Showing posts with label வகையில்லா. Show all posts
Showing posts with label வகையில்லா. Show all posts

Sep 7, 2009

அந்தரங்க கேள்விகள் – அதிரும் ஸ்டார்

நாம், நம் நண்பனுக்கு உண்மையாக இருக்கிறோமா? உறவினரிடத்தில்? மனைவியிடத்தில்? அட…முதலில் நாம், நமக்கு உண்மையாக இருக்கிறோமா? நமக்கு மட்டுமே தெரிந்த அந்தரங்க உண்மைகளை உலகுக்கு வெளிச்சம் போட்டு காட்டுகிறது, ஸ்டார் ப்ளஸ் தொலைக்காட்சியின் ‘ஸச்கா சாம்னா’ என்ற தொடர், இதை 'உண்மைக்கு எதிராக' என்று தமிழிலும் படுத்தலாம்.

sackkasamna_full

இது ஒரு கேம்-ஷோ. இதில் பங்கு பெறுபவருக்கு நிகழ்ச்சி நடப்பதற்கு முன்பாக, உண்மை கண்டறியும் (polygraphic) சோதனையில் 50 கேள்விகள், அவர் கடந்து வந்த வாழ்க்கை பாதையில் இருந்தே கேட்கப்படுகிறது. அவற்றில் தேர்ந்தெடுத்து கேட்கப்படும் 21 கேள்விகளுக்கான பதிலை நிகழ்ச்சியில் கேமரா, மனைவி, உறவினர்கள், நண்பர்களுக்கு முன்பாக சொல்ல வேண்டும். சொல்லப்படும் பதில், உண்மையறியும் சோதனையில் அவர் சொல்லியிருந்த பதிலுடன் ஒத்திருந்தால் பரிசு. 21 கேள்விகளுக்கும் சரியான பதில் ‘உண்மை’ சொல்லப்பட்டால் 1 கோடியாம். மற்ற கேம் ஷோக்கள் போலத்தான் விதிமுறைகள், இடையேயும் விலகி போகலாம. கேள்விகள் எது மாதிரியாகவும் இருக்கும். பதில், இனிக்குமா? கசக்குமா? உண்மை… எப்படியிருக்கும்? தெரிந்து கொள்ள நிகழ்ச்சியில் ஒருவருக்கு கேட்கப்பட்ட கேள்விகள்.

அவர் இந்திய விமான படையில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர். நிகழ்ச்சிக்கு அவரது மனைவி, சகோதரன் மற்றும் அவருடைய மனைவி, நண்பர் ஆகியோர் பார்வையாளர்களாக வந்திருக்கிறார்கள். கேள்விகள்…

  1. விமான படையில் தங்களுக்கென வழங்கப்படும் மது வகைகளை வெளியே அதிக விலைக்கு விற்பனை செய்திருக்கிறீர்களா? பதில்: ம்யூட் செய்யப்பட்டுவிட்டது.
  2. பள்ளியில் படிக்கும் போது, பாலியல் புத்தகங்கள் படித்து ஆசிரியரிடம் மாட்டியதுண்டா? பதில்: ஆம்.
  3. உங்கள் மனைவி நன்றாக சமைப்பாரா? பதில்: இல்லை.
  4. உங்களைவிட உயரமானவர்களை கண்டால், தாழ்வு மனப்பான்மை வருவதுண்டா? பதில்: ஆம்.
  5. சகோதரனை, அவருடைய மனைவிக்கு எதிராக திருப்பி விட்டதுண்டா? பதில்: ஆம்.
  6. திருமணத்திற்கு பிறகு மனைவியிடம் அதிகமாக பொய் சொல்வதுண்டா? பதில்: ஆம்.
  7. இராணுவத்தில் இருந்த போது, இராணுவ விசாரனையில் குற்றம் சாட்டப்படும்படியாக (மாட்டியிருந்தால்) ஏதாவது செய்ததுண்டா? பதில்: ஆம்.
  8. உங்களுடைய தாயின் மரணத்திற்கு நீங்கள் காரணமென உணர்கிறீர்களா? பதில்: ஆம்
  9. உங்களுடைய மனைவி, உங்களைவிட சிறந்த கணவரை அடைய தகுதியுடையவர் என நம்புகிறீர்களா? பதில்: ஆம்.
  10. இரயிலில் பயணம் செய்த போது, உங்கள் மனைவி அருகில் இருந்த படுக்கையில் உறங்கிக்கொண்டிருக்க, வேறொருவரை உடல் ரீதியாக துன்புருத்தியதுண்டா? பதில்: ஆம்.
  11. தற்போது பணிபுரியும் அலுவலகத்தில் ஃபோன் செக்ஸ் செய்ததுண்டா? பதில்: ஆம்.
  12. விமான படையில் இயந்திர பணியாளராக இருந்த போது, கவனக்குறைவான ஏதேனும் வேலை செய்ததுண்டா? பதில்: ஆம்.
  13. விமான படையில் இயந்திர பணியாளராக இருந்த போது, நீங்கள் பணியாற்றிய ஏதேனும் விமானத்தின் விபத்திற்கு நீங்கள் காரணமாகியதுண்டா? பதில்: இல்லை.
  14. உங்கள் மனைவிக்குத் தெரியாத ஏதேனும் நோய் உங்களுக்கு உள்ளதா? பதில்: ஆம்.
  15. உங்கள் மனைவியை உண்மையிலேயே விரும்புகிறீர்களா? பதில்: இல்லை.
  16. பாலியல் தொடர்பிற்கான தேடுதலில், உங்கள் மனைவியுடைய ப்ரோஃபைலை இணையத்தில் கள்ளத்தனமாக ஏற்றியதுண்டா? பதில்: ஆம்.
  17. உங்களுடைய நிர்வாண புகைப்படத்தை முகம் தெரியாத வேறு யாருக்காவது அனுப்பியதுண்டா? பதில்: இல்லை.

