Dear Friend.
Good day to you, I am so sorry for sending you unsolicited mail, I got your contact from a Gulf Business directory I saw in my agents office and decided to contact you directly for the sake of business,My name is steven madurn from Gambia. I am now in United Arab Emirates searching for a reliable business partner, I have about 5.5 million dollars and would want to invest it here in Dubai, am only soliciting for your assistance to help me .If you are willing to invest in this business please give me your confidential,
contact phone number so that we can see and discuss in details.
Thank you once again for your interest.
Steven madurne
Oct 30, 2010
ஐக்கிய அரபு அமீரகத்தில் முதலீடு செய்ய நான் தயார்
May 28, 2010
கல்வி மற்றும் வேலைவாய்ப்பு - புதிய வலைப்பூ
மிக நீண்ட இடைவேளைக்குப்பிறகு நான் இங்கே மீண்டும். (வெல்கம் பேக்கு ;) அதுவும் என் புதிய வலைப்பக்கத்தை அறிமுகம் செய்யவே.
கல்வி மற்றும் வேலைவாய்ப்பிற்காக புதிதாய் ஒரு வலைப்பக்கத்தை திறந்துள்ளேன். பயனர்களுக்கு பயன்பெறத்தாருங்கள். உங்களிடம் இருக்கும் வேலைவாய்ப்புகளையும் அனுப்பித்தாருங்கள்.
அங்கு புதிய பதிவு...
http://nafjobs.blogspot.com/2010/05/urgent-recruitments-netsol-ibm.html
நன்றி
Sep 22, 2009
மொ போல் ஒருவன்
- 1 1/2 மணிநேரம் பொழுது போனது தெரியவில்லை. கொடுத்த காசுக்கு பாதகமில்லை. (போன பொழுது, சற்று கவலையோடு போனது வேறு விஷயம்.)
- வெற்று பைகளை பொது இடங்களில் வைப்பதாக சுற்றப்பட்ட காட்சியமைப்பு தேவையில்லாதது. அதே போல, பல இடங்களில் சுற்றியிருக்கிறார், காதிலும்.
- மாடியில் ஏறும் போது, இஸ்லாமியர்களின் இறை வழிபாட்டு அழைப்பான ‘பாங்கு’ சொல்லப்படும். அது நேரம் தோராயமாக 8 - 9 மணியிருக்கலாம். அந்நேரத்தில் (காலை 6 லிருந்து உச்சி 12 வரை) ‘பாங்கு’ சொல்லப்படுவதில்லை.
- 2002ல் குஜராத்தில் நடந்த கலவரத்திற்கு பழிதீர்க்கவே 1998ல் கோவையில் குண்டுவைத்ததாக தீவிரவாதிக்கு கொசுவத்தி. (கமலுக்கும் தேசிய வியாதி?)
- ஊடகத்துறையில், எல்லா பெண்களும் புகை பிடிக்கிறார்களா?பெண்களிடம் மைக்கை கொடுத்து, கேமரா பிடிப்பது தான் ஆண்கள் வேலையா?
- எல்லா கணவன்களும் மனைவியிடம் அடி வாங்குகிறார்களா?மனைவியிடம் அடிவாங்கும், எல்லா கணவன்களும் காவல்துறையில் புகார் செய்கிறார்களா?
- எல்லா வீட்டிலும் சந்தைக்குச் செல்வது கணவன்களா? காலையில் தக்காளி வாங்க சென்றவர், மாலையில் தான் வீடு திரும்புவாறா? மாலை வீடு திரும்ப இருப்பவர் ஏன் காலையே தக்காளி வாங்க வேண்டும்?
- எல்லா கணினி ஹேக்கர்களும் ஒரு மாதிரி தலையை ஆட்டி ஆட்டித்தான் பேசுவார்களா?
- எல்லா கணினி மேதைகளும், ஒரு முறை பாவித்த மடிக்கணினியை மறு முறை பாவிக்க மாட்டார்களா?
- வாங்கிய 6 கிலோ ஆர்டிஎக்ஸில், காவல் நிலையத்தில் வைத்தது போக மீதி எங்கே?
- ரிலையன்ஸில் போலி சிம் வாங்குவது எளிதா? 5 அல்லது 6 முறை தொலைபேசுவதற்கு, ஒரு பிஸ்னஸ் கார்ட் ஆல்பம் முழுவதும் சிம் கார்ட் வைத்திருப்பது ஏன்?
