நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின் கொட்பின்றி ஒல்லும்வாய் ஊன்றும் நிலை. – குறள்.
மனவேறுபாடு கொள்ளாமல் தன்னால் இயலும் வழிகளிலெல்லாம் துணைநின்று நண்பனைத் தாங்குவது தான் நட்பின் சிறப்பாகும். – உரை.
என் நண்பர், எங்கள் ஊர்காரர், என் முந்நாள் தெருவாசி, கோபக்காரர் திருமிகு வால்பையன் என்ற அருண் அவர்கள், இஸ்லாத்தை பற்றி தெளிவுபடுத்த கேட்டிருந்தார். அவருக்கான ப்ரத்தியேக இடுகை. என் நிலையை அவருக்குத் தெளிவுபடுத்துவதால் எங்கள் நட்பு பலப்படும் என்பதாலேயே இந்த இடுகை. இதன் உள்அர்த்தங்கள் எங்கள் இருவருக்கும் தெரியும் என்பதால் கலகக்காரர்களை கண்டு பயமில்லை. என்ன வால் நான் சொல்றது?
"இஸ்லாம் மற்றும் முஸ்லீம்கள் குறித்து இன்னும் தெரிந்து கொள்ளவேண்டியிருக்கிறது. குறைந்தபட்சம் விமர்சிக்கும் தகுதிக்காகவாவது படித்து தெரிந்துகொள்ளுங்கள், பின்பு விவாதிக்கலாம்" என்று நான் சொன்னதற்கு...
வால்பையன், "படித்து தெரிந்து கொள்வதற்கு பதில் இப்போது உங்களிடம் கேட்டு தெரிந்து கொள்கிறேன்! படி படி என்று சொல்லமால் நீங்கள் படித்ததை தெளிவுற சொல்லி கொடுங்களேன்!" என்று கேட்டிருந்தார்.
மிக்க மகிழ்ச்சி வால், இந்த தெளிவு ஒரு பொருளின் மீது விமர்சனத்தை வைக்கும் முன்பு இருந்திருக்க வேண்டும். பிழையான கருத்தை, ஆதாரமில்லாத குற்றச்சாட்டை அவையில் வைக்கும் முன்பு, அதை பாவிப்பவர்களின் புத்தகங்களை படித்தோ அல்லது நண்பர்களிடம் கேட்டோ தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும் என்பது தான் நான் சொன்னது. இஸ்லாம் குறித்த சந்தேகங்களுக்கு, அதை கற்றுத்தேர்ந்த நம் பரஸ்பர நண்பர் அ.மு.செய்யது மற்றும் தேடிப்படித்த நான் இருக்கிறேன். இஸ்லாத்தை பற்றிய சந்தேகத்தை எந்நேரமும் எப்படியும் கேட்கலாம். (இரவு 12 மணிக்கு எழுப்பி, உன் பெயர் என்ன என்றும் என்னிடம் கேட்கலாம். மாத்ருபூதம் மாதிரி கோவப்படமாட்டேன். எனக்கு இப்போ நைட் ஷிஃப்ட் :-) ) உங்களுக்கான சந்தேகத்தை தெளிவுபடுத்துவதற்காக எனது தேடல் இன்னும் அதிகமாகும் என்பதில் கூடுதல் மகிழ்ச்சியே. அது கிடக்கும்...
முஸ்லீம்கள் அரபியில் வழிபாடு நடத்துவதேன்? அல்லாவுக்கு அரபி மட்டும் தான் தெரியுமா?
முதலில் ஒரு விஷயம் புரிந்து கொள்ளுங்கள். எந்தவொரு மொழிக்கும் தனிச்சிறப்பென்பது கிடையாது. அதே போல எந்த மொழியும் தாழ்ந்த மொழி கிடையாது. அது காலத்தால் அழிந்த மொழியானாலும், பன்நெடுங்காலம் வாழ்ப்போகும் மொழியானாலும் சரியே. ஒரு மொழியில் புலமை பெற்றவர்கள், அதன் ஈர்ப்பினால், அம்மொழி மீது பற்று கொள்வது இயல்பே. அதேபோலத்தான் ஒருவர் தாய்மொழிப்பற்று கொள்வதும் இயற்கை, கடமை.
அரபி மொழி பேசுவர், அரபி அல்லாத மொழி பேசுபவரை விட உயர்ந்தவர் அல்லர். அரபி அல்லாத மொழி பேசுபவர், அரபி பேசுபவரைவிட உயர்ந்தவர் அல்லர் என்பது முஹம்மது நபியின் வாக்கு. (நபி = தூதர்)
வழிபாட்டிற்கான அழைப்பு அரபியில் 'அல்லாஹூ அக்பர்...' என்று சொல்லக் கேட்டிருப்பீர்கள். இதை தமிழில்,' இறைவன் மிகப்பெரியவன்... வழிபாட்டிற்கு வாருங்கள்...' என்பதாக மொழி மாற்றம் செய்யலாம். சரி... இதை தமிழிலேயே சொல்லலாமே.. என்று கேட்பீர்கள். இஸ்லாம், ஒரு குறிப்பிட்ட பிராந்திய மக்களின் மார்க்கம் இல்லை. உலகம் முழுமைக்குமான மார்க்கம். அரபுநாட்டில் இருக்கும் தமிழ், மலையாளம், தெலுகு, பெங்காளி மற்றும் இன்னபிறவற்றை பேச்சு மொழியாக் கொண்டவர்களையும் இறை வழிபாட்டிற்கு அழைக்க ஒரு பொதுமொழியான குர்ஆன் எழுதப்பட்டிருக்கும் அரபியிலேயே 'பாங்கு' எனப்படும் வழிபாட்டிற்கான அழைப்பு விடுக்கப்படுகிறது. இதைக்கேட்பவர்கள் வழிபாட்டுதளம் சென்று தனது கடமையை நிறைவேற்றுகின்றனர். இறை வழிபாடும் அரபியிலேயே நிறைவேற்றப்படுவதற்கு காரணம் இதுவே. தனிப்பட்ட வேண்டுதல்களை அவரவருக்கு விருப்ப மொழியிலேயே கேட்டுக்கொள்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதே நிலைதான் மலையாளிகள் அல்லது நைஜீரியர்கள் தமிழ்நாடு வந்தாலும். மேலும், உலகெங்கும் வழிபாட்டை ஏற்று நடத்த, “அரபி கற்றவர், வயதில் மூத்தவர்” என்ற தகுதியே போதுமானது. அரபு நாட்டில் நானும் வழிபாட்டை முன்நின்று நடத்தியிருக்கிறேன். எனக்கு பிறகு வந்த அரபிகள் பின்னால் நின்று, என்னை தொடர்ந்தே இறைவனை வழிபட்டனர். (கருப்பர்கள், வெள்ளையர்கள், அரபிகள், அரபி அல்லாதோர் என்ற பாகுபாடும் இஸ்லாத்தில் இல்லை என்பதற்கும் இதை உதாரணமாக சொல்லலாம்) இறை வழிபாட்டிற்கு மொழி குறுக்கீடாகக்கூடாது என்பதே இதன் சாராம்சம்.
சரி… குர்ஆன் ஏன் அரபியில் இருக்க வேண்டும்? - முஹம்மது நபி அரபு நாட்டில் வாழ்ந்தார். அரபு மொழி பேசினார். அதனாலேயே அவருக்கு குர்ஆன் அரபி மொழியில் அருளப்பட்டது.
அன்னிய மொழியான அரபியை தமிழர் ஏன் படிக்க வேண்டும்? - மேற்சொன்ன ஒருமைப்பாட்டிற்குத்தான் அரபியை கற்றுக்கொள்கிறோம். மட்டுமல்லாது, அரபியில் உள்ள குர்ஆனை நேரடியாக விளங்கிக் கொள்வதற்காகவும்தான்.
அரபி தமிழர்கள் மீது திணிக்கப்படுகிறதே? - இல்லை. இது முற்றிலும் தவறான கருத்து. அரபி எந்த தமிழக பள்ளியிலும் கட்டாய பாடமில்லை. ஹிந்தி திணிப்பை எதிர்த்த நண்பர்கள், “ஹிந்தி தேவைப்படுவோர், விருப்பமுள்ளவர்கள் மட்டும் படிக்கட்டும்” என்று சொன்னது போல, விருப்பமுள்ளவர்கள் மட்டுமே, விருப்ப பாடமாக அரபியை படிக்கிறார்கள். அரபி படிக்கத்தெரியாத முஸ்லீம்களும் தமிழகத்தில் இருக்கிறார்கள். அவர்கள், தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட குர்ஆனை படித்து விளங்கிக்கொள்கின்றனர். (குர்ஆன், பெரும்பாலான மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. சமஸ்கிருதத்திலும் கூட) விரும்ப பாடமாக அரபி படிப்பவர்களிடம், ‘அது கூடாது, தமிழில் மட்டுமே படி’ என்று சொல்வதும் திணிப்புதான். அந்த திணிப்பு தவறென்றால், படிப்பதை தடுக்கும் இந்த திணிப்பும் தவறுதான்.