தவறான பதில். அவர் வென்றிருந்த பத்து லட்சம் ரூபாயோடு வெளியேறினார்.

ஒவ்வொறு கேள்விகளுக்கும் இடையிடையே கலந்து கொண்டவருடைய கருத்தும் கேட்கப்படுகிறது. உறவினர் மற்றும் நண்பர்களுடைய கருதும் ஏதாவதிருப்பின். 15 ஆவது கேள்விக்கு அவரும் அவருடைய மனைவியும் தெரிவித்த கருத்து வியக்க வைத்தது. ‘இது எனக்கு முன்பே தெரியும்’ என்று மனைவியும். ‘விருப்பம், காதல் என்பதைவிட நான் அவளை கவனித்துக் (Care) கொள்கிறேன் என்பது தான் சரியாக இருக்கும்’ என்பதாக அவரும் சொல்கிறார்கள்.

‘ஸச்கா சாம்னா’ முதலாவது நிகழ்ச்சியின் கடைசிக் கேள்வி, திருமணமான பெண்ணிடம் கேட்கப்படுகிறது, “உங்கள் கணவரால் கண்டுபிடிக்க முடியாது என்றால், வேறு யாருடனாவது பாலியல் உறவு வைத்துக்கொள்வீர்களா?” உண்மை கண்டறியும் சோதனையில் அவர் சொல்லியிருந்த சரியான பதில் “ஆம்” என்பது. ஆனால் “இல்லை” என்பது தான் சரியான பதிலாக இருக்கக் கூடும் அல்லது இருக்க வேண்டும் என்ற சமூக நிர்பந்தத்தில் “இல்லை” என்று சொல்லிவிட, பரிசை இழந்தவராக வெளியேறியவருடைய திருமண வாழ்வு முறிந்து விட்டதாக செய்திகள் சொல்கின்றன. இனி அந்தப்பெண், தன்னுடைய மீதி வாழ்வை உண்மையறியும் சோதனையை மெய்பிக்க களிப்பாரா? அல்லது அதற்கு மாறாக சமூகத்திற்காக கழிப்பாரா? தெரியவில்லை :(

இந்த நிகழ்ச்சிக்கு சிலரை நான் முன்மொழிகிறேன்.

  • அரசியல்வாதி: ஊழல், லஞ்சம்.
  • ஆன்மீகவாதி: கடவுளுக்கு மாறு.
  • வழங்கறிஞர்: நீதிக்கு மாறு.
  • மருத்துவர்: யாரேனும் உயிரிழக்க காரணம்.
  • நான், நீங்கள்: சுய துரோகம்.

Aug 14, 2009

யாருக்கு சுதந்திரம் இந்த தினம்?