- வெடிகுண்டு தீவிரவாதிக்கு, வெடிகுண்டு தண்டனை, சரி. பிறப்புறுப்பில் கைவைத்த தீவிரவாதிக்கு? :-( தீவிரவாதத்திற்கு தீவிரவாதம் தான் தீர்வா? எனில், குறை எண். 3 ற்கும் இதற்கும் தொடர்புள்ளதா? ஆம் எனில், ஒவ்வொரு காமன் மேனுக்காகவும் ஆர்டிஎக்ஸ், ரேஷன் கடையில் விற்பனை செய்ய வேண்டி வருமே... யு... ஸ்டுப்பிட் காமன் மேன்.
Aug 25, 2009
வீம்புநிலை வியாபாரிகள்
சரியாகச் சொல்லவதென்றால், இதை எழுத வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை. முன்னர் நான் எழுதியிருந்த விளிம்புநிலை வியாபாரிகள் இடுகையில் நணபர்களின் பின்னூட்டங்கள் பார்க்கும் வரை. தீபாவளி திடீர் கடைகளையும், பாலியல் தொழிலாளர்களையும் வீம்பு நிலை வியாபாரிகள் என்று நான் குறிப்பிட்டிருந்ததை சில நண்பர்கள் மறுத்திருந்தனர். என் கருத்தையே அனைவரும் கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை, அதே போல நானும். நமது பார்வையினூடாய் நிலைபாடுகள் தீர்மானிக்கப்படுவதால், என் நிலைபாட்டிற்கான பார்வையை உங்களுக்கும் பகிர வேண்டியது என் உரிமையும் கடமையும் ஆகிறது.
தீபாவளி திடீர் கடைகள்; இவைகள் திடீரென்று முளைக்க காரணம், குறுகிய காலத்தில் அதிக லாபம் அள்ளும் தொழில், முதலீடு முடக்கப்பட வேண்டிய அவசியம் இல்லை மற்றும் தரமற்ற பொருளை விற்பனை செய்வதால், நுகர்வோர் திரும்ப வருவார் என்கிற அச்சம் இல்லை. வியாபார சரக்கு, தீபாவளிக்கு ஒரு சில தினங்களுக்கு முன்பு, மொத்த வியாபாரியிடம் கொள்முதல் செய்யப்படும், விற்காத சரக்கு திரும்ப தரப்படும் என்ற ஒப்பந்தத்தோடு. தீபாவளிக்கு அடுத்த நாள், கையிருப்பு சரக்குகள் திரும்ப தரப்பட்டு கணக்கு முடிக்கப்படும். இத்தகைய சரக்கின் தரம், சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இவர்களுக்கு தெருவோரக்கடை அல்ல தொழில். வேறு தொழிலில் இருப்போரால் திடீர் கடைகள் நடாத்தப்படுகின்றன. நஷ்டத்திற்கான வாய்ப்பு இல்லாததால் லாபம் மட்டுமே இறுதி வடிவம் பெறும். அம்பானிகளுக்கும் அடிசறுக்கும் காலம் இது. லாபம் மட்டுமே வாரிச்சுருட்டும் ஒரு வியாபாரியை விளிம்பு நிலை வியாபாரி என்று சொல்வது பொருந்தாது என்பது என் புரிதல். ஏதோ ஒரு காரணத்தால், ஒரு வேளை இவர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுவிட்டாலும், ஒதுக்கித்தள்ளிவிட்டு ஒரிஜினல் தொழிலை பார்க்க போய் விடுவார்கள்.
சரி.. அப்போ பாலியல் தொழிலாளர்கள்? நான் தீபாவளி திடீர் கடைகளை மட்டும் அவ்வாறுச் சொல்லியிருந்தால் நண்பர்கள் ஒரு வேளை ஏற்றுக்கொண்டிருக்ககூடும். பாலியல் தொழிலாளர்கள், வியாபாரிகள் அல்லர். அவர்கள் ஒரு வியாபாரப் பொருள், உபயோகித்தபின் திரும்ப கொடுத்துவிடும் காஃபி கப் போன்ற சரக்கு அவர்கள். (சில இடங்களில் டிஸ்பாஸபில் கப் ஆகவும் பாவிக்கப்படுவதுண்டு) இந்தத் தொழிலில் வியாபாரி, பாலியல் தொழிலில் தள்ளப்பட்டவருடைய (சரக்கை சந்தைக்கு கொண்டு செல்லும்) சமூகச் சுழல்களாகிய, குடும்பம், வறுமை, அறியாமை, ஆசை, உணர்ச்சி, போதை, மன அழுத்தம் மற்றும் சந்தேகமில்லாமல் அவர்கள் மீது திணிக்கப்படும் இன்ன பிறவும் அடங்கும். இந்தச் சூழல்களை வீம்புநிலை வியாபாரிகள் எனச் சொல்கிறேனா என்றால்… இல்லை. நகைமுரண் :) குழப்பாமல் விஷயத்திற்கு வருகிறேன்.
