Sep 28, 2009

இஸ்லாமியர்களும் தீவிரவாதமும்

"அமைதி" என்ற ஒற்றை வார்த்தையிலிருந்து பிறந்த சொல்லையே தனது மதத்தின் பெயராகக்கொண்ட இஸ்லாமியர்களுக்கெதிரான பிரச்சாரத்தில் "இஸ்லாமிய தீவிரவாதம்" என்ற சொல்லாடலுக்கான எண்ணம் / திட்டம் ஒரளவு வெற்றி பெற்றுவிட்டது என்றே சொல்லவேண்டும். நீண்டகாலமாக கட்டவிழ்த்து விடப்படும் இப்பிரச்சாரத்தின் பெரும் பங்கு ஊடகத்துறையையே சாரும் என்பதையும் மறுக்க முடியாது. பொதுஅறிவு வளர்க்க வேண்டிய பத்திரிக்கை, தொலைக்காட்சி, திரைப்படம் போன்றவையே இந்த பாதகச்செயலை முன்னின்று செய்வது துரதிஷ்டவசமானது. பொழுதுபோக்கு சாதனமாக திரைப்படம் பார்க்கப்பட வேண்டும் என்றாலும், பார்க்கப்பட்டாலும், அதற்கு மிகப்பெரிய (அழிவு) ஆக்கசக்தி உண்டு என்பதையும், உளவியல் ரீதியில் நிச்சயம் பாதிப்பு ஏற்படுத்தும் என்பதையும் சமீபத்திய திரைப்பட விமர்சனங்களில் பார்க்க முடிகிறது. இத்திரைப்பட விமர்சனமானது, படைப்பை விமர்சித்து, படைப்பாளனை விமர்சித்து, தற்போது விமர்சகனை விமர்சிக்கும் நிலையில் நிற்கிறது. இந்நிலையில் இரண்டு விஷயங்களை தெளிவாக புரிந்துகொள்ள முடிகிறது. ஒன்று; பொழுதுபோக்கு சாதனமான திரைப்படம், முற்போக்குச் சிந்தனையாளர்கள் என்று சொல்லக்கூடிய இணைய நண்பர்களிடம் ஏற்படுத்தியுள்ள தாக்கங்களை நேரடியாகக் காண முடிவது. (தவிர, எந்த முற்போக்கு சிந்தனையுமில்லாமல், பொழுதுபோக்கிற்கு திரைப்படம் காண வரும் ஒருவனின் உளவியல் பாதிப்புக்களை அவதானிக்க முடியாது, அது எத்தன்மை கொண்டதாகவும் இருக்கலாம்.) இரண்டாவது; இணையம் என்ற ஊடக வெளியும், முன்னெப்போதையும் விட தற்போது மிக வீரியமாக துவேஷப்பரப்புரையை நிகழ்த்தி வருவது. அதற்கான மிக முக்கிய காரணமாக நான் விளங்குவது, மற்ற ஊடகங்களைப்போல இங்கு முகம் காட்டவேண்டியதில்லை என்பதே. மேலும், இப்பதிவு திரைப்பட விமர்சனமோ, விமர்சக விமர்சனமோ இல்லையாதலால், இது… இங்கேயே கிடக்க.

k1057276
"இஸ்லாமிய தீவிரவாதம்" என்ற சொல்லாடல் இஸ்லாமியர்களுக்கு கசப்பு தருவது எந்தளவு உண்மையோ அதே அளவு உண்மையே தீவிரவாத விகிதாச்சாரத்தில் இஸ்லாமியர்கள் அதிகமாக இருப்பதும். அமைதியை போதிக்கும் இஸ்லாத்தில், சிலரது இத்தகைய தீவிர நடவடிக்கைகள், இஸ்லாத்தை காக்கும் என்பதோ, அதன் வளர்ச்சிக்கு உதவும் என்பதோ எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாதது மட்டுமல்ல, வரலாற்றில் இதுவரை நிரூபிக்க முடியாததும் கூட. அமைதியை அமைதி எனச் சொல்லும், அமைதியாய் வாழ்ந்து காட்டும் முயற்சியும் இதனால் சாத்தியப்படாமல் போகிறது என்பதே உண்மை. வன்முறையால் அவர்கள் தமக்குத்தாமே 'கபர்' குழிபறித்துக்கொள்ளவதோடு, இஸ்லாத்தின் வளர்ச்சிக்கும் தடையாகிறார்கள் என்பதை உணரவேண்டும். வன்முறையால் எதையும் சாதிக்கலாம் என்பது இஸ்லாமிய சிந்தனை அல்ல. வன்முறையால் வளர்ந்த சித்தாந்தம் காலப்போக்கில் மக்கிக்போன வரலாறுகளைப் பார்க்க முடிகிறது. இத்தகைய செயல்களாலேயே, இஸ்லாம் போதிக்கும் முறைப்படி, 'தன்னை படைத்தவனுக்கு நன்றி செலுத்தி, அமைதியாய் வாழும்' பெரும்பான்மை முஸ்லீம்களும், '“என்னடா! எங்க குண்டு வைக்கலாம்ன்னு பிளான் செய்யறீங்களா?”' போன்ற அருவருக்கத்தக்க கேளிச் சொற்களால் கூனிக்குறுகும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். இஸ்லாமியன் பெயரைக்கேட்டாலே 'வீடு காலி இல்லை' என்பது இன்றைய பெரு நகர சகோதரர்களின் டெம்ப்ளேட் பதிலாகிவிட்டது. தீவிரவாதத்தின் ஒருசில எதிர்வினைகளான இவற்றையும் மனச் சங்கடங்களோடு எதிர்கொள்ள வேண்டியிருப்பது, ஆண்டாண்டு காலமாக சகோதர சமூகத்தில் 'மாமு, மச்சான்' எனப்பழகிவந்த முஸ்லீம்களுக்கு வேதனையளிக்கிறது.

இஸ்லாத்தை பற்றிய தவறான உருவகத்தை மாற்ற வேண்டிய கடமை, பொறுப்பு, இஸ்லாமியர்களுக்கே இருக்கிறது. பேச்சிலும் எழுத்திலும், குர்ஆன் மற்றும் நபிமொழி ஆதாரங்களை எடுத்துக்காட்டி "இஸ்லாம் அமைதி மார்க்கம்" எனச் சொல்லிவிடுவதால் மட்டுமே, அது உண்மை என்பதை நிரூபித்துவிட முடியாது. இஸ்லாம் கூறும் அமைதி முறையை, மனித நேயத்தை, சீறிய வாழ்க்கை நெறியை பின்பற்றி வாழ்ந்து காட்டுவதால் மட்டுமே, இஸ்லாம், தீவீரவாதத்தை, பயங்கரவாதத்தை வெறுக்கிறது, இஸ்லாத்திற்கும் அதற்கும் துளியளவும் தொடர்பில்லை என்பதை நிரூபிக்க முடியும். அதன் மூலமே, சிலரது செய்கைக்கு முழு சமூகமும் பொறுப்பாகாது என்ற புரிதலுடனான, மாற்று மத சகோதரர்களின் நம்பிக்கையையும் நல்மதிப்பையும் பெறமுடியும். இஸ்லாமியர்களுக்கெதிரான மிகமோசமான சூழல் நிலவும் இந்தியப் பன்முகச் சமூகத்தில், இவற்றை சாத்தியப்படுத்துவது மிகக்கடினம் என்றாலும், செய்தே தீர வேண்டிய கட்டாயத்திற்கு இந்திய சிறுபான்மையினர் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

books_terrorism_facts_myth_ தீவிரவாதம் என்பது நாடு, இனம், மதம் (சார்பு, சார்பற்ற), மொழி என்ற அனைத்திற்கும் அப்பாற்பட்டது என்பதை மனித உரிமை ஆர்வலர்கள் பலமுறை  உரக்கச்சொல்லியும் பெரும்பாலானவர்கள் காதுகளில் விழுவதில்லை. நாடு, இனம், மதம் மற்றும் மொழி அடையாளங்களைச் சொல்லி தீவிரவாதத்தை தூண்டும் (i), அவற்றால் உந்தப்பட்டு தீவிரவாதம் செய்யும் (ii), தீவிரவாதத்திற்கு (நேரடி தொடர்பில்லை எனினும்) வர்க்க அடையாளங்கள் பூசும் (iii) அனைவரும் குற்றவாளிகளே, தண்டனைக்குட்படுத்தப்பட வேண்டியவர்களே. இவை மூன்றும் ஒன்றிற்கு ஒன்று தொடர்புடையது போலவே சங்கிலித்தொடரானதும் கூட. 

சிறுவயது முதல் கற்பித்து வளர்க்கப்படும் பல கருத்துக்களே மனிதர்களிடத்தில் ஆழமான நம்பிக்கைகளாக வேர் விடுகின்றன. (என்னை அப்படியெல்லாம் வளர்க்கவில்லை என்று நாம் இப்போதும் சொல்லவதுண்டு.) அசோகர் மரம் நட்டார், பாலம் கட்டினார் என்பதாகச் சொல்லும் ஆரம்பப் பள்ளிக்கல்வியின் வரலாறு, முகலாய மன்னரின் பதின்மூன்று மனைவிகளையும், கஜினியின் பதின்நான்கு படையெடுப்பையும் மட்டும் சொல்லி ஒருதலைபட்ச இஸ்லாமியர்களுக்கெதிரான துவேஷப்பரப்புரையை தொடங்குகிறது. இத்தகைய விஷவேர்கள் பிற்பாடு, "இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டது" எனும் பொய் கூற்றை பகுத்தறியாமல் ஏற்றுக்கொள்ளும் மனநிலையை ஏற்படுத்திவிடுகிறது. அதுபோலவே, "இஸ்லாமியர்களுக்கு தேசப்பற்று இல்லை" எனும் விஷமத்திற்கு வெள்ளையின எதிர்ப்பு போராட்டத்தில் உயிர் நீத்த இஸ்லாமியர்களின் வரலாறு மறைக்கப்படுவதும் காரணமாக அமைந்து விடுகிறது. இஸ்லாமியர்களின் ஐந்து கடமைகளில் (கடவுள் நம்பிக்கை, வழிபாடு, நோன்பு, தானம் மற்றும்) கடைசியான ஹஜ் எனப்படும் புனித காபா செல்லும் கடமையை எந்த முகலாய மன்னரும் நிறைவேற்றிதாக குறிப்பு இல்லை. இஸ்லாத்தின் கடமையையே செய்யத்தவறிய முகலாய மன்னர்கள், இஸ்லாத்தை பரப்ப வாளேந்தியிருப்பார்கள் என்பதை பகுத்தறிவால் ஏற்க முடியவில்லை. வெள்ளையர்களுக்கு முன்பு நாடு பிடிக்க வந்தவர்கள், 600 ஆண்டுகளுக்கு முன்பான அகண்ட இந்தியாவை 1000 ஆண்டுகளுக்கும் மேலாக முழுதுமாக ஆண்டபோதே, இஸ்லாத்தை வன்முறையால் பரப்ப நினைத்திருக்க சாத்தியம் இல்லை என்பதற்கு இந்த சமூகம் இப்போதும் சிறுபான்மையாக இருப்பதே சாட்சி. இவர்கள், வாணிபத்திற்காக வந்தவர்களின் வாழ்க்கை முறை மற்றும் சாதீய ஏற்றத்தாழ்வுகள் இல்லாத மனிதநேயத்தை பார்த்து மனம் மாறி இஸ்லாத்தை தழுவியதனாலேயே இன்றளவும் இஸ்லாம் எனும் கயிற்றை பற்றிப்பிடித்து கொண்டிருப்பதை காணலாம். 

அது நிற்க... வணிக மையங்களிலும், இரயில் நிலையங்களிலும் வெடிகுண்டுகளை வீசி நூற்றுக்கணக்கில் உயிர்களைப் பறிப்பது நியாயம்தானா? விமானங்களைக் கடத்திப் பயங்கரவாதிகளை விடுவிக்கப் பணயம் வைப்பது இஸ்லாம் சார்ந்த பணிகளா? ஒரு பாவமும் செய்யாத பச்சிளங்குழந்தைகளும், பெண்களும் செத்து மடிவதை வேடிக்கை பார்க்கத்தானா இஸ்லாம் கூறுகிறது? இத்தகைய வன்முறைச் செயலுக்கெல்லாம் இஸ்லாத்தை பொதுப்படுத்தி நியாயம் சொல்வது சரியா? என்பது போன்ற பல கேள்விகள் எல்லோருக்கும் எழலாம். இவற்றிற்கெல்லாம் பதில்.
இல்லை... இல்லை.. இல்லை... இஸ்லாம் இதை கற்பிக்கவில்லை. வன்முறையை வெறுக்கும் மார்க்கம் இஸ்லாம். 'மனிதர்களிடம் நீதியுடனும் நேசத்துடனும் நடந்துகொள்ளுங்கள்' என்றுதான் முஹம்பது நபி சொல்லிச் சென்றிருக்கிறார்.

Godhra-Riots1ஒரு சிலரின் வன்செயலுக்கு அவர்களது மதத்தையோ, மதத்தை பின்பற்றும் மக்களையோ குற்றவாளியாக்குவது எந்த விதத்தில் நியாயமாகும்? குஜராத்தில் கொடுஞ்செயல் நிகழ்த்திய மோடி, பாபு பஜ்ரங்கி மற்றும் மாலேகான் குண்டுவெடிப்பில் குற்றஞ்சாட்டப்பட்ட பிரக்யாசிங் தாக்கூர்  போன்றோரால் ஒட்டு மொத்த இந்து சகோதரர்களையும் குற்றவாளியாக்கிப்பார்ப்பது எந்தளவு மடத்தனமோ, நியாயமில்லையோ... அதேபோல... இஸ்லாத்தின் பெயர் சொல்லும் சில தீவிரவாதிகளுக்காக மற்ற பெரும்பான்மை இஸ்லாமியர்களை குற்றஞ்சாட்டுவதும் அறிவிலித்தனம்.

எலி இருக்கும் இடத்தில் பூனை வருமாம்... எலியை விரட்ட மனிதனால் முடியாதா? எலியை கொல்ல, பூனை என்ற மிருகம் தான் வேண்டுமெனில், பூனையை கொல்ல, புலி வருவது அதைவிட ஆபத்தாச்சே. புலி என்ற மிருகத்திற்கு, சக மிருகமாகிய பூனை, மனிதன் என்ற வித்தியாசம் இல்லாமல், மனிதத்தையும் சேர்த்தே கொன்றுவிடுமே... எலியானாலும் புலியானாலும் மனிதர்கள் கைகோர்த்து காட்டுக்கு விரட்ட முடியாதா? மனிதர்கள் ஒன்றுபட்டால் மிருகங்களை விரட்டி விடலாமே.

எங்கோ செய்திகளில் கேட்பதையும், முகம் இல்லாதவர்களின் இணைய எழுத்தின் போலி குற்றச்சாட்டுகளையும், துவேஷத்தையும், கட்டுக்கதைகளையும் அப்படியே நம்பிவிடாமல், நம் அண்டை, எதிர் வீடுகளிலிருக்கும் மாற்று மத சகோதர்களை மனிதநேயத்துடன் கை கோர்த்து பார்ப்போம். நிச்சயம் என் அப்பாவி நண்பனால் இத்தகைய வன்செயல்களை ஈடுபடமுடியாது என்பதையும், எந்த கடவுள் கொள்கையும் அத்தகைய சமூக விரோதத்தை செய்யச்சொல்வதில்லை என்பதையும் உணர்ந்து கொள்வோம். மதத்திற்கு அப்பாற்பட்டவனாய் இருந்தாலும், பன்முகச் சமூகத்துடன் ஒன்றியிருக்கும் ஒருவனால் அச்சமூகத்தின் மீது வன்முறையை கட்டவிழ்த்து விடமுடியாது என்பதை அனுபவித்து உணரலாம்.

தீவிரவாதத்திற்கு 'புறக்கணிப்பு' என்ற ஒற்றைச்சொல் தானே காரணமாக இருக்கிறது. தான், தன் இனம், மொழி, மதம் புறக்கணிக்கப்படுகிறது என்ற காரணம் தானே தீவிரவாதி உருவாக காரணியாகிறது.

சிலர் செய்யும் தவறுக்கு ஒரு சிறுபான்மைச் சமூகத்தையே புறந்தள்ளி ஒதுக்கிவிடாமல், 'மற்றவர்கள் செய்யும் தவறுக்கு நீ என்ன செய்வாய்' என்று தோளோடு கை கோர்த்து அரவணைத்து, அழைத்துச் செல்லவேண்டியது பெரும்பான்மையான ஒவ்வொருவரின் கடமையல்லவா? பயங்கரவாதத்தை வெறுக்கும் அனைவரும் ஒன்றுபட்டால், அதை முற்றிலுமாக ஒழித்துவிட முடியாதா? வாருங்கள்...
பயங்கரவாத ஒழிப்பில் கை கோர்ப்போம். மதவேறுபாடுகளை மறந்த மனிதநேயம் காப்போம்,.

251 comments:

  1. நிதானமான அதே சமயம் தெளிவான சிந்தனைகள்...வாழ்த்துகள்! உண்மையான இஸ்லாமியர்கள் தீவிரவாதிகள் இல்லையென்றும் அறிந்திருக்கிறேன்!

    ReplyDelete
  2. /ஒரு சிலரின் வன்செயலுக்கு அவர்களது மதத்தையோ, மதத்தை பின்பற்றும் மக்களையோ குற்றவாளியாக்குவது எந்த விதத்தில் நியாயமாகும்? வணிக மையங்களிலும், இரயில் நிலையங்களிலும் வெடிகுண்டுகளை வீசி நூற்றுக்கணக்கில் உயிர்களைப் பறிப்பது நியாயம்தானா? விமானங்களைக் கடத்திப் பயங்கரவாதிகளை விடுவிக்கப் பணயம் வைப்பது இஸ்லாம் சார்ந்த பணிகளா?
    .//

    சென்ஷியுடைய பதிவுக்குப்பின் நான் படிக்கும் நல்ல பதிவு பீர். நேர்மையா விஷயங்களை அணுகியிருக்கீங்க.

    + ஓட்டு போட்டாச்சு.

    ReplyDelete
  3. ///'மற்றவர்கள் செய்யும் தவறுக்கு நீ என்ன செய்வாய்' என்று தோளோடு கை கோர்த்து அரவணைத்து, அழைத்துச் செல்லவேண்டியது பெரும்பான்மையான ஒவ்வொருவரின் கடமையல்லவா?///

    கொஞ்சம் முகலாய சரித்திரத்தை படித்துப் பார் நண்பா, தோல்வி கண்ட கொள்ளையன் தைமூரை ப்ரித்விராஜ் சௌகான் பாராட்டி நல்லவன் என்று விடுதலை செய்ததன் பலன் அதே தைமூர் மீண்டும் வந்து சௌகான் மற்றும் அவன் மாமனார் என்று எல்லோரையும் ரத்தத்தில் மிதக்கவிட்டான். இன்றைக்கும் அதே போல் தான் இந்தியாவில் நடக்கிறது. தடவிக்குடுத்து வெட்டிப்படும் ஆட்டு மந்தைகளே இந்துக்கள் என்பதை மறவாதீர்கள்

    ReplyDelete
  4. இதுவரை எழுதி வந்த விதச்த்தில் இருந்து சற்றி விலகி நின்று, உண்மையைக் காண முயற்சித்திருக்கிறீர்கள் என்று தெரியும்படி எழுதியிருக்கிறீர்கள்.

    சின்ன வயதில் காஜிமார் தெருவில் என்னோடு படித்த நண்பர்கள் நிறையப்பேர் உண்டு..என்னையும் தங்கள் பிள்ளைகளில் ஒருவனாக, நினைத்துத் தாயாய்ப் பிள்ளையாய்ப் பழகிய நண்பர்கள், அவரவர் வழிபடும் முறைகளில் வேறுபாடு, மற்றப்படி ரத்தம், வலி எல்லோருக்குமே பொதுவானது தான் என்று நினைத்துப் பழகிய நாட்கள்.

    இன்றைக்கு அதே முகங்கள் விலகிப்போவதையும்,பொது நீரோட்டத்தில் கலக்க முடியாமலும்,தங்களுடைய தனித்தன்மையை காப்பாற்றிக் கொள்ள முடியாமலும் தடுமாறிக் கொண்டிருப்பதையும் சொந்த அனுபவமாகவே அறிவேன்.

    பரஸ்பர நம்பகத்தன்மையைத் தொலைத்து விட்டதில், சரி செய்யும் பணி இரு சாராருக்குமே இருக்கிறது.
    ஓட்டுக்காக மட்டும், நாங்கள் சிறுபான்மையினரின் காவலர்கள், தோழர்கள் என்று பசப்பும் அரசியல் வியாதிகளிடம் இருந்து விடுபடுவது, ஒரு நல்ல தொடக்கமாக இருக்க முடியும்.

    ReplyDelete
  5. /////'மற்றவர்கள் செய்யும் தவறுக்கு நீ என்ன செய்வாய்' என்று தோளோடு கை கோர்த்து அரவணைத்து, அழைத்துச் செல்லவேண்டியது பெரும்பான்மையான ஒவ்வொருவரின் கடமையல்லவா?///

    கொஞ்சம் முகலாய சரித்திரத்தை படித்துப் பார் நண்பா, தோல்வி கண்ட கொள்ளையன் தைமூரை ப்ரித்விராஜ் சௌகான் பாராட்டி நல்லவன் என்று விடுதலை செய்ததன் பலன் அதே தைமூர் மீண்டும் வந்து சௌகான் மற்றும் அவன் மாமனார் என்று எல்லோரையும் ரத்தத்தில் மிதக்கவிட்டான். இன்றைக்கும் அதே போல் தான் இந்தியாவில் நடக்கிறது. தடவிக்குடுத்து வெட்டிப்படும் ஆட்டு மந்தைகளே இந்துக்கள் என்பதை மறவாதீர்கள்

    //

    அதே சரித்திரத்தை நன்றாக படித்துப்பார் நண்பா. திருமணம் முடிந்து முதலிரவுக்கூட செல்லாமல் தன் நண்பன் ராஜா தேசிங்கைக் காக்க போர்களம் சென்று உயிர் துறந்த மகமத்கான் வரலாறும் இருக்கின்றது.

    ”ராஜாதேசிங்கு மகமத்கான் சாவதற்கு ஒருநாள் முன்பாக இஸ்லாமியராக மதம் மாறிவிட்டார்.அதனால்தான் மகமத்கான் அவரோடு போருக்குப் போனார் என்றுகூட சொன்னாலும் சொல்வீர்கள்.”

    ReplyDelete
  6. நல்ல பதிவு !
    மிகச் சரியான நேரத்தில்தான் எழுதியிருக்கிறீர்கள்.

    ReplyDelete
  7. நேர்மையான பதிவு.

    பழங்காலத்தில் நடந்தவற்றையே சொல்லிக்கொண்டிருக்காமல் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டாமல் தற்போது மனிதநேயத்துடன் சகோதரர்களாக பழகுவதன் மூலமே தீவிரவாதத்தை ஒழிக்க முடியும்.

    ReplyDelete
  8. //பயங்கரவாத ஒழிப்பில் கை கோர்ப்போம். மதவேறுபாடுகளை மறந்த மனிதநேயம் காப்போம். //

    repeateyyyy

    ReplyDelete
  9. மிகவும் நல்ல பதிவு பீர்.

    தேவையான பதிவும் கூட.

    சிலரிடம் இப்படி பட்ட கருத்துக்கள் இருந்தாலும், அதிகமா மக்கள் (கிருத்துவர்கள், இந்துக்கள்) இதை புறம்தள்ளி விட்டு நன்றாகத்தான் பழகுகிறார்கள், எப்போது வரை என்றால் சில பேரால் முளைசலவை செய்ய படாத வரை. தவறான தகவலே/புரிதலே தவறான கொள்கைக்கு வழி வகுத்துவிடும் என்பதற்கு இங்கு பதிவிட்டெருக்கும் ஹேய்ராம் சாட்சி.

    <<<
    பயங்கரவாத ஒழிப்பில் கை கோர்ப்போம். மதவேறுபாடுகளை மறந்த மனிதநேயம் காப்போம்.
    >>>

    கண்டிப்பா. அவசியமா வரியும் கூட.

    ReplyDelete
  10. you all so one of them?????????????????????????????????????????????????????/

    ReplyDelete
  11. இஸ்லாம் கற்பிக்கும் அமைதியையும், சகோதரத்துவத்தையும் ஒவ்வொருவரும் தீவிரவாதம் என்ற மதப்போர்வையை புறம்தள்ளி மனிதன் என்ற போர்வைக்குள் வாழ நினைக்கும் அனைத்து நண்பர்களின் உள்ளத்திலுள்ளதை அழகா விளக்கியுள்ளீர்...

    இதற்குப்பிறகாவது மீடியாக்கள் திருந்தட்டும்

    அருமை நண்பா

    ReplyDelete
  12. உன்மையை கூறியிருக்கிறீர்கள்! என்ன தான் கத்தினாலும் இஸ்லாமிய தீவிரவாதம் என்ற பத்தினால் பலனடையும் மோடிகளும் புஷ்களும் விடப்போவதில்லை. இவர்கள் இடும் பிச்சையில் வாழும் ஊடகங்களும் விடப்போவதில்லை. மூளை சலவை செய்யப்பட்டவர்களும் செய்பவர்களும் கேட்கப்போவதில்லை. சிலருக்கு சில அஜெண்டா இருக்கலாம்.

    எது எப்படியோ இன்னும் எங்கள் வீட்டருகில் இருப்பவர்கள் மாமா மச்சான் என்றுதான் பழகுகிறோம். தென்காசியில் நடந்த கொலைகளுக்கு அப்புறமும். மேலும் பின்னுட்டங்களி பார்க்கும் போதும் நம்பிக்கை அளிக்கிறது. மத வெறியர்களுக்கு நாம் பதில் சொல் தேவையில்லை.

    ReplyDelete
  13. மிகவும் அருமையான பதிவு, பிரச்சினைகளை பெரிதாக்கி அதில் குளிர் காய நினைக்கும் ராமகோபாலன் வகையறாக்களுக்கு சாட்டை அடி. ஹே ராம் போன்ற ஆட்கள் இன்னும் எதனை ஆண்டு களுக்கு தான் இந்த வரலாற்றை சொல்லி அப்பாவி மக்களை ஏமாற்ற போகிறார்களோ என்று தெரியவில்லை.

    ReplyDelete
  14. Really excellent article.Thanks.
    May we all be blessed by the Almighty.

    ReplyDelete
  15. மிகவும் அருமையான பதிவு பீர் அண்ணா. சரியான நேரத்தில் இட்ட பதிவும் கூட.

    ReplyDelete
  16. //பீர் .....

    பயங்கரவாத ஒழிப்பில் கை கோர்ப்போம். மதவேறுபாடுகளை மறந்த மனிதநேயம் காப்போம்.//

    மத + வேறுபாடு

    மதங்கள் அனைத்தும் கொள்கை, கோட்பாடு , சுவர்க்கத்திற்கு வழிகாட்டும் பாங்கு, புனித புத்தகங்கள் ,தூதர், கடவுள் கொள்கை என்று வேறுபாடுகள் கொண்டவை.

    மதம் இருக்கட்டும். வேறுபாடு இருக்கட்டும். ஆனால் வேறுபாடுகளை மற என்று சொல்வது... கத்தி இருக்கட்டும். குத்தும் முறையில் வேறுபாடு இருக்கட்டும். கொலையானவர்களை மற என்றி சொல்வதுபோல உள்ளது.

