Aug 24, 2009

நீங்கள் காதலில் இருப்பதை அறிய 12 அரிய வழிகள்.

OLYMPUS DIGITAL CAMERA

பதின்இரண்டு: நள்ளிரவு வரை அவளிடம் / அவனிடம் கதைத்துவிட்டு சென்றாலும், படுக்கையில் அவளையே / அவனையே நினைத்துக்கொண்டிருப்பது.

பதின்ஒன்று: அவள் / அவன் உடன் வரும் போது மிக மெதுவாக நடப்பது.

பத்து: அவன் / அவள் அருகில் இல்லாத போது, கவலையாய் உணருவது.

ஒன்பது: அவன் / அவள் குரல் கேட்கும் போது, புன்னகைப்பது.

எட்டு: அவளை / அவனை பார்க்கும் போது, அருகில் இருப்பவரை கவனிக்காதிருப்பது.

ஆறு: அவன் / அவள் உங்களுக்கான அனைத்துமாய் நினைப்பது.

ஐந்து: அவள் / அவன் உங்களை பார்க்கும் போதெல்லாம் சிரிப்பதாக உணருவது.

நான்கு: அவனை / அவளை பார்ப்பதற்காக எது வேண்டுமானாலும் செய்ய துணிவது.

மூன்று: இதை வாசித்துக்கொண்டிருக்கும் போது உங்கள் மனதில் ஒருவரை நினைத்துக் கொண்டிருப்பது.

இரண்டு: அந்த ஒருவரையே நினைத்துக்கொண்டிருந்ததால், இந்த வரிசையில் ஏழு வராததை கவனிக்காதது.

ஒன்று: அதை உறுதிப்படுத்த மீண்டும் ஒருமுறை மேலே வாசித்து பார்ப்பது.

love-wallpaper24

28 comments:

 1. இது நாளைய இடுகைக்காக ட்ராஃப்டில் வைத்திருந்தது... எப்படி போஸ்ட் ஆனது என்று தெரியவில்லை :)

  ReplyDelete
 2. :))) நிஜமாவே 7 இல்லாததை கவனிக்கலை!

  ReplyDelete
 3. :)

  "நீங்கள் கள்ளக் காதலில் இருப்பதை பிறர் அறியும் 12 அரிய வழிகள்." ன்னு மதியத்துக்குள் ஒரு பதிவு வரனும், இல்லை என்றால் எதிர்பதிவு போட்டுவிடுவேன்.

  ReplyDelete
 4. கவிநயா, காதல் வெற்றியடைய வாழ்த்துக்கள் :)

  ReplyDelete
 5. கோ,... 2, 3 டிப்ஸ் கொடுங்க, நானே எதிர்பதிவு போடுறேன்.

  அனுபவம் இல்லைங்க... ;)

  ReplyDelete
 6. Blogger பீர் | Peer said...

  இது நாளைய இடுகைக்காக ட்ராஃப்டில் வைத்திருந்தது... எப்படி போஸ்ட் ஆனது என்று தெரியவில்லை :)///

  மயக்கமா இருக்கும் !! தெளிந்துவிடும்!!

  ReplyDelete
 7. எனக்கு காசு (கடன் திருப்பி) கொடுக்க வேண்டிய ஒருத்திய பத்தி நினைத்துக் கொண்டு படித்தால் கூட மேல சொன்ன பதினிரண்டும் பொருத்தமா இருக்கு பா! அப்பாவும் அந்த ஏழாம் பாய்ண்டு தெரியல.....

  கள்ளக் காதலுக்கு மேல சொன்னவைகளே பொருத்தமா இருக்கும்.....எப்படினா....?
  நீங்க ஆணாக இருந்தால் மேலே அவள் என்பதற்கு பதிலா "அவன்"-னு படிங்க....
  இத எனக்கு கோவி அண்ணன் கனவுல வந்து சொன்னாரு....கரெக்ட்-ஆ?

  ReplyDelete
 8. \\நீங்கள் கள்ளக் காதலில் இருப்பதை பிறர் அறியும் 12 அரிய வழிகள்\\

  கோவிஜி எடுத்துக் குடுத்துட்டீங்கள்ள இனி ஒரே களேபரம்தான்

  ReplyDelete
 9. நானும் 7ஐ கவணிக்கலை

  இடுக்கைகளை கிழிருந்து மேல் படிக்கும் வழக்கம் அதிகம் இருக்கின்றது

  அதுவும் இது போன்ற விவகாரமான இடுக்கைகளை ...

  ReplyDelete
 10. ம்.. நடத்துங்க... அப்படினா நீங்களும் யூத்தா..

  ReplyDelete
 11. அனுபவம் பேசுதா இல்ல,
  கேள்வி அறிவா?
  Peer said:
  கோ,... 2, 3 டிப்ஸ் கொடுங்க, நானே எதிர்பதிவு போடுறேன்.