பாலியல் தொழிலை யாரும் விரும்பி செய்வதில்லை. அதீத உணர்ச்சி, ஒரு வகையான ஆசை, போதா இன்பம் போன்ற காரணங்களினால் விரும்பியே சிலர் வந்திருந்தாலும், இவை எல்லாம் போதும் என்றானாலும், பரவலாக அறியப்பட்ட பின் சமூகம் இவர்களது மீள்வரவை ஏற்றுக்கொள்வதில்லை. வறுமை காரணமாக இத்தொழிலில் நுழைபவர்களுக்கும் இதே நிலை தான். வறுமானத்திற்கான மாற்று ஏற்பாட்டில் இனி வறுமை இல்லை என்றான பிறகும், குடும்பமே இவர்களை புறக்கணிக்கும் சூழலில் உணர்ச்சியற்ற உயிர் பொருளாக உடலை சில நிமிடங்கள் கிடத்தி வைக்க வேண்டிய நிலை. விரும்பியும் விரும்பாமலும் தொடர வேண்டிய நிர்பந்தம். ஆண் பாலியல் தொழிலாளியின் நிலை இன்னும் மோசம். விருப்பமில்லாமலேயே அவன் இயங்க வேண்டியிருக்கிறது. சில சூழ்நிலையில் அதைவிட கொடுமையாக அவன் மீது இயக்கம் செலுத்தப்படுகிறது. இவர்கள் கூட எந்த நேரத்திலும் தொழிலை மாற்றிக்கொண்டு மீண்டு விடுவார்கள். பெண் தொழிலாளியின் நிலையே, வேதனைக்குள்ளானது.
இதற்கான தற்போதைய தீர்வு பாலியல் தொழிலாளர்களுடைய மீள்வாழ்வு. இடமாற்றத்தின் மூலம் வாழ்வாதார உரிமைகள் மீட்கப்பட்டு மீள்வாழ்வு சாத்தியம் என்றாலும், உடற்சந்தையில் கிராக்கியும், முதலீடு இல்லாமல் குறைந்த நேரத்தில் அதிக பணம் பண்ணக்கூடிய ஒரே தொழிலாக, அனுபவமிக்க தொழிலாக பாலியல் தொழில் இருப்பதால் சட்டென்று விட்டுவிட முடியாத பாலியல் தொழிலாளர்களுடைய நிலை, வீம்பு நிலை. இந்நிலையில் அவர்களுக்கு இறுதியில் மீதமிருப்பது பணம், தொற்றிய நோய் மற்றும் வேதனைகளே. அவர்களிடையே மீள்வாழ்விற்கான அவசியத்தை உணர்த்தி, அதை நடைமுறைப்படுத்தல் அவசரமான அவசியம்.
பாலியல் தொழிலாளர்கள் மீதான பரிதாபப் பார்வை, போலி முற்போக்குவாதத்தின் முகமூடியாகப்படுகிறது. பாலியல் தொழிலை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதும் எனக்கு சரியாகப்படவில்லை. கண்டும் காணாமல் நடக்கும் தொழில் எங்கும் காணக்கிடைக்கும். வறுமையை காரணம் காட்டி, பல புதியவர்கள் உள்ளே நுழையும் / நுழைக்கப்படும் வாய்ப்புகள் அதிகம். நடைமுறைப்படுத்தப்பட்ட சந்தையில் பொருளுக்கான கிராக்கி கூடிவிடுவதால், கடத்திவரப்படும் பெண்வணிகம் அதிகரிக்கும். அதேபோல பாலியல் தொழில் நடைமுறைப்படுத்தப்பட்டால், பெண்களுக்கெதிரான வன்கொடுமை குறையும் என்பதையும் ஏற்களாகாது. பெண்களுக்கெதிரான பாலியல் வன்கொடுமையானது இனக்கவர்ச்சியில் நடத்தப்படுவது. அவை கடுமையான சட்டங்கள் அல்லது முறையான பாலியல் கல்வி மூலம் மட்டுமே குறைக்கப்படலாம் என்பதும் என் புரிதல். பாலியல் முற்றிலுமாக தடுக்கப்பட்ட நாடுகளில் வன்கொடுமை விகிதம் குறைவு என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
பாலுறுப்புகளை அவற்றின் நேரடி பெயர் கொண்டு எழுதுவது பாவம் என்ற சமூக கட்டமைப்பை எதிர்த்தாலும், இன்னும் நாம் அவற்றை எழுத்தாக்கத் தயங்குவதற்கு காரணம், நம் கலாச்சாரம், சுழல் என்றால் அது மிகையாகாது. கலாச்சாரம் குப்பைத்தொட்டி என்பதால் மட்டுமே அது இல்லை என்றாகிவிடாது. என்னதான் நவீனத்துவம் பேசினாலும், வெகுசன சமூகத்தினூடே ஒன்றிப்போயிருக்கும் கலாச்சாரம் என்ற குப்பைத்தொட்டியும் முன்நிறுத்தப்பட்டு முரணான விவாதங்கள் செய்யப்படுவதால் மட்டுமே, ஏதேனும் மாற்றம் நிகழ வாய்ப்புண்டு. அல்லாது காலச்சாரத்தையே முற்றிலுமாக மாற்ற முயல்வது, எதிர்மறை விளைவுகளையே தரும் என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.
