter.com/NagoerRumi – நாகூர் ரூமி
    http://twitter.com/orupakkam – ஒருபக்கம்
    http://twitter.com/bseshadri – கிழக்கு பத்ரி
    http://twitter.com/spinesurgeon – புருனோ
    http://twitter.com/ivansivan – இவன்சிவன்
    http://twitter.com/dynobuoy – டைனோ
    http://twitter.com/jyovramsundar - ஜ்யோவ்ராம்
    http://twitter.com/rozavasanth – ரோஸாவசந்த்
    http://twitter.com/athisha – அதிஷா
    http://twitter.com/elavasam -  இலவசகொத்தனார்

    http://twitter.com/bbcbreaking – பிபிசி
    http://twitter.com/the_hindu – தி ஹிந்து
    http://twitter.com/vikatan - விகடன்
    http://twitter.com/youthfulvikatan – யூத் விகடன்
    http://twitter.com/dinamalarweb - தினமலர்
    ட்விட்டர் உபயோகமில்லாதது என்று மட்டுமே நினைத்துக் கொண்டிருக்காமல், முயற்சி செய்து பாருங்கள். இது ஒரு குழுமம், சமூகம், இங்கிருந்து பல அறிய தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.. ஒவ்வொரு ட்விட்டும் ஒரு நுண் வலைப்பதிவு.
    நன்றி.

    Sep 28, 2009

    இஸ்லாமியர்களும் தீவிரவாதமும்

    "அமைதி" என்ற ஒற்றை வார்த்தையிலிருந்து பிறந்த சொல்லையே தனது மதத்தின் பெயராகக்கொண்ட இஸ்லாமியர்களுக்கெதிரான பிரச்சாரத்தில் "இஸ்லாமிய தீவிரவாதம்" என்ற சொல்லாடலுக்கான எண்ணம் / திட்டம் ஒரளவு வெற்றி பெற்றுவிட்டது என்றே சொல்லவேண்டும். நீண்டகாலமாக கட்டவிழ்த்து விடப்படும் இப்பிரச்சாரத்தின் பெரும் பங்கு ஊடகத்துறையையே சாரும் என்பதையும் மறுக்க முடியாது. பொதுஅறிவு வளர்க்க வேண்டிய பத்திரிக்கை, தொலைக்காட்சி, திரைப்படம் போன்றவையே இந்த பாதகச்செயலை முன்னின்று செய்வது துரதிஷ்டவசமானது. பொழுதுபோக்கு சாதனமாக திரைப்படம் பார்க்கப்பட வேண்டும் என்றாலும், பார்க்கப்பட்டாலும், அதற்கு மிகப்பெரிய (அழிவு) ஆக்கசக்தி உண்டு என்பதையும், உளவியல் ரீதியில் நிச்சயம் பாதிப்பு ஏற்படுத்தும் என்பதையும் சமீபத்திய திரைப்பட விமர்சனங்களில் பார்க்க முடிகிறது. இத்திரைப்பட விமர்சனமானது, படைப்பை விமர்சித்து, படைப்பாளனை விமர்சித்து, தற்போது விமர்சகனை விமர்சிக்கும் நிலையில் நிற்கிறது. இந்நிலையில் இரண்டு விஷயங்களை தெளிவாக புரிந்துகொள்ள முடிகிறது. ஒன்று; பொழுதுபோக்கு சாதனமான திரைப்படம், முற்போக்குச் சிந்தனையாளர்கள் என்று சொல்லக்கூடிய இணைய நண்பர்களிடம் ஏற்படுத்தியுள்ள தாக்கங்களை நேரடியாகக் காண முடிவது. (தவிர, எந்த முற்போக்கு சிந்தனையுமில்லாமல், பொழுதுபோக்கிற்கு திரைப்படம் காண வரும் ஒருவனின் உளவியல் பாதிப்புக்களை அவதானிக்க முடியாது, அது எத்தன்மை கொண்டதாகவும் இருக்கலாம்.) இரண்டாவது; இணையம் என்ற ஊடக வெளியும், முன்னெப்போதையும் விட தற்போது மிக வீரியமாக துவேஷப்பரப்புரையை நிகழ்த்தி வருவது. அதற்கான மிக முக்கிய காரணமாக நான் விளங்குவது, மற்ற ஊடகங்களைப்போல இங்கு முகம் காட்டவேண்டியதில்லை என்பதே. மேலும், இப்பதிவு திரைப்பட விமர்சனமோ, விமர்சக விமர்சனமோ இல்லையாதலால், இது… இங்கேயே கிடக்க.