    ஏன் உங்களால் இப்படிச் சொல்ல முடியவில்லை...
    "மனிதனிடம் வேறுபாடுகளை திணிக்கும் மதங்களைத் தூக்கி குப்பையில்போடு. மனிதத்தால் மட்டும் மனிதநேயம் காப்போம்.மதமற்ற வாழ்வு வாழ்வோம்" என்று சொல்ல முடியவில்லை ?

    ***

    உங்களின் எண்ணம் நல்லதாக இருந்தாலும் அது சிகரெட் அட்டையில் "புகைப்பது உடலுக்கு கேடு" என்று எழுதுவது போலத்தான் உள்ளது. :-(((

    **
    மதங்கள் உள்ளவரை உலகம் இப்படியேதான் இருக்கும் என்பது எனது புரிதல்.

    ReplyDelete
  17. ///இஸ்லாமிய தீவிரவாதம்" என்ற சொல்லாடல் இஸ்லாமியர்களுக்கு கசப்பு தருவது எந்தளவு உண்மையோ அதே அளவு உண்மையே தீவிரவாத விகிதாச்சாரத்தில் இஸ்லாமியர்கள் அதிகமாக இருப்பதும்.///

    நேர்மையாக ஒப்புக்
    கொண்டிருக்கிறீர்கள் பீர்.

    இந்தியா போன்ற நாடுகளில் சிறுபான்மை மீதான அடக்குமுறை இருக்கிறது. அதனால் கலவரங்கள் நிகழ்கின்றன. இதனால் பாதிப்பு அந்த நாட்டுக்கு மட்டுமே. இஸ்லாத்தைச் சேர்ந்த சில அரைவேக்காடுகளால் ஒட்டுமொத்த இஸ்லாமியர்களுக் குற்றவாளிகளாகப் பார்க்கப்படுவது கொடுமை. அந்த அரைவேக்காட்டு நாய்கள் மட்டுமே தம்முடைய செயல்களுக்கு ‘இஸ்லாத்தின் பெயரால்' என்று சொல்லி இஸ்லாத்தைக் கேவலப்படுத்துகிறன. பிடிபடுகிற தீவிரவாதிகளோ, அல்லது தேடப்படுகிற தீவிரவாதிகளோ முக்கால்வாசிப் பேர் ‘இஸ்லாத்தின் பெயரால்' என்கிற வார்த்தையை உபயோகிக்கின்ற காரணத்தால்தான் இஸ்லாமியர்கள் மீது இந்தக் கறை படிந்திருக்கிறது.

    ஆனால், இவ்வாறு ஒரு சிலர் செய்யும் காரியங்களுக்கு நாங்கள் எப்படிப் பொறுப்பாக முடியும் என்று கேட்கமுடியாது.... ஏன் என்று நேரம் கிடைக்கும்போது ஒரு பதிவிடுகிறேன்...உங்களுக்கு இணைப்பையும் தருகிறேன்.

    ReplyDelete
  18. வாருங்கள்...
    பயங்கரவாத ஒழிப்பில் கை கோர்ப்போம். மதவேறுபாடுகளை மறந்த மனிதநேயம் காப்போம் !!

    ReplyDelete
  19. வாருங்கள்...
    பயங்கரவாத ஒழிப்பில் கை கோர்ப்போம். மதவேறுபாடுகளை மறந்த மனிதநேயம் காப்போம் !!
    NALLA PATHIVU !!!வாழ்த்துகள்!

    ReplyDelete
  20. மதங்கள் உள்ளவரை உலகம் இப்படியேதான் இருக்கும் என்பது எனது புரிதல்.
    :(((

    ReplyDelete
  21. நல்ல பதிவு.

    பெரும்பாண்மை என்பது நீங்கள் முஸ்லீம்கள் சிறுபாண்மையினராக உள்ள நாடுகளை மட்டும் மனதில் வைத்து எழுதி உள்ளீர்கள். பன்முக சமுதாயம் உலகெங்கும் ஏற்படவேண்டும், அதற்கு மதம் அரசியலிருந்து விடுபடவேண்டும்.

    சவுதி அரேபியா, மலேசியா,இலங்கை போன்ற நாட்டுச்சட்டங்கள் சிறுபாணமையினரை எப்படி மதிக்கிறது. அதற்கு என்ன காரணம் என்று விடை தேடுங்கள்.

    மதம் ஆன்மிகத்தேடலாக மாறி அரசியலை விட்டு வெளியே வராதவரை இந்தச்சண்டைகள் நிற்கப்போவதில்லை. குறிப்பாக ஆபிரகாமிய மதங்களுக்குள் நடக்கப்போகும் ஆதிக்கப்போட்டியில் நிறைய பேரை பலிவாங்கிவிட்டுத்தான் போகும் இன்றைய சண்டைகள்.

    ReplyDelete
  22. //மதங்கள் உள்ளவரை உலகம் இப்படியேதான் இருக்கும் என்பது எனது புரிதல்.//

    எனது புரிதலும் இதே என்பதை முன்பே இங்கு சொல்லியுள்ளேன்.

    ஜாதிகள் ஒழியும்வரை நம் சமூகத்தில் 'நானும் மனுசன்தான்; நீயும் அதேமாதிரி மனுசன்தான்' அப்டின்ற எண்ணம் வர்ரது கஷ்டம். அதேமாதிரி மதமல்ல; மனித் நேயம்தான் பெருசு என்று வரும்வரை நமக்குள் ஏதுங்க ஒற்றுமை ?!

    ReplyDelete
  23. சார், மதவேறுபாட்டை மறந்து மனிதநேயம் காப்போம், என்பதை நான் சொல்கிறேன். நீங்கள், 'மதத்தை மறந்து மனிதநேயம் காப்போம்' என்று சொல்கிறீர்கள்.
    இருக்கட்டும் சார், நாங்கள் மதவேறுபாட்டை மறந்து மனிதநேயம் காக்கிறோம், நீங்கள் மதத்தை மறந்து மனிதநேயம் காக்க வாருங்கள்.

    மதச்சார்பற்ற தீவிரவாதமும் சில பல இருக்கும் போது, மதங்கள் இல்லையென்றாலும் தீவிரவாதம் இருக்கும் என்று நான் சொல்லி(தெரியவேண்டியதில்லை) உங்கள் நம்பிக்கையை தகர்க்கவில்லை. நீங்களும் அவ்வாறிருந்தால், மதவேறுபாடுகளை, மதங்களை மறந்த மனிதநேயத்திற்கு ஒற்றுமையாக பாடுபடலாம். இருவரின் எண்ணமும், 'தீவிரவாதத்தை ஒழித்து, மனிதநேயம் காக்கவேண்டும்' என்பதாக இருக்கவேண்டும்.

    மதத்தை பின்பற்றுபவர்கள் எல்லாரும் சேர்ந்து மனிதநேயத்தை காக்க பாடுபடுங்கள், நான் உங்களை ஒழிக்க பாடுபடுவேன், என்பது, இதற்கு தீர்வாகாது.

    ReplyDelete
  24. //மதம் ஆன்மிகத்தேடலாக மாறி அரசியலை விட்டு வெளியே வராதவரை இந்தச்சண்டைகள் நிற்கப்போவதி//

    நன்றி குடுகுடுப்பை, மதங்கள் அரசியலை விட்டுவர என்ன செய்யவேண்டும் என்று உங்கள் கருத்தையும் சொல்லுங்கள்.

    ReplyDelete
  25. //gulf-tamilan said...

    மதங்கள் உள்ளவரை உலகம் இப்படியேதான் இருக்கும் என்பது எனது புரிதல்.
    :(((//

    gulf-tamilan, தருமிக்கு அளித்துள்ள விளக்கமே உங்களுக்கும் பொருந்தும். இருந்தாலும், மதவேறுபாடுகள் இல்லா தீவிரவாத அமைப்புகள் இல்லை என்று சொல்கிறீர்களா?

    அதனால்தான் பதிவிலேயே சொல்லியிருக்கிறேன், 'தீவிரவாதத்திற்கு வர்க்க அடையாளம் பூச வேண்டாம்' என்று.

    ReplyDelete
  26. குடுகுடுப்பையிடம் கேட்ட விஷயம் பற்றி நானெழுதியது இங்கு ...

    ReplyDelete
  27. படிக்கிறேன் சார்..

    ReplyDelete
  28. நன்றி க்ருத்திகன் குமாரசாமி, உங்கள் பதிவையும் எதிர் பார்க்கிறேன்.

    கல்வெட்டு, தருமிக்கு அளித்துள்ள விளக்கமே உங்களுக்கும் பொருந்து, இருந்தாலும், மதங்களை மறந்து உங்களால் பேச முடியாதா?

    கடவுள் நம்பிக்கையாளர்கள் கூட சில நேரம் கடவுளை மறந்திருப்பார்கள் போலிருக்கிறது. நீங்கள மறப்பதில்லையே.. சார். மனிதநேயம் சாத்தியம் என்று, மதத்தை மறந்து வாங்க சார்..

    ReplyDelete
  29. This comment has been removed by the author.

    ReplyDelete
  30. நன்றி பாலா,

    நன்றி ஷேக் முக்தார்,

    நன்றி கலாட்டாபையன்,

    நன்றி ஷாகுல்,

    நன்றி அபுஅஃப்ஸர்,

    சாம், நானும் உங்களில் ஒருவன்.

    நன்றி மஸ்தான்,

    நன்றி TVR,

    நன்றி மஞ்சூர் ராசா,

    நன்றி இளைய கரிகாலன்,

    நன்றி அப்துல்லா அண்ணே, இந்த வரலாறெல்லாம் அனைவருக்கும் தெரியும் .. இருந்தாலும் மறைக்கப்படுகிறது. ;(

    ReplyDelete
  31. கிருஷ்ணமூர்த்தி சார், இதுவரை எழுதிய விசயத்தில் இருந்து சற்று விலகி எழுதியிருந்தாலும், இந்த எண்ணம் எப்போதும் மனதில் இருப்பதுதான். இவ்வளவு நாள் இந்த உண்மை தெரியவராம எழுதியிருந்தேன் என்றால்.. அதை என்னுடைய எழுத்தின் குறையாகத்தான் சொல்ல வேண்டும்.. ;( திருத்திக்கொள்கிறேன்.

    ReplyDelete
  32. //hayyram //
    //கொஞ்சம் முகலாய சரித்திரத்தை படித்துப் பார் நண்பா, தோல்வி கண்ட கொள்ளையன் தைமூரை ப்ரித்விராஜ் சௌகான் பாராட்டி நல்லவன் என்று விடுதலை செய்ததன் பலன் அதே தைமூர் மீண்டும் வந்து சௌகான் மற்றும் அவன் மாமனார் என்று எல்லோரையும் ரத்தத்தில் மிதக்கவிட்டான். இன்றைக்கும் அதே போல் தான் இந்தியாவில் நடக்கிறது. தடவிக்குடுத்து வெட்டிப்படும் ஆட்டு மந்தைகளே இந்துக்கள் என்பதை மறவாதீர்கள்//

    முகாலாய சரித்திரத்தை நன்றாக நீ படித்துபார் நண்பா, நீங்கள் குறிப்பிடும் தைமூர்(டோகுன்/டோகோகான் தைமூர்) மங்கோலிய சாம்ராஜ்யத்தின் கடைசி சக்ரவர்த்தி. முகாலாய சாம்ராஜ்யத்திற்கும் இவருக்கும் இருக்கும் ஒரே தொடர்பு, பாபரின் தாயார் தைமூரின் வம்சத்தில் வந்தவர். தைமூரின் காலம் கி.பி 1333-1370. மூன்றாம் பிரித்திவிராஜ் எனப்படும் பிரித்திவிராஜ் சவ்ஹானின் காலம் கி.பி 1116-1192. என்னத்த........எல்லாம் எங்க நேரம்.......

    ReplyDelete
  33. நன்றி சின்ன அம்மிணி,

    நன்றி சந்தன முல்லை, முதலாவதாக வந்ததற்கும், யூ த பெஸ்ட் :)

    ReplyDelete
  34. மதம் , பெரிய பெரிய மேதைகளெல்லாம் பேசி புரிய வைக்க முடியாதது நாம பேசி அடுத்தவனுக்கு புரியாது.

    வெளியில ஊருக்காக பேசுறத விட்டுட்டு ஒவ்வொருத்தவனும் அவன் மனசாட்சி படி நடந்துகிட்டலே போதும்.

    ReplyDelete
  35. //பீர்...
    மதங்களை மறந்து உங்களால் பேச முடியாதா? //

    இப்படியும் கேட்கலாம் அல்லவா?

    மதங்களை துறந்து உங்களால் பேச முடியாதா?


    துன்பத்தை மறக்க வேண்டுமா?
    அல்லது துன்பத்திற்கான ஊற்றுக்கண்ணை துறக்க (அழிக்க) வேண்டுமா?

    **
    உலகத்தில் இதுவரை நடந்த போர்களில் / அழிவுகளில் மதம் சார்ந்தது எத்தனை மதம் சாராதவை எத்தனை என்று பார்த்தல் நல்லது.

    **
    மதப்பிசாசுகள் செய்யும் நாசச் செயல்களில் என்னைப்போன்ற எந்த மதத்தையும் சாராதவனின் வாழ்வும் பாதிக்கப்படுவதால் மதத்தை மறக்கமுடியாது என்பது துரதிருஸ்டமே
    ***

    சிகரெட் அட்டையில் "புகைப்பது உடலுக்கு கேடு" என்று எழுதுவதுதான் ஆகச் சிறந்தது என்று நீங்கள் நினைத்தால் அது உங்கள் கருத்து என்று ஒதுங்கி வழிவிடுகிறேன்.

    உங்கள் கருத்தை மதிக்கிறேன் ஆனால் உடன்படவில்லை. அவ்வளவே.
    **

    ReplyDelete
  36. பீர் | Peer said...

    //மதம் ஆன்மிகத்தேடலாக மாறி அரசியலை விட்டு வெளியே வராதவரை இந்தச்சண்டைகள் நிற்கப்போவதி//

    நன்றி குடுகுடுப்பை, மதங்கள் அரசியலை விட்டுவர என்ன செய்யவேண்டும் என்று உங்கள் கருத்தையும் சொல்லுங்கள்.//


    யூதநாடு, முஸ்லீம் நாடு, இந்து நாடு ,கிறிஸ்தவ நாடு, புத்த நாடு என்றில்லாமல். அனைவராலும் ஏற்றூக்கொள்ளப்படும் ஜனநாயகம். மதங்கள் வீட்டுக்குள்ளும், வழிபாட்டுத்தலங்களுடன் இருக்கட்டும்.

    ஜனநாயகம் இறுதியல்ல, மாற்றங்களை ஏற்றுக்கொள்ளும் ஒரு முறை, தவறுகள் நடக்கும் ஆனால் திருத்த வழி உண்டு.

    ReplyDelete
  37. நன்றி குடுகுடுப்பை,

    //யூதநாடு, முஸ்லீம் நாடு, இந்து நாடு ,கிறிஸ்தவ நாடு, புத்த நாடு என்றில்லாமல். அனைவராலும் ஏற்றூக்கொள்ளப்படும் ஜனநாயகம். மதங்கள் வீட்டுக்குள்ளும், வழிபாட்டுத்தலங்களுடன் இருக்கட்டும்.//

    அண்ணே, ஜனநாயக நாடான இந்தியாவை பொறுத்தவரை, ஒரு இந்தியனாக நானும் இதையேத்தான் சொல்கிறேன். 'வீட்டிற்குள்ளும், விழிபாட்டுத்தளங்களிலும் இருக்கும் மதத்தை, தெருவிற்கு கொண்டுவராதீர்கள்' ' தெருவில் நடக்கும் சண்டைக்கு, வீட்டிற்குள்ளும், வழிபாட்டுத்தளங்களிலும் இருக்கும், மதத்தை காரணம் சொல்லாதீர்கள்'

    ReplyDelete
  38. அண்ணே, ஜனநாயக நாடான இந்தியாவை பொறுத்தவரை, ஒரு இந்தியனாக நானும் இதையேத்தான் சொல்கிறேன். 'வீட்டிற்குள்ளும், விழிபாட்டுத்தளங்களிலும் இருக்கும் மதத்தை, தெருவிற்கு கொண்டுவராதீர்கள்' ' தெருவில் நடக்கும் சண்டைக்கு, வீட்டிற்குள்ளும், வழிபாட்டுத்தளங்களிலும் இருக்கும், மதத்தை காரணம் சொல்லாதீர்கள்'//

    சண்டை போடுபவர்கள் மத அரசியல் காரணங்களுத்தானெ உலகெங்கும் போடுகிறார்கள். அதில் இந்தியர்கள் மட்டும் விதிவிலக்கா என்ன.

    உங்கள் பதிலில் மதவாத நாடுகளை ஒதுக்குவதன் காரணம் என்ன ?
    மதம்தானே? அவனவன் அவன் மதம் பெருசு என்று அடித்துக்கொண்டு சாகவேண்டியதுதான்.மதம் சாராத தீவிரவாதம் தானாக ஒரு காலத்தில் அழியும். மதம் சார்ந்த அரசியல் அனைவரையும் அழித்துவிடும். இதில் பெரும்பாண்மை,சிறுபாண்மையெல்லாம்ஒன்னும் மிஞ்சப்போவதில்லை.

    என்னமோ போங்க நம்முடைய சந்ததிகளாவது ஒரு நல்ல வழி கண்டுபிடிக்கட்டும்.

    ReplyDelete
  39. //
    பீர் said...
    'வீட்டிற்குள்ளும், வ‌ழிபாட்டுத்தளங்களிலும் இருக்கும் மதத்தை, தெருவிற்கு கொண்டுவராதீர்கள்' ' //

    நீங்கள் எந்த மதத்தைச் சார்ந்தவர் என்பதோ அல்லது மத நம்பிக்கையே இல்லாதவரா என்பதோ தெரியாது.

    தெரிய வேன்டும், தெரிந்து கொள்ளவேண்டும் என்ற ஆவலும் இல்லை.

    ஆனால், நான் மதத்தை துற என்று சொன்னால் அதை ஏற்றுக் கொள்ளாதவர் என்பது மட்டும் புரிகிறது.

    அப்படி நீங்கள் இருக்கும் போது "....'வீட்டிற்குள்ளும், விழிபாட்டுத்தளங்களிலும் இருக்கும் மதத்தை, தெருவிற்கு கொண்டுவராதீர்கள்'..." இப்படி நீங்கள் சொல்வதை நம்ப முடியவில்லை. ஆச்சர்யமாய் இருக்கிறது.

    ***

    வீட்டில் இருந்தால் நல்லது வெளியில் வந்தால் கெட்டதா மதம்?

    கெட்ட ஒன்றை ஏன் வீட்டிலும் வைத்து இருக்க வேண்டும்?

    அல்லது

    நல்ல ஒன்றை ஏன் தெருவிற்கு கொண்டுவரக்கூடாது?

    அல்லது

    மதம் அணுகுண்டு போல் ஆபத்தானது எனவே லேப் (வ‌ழிபாட்டுத்தளங்கள்) பத்திரமாக இருக்கட்டும் இல்லாவிடில் அணு உலையில் (வீடு ) இருக்கட்டும்

    என்று சொல்கிறீர்களா?

    ReplyDelete
  40. //
    பயங்கரவாதத்தை வெறுக்கும் அனைவரும் ஒன்றுபட்டால், அதை முற்றிலுமாக ஒழித்துவிட முடியாதா? வாருங்கள்...
    //

    முதலில் ஒரு நான்கு முஸ்லீம்கள் ஒன்று பட்டு பயங்கரவாதத்தை ஒழிக்க என்ன வழி என்று யோசியுங்கள். பிறகு இந்துக்களை அதில் நீங்கள் கூப்பிடுங்கள். அவர்களும் நிச்சயம் வருவார்கள். நிற்க.

    உங்களுடைய முதல் எதிரி, எந்தச் சினிமாவில் தீவிரவாதத்தில் ஈடுபட்ட முஸ்லீமைக் காட்டினாலும் பட தயாரிப்பாளர் முதற்கொண்டு லைட் பாய் வரை அனைவரையும் "இந்து பாசிஸ்டுகள்" என்று கூவிக்கூப்பாடு போடும் கயவர்கள். முஸ்லீம் என்றால் தீவிரவாதி என்ற எண்ணத்திற்கு வலுசேர்க்கும் முழு மூடர்கள் அவர்கள்.

    இப்படிப்பட்ட நண்பர்கள் உங்களுக்கு இருக்கும் வரை உங்களுக்கு வேறு எதிரிகளே தேவையில்லை.

    உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  41. //ஆனால், நான் மதத்தை துற என்று சொன்னால் அதை ஏற்றுக் கொள்ளாதவர் என்பது மட்டும் புரிகிறது.//

    இதற்கான காரணத்தை நான் ஏற்கனவே பல தளங்களில் சொல்லியிருந்தாலும், இங்கும் அதையே சொல்கிறேன்.

    மதத்தை மறந்ததால் தான் உங்களால் மனிதநேயத்தை நினைக்க முடிகிறது. கடவுளை மறக்காததால் தான், 'மதத்தை சரியாகப் புரிந்து' கொண்டதால் தான், என்னைப் படைத்தவன் என்று நான் நம்பிக்கை வைத்திருக்கும் கடவுள், 'சக மனிதனை நேசி' என்று சொல்வதால்தான் என் போன்றோரால் மனிதநேயத்தை நினைக்க முடிகிறது.

    ReplyDelete
  42. //
    'மதத்தை சரியாகப் புரிந்து' கொண்டதால் தான், என்னைப் படைத்தவன் என்று நான் நம்பிக்கை வைத்திருக்கும் கடவுள், 'சக மனிதனை நேசி' என்று சொல்வதால்தான் என் போன்றோரால் மனிதநேயத்தை நினைக்க முடிகிறது.//

    அப்படிப்பட்ட பொக்கிசத்தை ஏன் வீட்டில் போட்டு பூட்டவேண்டும் என்று சொல்கிறீர்கள்? :-(((

    தெருவிற்கு வரட்டுமே?

    ReplyDelete
  43. 'மதத்தை சரியாகப் புரிந்து'கொள்ளாதவர்கள் இருப்பதால்... அதில் சிலர் மதச்சார்பற்றவர்கள் என்று சொல்லிக் கொள்ளக்கூடியவர்களும் அடக்கம்.

    ReplyDelete
  44. ஒரு விஷயம் சொல்ல வேண்டும் என பல நாட்களாக புழுங்கி இருக்கிறேன்:

    என்னுடன் பணி ஆற்றிய இஸ்லாமிய நண்பர் மகன் பல நாட்களாக வேலை இல்லாமல் இருப்பது கண்டு, எனக்கு தெரிந்த முதலாளி ஒருவரிடம் ஒரு வேலை கொடுக்குமாறு கேட்டுக்கொண்டேன்; அவரும் நீங்கள் சொன்னால் நான் கண்டிப்பாக செய்கிறேன் என்றார்; வர சொன்னார்;

    சில நாட்கள் போன பின் என்னிடம் வந்து, " அந்த பையனை எடுத்துக்கொள்ளலாம்; ஆனால், அந்த பையன் வேலையின்றி பல நாட்கள் இருந்ததால் " அந்த மாதிர்'"
    கூட்டங்களுக்கு சில முறை சென்றிருக்க கூடும்.; ஊரில் எங்காவது குண்டு வெடித்தால் போலீஸ் அவனைத் தேடி வரும்; இந்த பையன் மீது எந்த ஒரு குற்றமும் இல்லை என்றாலும் விசாரிக்க அழைப்பார்கள்; எனக்கு தலை வலி; மன்னித்து விடுங்கள்" என்றார்.

    உதவி செய்ய முடியவில்லை என்ற ஆதங்கமே மேலோங்கி இருந்தது. என்னால் மறுத்து பேச முடியவில்லை.

    சரியோ தவறோ இமேஜ் அவ்வாறு வளர்ந்து விட்டது. கொஞ்ச காலம், பொறுமையுடன் சகிப்புத் தன்மை yudan மத நல்லிணக்கம், கூடி வாழ்வது வளர பணி செய்ய வேண்டியது அவசியம். அது வரை " போராளிகள்" போன்ற எண்ணம் வளர விடாமல், அமைதியை பற்றி பேச வேண்டும்.

    i

    ReplyDelete
  45. புரிந்துணர்வை இழந்ததால் எவ்வளவு துன்பங்கள்:(

    ReplyDelete
  46. //ஆண்டாண்டு காலமாக சகோதர சமூகத்தில் 'மாமு, மச்சான்' எனப்பழகிவந்த முஸ்லீம்களுக்கு வேதனையளிக்கிறது.//
    இப்பவும் நாங்கள் அதே உயர்புடன் தான் பழகி வருகிறோம். எங்கள் வீடிற்கு கடந்த 28 வருடமாக ஒரு முஸ்லிம் மற்றும் கிறிஸ்டியன் குடும்பம் தீபாவளியன்று வந்துகொண்டு இருக்கிறார்கள். நாங்கள் அவர்கள் வீட்டுக்கு பக்ரீத் & கிறிஸ்துமஸ் அன்றும் சென்றுவந்து கொண்டிருக்கிறோம் - இது பெருமைக்காக சொல்லவில்லை. இதில் இருந்து எங்களுடைய நட்பின் ஆழம் தெரியும். இது எனது தலைமுறையிலும் தொடர வேண்டும், தொடரும் அண்ணா. எங்களை பொறுத்த வரையில் நாங்கள் அனைவரும் மாமு, மாப்ள, அத்தை etc. ஒரே குடும்பம் தான்.

    ReplyDelete
  47. hayyram said: // தடவிக்குடுத்து வெட்டிப்படும் ஆட்டு மந்தைகளே இந்துக்கள் என்பதை மறவாதீர்கள்//
    - என்ன சொல்ல வருகிறீர்கள், அப்போ இந்துக்கள் மட்டும் தான் பலி ஆடுகளா? ஒரு மனித உயிர்க்கு ஏன் மதசாயம் புசுறீங்க? அது எந்த விதத்தில் நியாயம்?

    ReplyDelete
  48. வணக்கம் உங்களுக்கு இணைப்பு கொடுத்துள்ளேன் பாருங்கள்.

    ReplyDelete
  49. //இப்பவும் நாங்கள் அதே உயர்புடன் தான் பழகி வருகிறோம். எங்கள் வீடிற்கு கடந்த 28 வருடமாக ஒரு முஸ்லிம் மற்றும் கிறிஸ்டியன் குடும்பம் தீபாவளியன்று வந்துகொண்டு இருக்கிறார்கள். நாங்கள் அவர்கள் வீட்டுக்கு பக்ரீத் & கிறிஸ்துமஸ் அன்றும் சென்றுவந்து கொண்டிருக்கிறோம் - இது பெருமைக்காக சொல்லவில்லை. இதில் இருந்து எங்களுடைய நட்பின் ஆழம் தெரியும். இது எனது தலைமுறையிலும் தொடர வேண்டும், தொடரும் அண்ணா. எங்களை பொறுத்த வரையில் நாங்கள் அனைவரும் மாமு, மாப்ள, அத்தை etc. ஒரே குடும்பம் தான்.//

    இந்த மாதிரி நிஜமாகவே எங்க அப்பா காலத்துல இருந்துச்சு ,

    இப்போ அப்படிதான் இஸ்லாமியர்கள் இருக்கிறார்களா ? என்று வாகாபியிசம் இங்கு வந்ததோ அன்று தொலைந்தது நல்லுறவு,

    உலகம் முழுக்க முஸ்லீம் தீவிரவாதம் என்றுதான் சொல்கிறது , நிஜம்தான் , உங்களை போல எத்தனை பேர் தீவிரவாதத்தை எதிர்த்து குரல் எழுப்பிகிறீகள் ?