நன்றி!
Aug 14, 2009
யாருக்கு சுதந்திரம் இந்த தினம்?
சுதந்திர இந்தியாவின் இலவச காற்றையும் சுகமாய் இங்கே சுவாசிக்க பயம்.
வீடு திரும்பியும் முகம் கழுவாது முத்திமிட மறுக்கும் மாஸ்க் மனைவி.
வைகையில் நாளை வருவதாய் சொன்னேன் சென்னை முழுக்க ஸ்வைன் ஃப்ளூவாமே இப்போது வேண்டாம் பிறகெப்போதாவது வா- மதுரை மாமா.
திருடனுக்கும் எமக்கும் வித்தியாசம் இல்லா வழியெங்கும் முகமூடி போலி மனிதர்கள்.
சுயமாய் சிந்திக்கவும் சுதந்திரம் அற்றுப்போய் கம்பிக்கு வெளியும் சிறைக் கைதியாய் கட்டளைக்கு காத்திருக்கும் இயந்திரமாய் மனிதன்.
கோவத்தோடு சேர்ந்தே குடும்ப நினைவும் உடனே மாறும் பாசாங்கு சிரிப்பின் மொன்னை மனிதன்.
எனது நாளையை தனதாக்கிக் கொள்ள கூடவே நிற்கும் கொள்ளைக் கூட்டம்.
ஆங்கிலேயன் விடுதலையான ஆகஸ்ட் பகுதியில் யாருக்கு சுதந்திரம் இந்த தினம்?
Aug 12, 2009
விளிம்புநிலை வியாபாரிகள்
அந்த இட்லிக்கடை நடத்துபவர் பெயர் இட்டலிக்காரம்மா. கடைக்குப் பெயரில்லை, கடை நடத்துபவர் பெயரையும் யாரும் தெரிந்து கொள்ள விரும்பியதில்லை. இது பெரும்பாலான தெருவோர கடைகளுக்குப் பொருந்தும். இத்தகைய கடைகளுக்குப் பெயர் போனது மதுரை. விலை உயர்ந்த உணவகங்களை காட்டிலும், நமக்கான விருப்ப சுவை கிடைப்பதும், அவை பர்ஸை பதம் பார்காததும் பலரை அங்கு அழைத்துச் செல்வதுண்டு. அதில் கடைக்காரர் பெயர் தெரிந்து என்ன செய்ய. போத்தீஸ்கடை, ஆத்தா கடை, ஐயப்பசாமி கடை என்று அந்த கடைகள் அடையாளப் படுத்தப்படுவதுண்டு. இரவு 7 மணிக்குப்பிறகு ஆரம்பமாகும் இக்கடைகள் நள்ளிரவு 2 மணிவரை கூட (திறந்திருப்பதுண்டு என்று சொல்வது பொருந்தாது, கதவில்லாக் கடைகள்) அடுப்பு எரிப்பதுண்டு. சென்றமர்ந்ததும் 4 இட்லி, பிறகு ஒரு தோசை அடுப்பில் இருந்து நேரடியாக நம் தட்டுக்கு மாற்றப்படும். கடைசியாக ஒரு முட்டை தோசையுடன் கை கழுவலாம். ‘14;50 குடுப்பா’. ‘ஒர்ருவா கம்மியா இருக்கேக்கா...’ ‘பரவாயில்லப்பா.. நாளபின்ன வந்தா குடு’. இருவரும் வியர்வையின் விலை தெரிந்தவர்கள், ஏமாற்றமாட்டார் என்ற நம்பிக்கை.