“இந்துக்கள் அனைவரும் சமஸ்கிருதத்தில் தான் பூஜை செய்ய வேண்டும் என்ற பார்பனீய சிந்தனையை ஒட்டி வருகிறது இது!, நான் பதிவில் கேட்டது போல் இஸ்லாமியர்களுக்கும் பார்பனீய சிந்தனை உள்ளதா?” – வால்பையன்.
வால், அரபியே முஸ்லீம்களின் பொது மொழியாக இருக்கிறது. அவ்வாறு இருப்பது எந்த ஒரு முஸ்லீமிற்கும் தொந்தரவில்லை என்பதால், அதையே அனைத்து முஸ்லீமும் விரும்புகின்றான். இதில் உங்களுக்கு ஏதாவது தொந்தரவு இருக்கிறதா? குறிப்பாக, கடவுளே இல்லை என்று சொல்லும் உங்களுக்கு, அவரை நம்புபவர்கள் எந்த மொழியில் வழிபாடு செய்தால் என்ன?
வால், நீங்களாக கேட்கும் கேள்விகளை விட, முகம் இல்லாதவர்கள் பத்தவைத்துவிட்டு போகும், முற்றிலும் அடிப்படை அறிவற்ற, ஆதாரமற்ற, கேவலமான கருத்துக்களைத்தான் ‘ஆமாம், எனக்கும் அதே கேள்வி உண்டு, நானும் அதுதான் நினைத்தேன்’ என்பதாக அதிகம் சொல்கிறீர்கள்.
எந்த சந்தேகம் என்றாலும் நேரடியாக கேட்கலாம். குற்றச்சாட்டுகளை ஆதாரத்துடன் சொல்லலாம்.
முன்பு உங்களுக்கு அதிகமான இஸ்லாமிய நண்பர்கள் இருந்ததாகவும் இப்போது குறைந்து விட்டதாகவும் அதனால் பிரியாணி வருவதில்லை என்றும் சொல்லியிருந்தீர்கள். ஆம்.. எனக்கும் தான். முன்பு நிறைய இஸ்லாமிய நண்பர்கள் இருந்தார்கள். இப்போது அவர்களுடைய தொடர்பில்லை. வேறென்ன… சோம்பேறித்தனம், அலுப்பு. ஆனால் எனக்கு சிறந்த நண்பர்கள் இப்போது கிடைத்துள்ளார்கள், வால்பையன், கோவியார், டக்ளஸ், கார்த்திகை பாண்டியன், லோகு, பாலா, ஜெகநாதன், மணிகண்டன், அப்துல்லா அண்ணன், செய்யது மற்றும் முகம் தெரியா பலர். உங்கள் குறை பிரியாணிதான் என்றால் நமது அடுத்த சந்திப்பில் என் வீட்டு பிரியாணி சாப்பிடலாம். ;)
- இஸ்லாத்தின் மீது வைக்கப்படும் அபாண்டமாக குற்றச்சாட்டுக்களுக்கு விளக்கமளிப்பதே நோக்கம். இவற்றை சொல்லாமல் விட்டால், தவறான எண்ணங்கள் வால்பையன் மனதிலும் உங்கள் மனதிலும் தங்கிவிட சாத்தியமுண்டு என்பதால் மட்டுமே. என் நண்பர்கள் மனதில் என்னைப்பற்றிய தவறாக எண்ணம் இருப்பதை நான் விரும்பவில்லை. எனக்கு கலங்கமில்லா நட்பு முக்கியம்.
- மாற்று மத நண்பர்களின் கடவுள் கொள்கையையோ, அவர்களின் நம்பிக்கையையோ நான் எங்கும் கேள்வி எழுப்பியதில்லை. அது அவர்களின் நம்பிக்கை. என் பார்வையில் படுவதை கேள்வி கேட்க, கருத்து சொல்ல முழு உரிமை இருந்தும், நம் பண்பாடு, நாகரிகம் அதை செய்யச்சொல்லவில்லை.
- அதற்காக இஸ்லாம் விமர்சனத்திற்கு அப்பார்பட்ட மார்க்கம் என்றும் சொல்லமாட்டேன். உங்கள் சந்தேகங்களை, தனி மெயிலில் அனுப்புங்கள். பதில் மெயிலிலோ அல்லது நீங்கள் விருப்பப்பட்டால், தனி இடுகையிலோ விவாதிப்போம்.
நன்றி.
எந்த கடவுளும், மத நூலும் மற்ற மதத்தை தாழ்த்தி சொல்லவில்லை.. நாம் தான் மதங்கள் தோன்றியதின் உண்மையான நோக்கத்தை புரிந்து கொள்ளாமல் இருக்கிறோம்..
ReplyDeleteஎதையும் விவாதித்து, விசாரித்து தெரிந்து கொள்வதில் தவறில்லை.. நாம் ஏற்கனவே பல விஷயங்களை விவாதித்திருக்கிறோம். தேவைப்பட்டால் இனி மேலும் விவாதிக்கலாம்..
அண்ணே,
ReplyDeleteபுது டெம்ப்ளேட் நல்லாருக்கு.!
'வாலுக்கு'பிரத்யேகமான பதிவு என்றாலும், சில விஷயங்கள் பொதுவாகச் சொல்லவேண்டித்தான் இருக்கிறது!
ReplyDeleteயானைக்கு மதம் பிடிக்கும்! ரொம்ப சரி, அதை விட மனிதனுக்கு 'மதம்' பிடித்துப்போய் விடும் நிலை இருக்கிறதே, அது அதைவிட மோசமானது!
அதைக் கண்டிக்கிறோம் என்று உண்மையிலேயே சீர்திருத்தங்களில் ஆர்வம் இருந்த சில பேர் வந்தார்கள்!அப்புறம் அது நிறையப் பேருக்குப் பொழுதுபோக்காகி விட்டது!
இங்கே பலரும் பேசுகிற நாத்திகம், பொழுதுபோக்கும் நாத்திகம் தான்!அவர்களுக்கு, விடைகளில், ஏன் எப்படி எதனால் என்று கேட்டுத் தெரிந்துக் கொள்ளும் பொறுமையும் இல்லை!
அதனால், யானைக்கு மதம் பிடிக்கும்! அப்புறம் வாலுக்கு என்ன பிடிக்கும் என்றால், 'லொள்ளு' தான்! அதுதான் சரியான விடையாகவும் இருக்கும்.
ஒரு படத்தில் வடிவேலு, உளறிக் கொட்டி விட்டு,"அப்ப நானாத்தான் உளறி மாட்டிக்கிட்டனா?" என்று பரிதாபமாக முகத்தை வைத்துக் கொள்வது போல, பொழுதுபோக்கு நாத்திகம் பேசுகிறவர்களுக்கு, 'அவல்' எங்கிருந்து கிடைக்கிறதாம்?
மதங்களை உயர்த்திப் பிடிக்கிறேனென்று தாங்கிப்பிடிப்பதாகச் சொல்லிக் கொள்பவர்கள் வார்த்தையில் இருந்தே தான் கிடைக்கிறது!
ஆமாம், எனக்கு ஸ்ரீ அரவிந்த அன்னை சொல்லும் இந்த வரிகள் தான் நினைவுக்கு வருகிறது!
"The defenders of the truth are often worse than the enemies of the truth."
அண்ணே,
ReplyDeleteபுது டெம்ப்ளேட் நல்லாருக்கு.!
//.. ♠ ராஜு ♠ said...
ReplyDeleteஅண்ணே,
புது டெம்ப்ளேட் நல்லாருக்கு.! ..//
ஆமாங்க.. கண்ணா உறுத்தாம படிக்கறதுக்கு(பாக்குறதுக்கு) நல்லாத்தான் இருக்கு..
1.மதம், கடவுள் பற்றிய சந்தேகங்களையும், கருத்துகளையும் என் வலையில் தான் எழுதுவேன் என்று எந்த கட்டாயமும் இல்லை! நாமே பல இடங்களில் அனல் பறக்க உரையாடியிருக்கிறோம்!, ஆயினும் தனி மடலிலோ, அலைபேசியிலோ அழைக்காமல் பதிவக இடுவதற்கு காரணம் மதம் மற்றும் அதன் நம்பிக்கைகள் பன்முகதன்மை கொண்டது, நான் கேய்கும் கேள்வியில் பல கிளை கேள்விகள் பலருக்கு வரலாம்! நீங்களே கேள்விப்படாத புது கேள்வி ஒன்று உருவாகலாம்!, மதம் ஏன்? கடவுள் ஏன்? பயமுறுத்துதல் ஏன்? இல்லாஅத ஒன்றை இருக்கு என்று ஏன் சொல்கிறார்கள் என தோன்றலாம்!, அல்லது எனக்கே கடவுள் நம்பிக்கை வரலாம்!
ReplyDelete2.கடவுள் நம்பிக்கையை பற்றி வாதிடும் போது ஒரே பதிலில் முடித்து விடலாம்! அது
”நீ இல்லையென்று நிருபித்தாலும் நான் நம்பிகிட்டே தான் இருப்பேன்!” என்று, அதுக்கு மேல யாராவது பேசுவாங்க!