    உங்கள் சமுதாயத்துக்குள்ளே போய் தீவிரவாதத்துக்கு ஆதரவு அளிக்காதீர்கள் என சொல்லும் இயக்கம் எது ?

    ஒவ்வொரு முறை குண்டு வெடிக்கும்போதும் இஸ்லாம் அமைதி மார்க்கம் என அறிக்கை மட்டும் விட்டால் போதுமா ?

    இமாம் அலி கொல்லப்பட்டபோது அவன் ஒரு தீவிரவாதி என உங்கள் சமூகம் ஒதுங்கி போகவில்லையே ?அவன் இறுதி சடங்கில் கலந்து கொண்டவர்கல் 50,000 பேர் ,

    சமுதாயத்தின் பேரை கெடுத்த ஒரு பயங்கவாதி அநாதை பிணமாக அல்லவா போயிருக்க வேண்டும் ? 50,000 அவனுக்கு இறுதி மரியாதை செய்தால் நாங்கள் என்ன நினைப்பது ?

    நீங்கள் தீவிரவாதத்தை எதிர்ப்பவர்கள் என்றா ?

    குண்டு வைப்பவர்கள் பெரும்பாலும் உங்கள் சமுதாயத்தை சேந்த்தவர்கள்தானே ? அவர்களில் எத்தனை பேரை உங்கள் ஜமாத் பிடித்து கொடுத்துள்ளது ?

    உங்கள் சமுதாயம் பயங்கரவாதிகளுக்கு வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவிக்காதவரை சத்தியமாக பிரச்சனை தீரபோவதில்லை ,

    இப்படியே தொடர்ந்தால் இஸ்லாமின் பெயரால் ரத்தம் உதியபோவது உறுதி ? அப்புறம் நாம் அழுது என்ன செய்வது ?

    யோசித்து பாருங்கள் , ஹிந்து தீவிரவாத்தை வெளிப்படையாக எதிர்ப்பவர்கள் ஹிந்துக்கள்தானே ?

    ReplyDelete
  50. பீர், தெளிவான சிந்தனையுடன் எழுதப்பட்ட நல்ல பதிவு.

    ReplyDelete
  51. //"இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டது" எனும் பொய் கூற்றை//

    நேரடியாக வாலால் இல்லையென்றாலும் அடக்குமுறையால் நடந்திருக்கலாம்!
    நிச்சயமாக அக்காலத்தில் விரும்பி மதம் மாற வாய்ப்பில்லை!
    இதனாலயே அக்பர் தீன் இலாஹியை கொண்டு வந்தார்!

    சீக்கியர்கள் இந்துவுக்கும் , இஸ்லாமியர்களுக்கும் இடைப்பட்டவர்கள்!

    ReplyDelete
  52. //hayyram //
    //கொஞ்சம் முகலாய சரித்திரத்தை படித்துப் பார் நண்பா, தோல்வி கண்ட கொள்ளையன் தைமூரை ப்ரித்விராஜ் சௌகான் பாராட்டி நல்லவன் என்று விடுதலை செய்ததன் பலன் அதே தைமூர் மீண்டும் வந்து சௌகான் மற்றும் அவன் மாமனார் என்று எல்லோரையும் ரத்தத்தில் மிதக்கவிட்டான். இன்றைக்கும் அதே போல் தான் இந்தியாவில் நடக்கிறது. தடவிக்குடுத்து வெட்டிப்படும் ஆட்டு மந்தைகளே இந்துக்கள் என்பதை மறவாதீர்கள்//

    ////முகாலாய சரித்திரத்தை நன்றாக நீ படித்துபார் நண்பா, நீங்கள் குறிப்பிடும் தைமூர்(டோகுன்/டோகோகான் தைமூர்) மங்கோலிய சாம்ராஜ்யத்தின் கடைசி சக்ரவர்த்தி. முகாலாய சாம்ராஜ்யத்திற்கும் இவருக்கும் இருக்கும் ஒரே தொடர்பு, பாபரின் தாயார் தைமூரின் வம்சத்தில் வந்தவர். தைமூரின் காலம் கி.பி 1333-1370. மூன்றாம் பிரித்திவிராஜ் எனப்படும் பிரித்திவிராஜ் சவ்ஹானின் காலம் கி.பி 1116-1192. என்னத்த........எல்லாம் எங்க நேரம்.......////


    hayyram சொன்னது சரி . ஆனால் அது தைமூர் அல்ல முகம்மது கோரி .

    ReplyDelete
  53. //மதி.இந்தியா
    குண்டு வைப்பவர்கள் பெரும்பாலும் உங்கள் சமுதாயத்தை சேந்த்தவர்கள்தானே ? அவர்களில் எத்தனை பேரை உங்கள் ஜமாத் பிடித்து கொடுத்துள்ளது ? //

    குண்டு வைப்பவர்கள் எல்லாம் இஸ்லாமியர்கள் என்று கூறும் நீங்கள் அப்படி குற்றம் சாத்தப்பட்ட எத்தனை வழக்குகளில் இஸ்லாமியர்கள் தான் குற்றவாளிகள் என்று தீர்ப்பு அளிக்க பட்டிருக்கிறது என்று கூறுங்கள்? மாலேகனில் குண்டு வைத்தது ஒரு இந்து சாமியார் என்பதற்காக எவரும் இந்து சாமியார்கள் அனைவரும் தீவிரவாதிகள் என்றோ இந்துக்கள் அனைவரும் குண்டு வைக்கிறார்கள் என்றோ இந்து தீவிரவாதம் என்றோ கூறவில்லை.. ஆனால் இந்த இந்திய அரசாங்கம் இதுவரை மற்றைய குண்டு வெடிப்பு வழக்குகளில் காட்டாத அக்கறையை அந்த வழக்கில் காட்டி அவரை ஜாமீனில் விடுதலை செய்ததின் உள்நோக்கு என்ன என்பதை விளக்குவீர்களா? கோவை குண்டு வெடிப்பில் குற்றம் சாத்தப்பட்ட ஒருவருக்கும் பல ஆண்டுகளாக ஜாமீன் குடுக்க கூட தயங்கிய நீதி மன்றங்கள் அவசர கதியாக மாலேகன் வழக்கை மட்டும் விசாரித்தாததன் மர்மம் என்ன?
    ஒருவழியாக கோவை குண்டு வெடிப்பு மற்றும் மும்பை குண்டு வெடிப்பு வழக்குகள் தீர்ப்பளிக்க பட்டிருக்கிறது.. ஆனால் அதற்கு முந்தைய நடந்த கலவற வழக்குகளில் யாருக்கு தண்டனை வழங்க பட்டிருக்கிறது? செத்தவர்கள் தங்களை தாங்களாகவே மாய்த்து கொண்டனரா? மும்பையில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கருவருக்க பட்டனரே? கோவையில் பல இஸ்லாமியர்கள் கொல்ல பட்டனரே? அவர்களை கொன்றவர்களுக்கு என்ன தண்டனை கிடைத்தது? இந்தியாவை ஆளுகின்ற ஆட்சி பீடாமல்லவா கொடுக்க பட்டது..

    மதுரை அருகே டிபன் பாக்ஸ் குண்டுகள் கண்டு எடுக்க பட்டவுடன் நமது மீடியாக்கள் மீனாட்சி அம்மன் கோவிலை தகர்க்க தீவிரவாதிகள் சதி என்று தலைப்பு செய்தியாக்கி தங்களது அரிப்பை தீர்த்து கொண்ட போது மறைமுகமாக இஸ்லாமியர்கள் தான் குண்டு வைக்க இருந்தார்கள் என்று மக்களை நினைக்க தோன்றியதே... அதன் உண்மை நிலவரத்தை அதன் பின்னர் கண்டு கொண்டோமே.. சொந்த பகைக்காக சிலர் (கவனிக்க அவர்கள் இந்துக்கள்.. ஆனால் எந்த ஒரு இஸ்லாமியனும் இந்து தீவிரவாதிகள் என்று கூறவில்லை.. குண்டு வைப்பவர்கள் தீவிரவாதிகள் என்றால் அவர்களும் தீவிரவாதிகள் தானே?) பதுக்கி வைத்த குண்டுகள் என்று தெரிந்ததும் கடைசி பக்க பெட்டி செய்தியில் போட்ட கொடூரத்தை என்னவென்று கூறுவது,.. உண்மையை மறைப்பதும் அதை திரித்து கூறுவதும் ஒருவகை தீவிரவாதம் தானே? தென்காசியில் இந்து முன்னணி அலுவலகத்தில் அவர்களே குண்டு வைத்து விட்டு இஸ்லாமியர்கள் மீது பழி சுமத்தியது.. பின்னர் அவர்கள் தான் வைத்தது என்று தெரிந்ததும் யார் அவர்களை கண்டித்தது?

    ReplyDelete
  54. //இமாம் அலி கொல்லப்பட்டபோது அவன் ஒரு தீவிரவாதி என உங்கள் சமூகம் ஒதுங்கி போகவில்லையே ?அவன் இறுதி சடங்கில் கலந்து கொண்டவர்கல் 50,000 பேர்.
    சமுதாயத்தின் பேரை கெடுத்த ஒரு பயங்கவாதி அநாதை பிணமாக அல்லவா போயிருக்க வேண்டும் ? 50,000 அவனுக்கு இறுதி மரியாதை செய்தால் நாங்கள் என்ன நினைப்பது ?
    யோசித்து பாருங்கள் , ஹிந்து தீவிரவாத்தை வெளிப்படையாக எதிர்ப்பவர்கள் ஹிந்துக்கள்தானே ? //

    இதை கூறுவதற்கு முன்னர் யோசித்தீர்களா? இமாம் அலீ பற்றி பேசுவதற்கு முன்னர்.. இத்தனை பற்றியும் பேசி இருப்பீர்கலாயின் நீங்கள் நடுநிலைமை கொண்டவர் ஆகி இருப்பீர்கள். "பாபரி மஸ்ஜித் இடித்தவர்கள் என்று குற்றம் சாத்தப்பட்ட அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி போன்றோரை வாக்களித்து தேர்ந்து எடுத்தது அவர்களை ஆட்சி பீடத்தில் அமர வைத்தது முஸ்லிம்களா இல்லை இந்துக்களா? ஆயிரக் கணக்கான முஸ்லிம்களை கொன்று குவித்து அவர்களின் உடைமைகளை பறித்து, ஏன் கருவில் இருந்த குழந்தையை வெளியே எடுத்து கொன்று அதற்கு மூல காரணமாக இருந்த மோடியை மூன்றாவது முறையாக ஆட்சி பொறுப்பில் ஏற்றிய மக்கள் முஸ்லிம்களா இல்லை இந்துக்களா? அவர்கள் செய்த அநியாயங்களை தட்டி கேட்டிருந்தால் நீங்கள் சொல்வது போல் இந்துக்கள் எதிர்த்திருந்தால் அவர்கள் எப்படி ஆட்சியில் அமர்ந்தார்கள்?
    ஒரு வேளை எம்மை போன்ற இந்துக்கள் எதீர்த்தோம் என்று சப்பை கட்டு கட்ட போகின்றீர்களா? நீங்கள் சொல்வது போல் "மோடி இறந்த பின்பு, அத்வானி இறந்த பின்பு அவர்களை அனாதை பிணமாக விட்டு விடுவோம் என்று சபதம் ஏற்க போகின்றீர்களா?"

    நாங்கள் பகிரங்கமாக எதிர்க்க வேண்டும் என்றால் எப்படி எதிர்க்க வேண்டும்? உங்களை போல வாய் மொழியிலா? தமிழகத்தில் தானே இருக்கிறீர்கள்? தமிழ்நாடு தவ்கீத் ஜமாத், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், முஸ்லிம் லீக் இன்னும் பல இயக்கங்கள் எந்த இடத்திலாவது த்தீவிரவாதத்தை ஆதரித்து இருக்கின்றனவா? ஆனால் தமிழ்நாட்டிலும் இந்து முஸ்லிம் கலவரத்தை உருவாக்க நினைக்கும் இந்து முன்னணியை தடை செய்வதற்கு முயற்சி செய்வீர்களா?
    தீவிரவாதிகள் என்ற பெயரில் அப்பாவி சகோதரி நுஸ்ரத் ஜகானைய் சுட்டு கொன்ற மிருகங்களுக்கு என்ன தண்டனை கிடைக்க போகிறது?

    அன்பின் மதி.இந்தியா,

    நீங்கள் கூறும் இஸ்லாமிய தீவிரவததால் பாதிக்கப்பட்ட, உடைமைகளை இழந்த மக்களின் எண்ணிக்கையை பட்டியல் இடுங்கள். நீங்கள் நடுநிலை தவறாத மனிதர் என்றால் இந்து வெறியார்களால் தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட மனிதர்களின் எண்ணிக்கை என்ன என்பதையும் பட்டியல் இடுங்கள்..

    தங்களின் பதில் நோக்கி..

    ReplyDelete
  55. மதி.இண்டியா said...
    //இந்த மாதிரி நிஜமாகவே எங்க அப்பா காலத்துல இருந்துச்சு//

    உங்கள் அப்பா காலத்தில் இருந்ததை, உங்களாலும் செய்திருக்க முடியும். செய்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

    யாரோ சில புல்லுரிவிகள் செய்த தப்புக்கு (தவறுக்கு அல்ல) அனைவரையும் சாடுதல் என்பது சரியா?

    //இப்போ அப்படிதான் இஸ்லாமியர்கள் இருக்கிறார்களா? என்று வாகாபியிசம் இங்கு வந்ததோ அன்று தொலைந்தது நல்லுறவு,//

    இப்போ அப்படிதான் இஸ்லாமியர்கள் இருக்கிறார்களா? - ஏன் இல்லையா?
    இந்த கேள்வியை நீங்களே உங்களிடம் கேட்டுப்பாருங்கள்.

    ReplyDelete
  56. ஒன்றுமே சொல்வதற்கில்லை நண்பரே ,

    என்ன சொல்ல வருகிறேன் என்றே புரியவில்லை எனில் ...

    ஒரு சாதாரண இந்துவாக என் வருத்தத்தை , நான் இணைந்து வாழவேண்டிய சமுதாயத்தை குறித்து பேசுகிறேன் .

    நீங்கள் வழக்கம் போலபேச துவங்கிவிட்டீர்கள் ,

    உங்களை போன்றவர்கள் மட்டுமே பேசுகிறீர்கள் , அதுதான் பிரட்சனை ,

    //தமிழகத்தில் தானே இருக்கிறீர்கள்? தமிழ்நாடு தவ்கீத் ஜமாத், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், முஸ்லிம் லீக் இன்னும் பல இயக்கங்கள் எந்த இடத்திலாவது த்தீவிரவாதத்தை ஆதரித்து இருக்கின்றனவா?//

    எந்த இடத்தில் எதிர்த்து பேசியுள்ளார்கள் ? ஏதாவது போராட்டம் ?

    (குண்டு வெடிக்கும் போது மட்டும் விடும் அறிக்கையை காட்ட வேண்டாம் )

    ReplyDelete
  57. பதிவுலகில் இது முக்கியமான பதிவு !!! ( நீங்க இருக்கிறதுனால என்னால கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிக்க முடியுது பீர் )

    // பேச்சிலும் எழுத்திலும், குர்ஆன் மற்றும் நபிமொழி ஆதாரங்களை எடுத்துக்காட்டி "இஸ்லாம் அமைதி மார்க்கம்" எனச் சொல்லிவிடுவதால் மட்டுமே, அது உண்மை என்பதை நிரூபித்துவிட முடியாது. //

    எக்ஸாக்ட்லி !!!

    தாமத வருகைக்கு வருந்துகிறேன்.

    பூனேவிலிருந்து சென்னைக்கு விடுமுறையில் வந்திருப்பதால், பதிவுகள்
    பக்கம் வர இயலவில்லை.

    ReplyDelete
  58. "கல்வெட்டு" வரிகளை ரிப்பீட்டுகிறேன்

    ReplyDelete
  59. //மதி.இண்டியா

    நீங்கள் சாதாரண இந்துவாக உங்கள் வருத்தத்தை சொல்லி இருப்பதாக சொல்கிறீர்கள்.
    நான் பாதிக்கப்பட்ட ஒரு இஸ்லாமியனுக்காக, இஸ்லாமிய சமுதாயதத்திற்காக எனது ஆதங்கத்தை, இயலாமையை வெளிப்படுத்தி இருக்கிறேன்.

    //குண்டு வைப்பவர்கள் பெரும்பாலும் உங்கள் சமுதாயத்தை சேந்த்தவர்கள்தானே //..
    இதை கூறியது நீங்கள் தானே? இது ஒரு சாதாரண இந்து சகோதரனின் வருத்தமாக இருக்க முடியும் என்றும் என் மனம் ஒப்பவில்லை..

    //எந்த இடத்தில் எதிர்த்து பேசியுள்ளார்கள் ? ஏதாவது போராட்டம் ? //
    இது தான் எங்களின் சோதனை; வேதனை.. நாங்கள் எதை சொன்னாலும் அதற்கு அங்கீகாரம் நீங்கள் தர வேண்டும் என்பது.. நீங்கள் கூறும் குண்டு வெடிப்புகளுக்கு மட்டும் அல்ல, நான் மேலே குறிப்பிட்ட அனைத்து விஷயங்களுக்கும் உங்களை விட அதிகமாகவே போராடி உள்ளனர்.

    // நீங்கள் வழக்கம் போலபேச துவங்கிவிட்டீர்கள்//
    ஆக நீங்கள் கூற விழைவது, பாதிக்கப்படுவதென்பது எங்களின் வழக்கமாகி விட்டதென்று..
    இதை தான் நாங்களும் கூறுகிறோம்.. ஏன் எங்களுக்கு இவ்வளவு கொடுமைகள் நடக்கின்றன..

    பெரும்பான்மை சமூக சகோதரர்களாகிய நீங்கள் அரவணைத்து செல்ல வேண்டிய பொறுப்பில் இருப்பவர்கள்.. வர்த்தப்படுவதோடு நின்று விடவில்லை உங்களின் கடமை..
    எனது சகோதர சமுதாய சகோதரனே, நான் மேலே பட்டியலிட்ட சம்பவங்களுக்கான நீதியை எப்போது வாங்கி தர போகிறாய்? இதை விட எனது நாட்டின் மேலுள்ள பற்றை சந்தேகம் கொள்ளும், பழிக்கும் எண்ணத்தை எப்போது விட போகின்றாய்? எங்கேனும் குண்டு வெடித்தால் எங்களை பாகிஸ்தானுக்கு ஓட சொல்கிறாயே? எனது சொந்த பூமியை விட்டு என்னை வெளியேற சொல்லும் தைரியத்தை, உரிமையை யார் அளித்தது? "ஒருவன் பெற்ற பிள்ளைக்கு தானே தகப்பன் என்று ஒரு தடவை நிரூபித்த பின்னரும் அவனை பலமுறை நிரூபிக்க நிர்ப்பந்திப்பது எவ்வாறு அநியாயமோ.. அதை விட கொடூரமானது எங்களின் நாட்டு பற்றை நிரூபிக்க சொல்வது.. என்றோ பாகிஸ்தான் பிரிந்த போது அன்றும் செல்லாமல் இன்றும் இந்த நாட்டிலேயே வா(வீ)ழ்ந்து கொண்டிருக்கும் எங்களை பார்த்து இன்னும் பாகிஸ்தானுக்கு ஓட சொல்பவன் தீவிரவாதியா? இல்லை நாங்களா? என்றாவது சிந்தித்து இருக்கிறீர்களா? அவ்வாறு சொல்பவனை என்றாவது தண்டித்திருக்கிறீர்களா இல்லை கண்டித்திருக்கிறீர்களா?

    அஸ்ஸாமில் குண்டு வைக்கும் ஒருவன் நக்ஸலைட் (அவன் இந்துவாகிலும்); ஆந்திரவில் குண்டு வைப்பவன் நக்ஸலைட் (அவன் இந்துவாகிலும்); இலங்கையில் குண்டு வெடித்தால் அவன் விடுதலை புலி (அவன் இந்துவாகிலும்); நேபபளத்தில் குண்டு வைப்பவன் நக்ஸலைட்;

    ஆனால் எனது அருமை சகோதரர்களே, காஷ்மீறில் குண்டு வெடித்தால் அவன் முஸ்லிம் தீவிரவாதி; மும்பையில் குண்டு வெடித்தால் முஸ்லிம் தீவிரவாதி; ஆப்கானிஸ்தானில் குண்டு வைத்தால் முஸ்லிம் தீவிரவாதி; ஐரோப்பாவில் முஸ்லிம் த்தீவிரவாதி; அமெரிக்காவில் முஸ்லிம் தீவிரவாதி; ஏன் இந்த விபரீதமான பிரிவினை?

    ReplyDelete
  60. //அஸ்ஸாமில் குண்டு வைக்கும் ஒருவன் நக்ஸலைட் (அவன் இந்துவாகிலும்); ஆந்திரவில் குண்டு வைப்பவன் நக்ஸலைட் (அவன் இந்துவாகிலும்); இலங்கையில் குண்டு வெடித்தால் அவன் விடுதலை புலி (அவன் இந்துவாகிலும்); நேபபளத்தில் குண்டு வைப்பவன் நக்ஸலைட்;//

    ஒரு குழுமத்தின் நடவடிக்கைகளை பொறுத்தே அவர்களுக்கு தீவிரவாதி பட்டம் கிடைக்குதுன்னு நினைக்கிறேன்!
    முக்க்யமாக எல்லை தாண்டிய பயங்கரவாதம்!
    சென்ற ஆண்டு விடுதலைபுலிகளை கூட தீவிரவாதிகளாக அறிவித்தது ஞாபகம் இருக்கலாம்!


    சர்வதேச அளவில் தொடர்பு கொண்டு செயல் படும் குழுமம் நிச்சயமாக தீவிரவாதம் தான்! அவர்களது நோக்கமே நாட்டில் அமைதியை குழைப்பது தான்!

    தற்போது நக்ஸலைட்டுகளும் தீவிரவாதிகளாக அறிவிக்கபட்டுள்ளார்கள்!

    ஒரு முக்கிய விசியம் ஒரிஜினல் நக்ஸலைட்டுகள் கடவுள் மறுப்பாளர்கள்!

    ReplyDelete
  61. //கோவி.கண்ணன்
    //"கல்வெட்டு" வரிகளை ரிப்பீட்டுகிறேன்//

    ஆம் சகோதரரே, தெருவிற்க்கு வர வேண்டும்.. சந்தைக்கு வந்தால் தான் சரக்கை பற்றி தெரியும்..
    ஆனால் நாங்களும் நீங்களும் கூற விளைவது, "என் சரக்கு நல்ல சரக்கு என்பதோடு நிறுத்தி கொள்ளுங்கள்.. அவன் சரக்கு மோசம் என்பதை கூற வேண்டாம்"... அதையும் மீறி அவன் சரக்கு மோசம் என்பதை சொல்லித்தான் ஆக வேண்டும் என்றால் அந்த சரக்கினை பற்றியே குறை கூற வேண்டுமே தவிர சரக்கை விற்பவனை பற்றி அல்ல.. ரோஜாவை பார்க்கும் போது அதனை சுற்றி முட்கள் இருக்கின்றன என்பதற்காக ரோஜாவை வெறுப்பதை விட அறிவீனம் வேறொன்றும் இல்லை என்பதே எனது தாழ்மையான எண்ணம்.

    ReplyDelete
  62. //ஒரு முக்கிய விசியம் ஒரிஜினல் நக்ஸலைட்டுகள் கடவுள் மறுப்பாளர்கள்!//
    தகவலுக்கு நன்றி வால்பையன்..

    அடக்கு முறைகளை எதிர்த்து நின்ற, நிற்கும் விடுதலை புலிகள் என்று தான் கூறுகின்ரோமே தவிர இந்து தீவிரவாதிகள் என்று கூறவில்லை.. (அவர்களுக்கு மத நம்பிக்கை உண்டு)..
    தீவிரவாத செயல்களில் ஈடுபடும் ஒருவனுக்கு கடவுள் நம்பிக்கை இருக்கிறது என்பதற்காக அவன் சார்ந்த மதத்திற்கு சமுதாயத்திற்கு தீவிரவாத பட்டம் கட்டுவது சரியா?
    நாங்கள் விரும்புவதெல்லாம் எவனோ ஒருவன் செய்த தவறுக்காக எங்களின் சமுதாயத்தை குறை கூறுவது நிறுத்தப்பட வேண்டும் என்பது தான்.. பெரும்பான்மை இனத்தின் முகவரிகலான உங்களை போன்றோரிடம் இருந்து அரவணைப்பை தான்...

    ReplyDelete
  63. //தீவிரவாத செயல்களில் ஈடுபடும் ஒருவனுக்கு கடவுள் நம்பிக்கை இருக்கிறது என்பதற்காக அவன் சார்ந்த மதத்திற்கு சமுதாயத்திற்கு தீவிரவாத பட்டம் கட்டுவது சரியா?//

    நியாயமான கேள்வி தான்!
    மத நம்பிக்கை தனியா இருந்துட்டு போகட்டும், தனிபட்ட கோபத்துக்காக குண்டு வைத்தாலோ, யாரையாவது கொலை செய்தாலோ அது மத சார்பின்மையற்ற குற்றம் எனலாம்,

    ஆனால் இங்கே குற்றவாளிகலே மத அமைப்பில் தானே உருவாக்கப்டுகிறார்கள்! அவர்கள் செயலுக்கு காரணம் அல்லாவின் ஆணை என்கிறார்களே! அதனால் ஒருவேளை அந்த பெயர் வைத்திருப்பார்களோ!

    இயேசுவின் ஆணையால் கொலை செய்தேன் என்பவனும், சிவனின் ஆணையால் கொலை செய்தேன் என்பவனும் மத சார்புள்ள தீவிரவாதி தான்!

    ReplyDelete
  64. //ஆனால் இங்கே குற்றவாளிகலே மத அமைப்பில் தானே உருவாக்கப்டுகிறார்கள்! அவர்கள் செயலுக்கு காரணம் அல்லாவின் ஆணை என்கிறார்களே! அதனால் ஒருவேளை அந்த பெயர் வைத்திருப்பார்களோ! //

    ஒருவன் கொலை செய்து விட்டு அதை செய்ய சொன்னது நீங்கள் தான் என்று கூறினால் அதை நான் அப்படியே நம்ப வேண்டுமா இல்ல தீர விசாரிக்க வேண்டுமா? உண்மையிலேயே நீங்கள் தான் செய்ய சொன்னதா இல்லை உங்களை காரணம் காட்டி அவன் தப்பிக்க எண்ணுகிறானா என சிந்திப்பதே சால சிறந்தது நியாயமானது.

    அவன் செய்யும் செயலுக்கு அல்லாஹ் தான் காரணம் என்று அவன் சொன்னால் அதை அல்லாஹ் அவனுக்கு கூறியதா இல்லை தான் செய்யும் செயலை குற்றத்தை நியாயப்படுத்த அல்லாவை காரணம் காட்டுகிறானா என்று சிந்திக்க வேண்டாமா? லஷ்கர் ஏ தோய்பா என்று பெயர் வைத்து அவன் அப்பாவிகளை கொன்றால் அது அல்லாவின் ராணுவம் கொன்றதாக சொல்வதா இல்லை அல்லாஹவின் பெயரை வைத்து ஈன செயல்களில் ஈடுபடும் மூன்றாந்தர கிருமிகள் செய்வதாக சொல்வதா? முஸ்லிம் பெயரையோ, அல்லாஹவின் பெயரையோ வைத்து கொண்டு குற்றம் செய்வதால் அல்லாவையோ இல்லை முஸ்லிம்களையோ குற்றம் கூறுவது நியாயம் இல்லையே..