சில குடியிருப்பு பகுதிகளில் காலை மட்டுமே விரிக்கப்பட்டிருக்கும் கடைகளில் ஒன்றுதான் இட்லிக்காரம்மாவுடையது. ஜீவாநகரில் இருந்தபோது, எங்கள் தெருவோரத்தில் இருந்த இட்லி கடையில் எனக்கு பள்ளி மதிய உணவிற்கு இட்லி வாங்கித் தருவது அம்மாவின் வழக்கமாயிருந்தது. வீட்டை ஒட்டியே என் உறவினரின் பிரபல ஹோட்டல் இருந்தும் தெருவோரக் கடையில் இட்லி வாங்குவதற்கான சில காரணங்கள், ஹோட்டலை விட இங்கு பெரிதாய் கிடைக்கும் இட்லி, வீட்டுச் சுவையிலேயே சாம்பார் சட்னி, சில நேரங்களில் இலவசமாய் கிடைக்கும் குழிப்பணியாரம். அதைவிட முக்கியம் கைராசி.
தினமும் அதிகாலையில் பெருக்கி, நீர் தெளித்து கோலமிட்டு அதன் மேல் அடுப்பு ஏற்றப்படும். இரண்டே அடுப்புதான். இட்லி, குழிப்பணியாரம் இரண்டே மெனு தான். தோசைக்கு காத்திருக்க வேண்டும், இட்லி பாத்திரம் இறக்கப்பட்டு தோசைக்கல் ஏற்றப்படும்வரை. என்னயிருந்தாலும் ஏழு மணிக்கு முன்பு வியாபாரம் ஆரம்பிப்பதில்லை. ஏழு மணி என் தம்பி தூங்கி எழும் நேரம். அவன் கை ராசிக்கையாம். அவன் கையால் வியாபாரம் ஆரம்பித்தால் சுபிச்சமாக இருக்கும் என்பது இட்லிக்காரம்மாவுடைய நம்பிக்கை. அப்பாவிற்கு அந்த நம்பிக்கையில் நம்பிக்கை இல்லை என்றாலும் இட்லிக்காரம்மாவுடைய நம்பிக்கைக்காக தம்பியை தினமும் அனுப்பிவைப்பார், போனி செய்ய. அவனும் அந்தம்மா கடையில் இருந்தே 10 பைசா எடுத்து கொடுத்து ஒரு குழிப்பணியாரம் வாங்கி வருவான். அவன் கையால் பணம் வாங்குவதற்கு முன் இட்லிக்காரம்மா பணத்தைத் தொட மாட்டார். அவசரம் என்றால் மட்டுமே, தாமாக பணத்தை தட்டில் போட்டு இட்லியை எடுத்துச் செல்ல வேண்டும். அவருக்கு நம்பிக்கை என் தம்பிக் கை மீது. நாங்கள் வீடு மாறிய சில நாட்களிலேயே அவரும் கடையை நிறுத்திவிட்டதாக அறியப்பெற்றேன். ராசிக்கை போன கவலையாயிருக்கும்.
டவுன்ஹால் ரோடு, மதுக்கடைகள் அதிகமாக இருக்கும் தெருவில் ஒருவர் தள்ளுவண்டியில் கடலை வியாபாரம் செய்கிறார். வண்டியை தள்ளலாம் என்றாலும் ஒரே இடத்தில் தான் வியாபாரம். வியாபாரம் இல்லாத நாட்களிலும் வண்டி அங்கேயே இடப்பட்டிருக்கும். சரக்கு தானியில் கொண்டுவரப்படலாம். ஆள் பார்க்க சுத்தமாக இருப்பார். நெற்றியில் எப்போதும் காணப்படும் ஒரு இன்ஞ் திருநீறு, வாடிக்கையாளரை வரவேற்கும் இன்முகம். அவருக்கு தன் வியாபார சரக்கு சுத்தமாக இருக்க வேண்டும். கடலையை கரண்டியில் தான் எடுப்பார், சரக்கில் கைபடுவதில்லை, யாரையும் கைவைக்க விடமாட்டார். சுத்தம் தான் என் முதலீடு என்பார். அதற்காகவே பலரும் அங்கு செல்வதுண்டு. ஃபுட் ஸேஃப்டி படித்த எனக்கு, சில குறைபாடுகள் கண்ணில் தெரியும். முக்கியமாக கடலை மடித்து கொடுக்கும் குமுதம், குங்குமம், ஆவி, தினமலர், மாலைமலர் போன்றவை வாசிக்கப்படும் சூழல், அதை நேரடியாக எடைக்கு வாங்கும் பழைய பொருள் தரகர். அது விற்கப்படும் மொத்தக் கடை. அங்கெல்லாம் நிறைந்திருக்கும் சுத்தமும் சுகாதாரமும். ஆனாலும் தன்னளவில் சுத்தமாக இருக்கமுனைபவரிடம் அவையெல்லாம் நினைவூட்டுவது அவரது நம்பிக்கையை தகர்ப்பதாக ஆகிவிடும். எனக்கு கடலை நினைவு வரும் போது சொந்த பாத்திரத்தில் வாங்கிவருவதன் காரணம் அதன் சுவை, என் விருப்ப சுவை.