3.இஸ்லாத்தில் பிரிவினை என்று நீங்கள் பலமுறை சொன்னாலும் அது தொழுகையின் போது என்று மறக்காமல் ஒருமுறை குறிபிட்டு விடுகிறீர்கள்! இது கிருஸ்துவத்திலும் உண்டு! பாலாப்போன இந்து மதத்தில் தான், தலித் கோவிலுக்குள் வரக்கூடாது என்று கொடி பிடிப்பார்கள், அதனால் தான் தலித்துகளை இஸ்லாமிர்களா மாறச்சொன்னார் பெரியார், ஆனால் பிரிவினை இல்லை என்பது ஓவர்!
ஷியா, சன்னி வழிபாட்டு முறைகளிலேயே வேறுபாடு உண்டு!
அங்கே பெண்களை நடத்தும் முறையிலும் வித்தியாசம் உண்டு!
இல்லை எல்லாம் ஒரே மாதிரி தான் இருக்குன்னு சொன்னால்!
என்னை படி, தெரிஞ்சிக்கோன்னு சொல்வதை நிறுத்திவிட்டு நீங்கள் தான் முழுதாக தெரிந்து கொண்டு வரவேண்டும்!
(இன்னைக்கு பட்டறை இங்கே)
//அதனால், யானைக்கு மதம் பிடிக்கும்! அப்புறம் வாலுக்கு என்ன பிடிக்கும் என்றால், 'லொள்ளு' தான்! அதுதான் சரியான விடையாகவும் இருக்கும்.//
ReplyDeleteஆமா கிருஷ்ணமூர்த்தி அண்ணே, யானைக்கு மதம் பிடிக்கிறதைவிட வாலுக்கு 'லொள்ளு' ரொம்ப பிடிக்கும்.
//இஸ்லாத்தில் பிரிவினை என்று நீங்கள் பலமுறை சொன்னாலும் அது தொழுகையின் போது என்று மறக்காமல் ஒருமுறை குறிபிட்டு விடுகிறீர்கள்!//
ReplyDeleteவால், கடவுள் நம்பிக்கையாளனுக்கான அடிப்படை உரிமை, கடவுளை தன் விருப்பப்படி, வணங்குவது. அதற்கு யாரும் எங்கும் குறுக்கீடாக இருக்கக்கூடாது, இஸ்லாத்தில் யாரும் குறுக்கீடாக இருப்பதில்லை, என்பதைதான் சொல்கிறேன்.
//
ஷியா, சன்னி வழிபாட்டு முறைகளிலேயே வேறுபாடு உண்டு!//
சொல்லிட்டேனே வால், கடவுள் வரையருத்த வழிகளில், தன் விருப்பப்படி கடவுளை வழிபட யாரும் குறுக்கிடுவதில்லை.
உங்களிடம் ஏற்கனவே பலமுறை கேட்டிருக்கிறேன், இஸ்லாத்தில் எங்காவது பரிவினை, தீண்டாமை இருக்கிறதென்று ஆதாரத்தோடு சொல்லுங்கள். விவாதிப்போம்.
//கடவுள் நம்பிக்கையாளனுக்கான அடிப்படை உரிமை, கடவுளை தன் விருப்பப்படி, வணங்குவது. அதற்கு யாரும் எங்கும் குறுக்கீடாக இருக்கக்கூடாது, இஸ்லாத்தில் யாரும் குறுக்கீடாக இருப்பதில்லை, என்பதைதான் சொல்கிறேன்//
ReplyDeleteஇஸ்லாமியன் நினைத்தால் வீட்டிலிருந்தே தொழுது கொள்ளலாம் சரியா! இருப்பினும் தொழுகைக்கு தனியாக இடம் என்பது பிரிவினை இல்லை என்று போஸ்டர் அடிக்க!, நீங்கள் விரும்பும் கடவுளை வணங்க நேரம் வகுப்பதே ஒரு குறுக்கிடூ தானே!, என்னை இந்த நேரத்தில் தான் தொழ வேண்டும் என்று எந்த கடவுள் சொல்ல முடியும், மத்த நேரத்தில் வேறு எங்காவது அலுவலகத்தில் பணி புரிகிறாரா கடவுள்!?
**
//இஸ்லாத்தில் எங்காவது பரிவினை, தீண்டாமை இருக்கிறதென்று ஆதாரத்தோடு சொல்லுங்கள். விவாதிப்போம். //
பிரிவினை என்பது வேறு தீண்டாமை என்பது வேறு!ஒருவன் இஸ்லாம் ஆகிவிட்டாலே அவனுக்குள் இருக்கும் மத்த அடையாளங்கள் நியாயப்படி அழிந்து விட வேண்டும், பிறகு ஏன் ஷியா, சன்னி.
கடவுளின் இடது பக்கத்தில் ஒருவரும், வலது பக்கத்தில் ஒருவரும் பகிர்ந்து கொண்டீர்களா?
இருவருக்கும் உள்ள பிரச்சனையே தான் தான் உண்மையான இஸ்லாமியன் என்று!
கடவுள் வந்து சொல்ல வேண்டியது தானே. நாம் சொன்னது இது இல்லையடா கூமுட்டையென்று!
இருவருமே தன்னளவில் சரி எங்கிறார்கள், காரணம் புரிதல், ஆனால் இதற்காக பல படுகொலைகள் கூட நடந்திருக்கிறது, எனக்காக தானே சண்டை போட்டுகிட்டிங்கன்னு கடவுள் மன்னிச்சு சொர்க்கத்தில் சரக்கு பார்ட்டி வைப்பாரா அனைவருக்கும்!?,
இல்லை ரெண்டு பேரும் போங்கடா நரகத்துக்கு என்பாரா!?
//அங்கே பெண்களை நடத்தும் முறையிலும் வித்தியாசம் உண்டு!//
ReplyDeleteஇது கற்பனை,
இஸ்லாத்தில் எந்த பெண்னையும் தீயில் இறங்கச்சொல்வது இல்லை. சதி, உடன்கட்டை ஏறச்சொல்லியதுமில்லை.
திருமணம் செய்யாமல் இருக்கச்சொல்வது இல்லை.
மறு விவாகத்தை மறுப்பதுமில்லை.
விவாக ரத்து உரிமை ஆணுக்கு இருப்பது போல பெண்ணுக்கும் உண்டு.
சொத்தில் பங்குண்டு.
'நீ உண்ணும் உணவில் முதல் கவளத்தை மனைவிக்கு ஊட்டி' விடச்சொல்கிறது, இஸ்லாம்.
அதே கேள்விதான், நீங்களே சொல்லுங்க, 'இஸ்லாம், ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒழுக்கத்தை போதிப்பதை தவிர' என்ன வித்தியாசத்தை பார்த்தீர்கள்?
//அதே கேள்விதான், நீங்களே சொல்லுங்க, 'இஸ்லாம், ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒழுக்கத்தை போதிப்பதை தவிர' என்ன வித்தியாசத்தை பார்த்தீர்கள்?//
ReplyDeleteமுதல்ல ஒழுக்கத்தை ரெண்டு பேருக்கும் ஒரே மாதிரி போதிக்க சொல்லுங்க, மனைவி உயிருடன் இருக்கும் போது கணவன் இன்னோரு திருமணம் செய்து கொள்ளலாம், மனைவி செய்து கொள்ளமுடியுமா?
குறைந்த ஆடைகளுடன் பெண்களை பார்த்தால் ஆணுக்கு சபலம் வரும், அதே போல் ஆண்களை பார்த்தால் பெண்கலுக்கு சபலம் வராதா?
பார்ப்பது கண்ணால் தானே!
ஆண்களும் முழுக்க மூடிக்கொள்ளலாமே!
ஷியா, சன்னி ரெண்டு பிரிவுகளில் எதோ ஒரு பிரிவில் பெண்களை சமமாக தொழுகைக்கு அனுமதிப்பதாக படித்தேன்!
லிங்க் தேடித்தருகிறேன்!
//இஸ்லாமியன் நினைத்தால் வீட்டிலிருந்தே தொழுது கொள்ளலாம் சரியா! இருப்பினும் தொழுகைக்கு தனியாக இடம் என்பது பிரிவினை இல்லை என்று போஸ்டர் அடிக்க!,//
ReplyDeleteவிரும்பிய இடத்தில் தொழ அனுமதி உண்டு.
என்ன வால் சொல்றீங்க, கடவுளை வணங்கு அமைதியான, வசதியான வழிபாட்டுத்தளம் ஒன்று இருப்பது எப்படி பிரிவினை ஆகும்?
//என்னை இந்த நேரத்தில் தான் தொழ வேண்டும் என்று எந்த கடவுள் சொல்ல முடியும், மத்த நேரத்தில் வேறு எங்காவது அலுவலகத்தில் பணி புரிகிறாரா கடவுள்!?//
அடிப்படை விபரமற்ற கேள்வி, எல்லா நேரமும் உலகில் எங்காவது தொழுகையும், அதற்கான அழைப்பும் நடந்து கொண்டே இருக்கும். நான் குறிப்பிட்ட நேரத்தில் தொழ முடியாது போனால், பறகு செய்து கொள்ளலாம்.