    ReplyDelete
  65. நீங்கள் சொல்வது நியாயம் தான்!

    அவர்கள் மதத்தின் பெயரை தப்பிக்க பயன்படுத்தவில்லை என்பதே நான் சொல்வது!
    மேலும் வடக்கில் குண்டு வைத்த இந்து அமைப்பையும் வன்மையாக கண்டிக்கிறேன்!

    இஸ்லாம் சாதி பேதமற்றதுன்னு சொல்லிட்டு எதுக்கு இத்தனை அமைப்புகள், இஸ்லாம் அரசே இந்த மாதிரி அமைப்புகள் இருக்ககூடாதுன்னு சட்டம் கொண்டு வரலாமே!

    எது எதுக்கோ சட்டம் போடுறாங்க, இதுக்கு ஒன்னு போடலாமே!

    ReplyDelete
  66. //அவர்கள் மதத்தின் பெயரை தப்பிக்க பயன்படுத்தவில்லை என்பதே நான் சொல்வது!//
    எவருமே தான் செய்த குற்றத்திற்கு ஒரு காரணம் சொல்லி கொண்டே தான் இருப்பார்கள். அவர்கள் அவ்வாறே மதத்திற்காக தான் செய்தார்கள் என்றாலும் அந்த மதம் செய்ய சொல்கிறதா என்ற சிந்தனை வேண்டாமா? நான் எனது இந்தியாவிற்காக ஒரு பாகிஸ்தானியை கொலை செய்து இந்தியாவிற்காக தான் செய்தேன் என்று சொன்னால் இந்தியா என்னை செய்ய சொன்னது என்று அர்த்தம் ஆகுமா?

    //மேலும் வடக்கில் குண்டு வைத்த இந்து அமைப்பையும் வன்மையாக கண்டிக்கிறேன்!//
    கண்டித்த உங்களை போன்றோரை எண்ணி ஆறுதல் கொள்கிறோம்.. ஆனால் கண்டிப்பது மட்டும் கடமை அல்ல.. குற்றம் எவர் செய்தகிலும் தண்டிப்பதே தீர்வாகும் (பாதிக்கப்பட்டவன் மன்னிக்க விரும்பா விடில்) அவன் இந்துவாகிலும் இஸ்லாமியனாகிலும் இல்லை கிறிஸ்தவ, புத்த மதததவனகிலும் சரியே..

    //இஸ்லாம் சாதி பேதமற்றதுன்னு சொல்லிட்டு எதுக்கு இத்தனை அமைப்புகள், இஸ்லாம் அரசே இந்த மாதிரி அமைப்புகள் இருக்ககூடாதுன்னு சட்டம் கொண்டு வரலாமே!//

    இஸ்லாத்தில் சாதி அமைப்புகள் எங்கே? சாதி வேறுபாட்டை, மொழி வேறுபாட்டை வன்மையாக வெறுப்பதில் கண்டிப்பதில் இஸ்லாம் முதன்மையானது.

    முதலில் ஒன்றை புரிந்து கொள்ளுங்கள்.. அமைப்புகள் தோன்றியது, தோன்றுவது, தோன்ற இருப்பப்பது எல்லாம் மனிதர்களுக்கு இடையேயான கருத்து வேறுபாடுகளாலே அன்றி இஸ்லாத்தினால் அல்ல.. உங்கள் கருத்து படியே தீவிரவாதி இயக்கங்கள் என்று கூறும் போது ஏன் இத்தனை இயக்கங்கள்.. அவை இஸ்லாமிய தீவிரவாத இயக்கங்கள் என்றால் நீங்கள் கூறும் இஸ்லாம் கூறும் த்தீவிரவதம் ஒன்றாகத்தான் இருக்க வேண்டும்... அவர்களுக்குள்ளே ஏன் வேறுபாடு, சண்டைகள்? பல்வேறு இயக்கங்கள் இருப்பது இஸ்லாத்தில் மட்டும் அல்ல.. அப்போது ஏன் பி.ஜெ.பி., ஆர்.எஸ்.எஸ், வி.எச்.பி, ஷிவ சேனா இன்னும் பல இயக்கங்கள் இந்து மதத்தில்? என் கடவுளே இல்லை என்று சொல்லுவதற்கு திராவிடர் கழகம், பெரியார் திராவிடர் கழகம் என்று வேறு வேறு இயக்கங்கள்?

    இயக்கங்கள் வேறு வேறு என்பதற்காக இஸ்லாம் வேறுபாடு கொண்டதல்ல.. மனிதர்களில் ஒவ்வொருவருடைய கொள்கைக்காக, புரிந்துணர்தல் காரணமாக வேறுபாடு வரலாம்.. ஆனால் பிறப்பால், மொழியால் வேறுபாடு கொள்வதை தான் அடியோடு களைய வேண்டும்.
    இதை தான் இஸ்லாம் கூறுகிறது "உங்களில் ஒரு அரபி, அரபி அல்லாதவரை விடவோ அரபி அல்லாதவர் அரபியை விடவோ, வெள்ளை நிறத்தவர் கருப்பறை விடவோ கருப்பர் வெள்ளை நிறத்தவரை விடவோ உயர்ந்தவரும் இல்லை தாழ்ந்தவரும் இல்லை"

    ReplyDelete
  67. //நான் எனது இந்தியாவிற்காக ஒரு பாகிஸ்தானியை கொலை செய்து இந்தியாவிற்காக தான் செய்தேன் என்று சொன்னால் இந்தியா என்னை செய்ய சொன்னது என்று அர்த்தம் ஆகுமா?//

    ராணுவத்தில் அது தானே தலைவா நடக்குது!

    சரி ஸ்ட்ரைடா மேட்டருக்கு வர்றேன்!
    எந்த மதத்துகாரனாக இருந்தாலும் சரி, அவன் அந்த மதத்தின் மீதிருக்கும் தீராத வெளியினால் அல்லது பற்றினால் அல்லது காதலினால் அல்லது மதத்தினால்(இது வேறு மதம்)
    குற்றம் செய்கிறான்!

    அவனை அந்த மதத்தை சேர்ந்த குற்றவாளி என்று அழைத்தால் அவன் பெருமைப்படுவானா, சிறுமைப்படுவானா!

    குற்றம் செய்யாதவர்கள் என்ன செய்ய வேண்டும், அந்த அமைப்புக்கு எதிராக போராட வேண்டும்! நம்மவர்களுக்கு நாங்கள் நல்லவர்கள் என குரல் கொடுக்கவே நேரம் சரியாக இருக்கிறது, இதில் எங்கிருந்து தவறை தட்டி கேட்க நேரம்!


    //"உங்களில் ஒரு அரபி, அரபி அல்லாதவரை விடவோ அரபி அல்லாதவர் அரபியை விடவோ, வெள்ளை நிறத்தவர் கருப்பறை விடவோ கருப்பர் வெள்ளை நிறத்தவரை விடவோ உயர்ந்தவரும் இல்லை தாழ்ந்தவரும் இல்லை" //

    அதாவது இவர்களெல்லாம் இஸ்லாமியர்களாக இருந்தால் இல்லையா!?
    இஸ்லாமியர்கள் அல்லாதோரும் அதே கடவுளால் தானே படைக்கப்பட்டனர் அவர்கள் இரை மறுப்பாஅர்களாக இருந்தால் கடவுள் தண்டனை கொடுத்து கொள்கிறார், இவர்களுக்கு என்ன வந்தது!

    பெரும்பாலான இஸ்லாமியர்களுக்கு இஸ்லாமியர்களை தவிர மற்றவர்கள் இறை மறுப்பாளர்கள்! அவர்களின் இறைவனின் எதிரிகள், யூதர்கள் கடவுளுக்கு செய்த துரோகம் மறக்க முடியாதது! அதே வழியை பின் பற்றுபவர்களும் தண்டணைக்குறியவர்களே!

    இந்த இழவுக்கு தான் நான் மத, கடவுள் அடையாளங்களை தூக்கி போட்டுட்டேன்!

    ReplyDelete
  68. //அவனை அந்த மதத்தை சேர்ந்த குற்றவாளி என்று அழைத்தால் அவன் பெருமைப்படுவானா, சிறுமைப்படுவானா!//

    அவன் பெருமை படுவான் என்பதற்காக அவன் சார்ந்த மதத்தை சிறுமை படுத்துவது நியாயமா என்றுதான் கேட்கிறோம்? ஒருவனை நீங்கள் பெருமை படுத்துவதாக எண்ணி கொண்டு ஒரு சமுதாயத்தை இழிவு படுத்துவதில் என்ன நியாயம் இருக்க முடியும்?

    //அதாவது இவர்களெல்லாம் இஸ்லாமியர்களாக இருந்தால் இல்லையா!?
    இஸ்லாமியர்கள் அல்லாதோரும் அதே கடவுளால் தானே படைக்கப்பட்டனர் //

    நீங்கள் அவ்வாறு புரிந்து கொண்டிருந்தால் உங்களை நீங்களே பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டிய நேரம் இது.. இஸ்லாம் என்பது நீங்கள் நினைப்பது போல் ஒரு குறிப்பிட மொழியினருக்கோ, பிரிவினருக்கோ, மதத்தினறுகோ சொந்தம் இல்லை.. அது முழு மனித சமுதாயத்திற்கும் சொந்தமானது..

    //அவர்கள் இரை மறுப்பாஅர்களாக இருந்தால் கடவுள் தண்டனை கொடுத்து கொள்கிறார், இவர்களுக்கு என்ன வந்தது!//

    நீங்கள் ஒரு நாயை வளர்க்கிறீர்கள்.. அதற்கு சோறு போடுவதும் இன்ன பிற வசதிகளையும் செய்து கொடுப்பது நீங்கள்.. வேறொருவருக்கு வாலாட்டினால் இல்லை எவருக்கும் இல்லாமல் உங்களுக்கும் வாலாட்ட மறுத்தால் என்ன செய்வீர்கள்? அதை தண்டிப்பீர்களா இல்லை நீ செய்வது சரிதான் என்று விட்டு விடுவீர்களா?
    அது ஏன்.. உங்களை பெற்ற தாய் தந்தைக்கு கீழ்ப்படியாமல் மற்ற எவருக்கோ கீழ்ப்படிந்தால் உங்களின் பெற்றோர் உங்களை என்ன செய்வார்கள்? வயதில் சிறியவராக இருந்தால் அடித்து திருத்துவர்கள் இயலாவிடில் மனத்தால் நொந்து கொள்வார்கள்.. இப்படி இருக்க, உங்களை படைத்தவன் அவனுக்கு அடிபாணியாமல் இருந்தால் சர்வ வல்லமை படைத்த அவன் என்ன செய்வான்.. நிச்சயமாக மனிதர்கள் நாம் சிந்திக்கும் ஆற்றலை பெற்றிருக்கிறோம்... சிந்திக்க வேண்டாமா?
    //பெரும்பாலான இஸ்லாமியர்களுக்கு இஸ்லாமியர்களை தவிர மற்றவர்கள் இறை மறுப்பாளர்கள்! அவர்களின் இறைவனின் எதிரிகள், யூதர்கள் கடவுளுக்கு செய்த துரோகம் மறக்க முடியாதது! அதே வழியை பின் பற்றுபவர்களும் தண்டணைக்குறியவர்களே!//

    கண்டிப்பாக.. ஒரு ஊருக்கு செல்ல சரியான பாதையை விட்டு விட்டு வேறு பாதையில் சென்றால் என்ன ஆகும்? அதற்காக நாங்கள் செல்வது மட்டும் தான் சரியான பாதை என்று குருட்டு தனமாக சொல்வது அதை விட கொடுமை.. ஆகவே சிந்தியுங்கள் என்று தான் இஸ்லாம் சொல்கிறது...

    ReplyDelete
  69. //அது முழு மனித சமுதாயத்திற்கும் சொந்தமானது..//
    இதையேதான் “எல்லா” மதங்களும் சொல்கின்றன!

    //உங்களுக்கும் வாலாட்ட மறுத்தால் என்ன செய்வீர்கள்? அதை தண்டிப்பீர்களா இல்லை//
    விரட்டி விட்டு விடுவேன். அம்புடுதான்!

    //உங்களை பெற்ற தாய் தந்தைக்கு கீழ்ப்படியாமல் மற்ற எவருக்கோ கீழ்ப்படிந்தால் உங்களின் பெற்றோர் உங்களை என்ன செய்வார்கள்?//
    என்னைவிட அவர்கள் நல்லவர்களாக இருந்தால் எனக்கு மிகவும் சந்தோஷமே! பிள்ளைகள் நல்லபடியா வளரணும் .. நான் சொன்னதைக் கேட்டாதான் நல்லது என்பதே தவறு.

    //சர்வ வல்லமை படைத்த அவன் என்ன செய்வான்..//
    இதாங்க எனக்குப் புரியலை. அவனோ சர்வ வல்லமை படைத்தவன். பின் நானோ, வால்ஸோ எப்படிங்க அந்த ஆளுக்கு எதுத்து ஏதும் பண்ண முடியும்? எல்லாமே அவன் செயலாத்தானே இருக்கணும். அப்படி ஆன பின் சர்வ வல்லமை படைத்த அவன் என்னதான் செய்ய முடியும்?

    // நிச்சயமாக மனிதர்கள் நாம் சிந்திக்கும் ஆற்றலை பெற்றிருக்கிறோம்...//
    1.யார்ட்ட இருந்து அந்த ஆற்றல் வந்திச்சி.
    2. அப்போ என் சிந்தனையால் நான் என்ன வேணும்னாலும் செய்ய முடியுமோ?
    3. அப்போதெல்லாம் கடவுள் ஒன்றும் செய்யாமல் இருப்பாரோ?

    // ஒரு ஊருக்கு செல்ல சரியான பாதையை விட்டு விட்டு வேறு பாதையில் சென்றால் என்ன ஆகும்?
    அட .. சுத்தி வளச்சி, அல்லது அதைவிட நல்ல பாதையாக இருந்து ஊருக்குப் போய்ச் சென்றால் போதாதா?

    // நாங்கள் செல்வது மட்டும் தான் சரியான பாதை என்று குருட்டு தனமாக சொல்வது அதை விட கொடுமை..//
    யாரு சொல்றது? இஸ்லாமியர்கள் சொல்றதுதானே அது!

    // சிந்தியுங்கள் என்று தான் இஸ்லாம் சொல்கிறது...//
    ஒவ்வொருத்தர் சிந்தனைக்கும் வேறு வேறான பதில் … அப்ப என்ன செய்யலாம்?

    பொதுவாகவே உங்கள் பதில்கள் கொஞ்சம் தலை சுற்ற வைக்கிறது. அதுக்குத்தான் இந்த நீண்ட பதில் ….
    மன்னிச்சுக்கணும்.

    ReplyDelete
  70. //சர்வ வல்லமை படைத்த அவன் என்ன செய்வான்..//


    சர்வ வல்லமை படைத்தவன் என்னை நேரியாக இஸ்லாமிய குடும்பத்தில் பிறக்க வைத்திருக்கலாமே! ஏன் இங்கு அதுவும் நாத்திகனாக!
    அப்படி நான் பிறப்பது இப்படித்தான் இருக்க வேண்டுமென்றால் எனத் செயல்களும் இப்படிதானென்று ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டதா!?
    அப்படியானால் தற்போதய நாத்திக கொள்கைகளுக்கும் அதே கடவுள் தானே காரணம், ஆக எனது செயலுக்கு கடவுள் தண்டனை கொடுத்தால் கடவுள் தன்னையே ஏமாற்றி கொள்கிறார்! அதாவது கிட்டதட்ட முட்டாள்தனமாக!

    ஒரு முட்டாளை நான் ஏன் வணங்க வேண்டும், மரியாதை செலுத்த வேண்டும்! நகரம் எரியும் போது பிடில் வாசிந்த முட்டாள் மன்னனும், உங்கள் கடவுளும் ஒன்னு தானே!

    ReplyDelete
  71. // நிச்சயமாக மனிதர்கள் நாம் சிந்திக்கும் ஆற்றலை பெற்றிருக்கிறோம்...//

    கடந்த 200 வருடங்களுக்கு முன் மின்சாரம் என்றால் என்னவென்று தெரியுமா!?
    ரயில், விமானம், ஊர்திகள், ராக்கெட் வரை படிப்படியாக முன்னேறியது கடந்த 200 வருட காலத்தில் தான் ஏன்?

    1600 வருடங்களுக்கு முன் நபி வரும் போது அந்த சிந்தனை எங்கே போயிருந்தது! அல்லது அதற்கு முன்!
    பரிணாம வளர்ச்சி என்பது உடலால் மட்டும் மாறுவதல்ல அறிவாலும் தான்!
    ஆனால் நீங்கள் வீம்புக்கு மாற மறுப்பவர்கள்!

    அதிகமாக தெரிந்து கொள்வது மதத்திற்கு ஆபத்து என்று தானே! உனக்கு கொடுகபட்டுள்ள சிந்தனையின் அளவே கற்று கொள்னு குரான்ல இருக்காம்!

    ReplyDelete
  72. // சிந்தியுங்கள் என்று தான் இஸ்லாம் சொல்கிறது...//

    சிந்தியுங்கள் ஆனால் இஸ்லாத்தை மட்டும் சிந்தியுங்கள் இது தான் இஸ்லாம் சொல்வது!

    ReplyDelete
  73. //அவன் பெருமை படுவான் என்பதற்காக அவன் சார்ந்த மதத்தை சிறுமை படுத்துவது நியாயமா//

    அதற்கு என்ன செய்ய வேண்டும்!
    அல் உம்மா, அல் கொய்தா உண்மையான இஸ்லாமிய அமைப்புகள் இல்லைன்னு ஒட்டு மொத்த இஸ்லாமிய நாடுகள் அறிக்கை விடனும், அதன் பிறகு ஒரு பய சொல்லட்டும் இஸ்லாமிர தீவிரவாதிகள்னு பெட்டக்ஸ்லயே அடிப்போம்!

    //நீங்கள் அவ்வாறு புரிந்து கொண்டிருந்தால் உங்களை நீங்களே பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டிய நேரம் இது.. இஸ்லாம் என்பது நீங்கள் நினைப்பது போல் ஒரு குறிப்பிட மொழியினருக்கோ, பிரிவினருக்கோ, மதத்தினறுகோ சொந்தம் இல்லை.. அது முழு மனித சமுதாயத்திற்கும் சொந்தமானது..//

    ரைட்டு பொது சொத்து போல அதான் ஆளாளுக்கு ஒரு மாதிரி புரிஞ்சிகிட்டு குண்டு வச்சிகிட்டு திரியுறாங்களா?
    என்னை வணங்கியே ஆகனும்னு சொல்ற கடவுள் கடவுளல்ல, கடவுளை வணங்கியே ஆகணும்னு சொல்ர மதம் மதமும் அல்ல!
    அது ஒரு டுமாங்கோலி, இது ஒரு டுபாக்கூரு!

    //நீங்கள் ஒரு நாயை வளர்க்கிறீர்கள்.. அதற்கு சோறு போடுவதும் இன்ன பிற வசதிகளையும் செய்து கொடுப்பது நீங்கள்.. வேறொருவருக்கு வாலாட்டினால் இல்லை எவருக்கும் இல்லாமல் உங்களுக்கும் வாலாட்ட மறுத்தால் என்ன செய்வீர்கள்? அதை தண்டிப்பீர்களா இல்லை நீ செய்வது சரிதான் என்று விட்டு விடுவீர்களா?//


    வீட்டு விலங்குகள் என்று எதுவும் இல்லை என்று நினைப்பவன் நான்!
    நாய் வளர்ப்பது பூனை வளர்ப்பது எனக்கு பிடிக்காத வேலை!, நாய் வாலை ஆட்டுவதும் ,கடிப்பது அதனுடய இஷ்டம்! அதனை கட்டுபடுத்த எனக்கு உரிமையில்லை!
    அழகா வேட்டையாடி திரிந்து கொண்டிருந்த நாயை சோம்பேறியாக்கி உட்கார்ந்த இடத்திலேயே சோறு போட்டு இன்னைக்கு நாய் திருடனை கூட பிடிக்க மாட்டிங்கிது புலம்புவது!

    ReplyDelete
  74. தொடர்ச்சி!
    ******************

    //உங்களை படைத்தவன் அவனுக்கு அடிபாணியாமல் இருந்தால் சர்வ வல்லமை படைத்த அவன் என்ன செய்வான்..//

    ரொம்ப வருஷமா நான் இதை தான் பண்ணிகிட்டு இருக்கேன்! இது வரைக்கும் ஒன்னும் பண்ணல, ஒருவேளை பேட்டரி தீர்ந்து போயிருக்குமோ! யாராவது செத்த கடவுளுக்கு உயிர் கொடுங்கப்பா!
    சரி முன்னாடியே செத்து போன பெரியாருக்கு என்ன தண்டனை கொடுத்திருப்பார்!
    நான்கு பெண்களை ஒரே அறையில் விட்டு பூட்டியிருப்பாரோ! வயதான காலத்தில் அது பெரிய தண்டனையாயிற்றே!

    **

    //ஒரு ஊருக்கு செல்ல சரியான பாதையை விட்டு விட்டு வேறு பாதையில் சென்றால் என்ன ஆகும்? அதற்காக நாங்கள் செல்வது மட்டும் தான் சரியான பாதை என்று குருட்டு தனமாக சொல்வது அதை விட கொடுமை.. ஆகவே சிந்தியுங்கள் என்று தான் இஸ்லாம் சொல்கிறது... //

    முதலில் இஸ்லாம் தான் சரியான பாதையா என்பது தெரியவில்லையாம், இதில் எதுக்கு மற்றவற்றை குறை சொல்லி கொண்டு!

    இது தான் சரியான பாதை எனும் போது உங்கள் மதத்தின் மேல் உங்களுக்கு அளவு கடந்த பற்று வந்து விடுகிறதா!? அதனால் ஆட்டோமெடிக்காக மற்ற மதங்களின் மேல் வெறுப்பு வந்து விடுகிறதா!?
    என் போன்ற நாத்திக வாதிகளின் மேல் கூட வெறுப்பு வந்துவிடும்!

    வாய்ப்பு கிடைத்தால் போட்டு தள்ளலாம் என்று கூட தோன்றும்!
    ஆனா வெகு ஜாக்கிரதையாக குண்டு வைக்கும் போது இன்ஷா அல்லா என்று சொல்லாதிங்க, உங்களை யாரும் இஸ்லாமிய தீவிரவாதின்னு சொல்ல மாட்டாங்கன்னு நான் உறுதியளிக்கிறேன்!

    ReplyDelete
  75. //குண்டு வைக்கும் போது இன்ஷா அல்லா என்று சொல்லாதிங்க, உங்களை யாரும் இஸ்லாமிய தீவிரவாதின்னு சொல்ல மாட்டாங்கன்னு நான் உறுதியளிக்கிறேன்!//

    சத்தியம் ...

    மதம் சார்ந்த தீவிர உணர்ச்சி மட்டுமே உள்ளது , பீர் போல சிலபேர் இருந்தாலும் அவர்களுக்கு ஆதரவு இல்லை.

    மதத்தின் பேரால் தீவிரவாதம் செய்தால் அவனை மததீவிரவாதின்னுதான் சொல்லுவாங்க. எனவே அவர்களை உங்கள் ,மதத்திலிருந்து விலக்கி வையுங்கள் ,

    எந்த தீவிரவாதிக்காவது பத்வா அல்லது ஊர்விலக்கம் செய்த ஜமாத் ஒன்றை காட்டுங்கள் ?

    ReplyDelete
  76. //1600 வருடங்களுக்கு முன் நபி வரும் போது அந்த சிந்தனை எங்கே போயிருந்தது! அல்லது அதற்கு முன்!//
    அன்றைய கால கட்டத்தில் அதற்குரிய தேவைகள் இல்லாதிருந்திருக்கலம்... இந்த உலகம் தோன்றியது முதலாக இன்றைக்கு உள்ள நவீன கண்டுபிடிப்புகள் பற்றி குர்ஆனில் உள்ளதே.. இதை தான் சிந்திக்க சொல்கிறது இஸ்லாம்.. இன்றைக்கு அறிவியல் ரீதியாக குர்ஆனில் உள்ளவை நிரூபிக்க பட்டிருக்கிறதே... உங்களுக்கு நேரம் கிடைத்தால் இதனை சற்று நோக்குங்கள்.
    http://www.tamililquran.com/quranscience.asp
    படைத்த ஒருவனாலே அன்றி தான் படைத்தவற்றை பற்றி தெளிவாக யார் விளக்க முடியும்?

    //கடந்த 200 வருடங்களுக்கு முன் மின்சாரம் என்றால் என்னவென்று தெரியுமா!?
    ரயில், விமானம், ஊர்திகள், ராக்கெட் வரை படிப்படியாக முன்னேறியது கடந்த 200 வருட காலத்தில் தான் ஏன்?//
    இன்றைய காலத்தில் நமக்குள்ள தேவைகளுக்கு ஏற்ப நாம் வசதிகளை ஏற்படுத்தி கொள்கிறோம்.. ஆனால் அன்றைக்கே குர்ஆன் கூறியது ... "நீங்கள் ஆகாயத்தின் மேலேறி செல்லும் ஆற்றல் பெறுவீர்கள் என்றால் அவ்வாறே செல்லுங்கள்"... ஆகாயத்தில் மேலேறி செல்ல இயலாதென்றால் அன்றைக்கு குர்ஆன் அவ்வாறு கூறி இருக்காதே? இன்றைக்கு நமக்கு ஆகாயத்தில் பரந்து செல்ல தேவை இருக்கிறது.. செல்கிறோம்... அதிலும் ஓர் உண்மையை, சான்றை புரிந்து கொள்ளுங்கள். அன்றைய காலத்தில் "பூமிக்கு மேலே செல்லும் போது மனிதனின் இதயம் சுருங்குகிறது" என்பதை எப்படி சொல்ல முடியும் என்று சிந்தித்திதீர்களா? குர்ஆன் கூறி இருக்கிறதே...

    ReplyDelete
  77. //1600 வருடங்களுக்கு முன் நபி வரும் போது அந்த சிந்தனை எங்கே போயிருந்தது! அல்லது அதற்கு முன்!//
    அன்றைய கால கட்டத்தில் அதற்குரிய தேவைகள் இல்லாதிருந்திருக்கலம்..//

    அப்போ அணுகுண்டும் , ஏகே 47 ம் இப்போ தேவைன்னு உங்க கடவுள் சொல்றாரா!?

    //இந்த உலகம் தோன்றியது முதலாக இன்றைக்கு உள்ள நவீன கண்டுபிடிப்புகள் பற்றி குர்ஆனில் உள்ளதே..///

    காகாகூகூகீகீன்னு எதோ ஒண்ன கிறிக்கி வச்சிட்டு இது, அது தான் சொல்றதுன்னு டுபாக்கூர் வேலையெல்லாம் வேணாம்! எங்கயாவது நேரடியா சொல்லிருக்கா!

    //இன்றைக்கு அறிவியல் ரீதியாக குர்ஆனில் உள்ளவை நிரூபிக்க பட்டிருக்கிறதே.//

    சூரியன் ஏன் சாகும் தருவாயில் பெரிதாக விரிவடைந்து மீண்டும் சிறிய வெள்ளை பந்தாகி கருப்பு ஓட்டையாக மாறுகிறது!, சொல்லிட்டு உங்க பரிசை வாங்கிட்டு போங்க நோபல் பரிசு கூட கிடைக்கலாம்!