    k1057276
    "இஸ்லாமிய தீவிரவாதம்" என்ற சொல்லாடல் இஸ்லாமியர்களுக்கு கசப்பு தருவது எந்தளவு உண்மையோ அதே அளவு உண்மையே தீவிரவாத விகிதாச்சாரத்தில் இஸ்லாமியர்கள் அதிகமாக இருப்பதும். அமைதியை போதிக்கும் இஸ்லாத்தில், சிலரது இத்தகைய தீவிர நடவடிக்கைகள், இஸ்லாத்தை காக்கும் என்பதோ, அதன் வளர்ச்சிக்கு உதவும் என்பதோ எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாதது மட்டுமல்ல, வரலாற்றில் இதுவரை நிரூபிக்க முடியாததும் கூட. அமைதியை அமைதி எனச் சொல்லும், அமைதியாய் வாழ்ந்து காட்டும் முயற்சியும் இதனால் சாத்தியப்படாமல் போகிறது என்பதே உண்மை. வன்முறையால் அவர்கள் தமக்குத்தாமே 'கபர்' குழிபறித்துக்கொள்ளவதோடு, இஸ்லாத்தின் வளர்ச்சிக்கும் தடையாகிறார்கள் என்பதை உணரவேண்டும். வன்முறையால் எதையும் சாதிக்கலாம் என்பது இஸ்லாமிய சிந்தனை அல்ல. வன்முறையால் வளர்ந்த சித்தாந்தம் காலப்போக்கில் மக்கிக்போன வரலாறுகளைப் பார்க்க முடிகிறது. இத்தகைய செயல்களாலேயே, இஸ்லாம் போதிக்கும் முறைப்படி, 'தன்னை படைத்தவனுக்கு நன்றி செலுத்தி, அமைதியாய் வாழும்' பெரும்பான்மை முஸ்லீம்களும், '“என்னடா! எங்க குண்டு வைக்கலாம்ன்னு பிளான் செய்யறீங்களா?”' போன்ற அருவருக்கத்தக்க கேளிச் சொற்களால் கூனிக்குறுகும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். இஸ்லாமியன் பெயரைக்கேட்டாலே 'வீடு காலி இல்லை' என்பது இன்றைய பெரு நகர சகோதரர்களின் டெம்ப்ளேட் பதிலாகிவிட்டது. தீவிரவாதத்தின் ஒருசில எதிர்வினைகளான இவற்றையும் மனச் சங்கடங்களோடு எதிர்கொள்ள வேண்டியிருப்பது, ஆண்டாண்டு காலமாக சகோதர சமூகத்தில் 'மாமு, மச்சான்' எனப்பழகிவந்த முஸ்லீம்களுக்கு வேதனையளிக்கிறது.

    இஸ்லாத்தை பற்றிய தவறான உருவகத்தை மாற்ற வேண்டிய கடமை, பொறுப்பு, இஸ்லாமியர்களுக்கே இருக்கிறது. பேச்சிலும் எழுத்திலும், குர்ஆன் மற்றும் நபிமொழி ஆதாரங்களை எடுத்துக்காட்டி "இஸ்லாம் அமைதி மார்க்கம்" எனச் சொல்லிவிடுவதால் மட்டுமே, அது உண்மை என்பதை நிரூபித்துவிட முடியாது. இஸ்லாம் கூறும் அமைதி முறையை, மனித நேயத்தை, சீறிய வாழ்க்கை நெறியை பின்பற்றி வாழ்ந்து காட்டுவதால் மட்டுமே, இஸ்லாம், தீவீரவாதத்தை, பயங்கரவாதத்தை வெறுக்கிறது, இஸ்லாத்திற்கும் அதற்கும் துளியளவும் தொடர்பில்லை என்பதை நிரூபிக்க முடியும். அதன் மூலமே, சிலரது செய்கைக்கு முழு சமூகமும் பொறுப்பாகாது என்ற புரிதலுடனான, மாற்று மத சகோதரர்களின் நம்பிக்கையையும் நல்மதிப்பையும் பெறமுடியும். இஸ்லாமியர்களுக்கெதிரான மிகமோசமான சூழல் நிலவும் இந்தியப் பன்முகச் சமூகத்தில், இவற்றை சாத்தியப்படுத்துவது மிகக்கடினம் என்றாலும், செய்தே தீர வேண்டிய கட்டாயத்திற்கு இந்திய சிறுபான்மையினர் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