//ஒருவன் இஸ்லாம் ஆகிவிட்டாலே அவனுக்குள் இருக்கும் மத்த அடையாளங்கள் நியாயப்படி அழிந்து விட வேண்டும்,//
ReplyDeleteஅழிவதில்லை என்று சொல்கிறீர்களா? ஆதாரம் தர முடியுமா?
//கடவுளை வணங்கு அமைதியான, வசதியான வழிபாட்டுத்தளம் ஒன்று இருப்பது எப்படி பிரிவினை ஆகும்? //
ReplyDeleteஇது பிரிவினைன்னு நான் சொன்னேனா!?
அது ஒரு மாதிரியான ரூல்ஸ்!
அமைதியான இடம் உங்க வீட்டைத்தவிர நிறைய பார்த்துருக்கிங்களா?
**
//எல்லா நேரமும் உலகில் எங்காவது தொழுகையும், அதற்கான அழைப்பும் நடந்து கொண்டே இருக்கும். //
இந்தியாவில் பகல் என்றால் அமெரிக்காவில் இரவு என்று எனக்கும் தெரியும், இந்த நேரத்தில் தான் தொழுகை பண்ணனும்னு ஏன் விதிமுறை, கடவுள் பகலில் இந்தியாவிலும், இரவில் அமெரிக்காவிலும் டூட்டி பார்ப்பாரா?
//பார்ப்பது கண்ணால் தானே!
ReplyDeleteஆண்களும் முழுக்க மூடிக்கொள்ளலாமே!//
ஆண்களை திறந்து போடச்சொல்கிறதா? யாரும் திறந்து போட்டிருக்கிறார்களா?
//ஷியா, சன்னி ரெண்டு பிரிவுகளில் எதோ ஒரு பிரிவில் பெண்களை சமமாக தொழுகைக்கு அனுமதிப்பதாக படித்தேன்!
லிங்க் தேடித்தருகிறேன்!//
இஸ்லாத்தில் பெண்கள் பள்ளிவாசலுக்கு வந்து தொழ அனுமதி உண்டு. என் வீட்டு பெண்கள் செல்கிறார்கள். விருப்பமிருக்கும் பலரும் வருகிறார்கள்.
//அமைதியான இடம் உங்க வீட்டைத்தவிர நிறைய பார்த்துருக்கிங்களா//
ReplyDeleteவீட்டிலும் தொழ அனுமதி உண்டுன்னு சொல்லிட்டேனே, சுய விருப்பத்தில் எங்கும் வழிபடலாம். எனக்கு பள்ளிவாசலுக்கு சென்று வழிபடுவதே விருப்பமாக இருக்கிறது, செல்கிறேன்.
//அழிவதில்லை என்று சொல்கிறீர்களா? ஆதாரம் தர முடியுமா? //
ReplyDeleteஇதனுடனே கேள்வியும் உள்ளது!
அரேபியாவில் இருக்கும் இஸ்லாமியன், சூடானில் இருக்கும் இஸ்லாமியனை சமமாக தான் நினைப்பான் என்று நீங்கள் நினைத்து கொள்ளலாம்,
எங்கேயாவது அவர்களுக்குள் சம்பந்தம் நடந்ததாக ஆதாரம் உண்டா?
//ஆண்களை திறந்து போடச்சொல்கிறதா? யாரும் திறந்து போட்டிருக்கிறார்களா?//
ReplyDeleteபெண்களுக்கும் இது பொருந்துமே!
யார் அப்படி திறந்து போட்டிருக்கிறார்கள்?
//இந்த நேரத்தில் தான் தொழுகை பண்ணனும்னு ஏன் விதிமுறை,//
ReplyDeleteசரி, 24 மணி நேரமும் தொழுகை பண்ணலாம் என்றால், நீங்கள் தயாரா?
இதை முழுதாக படியுங்கள்
ReplyDeleteதண்டிக்கும் உரிமை கடவுளுக்கு மட்டுமா?
இல்லை நீங்களே கடவுளாவீர்களா?
//பெண்களுக்கும் இது பொருந்துமே!
ReplyDeleteயார் அப்படி திறந்து போட்டிருக்கிறார்கள்?//
இஸ்லாமிய பெண்கள் திறந்து போட்டிருப்பதாக யாரும் சொன்னார்களா?
பர்தாவை சொல்கிறீர்கள் என்றால், இஸ்லாமிய பெண்களே அதற்கு விளக்கமளித்த என் முந்தைய இடுகையில் பின்னூட்டம் பார்த்திருப்பீர்கள். அணியும் அவர்களுக்கே அது தொந்தரவில்லை. நானோ நீங்களோ அதை ஏன் கேட்கவேண்டும்.
யாராவது நம்மிடம் வந்து புகார் செய்தால் பின்பு கேட்கலாம்.
//எனக்கு பள்ளிவாசலுக்கு சென்று வழிபடுவதே விருப்பமாக இருக்கிறது, செல்கிறேன். //
ReplyDeleteமழுப்பல், சொதப்பல்னு சொல்வாங்கல்ல அந்த மாதிரி பதில்!
இஸ்லாமியர்கள் எத்தனை பேர் வீடில்லாம இருக்காங்க, தொழுக இடமில்லைன பள்ளிவாசல் போலாம்!
பின் எதுக்கு?
//சரி, 24 மணி நேரமும் தொழுகை பண்ணலாம் என்றால், நீங்கள் தயாரா? //
ReplyDeleteகடவுளை வணங்க எனக்கு யார் நேரம் தீர்மானிப்பது?
அவருக்கும் கடவுளுக்கும் என்ன சமானம்!
அவர் கடவுளுக்கு பர்சனல் செக்கரட்டரியா?
//தண்டிக்கும் உரிமை கடவுளுக்கு மட்டுமா?
ReplyDeleteஇல்லை நீங்களே கடவுளாவீர்களா?//
வால், தீவிரவாத / மதவாத சித்தாந்தங்களுடன் எந்த கடவுள் நம்பிக்கையாளனின் மார்கத்தையும் போட்டு குழப்பாதீர்கள்.
அதை படித்துக்கொண்டிருக்கிறேன்.
//அணியும் அவர்களுக்கே அது தொந்தரவில்லை. நானோ நீங்களோ அதை ஏன் கேட்கவேண்டும்.
ReplyDeleteயாராவது நம்மிடம் வந்து புகார் செய்தால் பின்பு கேட்கலாம். //
அருமையான பதில் நண்பரே!
இஸ்லாத்தில் பிரிவினை கிடையாது, ஆணுக்கும் பெண்ணுக்கும் சமத்துவம் என்று சொல்லிவிட்டு அவர்களுக்கே பிரசனையில்லை என்கிறீர்கள்!
உண்மையை சொல்லுங்கள் குரானில் சொல்வது போல் அனைத்தையும் ஆண்கள் கடைபிடிக்கீர்களா?
நீங்கள் நின்று கொண்டு யூரின் போகக்கூடாதாமே!?
//இஸ்லாமியர்கள் எத்தனை பேர் வீடில்லாம இருக்காங்க, தொழுக இடமில்லைன பள்ளிவாசல் போலாம்!
ReplyDeleteபின் எதுக்கு?//
அப்ப.. இறை வழிபாட்டிற்கு என்று ஒரு இடம் இருப்பதுதான் உங்களுக்கு பிடிக்கவில்லை?
சமாதானத்தை முன்னிருத்தும் ஒரு இடம், தீண்டாமையை கழையும் ஒரு இடம், சகோதரத்துவத்தை சொல்லும் ஒரு இடம் இருப்பதால் என்ன தவறு?
//இஸ்லாத்தில் பிரிவினை கிடையாது, ஆணுக்கும் பெண்ணுக்கும் சமத்துவம் என்று சொல்லிவிட்டு அவர்களுக்கே பிரசனையில்லை என்கிறீர்கள்!//
ReplyDeleteவால், உடை என்பது ஆண்களுக்கும் பெண்களுக்கும் வேறுபடும். ஏன் என்றால், பெண்களின் உடல் அமைப்பிற்கு ஏற்றவாறு அது வடிவமைக்கப்படுகிறது. பெண்களின் உடையை ஆணகளும், ஆண்களின் உடையை பெண்களும் அணிந்து கொள்வது தான் சமத்துவம் என்று நீங்கள் சொல்கிறீர்களா?
//தீவிரவாத / மதவாத சித்தாந்தங்களுடன் எந்த கடவுள் நம்பிக்கையாளனின் மார்கத்தையும் போட்டு குழப்பாதீர்கள்.//
ReplyDeleteஏற்கனவே சொன்னேன்!
அவனை கேட்டால் நான் தான் உண்மையான இஸ்லாமியன் என்கிறான்!
நீங்களும் அதையே தான் சொல்கிறீர்கள்!
ஆனால் அவனை தீவிரவாதி என்கிறீர்கள்!
அவன் சொல்றான்!
நானே உண்மையான இஸ்லாமியன்!
அல்லாவை கடவுளாக ஏற்காதவர்கள் அனைவரும் இறை மறுப்பாளர்கள், அவர்களுடன் சமரசம் செய்து கொள்பவர்களுக்கும் இறுதிநாளில் இடமில்லை என்று!
