அமெரிக்க விமான நிலையத்தில் நடிகர் ஷாருக்கானை 2 மணிநேர பாதுகாப்பு சோதனைகளுக்கு உட்படுத்தியது சர்ச்சையாக எழுப்பப்பட்டது.
9/11 க்கு பிறகான அமெரிக்கர்களின் உயிர் பயம் உலகறிந்தது, தன்னைப் பாதுகாக்க அவர்கள் எடுக்கும் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கை இது. அங்கு எழுதப்படாத சட்டமாக இருக்கலாம். இச்சட்டங்கள் தேவையா என்பது முன்பே விவாதிக்கப்பட்டது என்றாலும், அம்மாதிரி சட்டம் இருக்கும் நாட்டிற்கு சென்று விட்டு, தன்னை சோதனைக்குட்படுத்திவிட்டார்கள் என்று ஊரைக்கூட்டுவது நியாயமற்றது. ஒரு நாட்டின் பாதுகாப்பு சோதனைகளை இத்தனை சர்ச்சைக்குள்ளாக்குவது அர்த்தமற்றது. இங்கு இதுதான் சட்டம் இஷ்டமிருந்தால் வா, என்கிறது அமெரிக்கா. இந்தியாவிலேயே இந்திய முன்னால் முதற்குடிமகனையே சோதனைக்குள்ளாக்கியது அவர்கள் சட்டம். இனியும் அமெரிக்கா செல்வதில்லை என்று சொல்லியுள்ளார் நடிகர் ஷாருக்கான். நல்லது, இனி உங்களை கலைச் சேவை இந்தியாவில் மட்டும் இருந்தால் போதும். ஐங்கரன் DVD யில் மற்றவர்கள் பார்த்துக்கொள்ளட்டும்.
வேறு கோணத்தில் இதை வாசிக்க இங்கே செல்லலாம்.
<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>
மதுரையின் முக்கிய வீதிகளில் சுவரொட்டிகள் மற்றும் சுவரெழுத்துக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
முழுக்க முழுக்க வரவேற்கப்பட வேண்டிய செய்தி. சென்னையில் இச்சட்டம் அமலுக்கு வந்தபோதே நான் நினைத்தேன், அதென்ன சென்னைக்கு மட்டும் ஒரு சட்டம் என்று. இப்போது காதி தேனாய் இனிக்கிறது. இனியாவது நான் சாலையை பார்த்து வாகனம் ஓட்டலாம். ஒரு முறை ஜெய்ஹிந்த்புரத்தில் இருந்து ராஜ்தூத்தில் வந்த நான், தமிழ்நாடு பாலிடெக்னிக் சுவற்றில் எப்போதும் ஒட்டப்பட்டிருக்கும் சினிமா சுவரொட்டிகளை பார்த்தவாறே சாலையை கடக்க, எதிரே பெரியாரில் இருந்து வந்த ஒரு இரு சக்கர வாகனத்துடன் மோத நேரிட்டது. அந்த நேரம், இரண்டு பக்கமிருந்தும் பெரிய வாகனங்களை வராதது அவர் உயிரை காப்பாற்றி, உங்கள் உயிரை எடுக்கிறது. ;)
<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>
காலச்சுவட்டின் வன்னியில் என்ன நடந்தது? களத்திலிருந்து ஓர் அனுபவப் பதிவு – எந்த அளவுக்கு அதில் உண்மையான அனுபவங்கள் இருக்கிறது என்பதில் சந்தேகமே, குறிப்பாக அனுபவித்து எழுத்தாக்கிய நபர் குறித்தான தகவல்கள் தரப்படா நிலையில் சந்தேகம் வழுக்கிறது. மறுபக்கம், அதில் சொல்லப்பட்டுள்ள பல கருத்துக்கள் ஏற்கும்படியாய் இருந்தாலும், நிகழ்வுகளின் நம்பகத்தன்மையை எடைபொடும் மற்ற தட்டில் சுமை இல்லாததால் உண்மையாக இருக்கலாமோ என்ற எண்ண ஓட்டத்தை மட்டுப்படுத்த முடியவில்லை.
<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>
பொக்கிஷம் நல்லாயில்லை என்று பலராலும் சொல்லப்படுவதாலேயே, அப்படி என்ன தான் இருக்கிறது அல்லது இல்லை என்று பார்க்கத் தோண்றுகிறது. (பாலா, டவுன்லோட் பண்ணியாச்சா?)