    //படைத்த ஒருவனாலே அன்றி தான் படைத்தவற்றை பற்றி தெளிவாக யார் விளக்க முடியும்?//

    மண்பானை செய்யுறவனும் தான் படைத்தவன், அவன் என்ன கடவுளா?
    அது என்ன தெளிவாக நிஜமாலுமே நீங்க தெளிவாத்தான் இருக்கிங்களா?!
    எந்த மதபுத்தகம் தெளிவா விளக்கியிருக்கு! எல்லாமே டுபாக்கூர் தானே!

    //"நீங்கள் ஆகாயத்தின் மேலேறி செல்லும் ஆற்றல் பெறுவீர்கள் என்றால் அவ்வாறே செல்லுங்கள்"... ஆகாயத்தில் மேலேறி செல்ல இயலாதென்றால் அன்றைக்கு குர்ஆன் அவ்வாறு கூறி இருக்காதே?//

    ஐயாயிரம் வருசத்துக்கு முன்னாடி மனுசன் செத்தா ஆவியா போவான் நம்பிகிட்டு இருந்தான்! அதுவும் ஊர்மேல ஸாரி ஆகயத்துல போறது தானே!
    சரி அதில் மொட்டையாக ஆகாயத்தில் மேலே ஏறின்னு இருக்கு! நாமா இப்போ விமானத்துல தான் ஏற்றோம்! அதனால் குரான்ல சொன்னது இன்னும் வரலைன்னு வச்சிகலாமா! இல்லை பாதி வந்துருக்குன்னு வச்சிகலாமா!?

    //"பூமிக்கு மேலே செல்லும் போது மனிதனின் இதயம் சுருங்குகிறது" என்பதை எப்படி சொல்ல முடியும் என்று சிந்தித்திதீர்களா? குர்ஆன் கூறி இருக்கிறதே... //


    மலை மேல ஏறுனா கூட தான் மூச்சு வாங்கும்! இதை சிந்திக்க நான் டாக்டர் பட்டம் வாங்கியிருக்கனுமாக்கும்!

    குதிரைக்கு ரெண்டு பக்கமும் கண்ணௌ கட்டிவிட்டா மாதிரி ஆகிபோச்சு உங்க பொழப்பு! சரி எனால முடிஞ்சத நான் செய்யுறேன்!
    இதுக்கு மேல சிந்திக்க மாட்டேன்னு நீங்க சொன்னா நான் என்ன பண்றது!

    ReplyDelete
  78. //
    Rocky said...

    ...ரோஜாவை பார்க்கும் போது அதனை சுற்றி முட்கள் இருக்கின்றன என்பதற்காக ரோஜாவை வெறுப்பதை விட அறிவீனம் வேறொன்றும் இல்லை என்பதே எனது தாழ்மையான எண்ணம்....//

    ராக்கி இப்படி ஆயிரம் உதாரணங்களைச் சொல்லலாம்.
    இப்படிச் சொல்வதால் மதம் ரோஜா என்றும் என்னைப் போன்ற மனிதனும் (ரோஜாவை வெறுக்கும் அறிவிலி), என்னைப்படைத்த சர்வ வல்லமை படைத்த எல்லாம் தெரிந்த கடவுளும் முட்டாள் என்கிறீர்களா? இது சேம் சைட் கோலாக இருக்கே .

    **

    இந்த உதாரணம் எப்படி இருக்கு.

    சிகரெட்டைபார்க்க்கும்போது அதைக் குடித்தால் கேன்சர் வரும் என்பதற்காக சிகரெட்டை வெறுப்பதை விட அறிவீனம் வேறொன்றும் இல்லை என்பதே எனது தாழ்மையான எண்ணம்.

    எப்படினாலும் நமக்கு தோதா உதாரணங்கள் சொல்லலாம். பயன்?????

    ***

    மதம் சிறந்ததா? தெருவிலும் வைத்துக் கொண்டாடுங்கள்.

    நல்லதும் (உங்க மதம்) + நல்லதும் (அவங்க மதம்) = மேலும் நல்லது தானே?

    ஏன் இரண்டு நல்லதுகள் சேர்ந்து நாடு சுடுகாடாக மாறுகிறது ? ....என்று கேட்டால் பதில் இல்லை. போங்கப்பா போயி பிள்ளைகுட்டிகளை படிக்கவைங்க.

    **

    மதப்பிசாசுகளுக்கு ஆமாம் மதப் பிசாசுகளுக்கு ( எனது கருத்துகள்தான் அறிவீனம் ஆயிற்றே கோபம் கொள்ள வேண்டாம்) தில் இருந்தால்.....

    அவர்களின் குழந்தைகளுக்கு பதின்ம வயதுவரை எல்லா மதக்கல்வியையும் கொடுத்துவிட்டு, ஓட்டுபோடும் வயது வந்தபின் அவர்களுக்கு பிடித்த மதத்தை தேர்ந்தெடுக்கும் சுதந்திரத்தை கொடுத்துப் பாருங்கள்.

    ஓட்டு போடும் வயது வரும்வரை அவர்கள் மதமற்றவர்களாக இருக்கட்டும்.

    பின்னால், அவர்களுக்கு பிடித்த ஒன்றை தேர்ந்தெடுக்கட்டும். மதங்கள் தானாக செத்துப்போகும்.

    **************

    நான் எனது குழந்தைக்குச் சொன்னது ....

    நீ பார்க்கும் முருகா, ஜீசஸ், கண்ணுக்குத் தெரியாத கடவுள் அல்லது அதன் குறியீடாக சில கட்டடங்கள், புத்தர் ...இன்னபிற ...எல்லாம் அவர்கள் வாழ்ந்த காலத்தில் அவர்கள் நல்லது என்ற நம்பிய ஒன்றைச் சொல்லிச் சென்ற ஹீரோக்கள். சூப்பர்மேன், ஸ்பைடர்மேன் போல.

    இந்தக் காலத்திற்கு ஏற்றவாறு நீயும் நாளை அவர்களைப் போல ஹீரோவாக வேண்டும் வாழும் சமுதயத்திற்கு ஏதாவது செய்.

    களத்தில் இறங்கி விளையாண்டு ஹீரோவாகப் போகிறாயா (முருகா, ஜீசஸ், கண்ணுக்குத் தெரியாத கடவுள் அல்லது அதன் குறியீடாக சில கட்டடங்கள், புத்தர் ...இன்னபிற ) அல்லது களத்திற்கு வெளியே கூச்சலிடும் இரசிகனாக (பக்த‌ கேடியாக) இருக்கப்போகிறாயா ...?

    ReplyDelete
  79. // Rocky said...
    ...இஸ்லாம் என்பது நீங்கள் நினைப்பது போல் ஒரு குறிப்பிட மொழியினருக்கோ, பிரிவினருக்கோ, மதத்தினறுகோ சொந்தம் இல்லை.. அது முழு மனித சமுதாயத்திற்கும் சொந்தமானது.//


    நீங்கள் இஸ்லாம் மதத்தவரா?

    எப்படி இவ்வாறு ஒரு ஸ்டேட்மெண்ட் கொடுக்கலாம்?

    உங்களுக்கு அகில உலக இஸ்லாம் சங்கம் ஏதாவது அதிகாரம் வழங்கியுள்ளதா?

    ***

    1.இஸ்லாம் எனக்கும் சொந்தம் என்றால், எனக்குச் சொந்தமான ஒன்றில் மாற்றங்களைச் செய்து வெர்சன் 10 பதிப்பு 2009 என்று குரானை மாற்றி புத்தம் புது காப்பி வெளியிடமுடியுமா?

    2.இஸ்லாம் எனக்கும் சொந்தம் என்றால் சிலர் நான் இஸ்லாம் புனிதமாக கருதும் சில இடங்களுக்கு செல்லக்கூடாது என்கிறார்கள்?

    3.முழு மனித சமுதாயத்திற்கும் சொந்தமானது என்றால், காபிர் என்ற பதம் எப்படி வந்தது?

    4.இஸ்லாம் எப்படி முழு மனித சமுதாயத்திற்கும் சொந்தமானதோ அதேபோல் புத்தமும், கிறித்துவமும் , சனாதனமும். சரியா?

    நீங்கள் உங்களுக்கும் சொந்தமான புத்தமும், கிறித்துவமும் , சனாதனமும் சொல்லும் சாமிகளை ஏன் கும்பிடுவது இல்லை? ஏன் உங்களுக்கும் சொந்தமானவைகளில் சிலவற்றை ஒன்றை மட்டும் கொஞ்சுகிறீர்கள்? உங்கள் குழந்தைகளில் இப்படி வேறுபாடு காட்டுவீர்களா?

    ***

    இஸ்லாம் இஸ்லாமியர்களுக்கே.

    இஸ்லாம் இஸ்லாமியர்களுக்கே.

    அது போல எல்ல மதங்களும் அந்த அந்த மதத்தினருக்கே.

    அது போல எல்ல மதங்களும் அந்த அந்த மதத்தினருக்கே.


    இதுதான் உண்மை.
    தயவு செய்து இது போன்ற ஜல்லிகளை அடிக்காதீர்கள். ஏன் இப்படி???


    ***

    எல்லாம் எலாருக்கும் என்று சொல்லும் நீங்கள் தொழுகையில் பகவத்கீதையைப் பாடுங்கள்.

    அவர்கள் பூஜையில் குரான் ஓதட்டும்.

    உங்கள் வீட்டில் ஏசு படத்தையும் வையுங்கள்.

    அவர்கள் வீட்டில் கல்கிபகவானன் படத்தையும் வைக்கட்டும்.

    இப்படி நீங்கள் எல்லாம் இருந்தால் என்னைப் போன்றவர்கள் வெட்கித்து ஓடிவிடுவோம்.

    ***

    தயவு செய்து மத விசயத்தில் தெரியாமல் ஸ்டேட்மெண்ட் கொடுக்க வேண்டாம். மதத்தை கண்ணாக கருது வாழ்பவர்கள் வருத்தமடையலாம்.

    ReplyDelete
  80. இஸ்லாமை ஏற்றுக் கொண்டவர்களுக்கு மட்டுமே இஸ்லாம்.

    அது போலத்தான் எல்லா மதங்களும்.

    ஏற்றுக்கொள்ளாதவர்களுக்கு அதன் சட்டதிட்டங்கள்/அறிவுரைகள் பொருந்தாது.

    ஏற்பது என்பது தனிமனித விருப்பம்.

    ReplyDelete
  81. //அல் உம்மா, அல் கொய்தா உண்மையான இஸ்லாமிய அமைப்புகள் இல்லைன்னு ஒட்டு மொத்த இஸ்லாமிய நாடுகள் அறிக்கை விடனும்,//

    இது ரொம்ப சரியா, நல்லா இருக்கே. ஆரம்பிச்சிரலாமே ...

    ReplyDelete
  82. //எந்த தீவிரவாதிக்காவது பத்வா அல்லது ஊர்விலக்கம் செய்த ஜமாத் ஒன்றை காட்டுங்கள் ?//

    அடடா .. இதுவும் நல்லாயிருக்கே!

    ReplyDelete
  83. 1992‍_93 ல் இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி நடைபெற்றபோது தோழிகளுடன் கல்லூரியை கட் செய்துவிட்டு மேட்ச் பார்த்துக் கொண்டிருந்தேன். இந்திய பந்துவீச்சாளர் விக்கெட் எடுத்தபோது கைதட்டி ஆரவாரம் செய்த என்னைப் பார்த்து ஒரு சக மாணவி கேட்டாள், "அப்ப நீ பாகிஸ்தானுக்கு சப்போர்ட் பண்ணலையா?"!!

    அப்ப இருந்தே பழகிருச்சு!!

    ReplyDelete
  84. //இந்த உலகம் தோன்றியது முதலாக இன்றைக்கு உள்ள நவீன கண்டுபிடிப்புகள் பற்றி குர்ஆனில் உள்ளதே.//


    இந்த (ஜாக்கீர்) கதைகளெல்லாம் எதுக்கு இங்க ..

    எப்படி எல்லாமே எழுத்துப்பிழையின்றி இருக்கோ..

    ReplyDelete
  85. //நீங்கள் ஆகாயத்தின் மேலேறி செல்லும் ஆற்றல் பெறுவீர்கள்//

    இந்தக் கதை வடமொழி வேதங்களிலும் இருக்குன்னு தெரியாதா ..?

    ReplyDelete
  86. //பூமிக்கு மேலே செல்லும் போது மனிதனின் இதயம் சுருங்குகிறது"//

    இதுவும் ஒரு கதையேயன்றி வேறென்ன? உண்மையல்ல இது. இதயம் என்ன ரப்பரா ..?

    ReplyDelete
  87. ****

    தருமி said...

    //பூமிக்கு மேலே செல்லும் போது மனிதனின் இதயம் சுருங்குகிறது"//

    இதுவும் ஒரு கதையேயன்றி வேறென்ன? உண்மையல்ல இது. இதயம் என்ன ரப்பரா ..?

    ******

    அதாகப்பட்டது ......நீங்கள் சரியாக வாசிக்கவில்லை அல்லது புரிந்து கொள்ளவில்லை என்று அர்த்தம்.

    தவறான தவல்களைச் சொல்ல இறைவன் என்ன கை நாட்டா?

    ஆங்க் ....இது எந்த இறைவன் சொன்னது ..யாரவது மத துவேசம் என்று சொல்லிவிடப் போகிறார்கள். :-(((((

    எந்த இறைவனோ ...இப்படிச் சொன்னால் நீங்கள் இப்படியாகப் புரிந்து கொள்ள வேண்டும்

    இறைவைனின் இரத்தினச் சுருக்கமான கூற்று:

    பூமிக்கு மேலே செல்லும் போது மனிதனின் இதயம் சுருங்குகிறது

    விளக்கம்:

    1.மேலே செல்லச் செல்ல ஆக்சிஜன் குறையும்.

    2.சுவாசித்தலில் பிரச்சனை வரும்.

    3.நுரையீரல் (லங்க்ஸ்) செயல்திறன் பாதிக்கும்.

    4.இரத்த‌தில் கலக்கும் ஆக்சிஜன் குறையும்.

    5.அப்படியே அந்த இரத்தம் இதயத்தால் பம்ப் செய்யப்படும்போது இதயத்தின் செயல்திறனும் குறையும்.

    6.இங்கே சுருங்கும் என்பது இறைபாட்டுவினையெச்சம். இதயத்தின் சுருங்கிவிரியும் செயலானது சுருங்குவதால் (குறைவதால்) வேதாகம கீதாச்சார இலக்கணத்தின் 18: 1/4 விதி கொண்டு பார்க்க வேண்டும்

    ****

    இப்படி பல உள்ளர்த்தங்களைக் கொண்ட தெய்வீக வசனத்தை மொக்கையாக சைஸ் 10 இருந்து சைஸ் 8 மாறுமா என்ற கேள்வி கேட்பது உங்கள் புரிதலில் உள்ள குற்றம்.

    எல்லாம் இறைவன் அறிவான்.

    ReplyDelete
  88. நானோ டெக்னாலஜி பற்றி ஏதும் குரான் அப்பவே சொல்லிருப்பதாக “அறிஞர்கள்” விளக்கியுள்ளார்களா ?

    ReplyDelete
  89. இராமயண யுத்த காண்டத்தில் மிஸ்டர் இராமர் மறைந்து இருந்து அம்பு விடும் செயலில் அதே இறைப்பாட்டு வினையெச்ச இலக்கணப்படி ஒரு குவாண்டம் சயின்ஸ் தியரி உள்ளது தெரியுமா?

    இதே தியரி பைபிளிலும் குரானிலும் இராமயணத்திற்கு முன்பே சில குறியீடுகளால் சொல்லப்பட்டுள்ளது தெரியுமா பேராசான் தருமி அவர்களே?

    ReplyDelete
  90. பீர் நீங்கள் பேசிய விசயம் பற்றி பேச எத்தனை இஸ்லாமியர்கள் இங்கே வந்தனர் ?

    மதம் பற்றி பேச மட்டுமே உங்க சமுதாய ஆட்கள் முன்வருகின்றனர் , நீங்கள் பேசியது போன்ற விசயங்களை பற்றி பேச யாரும் முன்வருவதில்லை என்பதே எங்கள் பிரட்ச்சனை .

    ReplyDelete
  91. கல்வெட்டு
    மிக்க நன்றி புதிய பாடங்களுக்கு ( முக்கியமாக: இறைபாட்டுவினையெச்சம் )

    ReplyDelete
  92. "குழலினிது யாழினுது" என்று .. "குளோனிங்கை யார் வேண்டுமானலும்"

    என்று கவித்துவமாக அன்றே சொன்ன கவிஞ‌ரைப் பற்றித் தெரியுமா பேராசான் தருமி அவர்களே?

    ReplyDelete
  93. //கடந்த 200 வருடங்களுக்கு முன் மின்சாரம் என்றால் என்னவென்று தெரியுமா!?
    ரயில், விமானம், ஊர்திகள், ராக்கெட் வரை படிப்படியாக முன்னேறியது கடந்த 200 வருட காலத்தில் தான் ஏன்?//
    இன்றைய காலத்தில் நமக்குள்ள தேவைகளுக்கு ஏற்ப நாம் வசதிகளை ஏற்படுத்தி கொள்கிறோம்.. ஆனால் அன்றைக்கே குர்ஆன் கூறியது ... "நீங்கள் ஆகாயத்தின் மேலேறி செல்லும் ஆற்றல் பெறுவீர்கள் என்றால் அவ்வாறே செல்லுங்கள்"... ஆகாயத்தில் மேலேறி செல்ல இயலாதென்றால் அன்றைக்கு குர்ஆன் அவ்வாறு கூறி இருக்காதே? இன்றைக்கு நமக்கு ஆகாயத்தில் பரந்து செல்ல தேவை இருக்கிறது.. செல்கிறோம்... அதிலும் ஓர் உண்மையை, சான்றை புரிந்து கொள்ளுங்கள். அன்றைய காலத்தில் "பூமிக்கு மேலே செல்லும் போது மனிதனின் இதயம் சுருங்குகிறது" என்பதை எப்படி சொல்ல முடியும் என்று சிந்தித்திதீர்களா? குர்ஆன் கூறி இருக்கிறதே...//

    புஷ்பக விமானம் அப்படின்னு வால்மீகி 5000 வருசத்து முன்னாடியே சொன்னதா ஞாபகம் அவரும் கடவுளோட தூதுவரா இருக்குமோ. இல்லை வால்மீகியின் கற்பனையா இருக்குமா.(என் பார்வை கற்பனை)

    மற்ற மத இதிகாசங்களையும் படியுங்கள்.

    ReplyDelete
  94. // தருமி said...

    கல்வெட்டு
    மிக்க நன்றி புதிய பாடங்களுக்கு ( முக்கியமாக: இறைபாட்டுவினையெச்சம் ) //


    ஒரு மொழியின் வார்த்தைகளை அப்படியே அடுத்த மொழிக்கு மாற்றி அர்த்தப்படுத்திக்கொள்ளக்கூடாது.

    மலையாள‌த்தில் "பட்டி" என்ற சொல்லையும் உசிலம்"பட்டி"யில் வரும் "பட்டி"யும் ஒரே பொருள் அல்ல.

    இது இரண்டும் தெரிந்தவர்களுக்கு மட்டுமே தெரியும் சரியா?

    அதுபோலத்தான். இறைவசன‌ங்கள் (வேதம், வேதாகமம்..).

    அவைகள் அதற்கான இலக்கணம் கொண்டது.
    அது "இறைப்பாட்டிலக்கணம்" என்ற தனி வட்டத்துக்குள் வரும்.


    மேலும் அந்த "இறைப்பாட்டிலக்கணம்" நீங்கள் தேர்ந்தெடுக்கும் "மதம்" காட்டும் வழியில் நீட்சி அடையும். அது மிகவும் முக்கியமானது.

    ***

    3 D படங்களுக்கு 3 D கண்ணாடி போட்டு பார்த்தால்தான் அந்த எபக்ட் கிடைக்கும்.

    "மதம்" என்ற "கண்ணாடி" அணியாமல் "மதப்புத்தகங்களை" வாசித்தால் அர்த்தம் மாறுபடும்.

    குற்றம் உங்களதே.

    **

    ஒரே வசனங்கள் உங்களுக்கும் நம்பிக்கையாளருக்கும் வித்தியாசமாய்த் தெரிவது "இறைப்பாட்டிலக்கணமும்" மதம் என்ற 3 D கண்ணாடியும் சேர்ந்து கொடுக்கும் ஸ்பெசல் எபெக்ட அல்லது அனுபவம்.

    **


    அடிக்குறிப்பு:
    3 D கண்ணாடி அணியாமலும் 3 D எபெக்டுடன் படம் பார்க்கும் வருங்கால (சோதனையில் உள்ள) டெக்னாலஜி பற்றி எல்லா மதப்புத்தகங்களிலும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சொல்லி இருந்தாலும் இன்னும் கமர்சியலாக பரவலான நடைமுறைக்கு வரவில்லை. அதனால் 3 D கண்ணாடி உதராணம்.

    அது பரவலாக வந்தவுடன் இதை வாசிக்கும் எதிர்கால அன்பர்கள் 3 D என்பதற்குப்பதிலாக புதிய தொழில்நுட்பம் என்று மாற்றிப்படித்துக் கொள்ளவும்.

    ReplyDelete
  95. ////அல் உம்மா, அல் கொய்தா உண்மையான இஸ்லாமிய அமைப்புகள் இல்லைன்னு ஒட்டு மொத்த இஸ்லாமிய நாடுகள் அறிக்கை விடனும்,//

    இது ரொம்ப சரியா, நல்லா இருக்கே. ஆரம்பிச்சிரலாமே ...//


    இஸ்லாமிய நாடுகள் சொன்னாத்தான் ஏத்துக்குவீங்களா? இஸ்லாமியர்கள் சொன்னா ஏத்துக்க மாட்டீங்களா?

    அகில உலக இஸ்லாமியர்களின் பிரதிநிதியாக இஸ்லாமிய நாடுகள் இருக்குதுன்னு நினைக்கிறீங்களா? இன்னோரு இஸ்லாமியா நாட்டை ஒருத்தன் அடிச்சு பரித்தாலும், தன்னளவில் வேலி போடுபவைதான், இந்த இஸ்லாமிய நாடுகள். அவன் அவனுக்கு அவன் நாட்டை, அவனை பாத்துக்கவே நேரம் பத்தலையாம்.

    சரி.. இஸ்லாமிய நாடுகள் எல்லாம் அறிக்கை விட்டுட்டா.. இந்த பிரச்சனை முடிவுக்கு வந்திடும்ன்னு நினைக்கிறீங்களா?

    தனி மனிதர்கள் தானாக மாற வேண்டும்.... எந்த சட்டமும் அவனை மாற்ற முடியாது.. தனி மனித மன மாற்றலுக்கான வேண்டுகோள் தான் இந்த பதிவு.

    ReplyDelete
  96. //புஷ்பக விமானம் அப்படின்னு வால்மீகி 5000 வருசத்து முன்னாடியே சொன்னதா ஞாபகம் அவரும் கடவுளோட தூதுவரா இருக்குமோ. இல்லை வால்மீகியின் கற்பனையா இருக்குமா.(என் பார்வை கற்பனை)

    மற்ற மத இதிகாசங்களையும் படியுங்கள்.//

    குடுகுடுப்பை, இதில் என்ன தவறு இருக்கிறது? அதுவும் சரியாக இருக்கலாம் என்றே வைத்துக்கொள்வோம். நமக்கு இப்போதைய தேவை..
    மத நல்லிணக்கம். மனித நேயம்.

    ReplyDelete
  97. // மதி.இண்டியா said...

    பீர் நீங்கள் பேசிய விசயம் பற்றி பேச எத்தனை இஸ்லாமியர்கள் இங்கே வந்தனர் ?//

    மதி, சிறுபான்மையாக வந்தவர்களில் யாரும் மற்ற மதங்களை குறை சொல்லவில்லை என்பதை கவனித்தீர்களா?

    அனைவரும் கேட்டுக்கொண்டது, மத நல்லிணக்கம் மனிதநேயம் மட்டுமே.

    ReplyDelete
  98. //பீர் | Peer said...
    தனி மனிதர்கள் தானாக மாற வேண்டும்.... எந்த சட்டமும் அவனை மாற்ற முடியாது.. தனி மனித மன மாற்றலுக்கான வேண்டுகோள் தான் இந்த பதிவு.//

    தனிமனிதன் ஒரு அமைப்புடன் (மதம்) தன்னை விரும்பி இணைத்துக் கொள்ளும் போது அந்த அமைப்பின் பெயரால் நடக்கும் எல்லாச் செயல்களுக்கும் பொறுப்பாகிறான் அவனை அறியாமல்.

    தனிமனிதன் ஏன் தனிமனிதா இருக்கமுடியாமல் ஒரு அமைப்புடன் (மதம், ரசியல், இரசிகர் மன்றம்)) தன்னை இணைத்துக் கொள்கிறான் என்ற கேள்வியை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்.

    தனி மனிதர்கள் தானாக மாற வேண்டும்.... எந்த சட்டமும் அவனை மாற்ற முடியாது.--- பீர் .

    மதமும் ஒருவகையான சட்டம்தான். புனித புத்தகம் சொன்னபடி இருக்க வேண்டிய சட்டம். எனவே நீங்கள் உங்களின் மத அடையாளங்களை தூக்க்கி எறியுங்கள். மனிதனாக மட்டும் இருங்கள் சரியா :-)))

    ReplyDelete
  99. //கல்வெட்டு said...

    இஸ்லாமை ஏற்றுக் கொண்டவர்களுக்கு மட்டுமே இஸ்லாம். //

    கல்வெட்டு, நீங்க அவர் சொன்னத தவறா புரிஞ்சிருக்கீங்க..

    "இஸ்லாம் முழு மனித சமுதாயத்திற்கும் சொந்தமானது" என்றால், யார் வேண்டுமானாலும் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளலாம், பின்பற்றலாம் என்பதாக பொருள்படும்.

    இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதற்கு (பிறப்பால்)எந்த சிறப்பு தகுதியும் தேவையில்லை.

    ReplyDelete
  100. //அதுவும் சரியாக இருக்கலாம் என்றே வைத்துக்கொள்வோம். நமக்கு இப்போதைய தேவை..
    மத நல்லிணக்கம். மனித நேயம்.//

    இந்த வார்த்தையை நீங்கள் அல்லது உங்களைபோல மிக சிலரே பேசுவதே பிரச்சனை ,

    இஸ்லாமை தவிர அனைத்துமே தவறு என்ற மனநிலை ,

    ReplyDelete
  101. //புஷ்பக விமானம் அப்படின்னு வால்மீகி 5000 வருசத்து முன்னாடியே சொன்னதா ஞாபகம் அவரும் கடவுளோட தூதுவரா இருக்குமோ. இல்லை வால்மீகியின் கற்பனையா இருக்குமா.(என் பார்வை கற்பனை)

    மற்ற மத இதிகாசங்களையும் படியுங்கள்.//

    குடுகுடுப்பை, இதில் என்ன தவறு இருக்கிறது? அதுவும் சரியாக இருக்கலாம் என்றே வைத்துக்கொள்வோம். நமக்கு இப்போதைய தேவை..
    மத நல்லிணக்கம். மனித நேயம்.//

    தவறு என்று சொல்லவில்லை. இஸ்லாமுக்கு வெளியே உள்ளதையும் தெரிந்து கொள்ளலாம் அவ்வளவே. என்னுடைய மதுரை இஸ்லாமிய நண்பருக்கு பாண்டியன் நெடுஞ்செழியன் தெரியாது ஆனால் ஓட்டமான் அரசர்கள் கதை அனைத்தும் தெரியும்.காரணம் இஸ்லாம் தாண்டி அவர் எதையும் யோசிப்பதில்லை.