இறுதிநாளை பற்றி குரானில் என்ன சொல்லி இருக்கிறது நண்பரே!?
:)
//உண்மையை சொல்லுங்கள் குரானில் சொல்வது போல் அனைத்தையும் ஆண்கள் கடைபிடிக்கீர்களா?//
ReplyDeleteஅனைத்து மனிதர்களும், நல்வழியில் நடப்பதற்கு தன்னால் முடிந்த முயற்சி செய்கிறார்கள், இதில் ஆண் என்ன பெண் என்ன.
இது அனைத்து கடவுள் நம்பிக்கையாளருக்கும் பொருந்தும்
//
ReplyDeleteஇறுதிநாளை பற்றி குரானில் என்ன சொல்லி இருக்கிறது நண்பரே!?//
தீர்ப்புநாள் என்ற எனது முந்தைய ஒரு இடுகை வாசியுங்கள்.
வால், ஆஃபிஸ்க்கு டைம் ஆச்சு.... அங்கு போயி லாகின் பண்றேன்.
ReplyDelete//இறை வழிபாட்டிற்கு என்று ஒரு இடம் இருப்பதுதான் உங்களுக்கு பிடிக்கவில்லை?
ReplyDeleteசமாதானத்தை முன்னிருத்தும் ஒரு இடம், தீண்டாமையை கழையும் ஒரு இடம், சகோதரத்துவத்தை சொல்லும் ஒரு இடம் இருப்பதால் என்ன தவறு?//
இது இருப்பதால் தானே இஸ்லாமில் பிரிவினை இல்லைன்னு தப்பிச்சிகிறிங்க!
தொழுகைக்கு பின்னும் இருக்கான்னு கேட்டா மழுப்புறிங்க?
ஷியா,சன்னி பத்தி கேட்டா அது அவுங்கவுங்க இஷ்டம்கிறிங்க!
எல்லா இடத்திலும் சமமாக இருக்கா?
தொழுகை நடக்கும் பள்ளிவாசல் முன் இருக்கும் பிச்சைகாரர்கள் இஸ்லாமியரா? மற்ற மதத்தை சார்ந்தவர்களா?
//உடை என்பது ஆண்களுக்கும் பெண்களுக்கும் வேறுபடும். ஏன் என்றால், பெண்களின் உடல் அமைப்பிற்கு ஏற்றவாறு அது வடிவமைக்கப்படுகிறது.//
ReplyDeleteஉண்மை தான், ஆனால் ஆண்களுக்காக உடையை ஆண்கள் வடிவமைத்து கொள்கிறார்கள், பெண்களுக்கான உடையையும் ஆண்களே வடிவமைத்து கொள்கிறார்கள்!
ஏனென்றால் பெண்ணுக்கு அவ்வளவு அறிவு பத்தாது இல்லையா!?
//அனைத்து மனிதர்களும், நல்வழியில் நடப்பதற்கு தன்னால் முடிந்த முயற்சி செய்கிறார்கள், இதில் ஆண் என்ன பெண் என்ன.
ReplyDeleteஇது அனைத்து கடவுள் நம்பிக்கையாளருக்கும் பொருந்தும் //
செய்கின்ற குற்றங்களுகேற்ப கடவுள் பொற்காசுகளை பிடித்து கொண்டு மீதம் கொடுப்பாரோ!?
நாய் தேங்காய் முடியை விட்டாலும் விட்டுரும் ..... அனா இந்த மனுஷ பசங்க மதத்தை விட மாட்டங்க போல் இருக்கே
ReplyDelete"அனைத்து மனிதர்களும், நல்வழியில் நடப்பதற்கு தன்னால் முடிந்த முயற்சி செய்கிறார்கள், இதில் ஆண் என்ன பெண் என்ன."
ReplyDeleteஅப்ப மூன்றாம் பிரிவு மனிதர்களை மதம் கண்டு கொள்ளாத
"யானைக்கு மதம் பிடிக்கும், வாலுக்கு?"
ReplyDeleteபீர் பிடிக்கும் ... வாங்கி தாங்க
"நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின் கொட்பின்றி
ReplyDeleteஒல்லும்வாய் ஊன்றும் நிலை. – குறள்."
உங்க போதைக்கு வள்ளுவர் உறுகை யா
adira adira adira
மனவேறுபாடு கொள்ளாமல் தன்னால் இயலும் வழிகளிலெல்லாம் துணைநின்று நண்பனைத் தாங்குவது தான் நட்பின் சிறப்பாகும். – உரை.
ReplyDeleteஇதை தான் அவரும் சொல்லுகிறார்
//
ReplyDelete"யானைக்கு மதம் பிடிக்கும், வாலுக்கு?"
பீர் பிடிக்கும் ... வாங்கி தாங்க//
இங்க தாய்யா நிக்கிறான் டம்பீ!
"என் நிலையை அவருக்குத் தெளிவுபடுத்துவதால் எங்கள் நட்பு பலப்படும் என்பதாலேயே இந்த இடுகை"
ReplyDeleteஅப்ப நான் தான் உறுகையா
"இஸ்லாம் மற்றும் முஸ்லீம்கள் குறித்து இன்னும் தெரிந்து கொள்ளவேண்டியிருக்கிறது. குறைந்தபட்சம் விமர்சிக்கும் தகுதிக்காகவாவது படித்து தெரிந்துகொள்ளுங்கள், பின்பு விவாதிக்கலாம்" என்று நான் சொன்னதற்கு... "
ReplyDeleteநான் விவாதிக்க வில்லை ..... கடவுளே இல்லை ....
"அதேபோலத்தான் ஒருவர் தாய்மொழிப்பற்று கொள்வதும் இயற்கை, கடமை. "
ReplyDeleteஎன் தாய் மொழி தமிழ் இல்லை .... அனா எனக்கு தமிழ்பற்று நிறையா இருக்கு ப்பா
நான் கடவுளை நம்பவில்லை ... முதலில் எனக்கு கடவுளை பற்றி சொல்லுங்க .. மத பிரிவுகள் பற்றி பிறகு பார்த்து கொள்ளலாம்
ReplyDeleteநீங்க உங்கள் நம்பிக்கையை பற்றி சொல்லுங்க .... யாரோ எழுதி வைத்ததை நம்பி எந்த மதமும் வளர்ந்தாக சரித்திரம் இல்லை.
ReplyDeleteகுரான் எழுதியவருக்கு அரபி மட்டுமே தெரிந்து இருக்கும் , அதான் குரானும் அரபியில் உள்ளது .
ReplyDeleteஒரு மதம் எந்த மொழியில் பரப்ப படுகிறதோ ..... அந்த மொழி தான் அந்த மதத்திற்காக நிலைத்து இருக்கும்
//முதலில் எனக்கு கடவுளை பற்றி சொல்லுங்க .. மத பிரிவுகள் பற்றி பிறகு பார்த்து கொள்ளலாம் //
ReplyDeleteஇந்த உலகமே இருட்டா இருந்துச்சாம்!
வெளிச்சமே இல்லையாம்!
கடவுள்னு ஒருத்தர் தனியா உட்காந்துகிட்டு அவருக்கு அவரே பேன் பார்த்துகிட்டு இருந்தாராம்!
திடிர்னு ஒருநாள் நமக்கு எதாவது சக்தி இருக்கான்னு செக் பண்ண
டிஷ்னு ஒரு சவுண்டு விட பூமி வந்துச்சாம்!
ஆனா பூமி வந்துச்சா வரலையான்னு கடவுளுக்கு தெரியல , அங்க தான் இருட்டா இருக்கே, அதனால சூரியன்னு ஒண்ணு படைச்சாராம்!,
அப்புறம் அப்படியே ரொம்ப நாள் போச்சாம்! இது ரெண்டையும் வச்சு கடவுள் கோலி குண்டு விளையாடிக்கு இருந்தாராம், இன்னோரு குண்டு இருந்தா நல்லாயிருக்கும்னு நிலாவை படைச்சாராம்!
(கடவுளுக்கு எத்தனை குண்டுன்னு கேட்பவர்கள் குண்டுகள் காணாமல் போகக்கடவது)
இந்த கதை கிறிஸ்தவ, யூத நம்பிக்கைக்கும் பொருந்தும்!
(தொடரும்)
யாராவது மீதி கதையையும் கேட்டா மட்டும்!
"வால்பையன். வால், அரபியே முஸ்லீம்களின் பொது மொழியாக இருக்கிறது"
ReplyDeleteஅட பாவமே ...... மதத்தை பரப்பும் பொது .... கிறிஸ்துவர்களை போல் ஒவ்வொரு மொழி கற்று பரப்ப சோம்பேறி தனமாய் இருந்திர்க்கலாம் ..... அதனால் எல்லோரையும் கட்டாய படுத்தி மொழியை கற்க வைத்தார்கள் ...
வேண்டுமானால் மொகலாய சாம்ராஜியம் பற்றி படித்து பாருங்க
இன்னைக்கு வெள்ளிகிழமை, நாளையும் அத மறுநாளும் எனக்கு விடுமுறை.
