Sep 7, 2009

அந்தரங்க கேள்விகள் – அதிரும் ஸ்டார்

நாம், நம் நண்பனுக்கு உண்மையாக இருக்கிறோமா? உறவினரிடத்தில்? மனைவியிடத்தில்? அட…முதலில் நாம், நமக்கு உண்மையாக இருக்கிறோமா? நமக்கு மட்டுமே தெரிந்த அந்தரங்க உண்மைகளை உலகுக்கு வெளிச்சம் போட்டு காட்டுகிறது, ஸ்டார் ப்ளஸ் தொலைக்காட்சியின் ‘ஸச்கா சாம்னா’ என்ற தொடர், இதை 'உண்மைக்கு எதிராக' என்று தமிழிலும் படுத்தலாம்.

sackkasamna_full

இது ஒரு கேம்-ஷோ. இதில் பங்கு பெறுபவருக்கு நிகழ்ச்சி நடப்பதற்கு முன்பாக, உண்மை கண்டறியும் (polygraphic) சோதனையில் 50 கேள்விகள், அவர் கடந்து வந்த வாழ்க்கை பாதையில் இருந்தே கேட்கப்படுகிறது. அவற்றில் தேர்ந்தெடுத்து கேட்கப்படும் 21 கேள்விகளுக்கான பதிலை நிகழ்ச்சியில் கேமரா, மனைவி, உறவினர்கள், நண்பர்களுக்கு முன்பாக சொல்ல வேண்டும். சொல்லப்படும் பதில், உண்மையறியும் சோதனையில் அவர் சொல்லியிருந்த பதிலுடன் ஒத்திருந்தால் பரிசு. 21 கேள்விகளுக்கும் சரியான பதில் ‘உண்மை’ சொல்லப்பட்டால் 1 கோடியாம். மற்ற கேம் ஷோக்கள் போலத்தான் விதிமுறைகள், இடையேயும் விலகி போகலாம. கேள்விகள் எது மாதிரியாகவும் இருக்கும். பதில், இனிக்குமா? கசக்குமா? உண்மை… எப்படியிருக்கும்? தெரிந்து கொள்ள நிகழ்ச்சியில் ஒருவருக்கு கேட்கப்பட்ட கேள்விகள்.

அவர் இந்திய விமான படையில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர். நிகழ்ச்சிக்கு அவரது மனைவி, சகோதரன் மற்றும் அவருடைய மனைவி, நண்பர் ஆகியோர் பார்வையாளர்களாக வந்திருக்கிறார்கள். கேள்விகள்…

