சுதந்திர இந்தியாவின் இலவச காற்றையும் சுகமாய் இங்கே சுவாசிக்க பயம்.
வீடு திரும்பியும் முகம் கழுவாது முத்திமிட மறுக்கும் மாஸ்க் மனைவி.
வைகையில் நாளை வருவதாய் சொன்னேன் சென்னை முழுக்க ஸ்வைன் ஃப்ளூவாமே இப்போது வேண்டாம் பிறகெப்போதாவது வா- மதுரை மாமா.
திருடனுக்கும் எமக்கும் வித்தியாசம் இல்லா வழியெங்கும் முகமூடி போலி மனிதர்கள்.
சுயமாய் சிந்திக்கவும் சுதந்திரம் அற்றுப்போய் கம்பிக்கு வெளியும் சிறைக் கைதியாய் கட்டளைக்கு காத்திருக்கும் இயந்திரமாய் மனிதன்.
கோவத்தோடு சேர்ந்தே குடும்ப நினைவும் உடனே மாறும் பாசாங்கு சிரிப்பின் மொன்னை மனிதன்.
எனது நாளையை தனதாக்கிக் கொள்ள கூடவே நிற்கும் கொள்ளைக் கூட்டம்.
ஆங்கிலேயன் விடுதலையான ஆகஸ்ட் பகுதியில் யாருக்கு சுதந்திரம் இந்த தினம்?
Aug 14, 2009
யாருக்கு சுதந்திரம் இந்த தினம்?
Subscribe to:
Post Comments (Atom)
அரேபிய மண்ணில்
ReplyDeleteஷேக்கின் மகனாய்
ஷோக்காய் பிறந்தாலும்
பன்றிக் காய்ச்சல் வந்தால்
(பன்றி அராம்,அலால்னு எல்லாம் வைரஸ்கு தெரியாதுதானே?)
முன்னெச்சரிக்கையாக மாஸ்க் அணிவது
மாஸ்க்கிலே தொழும் உமக்கு தெரியாமல்
மழுங்கிப் போனது ஏனோ?
மதத்தின் பெயரால் நாடு பிரித்து போன பின்பும்
மனிதாபிமானத்தால் வாழ வைக்கும்
மகத்தான தேசத்தின்
மகிழ்ச்சியான நாளிளே
இப்படியொறு கவிதை அது
கற்ப்பனைக்காக என்றாலும்
கவிதை முயற்ச்சி என்றாலும்
கூடாது நண்பா கூடாது
எத்தனைதான் மோசமாக
உன் உறவு இருந்தாலும்
அதற்க்காக தேசத்தை
பழிப்பது ஆகாது
அன்பின் ஆனந்தன்,
ReplyDeleteஇன்னொரு முறை வாசிக்கவும், என் தேசத்தை எங்கேயும் பழிக்கவில்லை. சுதந்திர தேசத்தில் என் நிலையை தான் சொல்ல முற்பட்டுள்ளேன். என்னால் சரியாக சொல்லத் தெரியவில்லையோ? உங்களுக்கு எதிர்மறையான கருத்து வருமாரு எழுதியிருந்தாலும் வருந்துகிறேன். அரேபிய மண்ணில் இருந்தாலும் நான் எங்கேயும் என் தேசத்தை பழிப்பதில்லை.
//மதத்தின் பெயரால் நாடு பிரித்து போன பின்பும்
மனிதாபிமானத்தால் வாழ வைக்கும்
மகத்தான தேசத்தின்//
என்ன சொல்ல வருகிறீர்கள் மிஸ்டர் ஆனந்தன்?
சிம்ப்ளி சூப்பர்ப்!!
ReplyDelete//கோவம் வரும்போதெல்லாம்
குடும்ப நினைவும்
கூடவே வந்து
பாசாங்கு சிரிப்பில்
மொன்னை மனிதன்//
இயலாமையை (நமக்குள் செத்து மடிந்த ஹீரோவை) அழகாக செதுக்கி விட்டீர்கள்!