சுதந்திர இந்தியாவின் இலவச காற்றையும் சுகமாய் இங்கே சுவாசிக்க பயம்.

வீடு திரும்பியும் முகம் கழுவாது முத்திமிட மறுக்கும் மாஸ்க் மனைவி.

வைகையில் நாளை வருவதாய் சொன்னேன் சென்னை முழுக்க ஸ்வைன் ஃப்ளூவாமே இப்போது வேண்டாம் பிறகெப்போதாவது வா- மதுரை மாமா.

திருடனுக்கும் எமக்கும் வித்தியாசம் இல்லா வழியெங்கும் முகமூடி போலி மனிதர்கள்.

சுயமாய் சிந்திக்கவும் சுதந்திரம் அற்றுப்போய் கம்பிக்கு வெளியும் சிறைக் கைதியாய் கட்டளைக்கு காத்திருக்கும் இயந்திரமாய் மனிதன்.

கோவத்தோடு சேர்ந்தே குடும்ப நினைவும் உடனே மாறும் பாசாங்கு சிரிப்பின் மொன்னை மனிதன்.

எனது நாளையை தனதாக்கிக் கொள்ள கூடவே நிற்கும் கொள்ளைக் கூட்டம்.

ஆங்கிலேயன் விடுதலையான ஆகஸ்ட் பகுதியில் யாருக்கு சுதந்திரம் இந்த தினம்?

Aug 3, 2009

வெண் பாவம்

எண்ணிச் செய்யலம்மா கன்னி முயற்சியம்மா மன்னிப்பது ஐயம்மா பாராமாத்மா?

<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>

ஒன்னால நான் கெட்டேன் என்னால நீ கெட்ட – ஆனது ஆகிப்போச்சு ஓடிப்போயி ரெண்டு பேரும் ஒண்ணா வாழாத... பின்ன,

காதலிச்ச உன்ன அங்க கைவிட்டு வந்தா இங்க காக்கா குருவி கூட காறிதுப்பி கதக்கிதடி கண்கலங்காம அவள காப்பாத்த வக்கில்ல கணக்கெழுத வந்திட்டானாம் - கம்பனாட்டம் இவன் கம்ப்யூட்டர் முன்னால தூ.

<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>

ஊரெல்லாம் சொத்து நீ சேக்கற நாளெல்லாம் செத்து நான் பொழைக்கிறேன் ஏசி காத்தில நீ உறங்கற - தூக்கமில்லா என்னை தூசு கட்டில்ல பார்.

<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>

பானைல இருக்கற பாயாசம் ஊத்துன்னா… ஏனையா ஒமக்கு இந்த அவசரம், பேசாம இருமையா மிஞ்சினா பாப்போங்கறா - தவிச்ச என் வாய்ல தண்ணி கொஞ்சம் காணிச்சாக்கா - பிரிச் தண்ணி பையனுக்கு வேணுங்கறா.

<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>

ஆத்திகரா நாத்திகரா அதுதான் மீண்டும் அனைவருக்கும் சந்தேகம் - அறிந்தது நான் நாத்திகம் பேசும் ஆத்திகர் அவர் என - தெரிந்தாலும் அண்ணன் கோ ச்சுக்க மாட்டார்.

<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>

கம்பனின் காதலை கண்ணியமாய் சொல்லி கண்முன் காட்டினான் கார்பரேட் கவிஞன் விளையாட்டாய் சிலர் விரித்த வீம்பு வலையில் விழாமல் விரட்டி - விட்டான் திரட்டி

<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>

கதைகள் சில பின்னினான் கின் என்ற பையன் அவைகள் பல கண்களுக்கு பலாதென் தெரிய ஒவ்வொன்றாய் எடுத்துச்சொல்லி அவ்வாறே அவன் வினவ - அவ்விதழ் அவதானிப்பு அங்கணம் - அதனால்நான் ஆக்கினேன் அங்ஙனம் - அதுதான் எமக்கிருந்த அக்குத்து - நீ கொஞ்சம் அப்டிகா ஒத்து மாமேன்னான் - நீலர் ஆட்டமாடும் நம் வாலிபகண்ணன்.

<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>

பிரபல பதிவர் அவர் - எவருக்கும் பிறர் பலம் பாராது பின்னூட்டார் - அவருக்கும் பின்னாளிட்டார் ஆப்பு யார்?