    books_terrorism_facts_myth_ தீவிரவாதம் என்பது நாடு, இனம், மதம் (சார்பு, சார்பற்ற), மொழி என்ற அனைத்திற்கும் அப்பாற்பட்டது என்பதை மனித உரிமை ஆர்வலர்கள் பலமுறை  உரக்கச்சொல்லியும் பெரும்பாலானவர்கள் காதுகளில் விழுவதில்லை. நாடு, இனம், மதம் மற்றும் மொழி அடையாளங்களைச் சொல்லி தீவிரவாதத்தை தூண்டும் (i), அவற்றால் உந்தப்பட்டு தீவிரவாதம் செய்யும் (ii), தீவிரவாதத்திற்கு (நேரடி தொடர்பில்லை எனினும்) வர்க்க அடையாளங்கள் பூசும் (iii) அனைவரும் குற்றவாளிகளே, தண்டனைக்குட்படுத்தப்பட வேண்டியவர்களே. இவை மூன்றும் ஒன்றிற்கு ஒன்று தொடர்புடையது போலவே சங்கிலித்தொடரானதும் கூட. 

    சிறுவயது முதல் கற்பித்து வளர்க்கப்படும் பல கருத்துக்களே மனிதர்களிடத்தில் ஆழமான நம்பிக்கைகளாக வேர் விடுகின்றன. (என்னை அப்படியெல்லாம் வளர்க்கவில்லை என்று நாம் இப்போதும் சொல்லவதுண்டு.) அசோகர் மரம் நட்டார், பாலம் கட்டினார் என்பதாகச் சொல்லும் ஆரம்பப் பள்ளிக்கல்வியின் வரலாறு, முகலாய மன்னரின் பதின்மூன்று மனைவிகளையும், கஜினியின் பதின்நான்கு படையெடுப்பையும் மட்டும் சொல்லி ஒருதலைபட்ச இஸ்லாமியர்களுக்கெதிரான துவேஷப்பரப்புரையை தொடங்குகிறது. இத்தகைய விஷவேர்கள் பிற்பாடு, "இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டது" எனும் பொய் கூற்றை பகுத்தறியாமல் ஏற்றுக்கொள்ளும் மனநிலையை ஏற்படுத்திவிடுகிறது. அதுபோலவே, "இஸ்லாமியர்களுக்கு தேசப்பற்று இல்லை" எனும் விஷமத்திற்கு வெள்ளையின எதிர்ப்பு போராட்டத்தில் உயிர் நீத்த இஸ்லாமியர்களின் வரலாறு மறைக்கப்படுவதும் காரணமாக அமைந்து விடுகிறது. இஸ்லாமியர்களின் ஐந்து கடமைகளில் (கடவுள் நம்பிக்கை, வழிபாடு, நோன்பு, தானம் மற்றும்) கடைசியான ஹஜ் எனப்படும் புனித காபா செல்லும் கடமையை எந்த முகலாய மன்னரும் நிறைவேற்றிதாக குறிப்பு இல்லை. இஸ்லாத்தின் கடமையையே செய்யத்தவறிய முகலாய மன்னர்கள், இஸ்லாத்தை பரப்ப வாளேந்தியிருப்பார்கள் என்பதை பகுத்தறிவால் ஏற்க முடியவில்லை. வெள்ளையர்களுக்கு முன்பு நாடு பிடிக்க வந்தவர்கள், 600 ஆண்டுகளுக்கு முன்பான அகண்ட இந்தியாவை 1000 ஆண்டுகளுக்கும் மேலாக முழுதுமாக ஆண்டபோதே, இஸ்லாத்தை வன்முறையால் பரப்ப நினைத்திருக்க சாத்தியம் இல்லை என்பதற்கு இந்த சமூகம் இப்போதும் சிறுபான்மையாக இருப்பதே சாட்சி. இவர்கள், வாணிபத்திற்காக வந்தவர்களின் வாழ்க்கை முறை மற்றும் சாதீய ஏற்றத்தாழ்வுகள் இல்லாத மனிதநேயத்தை பார்த்து மனம் மாறி இஸ்லாத்தை தழுவியதனாலேயே இன்றளவும் இஸ்லாம் எனும் கயிற்றை பற்றிப்பிடித்து கொண்டிருப்பதை காணலாம். 