<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>
மென் அட் ஒர்க் என்ற ஆங்கில நகைச்சுவைப்படம் பார்த்தேன். (முழுக்க சினிமா நிரப்பப்பட்ட 120 GB HD உபயம், பாலா. நன்றி) படம் முடியும் வரை ஹீரோ இடத்தில் கமலை வைத்து பார்த்ததை தவிர்க்க முடியவில்லை. அதே போல ஹீரோவின் நண்பனாக மாதவன். கூட வரும் இன்னொருவர் பசுபதி. நாயகி மனிஷா. சினிமாவை முழுக்க மும்பை எக்ஸ்பிரஸ் வகை தமிழ்த் திரைப்படமாக உணர்ந்தேன். எனக்கு சினிமா விமர்சனம் வருவதில்லை. எனவே, படத்தின் பெயரில் க்ளிக் செய்து படித்துக்கொள்ளலாம்.
<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>
மீண்டும் அமெரிக்கா, தன் வீட்டுக்கதவை திறக்கும் முயற்சியில் கூச்சலிட்டு அண்டை வீட்டுக்காரர்களை தொந்தரவு செய்ததாக கருப்பின அமெரிக்க பேராசிரியர் ஒருவர், வெள்ளையின போலீஸால் கைது செய்யப்பட்டார். இதற்கு ஒபாமா, ‘இன்னமும் அமெரிக்காவில் நாம் நிறத்தால் அடையாளப்படுத்தப்படுகிறோம்’ என்பது போல கருத்து சொல்லப்போக, அதிபர் இவ்வாறு பேசியது விவகாரமானது. பின்னர் இருவருக்கும் ஒபாமா பீர் விருந்து கொடுத்து, நிலைமையை சமாளித்தாராம்.
எனக்கு பீர் குடிக்கும் பழக்கமில்லை. மோர்?
<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>
குவைத்தில் எண்ணைக் கிணறுகளை தகர்க்க வந்த சிலர் பிடிபட்டனராம்.
தீவிரவாத தடுப்பு நடவடிக்கைகள் முடிக்கிவிடப்பட்டுள்ளது, போற வார வழியெல்லாம் செக் பண்றாங்க. வீட்டுக் கதவை திறந்து ஒண்ணுக்கு அடிக்க வெளிய வந்தாலும் அடையாள அட்டை இல்லாம வராதீங்க, குவைத்தில் வாழும் எந்தமிழ் மக்கா. உள்ள தூக்கி போட்டா, ஐஆம் சாரி…எங்க அண்ணனை இதுக்கெல்லாம் அழைத்து தொந்தரவு பண்ண முடியாது.
<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>
சென்றவாரம் நான் விரும்பி வாசித்த இடுகை, அண்ணன் ஜமாலன் அவர்கள் (சொல்லித் தெரிய வேண்டியதில்லை) உடலரசியல் பதிவில் எழுதியிருக்கும், குடிக்கலாச்சாரமும் கலாச்சாரக்குடிகளும் –பகுதி:2 . இது மதுவிற்கும் மதத்திற்கும் உண்டான தொடர்பை அலசுகிறது.
ஆழ்ந்த விமர்சனம், நேரமிருப்பவர்கள் வாசித்து பாருங்கள்.
<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>
பன்றிக்காய்சல் நமக்கு தொற்றியுள்ளதா என்பதை எளிதில் அறிய, தினமும் காலை கண்ணாடியில் முகம் பார்க்கவும். கீழே இருக்கும் இந்தப்படத்தில் இருப்பது போல முகம் தெரிந்தால், ஊரை விட்டு ஒதுங்கி விடலாம்.
இப்பல்லாம் கண்ணாடி பார்க்கவே பயமாயிருக்கு…
ஜிகர்தண்டா
ReplyDeleteஅருமை அண்ணா
//ஒரு சக்கர வாகனத்துடன் மோத நேரிட்டது. அந்த நேரம், இரண்டு பக்கமிருந்தும் பெரிய வாகனங்களை வராதது அவர் உயிரை காப்பாற்றி, உங்கள் உயிரை எடுக்கிறது.//
அய்யா என்ன சொல்ல வரிங்க?
புரிஞ்சு போச்சு எனக்கு புரிஞ்சி போச்சு (கௌண்டமணி)
//(பாலா, டவுன்லோட் பண்ணியாச்சா?)// இன்னும் நல்ல torrent வரல அண்ணா.
மிஸ் பண்னிடிங்க தல உங்களுக்காக 1TB காத்துட்டு இருக்கு.