    மற்றபடி இந்தப்பதிவின் நோக்கம் தேவையில்லாமல் திசைமாறுவதால், தீவிரவாதத்தை ஒழிப்பது பற்றி மட்டும் பேசுவோம் இனி.

    ReplyDelete
  102. //எனவே நீங்கள் உங்களின் மத அடையாளங்களை தூக்க்கி எறியுங்கள். மனிதனாக மட்டும் இருங்கள் சரியா :-)))//

    அண்ணே, இதற்கு ஏற்கனவே பதில் சொல்லிவிட்டேன். மீண்டும் ஒரு முறை படித்து பாருங்கள். என் அளவில் நான் தெளிவாக இருக்கிறேன், மனிதனாக இருக்கிறேன். இதே போல் கடவுளை சரியாக புரிந்து கொண்டவன் இருக்க முடியும் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  103. //இந்த வார்த்தையை நீங்கள் அல்லது உங்களைபோல மிக சிலரே பேசுவதே பிரச்சனை ,

    இஸ்லாமை தவிர அனைத்துமே தவறு என்ற மனநிலை ,//

    நானோ, என்னைப்போன்றோரோ.. இஸ்லாத்தை தவிர மற்றவை அனைத்தும் தவறு என்று சொல்லியிருக்கிறோமா?

    நான் எப்போதும் மற்றவர் நம்பிக்கையை குறை சொல்லியது கிடையாது.

    என் நம்பிக்கையில் குறை சொல்லப்படும் போது மட்டுமே, என் நம்பிக்கை சரி என்று விளக்க வேண்டியது என் கடமையாகிறது. புரிந்து கொள்க:

    ReplyDelete
  104. கல்வெட்டு, தருமி, வால்பையன் பின்னூட்டங்கள் நல்ல கலகலப்பு. கைகலப்பு வராமல் இருந்தால் சரி !
    :)

    ReplyDelete
  105. //மற்றபடி இந்தப்பதிவின் நோக்கம் தேவையில்லாமல் திசைமாறுவதால், தீவிரவாதத்தை ஒழிப்பது பற்றி மட்டும் பேசுவோம் இனி.//

    குடுகுடுப்பை, மிகச்சரியா சொன்னீங்க...

    இனியும் திசைமாறிய பயணங்கள் வந்தால்.. பின்னூட்ட மட்டுறுதல் செய்யப்படும். :(

    ReplyDelete
  106. //ஓட்டமான் அரசர்கள்// ???? :(

    ReplyDelete
  107. //கல்வெட்டு, தருமி, வால்பையன் பின்னூட்டங்கள் நல்ல கலகலப்பு. //

    கடவுள் நம்பிக்கையாளர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து விட்டால், கைகலப்பு வராமல் போய்விடும் என்பதால்.......... :(

    //கைகலப்பு வராமல் இருந்தால் சரி !
    :)//

    நாங்க.. கைகலப்பு வர விட மாட்டோம்ல... :)))

    ReplyDelete
  108. //
    ‍‍‍‍பீர் | Peer said...

    "இஸ்லாம் முழு மனித சமுதாயத்திற்கும் சொந்தமானது" என்றால், யார் வேண்டுமானாலும் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளலாம், பின்பற்றலாம் என்பதாக பொருள்படும்.

    இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதற்கு (பிறப்பால்)எந்த சிறப்பு தகுதியும் தேவையில்லை.//

    ஓ அப்படியா ? எனக்கு மத ரீதியாக அர்த்தம் கொள்ளத் தெரியாததால் வந்த தவறு. மன்னிக்க.

    எங்கே அவரை " சனாதனமும்,கிறித்துவமும் முழு மனித சமுதாயத்திற்கும் சொந்தமானது" என்று சொல்லச்சொல்லுங்கள்.

    அவர் அப்படி மட்டும் சொல்லட்டும். வேறு வார்த்தைச் சேர்ப்பு வேண்டாம்.

    ஏனென்றால் இஸ்லாம் பற்றிச் சொல்லும்போது அப்படி ஏதும் சேர்க்கவில்லை அவர்.

    நான் நானாக நீங்கள் சொன்னமுறையில் புரிந்து கொள்கிறேன் சரியா?


    கோவி என்னதுபோல கைகலப்பு வந்துவிடக்கூடாது என்பதற்காக‌
    :-)))))))) நிறைய சிரிப்பான்கள்

    ReplyDelete
  109. //இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதற்கு (பிறப்பால்)எந்த சிறப்பு தகுதியும் தேவையில்லை.//

    எனக்குத் தெரிந்தவரை யூத மதத்தைத் தவிர மற்ற எல்லா மதத்திற்கும் மேற்சொன்ன தகுதி உண்டென்றுதான் நினைக்கிறேன்.

    ReplyDelete
  110. // சனாதனமும்,கிறித்துவமும் முழு மனித சமுதாயத்திற்கும் சொந்தமானது"//

    ஒரு இஸ்லாமியனாக என்னால் 'இஸ்லாம் சொல்வதைத்தான்' சொல்லமுடியும்.

    கிறுத்துவம் சம்பந்தப்பட்டதை ஒரு கிறுத்துவன் தானே (அது சரியென்றால்) சொல்லமுடியும்?

    ராக்கி யாராவும் இருக்கலாம். பொதுவானவராகவும் இருக்கலாம். இல்லை... மத நம்பிக்கை இல்லாதவராகவும் இருக்கலாம். நீங்கள் சொல்லச்சொல்வது சரியென்றால் அவர் வந்து சொல்லட்டும்.

    ReplyDelete
  111. //
    பீர் | Peer said...
    ஒரு இஸ்லாமியனாக என்னால் 'இஸ்லாம் சொல்வதைத்தான்' சொல்லமுடியும்.//

    இது மேட்டர்.

    தயவு செய்து எந்த இஸ்லாமியரரும் பொத்தாம் பொதுவாக "இஸ்லாம் முழு மனித சமுதாயத்திற்கும் சொந்தமானது" என்று சொல்லி மற்ற மதத்தினரயும் சேர்த்துச் சொல்லவேண்டாம்.

    இஸ்லாமியனாக 'இஸ்லாம் சொல்வதை' இஸ்லாமியர்களுக்கு மட்டும் சொல்லவும்.

    ராக்கி யாராவும் இருக்கலாம். பொதுவானவராகவும் இருக்கலாம். ஆனால் அவர் "உலக மக்கள் அனைவருக்கும் இஸ்லாம் பொதுவானது" (அர்த்தம் எதுவோ) சொன்ன வார்த்தகள் தவறு.

    ஏன் என்றால் பீர் என்ற இஸ்லாமிய மதத்தைச் சார்ந்த அன்பர், அப்படி மற்ற மதத்தைச் சொல்ல விரும்பவில்லை.

    **

    எனது தாய் எப்படிச் சிறந்தவளோ அதற்குச் சற்றும் குறையாமல் மற்ற தாயும் சிறந்தவர் என்று பொதுவில் கூற முடியாத போது ...உங்களதையும் பொதுவில் கூறவேண்டாம் சரியா?

    **

    பீர் ,
    என் மதத்தைப் போலவே உலகில் உள்ள எல்லா மதங்களும் சிறப்பானது.சனாதனமும்,கிறித்துவமும் மற்ற பிற மதங்களும் முழு மனித சமுதாயத்திற்கும் சொந்தமானதுதான் என்று சொல்லமுடியாது என்று மறுத்த உங்கள் மத நல்லிணக்கம் மிகவும் பாராட்டத்தக்கது.

    ReplyDelete
  112. // தருமி said...

    //இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதற்கு (பிறப்பால்)எந்த சிறப்பு தகுதியும் தேவையில்லை.//

    எனக்குத் தெரிந்தவரை யூத மதத்தைத் தவிர மற்ற எல்லா மதத்திற்கும் மேற்சொன்ன தகுதி உண்டென்றுதான் நினைக்கிறேன்.//

    நானறிந்த வரியிலும் அப்படியே. பொதுப்பார்வைக்கு வராத குழுக்கள் இருக்கலாம்.

    யூதர்களை "யூத மதம்" என்று வகைப்படுத்துவதைவிட "யூத இனக்குழு" என்று வகைப்படுத்துவது பொலிடிக்கலி கரெக்ட் என்று நினைக்கிறேன்.

    "யூத இனக்குழு" நம்மூர் லோக்கல் சாதி போல. மதம் மாற‌லாம் சாதி மாறமுடியாது.

    கிறித்து என்பவர் யூத இனக்குழுவைச் சார்ந்தவர் என்றாலும் யூதர்கள் பின்பற்றும் மத நம்பிக்கையை பின்பற்றமுடியாது என்று சொல்ல்லி கலகக்குரல் கொடுத்தவர். அவரையும் யூதமதத்தில் சேர்க்க வேண்டாம்.

    ReplyDelete
  113. மதங்கள் பல இருக்கும் போது "மத சகிப்புத்தன்மைதான்" இருக்குமே தவிர (சகிப்பு என்றாலே விரும்பாததை/பிடிக்காததை/மனம் ஒவ்வாததை கட்டாயத்தின் பேரில் பொறுத்துக் கொள்வது)

    எல்லா மதங்களும் என் மதம்போல மிகச்சிறந்த மதங்களே என்று சொல்லும் நல்லஎண்ணம் மதப்பிரியர்களுக்கு வராது. ( பார்க்க பீர் சொன்ன் வரிகள்.)

    ReplyDelete
  114. // "இஸ்லாம் முழு மனித சமுதாயத்திற்கும் சொந்தமானது" //

    இல்லை கல்வெட்டு, என்னால் சரியாக விளக்கத்தெரியவில்லை என்று நினைக்கிறேன்..

    இஸ்லாம் முழு மனித சமுதாயத்திற்கும் சொந்தமானது என்றால்.. இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ள எந்த தகுதியும் வேண்டாம், யாருக்குத் தேவை என்றாலும், யார் வேண்டுமானாலும் ஏற்றுக்கொள்ளலாம் என்பதாக பொருள்.. இது மற்ற மதங்களுக்கும் பொருந்தலாம், அதை தெரிந்த அவர்கள்தான் சொல்லவேண்டும்... மாறாக இதனால்.. மதநல்லிணக்கம் கெடும் என்று சொல்வது.. எப்படி புரியவில்லை.

    மதச் சார்பின்மை முழு மனித சமுதாயத்திற்கும் சொந்தமானது என்று சொன்னால் அதில் ஏதும் தவறு இருக்குமா?

    அது சரி என்று எனக்குத் தொண்றினால் நானும் அதை ஏற்றுக்கொள்வேன்..

    அதைவிட்டுவிட்டு.. என் நம்பிக்கையில் குறை சொல்லி உங்கள் நம்பிக்கையை மிகை படுத்த வேண்டும்?

    ReplyDelete
  115. //மதங்கள் பல இருக்கும் போது "மத சகிப்புத்தன்மைதான்" //


    சரி சகிப்புதன்மை வளர்க்க வேண்டியது தான்.. :)

    ReplyDelete
  116. மத சகிப்புத்தன்மை - இது பற்றியும் எழுதியுள்ளேன்.

    ReplyDelete
  117. பீர்,

    இறுதியாக.. சில வார்த்தைகள்.

    நான் யாரையும், மதவாதியாக (மதத்தைச் சார்ந்தவராக) பார்ப்பது இல்லை. நானும் ரவுடிதான் என்று அவர்களாகவே அவர்களின் மதத்தை வெளியில் சொன்னால்கூட மதங்கள்/கடவுளை நிராகரித்த (அல்லது இருந்தால் இருக்கட்டும் எனக்கென்ன என்று இருக்கும்) எனக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்துவது இல்லை.

    உங்கள் பதிவில் நான் சொன்னது எல்லாம் "மதம்" என்ற மூன்று எழுத்து மனிதர்களுக்கு செய்துள்ள அவலத்தை ("எல்லா மதமும் என்மதம் போலச் சிறந்த ஒன்று எல்லா மக்களுக்குமானது" என்று உங்களால் சொல்லமுடியவில்லை) உணர்வதால் வந்த எதிர்வினை.

    ****

    "பீர்" என்ற இரண்டு எழுத்துக்குப்பின்னால் இருக்கும் இரத்தமும் சதையுமான ஒரு மனிதர் (ஆணோ / பெண்ணோ போட்டோவில் ஆண் படம் தெரிகிறத்து. நாகேஸ் படம் போட்டுள்ள பதிவு வத்துள்ள சென்ஷி நாகேஷ் அல்ல‌) என் போன்றவரே.

    அவரும் ஒரு மகனாக/மகளாக , தந்தையாக/தாயாக, மனைவியாக/கணவனாக, நண்பராக நான் வாழும் இதே உலகில் வாழ்பவர் என்று அறிவேன்.

    நீங்கள் யாராக இருந்தாலும் உங்கள் மீது அன்பாய் இருகிறேன்.


    நன்றி !!

    ReplyDelete
  118. //இறுதியாக.. சில வார்த்தைகள்.//

    I strongly object to this.

    ReplyDelete
  119. //தருமி said...
    இறுதியாக.. சில வார்த்தைகள்.

    I strongly object to this.

    //


    :-(((((((((

    மன்னிக்கவும்.
    இது வேறு அர்த்தம் தருகிறதா? இறுதி எச்சரிக்கை போன்ற தொனி...??? அய்யோ மன்னிக்க.. அப்படிச் சொன்னதில்லை.

    இந்த உரையாடலில் முடிவாக(எனது தரப்பு முடிவுரையாக...முடிக்கும் எண்ணத்தில்) சில வார்த்தைகள் என்று சொல்ல நினைத்தது.

    பீர்,தருமி,வாசித்த அனைவரிடமும் மன்னிப்பு கோருகிறேன். மனிதத்தைச் சிதைப்பது நோக்கம் அல்ல.

    ReplyDelete
  120. //ஒரு முக்கிய விசியம் ஒரிஜினல் நக்ஸலைட்டுகள் கடவுள் மறுப்பாளர்கள்!//

    வால், இந்த வரி ரொம்ப பிடிச்சிருந்தது.. :)))

    இதையே கன்டினியூ பண்ணுங்க...

    ReplyDelete
  121. //பாலகுமாரன், வத்திராயிருப்பு. said...

    hayyram said: // தடவிக்குடுத்து வெட்டிப்படும் ஆட்டு மந்தைகளே இந்துக்கள் என்பதை மறவாதீர்கள்//
    - என்ன சொல்ல வருகிறீர்கள், அப்போ இந்துக்கள் மட்டும் தான் பலி ஆடுகளா? ஒரு மனித உயிர்க்கு ஏன் மதசாயம் புசுறீங்க? அது எந்த விதத்தில் நியாயம்?//

    well said Bala... உங்கள் நட்பு கிடைத்ததற்கு நான் பெருமைப் படுகிறேன்.

    ReplyDelete
  122. //மன்னிக்கவும்.
    இது வேறு அர்த்தம் தருகிறதா?//

    அடடா .. நான் அந்த பொருளில் கொள்ளவில்லை. எதற்கு முடிக்க வேண்டும்; இன்னும் நிறைய பேசலாமே என்ற எண்ணத்தில், நீங்கள் 'அருகில்' இருக்கவேண்டுமென்ற நினைப்பில் சொன்னது. மன்னிச்சிக்கிங்கோ ... இன்னும் சரியா எழுதத் தெரியலை :(

    ReplyDelete
  123. ///ஒரு முக்கிய விசியம் ஒரிஜினல் நக்ஸலைட்டுகள் கடவுள் மறுப்பாளர்கள்!//

    வால், இந்த வரி ரொம்ப பிடிச்சிருந்தது.. :)))

    இதையே கன்டினியூ பண்ணுங்க... //


    உங்க பாயிண்டுக்கே வருவோம்!
    கடவுள் மறுப்பாளர்கள் அனைவரும் நக்ஸலைட்டுகள் அல்ல!

    ஒருவர் ஓய்வு பெற்ற பேராசிரியர்!
    அவர் சொல்லி கொடுக்கும் காலத்திலேயே மாணவனை கூட அடித்ததில்லை!
    ஒருவன் கமாடிடி அனலைசர்,
    அவர் யார் அடிச்சாலும் வாங்கிகுவார்!
    அவருக்கு பிஞ்சி மூஞ்சி பஞ்சு உடம்பு!
    ஒருத்தர் வெளிநாட்டில் இருக்கிறார் என்ன பண்றாருன்னு தெரியல!

    ReplyDelete
  124. //எல்லாம் இறைவன் அறிவான். //


    எனக்கு முதுகில் அரிக்குது,
    வந்து சொறிவானா!?

    முடியாது என்னா!
    கடவுளுக்கு உருவமில்லை, கையும் இல்ல, காலும் இல்ல, ஆணும் இல்ல, பெண்ணும் இல்ல!

    சொறிய கூட முடியாத கடவுள் என்னாத்துங்கிறேன்!

    ReplyDelete
  125. //////அல் உம்மா, அல் கொய்தா உண்மையான இஸ்லாமிய அமைப்புகள் இல்லைன்னு ஒட்டு மொத்த இஸ்லாமிய நாடுகள் அறிக்கை விடனும்,//

    இது ரொம்ப சரியா, நல்லா இருக்கே. ஆரம்பிச்சிரலாமே ...//


    இஸ்லாமிய நாடுகள் சொன்னாத்தான் ஏத்துக்குவீங்களா? இஸ்லாமியர்கள் சொன்னா ஏத்துக்க மாட்டீங்களா? //


    அல் உம்மாவிலும், அல் கொய்தாவிலும் இருப்பவர்கள்,
    கிருஸ்தவர்களோ, இந்துக்களோ அல்லவே! ஆக நீங்கள் சொல்வதை போல் அவர்கள் சொல்வதையும் கேட்டால் நான் பைத்தியம் பிடித்து திரிவது!

    ஒட்டு மொத்த இஸ்லாமிய நாடுகளும் சொல்லாமல் அவை முடிவுக்கு வரபோவதில்லை!

    ReplyDelete
  126. //சரி.. இஸ்லாமிய நாடுகள் எல்லாம் அறிக்கை விட்டுட்டா.. இந்த பிரச்சனை முடிவுக்கு வந்திடும்ன்னு நினைக்கிறீங்களா?//

    உங்க பிரச்சனை, அடுத்தவன் குண்டு வைப்பதோ, நாலு பேர் சாவதோ அல்லவே!
    ஒட்டு மொத்தமாக இஸ்லாமிய தீவிரவாதிகள் என்று தானே சொல்லகூடாது!

    அதற்கு அது கண்டிப்பாக அவசியம்!
    இல்லையென்றால் மனிதர்களின் மனதை மாற்ற முடியாதே! நீங்கள் தான் மாறிக்கனும்!

    ReplyDelete
  127. //தனி மனிதர்கள் தானாக மாற வேண்டும்.... எந்த சட்டமும் அவனை மாற்ற முடியாது.. தனி மனித மன மாற்றலுக்கான வேண்டுகோள் தான் இந்த பதிவு.//


    அல் கொய்தா, அல் உம்மா தனி மனித அமைப்பாக்கும்!
    இப்ப தான் இந்த விசயத்தை கேள்வி படுறேன்!

    அதே போல் இஸ்லாமிய தீவிரவாதிகள் என்று அனைவரும் சொல்வதில்லையே! ஒரு சிலர் தானே, அந்த தனி மனிதர்கள் தாமாக தானே திருந்த வேண்டும்!

    ReplyDelete
  128. //மதி, சிறுபான்மையாக வந்தவர்களில் யாரும் மற்ற மதங்களை குறை சொல்லவில்லை என்பதை கவனித்தீர்களா?//

    சிம்பிள் லாஜிக்
    எதிர்த்து உரையாடியவர்கள் மத, கடவுள் நம்பிக்கையற்றவர்கள் அவர்களிடம் உங்கள் மதத்தில் அது நொட்டை என்ற வேகாது!

    ReplyDelete
  129. //இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதற்கு (பிறப்பால்)எந்த சிறப்பு தகுதியும் தேவையில்லை. //

    பிறப்புறுப்பை வெட்டுவது ஏன் கட்டாயமாக்கப்படுகிறது!
    எனக்கு வேண்டாம் ஆனால் நான் இஸ்லாமியன் என்று ஒருவன் சொல்லமுடியுமா!?

    எந்த மதத்தை ஏற்று கொள்வதற்கும் எந்த சிறப்பு தகுதியும் தேவையில்லை!
    சிறப்பு தகுதிகள் இல்லாத மனிதர்கள் உருவாக்கிய மதம் தானே அது!

    ReplyDelete
  130. //மதங்கள் பல இருக்கும் போது "மத சகிப்புத்தன்மைதான்" //


    சரி சகிப்புதன்மை வளர்க்க வேண்டியது தான்.. :) //

    நியாயமாக சகிப்பு தன்மை யாருக்கு இல்லை என்று நீங்கள் உங்கள் மனசாட்சியை தான் கேட்க வேண்டும்!

    இஸ்லாமியர்கள் எல்லாம் இறை நம்பிக்கையாளர்கள், மற்றவர்களெல்லாம் இறை மறுப்பாளர்கள் என்று உங்கள் குரானில் தானே சொல்லியிருக்கிறது!

    ReplyDelete
  131. //உங்க பிரச்சனை, அடுத்தவன் குண்டு வைப்பதோ, நாலு பேர் சாவதோ அல்லவே!
    ஒட்டு மொத்தமாக இஸ்லாமிய தீவிரவாதிகள் என்று தானே சொல்லகூடாது!//

    :)

    "அல்லாஹூ அக்பர்" என்று சொல்லிக் கொண்டு ஒரு இஸ்லாமியன் குண்டு வைத்தால்,

    அவனை "அல்லாஹூ அக்பர் என்று சொல்லி குண்டு வைத்த இஸ்லாமியன்" என்று குறிப்பிடக் கூடாது என்கிறார்கள்.

    பீர், எனது புரிதல் சரியா ?

    ReplyDelete
  132. //"அல்லாஹூ அக்பர்" என்று சொல்லிக் கொண்டு ஒரு இஸ்லாமியன் குண்டு வைத்தால்,

    அவனை "அல்லாஹூ அக்பர் என்று சொல்லி குண்டு வைத்த இஸ்லாமியன்" என்று குறிப்பிடக் கூடாது என்கிறார்கள்.

    பீர், எனது புரிதல் சரியா ? //


    க.க.போ!

    நீர் மங்குணி அமைச்சர் அல்ல!

    ReplyDelete
  133. தெளிவான சிந்தனை மிகத்தெளிவான
    பின்னூட்டங்கள் அறிய அறிய மனிதன் தெளிவு பெறுகிறான்

    அறிதலும் புரிதலும் இறைவன் கொடுத்தது
    அதை எப்படி கையாளுகிறோமோ அதைபொருத்தே மனிதன் மனிதனாகிறான்

    ReplyDelete
  134. *******

    தருமி said...

    //மன்னிக்கவும்.
    இது வேறு அர்த்தம் தருகிறதா?//

    அடடா .. நான் அந்த பொருளில் கொள்ளவில்லை. எதற்கு முடிக்க வேண்டும்; இன்னும் நிறைய பேசலாமே என்ற எண்ணத்தில், நீங்கள் 'அருகில்' இருக்கவேண்டுமென்ற நினைப்பில் சொன்னது. மன்னிச்சிக்கிங்கோ ... இன்னும் சரியா எழுதத் தெரியலை :(

    *******

    ஓ அப்படியா ?
    என்ன மன்னிப்பு விடுங்கள். உங்களையும் என்னையும் இயக்குவது இறையே. எனவே அதுதான் மன்னிப்பு கேட்கவேண்டும் மற்றவர்களிடம். :-))))))

    ReplyDelete
  135. //என்ன மன்னிப்பு விடுங்கள். உங்களையும் என்னையும் இயக்குவது இறையே. எனவே அதுதான் மன்னிப்பு கேட்கவேண்டும் மற்றவர்களிடம். :-)))))) //


    இயக்குவது என்றால்!
    எல்லாமேவா!
    கிட்டதட்ட சாவி கொடுப்பது போல் இல்லையா!?

    ReplyDelete
  136. ******************








    //
    தருமி said...
    .... எதற்கு முடிக்க வேண்டும்; இன்னும் நிறைய பேசலாமே ....//




    தருமி,
    பீர் அவர்கள்
    நான் இஸ்லாமியர். இஸ்லாம் மார்க்கம் சொல்லுவதைத்தாண்டி பார்வைகளைச் செலுத்தமுடியாது என்று தெளிவாகச் சொல்லிவிட்டார்.

    1.மதம் வீட்டிலும் வழிபாட்டுத்தலங்களில் மட்டும் இருக்கட்டும் என்கிறார்.

    -- நல்லது ஏன் தெருவிற்கு வர‌க்கூடாது? அந்த அளவிற்கு அசிங்கம் பிடித்ததா மதம்? என்றால் பதில் இல்லை.

    2.நல்லதும் (உங்க மதம்) + நல்லதும் (அவங்க மதம்) = மேலும் நல்லது தானே?

    --ஏன் மதங்கள் தெருவிற்கு வந்தால் களேபரம் ஆகிறது ? என்றால் பதில் இல்லை.

    3.இஸ்லாத்தைபோல் மற்ற மதங்களும் சாலச்சிறந்ததுதான். என்று ஒரு வரி சொல்ல அவர் மார்க்கம் இடம் கொடுக்கவில்லை.

    ***

    இவர் பரிபூரண‌ நம்பிக்கையாளர். மதத்திற்கு ஒப்புக்கொடுத்தவர் என்று தெரிந்த பின்னால் மேலும் அவர் நம்பிக்கையை கேள்வி கேட்பது சரியல்ல. :-((((


    நம்மைப்போன்ற‌ (நம்பிகையற்றவர்களை) காபிர்களைச் சகித்துக்கொள்ளும் அவரின் சகிப்புத்தன்மையை மதிப்போம்.



    ***

    இஸ்லாத்தைபோல் மற்ற மதங்களும் சாலச்சிறந்ததுதான். என்று ஒரு வரி சொல்லும் இஸ்லாமியர் தமிழ்ப்பதிவுலகில் இல்லை. ஒருவேளை அப்துல்லா?

    * உன்மார்க்கம் உனக்கு என் மார்க்கம் எனக்கு என்று சொல்வார்கள்.


    * நான் உன் மார்க்கத்தை தூற்றவில்லை என்று சொல்வார்கள்.


    * ஆனால் எக்காலத்திலும் , கனவில் கூட, "நான் பின்பற்றும் இஸ்லாத்தைப்போல நீ பின்பற்றும் மதமும் சாலச்சிறந்தது" என்று சொல்ல முடியாது.

    * எனது மதம் மட்டுமே சிறந்தது. அதற்கு இணை எதுவும் இல்லை. இருந்தால் இஸ்லாம் இல்லாவிட்டால் காபிர் என்று புஸ் தனமான விசயங்கள் எந்த மதத்திற்கும் அழகல்ல.

    * பெரியார் சொன்ன "இது பத்தினி வாழும் வீடு" என்ற தெருச்சண்டைகள் ஆரம்பம் ஆவது இப்படியே.