மீனாட்சியை தருசிக்க வரும் கேரள ஆந்திர பக்தர்களை குறிவைத்து நடத்தப்படும் மார்கழி மாத மாசி வீதி கடைகளும் பிரசித்தி. அத்தகைய நடைகடை வியாபாரிகளில் பெரும்பாலானோர் ஐயப்ப பக்தர்களாக இருக்க பார்த்திருக்கிறேன். வியாபார நுண்ணரசியல். எழுகடல் தெருவில் ப்ளாஸ்டிக் பொருட்கள் மொத்தமாக வாங்கி, மதுரை முழுக்க தள்ளுவண்டியில் சில்லறைக்கு விற்பவர். சுக்குமல்லி காபி, போளி, போண்டா போன்றவற்றை சைக்கிள் உருட்டியே தினமும் விற்று தீர்ப்பவர் மற்றும் இளநீர், காய்கறி விற்கும் இன்னும் பலர்.
இவர்களுக்கெல்லாம் அன்றைய வியாபாரத்தின் லாபம் தான் அடுத்த நாளுக்கான சோறும், முதலீடும். நான்கைந்து நாட்கள் தொடர்ந்தார்போல் வியாபாரமோ அல்லது வியாபாரியோ படுத்துவிட்டால், அடுத்த நாள் சோற்றுக்கு கந்துவட்டியிடம் கையேந்தும் விளிம்புநிலை வியாபாரிகள் இவர்கள்.
மணிகளில் ஆயிரங்கள் பார்க்கும் தீபாவளி திடீர் கடைகளையும், பாலியல் தொழிலாளர்களையும் விளிம்புநிலை வியாபாரிகள் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ளமுடியாது. நான் இவர்களை வீம்புநிலை வியாபாரிகள் எனச் சொல்லுவேன்.
நன்றி!!!
Aug 3, 2009
வெண் பாவம்
எண்ணிச் செய்யலம்மா கன்னி முயற்சியம்மா மன்னிப்பது ஐயம்மா பாராமாத்மா?
<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>
ஒன்னால நான் கெட்டேன் என்னால நீ கெட்ட – ஆனது ஆகிப்போச்சு ஓடிப்போயி ரெண்டு பேரும் ஒண்ணா வாழாத... பின்ன,
காதலிச்ச உன்ன அங்க கைவிட்டு வந்தா இங்க காக்கா குருவி கூட காறிதுப்பி கதக்கிதடி கண்கலங்காம அவள காப்பாத்த வக்கில்ல கணக்கெழுத வந்திட்டானாம் - கம்பனாட்டம் இவன் கம்ப்யூட்டர் முன்னால தூ.
<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>
ஊரெல்லாம் சொத்து நீ சேக்கற நாளெல்லாம் செத்து நான் பொழைக்கிறேன் ஏசி காத்தில நீ உறங்கற - தூக்கமில்லா என்னை தூசு கட்டில்ல பார்.
<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>
பானைல இருக்கற பாயாசம் ஊத்துன்னா… ஏனையா ஒமக்கு இந்த அவசரம், பேசாம இருமையா மிஞ்சினா பாப்போங்கறா - தவிச்ச என் வாய்ல தண்ணி கொஞ்சம் காணிச்சாக்கா - பிரிச் தண்ணி பையனுக்கு வேணுங்கறா.
<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>
ஆத்திகரா நாத்திகரா அதுதான் மீண்டும் அனைவருக்கும் சந்தேகம் - அறிந்தது நான் நாத்திகம் பேசும் ஆத்திகர் அவர் என - தெரிந்தாலும் அண்ணன் கோ ச்சுக்க மாட்டார்.
