Sep 1, 2009

ஸ்விஸ், பதிவர் சங்கம், ஆன்மீகம் - ஜிகர்தண்டா

ஸ்விஸ் வங்கியிலிருக்கும் இந்திய கருப்பு பணத்தை மீட்க வருகிற டிசம்பர் மாதம் முதற்கட்ட பேச்சு வார்த்தை நடத்தப்படும் – நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி.

ஜெஃப்ரி ஆர்ச்சருடைய கதையில் வரும் நைஜீரிய நிதியமைச்சர், தன் நாட்டு கருப்பு பண முதலைகளின் ஸ்விஸ் வங்கி கணக்கு விபரத்தை வெளிக்கொண்டுவர நடத்தும் முயற்சி நினைவு வந்தது. அந்த கதை உண்மை சம்பவத்தின் அடிப்படையில் பின்னப்பட்டதாகவும் அதில் சொல்லப்பட்டுள்ளது. அதுபோலத்தானா இதுவும்?

<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் 24 அன்று, 20 மருத்துவர்கள், 14 மார்பக புற்று நோயாளிகளுக்கு, 3 மணிநேரத்தில் செய்த அறுவை சிகிச்சை சர்ச்சையில் சிக்கியுள்ளது.

அன்று அறுவை சிகிச்சையில் பங்கு பெற்ற ஒரு மருத்துவர் தொலைக்காட்சிக்கு பேட்டி தருகிறார் ‘நாங்கள் 10 நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை செய்திருந்தோம். அப்போது உடன் இருந்த மருத்துவர் சொன்னார், இன்னும் 2 செய்தால் ஒரு டஜன் ஆகிவிடும் என்று. எனவே மேலும் இரண்டு பேருக்கு செய்ய தீர்மானித்தோம்’.

நம் மருத்துவர் இடுகை இன்னும் வரவில்லை. என்ன எழுதுவார்... அந்த அறுவை சிகிச்சை, சாதனைக்காக செய்யப்படவில்லை என்று புள்ளிவிபரங்களையும் ஆதாரங்களையும் அடுக்குவார். அதற்கு போலி மருத்துவர், ‘சாதனைக்காக செய்யப்பட்ட அறுவை சிகிச்சை வெற்றி’ என்பதாக எழுதுவார். போலி மருத்துவர பார்த்திருக்கிறேன், ஆனா... மருத்துவருக்கு போலிய இப்பதான் பார்க்கிறேன்.

<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>

Body of Lies என்ற ஆங்கிலப்படம் பார்த்தேன். சர்வதேச தீவிரவாதத்தைFarahani ஒடுக்க பெரியண்ணன் நடத்தும் திட்டங்களும் நாடகங்களும் என படம் விருவிருவென நகர்கிறது. இடையே ஈரானிய செவிலிப் பெண்ணுடனான (ஃபராஹனி) காதலை ஒரு கோடு காட்டியபோது நினைத்தேன், ஆஹா… தீவிரவாத திட்டங்களுக்கிடையே காதலையும் தொட்டுக்கொள்கிறார்களே என்று. அந்த காதலே கதாவின் தலையை காவு கேட்கும் போது க்ளைமாக்ஸ்…டைட்டானிக் டி’ காப்ரியோ வா இது… அசத்தியிருக்கிறார்.

கிழக்கு பாட்காஸ்டில் ‘குரு’ பாராவுடனான தீவிரவாதம் பற்றிய ஒலிபரப்பு மனதில் ஓடியது. தீவிரவாதம் குறித்த சரியாக கணித்து சொல்கிறார். தீவிரவாதத்தில் டாக்டர் பட்டம் வாங்கிவிடுவார் போல…

<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>

வாசிப்பனுபவம் உள்ள சமுதாயம் வாழ்வில் முன்னேறும். அதை சமகால தமிழ் சமுதாயத்தில் காண முடிகிறது. வாசகர்களை கவரும் பல சூடான தலைப்புகளில் புத்தகங்களை அறிமுகப்படுத்திவரும் கிழக்கு பதிப்பகம், கிழக்கு புக் கிளப் என்ற சூப்பர் ஆஃபர் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. அங்கு பட்டியலிடப்பட்டுள்ள கிழக்கு பதிப்பகத்தின் சில புத்தகங்களில், 20 (எந்தவிலை) புத்தகங்கள் வாங்கினாலும் அவற்றின் விலை ரூபாய் 1000/- மட்டுமே. நான் 1774 ரூபாய்க்கு வாங்கிய 20 புத்தகங்களுக்கு 1000 ரூபாய் மட்டுமே பில் வந்தது. மேலதிக விபரங்களுக்கு நண்பர் பத்ரி அவர்களின் பதிவு.