  அனுபவம் இல்லைங்க... ;)
  "அப்போ கோவியாரே ஆரம்பிக்கட்டும் தல. நமக்கு வேண்டாம், பிறகு கும்மி ஸ்டார்ட் ஆகிடும்."

  ReplyDelete
 12. ஃபார்வர்ட் மெயிலின் தமிழ் மொழிபெயர்ப்பாக இருந்தாலும் சுவாரஸியம் குறையாமல்
  இருக்கிறது பதிவு.

  ReplyDelete
 13. //இது நாளைய இடுகைக்காக ட்ராஃப்டில் வைத்திருந்தது... எப்படி போஸ்ட் ஆனது என்று தெரியவில்லை//

  அப்படினா உங்களுக்கும் அதுதானா.


  நீந்த தெரியாத ஒரே விலங்கு ஒட்டகம் என்று கேள்விப்பட்டேன். உண்மையாகவா!

  ReplyDelete
 14. //மூன்று:
  இதை வாசித்துக்கொண்டிருக்கும் போது உங்கள் மனதில் ஒருவரை நினைத்துக் கொண்டிருப்பது. //

  இதை கண்ணா பின்னா என்று ரசிக்கிறேன்....

  அண்ணே நீங்க எங்கயோ போய்டிங்க பட் வீட்டுக்கு போங்க உங்களுக்கு இருக்கு.... -:)

  ReplyDelete
 15. நீங்களும் யூத்துனு முடிவு செய்துக்கொண்டு இப்படியெல்லம் எழுதுறீங்க

  நடத்துங்க....

  ReplyDelete
 16. சார், இந்த பதிவ நான் மூன்று மாசத்துக்கு முன்னாடியே பண்ணிட்டேன்...

  http://shelpour.blogspot.com/2009/05/blog-post.
  html

  ReplyDelete
 17. சார், இந்த பதிவ நான் மூன்று மாசத்துக்கு முன்னாடியே பண்ணிட்டேன்...

  http://shelpour.blogspot.com/2009/05/blog-post.html

  ReplyDelete
 18. நன்றி டாக்டர், (இதுக்கு ஏதாவது மருந்து, மாத்திரை இருக்கா?)

  ---

  நன்றி ரோஸ்விக்,

  ---

  நன்றி முரளிகண்ணன்,

  ---

  நன்றி ஜமால்,

  ---

  நன்றி லோகு, இல்ல, நான் யூத்து இல்ல, போலி யூத்து இல்ல ;)

  ---

  நன்றி ஸ்ரீ,

  ---

  நன்றி பாலா,

  ---

  நன்றி செய்யது, உங்களுக்கும் மெயில் வந்திடுச்சா? ;)
  ஒரு பொதுச்சேவையா இருக்கட்டுமேன்னு...

  ---

  நன்றி பட்டிக்காட்டான்,

  ---

  நன்றி Thomas Ruban,

  ---

  நன்றி வால்,

  ---

  நன்றி பித்தன், நீங்க வச்ச செய்வன வேலை செய்யுது ;)

  ---

  நன்றி அபுஅஃப்ஸர், உங்கள மாதிரி யூத்துகளுக்காக நம்மால முடிஞ்ச சின்ன உதவி,

  ---

  நன்றி SHELPOUR, ஹி.. ஹி.. உங்களுக்கு மெயில் முன்பே வந்திடுச்சா?

  இதை வெளியிடும் எண்ணம் இல்லை, எப்படியோ.. பப்ளிஷ் ஆகி விட்டது. இதனால் எனது முந்தைய இடுகை கவனிப்பாரற்று கிடக்கிறது என்பதில் எனக்கு வருத்தமே. ;(

  ReplyDelete
 19. யோவ் பீர்,

  இந்த மாதிரி ஆயிரம் மெயில் வாசிச்சிட்டாலும்... இந்த இடுகைக்கு ஒட்டும் பின்னூட்டமும் போடு போடுன்னு என் மனசு சொல்லுதே, அது ஏன்?

  ReplyDelete
 20. சூப்பர் பீர்..! ​நானும் 7ஐ கவனிக்க​லே..!! அவ்!! கோவி ஐடியா பிரமாதமா இருக்கே!!!

  ReplyDelete
 21. //அதை உறுதிப்படுத்த மீண்டும் ஒருமுறை மேலே வாசித்து பார்ப்பது//
  இப்படித்தான் கலாய்க்கிறதா எங்களை??

  ReplyDelete
 22. இதையெல்லாம் தாண்டிவந்துட்டோமுல்ல,அப்பாடா.

  ReplyDelete

மனம் திறந்து செதுக்குங்கள், என் எழுத்துக்களை.