ஐயோ... மீ தி பர்ஸ்ட் & செகேன்டு
ReplyDeleteகலக்கல் அலசல்
ReplyDeleteவேலைப்பழுவில் சில நியூஸ் பார்க்காமல் போனது பற்றி கவலை யில்லை அழகான விளக்கம்
ஜமாலன் அவர்கள் பதிவு படித்தேன். பதிவு அருமை. நன்றி
ReplyDeleteபீர் உங்க படம் கடைசியில் போட்டிருந்தீர்களே அது நல்லா இருக்கு
ReplyDeleteநண்பா,
ReplyDeleteநண்பா கடந்த உங்களின் படிவை படித்து விட்டு, இதில் எவ்வாறு எழுதியிருப்பீர்கள் எனும் ஆவலோடு படிக்க, மிகவும் நடு நிலையோடு எழுதியிருந்தீர்கள். எங்கே ஒரு குறிப்பிட்ட மதத்தினை சேர்ந்தவர் என்பதால் மிகவும் அவமனத்துக்குள்ளாகிவிட்டார்களென எழுதியிருப்பீர்களோ என பயந்தேன். உங்களை பாரட்டுவதில் பெருமை அடைகிறேன்....
*******
பொக்கிஷம் படத்தை பார்த்துவிட்டு கண்ணாடியில் பாருங்க. சிலபேர் பார்த்தால் கூட வரும்னு புரளியை கிளப்பிவிட்டிருக்காங்க...
பிரபாகர்.
படிக்க கொஞ்சமும் அலுப்பூட்டாத எழுத்துக்காரர் நீங்கள்! அத்தனை பகிர்வுகளும் அருமை பீர்! பல புதிய தகவல்களுக்கு மிக்க நன்றி!
ReplyDeleteஜிகர்தண்டா
ReplyDeleteஆஹா பேரை கேட்டாலே என்னா சுகமா இருக்கு.
சுவரொட்டி மேட்டர் - ஆரோக்கியம்.
ReplyDeleteஇனியும் அமெரிக்கா செல்வதில்லை என்று சொல்லியுள்ளார் நடிகர் ஷாருக்கான். //
ReplyDeleteஎதற்கும் மறுபடி பார்க்கணும் .. அப்படி சொல்லலைன்னு நினைக்கிறேன். அப்படியெல்லாம் நான் நினைச்சாலும் என் விசிறிகளுக்காக வருவேன்னு சொன்னதாக ஒரு நினைவு.
***********
மதுரை தெருக்கள் மாறியதாக இன்னும் தெரியலை
சுவரொட்டியா...? மதுரையா..?
ReplyDeleteஹா..ஹா..ஹா..செய்தி செம காமெடி.
அப்பறம், ராஜா தியேட்டர் ஷகீலா பட போஸ்டர்ஸெல்லாம் எங்க ஒட்டுவாங்கன்னு ஏதாவது நியூஸ்
இருக்காண்ணே..!
அப்பறம்...
நீங்க இலக்கியவாதியா சாமீ............!
மீ த எஸ்கேப்பு.
பிரபல நடிகரை சோதணையிடுவது தவறு என்று சொல்லமுடியாது!
ReplyDeleteசோதணையில் முதல் குடிமகனும், கடைசி குடிமகனும் ஒன்றே!
சிறந்த உதாரணம் ”சஞ்சய்தத்!”
கலக்கல் பதிவு..
ReplyDelete//எனக்கு பீர் குடிக்கும் பழக்கமில்லை. மோர்? //
இந்தப் புள்ளையா.. நம்புறதான்னு தெரியலையே..
//டக்ளஸ்... said...
சுவரொட்டியா...? மதுரையா..?
ஹா..ஹா..ஹா..செய்தி செம காமெடி.
அப்பறம், ராஜா தியேட்டர் ஷகீலா பட போஸ்டர்ஸெல்லாம் எங்க ஒட்டுவாங்கன்னு ஏதாவது நியூஸ்
இருக்காண்ணே..!//
டக்கு.. மூணு மாசமா ராஜா சீல்ல இருக்கு.. உனக்கு எப்படி தெரியும்னு கேக்கப்புடாது..G.K
நல்ல கொடிகம்பம், அதாங்க...Good Post.
ReplyDeleteபொக்கிஷம் பார்க்க போறிஙக்ளா? ஆழ்ந்த அனுதாபங்கள்..
ReplyDeleteஅப்துல் கலாமை இந்தியாவில் சோதனை செய்ததற்கே இவ்வளவு கொதிக்காத செய்தி நிறுவனங்கள் சாருக்கானுக்கு ஏன் இவ்ளோ சர்ச்சை செயகின்றன...