    அது நிற்க... வணிக மையங்களிலும், இரயில் நிலையங்களிலும் வெடிகுண்டுகளை வீசி நூற்றுக்கணக்கில் உயிர்களைப் பறிப்பது நியாயம்தானா? விமானங்களைக் கடத்திப் பயங்கரவாதிகளை விடுவிக்கப் பணயம் வைப்பது இஸ்லாம் சார்ந்த பணிகளா? ஒரு பாவமும் செய்யாத பச்சிளங்குழந்தைகளும், பெண்களும் செத்து மடிவதை வேடிக்கை பார்க்கத்தானா இஸ்லாம் கூறுகிறது? இத்தகைய வன்முறைச் செயலுக்கெல்லாம் இஸ்லாத்தை பொதுப்படுத்தி நியாயம் சொல்வது சரியா? என்பது போன்ற பல கேள்விகள் எல்லோருக்கும் எழலாம். இவற்றிற்கெல்லாம் பதில்.
    இல்லை... இல்லை.. இல்லை... இஸ்லாம் இதை கற்பிக்கவில்லை. வன்முறையை வெறுக்கும் மார்க்கம் இஸ்லாம். 'மனிதர்களிடம் நீதியுடனும் நேசத்துடனும் நடந்துகொள்ளுங்கள்' என்றுதான் முஹம்பது நபி சொல்லிச் சென்றிருக்கிறார்.

    Godhra-Riots1ஒரு சிலரின் வன்செயலுக்கு அவர்களது மதத்தையோ, மதத்தை பின்பற்றும் மக்களையோ குற்றவாளியாக்குவது எந்த விதத்தில் நியாயமாகும்? குஜராத்தில் கொடுஞ்செயல் நிகழ்த்திய மோடி, பாபு பஜ்ரங்கி மற்றும் மாலேகான் குண்டுவெடிப்பில் குற்றஞ்சாட்டப்பட்ட பிரக்யாசிங் தாக்கூர்  போன்றோரால் ஒட்டு மொத்த இந்து சகோதரர்களையும் குற்றவாளியாக்கிப்பார்ப்பது எந்தளவு மடத்தனமோ, நியாயமில்லையோ... அதேபோல... இஸ்லாத்தின் பெயர் சொல்லும் சில தீவிரவாதிகளுக்காக மற்ற பெரும்பான்மை இஸ்லாமியர்களை குற்றஞ்சாட்டுவதும் அறிவிலித்தனம்.

    எலி இருக்கும் இடத்தில் பூனை வருமாம்... எலியை விரட்ட மனிதனால் முடியாதா? எலியை கொல்ல, பூனை என்ற மிருகம் தான் வேண்டுமெனில், பூனையை கொல்ல, புலி வருவது அதைவிட ஆபத்தாச்சே. புலி என்ற மிருகத்திற்கு, சக மிருகமாகிய பூனை, மனிதன் என்ற வித்தியாசம் இல்லாமல், மனிதத்தையும் சேர்த்தே கொன்றுவிடுமே... எலியானாலும் புலியானாலும் மனிதர்கள் கைகோர்த்து காட்டுக்கு விரட்ட முடியாதா? மனிதர்கள் ஒன்றுபட்டால் மிருகங்களை விரட்டி விடலாமே.

    எங்கோ செய்திகளில் கேட்பதையும், முகம் இல்லாதவர்களின் இணைய எழுத்தின் போலி குற்றச்சாட்டுகளையும், துவேஷத்தையும், கட்டுக்கதைகளையும் அப்படியே நம்பிவிடாமல், நம் அண்டை, எதிர் வீடுகளிலிருக்கும் மாற்று மத சகோதர்களை மனிதநேயத்துடன் கை கோர்த்து பார்ப்போம். நிச்சயம் என் அப்பாவி நண்பனால் இத்தகைய வன்செயல்களை ஈடுபடமுடியாது என்பதையும், எந்த கடவுள் கொள்கையும் அத்தகைய சமூக விரோதத்தை செய்யச்சொல்வதில்லை என்பதையும் உணர்ந்து கொள்வோம். மதத்திற்கு அப்பாற்பட்டவனாய் இருந்தாலும், பன்முகச் சமூகத்துடன் ஒன்றியிருக்கும் ஒருவனால் அச்சமூகத்தின் மீது வன்முறையை கட்டவிழ்த்து விடமுடியாது என்பதை அனுபவித்து உணரலாம்.

    தீவிரவாதத்திற்கு 'புறக்கணிப்பு' என்ற ஒற்றைச்சொல் தானே காரணமாக இருக்கிறது. தான், தன் இனம், மொழி, மதம் புறக்கணிக்கப்படுகிறது என்ற காரணம் தானே தீவிரவாதி உருவாக காரணியாகிறது.