ReplyDeleteநீங்கள் விளக்கமெல்லாம் சொல்லி வையுங்க வந்து கும்முறேன்!
“அரபி கற்றவர், வயதில் மூத்தவர்"
ReplyDeleteநீங்கள் சொல்வது எனக்கு புரியவில்லை ... அரபி கற்றதினால் வயதில் மூத்தவரான ????
இல்லை பெருசு எல்லாம் அரபி கற்று கொள்ள வேண்டுமா
கிறிஸ்து , ஹிந்து மதங்களை பற்றி தெரிந்து கொண்டால் பேசிய காசு பார்க்கலாம் ....
ReplyDelete//தொழுகை நடக்கும் பள்ளிவாசல் முன் இருக்கும் பிச்சைகாரர்கள் இஸ்லாமியரா? மற்ற மதத்தை சார்ந்தவர்களா? //
ReplyDeleteமனிதர்களின் ஏழ்மைக்கும் அவர்களது கடவுள் கொள்கைதான் காரணம் என்கிறீர்களா?
//மனிதர்களின் ஏழ்மைக்கும் அவர்களது கடவுள் கொள்கைதான் காரணம் என்கிறீர்களா?//
ReplyDeleteபின்ன நானா காரணம்!
ஊழ்வினையில் உங்களுக்கு நம்பிக்கை உண்டா!?
//தொழுகைக்கு பின்னும் இருக்கான்னு கேட்டா மழுப்புறிங்க?//
ReplyDeleteயாரு மழுப்புனா? இல்லைன்னு தெளிவாத்தான சொல்றேன்.
இருக்கிறமாதிரி உங்களுக்கு தெரிஞ்சா, சொல்லுங்கன்னுதான திரும்ப திரும்ப சொல்றேன்.
//ஷியா,சன்னி பத்தி கேட்டா அது அவுங்கவுங்க இஷ்டம்கிறிங்க!//
ReplyDeleteஇதைப்பற்றி தெளிவா ஏற்கனவே விளக்கமளித்துவிட்டேன்.
//உண்மை தான், ஆனால் ஆண்களுக்காக உடையை ஆண்கள் வடிவமைத்து கொள்கிறார்கள், பெண்களுக்கான உடையையும் ஆண்களே வடிவமைத்து கொள்கிறார்கள்!//
ReplyDeleteபெண்கள் ஆடையை தேர்ந்தெடுக்கும் உரிமை, அவர்களிடமே உள்ளது. விரும்பிய ஆடையை தேர்ந்தெடுத்து அணியும் உரிமை.
என் மனைவி, அவளுக்கான ஆடையை தெர்ந்தெடுப்பதோடல்லாமல், எனக்கான ஆடையையும் அவளே தேர்ந்தெடுத்து தருகிறாள்.
//செய்கின்ற குற்றங்களுகேற்ப கடவுள் பொற்காசுகளை பிடித்து கொண்டு மீதம் கொடுப்பாரோ!? //
ReplyDeleteவிதண்டாவாதம்
//இருக்கிறமாதிரி உங்களுக்கு தெரிஞ்சா, சொல்லுங்கன்னுதான திரும்ப திரும்ப சொல்றேன்.//
ReplyDeleteஇவ்ளோ நேரம் நான் கேட்ட கேள்விகளில் அது உங்களுக்கு தெரியலையா?
////ஷியா,சன்னி பத்தி கேட்டா அது அவுங்கவுங்க இஷ்டம்கிறிங்க!//
ReplyDeleteஇதைப்பற்றி தெளிவா ஏற்கனவே விளக்கமளித்துவிட்டேன். //
அது தெளிவான விளக்கமா எனக்கு படல!
ஏன் ஷியா,சன்னி!
தெரிஞ்சி இது தெரியாம எத்தனை இருக்குதோ!?
//என் மனைவி, அவளுக்கான ஆடையை தெர்ந்தெடுப்பதோடல்லாமல், எனக்கான ஆடையையும் அவளே தேர்ந்தெடுத்து தருகிறாள்.//
ReplyDeleteநீங்கள் இஸ்லாத்தின் ஐகான் அல்ல!
விதிவிலக்குகள் எல்லா இடங்களிலும் உண்டு!
நான் கேட்பது பொதுவாக!
//
ReplyDelete"யானைக்கு மதம் பிடிக்கும், வாலுக்கு?"
பீர் பிடிக்கும் ... வாங்கி தாங்க//
இங்க தாய்யா நிக்கிறான் டம்பீ! //
'சாராயம் குடிப்பது உடல் நடத்திற்கு கேடு', 'குடி குடியை கெடுக்கும்' என்று ஊர் முழுக்க எழுதிவைத்தும்,
சாராயம் குடிப்பதால், உடல் நலத்திற்கு நல்லது என்று யாருமே சொல்லாத போதும்,
தவறு என்று தெரிந்திருந்தும்,
உங்களால் குடியை விட முடியவில்லை.
நான் கடவுள் நம்பிக்கை கொண்டிருப்பதால் மனிதனாக இருக்கிறேன், இருக்கிறோம் என்று கடவுள் நம்பிக்கையாளர்கள் அனைவரும் சொல்கிறோம். அவ்வளவுதான்.
////செய்கின்ற குற்றங்களுகேற்ப கடவுள் பொற்காசுகளை பிடித்து கொண்டு மீதம் கொடுப்பாரோ!? //
ReplyDeleteவிதண்டாவாதம் //
உங்கள் மதத்துக்குள் நீங்கள் சமரசம் செய்து கொள்கிறீர்கள்!
இயேசுவை வணங்குபவனை ஈஸா தூதர் மட்டுமே என்கிறீர்கள், கல்லை கும்பிடுபவனை அது சாத்தான் என்கிறீர்கள்(கிருஸ்துவத்தில் சொல்கிறார்கள்)
இது மட்டும் நியாயமா?
//'சாராயம் குடிப்பது உடல் நடத்திற்கு கேடு', 'குடி குடியை கெடுக்கும்' என்று ஊர் முழுக்க எழுதிவைத்தும், //
ReplyDeleteசமாக் என்றால் என்ன?
அரேபியாவில் மது தயாரிப்பதற்கான வழிமுறைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது!
//இவ்ளோ நேரம் நான் கேட்ட கேள்விகளில் அது உங்களுக்கு தெரியலையா?//
ReplyDelete'இவனை' ஏன் பள்ளிவாசலுக்குள் அனுமதிப்பதில்லை?
அவன் ஏன் செருப்பு அணிய கூடாது என்று சொல்கிறீர்கள்?
இவனுக்கு மட்டும் ஏன் தனிக்குவளை?
இவனுக்கு ஏன் ரேஷன் அரிசி தருவதில்லை?
என்று குறிப்பிட்டு கேளுங்கள்... சும்மா அடிச்சுவிடக்கூடாது.
/சாராயம் குடிப்பதால், உடல் நலத்திற்கு நல்லது என்று யாருமே சொல்லாத போதும்,//
ReplyDeleteதிராட்சை ரசத்தை நீங்கள் உடனே குடிக்கிறீர்கள், நான் ஊற வைத்து குடிக்கிறேன்!
//அரேபியாவில் மது தயாரிப்பதற்கான வழிமுறைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது!//
ReplyDeleteமலுப்பல...
அரபிக்காரன் செய்தால் அது முஸ்லீம் செய்ததாகிவிடுமா? லெபனானில் என்ன மொழி பேசுவார்கள் என்று தெரியுமா? அரபு நாடுகள் அனைத்தும் முஸ்லீம் நாடுகள் என்று நினைத்துவிட்டீர்களா?
//'இவனை' ஏன் பள்ளிவாசலுக்குள் அனுமதிப்பதில்லை?
ReplyDeleteஅவன் ஏன் செருப்பு அணிய கூடாது என்று சொல்கிறீர்கள்?
இவனுக்கு மட்டும் ஏன் தனிக்குவளை?
இவனுக்கு ஏன் ரேஷன் அரிசி தருவதில்லை?
என்று குறிப்பிட்டு கேளுங்கள்... சும்மா அடிச்சுவிடக்கூடாது.//
ஆக! பிரிவினை என்றால் உங்களுக்கு இது மட்டும் தான்!
மற்றதெல்லாம் சும்மா லுலுலாயி அப்படித்தானே!
///சாராயம் குடிப்பதால், உடல் நலத்திற்கு நல்லது என்று யாருமே சொல்லாத போதும்,//
ReplyDeleteதிராட்சை ரசத்தை நீங்கள் உடனே குடிக்கிறீர்கள், நான் ஊற வைத்து குடிக்கிறேன்!//
அண்ணே.... மலுப்பாதீங்க. தவறு என்று தெரிந்தும் செய்கிறேன்னு ஒத்துக்கோங்க...
//ஆக! பிரிவினை என்றால் உங்களுக்கு இது மட்டும் தான்!
ReplyDeleteமற்றதெல்லாம் சும்மா லுலுலாயி அப்படித்தானே!//
இவற்றோடு இன்னபிறவற்றையும் மற்றவர்கள் செய்தாலும், இதுவும் பிரிவினை தானே?