<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>

சத்தியமா நான் பத்தாப்பு தாண்டலப்பு சந்திச்ச பத்தியில ஏதாச்சும் தப்பிருந்தா பக்குவமா திட்டுங்கப்பு - என் தாத்தா பயபுள்ள திண்ணையில நிக்கறவ - பாத்தா ஆகிடுவா பத்திரகாளியாட்டம்.

<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>

இவைக்கெல்லாம் வைத்த பெயர் வெண்பாம் அவையோர் வைதார், இங்கு வந்த எமக்கு இதுவும் வேணுமாம் இன்னமும் வேணுமாம், இத்தோடு வைத்தேன் பேனாவை தூர.

இனியேனும் அங்கே இனியதாய் இருக்கட்டும் இன்ஷா அல்லாஹ்.

<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>

எண்ணிச் செய்யலம்மா கன்னி முயற்சியம்மா மன்னிப்பாரம்மா என்னை பாராமாத்மா! ;)

<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>> <<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>> <<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>

இது வெண்பா

ஓரடி முக்கால் குறள்வெண் பாவே ஈரடி முக்கால் சிந்தியல் வெண்பா மூவடி முக்கால் அளவியல் வெண்பா பலவடி முக்கால் பஃறொடை வெண்பா பஃறொடை மிக்கது கலிவெண் பாவே. -தொல்காப்பியம்.

Apr 13, 2009

சிவா மனசுல சக்தி

சிவா மனசுல சக்தி

நிலையாமை: நான் இதுவரை மேலே தலைப்பிட்டுள்ள தலைபுள்ள திரைப்படம் பார்க்கவில்லை.

ஜகா வாங்குதல்: இதில் வரும் கதாபாத்திரங்கள் அனைத்தும் கற்பனையே, யாரையும் குறிப்பிடுபவை அல்ல.

சிவகுமாரும் க்திபிரியாவும் மதுரையில் ஒரே வங்கியில் காசாலராகவும் , கணக்காளராகவும் முறையே குப்பை கொட்டுகையில் காதலித்து திருமணம் செய்து கொண்டர்கள். திருமணம் ஆகி 6 மாதமாக அதே குப்பைதான்.

சிவா,"க்தி, ம்மஎவ்ளோ நாளா தேனிலவு போகலாம்னு நினைக்கிறோம் ம்மரெண்டு பேருக்கும் லீவு கிடைக்கமாகிங்கிறதே, என்னடி ண்ணலாம்?"

"வெயிட் பண்ணுங்க, ஏதாவது விடுமுறை சேந்மாதிரி ந்துச்சுனா நிச்சம் போகலாம்" க்தி.

"சிவா ஒரு குட் நியூஸ் அடுத்த மாசம் தீபாவளியும், ம்ஜானும் ருதுலஅதையொட்டி ர்ரநாள்ளபேங்லவேலை நிறுத்தம் ண்ணபோறதா பேச்சு க்குது. நாமஅப்பவே டூர் ப்ரோக்ராம் ச்சுகலாம்ங்க" க்தி.

"சரி சக்தி... நான் அப்டியே ட்ரெயின் டிக்கெட் புக் ண்ணிட்டு ந்துட்றேன்".

"லோ... க்தி, 3 ஆம் தேதி வெள்ளிக்கிழமை.. யிட்டு ட்ரெயின், ஞாயிறு சாயங்காலம் டெல்லி போயிடும்.6 ஆம் தேதி திங்கள் இருந்து 9 ஆம் தேதி வியாழன் ரை டெல்லி, ஆக்ரா சுத்திபாத்துட்டு... வெள்ளி திரும்பி ர்ரமாதிரி டிக்கெட் இருக்கு புக் ண்ணிடவா?"

"ரிங்க... என் செல்லம், ஆமா எங்கஇருந்து பேசுரிங்க? ஒரே இரைச்சலா இருக்கு?"

"நான் ங்ஷன்லஇருந்து பேசுறேம்மா"

"ரி சிவா, அதே மாதிரியே புக் ண்ணிடுங்க. பை, டேக் கேர்.. ல்வ் யூ"

வெள்ளி மதியம் வங்கியில்,

"என்னங்க நம்ம டூர் போரதுல ஒரு பிரசனைங்க"

"என்னம்மா, சக்தி?"