    சிலர் செய்யும் தவறுக்கு ஒரு சிறுபான்மைச் சமூகத்தையே புறந்தள்ளி ஒதுக்கிவிடாமல், 'மற்றவர்கள் செய்யும் தவறுக்கு நீ என்ன செய்வாய்' என்று தோளோடு கை கோர்த்து அரவணைத்து, அழைத்துச் செல்லவேண்டியது பெரும்பான்மையான ஒவ்வொருவரின் கடமையல்லவா? பயங்கரவாதத்தை வெறுக்கும் அனைவரும் ஒன்றுபட்டால், அதை முற்றிலுமாக ஒழித்துவிட முடியாதா? வாருங்கள்...
    பயங்கரவாத ஒழிப்பில் கை கோர்ப்போம். மதவேறுபாடுகளை மறந்த மனிதநேயம் காப்போம்,.

    Sep 21, 2009

    மோசடி, பெண்ணியம், தமிழ்மணம் - ஜிகர்தண்டா

    சிட்டி லிமோஸின்ஸ் இந்தியா லிமிடெட் என்ற நிதி நிறுவனம், 500 கோடிக்கும் மேல் மோசடி செய்திருப்பதாக செய்தி.

    குறுகிய காலத்தில் அதிக லாபம் தருவதாய் சொல்லும் எவனும் நேர்மையான தொழிலில் (அல்லது எந்த தொழிலிலும்) முதலீடு செய்திருக்க முடியாது. அவனும் ஏதாவது மோசடி செய்துதான் தன் பங்காளர்களுக்கும் அதன் லாபத்தை பங்கிட்டுத்தர முடியும். மோசடிகள் நீண்ட நாட்களுக்கு நடக்காது. இனிதே ஒருநாள் இடியோடு நிறைவுபெறும். பிறகு சொல்ல வேண்டியது தான், ஸ்டார்டிங்கெல்லாம் நல்லாத்தான் இருந்தது, ஆனா.. ஃபினிஷிங் சரியில்லையேப்பா… என்று. எவ்வளவு அடிச்சாலும் தாங்குற ரொம்ப நல்ல வடிவேலுவை விட, ரொம்ப ரொம்ப நல்ல மக்கா… திருந்தவே மாட்டீங்களா? வால் ஸ்ட்ரீட்காரனே வேர் கடல தின்னுக்கிட்டிருக்கான். இந்தியா லிமிடட்னு பேர் இருந்ததால, நம்பி இன்வெஸ்ட் பண்ணிணோம்னு ஒரு பெண் சொல்கிறார்… அளவுக்கு அதிகமா அசைப்படுகிற பெண் மட்டுமல்ல… எவனும் நல்லா வாழ்ந்ததா சரித்திரம் இல்ல. – வேதனை.

    <<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>

    திருநாவுக்கரசர், காங்கிரசுக்கு தாவுகிறாராம்.

    தவறான இடத்தில் இருக்கும் நல்ல மனிதர் என்று சொல்லப்பட்டவர், திருநாவுக்கரசர். கடந்த நாடாளுமன்ற தேர்தலில், ராமநாதபுரத்தில், இவருக்கே வெற்றி வாய்ப்புகள் இருப்பதாக பரவலாகப் பேசப்பட்டது. இவருக்கு பயந்து, ரித்தீஷ் தேர்தலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பே வந்து டிவிஎஸ் நகரில் ரூம் போட்டு விட்டதாக சொல்லப்பட்டது. கடைசியில் திருநாவுக்கரசர் சார்ந்திருந்த கட்சியின் தமிழக எதிர்ப்பு அலை காரணமாக தோற்கடிக்கப்பட்டார். கட்சி மாறும் அவரை வரவேற்போம். – வாழ்த்துக்கள்.

    <<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>

    புதசெவி – பெண்ணியம் என்றால் என்ன? அமெரிக்க பெண்ணியம், இந்திய பெண்ணியம், தமிழ் பெண்ணியம், மதுரை பெண்ணியம் என்று வேவ்வேறு பெண்ணியம் உள்ளதாமே, அமெரிக்கா சென்ற மதுரைப் பெண்ணுக்கானது எந்தப்பெண்ணியம்? அவரே திரும்ப மதுரை வந்தால்? அனைத்து பெண்ணியத்திலும் பொது அம்சமாக இருப்பது ஆண்களை எதிர்ப்பதும், காப்பி அடிப்பது மட்டும்தானா?

    சரி.. ஆணியம் என்றால் என்ன? பெண்ணியத்திற்கு எதிராக பேசுவதா? பெண்ணியவாதிகள் லெஸ்பியன் ரைட்ஸ் கேட்பது போல, ஹோமோ செக்ஸூவல் ரைட்ஸ் கேட்பது ஆணியமா? – புதசெவி.