பட்டியலில் மேலும் சில பிரபல புத்தகங்களையும் சேர்த்தால் இன்னும் பயனுள்ளதாக இருக்கும் என்பது என் கருத்து. சேர்க்கிறோம் என்று சொல்லியிருக்கிறார்கள்.

<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>

சிங்கை செந்தில் நாதன் அவர்களுக்கு தமிழ் வலைபதிவர் மற்றும் நண்பர்களின் நிதி உதவி மிகுந்த மகிழ்ச்சியளித்தது. அன்றைய தினம் தூங்கி எழுந்ததும் முதலாவதாக அவருடைய சிகிச்சை என்னானது என்ற எண்ணம் தான் மனதில் ஓடியது. முகம் கழுவாமல் கூட கணிணியை திறந்து நிலையறிந்த பின்பே பதட்டத்தை தணித்து சுவாசிக்க முடிந்தது. நாம் கொடுத்த பணத்தை விட நம்முடைய பிராத்தனையே செந்தில் நாதன் அவர்களை காப்பாற்றியதாக நான் நினைக்கிறேன். மத, கடவுள், மொழி, இன, நாத்திகர், ஆத்திகர் என எந்த பேதமும் இல்லாமல் அவருக்காக அனைவரும் செய்த பிராத்தனையை, கடவுள் நிச்சயம் கேட்டிருப்பார் என்றுதான் நினைக்கிறேன். ஆன்மீகத்திற்கு எப்போதும் எதிர்வினையாற்றும் கோவியாருடைய சில நாள் ஸ்டேடஸ் மெஸேஜ் செந்தில் நாதனுக்காக பிராத்தனை செய்ய சொல்லியது. உயிர் என்று வரும் போது நாத்திகமாவது, சாத்திகமாவது.

<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>

சென்ற வாரம் நான் வாசித்ததில் நண்பர் அப்பாவி முரு எழுதியிருக்கும் மசுரு – உசுரு என்ற எழுத்து என்னை மிகவும் கவர்ந்தது. எந்த ஒரு செயலுக்கான எதிர்பார்ப்பை பதிவு செய்யும் போதும் நம்முடைய காலடி முதலாவதாக இருக்க வேண்டும். வெறும் வாய்சவடால்கள் வேலைக்குதவாது என்கிறார். வாசித்து பாருங்கள்.

<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>

சமீபத்திய தமிழ் வலைப்பதிவர்களின் முயற்சி ஒரு உயிரை காப்பாற்றியது போலவே இன்னும் பலருக்கு வேலைவாய்ப்பு, கல்வி, பயிற்சி மற்றும் பல உதவிகளை செய்ய ”சர்வதேச தமிழ் வலைப்பதிவர் கூட்டமைப்பு” என்ற ஒரு அமைப்பை உருவாக்கினால் என்ன? கூட்டமைப்பாக ஒரு தலைமையின் கீழ் செயல்பட்டால், நிச்சயம் அதன் பலன் அபாரமானது. நம்மிடையே சச்சரவுகள் எழாமல் அல்லது எழுந்தவற்றை சுமுகமாக தீர்த்துவைக்கவும் தலைமையால் முடியும் என்பதும் என் கருத்து. வலைபதிவர்கள் வெகுசன ஊடங்களால் வெகுவாக கவனிக்கப்பட்டு வரும் இந்த நேரத்தில் நிச்சயமாக அவசியமான ஒன்றாக கூட்டமைப்பும் தலைமையும் இருக்கிறது. செந்தில் நாதன் விசயத்தில் ஆயிரத்தில் ஒருவனாய் முதலடி எடுத்து வைத்த நண்பர் நர்சிம் அவர்களே இதற்கு தகுதியானவர் என நான் முன்மொழிந்து என் முதல் அடியை எடுத்து வைக்கிறேன். உங்கள் கருத்துகளை அறியவும் காத்திருக்கிறேன்.

நன்றி!