"அந்த சொட்டதல மானேஜர் போன மாச கணக்கு எல்லாத்தையும் இன்னைக்கே முடிச்சு குடுத்துட்டு தான் போகணும்னு சொல்றார் ங்க... பேங்ல வேர கூட்டம் அதிகமா இருக்கு, என்ன பண்றது ஒன்னுமே புரியல, சிவா… எனக்கு டென்சா இருக்குடா."

"பதட்டப்படாத, நான் போயி டிக்கெட நாளைக்கு மாத்த முடியுமானு பாத்துட்டு வாரென்"

"ஹலோ...ஹலோ... சக்தி, நாளைக்கு டிக்கெட் அவைலபில் இல்ல,"

"ஐயோ..என்னங்க சொல்றீங்க?"

"லிசன். நான் ஒரு ஐடியா சொல்றேன் கேக்குறியா?"

"ம்..ம்ம்.. சொல்லுங்க"

"இன்னைக்கு டியிரென்ல நான் கிளம்புறேன், நீ ஞாயிறு பிளைட்ல வந்துடு. நான் போயி ரூம் எல்லாம் ரெடி பண்ணிட்டு, டெல்லி ஏர்போட்ல உன்னைய பிக் அப் பண்ணிகிறேன். சரியா?".

"ஏங்க.. இது சரியா வருமா?"

"வேற வழி இல்லம்மா, இதை தவரவிட்டுட்டோம்னா, மறுபடியும் இந்த மாதிரி சந்தர்பம் கிடைகுமானு தெரியாது"

"அப்ப சரிங்க.. அதே மாதிரியே பண்ணிடலாம்"

ஞாயிறு மதியம், டெல்லி, கரோல் பர்க், க்ளார்க் இன்டர்னேஷனல் ஹோட்டல். (முழுவதும் வைஃபை செய்யப்பட்ட அறைகள்)

நல்லபடியாக வந்து சேர்ந்துவிட்டதை மின் மடலில் அனுப்பிவிட்டு, தூங்கி எழுந்து மெதுவாக தொலைபேசலாம் என சிவா தனது மடிக்கணிணிக்கு உயிர் கொடுக்கிறான்.

காட்சி 2:

அமெரிக்கா, கலிஃபோர்னியா:

முதல் நாள் சாலை விபத்தில் கணவனை இழந்த இந்தியாவை சேர்ந்த அமெரிக்க குடியுரிமை பெற்றவிதவை. இந்தியாவிலிருந்து தனது உறவினர்கள் அனுப்பியிருக்கும் இரங்கல் மின் மடலை வாசிப்பதர்க்காக மடிக்கணிணியில் முதல் மின் மடலை வாசித்ததும் மயங்கி கீழே விழுந்துவிடுகிறாள்.

உடனே ஓடி வந்த அவளது மகன் கணிணி திரையில் திறந்திருக்கும் மின் மடலை வாசிக்கிறான்.

மீண்டும் காட்சி 1:

சிவா தட்டச்சுகிறான்,

To: sakthipriya@ஏதோவொறு.com (சக்தி டாட் பிரியா @ ஏதோவொறு டாட் காம் என்பது தான் சரி, ஆனால் சிவா வைத்த டாட் (புள்ளி) தவறிவிட்டது)

ஆசை மனைவிக்கு, உனக்கு முன்பாகவே வந்து சேர்ந்துவிட்ட கணவன் எழுதுவது;

நான் இங்கு வந்து விட்டேன் மேலும் நமக்காக ஒதுக்கப்பட்ட இடத்துக்கும் வந்து சேர்ந்துவிட்டேன். உன் வரவுக்கு வேண்டி இந்த இடம் காத்துக்கொண்டிருக்கிறது. நான் வந்ததை போலல்லாமல் உன் பயணம் நன்றாக இருக்கும் என நம்புகிறேன். உன் வரவை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும்.

உன் கணவன்.

Nov 7, 2008

நான் ஒருவன்,

நான் ஒருவன், நான் ஒருவனே, என்னால் எல்லாவற்றையும் செய்துவிட முடியாது, ஆனால் ஏதாவது செய்ய முடியும், என்னால் செய்ய முடிந்ததை, செய்ய மறுக்க மாட்டேன், செய்ய தவற மாட்டேன்! நம்பு நான் ஒருவனே!!!