    <<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>

    திரட்டிகளில் நான் இணைக்காத, இணைக்க விரும்பாத, என் இடுகையை தமிழ்மணத்தில் வேறொருவர் இணைக்கிறார். மற்ற திரட்டிகளில் இணைத்தவர் யாரென தெரிந்து கொள்ள முடிகிறதே? தமிழின் முண்ணனி திரட்டியான தமிழ் மணம் அந்த வசதியை வழங்க முடியாதா? அதே போல… ஓட்டுப்போட்டவர் யாரென தெரிந்து கொள்ளவது, இடுகையை இணைத்தவருக்கு மட்டும் ஓட்டுப்போட்டவர் யாரென தெரிந்து கொள்ளும் வசதி கொடுக்கலாமே. எக்ஸ்ப்ளோரரில், ஓட்டு எண்ணிக்கையும் தெரிவதில்லை. அண்மை காலங்களில் தமிழிஷில் இருந்து பதிவுக்கு வருபவர்கள் எண்ணக்கை கணிசமாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. – ஆலோசனை.

    <<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>

    சென்ற வாரம் வாசித்ததில் மோகன் கந்தசாமியின் போலி டோண்டு விவகாரம் என்ற தொடர் இடுகை (இதுவரை 6 பகுதிகள்), ஒரளவு இந்த விவகாரத்தை புதியவர்களுக்கு புரியவைக்கிறது.

    மூர்த்தியின் தந்தை திரு. மருதமுத்து, கீழ்திருப்பாலக்குடி மண்ணார்குடியில் நேற்று காலமானதாக செய்தி – அன்னாருக்கு அஞ்சலி.

    <<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>

    பால்பொருள் அங்காடியில் ஒருவர் அரைக் கிலோ வெண்ணை வேண்டும் என்று கேட்கிறார். அதற்கு கடை பணியாளர், ‘இங்கு ஒரு கிலோ பேக்தான் இருக்கிறது, கொஞ்சம் வெயிட் பண்ணுங்க… மேனேஜர் கிட்ட கேட்டுட்டு வரேன்’ என்று உள்ளே சென்று மேனேஜரிடம் கேட்கிறார். ‘சார்.. ஒரு வெண்ணை வந்து அரைக் கிலோ வெண்ணை வேணும்னு கேட்கிறான்’ என்று சொல்லிவிட்டு திரும்பும் போது வெண்ணை கேட்டவர் பின்னால் நின்று பேசுவதை கவனித்துக்கொண்டிருக்கிறார். உடனே கடை பணியாளர், ‘அதே மாதிரி இந்த ஜென்டில் மேனுக்கும் அரை கிலோ வேணுமாம்’ என்று நிலைமையை சமாளித்தாராம்.

    <<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>

    ஜிகர்தண்டா எழுதுவது எனக்கு எப்போதும் எளிதாக இருக்கிறது. இரண்டு, மூன்று வரிகளை வைத்து பில்ட்அப் கொடுக்கலாம். அதிகம் யோசிக்க வேண்டாம், (மற்ற இடுகைகளுக்கு!?), சமகால நிகழ்வுகளில் நமது கருத்தை சொல்லிக்கலாம். ஒரு வணிகத் திரைப்படம் போல, சென்டிமெண்ட், காமெடி, அதிரடி என எல்லாம் அமையப்பெற்று கமர்ஷியலாக இருப்பது. இப்படியே எழுதுவதால் என்றாவது ஒருநாள் சுவாரஸியமாக எழுதிவிட மாட்டோமா என்று கனவோடு எழுதுவது.