<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>
கம்பனின் காதலை கண்ணியமாய் சொல்லி கண்முன் காட்டினான் கார்பரேட் கவிஞன் விளையாட்டாய் சிலர் விரித்த வீம்பு வலையில் விழாமல் விரட்டி - விட்டான் திரட்டி
<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>
கதைகள் சில பின்னினான் கின் என்ற பையன் அவைகள் பல கண்களுக்கு பலாதென் தெரிய ஒவ்வொன்றாய் எடுத்துச்சொல்லி அவ்வாறே அவன் வினவ - அவ்விதழ் அவதானிப்பு அங்கணம் - அதனால்நான் ஆக்கினேன் அங்ஙனம் - அதுதான் எமக்கிருந்த அக்குத்து - நீ கொஞ்சம் அப்டிகா ஒத்து மாமேன்னான் - நீலர் ஆட்டமாடும் நம் வாலிபகண்ணன்.
<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>
பிரபல பதிவர் அவர் - எவருக்கும் பிறர் பலம் பாராது பின்னூட்டார் - அவருக்கும் பின்னாளிட்டார் ஆப்பு யார்?
<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>
சத்தியமா நான் பத்தாப்பு தாண்டலப்பு சந்திச்ச பத்தியில ஏதாச்சும் தப்பிருந்தா பக்குவமா திட்டுங்கப்பு - என் தாத்தா பயபுள்ள திண்ணையில நிக்கறவ - பாத்தா ஆகிடுவா பத்திரகாளியாட்டம்.
<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>
இவைக்கெல்லாம் வைத்த பெயர் வெண்பாம் அவையோர் வைதார், இங்கு வந்த எமக்கு இதுவும் வேணுமாம் இன்னமும் வேணுமாம், இத்தோடு வைத்தேன் பேனாவை தூர.
இனியேனும் அங்கே இனியதாய் இருக்கட்டும் இன்ஷா அல்லாஹ்.
<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>
எண்ணிச் செய்யலம்மா கன்னி முயற்சியம்மா மன்னிப்பாரம்மா என்னை பாராமாத்மா! ;)
<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>> <<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>> <<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>
இது வெண்பா
ஓரடி முக்கால் குறள்வெண் பாவே ஈரடி முக்கால் சிந்தியல் வெண்பா மூவடி முக்கால் அளவியல் வெண்பா பலவடி முக்கால் பஃறொடை வெண்பா பஃறொடை மிக்கது கலிவெண் பாவே. -தொல்காப்பியம்.
Apr 13, 2009
சிவா மனசுல சக்தி
சிவா மனசுல சக்தி
நிலையாமை: நான் இதுவரை மேலே தலைப்பிட்டுள்ள தலைபுள்ள திரைப்படம் பார்க்கவில்லை.
ஜகா வாங்குதல்: இதில் வரும் கதாபாத்திரங்கள் அனைத்தும் கற்பனையே, யாரையும் குறிப்பிடுபவை அல்ல.
சிவகுமாரும் சக்திபிரியாவும் மதுரையில் ஒரே வங்கியில் காசாலராகவும் , கணக்காளராகவும் முறையே குப்பை கொட்டுகையில் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். திருமணம் ஆகி 6 மாதமாக அதே குப்பைதான்.
சிவா,"சக்தி, நம்ம எவ்ளோ நாளா தேனிலவு போகலாம்னு நினைக்கிறோம் நம்ம ரெண்டு பேருக்கும் லீவு கிடைக்கமாகிங்கிறதே, என்னடி பண்ணலாம்?"
"வெயிட் பண்ணுங்க, ஏதாவது விடுமுறை சேந்தமாதிரி வந்துச்சுனா நிச்சயம் போகலாம்" சக்தி.
"சிவா ஒரு குட் நியூஸ் அடுத்த மாசம் தீபாவளியும், ரம்ஜானும் வருதுல அதையொட்டி வர்ர நாள்ள பேங்ல வேலை நிறுத்தம் பண்ண போறதா பேச்சு நடக்குது. நாம அப்பவே டூர் ப்ரோக்ராம் வச்சுகலாம்ங்க" சக்தி.
"சரி சக்தி... நான் அப்படியே ட்ரெயின் டிக்கெட் புக் பண்ணிட்டு வந்துட்றேன்".
"ஹலோ... சக்தி, 3 ஆம் தேதி வெள்ளிக்கிழமை.. நயிட்டு ட்ரெயின், ஞாயிறு சாயங்காலம் டெல்லி போயிடும்.6 ஆம் தேதி திங்கள் ல இருந்து 9 ஆம் தேதி வியாழன் வரை டெல்லி, ஆக்ரா சுத்திபாத்துட்டு... வெள்ளி திரும்பி வர்ர மாதிரி டிக்கெட் இருக்கு புக் பண்ணிடவா?"