    இப்படி இருக்கையில் மத நல் இணக்கம்(நல்லிணக்கம்) வராது. என்ன செய்வது போனால் போகட்டும் சகித்துக் கொள்கிறேன்(சகிப்புதன்மை) என்பதே முன்நிறுத்தப்படும்.



    " மதவேறுபாடுகளை மறந்த மனிதநேயம் காப்போம்." என்று இவர் விடுக்கும் அழைப்பில் உண்மை இல்லை என்பது எனது உறுதியான எண்ணம். இவர் மத வேறுபட்டுகளை மறக்காதவர். அப்படி வேறுபாடுகளை மறந்து இருந்தால் இவரின் மதத்தைப்போல மற்ற மதமும் சாலச்சிறந்தது என்று ஆயிரம்முறை கூறத்தயங்கமாட்டார். இவரால் முடியவில்லை. தடுப்பது அந்த வேறுபாடுதான்.






    ***************

    ReplyDelete
  137. ...


    //வால்பையன் said...
    இயக்குவது என்றால்!
    எல்லாமேவா!
    கிட்டதட்ட சாவி கொடுப்பது போல் இல்லையா!?//

    வால்,
    உண்மைதான். கடவுள் நம்பிக்கையாளர்கள் யாரும் நீதி மன்றங்கள் சொல்வது இல்லை. பர்ஸ் தொலைந்தாலும் பங்களா அபகரிக்கப்பட்டாலும் எல்லாம் இறைவனின் செயல் என்று ஏற்றுக்கொள்ளும் பாக்கியவான்கள்.

    கடவுள்தான் எல்லாத்திற்கும் காரணம் என்ரு இவர்கள் நம்புவதால்தான் நீதிமன்றங்களில் நம்மைப் போன்றவர்கள் மட்டும் போடும் வழக்கு மலைபோல் இருக்கிறது.வாழ்க இவர்கள்.



    ...

    ReplyDelete
  138. //கடவுள் நம்பிக்கையாளர்கள் யாரும் நீதி மன்றங்கள் சொல்வது இல்லை. பர்ஸ் தொலைந்தாலும் பங்களா அபகரிக்கப்பட்டாலும் எல்லாம் இறைவனின் செயல் என்று ஏற்றுக்கொள்ளும் பாக்கியவான்கள்.//

    அப்படியானால் நீதி மன்றம் வரும் யாவரும் கடவுள் நம்பிக்கை அற்றவர்கள் சரியா!?,
    வந்து நான் மத, கடவுள் நம்பிக்கை உள்ளவன் என்று சொன்னாலும் அவன் பொய் சொல்கிறான் அல்லது போலி மதவாதி இல்லையா!?

    ReplyDelete
  139. ..

    //வால்பையன் said...
    அப்படியானால் நீதி மன்றம் வரும் யாவரும் கடவுள் நம்பிக்கை அற்றவர்கள் சரியா!?,//

    உண்மைதான் வால். உண்மையான கடவுள் விசுவாசம் உள்ளவர்கள். கடவுள் செயலை எதிர்த்து கேஸ் போடுவார்களா?

    இப்படிக் கேட்டால் கேஸ் போடவைப்பதும் அந்த இறையே என்று சொல்வார்கள்.

    தீராத விளையாட்டுப்பிள்ளையல்லவா கடவுள். :-)))))

    **

    நாம் ஓரமாக குந்துவதுதான் நல்லது.

    ...

    ReplyDelete
  140. ..

    ***********



    தனது மதத்திற்கும் பிற மததிற்கும் உள்ள வேறுபாடுகளை மறக்கமுடிந்தவர்களுக்கு எல்லாம் ஒரே மதம்தான்.

    ஏன் என்றால் வேறுபாடுகளைத்தான் மறந்தாயிற்றே. வேறுபாடுகள் மறந்தபின்னால் எந்தமதமானல் என்ன எல்லாம் என்மதமே என்று சொல்லும் நிலை வந்துவிடும்.


    அப்படி அந்த நிலையில் உள்ளவர்கள் "மதவேறுபாடுகளை மறந்த மனிதநேயம் காப்போம். " என்று அழக்கலாம்.

    அப்படி இல்லாமல், மனதளவில் தனது மதத்திற்கும் பிற மததிற்கும் உள்ள வேறுபாடுகளை மறக்கமுடியாதவர்கள் வேறு வார்த்தைகளைப் பயன்படுத்தினால் அது பொருந்தலாம்.



    ****

    ..

    ReplyDelete
  141. //எனது மதம் மட்டுமே சிறந்தது. அதற்கு இணை எதுவும் இல்லை. //

    இதைத்தான் இதில் எழுதியுள்ளேன். மத நல்லிணக்கம் என்பது பேப்பரில் எழுதி வாசிக்க வேண்டிய ஒன்று; நிஜத்தில் நடவாத ஒன்று.

    ReplyDelete
  142. ****
    மத நல்லிணக்கம் என்பது பேப்பரில் எழுதி வாசிக்க வேண்டிய ஒன்று; நிஜத்தில் நடவாத ஒன்று
    ****
    தருமி,

    மதமற்ற சமுதாயம் என்பதும் பேப்பரில் எழுதி வாசிக்க மட்டுமே சாத்தியக்கூறு உள்ளது :)-

    ஆதலால் பீரை விட்டுவிடவும்.

    பீர், அடுத்த பதிவு எப்போ ? :)-

    ReplyDelete
  143. //ஒருவர் ஓய்வு பெற்ற பேராசிரியர்!
    அவர் சொல்லி கொடுக்கும் காலத்திலேயே மாணவனை கூட அடித்ததில்லை!
    ஒருவன் கமாடிடி அனலைசர்,
    அவர் யார் அடிச்சாலும் வாங்கிகுவார்!
    அவருக்கு பிஞ்சி மூஞ்சி பஞ்சு உடம்பு!
    ஒருத்தர் வெளிநாட்டில் இருக்கிறார் என்ன பண்றாருன்னு தெரியல!//

    அப்ப குவைத்ல குப்பை கொட்டுறவன், இடுப்புல ஆறு கிலோ ஆர்டிஎக்ஸ் கட்டிக்கிட்டு திரியுறானா?

    இதுதான் உங்ககிட்ட இருக்கிற பிரச்சனை, தன்னை (கடவுள் மறுப்பாளனைத் தவிர) அனைவரையும் குற்றவாளிகளா பார்ப்பது.

    'தீவிரவாதத்திற்கு வர்க்க அடையாளம் பூச வேண்டாம்' என்பதைத்தான் திரும்ப திரும்ப சொல்கிறேன். உங்களுக்கு பயம்.. கடவுள் நம்பிக்கையாளர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து விட்டால்.. எங்கே நம் வாய்சவடாலுக்கு வேலையில்லாமல் போய்விடுமோ என்று...

    ReplyDelete
  144. //அல் உம்மாவிலும், அல் கொய்தாவிலும் இருப்பவர்கள்,
    கிருஸ்தவர்களோ, இந்துக்களோ அல்லவே! ஆக நீங்கள் சொல்வதை போல் அவர்கள் சொல்வதையும் கேட்டால் நான் பைத்தியம் பிடித்து திரிவது!

    ஒட்டு மொத்த இஸ்லாமிய நாடுகளும் சொல்லாமல் அவை முடிவுக்கு வரபோவதில்லை!//

    மற்ற மத தீவிரவாதிகளுக்கு எந்த நாடு அறிக்கைவிடணும், உங்க மதச்சார்பற்ற தீவிரவாதத்திற்கு எந்த நாடு அறிக்கை விடணும்?
    ஓ... அதைத்தான் யாரும் மதச்சார்பற்ற தீவிரவாதம்ன்னு சொல்றதில்லையே.. போராளிக்குழுக்கள்.. அதுதான அதற்கு பெயர்.

    அப்பாவிகளை கொல்லும் அனைவரும் தீவிரவாதிகள் என்பதை உங்களால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை...

    ReplyDelete
  145. //அப்ப குவைத்ல குப்பை கொட்டுறவன், இடுப்புல ஆறு கிலோ ஆர்டிஎக்ஸ் கட்டிக்கிட்டு திரியுறானா?

    இதுதான் உங்ககிட்ட இருக்கிற பிரச்சனை, தன்னை (கடவுள் மறுப்பாளனைத் தவிர) அனைவரையும் குற்றவாளிகளா பார்ப்பது.

    'தீவிரவாதத்திற்கு வர்க்க அடையாளம் பூச வேண்டாம்' என்பதைத்தான் திரும்ப திரும்ப சொல்கிறேன். உங்களுக்கு பயம்.. கடவுள் நம்பிக்கையாளர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து விட்டால்.. எங்கே நம் வாய்சவடாலுக்கு வேலையில்லாமல் போய்விடுமோ என்று... //


    குவைத்தில் குப்பை கொட்டுகிறவர் இடுப்பில் என்ன கட்டியிருக்காருன்னு எனக்கு தெரியல, அவரு மத நம்பிக்கையாலரான்னு கூட தெரியல, கடவுள் நம்பிக்கையற்ற நக்ஸ்லைட்டா, இல்ல நக்ஸ்லைட்டா இல்லாத கடவுள் மறுப்பாளரா, எதுவுமே எனக்கு தெரியாது.

    இஸ்லாமிய மதத்தை சேர்ந்த தீவிரவாதிகளை ஏன் இஸ்லாமிய தீவிரவாதிகள்னு சொல்றிங்கன்னு நீங்க கேக்குறிங்க! ரைட்டு சிம்பிளா விளக்க முயற்சிக்கிறேன்!

    இப்போ மத வித்தியாசமில்லாத பலர் சேர்ந்து இந்திய விடுதலைக்காக போராடினாங்க அப்போ, அவுங்களுக்கு இருந்த நோக்கம் காரணமா இந்திய சுதந்திர போராட்ட தியாகிகள்னு சொல்றோம்!

    அப்போ பாகிஸ்தான்ல இருந்து இங்க வந்து ஏன் ஒருத்தன் குண்டு வைக்கிறான், பாகிஸ்தானை இந்தியா அடிமையாகவா வச்சிருக்கு!, காரணமும் அவனே சொல்றான், அல்லாவின் ஆணையின் படி செய்தேன்னு! உங்க நியாயப்படி அவனை அல்லாவின் போர்படை தளபதி என்றோ, அல்லாவின் அதிதீவிர தொண்டன் என்றோ தான் சொல்ல வேண்டும்!
    அதே பாணி வருவது போல் இஸ்லாமிய மதத்தில் அதி தீவிர பற்று கொண்ட வாதின்னு மக்கள் சொல்றாங்க, தப்பு தான்!

    இனிமே குண்டு வைப்பவர்களை கடவுளின் போர்ப்படை தளபதிகள்னு சொல்ல சொல்லுவோம்!

    இப்ப சந்தோஷமா!?

    ReplyDelete
  146. //அதே பாணி வருவது போல் இஸ்லாமிய மதத்தில் அதி தீவிர பற்று கொண்ட வாதின்னு மக்கள் சொல்றாங்க, தப்பு தான்!//

    குஜராத்தில் கொடுஞ்செயல் நிகழ்த்திய மோடி, பாபு பஜ்ரங்கி மற்றும் மாலேகான் குண்டுவெடிப்பில் குற்றஞ்சாட்டப்பட்ட பிரக்யாசிங் தாக்கூர் ????????????????????

    தென்காசி?
    தஈவிபு?
    ISYF?
    இந்த வரிசையில் இன்னும் பலவற்றை என்ன சொல்லி அழைப்பது?

    ReplyDelete
  147. //மற்ற மத தீவிரவாதிகளுக்கு எந்த நாடு அறிக்கைவிடணும், உங்க மதச்சார்பற்ற தீவிரவாதத்திற்கு எந்த நாடு அறிக்கை விடணும்?
    ஓ... அதைத்தான் யாரும் மதச்சார்பற்ற தீவிரவாதம்ன்னு சொல்றதில்லையே.. போராளிக்குழுக்கள்.. அதுதான அதற்கு பெயர்.

    அப்பாவிகளை கொல்லும் அனைவரும் தீவிரவாதிகள் என்பதை உங்களால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை...//


    மற்றவர்களை கொல்பவர்களை நான் எங்கேயும் ஆதரிக்கவில்லை!
    போராளியாக இருந்தாலும், சீக்காளியாக இருந்தாலும் வன்முறை என்பது கண்டிக்கதக்க செயலே!
    அவனது நோக்கம் ஒரு சமூகத்தை சார்ந்தாஅக இருக்கும் பொழுது அந்த சமூகமும் அவனை கண்டிக்க வேண்டும், எங்களை சாராதவன் என்று வெள்ளை அறிக்கை விட வேண்டும், அது மோடொயாக இருந்தாலும் சரி எந்த கேடியாக இருந்தாலும் சரி! அவனுக்கு ஆதரவளித்து வீட்டுகாவலில் வைத்திருக்கிறோம் என்று பீமபுஷ்டி அல்வா கொடுத்து கொண்டிருந்தால், மக்கள் கேட்காமல் சிரித்து கொண்டா போவார்கள்!

    எவன் ஒருவன் ஒரு கொள்கையில் தீவிரமாக செயல்படுகின்றானோ அவன் அதை சேர்ந்த தீவிரவாதி!

    நான் கடவுள் ஒழிப்பு தீவிரவாதி
    மத ஒழிப்பு தீவிரவாதி
    சாதி ஒழிப்பு தீவிரவாதி!

    என்னிலையுலும் உங்களை எதிர்க்கும் தீவிரவாதி அல்ல!

    ReplyDelete
  148. //குஜராத்தில் கொடுஞ்செயல் நிகழ்த்திய மோடி, பாபு பஜ்ரங்கி மற்றும் மாலேகான் குண்டுவெடிப்பில் குற்றஞ்சாட்டப்பட்ட பிரக்யாசிங் தாக்கூர் ????????????????????//

    போன பின்னூட்டத்திலேயே சொல்லிவிட்டேன்!

    எந்த கொள்கையின் அடிப்படையில் அவன் தீவிரமாக இருக்கின்றானோ அவன் அதை சேர்ந்த தீவிரவாதி!

    யாரும் அழைக்கவில்லை என்பதற்காக உண்மை மாறாது! அவர்கள் இந்துத்துவா தீவிரவாதிகளே!

    ReplyDelete
  149. //"அல்லாஹூ அக்பர்" என்று சொல்லிக் கொண்டு ஒரு இஸ்லாமியன் குண்டு வைத்தால்,

    அவனை "அல்லாஹூ அக்பர் என்று சொல்லி குண்டு வைத்த இஸ்லாமியன்" என்று குறிப்பிடக் கூடாது என்கிறார்கள்.

    பீர், எனது புரிதல் சரியா ?//

    கிட்டத்தட்ட... கோ,

    சூளாயுதம் ஏந்தும் போதும், பிறப்புறுப்பில் கைவைக்கும் போதும் சொல்லப்படும் கடவுள் பெயர்களையும் அந்த தீவிரவாதிகளுக்கும் அடைமொழியாக்கி வைத்திருந்தால்.. இந்த கேள்வி வந்திருக்காது.

    அதனால் தான் சொல்கிறேன்.. யாருக்கும் எந்த தீவிரவாதிக்கும் வர்க்க அடையாளம் பூச வேண்டாம் என்று..

    ReplyDelete
  150. ....



    //குவைத்தில் குப்பை கொட்டுகிறவர் //

    இது யார் என்று வாலோ அல்லது பீர் சொன்னால் தன்யனாவேன்.


    வால் சொன்னது :
    ---------------

    .......ஒருவர் ஓய்வு பெற்ற பேராசிரியர்!
    அவர் சொல்லி கொடுக்கும் காலத்திலேயே மாணவனை கூட அடித்ததில்லை!
    ஒருவன் கமாடிடி அனலைசர்,
    அவர் யார் அடிச்சாலும் வாங்கிகுவார்!
    அவருக்கு பிஞ்சி மூஞ்சி பஞ்சு உடம்பு!
    ஒருத்தர் வெளிநாட்டில் இருக்கிறார் என்ன பண்றாருன்னு தெரியல!.....


    எனது புரிதல்:
    ------------

    1.ஒருவர் ஓய்வு பெற்ற பேராசிரியர்! ‍ ---> ‍தருமி

    2.ஒருவன் கமாடிடி அனலைசர், ---->வால்

    3.ஒருத்தர் வெளிநாட்டில் இருக்கிறார் என்ன பண்றாருன்னு தெரியல! ---> கல்வெட்டு

    **

    மூன்றாவது நபர் பீர் என்று அவராக எண்ணிக்கொள்கிறாரோ ?


    கடவுளே நிர்மா போட்டு விளக்கவும்.



    .....

    ReplyDelete
  151. //யாரும் அழைக்கவில்லை என்பதற்காக உண்மை மாறாது! அவர்கள் இந்துத்துவா தீவிரவாதிகளே!//

    ஒரு சாராரை மட்டும் வர்க்க அடையாளம் பூசி அழைப்பதால் அவர்களுக்கு இழைக்கப்படும் ஒடுக்குமுறை, ஒதுக்குமுறை மற்றவர்களுக்கு இழைக்கப்படுவதில்லை.

    வேண்டாம்.. யாரையும் ஒடுக்க வேண்டாம்.. தீவிரவாதத்திற்கு வர்க்க அடையாளம் பூச வேண்டாம்.

    ReplyDelete
  152. /மூன்றாவது நபர் பீர் என்று அவராக எண்ணிக்கொள்கிறாரோ ?//

    இல்லை.. நான்காவதாக சொன்னேன்..

    எல்லாத்தையும் தப்பாவே புரிஞ்சுகிறீங்களே.. பாஸூ... :))

    ReplyDelete
  153. //அவனது நோக்கம் ஒரு சமூகத்தை சார்ந்தாஅக இருக்கும் பொழுது அந்த சமூகமும் அவனை கண்டிக்க வேண்டும், எங்களை சாராதவன் என்று வெள்ளை அறிக்கை விட வேண்டும், அது மோடொயாக இருந்தாலும் சரி எந்த கேடியாக இருந்தாலும் சரி!//

    எந்த சமூகம் தீவிரவாதிகளை தலையில் தூக்கிவைத்து ஆடுகிறது? கொண்டாடுகிறது?

    என்னளவில் தீவிரவாதிகளை வெறுக்கிறேன். எனக்கு தெரிந்தவரையில் எந்த இஸ்லாமியனும் தீவிரவாதத்திற்கு ஆதரவு கொடுப்பதில்லை.

    உங்களுக்கு தெரிந்தவர்களில், இதற்கு மாறாக யாராவது இருந்தால் சொல்லுங்கள்..

    ReplyDelete
  154. //
    பீர் | Peer said...

    /மூன்றாவது நபர் பீர் என்று அவராக எண்ணிக்கொள்கிறாரோ ?//

    இல்லை.. நான்காவதாக சொன்னேன்..

    எல்லாத்தையும் தப்பாவே புரிஞ்சுகிறீங்களே.. பாஸூ... :))
    //

    ஆச்சர்யமாய் இருக்கிறது !!!

    எப்படிங்க எப்படிங்க ????

    நீங்கள் நம்பும் இஸ்லாம் வழிக்கடவுள் இப்போது காணாமல் போனார் ?

    நான் தப்பாகப்புரிந்து கொள்வது என்ன எனது செயலா? அதுவும் அல்லாவின் செயல் அல்லவா?

    நீங்கள் நம்பும் இஸ்லாம் போதிக்கும் ஒரே இறையின் விருப்பம் இல்லமால் அந்த இறையின் சித்தம் இல்லாமல் மனிதனால் செய்யக்கூடிய செயல்கள் எது எது விளக்கவும்.



    *****

    ReplyDelete
  155. //3.ஒருத்தர் வெளிநாட்டில் இருக்கிறார் என்ன பண்றாருன்னு தெரியல! ---> கல்வெட்டு //

    நான் இதே அர்த்தத்தில் தான் சொன்னேன்!
    கடவுள் மறுப்பாளர்கள் இரண்டு பேர் வரும் போது!, மூணாவதாக பீரை ஏன் நான் இழுக்கிறேன்!

    ReplyDelete
  156. //தருமி,

    மதமற்ற சமுதாயம் என்பதும் பேப்பரில் எழுதி வாசிக்க மட்டுமே சாத்தியக்கூறு உள்ளது :)- //

    மணி, அடிக்கடி வந்திட்டு போங்க... :)

    //பீர், அடுத்த பதிவு எப்போ ? :)-//

    அதபத்தி யோசிக்கவே விட மாட்டேன்றாங்களே... இந்த மத எதிர்ப்புவாதிகள்.. இவங்களோட பிரச்சனை என்னான்னு தெரியல.. மனிதநேயம் கூடாதா? மத நல்லிணக்கம் கூடாதா?

    சாத்தியம் இல்லை.. சாத்தியல் இல்லை... என்ற கூவலில் எதையும் சாத்தியப்பட விட மாட்டார்கள்...

    சகிப்புதன்மை வளர்த்துக்கொள்கிறோம் என்றாலும்... அதெப்படி நாங்கள் இருக்கும்போது அது சாத்தியமா என்று அதையும் பேசவிடுவதில்லை... :((

    ReplyDelete
  157. //நீங்கள் நம்பும் இஸ்லாம் போதிக்கும் ஒரே இறையின் விருப்பம் இல்லமால் அந்த இறையின் சித்தம் இல்லாமல் மனிதனால் செய்யக்கூடிய செயல்கள் எது எது விளக்கவும்.//

    கல்வெட்டு, ஸ்மைலி போட்டிருக்கேன் பார்க்கலையா? ஸ்மைலி போட்டா சிரிக்கணும்.. இப்படி கேள்வி கேட்கக் கூடாது...

    ReplyDelete
  158. // பீர் | Peer said...

    ... நீங்கள் நம்பும் இஸ்லாம் போதிக்கும் ஒரே இறையின் விருப்பம் இல்லமால் அந்த இறையின் சித்தம் இல்லாமல் மனிதனால் செய்யக்கூடிய செயல்கள் எது எது விளக்கவும். ...

    கல்வெட்டு, ஸ்மைலி போட்டிருக்கேன் பார்க்கலையா? ஸ்மைலி போட்டா சிரிக்கணும்.. இப்படி கேள்வி கேட்கக் கூடாது...//


    என்னமோ நல்லாருங்க பாஸு . என்னத்தைச் சொல்ல.

    :-))))))))))))

    ReplyDelete
  159. //தீவிரவாதத்திற்கு வர்க்க அடையாளம் பூச வேண்டாம். //

    எனக்கென்ன ஆசையா!?

    அவர்களுக்கே அது தானே பிடிச்சிருக்கு!
    தசாவதாரம் படத்தில் முதல் கமல் ஓம் என்று ஆரம்பித்து நமோ நாராயணா என்பதும், நெப்போலியன் ஓம் சிவாயநமஹ என்று சொல்ல சொல்வதும் ஏன்!

    தனது கடவுள் மேல் உள்ள வெறித்தனமான பற்றால் தானே!
    நெப்போலியன் செய்தது தீவிரவாதம்!, அதே அதிகார மையத்தில் கமல் இருந்திருந்தால் அவனும் அதே தான் செய்திருப்பான்!

    ஆனால் நெப்போலியனை(அந்த கேரக்டரை) சிவனின் தீவிர பக்தன் என்பதாலும், கமலை பெருமாளின் தீவிர பக்தன் என்பதாலும் பெருமை தான் கொள்வார்கள், அவர்களின் மடமை அவர்களுக்கே தெரியாது!

    அதே தான் எல்லா மத தீவிரவாதிகளுக்கும், மற்றவர்களுக்கு அந்த பெயர் வேண்டாமென்றால் தீவிரவாதத்தை ஆதரிக்கும் நாடுகளை இஸ்லாமிய நாடுகள் என்று சொல்லக்கூடாது! அல்கொய்தா, அல் உம்மா அமைப்புகளுக்கும் இஸ்லாத்திற்கும் எந்த சம்பதமில்லை என்று சொல்ல்லனும்!

    இல்லையென்றால் நீங்கள் மட்டும் கத்தி கொண்டே இருக்க வேண்டியது தான்!

    மோடி மாதிரியான ஆட்களால் மற்ற இஸ்லாமியர்களுக்கும் ஆபத்து!

    ReplyDelete
  160. //தனது மதத்திற்கும் பிற மததிற்கும் உள்ள வேறுபாடுகளை மறக்கமுடிந்தவர்களுக்கு எல்லாம் ஒரே மதம்தான்.

    ஏன் என்றால் வேறுபாடுகளைத்தான் மறந்தாயிற்றே. வேறுபாடுகள் மறந்தபின்னால் எந்தமதமானல் என்ன எல்லாம் என்மதமே என்று சொல்லும் நிலை வந்துவிடும். //

    கல்வெட்டு, அதற்கான முதல் படிதான் இந்த 'மதவேறுபாட்டை மறந்த மனிதநேயம்' என்பதாகவும் கொள்ளலாம் இல்லையா?

    ReplyDelete
  161. //சாத்தியம் இல்லை.. சாத்தியல் இல்லை... என்ற கூவலில் எதையும் சாத்தியப்பட விட மாட்டார்கள்...//

    இதற்குக் காரணங்களும் கூறியுள்ளேன், அந்தக் காரணங்கள் தப்பென்று நிரூபித்தால் நலம்.

    ReplyDelete
  162. முடியவில்லை என்பதை வெறுப்போடு அல்ல, வருத்தத்தில் சொல்வதுதான் ...

    ReplyDelete
  163. //அதே தான் எல்லா மத தீவிரவாதிகளுக்கும், மற்றவர்களுக்கு அந்த பெயர் வேண்டாமென்றால் தீவிரவாதத்தை ஆதரிக்கும் நாடுகளை இஸ்லாமிய நாடுகள் என்று சொல்லக்கூடாது!//

    எந்த நாடு தீவிரவாதத்தை ஆதரிக்கிறது? எந்த நாட்டை அனைவரும் இஸ்லாமிய நாடு என்ற சொல்கிறோம்?

    தீவிரவாதிகளால் அனைவருக்கும் ஆபத்துதான்... ஒரு வருடம் முன்பு, நான் பணியிலிருக்கும் கிடங்கை, தகர்க்க டேங்கருடன் நான்கு தீவிரவாதிகள் வந்தார்கள்.. கண் முன்னால் துப்பாக்கி சண்டை... கடைசியில் தீவிரவாதிகள் சுடப்பட்டு எடுத்துச்செல்ப்பட்டார்கள்.. போலீஸ் வரவில்லை என்றால்... அப்போதே காலி..
    சவுதியிலும் தீவிரவாத தாக்குதல் நடப்பதை பார்க்க முடிகிறது..

    யாரும் தீவிரவாதத்தை வளர்க்கவில்லை... வளர்த்தாலும் அது கண்டிக்கத்தக்கதே..

    அனைத்து நாடுகளுக்கும் தீவிரவாத அச்சுருத்தல் இருக்கிறது.. அனைவருக்கும் இருக்கிறது.

    ReplyDelete
  164. தேனீர் இடைவேளை..

    பப்ஸ் சூடா கிடைக்குமா? :( (இப்போதைய கவலை)

    ReplyDelete
  165. //எந்த இஸ்லாமியனும் தீவிரவாதத்திற்கு ஆதரவு கொடுப்பதில்லை.

    உங்களுக்கு தெரிந்தவர்களில், இதற்கு மாறாக யாராவது இருந்தால் சொல்லுங்கள்..//

    உங்களுக்கும் என்னை போல் வெளுத்ததெல்லாம் பாலு என்று நினைக்கும் உள்ளம் போல்!