    <<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>

    clip_image001

    Sep 15, 2009

    இணைய விவாதம்

    இணையம் தந்திருக்கிற கட்டற்ற பயன்பாடுகளில் ஒன்று, விவாதபயன். பிற தளங்களில் நடத்தப்படும் விவாதங்களை விட இணையதளத்தின் விவாதங்களுக்கு தனிச்சிறப்புகளுண்டு. விவாதிப்பவர் தனது முகம் மறைத்தும் மாற்றுத்தரப்பின் முகம் காணாதும் விவாதிப்பதால், தன் கருத்தில் நிலையாக நின்று, வேறெந்த விசயத்திற்கும் சமரசம் ஆகாமல் தயக்கமின்றி விவாதிக்க முடிகிறது. இதுவே இணைவிவாதத்தின் நேர் மற்றும் எதிர்மறை விழைவாகிப்போவதால், பெரும்பாலான இணைய விவாதங்கள் கருத்து ஒன்றுபடாமலேயே விழலுக்கு இரைத்த நீராகி விடுகிறது என்பதை நான் இதற்கு முன்னரும் சொல்லி உங்களை அலுப்படையச் செய்திருக்கிறேன். பலர் தன் கருத்தை முன்வைத்து அலுப்படையாது திரும்ப திரும்ப விவாதிப்பதாலேயே எதிர் கருத்தாளனிடம் தன் கருத்து சென்றடையும், அதையே மிகப்பெரிய வெற்றி என நான் கருதுகிறேன். ஒத்த கருத்துள்ளவர்களிடமே தமது நட்பை வளர்த்துக்கொண்டு, அதையே பெரும்பான்மை கருத்தாக முன் முடிவோடு விவாதிக்கும் சிலரிடம் இக்கருத்துக்கள் சென்றடைவதால் யாராவது மனம் மாற வாய்ப்புண்டு. குறைந்தபட்சம், மாற்றுக்கருத்தின் ஆழத்தன்மையாவது புரியப்பட்டு விவாதிப்பதிலிருந்து ஒதுங்கியிருக்கும் 'வெளியிலிருந்து ஆதரவு' என்ற நிலையாவது வரலாம். மீண்டும் மீண்டும் ஒரே வாதத்தை முன்வைப்பதால் வேறொரு அபாய எதிர் வினைக்கான வாய்ப்புமிருக்கிறது. இதற்கு மிகச்சமீபத்திய உதாரணமாக ஒரு நபரை தாக்கி வரும் நீண்ண்ட இடுகைகளைச் சொல்லலாம். அடுத்தடுத்து எய்யப்படும் அம்பின் ஒரே குறியும், எதிர்தரப்பின் மௌனமும், ஒரு வேளை இதில் உண்மை இருக்குமோ என்ற எண்ணத்தை (என் போன்ற அப்பாவிகளுக்கு) ஏற்படுத்துவதை தவிர்க்க முடிவதில்லை. ஆனால், இவை உண்மை (க்கு பித்தம் தெளிந்து) வெளிச்சத்திற்கு வரும் வரை மட்டுமே என்பதால் இவ்வகை வினைக்கு பெரிதாக அச்சம் கொள்ள வேண்டியதில்லை என்பது என் புரிதல். மட்டுமல்லாது, தெரியாத விசயத்தில் மூக்கை நுழைப்பானேன். மீ த எஸ்கேப்பு... ஒருவரின் நம்பிக்கையுடன் எதிர் வாதம் செய்வது, வீண் விவாதமாகி வெற்றியடையா நிலையிலேயே தாவு தீர்ந்துவிடும். எதிர் கருத்துக்களுடன் செய்யும் விவாதமே, ஓரளவு பயன் தரும் என்பதும் மிக முக்கியமாக கவனிக்கவேண்டிய புரிதலாக இருக்கிறது. உதாரணமாக, தமிழனுக்கு தமிழ் நம்பிக்கை, ஹிந்தி பற்றிய கருத்துக்கள் எதிர் கருத்துக்கள். ஒருவரின் நம்பிக்கையை சந்தேகப்பட்டு தகர்க்க முயற்சிக்காமல், மாற்று கருத்துக்களுடன் விவாதிப்பதே ஆரோக்கிய விவாதமாகி பயன் தரலாம். நமது நம்பிக்கை தமிழ் மீதென்றால், அவர்கள் நம்பிக்கை ஹிந்தி, மலையாளம், ஆங்கிலம் இன்னபிற மொழிகளின் மீதிருக்கிறது. அவர்கள் கொண்டிருப்பது தமிழ் மீது எதிர் கருத்து. அவர்களின் எதிர்கருத்தான தமிழின் பயன்பாடுகளைச் சொல்லியே அவர்களிடம் விவாதிக்க வேண்டும். மாறாக, எல்லாத்தரப்பிலும் ஒரே விவாதத்தை எடுத்துச் செல்வது, விவாத முரணாகிவிடுகிறது. சரி.. விசயத்திற்கு வருவோம். ஹிந்தி கற்பது பாவச்செயலா என்ற எனது இடுகைக்கு வரிக்கு வரி