 1. விமான படையில் தங்களுக்கென வழங்கப்படும் மது வகைகளை வெளியே அதிக விலைக்கு விற்பனை செய்திருக்கிறீர்களா? பதில்: ம்யூட் செய்யப்பட்டுவிட்டது.
 2. பள்ளியில் படிக்கும் போது, பாலியல் புத்தகங்கள் படித்து ஆசிரியரிடம் மாட்டியதுண்டா? பதில்: ஆம்.
 3. உங்கள் மனைவி நன்றாக சமைப்பாரா? பதில்: இல்லை.
 4. உங்களைவிட உயரமானவர்களை கண்டால், தாழ்வு மனப்பான்மை வருவதுண்டா? பதில்: ஆம்.
 5. சகோதரனை, அவருடைய மனைவிக்கு எதிராக திருப்பி விட்டதுண்டா? பதில்: ஆம்.
 6. திருமணத்திற்கு பிறகு மனைவியிடம் அதிகமாக பொய் சொல்வதுண்டா? பதில்: ஆம்.
 7. இராணுவத்தில் இருந்த போது, இராணுவ விசாரனையில் குற்றம் சாட்டப்படும்படியாக (மாட்டியிருந்தால்) ஏதாவது செய்ததுண்டா? பதில்: ஆம்.
 8. உங்களுடைய தாயின் மரணத்திற்கு நீங்கள் காரணமென உணர்கிறீர்களா? பதில்: ஆம்
 9. உங்களுடைய மனைவி, உங்களைவிட சிறந்த கணவரை அடைய தகுதியுடையவர் என நம்புகிறீர்களா? பதில்: ஆம்.
 10. இரயிலில் பயணம் செய்த போது, உங்கள் மனைவி அருகில் இருந்த படுக்கையில் உறங்கிக்கொண்டிருக்க, வேறொருவரை உடல் ரீதியாக துன்புருத்தியதுண்டா? பதில்: ஆம்.
 11. தற்போது பணிபுரியும் அலுவலகத்தில் ஃபோன் செக்ஸ் செய்ததுண்டா? பதில்: ஆம்.
 12. விமான படையில் இயந்திர பணியாளராக இருந்த போது, கவனக்குறைவான ஏதேனும் வேலை செய்ததுண்டா? பதில்: ஆம்.
 13. விமான படையில் இயந்திர பணியாளராக இருந்த போது, நீங்கள் பணியாற்றிய ஏதேனும் விமானத்தின் விபத்திற்கு நீங்கள் காரணமாகியதுண்டா? பதில்: இல்லை.
 14. உங்கள் மனைவிக்குத் தெரியாத ஏதேனும் நோய் உங்களுக்கு உள்ளதா? பதில்: ஆம்.
 15. உங்கள் மனைவியை உண்மையிலேயே விரும்புகிறீர்களா? பதில்: இல்லை.
 16. பாலியல் தொடர்பிற்கான தேடுதலில், உங்கள் மனைவியுடைய ப்ரோஃபைலை இணையத்தில் கள்ளத்தனமாக ஏற்றியதுண்டா? பதில்: ஆம்.
 17. உங்களுடைய நிர்வாண புகைப்படத்தை முகம் தெரியாத வேறு யாருக்காவது அனுப்பியதுண்டா? பதில்: இல்லை.

தவறான பதில். அவர் வென்றிருந்த பத்து லட்சம் ரூபாயோடு வெளியேறினார்.

ஒவ்வொறு கேள்விகளுக்கும் இடையிடையே கலந்து கொண்டவருடைய கருத்தும் கேட்கப்படுகிறது. உறவினர் மற்றும் நண்பர்களுடைய கருதும் ஏதாவதிருப்பின். 15 ஆவது கேள்விக்கு அவரும் அவருடைய மனைவியும் தெரிவித்த கருத்து வியக்க வைத்தது. ‘இது எனக்கு முன்பே தெரியும்’ என்று மனைவியும். ‘விருப்பம், காதல் என்பதைவிட நான் அவளை கவனித்துக் (Care) கொள்கிறேன் என்பது தான் சரியாக இருக்கும்’ என்பதாக அவரும் சொல்கிறார்கள்.

‘ஸச்கா சாம்னா’ முதலாவது நிகழ்ச்சியின் கடைசிக் கேள்வி, திருமணமான பெண்ணிடம் கேட்கப்படுகிறது, “உங்கள் கணவரால் கண்டுபிடிக்க முடியாது என்றால், வேறு யாருடனாவது பாலியல் உறவு வைத்துக்கொள்வீர்களா?” உண்மை கண்டறியும் சோதனையில் அவர் சொல்லியிருந்த சரியான பதில் “ஆம்” என்பது. ஆனால் “இல்லை” என்பது தான் சரியான பதிலாக இருக்கக் கூடும் அல்லது இருக்க வேண்டும் என்ற சமூக நிர்பந்தத்தில் “இல்லை” என்று சொல்லிவிட, பரிசை இழந்தவராக வெளியேறியவருடைய திருமண வாழ்வு முறிந்து விட்டதாக செய்திகள் சொல்கின்றன. இனி அந்தப்பெண், தன்னுடைய மீதி வாழ்வை உண்மையறியும் சோதனையை மெய்பிக்க களிப்பாரா? அல்லது அதற்கு மாறாக சமூகத்திற்காக கழிப்பாரா? தெரியவில்லை :(

இந்த நிகழ்ச்சிக்கு சிலரை நான் முன்மொழிகிறேன்.