ReplyDelete*****
அனைத்தும் அருமை அண்ணா
மிக நல்ல,லேசான நகைச்சுவை ஓடும் நடை.. அருமையா எழுதி இருக்கீங்க..
ReplyDeleteஷாருக் மேட்டரில் உங்கள் கருத்தோடு முரண்படுகிறேன். யாரையும் அப்படி செய்யக்கூடாது என்று சொல்லவில்லை.பிரபலங்களை அப்படிச் செய்வது கண்டிக்கத்தக்கது..ஒபாமா இந்தியா வந்தால்..உட்காரவைத்து சட்டையைப் பிதுக்கினால் விடுவார்களா???
//இனியும் அமெரிக்கா செல்வதில்லை என்று சொல்லியுள்ளார் நடிகர் ஷாருக்கான். //
ReplyDeleteஇப்போ தேவை ஏற்ப்பட்டால் போகத்தான் வேண்டும் என்கிறார்.
அமைச்சராக இருக்கும் போது அரசு முறை பயணம் செய்த ஜார்ஜ் பெர்னாடசி நிஜாரை கழட்டி பிதுக்கி விட்டார்கள். என்ன செய்ய
அரண்டவன் கண்னுக்கு இருண்டதெல்லாம் பேய்..........
---காதி தேனாய் இனிக்கிறது---
ReplyDelete:) உங்கள் பதிவைப் போல்? ;)
நர்சிம்,
ReplyDelete---பிரபலங்களை அப்படிச் செய்வது கண்டிக்கத்தக்கது---
நான் பிரபலம்.
என்னை ஆயிரக்கணக்கானோர் ட்விட்டரில் பின் தொடர்கிறார்கள். பத்தாயிரத்திற்கு மேல் தினசரி வாசகர் கொண்டவன். நானும் பிரபலம். எனக்கும் சோதனை கூடாது என்று சொல்லும் உங்க கட்சிதான் என் கட்சி.
sharuk matterla 100% ennoda karutthum ithaan -:)
ReplyDelete// Boston Bala said...
நர்சிம்,
---பிரபலங்களை அப்படிச் செய்வது கண்டிக்கத்தக்கது---
நான் பிரபலம்.
என்னை ஆயிரக்கணக்கானோர் ட்விட்டரில் பின் தொடர்கிறார்கள். பத்தாயிரத்திற்கு மேல் தினசரி வாசகர் கொண்டவன். நானும் பிரபலம். எனக்கும் சோதனை கூடாது என்று சொல்லும் உங்க கட்சிதான் என் கட்சி.
//
enna matter sollikiranaa super.
நல்லாயிருக்கு நடு நிலையோடு எழுதியுள்ளிர்கள் வாழ்த்துக்கள்.
ReplyDeleteஇனியும் அமெரிக்கா செல்வதில்லை என்று சொல்லியுள்ளார் நடிகர் ஷாருக்கான். /
ReplyDeleteஅப்படி அவரால் இருக்கமுடியுமா!!
நன்றி பாலா, (எவ்ளோ நன்றி தான் வாங்குவீங்க, எங்கிட்டருந்து?)
ReplyDelete<<<>>>
நன்றி அபுஅஃப்ஸர்,
<<<>>>
நன்றி சின்ன அம்மிணி,
<<<>>>
நன்றி பிரபாகர்,
ReplyDeleteஉண்மையில் ஒருவருக்கு அநீதி இழைக்கப்படும் போது நிச்சயம் சொல்லுவேன். அது எந்த மதத்தவராயிருந்தாலும் சரியே.
ஆனால், நான் சார்ந்திருக்கும் நம்பிக்கையை உடைய மற்றவருக்கு இழைக்கப்படும் அநீதியை, நான் சொல்லும் போது அதற்கு மதச்சாயம் பூசப்படுவது வேதனையே. :(
பொக்கிஷம் - பயமுறுத்துறீங்களே... பிரபாகர். ;)
நன்றி ஜெகா,
ReplyDelete<<<>>>
நன்றி ஜமால்,
//தருமி said...
ReplyDeleteஎதற்கும் மறுபடி பார்க்கணும் .. அப்படி சொல்லலைன்னு நினைக்கிறேன். அப்படியெல்லாம் நான் நினைச்சாலும் என் விசிறிகளுக்காக வருவேன்னு சொன்னதாக ஒரு நினைவு.//
முதல் நாள் தொலைக்காட்சி 'மீண்டும் வரமாட்டேன்' என்று சொல்லியதாகத்தான் சொல்லியது. இப்போதும் அர்னால்ட் அழைப்பிற்கு அவர் இன்னும் பதில் சொல்லவில்லை என்பதாக கேள்வி.