31 comments:

 1. //ஆன்மீகத்திற்கு எப்போதும் எதிர்வினையாற்றும் கோவியாருடைய சில நாள் ஸ்டேடஸ் மெஸேஜ் செந்தில் நாதனுக்காக பிராத்தனை செய்ய சொல்லியது. உயிர் என்று வரும் போது நாத்திகமாவது, சாத்திகமாவது.//

  இதிலெல்லாம் அரசியல் பார்பது இல்லை நான். நம்ம நம்பிக்கை அடுத்தவர்களை பாழ்படுத்தாது, தூற்றாது இருந்தால் அது எதுவாக இருந்தாலும் நல்லது என்றே பொதுவாக சொல்லுவேன். மதம் என்கிற வட்டத்துக்குள் ஆன்மிகத்தை அடக்கும் போது அங்கே நாத்திகம் பேசுவது எனக்கு பிடித்தது.

  கடவுள் செவி சாய்க்கிறதா இல்லையாங்கிறதவிட எண்ணங்களில் பிறருக்காக மனம் இரங்குவதே, உருகுவதே வேண்டுதல் எனப்படும், நாத்திகன் நினைப்பதில் கடவுள் பற்றிய நினைப்பு இருக்காது. மற்றபடி ஒருவர் நலமடைய விரும்பும் ஒருவருடைய எண்ணத்தை கடவுள் நம்பிக்கை / நம்பிக்கையற்ற என்பதாக பிரித்து பார்ப்பதில் விருப்பம் இல்லை, அப்படிப் பிரித்து பார்ப்பதும் தவறு.

  ReplyDelete
 2. சர்வதேச தமிழ் வலைப்பதிவர் கூட்டமைப்பு]]

  இஃது நல்விடயம்.

  உள் அரசியல் இல்லாம செய்தால் சந்தோஷம்.

  ReplyDelete
 3. //கோவி.கண்ணன் said...

  //ஆன்மீகத்திற்கு எப்போதும் எதிர்வினையாற்றும் கோவியாருடைய சில நாள் ஸ்டேடஸ் மெஸேஜ் செந்தில் நாதனுக்காக பிராத்தனை செய்ய சொல்லியது. உயிர் என்று வரும் போது நாத்திகமாவது, சாத்திகமாவது.//

  இதிலெல்லாம் அரசியல் பார்பது இல்லை நான். நம்ம நம்பிக்கை அடுத்தவர்களை பாழ்படுத்தாது, தூற்றாது இருந்தால் அது எதுவாக இருந்தாலும் நல்லது என்றே பொதுவாக சொல்லுவேன். மதம் என்கிற வட்டத்துக்குள் ஆன்மிகத்தை அடக்கும் போது அங்கே நாத்திகம் பேசுவது எனக்கு பிடித்தது.

  கடவுள் செவி சாய்க்கிறதா இல்லையாங்கிறதவிட எண்ணங்களில் பிறருக்காக மனம் இரங்குவதே, உருகுவதே வேண்டுதல் எனப்படும், நாத்திகன் நினைப்பதில் கடவுள் பற்றிய நினைப்பு இருக்காது. மற்றபடி ஒருவர் நலமடைய விரும்பும் ஒருவருடைய எண்ணத்தை கடவுள் நம்பிக்கை / நம்பிக்கையற்ற என்பதாக பிரித்து பார்ப்பதில் விருப்பம் இல்லை, அப்படிப் பிரித்து பார்ப்பதும் தவறு.//

  கிரேட் கோவி.கண்ணன் சார். நானும் உங்கள் கட்சிதான்.

  ReplyDelete
 4. ”சர்வதேச தமிழ் வலைப்பதிவர் கூட்டமைப்பு” - நல்ல முன்னெடுப்பு! இதனால் பல ஆக்கப்பூர்வமான காரியங்கள் கைகூடும். வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 5. body of lies பற்றி உங்களிடமிருந்து இன்னும் அதிகம் எதிர்பார்க்கிறேன்!

  தீவிரவாதிகளை பிடிக்கிறேன் என்ற பெயரில் ஒரு அப்பாவி இஞ்சினியர் கொல்லப்படுவது அதில் காட்டப்பட்டிருக்கும்!,
  “அல்லாவை நம்பாதவர்களை நாங்கள் கொன்று குவிப்போம்” என்ற வசனமும் இருக்கும்!