 • அரசியல்வாதி: ஊழல், லஞ்சம்.
 • ஆன்மீகவாதி: கடவுளுக்கு மாறு.
 • வழங்கறிஞர்: நீதிக்கு மாறு.
 • மருத்துவர்: யாரேனும் உயிரிழக்க காரணம்.
 • நான், நீங்கள்: சுய துரோகம்.

19 comments:

 1. <<<
  அரசியல்வாதி: ஊழல், லஞ்சம்.
  ஆன்மீகவாதி: கடவுளுக்கு மாறு.
  வழங்கறிஞர்: நீதிக்கு மாறு.
  மருத்துவர்: யாரேனும் உயிரிழக்க காரணம்.
  நான், நீங்கள்: சுய துரோகம்.
  >>>

  வழிமொழிகிறேன்


  நல்ல பதிவு பீர்

  ReplyDelete
 2. உண்மையறியும் சோதனை என்பதெல்லாம் இருக்கட்டும். இம்மாதிரியாக அந்தரங்க செய்திகளை பொதுவில் பகிர்ந்துகொள்ள எந்த அளவிற்கு அவர்கள் மனதளவில் தயாராக இருக்கிறார்கள் என்பது சந்தேகம்தான். பரிசு பெரிய தொகை என்பதால் சிலர் ஆர்வப்படலாம். ஆனால் மிகவும் கடினமானதொரு போட்டிதான்.

  பகிர்ந்ததற்கு மிகவும் நன்றி!

  ReplyDelete
 3. பிளாகர்களை என்ன சோதனைக்கு உட்படுத்தலாம் ?

  ReplyDelete
 4. இந்த கேவலமான நிகழ்ச்சியில் இப்படித்தான் கேள்வி கேப்பார்கள் என்று தெரிந்தும், என்ன ____________க்கு அதில் பங்கு கொள்கிறார்கள்.. அதில் பங்கு பெற ஏன் உறவினர்கள் சம்மதிக்கிறார்கள்..

  ReplyDelete
 5. // சுந்தர் said...

  பிளாகர்களை என்ன சோதனைக்கு உட்படுத்தலாம் ?//

  முதல் கேள்வி: நீங்கள் எங்காவது அனானியாக பின்னூட்டம் இட்டு இருக்கிறீர்களா??

  இந்த ஒரு கேள்வி போதும்..

  ReplyDelete
 6. விமானமோ இல்லை கப்பலோ ஒரே ஒரு வகையான மூலப்பொருளுடன் தயாரிக்கப்பட்டதில்லை.

  மனித உடலும் ஒரே ஒரு மூலப்பொருளில் உருவாகவில்லை.

  அதே போல் மனித மனமும் உண்மையெனும் ஒரு வகையால் அமைக்க முடியாது.

  ReplyDelete
 7. லிஸ்ட்ல கொஞ்ச பேர் விட்டுப் போச்சு தலைவா..!

  ReplyDelete
 8. //இனி அந்தப்பெண், தன்னுடைய மீதி வாழ்வை உண்மையறியும் சோதனையை மெய்பிக்க களிப்பாரா? அல்லது அதற்கு மாறாக சமூகத்திற்காக கழிப்பாரா? தெரியவில்லை :(// ஐயோ பாவம்.

  அண்ணா, உங்க final touch சூப்பர்.

  ReplyDelete
 9. //பாலியல் தொடர்பிற்கான தேடுதலில், உங்கள் மனைவியுடைய ப்ரோஃபைலை இணையத்தில் கள்ளத்தனமாக ஏற்றியதுண்டா? பதில்: ஆம்.//

  இதுக்காக அவரை தூக்கி உள்ளே வைக்கலாம் பீர்!
  இது சைபர் கிரைம்!