    ஒரு இஸ்லாமியன் அல்ல, நாட்டுக்கு நாடு ஒரு அமைப்பு, அதை அந்த நாடும் காப்பாற்றுகிறது!, எல்லாம் தெரிந்தும் எனக்கு ஜன்னல் அடைச்சிருக்கு, கண்ணியில் தெரியும் இஸ்லாமியர்கள் மட்டுமே உண்மையான இஸ்லாமியர்கள் என்பது போல் இருக்கு!

    நீங்கள் ஆதரிக்கவில்லை என்பதற்காக இஸ்லாம் வன்முறையை ஆதரிக்கவில்லை என்று அர்த்தம் ஆகாது!, இஸ்லாமிய நாடுகள் அதை சொல்ல வேண்டும்!

    இன்னொன்றை கவனியுங்கள்,
    நான் அல் உம்மா, அல் கொய்தா என்னும் அமைப்பை தான் சொல்லி கொண்டிருக்கிறேன்!, அவைகள் இஸ்லாமிய அமைப்பு தானே! அதுவல்லாது தனியாக ஒருவன் குண்டு வைத்தால் அவன் வேறு கோணத்தில் தான் விசாரிக்கப்படுவான்!

    ReplyDelete
  166. //தேனீர் இடைவேளை..

    பப்ஸ் சூடா கிடைக்குமா? :( (இப்போதைய கவலை)
    //

    அப்படியே எனக்குங்க ..!!

    ReplyDelete
  167. //நீங்கள் ஆதரிக்கவில்லை என்பதற்காக இஸ்லாம் வன்முறையை ஆதரிக்கவில்லை//

    வால் !! இஸ்லாமியர்கள் அதிகம் வன்முறையில் கையில் எடுக்கிறார்கள்
    என்பதால் இஸ்லாம் வன்முறையை ஆதரிக்கும் மதமாகி விடும் என்பது தான் உங்கள்
    கேள்வியா ???

    நாங்கள் பின்பற்றுவது குர் ஆனையும்,நபிமொழியையும்...இந்த இரண்டில்
    எந்த இடத்தில் வன்முறையை ஆதரித்து குறிப்பிடப் பட்டிருக்கிறது கொஞ்சம்
    சொல்லுங்களேன்.

    ReplyDelete
  168. //நீங்கள் ஆதரிக்கவில்லை என்பதற்காக இஸ்லாம் வன்முறையை ஆதரிக்கவில்லை என்று அர்த்தம் ஆகாது!, இஸ்லாமிய நாடுகள் அதை சொல்ல வேண்டும்!
    //

    இஸ்லாமிய நாடுகள் அனைத்தும் முழுமையான இஸ்லாத்தின் படி தான் ஆட்சி நடத்துகின்றன என்று என்னாலேயே ஒத்து கொள்ள முடியாது.

    பிறகு,இஸ்லாமிய நாடுகள் நீங்க‌ள் சொல்வ‌து போல் அறிவித்து விட்டால்
    தீவிர‌வாத‌த்தை நிறுத்தி விட‌முடியுமா ??

    ReplyDelete
  169. //இந்த மத எதிர்ப்புவாதிகள்.. இவங்களோட பிரச்சனை என்னான்னு தெரியல.. மனிதநேயம் கூடாதா? மத நல்லிணக்கம் கூடாதா? //

    நான் இஸ்லாமியன், நான் இந்து எனும் போது தான் மத நல்லிணக்கம் தேவைப்படுகிறது!, இது எதோ கட்டாயத்தின் பேரிலோ, அல்லது இரக்கப்பட்டு பிச்சை போடுவது போல் இருக்கிறது!

    அதற்கு பதிலாக,
    நான் மனிதன் என்று சொல்லிப்பாருங்கள் எல்லாம் அதற்குள் அடங்கி விட்டது!

    நாங்கள் அதை தான் சொல்லி(அதாவது செய்து) கொண்டிருக்கிறோம்!

    ReplyDelete
  170. //சகிப்புதன்மை வளர்த்துக்கொள்கிறோம் என்றாலும்... //

    நீங்க வளர்ந்து யாருகென்ன ஆவப்போகுது!
    குண்டு வைக்கிறவன் வச்சிகிட்டு தானே இருப்பான்! சாவறவனுக்கு தான் சகிப்பு தன்மை வேணும்!

    ReplyDelete
  171. //நாங்கள் பின்பற்றுவது குர் ஆனையும்,நபிமொழியையும்...இந்த இரண்டில்
    எந்த இடத்தில் வன்முறையை ஆதரித்து குறிப்பிடப் பட்டிருக்கிறது கொஞ்சம் //

    குண்டு வைக்கும் பல தீவிரவாதிகளும் அதையே தான் பின் பற்றுகிறார்களாம்!, ஒருவேளை உங்களுக்கு தெரியாத எதாவது பக்கங்கள் அவர்களுக்கு மட்டும் கிடைத்திருக்குமோ!

    இல்லை நபிகளுக்கு பின் அல்லா அவர்களுக்கு மட்டும் எதாவது இறைத்தூதரை அனுப்பி விட்டாரா!?

    ReplyDelete
  172. //அதற்கு பதிலாக,
    நான் மனிதன் என்று சொல்லிப்பாருங்கள் எல்லாம் அதற்குள் அடங்கி விட்டது!//

    வால் !!

    இப்ப‌டி நீங்க‌ ம‌ட்டும் சொல்லிக்கிட்டே திரிஞ்சிங்க‌ன்னா எல்லாத்தையும் நிறுத்திர‌
    முடியுமா ??

    ReplyDelete
  173. //வால்பையன் said...
    //நாங்கள் பின்பற்றுவது குர் ஆனையும்,நபிமொழியையும்...இந்த இரண்டில்
    எந்த இடத்தில் வன்முறையை ஆதரித்து குறிப்பிடப் பட்டிருக்கிறது கொஞ்சம் //

    குண்டு வைக்கும் பல தீவிரவாதிகளும் அதையே தான் பின்பற்றுகிறார்களாம்!, ஒருவேளை உங்களுக்கு தெரியாத எதாவது பக்கங்கள் அவர்களுக்கு மட்டும் கிடைத்திருக்குமோ!

    //

    அதென்ன பின்ப‌ற்றுகிறார்க‌ளாம்....என்ன‌த்த‌ பின்ப‌ற்றுகிறார்க‌ள்..ச‌ரியா சொல்லுங்க‌.
    நானும் அத‌ற்கு விள‌க்க‌ம‌ளிக்க‌ காத்திருக்கிறேன்.

    ReplyDelete
  174. //இஸ்லாமிய நாடுகள் நீங்க‌ள் சொல்வ‌து போல் அறிவித்து விட்டால்
    தீவிர‌வாத‌த்தை நிறுத்தி விட‌முடியுமா ?? //


    உங்க பிரச்சனை இஸ்லாமிய தீவிரவாதி என்று சொல்லக்கூடாது என்பது தான்!
    இஸ்லாமிய அமைப்புகளும், நாடுகளும் தீவிரவாதம் செய்யும் இஸ்லாமியர்களை இஸ்லாத்திலிருந்து விலக்குகிறோம், இனி உண்மையான இஸ்லாமியர்கள் அவர்களை இஸ்லாமியர்களாக பார்க்க வேண்டியதில்லை, அவர்களும்(குரானில் சொன்னது போல்) இறை மறுப்பாளர்கள் என்றால் யார் அவர்களை இஸ்லாமிய தீவிரவாதிகள் என்று சொல்லப்போறாங்க! உங்க சகோதர்களை சொன்னது போல் உங்களுக்கும் ஏன் கோபம் வரப்போகுது!
    (சொல்லாத போது)

    இனி அடுத்த மேட்டர்!
    தீவிரவாதத்தை ஒழிக்க மதமே இருக்ககூடாது!

    ReplyDelete
  175. //சூளாயுதம் ஏந்தும் போதும், பிறப்புறுப்பில் கைவைக்கும் போதும் சொல்லப்படும் கடவுள் பெயர்களையும் அந்த தீவிரவாதிகளுக்கும் அடைமொழியாக்கி வைத்திருந்தால்.. இந்த கேள்வி வந்திருக்காது. //

    ஓ ஓ மத்த மதங்களையும் தீவிரவாத மதம் என்று சொல்லிவிட்டால் பிறகு இஸ்லாம் தீவிரவாதம் என்று சொல்வதால் எந்த பிழையும் இல்லை என்று சொல்ல வருகிறீர்களா ?
    :)

    ReplyDelete
  176. //இப்ப‌டி நீங்க‌ ம‌ட்டும் சொல்லிக்கிட்டே திரிஞ்சிங்க‌ன்னா எல்லாத்தையும் நிறுத்திர‌
    முடியுமா ?? //

    உங்க மத நல்லிணக்கத்துக்கும் இதே கேள்வியை நான் எழுபட்டுமா!?
    நேர்மறையா சிந்திச்சு பழகுங்க!

    மத நல்லிணக்கம் என்பது முகமூடி
    மனிதம் என்பது உண்மை!

    ReplyDelete
  177. //ஓ ஓ மத்த மதங்களையும் தீவிரவாத மதம் என்று சொல்லிவிட்டால் பிறகு இஸ்லாம் தீவிரவாதம் என்று சொல்வதால் எந்த பிழையும் இல்லை என்று சொல்ல வருகிறீர்களா ?
    :) //

    எந்த வன்முறை,தீவிரவாதத்திற்கும் மத அடையாளம் பூசாதீர்கள் என்பது தான்
    எங்கள் வாதம்.

    எங்களை பொறுத்தவரையில், தீவிரவாதிகளை மனிதர்களாகவே நாங்க‌ள் ஏற்று கொள்ளாத போது,அதென்ன‌ இஸ்லாமிய‌ தீவிர‌வாதி..இந்துத்வா தீவிர‌வாதி.??

    ReplyDelete
  178. //குண்டு வைக்கும் பல தீவிரவாதிகளும் அதையே தான் பின்பற்றுகிறார்களாம்!, ஒருவேளை உங்களுக்கு தெரியாத எதாவது பக்கங்கள் அவர்களுக்கு மட்டும் கிடைத்திருக்குமோ!

    //

    அதென்ன பின்ப‌ற்றுகிறார்க‌ளாம்....என்ன‌த்த‌ பின்ப‌ற்றுகிறார்க‌ள்..ச‌ரியா சொல்லுங்க‌.
    நானும் அத‌ற்கு விள‌க்க‌ம‌ளிக்க‌ காத்திருக்கிறேன். //

    இன்னும் நான் அந்த பேட்டியெல்லாம் எடுக்கவில்லை! மேலும் இதை பற்றி ஏற்கனவே பேசிவிட்டோம் என்று நினைக்கிறேன்.

    ஒரு இஸ்லாமியன் தீவிரவாதியாக இஸ்லாமிய அமைப்புகளாலேயே உருவாக்கப்படுகிறான்! அவனுக்கு எவ்வாறு பயிற்சி அளிக்கபடுகிறது என பலமுறை பார்த்து சலித்தாயிற்று இன்னும் பச்சை குழந்தை மாதிரி எங்களுக்கு எதுவும் தெரியாது, அவுங்கெல்லாம் இஸ்லாமியர்களா என கேட்பது உரையாட முடியவில்லை என்னை ஆளை விடு என்பது போல் இருக்கிறது!

    ReplyDelete
  179. //எங்களை பொறுத்தவரையில், தீவிரவாதிகளை மனிதர்களாகவே நாங்க‌ள் ஏற்று கொள்ளாத போது,அதென்ன‌ இஸ்லாமிய‌ தீவிர‌வாதி..இந்துத்வா தீவிர‌வாதி.??//

    இதற்கும் பதில் சொல்லியாச்சு!

    எந்த கொள்கையில் அவர்கள் தீவிரமாக இருக்கிறார்களோ அனை சொல்லித்தான் அவர்களை அழைக்கமுடியும்!

    பீர் சமோசா சாப்பிட போயிட்டார்!
    நாங்க முதல்லயிருந்து ஆரம்பிக்கனுமா?
    செய்யது அண்ணே கொஞ்சம் பழைய பின்னூட்டத்தை படிச்சிட்டு வாங்க!

    ReplyDelete
  180. //மத நல்லிணக்கம் என்பது முகமூடி
    மனிதம் என்பது உண்மை!//

    சிரிப்பு வந்திருச்சிங்க..என்ன நேர்மறையா சிந்திக்க சொல்லிட்டு..

    "மனிதம் என்பது உண்மை" எல்லாம் ஓக்கே.தனிப்பட்ட மத காழ்ப்புணர்ச்சி,மத துவேஷம்
    இப்படி எல்லா ஆயுதங்களை கொண்டும் அடுத்தவர் கொள்கைகளையும்,
    நம்பிக்கைகளையும் கேவலமாக விமர்சிக்காதவரை.

    ReplyDelete
  181. //நான் மனிதன் என்று சொல்லிப்பாருங்கள் எல்லாம் அதற்குள் அடங்கி விட்டது!
    நாங்கள் அதை தான் சொல்லி(அதாவது செய்து) கொண்டிருக்கிறோம்!//

    எது.. அடுத்தவனை குறை சொல்வது தான் உங்கள் மனிதமா?
    ஒரு கடவுள் எதிர்ப்பாளன், மற்ற கடவுள் எதிர்ப்பாளனோடு ஒற்றுமையாக இருக்கமுடிவதில்லை, என்பது தான் உங்கள் மனிதமா?
    கடவுளை மறுக்கும் பெரியாரிஸ்டையே உங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பதைதான் மனிதமா?
    உண்மையான நக்ஸல் தீவிரவாதி, கடவுள் மறுப்பாளன் (தீவிரவாதத்தை ஆதரித்தல்) என்பதுதான் உங்கள் மனிதமா?

    சக மனிதனை மனிதனாக பார்க்கத் தெரியவில்லை... அவனுக்கு வர்க்க அடையாளம் பூசி வேறுபடுத்திக்காட்டும் உங்களிடம் ஏது சார் மனிதம்?

    அதுதான் சொல்கிறேன்.. மத வேறுபாட்டை மறந்து மனிதநேயம் காப்போம்.

    ReplyDelete
  182. //பீர் சமோசா சாப்பிட போயிட்டார்!
    நாங்க முதல்லயிருந்து ஆரம்பிக்கனுமா?
    செய்யது அண்ணே கொஞ்சம் பழைய பின்னூட்டத்தை படிச்சிட்டு வாங்க!//

    அதுக்கு ஏண்ணே நான் பழைய பின்னூட்டங்களை படிக்கணும்.

    நாம அரைச்ச மாவையே தானே திரும்ப திரும்ப அரைச்சிக்கிட்ருக்கோம்.

    ReplyDelete
  183. //ஒரு இஸ்லாமியன் தீவிரவாதியாக இஸ்லாமிய அமைப்புகளாலேயே உருவாக்கப்படுகிறான்! அவனுக்கு எவ்வாறு பயிற்சி அளிக்கபடுகிறது என பலமுறை பார்த்து சலித்தாயிற்று இன்னும் பச்சை குழந்தை மாதிரி எங்களுக்கு எதுவும் தெரியாது, அவுங்கெல்லாம் இஸ்லாமியர்களா என கேட்பது உரையாட முடியவில்லை என்னை ஆளை விடு என்பது போல் இருக்கிறது!//

    இதற்கு நாங்கள் விளக்கமளித்ததும் சலித்தாயிற்று.நீங்களும் விடிந்தவுடன்
    அதே பழைய கதையை ஆரம்பித்தால் நாங்களும் அதே பதில் தான் சொல்வோம்.

    ReplyDelete
  184. //ஓ ஓ மத்த மதங்களையும் தீவிரவாத மதம் என்று சொல்லிவிட்டால் பிறகு இஸ்லாம் தீவிரவாதம் என்று சொல்வதால் எந்த பிழையும் இல்லை என்று சொல்ல வருகிறீர்களா ?
    :)//

    கோ, உங்களுக்குத்தேவையான வார்த்தைகளை மட்டும் எடுத்து நுண்ணரசியல் செய்யவேண்டாம்.. அதற்கு கீழுள்ள வார்த்தைகளையும் வாசித்து பாருங்கள்..

    அதனால் தான் சொல்கிறேன்.. யாருக்கும் எந்த தீவிரவாதிக்கும் வர்க்க அடையாளம் பூச வேண்டாம் என்று..

    ReplyDelete
  185. //"மனிதம் என்பது உண்மை" எல்லாம் ஓக்கே.தனிப்பட்ட மத காழ்ப்புணர்ச்சி,மத துவேஷம்
    இப்படி எல்லா ஆயுதங்களை கொண்டும் அடுத்தவர் கொள்கைகளையும்,
    நம்பிக்கைகளையும் கேவலமாக விமர்சிக்காதவரை. //

    மறுபடியும் முதல்லயிருந்தா!

    உங்களுக்கு இஸ்லாம் ஒரு மதம் அல்லது மார்க்கம், எனக்கு அது புண்ணாக்குக்கு கூட சம்பந்தமில்லை!
    நான் எவனையும் தேவைகேற்ப பெயரிட்டு அழைக்க வேண்டியதில்லை!
    எவனொருவன் எதாவது ஒரு கொள்கையின் மேல் தீவிர பற்று கொண்டு வன்முறை செயல்கள் செய்கிறானோ அவனது செயல்களுக்கு அவனது கொள்கைகளே தலைப்பாகிறது!

    அது எல்லாவற்றிக்கும் பொருந்தும்!

    எழுந்தாச்சா இல்லை நடிப்பு தொடருதா!?

    ReplyDelete
  186. //இந்த இரண்டில்
    எந்த இடத்தில் வன்முறையை ஆதரித்து குறிப்பிடப் பட்டிருக்கிறது கொஞ்சம் //

    இப்பதிவின் முதல் & 7-ம் கேள்விகள்

    ReplyDelete
  187. இன்றைய (01.10.2009) தினகரன் பத்திரிக்கையில் ஒரு செய்தி என்ன தெரியுமா? கேரளாவில் பாப்புலர் பிரான்ட் ஆப் இந்தியா என்ற அமைப்பின் துணை அமைப்பாக 'லவ் ஜிஹாத்' என்ற அமைப்பு செயல் படுகிறதாம். இவர்கள் வேலையே கல்லூரி மாணவிகளை காதலித்து அவர்களை மதம் மாற்றுவது.சமீபத்தில் இது போன்று கல்லூரி மாணவிகளை காதலித்து மதம் மாற்றிய இருவரை கைது செய்து அவர்களிடம் விசாரணையில் இந்த விஷயங்கள் தெரிய வந்துள்ளன. இப்போது பாப்புலர் பிரான்ட் அமைப்பை கண்காணிக்க கேரளா உயர் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. இது போலவே மும்பையிலும் கடந்த சில மாதங்களுக்கு முன் பல கல்லூரி பெண்கள் முஸ்லிம்களை திருமணம் செய்து உடனே அரபு தேசங்களுக்கு சென்று முஸ்லிமாக திரும்பி வந்த செய்தி பத்திரிக்கைகளில் வந்தது இது குறித்து விசாரிக்கவும் மராட்டிய அரசு உத்தரவு இட்டது. நீங்கள் இல்லை என்று சொன்னாலும் முஸ்லிம்களின் மத மாற்ற நடவடிக்கைகளில் இதுவும் ஓன்று என்பது அப்பட்டமான உண்மை.இஸ்லாமிய ஆணை காதல் செய்யும் பிற மதத்தை சேர்ந்த எந்த பெண்ணும் முஸ்லிமாக மாறினால் மட்டுமே அந்த ஆண் அவளை திருமணம் செய்து கொள்கிறான். இதை விட கிறித்தவர்கள் செய்வது ஒன்றும் கேவலமாக தெரியவில்லையே


    இதற்கு பெயர் மதபற்றா!
    இல்லை பெண்களுக்கு பாவம் ஆண்களில்லை அதனால் நாங்கள் வாழ்க்கை தருகிறோம் என்று அர்த்தமா!?

    ReplyDelete
  188. //அதென்ன‌ இஸ்லாமிய‌ தீவிர‌வாதி..இந்துத்வா தீவிர‌வாதி.??//

    எந்தெந்த மதங்களின் பெயரால் தீவிரவாதம் நடக்கிறதோ, அவர்கள் அம்மதத்திற்குரிய தீவிரவாதிகள்.

    அல் குய்தா மதத்தின் பெயரால் தீவிரவாதம் செய்கிறதா இல்லையா? அதை எத்தனை மதவாதிகள் கண்டித்துவிட்டார்கள்.
    அல் குய்தாகாரர்கள் தாங்களும் கடவுள் பெயரால்தான் எல்லாம் செய்வதாகக் கூறுகிறார்கள். மறுப்பு எங்கே?

    ReplyDelete
  189. மணிகண்டன் சொன்னது போல, கடவுள் நம்பிக்கை இல்லா சமுதாயம் என்ற வார்த்தை காகிதத்தில் எழுதி வைக்க மட்டுமே.

    கடவுள் மறுப்பாளர்களுக்கு இருக்கும் 'கடவுள் இல்லை என்ற நம்பிக்கையை' விட, கடவுள் நம்பிக்கையாளர்களுக்கு இருக்கும் நம்பிக்கை "அதி நம்பிக்கை".

    கடவுள் பெருங்காய டப்பாவோ, பியர் பாட்டிலோ அல்ல.. எடுத்து காட்டுவதற்கு... அதே போல இல்லை என்று நம்ப வைப்பதற்கும்.

    கடவுள் நம்பிக்கை இல்லை என்று சொல்பவர்கள், 'தங்களை கட்டுப்படுத்த யாரும் தேவையில்லை, தான் தோன்றித்தனமாக தன் வாழ்வை நடத்த வேண்டும்' என்ற தன்நம்பிக்கை கொண்டவர்கள்.

    கடவுள் நம்பிக்கையாளர்கள், அந்த நம்பிக்கையாளேயே நேர் வழியில் நடப்பவர்கள்.

    வழிதவறி போகிறவர்கள் அனைத்து தரப்பிலும் உண்டு.

    தீவிரவாதிக்கு, கடவுள் (இருக்கிறான், இல்லை என்ற) நம்பிக்கையை விட, அவன் செய்யும் தீவிரவாதத்தின் மீதுதான் நம்பிக்கை.

    ReplyDelete
  190. //அல் குய்தாகாரர்கள் தாங்களும் கடவுள் பெயரால்தான் எல்லாம் செய்வதாகக் கூறுகிறார்கள். மறுப்பு எங்கே?//

    என்னை போன்று கத்துபவர்கள் வார்த்தைகள் உங்கள் காதுகளில் விழுவதில்லையா...???

    ReplyDelete
  191. ....



    அ.மு.செய்யது அண்ணே

    1. நீங்கள் முஸ்லீமா? அப்படி என்றால்...இஸ்லாத்திற்கு இணையாக உலகில் வேறுமதம் இல்லை என்று நம்புகிறீர்களா?

    2. உங்கள் இஸ்லாத்தைப்போல் மற்ற மதங்களும் சாலச்சிறந்தது என்று சொல்லமுடியாதவரா ?


    ஏன் கேட்கிறேன் என்றால் நான் இந்த மதம் /சாதி என்று சொல்பர்களிடம் அவர்கள் நம்பிக்கை குறித்த்து கேள்வி கேட்பது இல்லை. விலகிப்போகவே.


    அப்படி என்றால் உங்கள் கருத்தை மதிக்கிறேன். விலகிப்போகிறேன்.


    "இஸ்லாத்தைப்போல் மற்ற மதங்களும் சாலச்சிறந்ததுதான்" என்று சொன்ன‌ உண்மையிலேயே மத வேறுபாடுகள் இல்லாத இஸ்லாமிய‌ரைக் காணவில்லை.

    **

    நான் மட்டுமே நல்லவன் எனது மட்டுமே நல்லது உலகில் என்னைவிட நல்ல‌வன் கிடையாது எனது மதத்தைவிட நல்ல மதம் கிடையாது எனும்போது தேடல் நின்றுவிடும்.

    இதற்குபெயர் மத நல்லிணக்கம் என்றால் உங்கள் இணக்கம் வாழ்க.

    ReplyDelete
  192. //ஒரு கடவுள் எதிர்ப்பாளன், மற்ற கடவுள் எதிர்ப்பாளனோடு ஒற்றுமையாக இருக்கமுடிவதில்லை, என்பது தான் உங்கள் மனிதமா?//

    அதாவது எதை செய்தாலும் சிரித்து கொண்டே தான் இருக்க வேண்டும் என்பது தான் உங்கள் எதிர்பார்ப்பா!?
    இப்போ இங்கே என்ன உரையாடல் நடக்குது!?

    நாளை கல்வெட்டு உலகிலேயே சாம்பார் தான் ருசியான குழம்பு என்றால் போய் சண்டை போடத்தான் செய்வேன்! அதற்கும் மனிதத்துக்கும் என்னய்யா சம்பந்தம் இருக்கு! விவாதம் என்பது மரபுகளை கட்டுடைத்து பார்ப்பது தானே!

    உரையாடலே தவறென்றால் எதிர்காக நாம் பேசி கொண்டிருக்கிறோம்!


    //கடவுளை மறுக்கும் பெரியாரிஸ்டையே உங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பதைதான் மனிதமா?//

    மனிதன் என்ற அடையாளம் போய் அவர்களுக்கு பெரியாரிஸ்ட் என்ற அடையாளம், புரியுதா!?

    //சக மனிதனை மனிதனாக பார்க்கத் தெரியவில்லை... அவனுக்கு வர்க்க அடையாளம் பூசி வேறுபடுத்திக்காட்டும் உங்களிடம் ஏது சார் மனிதம்?

    அதுதான் சொல்கிறேன்.. மத வேறுபாட்டை மறந்து மனிதநேயம் காப்போம். //

    நிச்சயமாக மனிதனாக பார்க்கிறோம்! ஆனால் அவர்களது கொள்கையின் அடிப்படையிலேயே அவர்களது செயல்களுக்கு தலைப்பு வைக்கப்படுகிறது!

    மத வேறுபாட்டை மறந்து மனித நேயம் காப்பது நல்லது தான்! ஆனால் இடையில் இருக்கும் ”வேறுபாடே” இல்லையென்றால் இன்னும் எவ்வளவு ந்ல்லது!

    ReplyDelete
  193. /இதற்கு பெயர் மதபற்றா!
    இல்லை பெண்களுக்கு பாவம் ஆண்களில்லை அதனால் நாங்கள் வாழ்க்கை தருகிறோம் என்று அர்த்தமா!?//

    இதில் தீவிரவாதம் எங்கே வருகிறது.... ???

    (பூனைதான் வெளியே வருகிறது..)

    ReplyDelete
  194. இதே போன்ற "துர் நிகழ்வுகளை" எல்லா தளங்களிலும் பார்க்க முடிகிறது.. :(

    ReplyDelete
  195. /ஆனால் இடையில் இருக்கும் ”வேறுபாடே” இல்லையென்றால் இன்னும் எவ்வளவு ந்ல்லது!//


    நிச்சயம் வால், அதை சாத்தியப்படுத்தும் வரை... வைத்துக் கொள்ளக்கூடாதா? எப்படியாவது தீவிரவாதம் ஓய்ந்தால் நல்லது தான்.

    ReplyDelete
  196. புரிந்து கொள்க:
    இது மதவேறுபாடுகளை பற்றி விவாதிக்க எழுதப்பட்ட பதிவு அல்ல.

    இங்கு தீவிரவாதத்தை ஒழிக்க வைக்கப்படும் கருத்துக்கள், மாற்றக்கருத்துக்கள் மட்டுமே அனுமதிக்கப்படும்.

    ReplyDelete

மனம் திறந்து செதுக்குங்கள், என் எழுத்துக்களை.