  யூதர்களுக்கும், இஸ்லாமியர்களுக்குமென்ன பிரச்சனை என்று கொஞ்சம் விரிவாக சொல்லமுடியுமா?

  ஓணானை ஏண்டா அடிக்கிறிங்கன்னு கேட்டா, ராமருக்கு இளநீரில் ஒன்னுக்கு அடிச்சி கொடுத்துருச்சுன்னு சொல்வாங்க, அந்த மாதிரி எதாவது கதை சொல்லிறாதிங்க ப்ளீஸ்!

  ReplyDelete
 6. ம்ம்ம்... எல்லாமே ஆழமான விசயங்கள்.. அருமை அண்ணா..

  ReplyDelete
 7. \\ வால்பையன் said...
  body of lies பற்றி உங்களிடமிருந்து இன்னும் அதிகம் எதிர்பார்க்கிறேன்!
  தீவிரவாதிகளை பிடிக்கிறேன் என்ற பெயரில் ஒரு அப்பாவி இஞ்சினியர் கொல்லப்படுவது அதில் காட்டப்பட்டிருக்கும்!,
  “அல்லாவை நம்பாதவர்களை நாங்கள் கொன்று குவிப்போம்” என்ற வசனமும் இருக்கும்!யூதர்களுக்கும், இஸ்லாமியர்களுக்குமென்ன பிரச்சனை என்று கொஞ்சம் விரிவாக சொல்லமுடியுமா?ஓணானை ஏண்டா அடிக்கிறிங்கன்னு கேட்டா, ராமருக்கு இளநீரில் ஒன்னுக்கு அடிச்சி கொடுத்துருச்சுன்னு சொல்வாங்க, அந்த மாதிரி எதாவது கதை சொல்லிறாதிங்க ப்ளீஸ்!\\

  ஆரம்பிக்குமா அடுத்த Episode?

  அளவில்லா ஆவலுடன்:
  அடியேன்.
  :-)

  ReplyDelete
 8. கலக்கல் பதிவு பீர்...எளிமையான எழுத்து நடையில் சகல விஷயங்களையும் அலசி எடுத்திருக்கிறீர்கள்.

  //
  யூதர்களுக்கும், இஸ்லாமியர்களுக்குமென்ன பிரச்சனை என்று கொஞ்சம் விரிவாக சொல்லமுடியுமா?//

  வால் !!!

  யூதர்கள் இஸ்லாமியர்க‌ளுக்கு மட்டுமல்ல.உலகின் எல்லா சமுதாயத்தினருக்கும் தொந்தரவாக‌
  இருந்திருக்கின்றனர்.

  அதைப்பற்றி,எழுத ஒரு பின்னூட்டம் பத்தாது. இன்னும் விளக்கங்களுக்கு என்னை தொடர்பு கொள்ளலாம்.
  நிறைய வ்ரலாறு படியுங்கள். !!!

  ReplyDelete
 9. அட்டகாசமான கதம்பம்! இது மாதிரி ஏற்கனவே ஒண்ணு ​ஜெய்ஹிந்த்புரத்தில படிச்ச ஞாபகம் இருக்கு!

  ReplyDelete
 10. //யூதர்களுக்கும், இஸ்லாமியர்களுக்குமென்ன பிரச்சனை என்று கொஞ்சம் விரிவாக சொல்லமுடியுமா?
  //
  வால்பையன், பா. ராகவன் ஒரு ​தொடர் ஜுவில எழுதியிருந்தாரே? படிச்சீங்களா? இல்லேன்னா பாரா​வோட வலைமனையில கூட ​மேலதிகம் விபரம் பெறலாம்!

  ReplyDelete
 11. //யூதர்கள் இஸ்லாமியர்க‌ளுக்கு மட்டுமல்ல.உலகின் எல்லா சமுதாயத்தினருக்கும் தொந்தரவாக‌
  இருந்திருக்கின்றனர்.

  அதைப்பற்றி,எழுத ஒரு பின்னூட்டம் பத்தாது. இன்னும் விளக்கங்களுக்கு என்னை தொடர்பு கொள்ளலாம்.
  நிறைய வ்ரலாறு படியுங்கள். !!!//

  எனக்கு மட்டும் தேவையென்றால் நான் கேட்டிருக்கவே மாட்டேன்!
  ஏன் யூதர்களால் மற்றவர்களுக்கு பிரச்சனை, அப்படி என்ன தான் வரலாறில் இருக்கிறது!
  நான் இனிமேல் படிப்பதை விட, படித்த நீங்கள் பதிவிட்டால் நல்லது!