  ReplyDelete
 10. //(polygraphic) சோதனையில் 50 கேள்விகள், அவர் கடந்து வந்த வாழ்க்கை பாதையில் இருந்தே கேட்கப்படுகிறது//

  இல்லை பீர்...தவறு

  // “உங்கள் கணவரால் கண்டுபிடிக்க முடியாது என்றால், வேறு யாருடனாவது பாலியல் உறவு வைத்துக்கொள்வீர்களா?”//

  முடியாது என்றால்...வைத்துக்கொள்வீர்களா...
  எதிர் காலம்.


  இந்த ஷோ ஒரே ஒரு தடவை பார்த்தேன், பண்ணுவீங்களா, மாடீங்களா ..இந்த மாதிரி நடக்காத சம்பவத்தை,.polygraph டெஸ்டில் சரியாக சொல்ல முடியுமான்னு ஒரு சந்தேகம்..பார்க்கும் போதே தோன்றியது

  ReplyDelete
 11. நன்றி மஸ்தான்,

  ---

  நன்றி ஸ்ரீதர் அண்ணே, சிலர் இதை நாடகமென்றும் சொல்லக்கேட்டிருக்கிறேன். எல்லாம் பணம் தான் 15 பதில்களுக்கு 10 லட்சம் சும்மாவா?

  ---

  @ சுந்தர், லோகு சொல்லிட்டாப்டி.. நீங்க ரெடியா?

  ReplyDelete
 12. லோகு, அனைத்தையும் பணம் தான் தீர்மானிக்கிறது. நம் வாழ்வையும்... அதிலுள்ள பொய்களையும்.

  நான் இதுவரை எங்கும் அனானியாக பின்னூட்டியதில்லை, மட்டுமல்லாது வலையுலத்தில் இந்த ஐடி மட்டுமே பாவிக்கிறேன். ரொம்ப யோக்கியனாக்கும் :(

  ReplyDelete
 13. முரு, என்ன சொல்ல வரீங்க.. சமீபத்தில கமல் பேட்டி எதுவும் பார்த்தீங்களா?

  ---

  யார் ராஜூ அது? டக்ளஸா?

  ---

  நன்றி பாலா,

  ---

  வால், சைபர் க்ரைம்? ஆமா.. ஓவர் ஆக்டிங்க பார்க்கும் போது, எனக்கென்னவோ இந்த நிகழ்ச்சி போலியா இருக்குமோன்னு சந்தேகம் இருக்கு? போலின்னா, அப்ப.. சைபர் க்ரைம் தான? :(

  ReplyDelete
 14. சாம், உங்க அப்ரோச் எனக்கு பிடிச்சிருக்கு... யோசனை பண்ண வேண்டிய விசயம்.

  ReplyDelete
 15. சூப்பர் ப்ரோக்ராம் போல.

  15 கேள்விக்கு பத்து லட்சமா ? அதுவும் வெறும் உண்மை மட்டும் பேச. வாவ். சூப்பர்.

  ReplyDelete
 16. ***
  இந்த மாதிரி நடக்காத சம்பவத்தை,.polygraph டெஸ்டில் சரியாக சொல்ல முடியுமான்னு ஒரு சந்தேகம்..பார்க்கும் போதே தோன்றியது
  ***

  சந்தேகம் இருந்தா ட்ரை பண்ணி பாக்கணும் ! :)-

  ReplyDelete
 17. மணி, 21 உண்மைக்கு ஒரு கோடியாம். அதோட அவன் தெருக்கோடிக்கு வர வேண்டியதுதான். :)

  ReplyDelete
 18. கட்டம் கட்டி போட்டாச்சா?

  ReplyDelete
 19. அஸ்ஸலாமு அழைக்கும்.
  இஸ்லாமியர்களுக்கான ஒரு முக்கிய பதிவு,பார்த்து நண்பர்களுக்கும் சொல்லுங்கள்.


  http://tamilbazaar.blogspot.com/2009/09/blog-post_14.html

  ReplyDelete

மனம் திறந்து செதுக்குங்கள், என் எழுத்துக்களை.