//மதுரை தெருக்கள் மாறியதாக இன்னும் தெரியலை//
நீங்கதான் மாற்றணும் ;)
டக்ளஸ், ராஜா தியேட்டர் விவகாரம் உங்களுக்கு தெரியாம இருக்குமா? பாலிடெக்னிக் கிங்ல்ல நீங்க...
ReplyDeleteநான் சொன்ன நிகழ்வு சுமார் 13 வருடங்களுக்கு முந்தையது.
நன்றி வால், உங்கள் கருத்தோடு முழுவதும் ஒத்துப்போகிறேன்.
ReplyDelete<<<>>>
நன்றி கார்த்திக், (உண்மைய சொன்னா நம்ப மாட்டீங்களே...)
<<<>>>
நன்றி நைனா,
<<<>>>
நன்றி கார்க்கி, (ஆளாளுக்கு பயமுறுத்துறாங்களே...)
<<<>>>
நன்றி லோகு, (இரண்டுமே பப்ளிஸிட்டி ஸ்டண்ட் என்பேன், நான்)
நன்றி நர்சிம்,
ReplyDeleteஒபாமாவை அப்படி செய்ய மாட்டோம், அதே போல் ப்ரதீபா பாட்டேல் அமெரிக்கா சென்றாலும் செய்ய மாட்டார்கள். பதவியில் இருக்கும் வரை.
ஷாருக் ஒரு நடிகர். பிரபலம் அவரது தொழில். டாம் குரூஸ் வந்தால் நாமும் அப்படி செய்யலாம், அப்போதும் சிலர் ஆதரித்தும் எதிர்த்தும் பேசுவார்கள்.
ஆனால் அவர்களுக்கு தெரியும், இந்தியர்கள் நாம் அப்படிச்செய்யமாட்டோம் என்று. நமது பலமும் பலவீனமும் அதுதான்.
ஒரு நாட்டின் உள் விவகாரங்களில் தலையிடாது இருப்பது நல்லது. குறிப்பாக பாதுகாப்பு நடவடிக்கைகளில்.
நன்றி ஷாகுல்,
ReplyDelete<<<>>>
நன்றி பாஸ்டன் பாலா ஜி,
என்னது உங்களையும் சோதனை செய்தார்களா??? வேதனை ;(
<<<>>>
நன்றி பித்தன்,
<<<>>>
நன்றி Thomas Ruban,
<<<>>>
நன்றி தேவா டாக்டர்,
//மதுரையின் முக்கிய வீதிகளில் சுவரொட்டிகள் மற்றும் சுவரெழுத்துக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.//
ReplyDeleteஇதற்க்கும் கூட போஸ்டர் அடித்து ஒட்டுவார்கள் அண்ணனின் அலப்பரைகள்
சரிதான பீர்?
நண்பா.. உங்க புரொஃபைல் போட்டோல இருக்குற பூவ எடுங்க தல..அந்த போட்டோ 100 வருஷம் கழிச்சு வச்சுப்போம்.
ReplyDeleteநன்றி வசந்த்,
ReplyDelete<<<>>>
நர்சிம், மாத்தியாச்சு...
என்னதான் பூ வியாபாரியா இருந்தாலும் தன் போட்டோவுக்கு பூ வச்சு பார்க்க முடியாது... அப்டிங்கிற மெஸேஜ் அதில இருந்தது தல...
funia லயாவது பூ வச்சு பார்க்கலாமேன்னு தான்.. ஹி..ஹி..
ஷாருக் மேட்டர் டூ மச்சிங்க.. இவர் எதோ வானத்துல இருந்து குதிச்ச மாதிரி சீன். அவங்க ஊருக்கு போனா அவங்க சட்டம் மதிக்கனும். இந்தியா மாதிரியே எல்லாரும் சினிமாக் காரனுக்கு காவடி தூக்கனும்னு எதிர்பார்க்கிறாங்க.
ReplyDeleteபீர் கலக்குறீங்க. பன்றிக்காய்ச்சல் புகைப்படம் ரொம்ப நக்கல். :)
ReplyDeleteநன்றி சஞ்சய், சரியா சொன்னீங்க..
ReplyDelete---
நன்றி ஊர்சுற்றி, எங்க.. கொஞ்ச நாளா ஆள காணோம் ????