  ReplyDelete
 12. //கடவுள் செவி சாய்க்கிறதா இல்லையாங்கிறதவிட எண்ணங்களில் பிறருக்காக மனம் இரங்குவதே, உருகுவதே வேண்டுதல் எனப்படும்,//

  என்ன சார் சொல்றீங்க? கடவுள் செவி சாய்கிறான் என்ற நம்பிக்கையில் செய்யப்படுவது தான், அவனிடம் வேண்டுதல்.

  //நாத்திகன் நினைப்பதில் கடவுள் பற்றிய நினைப்பு இருக்காது. ஒருவர் நலமடைய விரும்பும் ஒருவருடைய எண்ணத்தை கடவுள் நம்பிக்கை / நம்பிக்கையற்ற என்பதாக பிரித்து பார்ப்பதில் விருப்பம் இல்லை, அப்படிப் பிரித்து பார்ப்பதும் தவறு//

  உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லாதிருக்கலாம், ஆனால் எங்கள் கடவுள் நம்பிக்கையை நம்பித்தானே, எங்களிடம் பிராத்தனை செய்ய சொன்னீர்கள்? இதைச் சொல்வதில் என்ன தவறு இருந்துவிடப்போகிறது?

  ReplyDelete
 13. நன்றி ஜமால்,

  ---

  நன்றி வரதராஜலு,

  ---

  நன்றி தமிழ்நாடன்,

  ReplyDelete
 14. //வால்பையன் said...

  body of lies பற்றி உங்களிடமிருந்து இன்னும் அதிகம் எதிர்பார்க்கிறேன்!//

  வால், முன்பே சொல்லியிருக்கிறேன். எனக்கு சினிமா விமர்சனம் வருவதில்லை. சிறு முயற்சியே இப்போது எடுத்துள்ளேன்.

  //தீவிரவாதிகளை பிடிக்கிறேன் என்ற பெயரில் ஒரு அப்பாவி இஞ்சினியர் கொல்லப்படுவது அதில் காட்டப்பட்டிருக்கும்!, //

  அப்பாவி ஜோடார்னியன் இஞ்சினியருக்கு தீவிரவாதி முத்திரை குத்தி, அவர் பெயிரில் குண்டுகள் வைப்பது யார் என்பதும் உங்களுக்கு தெரிந்திருக்கும்.

  //“அல்லாவை நம்பாதவர்களை நாங்கள் கொன்று குவிப்போம்” என்ற வசனமும் இருக்கும்!//

  எந்த சினிமாவில், எந்த தீவிரவாதி இந்த வசனம் பேசாமல் இருக்கிறார்.

  //யூதர்களுக்கும், இஸ்லாமியர்களுக்குமென்ன பிரச்சனை என்று கொஞ்சம் விரிவாக சொல்லமுடியுமா?//

  தெரிந்து கேட்கிறீர்களா? இல்லை உண்மையிலேயே தெரியாமலா?

  //ஓணானை ஏண்டா அடிக்கிறிங்கன்னு கேட்டா, ராமருக்கு இளநீரில் ஒன்னுக்கு அடிச்சி//

  இன்னோரு ஓணான் கதையும் இருக்கு... அதில ஓணான் வேலில போகும்... :)

  ReplyDelete
 15. நன்றி லோகு,

  ---

  நன்றி டக்ளஸ், (உங்க ஆவலுக்கு அளவில்லாம போச்சு?)

  ---

  நன்றி செய்யது,

  ---

  நன்றி ஜெகா, (ஆமா... அடிக்கடி வரும். இதுக்கு பேரு ஜிகர்தண்டா)

  ReplyDelete
 16. //”சர்வதேச தமிழ் வலைப்பதிவர் கூட்டமைப்பு” - நல்ல முன்னெடுப்பு! இதனால் பல ஆக்கப்பூர்வமான காரியங்கள் கைகூடும். வாழ்த்துக்கள்!
  //

  ஆரம்பித்த சில வருடங்கள் கழித்து என்ன நடக்கும் என்று யோசித்து பார்த்தேன் :) :) :) :( :( :(

  ReplyDelete
 17. //எனவே மேலும் இரண்டு பேருக்கு செய்ய தீர்மானித்தோம்’.//

  இரண்டு பேருக்கும் புற்றுநோய் இருந்ததா இல்லையா

  ReplyDelete
 18. // இன்னும் பலருக்கு வேலைவாய்ப்பு, கல்வி, பயிற்சி மற்றும் பல உதவிகளை செய்ய //

  இதற்கு கட்டாயம் அவசியம் இருக்கிறது . . . .