"சரிங்க... என் செல்லம், ஆமா எங்க இருந்து பேசுரிங்க? ஒரே இரைச்சலா இருக்கு?"
"நான் ஜங்ஷன்ல இருந்து பேசுறேம்மா"
"சரி சிவா, அதே மாதிரியே புக் பண்ணிடுங்க. பை, டேக் கேர்.. ஐ ல்வ் யூ"
வெள்ளி மதியம் வங்கியில்,
"என்னங்க நம்ம டூர் போரதுல ஒரு பிரசனைங்க"
"என்னம்மா, சக்தி?"
"அந்த சொட்டதல மானேஜர் போன மாச கணக்கு எல்லாத்தையும் இன்னைக்கே முடிச்சு குடுத்துட்டு தான் போகணும்னு சொல்றார் ங்க... பேங்ல வேர கூட்டம் அதிகமா இருக்கு, என்ன பண்றது ஒன்னுமே புரியல, சிவா… எனக்கு டென்சா இருக்குடா."
"பதட்டப்படாத, நான் போயி டிக்கெட நாளைக்கு மாத்த முடியுமானு பாத்துட்டு வாரென்"
"ஹலோ...ஹலோ... சக்தி, நாளைக்கு டிக்கெட் அவைலபில் இல்ல,"
"ஐயோ..என்னங்க சொல்றீங்க?"
"லிசன். நான் ஒரு ஐடியா சொல்றேன் கேக்குறியா?"
"ம்..ம்ம்.. சொல்லுங்க"
"இன்னைக்கு டியிரென்ல நான் கிளம்புறேன், நீ ஞாயிறு பிளைட்ல வந்துடு. நான் போயி ரூம் எல்லாம் ரெடி பண்ணிட்டு, டெல்லி ஏர்போட்ல உன்னைய பிக் அப் பண்ணிகிறேன். சரியா?".
"ஏங்க.. இது சரியா வருமா?"
"வேற வழி இல்லம்மா, இதை தவரவிட்டுட்டோம்னா, மறுபடியும் இந்த மாதிரி சந்தர்பம் கிடைகுமானு தெரியாது"
"அப்ப சரிங்க.. அதே மாதிரியே பண்ணிடலாம்"
ஞாயிறு மதியம், டெல்லி, கரோல் பர்க், க்ளார்க் இன்டர்னேஷனல் ஹோட்டல். (முழுவதும் வைஃபை செய்யப்பட்ட அறைகள்)
நல்லபடியாக வந்து சேர்ந்துவிட்டதை மின் மடலில் அனுப்பிவிட்டு, தூங்கி எழுந்து மெதுவாக தொலைபேசலாம் என சிவா தனது மடிக்கணிணிக்கு உயிர் கொடுக்கிறான்.
காட்சி 2:
அமெரிக்கா, கலிஃபோர்னியா:
முதல் நாள் சாலை விபத்தில் கணவனை இழந்த இந்தியாவை சேர்ந்த அமெரிக்க குடியுரிமை பெற்ற விதவை. இந்தியாவிலிருந்து தனது உறவினர்கள் அனுப்பியிருக்கும் இரங்கல் மின் மடலை வாசிப்பதர்க்காக மடிக்கணிணியில் முதல் மின் மடலை வாசித்ததும் மயங்கி கீழே விழுந்துவிடுகிறாள்.
உடனே ஓடி வந்த அவளது மகன் கணிணி திரையில் திறந்திருக்கும் மின் மடலை வாசிக்கிறான்.
மீண்டும் காட்சி 1:
சிவா தட்டச்சுகிறான்,
To: sakthipriya@ஏதோவொறு.com (சக்தி டாட் பிரியா @ ஏதோவொறு டாட் காம் என்பது தான் சரி, ஆனால் சிவா வைத்த டாட் (புள்ளி) தவறிவிட்டது)
ஆசை மனைவிக்கு, உனக்கு முன்பாகவே வந்து சேர்ந்துவிட்ட கணவன் எழுதுவது;
நான் இங்கு வந்து விட்டேன் மேலும் நமக்காக ஒதுக்கப்பட்ட இடத்துக்கும் வந்து சேர்ந்துவிட்டேன். உன் வரவுக்கு வேண்டி இந்த இடம் காத்துக்கொண்டிருக்கிறது. நான் வந்ததை போலல்லாமல் உன் பயணம் நன்றாக இருக்கும் என நம்புகிறேன். உன் வரவை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும்.
உன் கணவன்.