ஏதுனாலும் குறிப்பிட்டு கேளுங்க...
//அண்ணே.... மலுப்பாதீங்க. தவறு என்று தெரிந்தும் செய்கிறேன்னு ஒத்துக்கோங்க... //
ReplyDeleteஇது சரி, இது தவறுன்னு யார் வரையறுப்பது!
தவறென்றால் ஏன் அது உருவாக வேண்டும்! எனக்கு அது உதவாவிட்டால் வேறு எதுக்கு அது உதவும்!?
கடவுள் எதை எதை தவறென்று லிஸ்ட் போட்டு கொடுத்திருக்காரா?
//கல்லை கும்பிடுபவனை அது சாத்தான் என்கிறீர்கள்(கிருஸ்துவத்தில் சொல்கிறார்கள்)//
ReplyDeleteகிருத்துவத்தில் சொல்வதற்கு நான் என்ன செய்ய முடியம்?
//அரபிக்காரன் செய்தால் அது முஸ்லீம் செய்ததாகிவிடுமா? லெபனானில் என்ன மொழி பேசுவார்கள் என்று தெரியுமா? அரபு நாடுகள் அனைத்தும் முஸ்லீம் நாடுகள் என்று நினைத்துவிட்டீர்களா?//
ReplyDeleteசுட்டி கொடுப்பது சலிப்படையும் செயல் என்று நினைப்பவன் நான்!
இதற்குண்டான சுட்டி தருகீறேன்!
சமாக் என்றால் என்ன?
//இது சரி, இது தவறுன்னு யார் வரையறுப்பது!
ReplyDeleteதவறென்றால் ஏன் அது உருவாக வேண்டும்! எனக்கு அது உதவாவிட்டால் வேறு எதுக்கு அது உதவும்!?
கடவுள் எதை எதை தவறென்று லிஸ்ட் போட்டு கொடுத்திருக்காரா?//
சாராய விசயத்தில் கடவுள் இல்லாமலும் மனிதன் பகுத்தறிவால் விளங்கி கொள்ள முடியும் அது தவறென்று.
நீங்கள் சாராயம் குடிப்பதால் வரும் தொந்தரவுகளை, உங்களுக்குத்தெரியாவிட்டால், உங்கள் வீட்டில் கேளுங்கள்.
//இவற்றோடு இன்னபிறவற்றையும் மற்றவர்கள் செய்தாலும், இதுவும் பிரிவினை தானே?
ReplyDeleteஏதுனாலும் குறிப்பிட்டு கேளுங்க... //
திரும்பவும் முதல்லயிருந்தா!?
ஷியான்னா என்ன , சன்னின்னா என்ன?
//சமாக் என்றால் என்ன?//
ReplyDeleteஅது எனக்குத்தெரியாது, கேள்விப்பட்டதும் இல்லை.
உங்களுக்கு தேவை (இந்தப்பெயரை கேட்டதிலிருந்து நாக்கு ஊறுகிறது) என்றால்... எங்காவது தேடி வாங்கிவரட்டுமா? :))
//கல்லை கும்பிடுபவனை அது சாத்தான் என்கிறீர்கள்(கிருஸ்துவத்தில் சொல்கிறார்கள்)//
ReplyDeleteகிருத்துவத்தில் சொல்வதற்கு நான் என்ன செய்ய முடியம்? //
சரி நீங்க அதுக்கு என்ன பேர் வச்சிருக்கிங்க!?
இக்கிலிப்ஸா!?
எதோ ஒன்னு சொல்விங்களே!?
ஆஹா..இன்னிக்கு இவ்வளவு நடந்துர்க்கா ???
ReplyDeleteநேத்து வால் ப்ளாக்ல பட்டறைய போட்ட மாதிரி பீர் பிளாக்ல போட்டிருக்கலாமே !!!
பீர் அண்ணே !!! நீங்க பதிவு போட்றேனு தெரிஞ்சிருந்தா இன்னிக்கு ஆபிஸ் லீவ் போட்ருப்பேனே ???
விவாதங்கள் தொடருமா ??
//
ReplyDeleteஷியான்னா என்ன , சன்னின்னா என்ன?//
திரும்பவும் முதல்லயிருந்தா!?
அது ஆட்சி அரசியல் அரசியல் காரணங்களுக்காக பிளவுபட்ட அமைப்பு. மாறாக, இஸ்லாத்தில் உள்ள சாதிப்பிரிவு அல்ல. இஸ்லாத்தில் சாதி கிடையாது.
இதை இதற்கு முன்னரும் சொல்லியிருக்கிறேன்.
//சாராய விசயத்தில் கடவுள் இல்லாமலும் மனிதன் பகுத்தறிவால் விளங்கி கொள்ள முடியும் அது தவறென்று.
ReplyDeleteநீங்கள் சாராயம் குடிப்பதால் வரும் தொந்தரவுகளை, உங்களுக்குத்தெரியாவிட்டால், உங்கள் வீட்டில் கேளுங்கள். //
என் வீட்டிலும் குடிப்பார்களே!
பக்கத்து வீட்டில் கேட்கட்டுமா?
//விவாதங்கள் தொடருமா ??//
ReplyDeleteவாலுக்கு விளங்கும் வரை தொடரலாம், செய்யது.
//
ReplyDeleteஎன் வீட்டிலும் குடிப்பார்களே!
பக்கத்து வீட்டில் கேட்கட்டுமா?//
:))))))
////
ReplyDeleteஷியான்னா என்ன , சன்னின்னா என்ன?//
திரும்பவும் முதல்லயிருந்தா!?
அது ஆட்சி அரசியல் அரசியல் காரணங்களுக்காக பிளவுபட்ட அமைப்பு. மாறாக, இஸ்லாத்தில் உள்ள சாதிப்பிரிவு அல்ல. இஸ்லாத்தில் சாதி கிடையாது.
இதை இதற்கு முன்னரும் சொல்லியிருக்கிறேன்//
இதற்கு நான் ஒரு பதிவே போட்ருக்கேனே ??
//சமாக் என்றால் என்ன?//
ReplyDeleteஅது எனக்குத்தெரியாது, கேள்விப்பட்டதும் இல்லை.
உங்களுக்கு தேவை (இந்தப்பெயரை கேட்டதிலிருந்து நாக்கு ஊறுகிறது) என்றால்... எங்காவது தேடி வாங்கிவரட்டுமா? :)) //
இஸ்லாமியர்கள் பயன்படுத்தும் பானம் என்று படித்தேன், அதனால் தான் கேட்கிறேன்! வாங்கி தந்தால் அன்போடு குடிப்பேன்!
வேணாம்னு சொன்னா நான் வாலே கிடையாது!
//
ReplyDeleteஅது ஆட்சி அரசியல் அரசியல் காரணங்களுக்காக பிளவுபட்ட அமைப்பு. மாறாக, இஸ்லாத்தில் உள்ள சாதிப்பிரிவு அல்ல. இஸ்லாத்தில் சாதி கிடையாது.
இதை இதற்கு முன்னரும் சொல்லியிருக்கிறேன். //
உங்கள் கடவுள் பால் வித்தியசமில்லாதவர் இல்லையா!
அதாவது அவரை ஆணென்றும், பெண்னென்றும் பிரிக்கக்கூடாது!
ஆக அவர் படைத்த உயிரினங்கள் ஆண், பெண் பாகுபாடு பார்ப்பதே தவறு, பொதுவாக நாம் மனிதர்கள் என்பதே சரி!
இதற்கே இப்படினா,
ஆட்சி அமைப்பு, அரசியல் அமைப்புன்னா எப்படி?
கடவுளைவிட உங்களுக்கு ஆட்சியும், அதிகாரமும் தான் முக்கியமா?
இந்த சண்டைக்கு கடவுள் தான் நடுவரா?
//இஸ்லாமியர்கள் பயன்படுத்தும் பானம் என்று படித்தேன், அதனால் தான் கேட்கிறேன்! வாங்கி தந்தால் அன்போடு குடிப்பேன்!
ReplyDeleteவேணாம்னு சொன்னா நான் வாலே கிடையாது!
//
ஈரோட்டில கிடைக்குமா வால் !!! நானும் ட்ரை பண்ணிப்பாக்குறேனே ??
//இதற்கே இப்படினா,
ReplyDeleteஆட்சி அமைப்பு, அரசியல் அமைப்புன்னா எப்படி?//
வால், அரசியல் காரணங்களுக்காக கருத்து வேறுபாட்டில் பிரிந்து செல்லும் மனிதர்கள் நாம் என்ன செய்துவிட முடியும்?
உங்களுக்கு நல்லவர்களாக தெரியும், பெரும்பான்மை மனிதர்களை ஏன் உதாரணத்திற்கு எடுத்துகொள்வதில்லை?
//அதாவது அவரை ஆணென்றும், பெண்னென்றும் பிரிக்கக்கூடாது!
ReplyDeleteஆக அவர் படைத்த உயிரினங்கள் ஆண், பெண் பாகுபாடு பார்ப்பதே தவறு, பொதுவாக நாம் மனிதர்கள் என்பதே சரி!//
வால் !!