  முதலில் திட்டமிடல் வேண்டும்

  ReplyDelete
 19. டாக்டர், நீங்களே திட்டமிட்டு தொடங்கி வையுங்களேன், புண்ணியமா போகும்.

  ReplyDelete
 20. கூட்டமைப்பு வேலைக்காவாது பீர் அண்ணே. நான் இப்படி சொல்வதால் என்மேல் வருத்தம் வரலாம்.ஆனால் இதுதான் எதார்த்தம்.அவரவர் நிலையில் அவரவர் வழியில் அவ்வப்போது சிங்கைநாதனுக்கு நடந்தது போன்ற பெரிய நிகழ்வுகளில் இணைந்தும் செயல்படுவதே நன்று.

  ReplyDelete
 21. //என்ன சார் சொல்றீங்க? கடவுள் செவி சாய்கிறான் என்ற நம்பிக்கையில் செய்யப்படுவது தான், அவனிடம் வேண்டுதல்.//

  ஏதோ ஒண்ணு இருந்துட்டு போகட்டும்! ஆனால் என்னையைப் பொருத்த அளவு அது (வெறும்) நம்பிக்கை தான்.


  //உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லாதிருக்கலாம், ஆனால் எங்கள் கடவுள் நம்பிக்கையை நம்பித்தானே, எங்களிடம் பிராத்தனை செய்ய சொன்னீர்கள்? இதைச் சொல்வதில் என்ன தவறு இருந்துவிடப்போகிறது?//

  நான் எனக்கு கடவுள் நம்பிக்கை இருக்கிறது, இல்லைன்னு எதாவது சொல்லி இருக்கிறேனா ? கடவுள் நம்பிக்கை தவறுன்னு எங்காவது சொல்லி இருக்கிறேனா ? நாத்திகம் பேசுவது தவறுன்னு எங்காவது சொல்லி இருக்கிறேனா ? நான் ஆத்திகனா நாத்திகனா தெரிஞ்சு என்ன ஆகப் போகுது பீர் !
  :)

  ReplyDelete
 22. //யூதர்களுக்கும், இஸ்லாமியர்களுக்குமென்ன பிரச்சனை என்று கொஞ்சம் விரிவாக சொல்லமுடியுமா?//

  தெரிந்து கேட்கிறீர்களா? இல்லை உண்மையிலேயே தெரியாமலா?//


  தெரிந்தால் எதுகண்ணே கேட்கிறேன்!
  சிங்களவனுக்கும், தமிழனுக்கும் என் காலத்தில் பிரச்சனை நடக்கிறது, உரிமை கேட்பவன் ஒருத்தன், தர மறுப்பவன் ஒருத்தன் இது ஊருக்கே தெரியும், ஆனால் யூதர்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் என்ன பிரச்சனை!?

  யூதர்கள் சாத்தான் வழி வந்தவர்களா?

  ReplyDelete
 23. ஆழமான விஷயங்களைத் தொட்டு இருக்கிறீர்கள்.. நன்றாக உள்ளது..

  //வலைபதிவர்கள் வெகுசன ஊடங்களால் வெகுவாக கவனிக்கப்பட்டு வரும் இந்த நேரத்தில் நிச்சயமாக அவசியமான ஒன்றாக கூட்டமைப்பும் தலைமையும் இருக்கிறது. //

  கஷ்டம் நண்பா :-((((

  ReplyDelete
 24. ஜிகர்தண்டா super.

  ப்ருனோ, அந்த ரெண்டு பேருக்கும் புற்று நோய் இருந்தா என்ன இல்லாட்டி என்ன ! ஒரு நாளைக்கு ஒரு டஜன் வியாபாரம் நடந்தா சரின்னு கடைசி ரெண்டு அயிட்டம் டிஸ்கௌந்த்ல கொடுக்கற மாதிரி டீல் பண்றாங்களேன்னு எனக்கு இந்த செய்தியை படிச்சவுடன தோணிச்சு. ஒரு டஜன் 12 இல்லாம 25 ன்னு இருந்திருந்தா இன்னுமே சூப்பர். இன்னும் 15 ஆபரேஷன் நடந்து இருக்கும் இல்ல !