வரிந்து கட்டிக்கொண்டு எதிர்வினையாற்றிய மருத்துவர் புருனோ, கோவியார் மற்றும் ஏனைய நண்பர்கள் ஏனோ என் எண்ணங்களை புரிந்து விவாதித்ததாகத் தெரியவில்லை. அது வழக்கமான கும்மி என்றாகும் பொருட்டு அதை குறித்து ஒன்றும் சொல்வதற்கில்லை. ஆனால், நான் மேல் சொன்னது போல, எதிர்கருத்தாளின் மனதிற்குள் நம் கருத்து சென்றடைய வேண்டுமாயின், முதலில் அவன் நிலைபாட்டை புரிந்து கொள்ள வேண்டும். ஹிந்தி கற்பது குறித்தான என் நிலைபாடு, 'ஹிந்தியும் ஒரு விருப்ப பாடமாக இருந்துவிட்டு போகட்டுமே' என்பதாகத்தான் இருந்தது. அந்நிலையை ஹிந்தி மீதான ஒரு அனுதாபம் என்பதாகவும் கொள்ளலாம். அதனால்தான் நான் மீண்டும் மீண்டும் சொன்னேன், 'எனக்கு உங்கள் நிலைப்பாட்டை தெளிவாக்கி, என்னை என் நிலையிலிருந்து மாற்ற வேண்டும் என்று நீங்கள் நினைத்தால், ஹிந்தி கற்பதால் உள்ள பாதகங்களை மட்டும் சொல்லுங்கள் அதுவே உங்களுக்கு உதவக்கூடும்' என்பதாக. ஆனால் துரதிஷ்டமோ அல்லது அதிஷ்டமோ, ஹிந்தியை ஆதரிப்பவன் 'தமிழ் மொழிப்பற்று இல்லாதவன்' என்பதான தங்களுடைய தவறான எண்ணத்தில் நின்றே கடைசிவரை விவாதித்தனர் என்பதை விவாத நடையிலிருந்து தெரிந்து கொள்ள முடிந்தது. அவர்களுக்கு விளங்கவைக்க எனது தமிழ் பற்றை சற்று ஓவர் ஆக்டிங் செய்தும் பலனில்லை. என் சிந்தனையை இவர்கள் பக்கமாய் விரிவடையச் செய்ய முடியாது போனதிற்கு, இவர்கள் (என் மொழிப்பற்றை சந்தேகிக்கும்) சிந்தனையை விட்டு வெளியே வராததுதான் காரணமென்பேன். ஆனால், ஹிந்திக்கு போதாகாலம் நண்பர் Maximum India, தனது விவாதத்தை சரியான திசையில் கொண்டு சென்றது. ஒரு சாதாரண இணைய அரட்டை என்பதாகவோ, இவனுக்கு சொன்னால் விளங்கிவிடவா போகிறது என்பதாகவோ எண்ணாமல், எனக்கு என்ன சொல்லவேண்டுமோ அதை அருமையாகச் சொன்னார். ஒருவருடைய நம்பிக்கையை புறக்கணிக்காமல், கருத்தில் மட்டும் மாறுபடும் வேளையில் அவருடைய நம்பிக்கையையே தமக்கு சாதகமாக்கி விவாதிப்பது. அதாவது, ஒரு ஹிந்தி ஆதரவாளின் தமிழ் பற்றை சந்தேகிக்காமல், அவனது தமிழ்பற்றையே மூலதனமாக்கி விவாதத்தை நகர்த்துவதென்பது, வெற்றியை நோக்கி நம்மை நகர்த்திச்செல்வது போன்றாகும். இதில் கவனிக்க வேண்டிய விசயம், அவர் ஹிந்தி கற்றிருந்ததால், 'ஹிந்தியே தேவையில்லை என்ற ஹிந்தி எதிர்ப்பிலிருந்து விலகி, தேவைப்படுவோர் கற்கலாம்' என்பதாக என் கருத்தை ஒரளவு ஒட்டியே சொல்லி என்னை கவனிக்கச்செய்தது. அது மட்டுமின்றி, உங்களுக்கு தேவை என்றால், '3 நாட்களில் ஹிந்தி கற்பது எப்படி' என்ற பதிவு இடுகிறேன் என்றும் சொன்னார். இம்மாதிரியான விவாத போக்கே, மாற்றுக் கருத்தாளனின் தன்மையை மாற்றக்கூடியது என்பதை மீண்டும் ஒரு முறை அறிந்துகொண்டேன். ஆம்... எதிர் கருத்தின் ஆழத்தை புரிந்து கொண்டேன். என்னை தெளிவுபடுத்தி சிந்தனை விரிவடையச்செய்ய, மாற்றுக்கருத்திற்கும் தளம் அமைத்து விவாத தன்மை மாறாது நடைபெறச்செய்த வலைப்பூ உலகத்திற்கு நன்றி. வகையறிந்து வல்லவை வாய்சோரார் சொல்லின் தொகையறிந்த தூய்மை யவர். - பொருட்பால் சொற்களை அளவறிந்து உரைத்திடும் தூயவர்கள் அவையிலிருப்போரின் வகையறியும் ஆற்றல் உடையவராயிருப்பின் பிழை நேருமாறு பேச மாட்டார்கள். - உரை