India will go to hell. we will support to china. I believe on day not one day India will divide parts be parts.
ReplyDeleteI strongly believe that. we are looking forward it.
/மதத்தின் பெயரால் நாடு பிரித்து போன பின்பும்
ReplyDeleteமனிதாபிமானத்தால் வாழ வைக்கும்
மகத்தான தேசத்தின்//
don't say like that. Madayan dhesam. you best of madayan.
நண்பா,
ReplyDeleteஆதங்கத்தில் உண்மைகளை மட்டும் சொல்லியிருக்கிறீர்கள்.
ஆனாலும் அதிகமாய் வசவுகள். எந்நிலையிலும் நாட்டினை விட்டுக்கொடுத்தலாகாது. அதிகாலையில் எழுந்து கடல் கடந்து அயல் நாட்டிலிருக்கிறோமே என நொந்து ஒரு பதிவினை சுதந்திர தின வாழ்த்தாக எழுதியிருகிறேன். படித்து கருத்துரையுங்கள்...
http://abiprabhu.blogspot.com
பிரபாகர்.
நன்றி ஜெகா,
ReplyDeleteதொடர்ந்த ஊக்கத்திற்கு...
அனானி, வேண்டாம் அப்படிச் சொல்லாதீர்கள். நாங்கள் வாழும் நாடு. உங்களுக்கு இந்நாட்டு ஆட்சியாளர்கள் மீதிருக்கும் கோபத்தை, நாட்டு மக்கள் எங்கள் மீது காட்டாதீர்கள்.
ReplyDeleteநன்றி பிரபாகர்,
ReplyDeleteஇப்பவே வாசிக்கிறேன்.
நாக்கு சுதந்திரம் ஒத்து -:)
ReplyDeleteசும்மா கிடைத்ததில்லை நமது சுதந்திரம்!
ReplyDeleteநமது முன்னோர்களில் பலர் தமது இன்னுயிரை தியாகம் செய்தும் நல்வாழ்வை இழந்தும், கஷ்டங்கள் பல சுமந்தும் பெற்றதுதான் இந்த சுதந்திரம்.
எந்த ஒரு பொருளும் இல்லாத போதும்தான் அதன் அருமை தெரியும்.
உலகின் பெரும்பாலான நாடுகளில் இல்லாத ஒரு அற்புதமான உரிமையைத்தான் நாம் இன்று அனுபவித்து வருகிறோம். அதுதான் கருத்துச் சுதந்திரம். எவ்வளவோ குறைகள் இருந்தாலும், இந்த உரிமை ஒன்று போதும். நம் நாட்டினை நன்றியுடன் திரும்பிப் பார்க்க.
குறைகளை எடுத்துச் சொல்ல நமக்கு எல்லா உரிமைகளும் கொடுத்த இந்த தாய்த்திரு நாட்டின் துயர்களை தீர்த்து வைக்க நாம் ஒரு அடி முன்னெடுத்து வைப்போமே!
நன்றி.
//Blogger [பி]-[த்]-[த]-[ன்] said...
ReplyDeleteநாக்கு சுதந்திரம் ஒத்து -:)//
பித்தா, நாக்கு தெலுகு தெல்லேது...
இந்தியராக உணரும் நம் அனைவருக்கும் இந்தியாவில் சுதந்திரம் இருப்பதை யாரும் மறுக்க முடியாது.
Maximum India சார், மகச்சரியான வார்தைகள்.
ReplyDeleteசுதந்திரம் மறுக்கப்படும் நாட்டில்தான் இந்தியாவில் நமக்கிருக்கும் சுதந்திரத்தை உணர முடியும். நான் உணர்கிறேன் இங்கு.
//குறைகளை எடுத்துச் சொல்ல நமக்கு எல்லா உரிமைகளும் கொடுத்த இந்த தாய்த்திரு நாட்டின் துயர்களை தீர்த்து வைக்க நாம் ஒரு அடி முன்னெடுத்து வைப்போமே!//
நிச்சயமாக...