  ReplyDelete
 25. //கூட்டமைப்பு வேலைக்காவாது பீர் அண்ணே. நான் இப்படி சொல்வதால் என்மேல் வருத்தம் வரலாம்.ஆனால் இதுதான் எதார்த்தம்.அவரவர் நிலையில் அவரவர் வழியில் அவ்வப்போது சிங்கைநாதனுக்கு நடந்தது போன்ற பெரிய நிகழ்வுகளில் இணைந்தும் செயல்படுவதே நன்று.//

  இது தான் யதார்த்தம் என்றூ நினைக்கிறேன்

  ReplyDelete
 26. //
  ப்ருனோ, அந்த ரெண்டு பேருக்கும் புற்று நோய் இருந்தா என்ன இல்லாட்டி என்ன ! ஒரு நாளைக்கு ஒரு டஜன் வியாபாரம் நடந்தா சரின்னு கடைசி ரெண்டு அயிட்டம் டிஸ்கௌந்த்ல கொடுக்கற மாதிரி டீல் பண்றாங்களேன்னு எனக்கு இந்த செய்தியை படிச்சவுடன தோணிச்சு. ஒரு டஜன் 12 இல்லாம 25 ன்னு இருந்திருந்தா இன்னுமே சூப்பர். இன்னும் 15 ஆபரேஷன் நடந்து இருக்கும் இல்ல//

  சரி

  ராஜாஜி மருத்துவமனையில் ஒரு நாள் மொத்தம் அதிகபட்சமாக் எத்தனை அறுவை சிகிச்சைகள் செய்ய வேண்டும் என்பது உங்கள் கருத்து

  அங்கு ஒரே மருத்துவர் அதிக பட்சம் எத்தனை அறுவை சிகிச்சைகள் செய்ய வேண்டும் என்பது உங்கள் கருத்து

  ReplyDelete
 27. //டாக்டர், நீங்களே திட்டமிட்டு தொடங்கி வையுங்களேன், புண்ணியமா போகும்.
  //

  முதலில் திட்டமிடுகிறேன்

  இப்பொழுது தான் ஆரம்ப கட்ட “விபர சேகரிப்பு” நிலையில் உள்ளேன்

  பார்ப்போம்.... எப்படி வருகிறது என்று

  ஆனால் ஒரே கூட்டமைப்பு எல்லாம் கிடையாது... அது ஒரு வருடம் கூட தாங்காது என்று தெரியும் !!

  ReplyDelete
 28. //எம்.எம்.அப்துல்லா said...

  கூட்டமைப்பு வேலைக்காவாது பீர் அண்ணே. நான் இப்படி சொல்வதால் என்மேல் வருத்தம் வரலாம்//

  இதில் வருத்தம் வருவதற்கு என்ன இருக்கிறது. எதார்தத்தை சொல்லியிருக்கிறீர்கள். நன்றி அண்ணே.

  ReplyDelete
 29. //கோவி.கண்ணன் said...
  ஏதோ ஒண்ணு இருந்துட்டு போகட்டும்! ஆனால் என்னையைப் பொருத்த அளவு அது (வெறும்) நம்பிக்கை தான். //

  நம்பினால் சரி :)

  //நான் ஆத்திகனா நாத்திகனா தெரிஞ்சு என்ன ஆகப் போகுது பீர் !//

  ஆனால், ஆத்திகர்களிடம் நாத்திகம் பேச பிடிக்கும்.

  ReplyDelete
 30. வால், எனக்கு தெரிந்தவரை சொல்ல ஆரம்பிக்கிறேன்.

  ---

  நன்றி கார்த்திக்,

  ---

  நன்றி மணி, எங்க போயிருந்தீங்க? (டாக்டர் விடாம துரத்துறார் பாருங்க)

  ReplyDelete
 31. டாக்டர், மதுரை ராஜாஜி மருத்துவ மனையில் தினமும் 14 புற்று நோய் அறுவை சிகிச்சை (இனிமேலாவது) செய்வார்களா?

  ReplyDelete

மனம் திறந்து செதுக்குங்கள், என் எழுத்துக்களை.