பாலினம் இல்லை என்றவுடன் கடவுளையும் மனிதனாக கற்பனை செய்து விடாதீர்கள்.கடவுள் என்பது
உங்கள் கற்பனைகளுக்கு அப்பாற்பட்ட சக்தி..நீங்கள் விரும்பும் வடிவத்தில் எல்லாம் அடைத்து கொள்ள முடியாது.
ரவிவர்மன் வரைந்த ஓவியத்தை சரஸ்வதி என்றெல்லாம் வணங்கி விட முடியாது.
மேலும், மனிதப் பட்சிகளுக்குள் பாலினம் என்று இல்லாவிட்டால் இந்த உலகை கற்பனை கற்பனை
செய்து கூட பார்க்க முடியாது.
ஹாய் பீர் ....
ReplyDeleteகடவுளே இல்லை என்று சொல்லும் கோஷ்டியில் நான் இருக்கிறேன். அதனால் எனக்கு மத கோட்பாடுகள் பற்றி கவலை இல்லை.
பிறகு இஸ்லாம் பற்றிய உங்கள் கருத்துக்கள் அருமை.
ரமலான் வாழ்த்துக்கள் .....
template konjam makkar pannuthu boss ... sari seiyunga
ReplyDeleteI'm working on it.. thx..
ReplyDelete***
ReplyDeleteஎன் மனைவி, அவளுக்கான ஆடையை தெர்ந்தெடுப்பதோடல்லாமல், எனக்கான ஆடையையும் அவளே தேர்ந்தெடுத்து தருகிறாள்
***
அதுனால தான் ஸ்மார்ட்டா இருக்கீங்க !
தமிழ் மணத்தில் (நான் இணைக்காத) எனது இடுகையை வேற யாராவது இணைக்க முடியுமா?
ReplyDeleteபுதசெவி...:(
//தமிழ் மணத்தில் (நான் இணைக்காத) எனது இடுகையை வேற யாராவது இணைக்க முடியுமா?
ReplyDeleteபுதசெவி...//
தாராளமாக இணைக்கலாம் :) :)
--
எந்த பதிவின் எந்த இடுகையையும் யாரும் இணைக்கலாம்
//நீங்கள் இஸ்லாத்தின் ஐகான் அல்ல!//
ReplyDeleteசரி... நீங்கள் யாரை கடவுள் நம்பிக்கையாளனின் ஐகான் என்று சொல்வீர்கள்?
குண்டு போடுபவன், சூலாயுதம் ஏந்துபவன், பெண்ணை அடிமைப்படுத்துபவன், மறு விவாகத்தை மறுப்பவன், தனிக்குவளை ஏந்துபவன் / அதைச்சரி என்பவன், கடவுள் நம்பிகையாளனின் ஐகானாக இருக்கமுடியுமா? அல்லது இவற்றை தவறு என்பவனா?
கடவுள் மறுப்பாளனுக்கு யார் ஐகான்?
தான் மதச்சார்பற்றவன் என்று கூவிக்கொண்டே.. வீட்டோடு கடவுள் வழிபாடு நடத்துபவன், பெரியாருக்கு கும்பிடு போடுபவன், கடவுள் நம்பிகையாளர்கள் எல்லாம் சமூக சீர்கேட்டாளர்கள் என்ற எழுதிக்கொண்டே.. தனிமனித ஒழுக்கக்கேட்டை செய்பவன், வயிற்று பிழைப்பிற்காக நாத்திகம் பேசி.. மற்றவரை ஏமாற்றி பணம் சம்பாதிப்பவன் மற்றும் கடவுள் நம்பிக்கையாளன் செய்யும் தவறுகளைவிட அதிகமாக தானும் செய்பவன், கடவுள் மறுப்பாளனுக்கு ஐகானாக இருக்கமுடியுமா? அல்லது கடவுள் மறுப்போடு தனி மனித ஒழுக்கத்திலும் தவறு செய்யாதவனா?
நமக்கு நல்லவர்களாக யார் தெரிகிறார்களோ, அவர்களையே உதாரணமாக எடுத்துக்கொள்வது தானே சரியாகும்?
//தாராளமாக இணைக்கலாம் :) :)
ReplyDelete--
எந்த பதிவின் எந்த இடுகையையும் யாரும் இணைக்கலாம்//
ஓ... வாலுக்கான பிரத்தியேக இடுகையான இதை நான், திரட்டியில இணைக்க விரும்பவில்லை. வேறு யாரோ இணைத்திருக்கிறார்கள் போல.. அது யாரென்று கண்டுபிடிக்க முடியுமா? ஓட்டு போட்டது யாரென்றாவது?
ம்.. சரி நம் இடுகைக்கு நாமும் ஓட்டு போட வேண்டியது தான். :)
ReplyDeleteதமிழ்மணத்தில் இணைத்தது யாரென்று சொல்லுங்கள்..
////மனிதர்களின் ஏழ்மைக்கும் அவர்களது கடவுள் கொள்கைதான் காரணம் என்கிறீர்களா?//
ReplyDeleteபின்ன நானா காரணம்!
ஊழ்வினையில் உங்களுக்கு நம்பிக்கை உண்டா!?//
கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் எல்லாம் கோடீஸ்வரர்களா? கடவுளை திட்டிக்கொண்டு பிச்சை எடுப்பவனை பார்த்ததில்லையா?
//நீங்கள் நின்று கொண்டு யூரின் போகக்கூடாதாமே!?//
ReplyDeleteவெஸ்டன் டாய்லட்ல படுத்துகிட்டா யூரின் போவாங்க? அதாவது, இடத்திற்கு தகுந்தாற் போல செய்துக்க சொல்லுது.
காதில் விழுற எல்லா பொய்யையும் உண்மைன்னு நம்பிடுறீங்க... யாராவது இந்த மாதிரி சொல்லும் போது ஆதாரம் கேளுங்க, வால்.
//இதனுடனே கேள்வியும் உள்ளது!
ReplyDeleteஅரேபியாவில் இருக்கும் இஸ்லாமியன், சூடானில் இருக்கும் இஸ்லாமியனை சமமாக தான் நினைப்பான் என்று நீங்கள் நினைத்து கொள்ளலாம்,
எங்கேயாவது அவர்களுக்குள் சம்பந்தம் நடந்ததாக ஆதாரம் உண்டா?//
அடுத்த கேள்வி என்ன? சூடான்காரனுக்கும், தமிழ் நாட்டுக்காரனுக்கும் சம்பந்தம் நடந்ததாக ஆதாரம் உண்டா? என்பதா? :)))
---
தமிழ் நாட்டில் இருக்கும் கடவுள் மறுப்பாளனுக்கும், வட நாட்டு கடவுள் மறுப்பாளனுக்கும் சம்பந்தம் நடந்ததாக ஆதாரம் உண்டா? :(
//வெஸ்டன் டாய்லட்ல படுத்துகிட்டா யூரின் போவாங்க? அதாவது, இடத்திற்கு தகுந்தாற் போல செய்துக்க சொல்லுது. //
ReplyDeleteஅப்படியா சொல்றீங்க .. இல்லைன்னு நான் வாசித்தது சொன்னதே. அதன்பின் ஒரு பதிவர் சொன்னதாகவும் இருந்ததே. தாடி வைப்பதுபோல் அதுவும் ஒரு கட்டளைதானே?
ஐயத்திற்கு என் பதிவில் ஆறாம் கேள்விகளையும் அது காட்டியுள்ள இஸ்லாமியப் பதிவுகளையும் பார்த்துக் கொள்ளுங்கள்.
//(பர்க்கா) அணியும் அவர்களுக்கே அது தொந்தரவில்லை. நானோ நீங்களோ அதை ஏன் கேட்கவேண்டும்.//
ReplyDeleteநல்ல பதில்தான்! ஆனாலும் தலையில் தேங்காயை உடச்சிக்கிறாங்களே...கையில் எல்லாம் ஆணி அடிச்சிக்கிட்டு சிலுவையில் தொங்குறாங்களே .. உங்க மார்க்கத்தில உடம்பில அடிச்சிக்கிட்டு கீறிக்கிட்டு ஊர்வலம் போவாங்களே .. இதிலேயும் 'அவர்களுக்கே அது தொந்தரவில்லை. நானோ நீங்களோ அதை ஏன் கேட்கவேண்டும்' என்றுதான் சொல்வீர்களா?
//ஆனாலும் தலையில் தேங்காயை உடச்சிக்கிறாங்களே...கையில் எல்லாம் ஆணி அடிச்சிக்கிட்டு சிலுவையில் தொங்குறாங்களே .. உங்க மார்க்கத்தில உடம்பில அடிச்சிக்கிட்டு கீறிக்கிட்டு ஊர்வலம் போவாங்களே ..//
ReplyDeleteதருமி, கடவுள் நம்பிக்கையையும், மூட பழக்கத்தையும் போட்டு குழப்பாதீர்கள்.
மூட நம்பிக்கைகள் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களிடமும் உள்ளது. மறுக்க முடியுமா?
சுட்டியில் இருக்கும் பதிவுகளை படித்துக்கொண்டிருக்கிறேன்...ஐயா.
ReplyDelete