பின்னூட்டம் அல்லது மறுமொழி என்று சொல்லப்படும் இவற்றில் சிறந்தவற்றை பார்க்கும் முன்பு, பின்னூட்டம் இடுவது எப்படி என்பதை பார்த்துவிடுவோம். இது பலருக்கும் தெரிந்திருக்கும் ஆனாலும் முதலில் வலைப்பூ சுவாசிக்க வரும் சிலருக்கு (முன்பு எனக்கும்) அந்த பதிவுக்குச் சொல்ல கருத்திருந்தும், எப்படி பின்னூட்டுவது என்று தெரியாமல், வாசித்ததோடு செல்வதுண்டு. எனவே சுருக்கமாக ஒரு முன்னுரை, (இந்த பத்தி தெரிந்தவர்கள் நேராக இதற்கடுத்த பத்தி செல்லலாம்)
ஒவ்வொரு இடுகையின் (பின்னூட்டத்திற்கு) கீழும் Post Comment அல்லது கருத்துரையிடுக என்பதாக இருக்கும், சிலரது வார்ப்புறுவில் இடுகை தலைப்பிற்கு நேரே 2 பின்னூட்டம் (or 23 Comments) என்பதாக இருக்கும் அதை க்ளிக்கினால், ப்ளாக்கர் கமென்ட் விண்டோ திறக்கும். அதில் (சில வலைபூவில் இடுகைக்கு கீழேயே) காணப்படும் வெற்று பெட்டியில் கருத்துகளை பதிவு செய்யலாம். அங்கு கேட்கப்படும் அடையாளத்தை கூகில் ஐடி அல்லது ஓப்பன் ஐடி எனப்படும் வலை முகவரியுடன் கடவுச்சொல் கொடுத்து பின்னூட்டம் வெளியிட வேண்டியது தான். அடையாள தெரிவிலேயே அனானி அதர் ஆப்ஷன் இருக்கும். அதை தேர்வு செய்தால் ஐடி கடவுச்சொல் கொடுக்க வேண்டிய அவசியம் இருக்காது. இந்தமுறையில் பின்னூட்டத்தில் பின்னூட்டுபவர் யாரென்பது மற்றவருக்குத் தெரியாது. அடையாளத்திற்கு கொடுக்கப்படும் கடவுச்சொல் மற்றவரால் அறியப்படுமோ என்ற சந்தேக பயம் தேவையற்றது.
இனி பிரபல பின்னூட்ட வகைகளைப் பார்ப்போம்.
மீ த பர்ஸ்டு; இவை பிரபல பதிவர்களுக்கு, பெரும்பாலும் பிரபலம் அல்லாதவர்களால் அல்லது பிரபலமாக ஆசைப் படுபவர்களால் இடப்படுவது. இதற்கு, ‘உங்கள் வலைப்பூவையே நான் எப்போதும் உற்றுநோக்கி, புதிய இடுகைக்காக காத்துக் கொண்டிருக்கிறேன். என்னையும் கொஞ்சம் கவனியுங்கள்’ என்பதாகவும் விளக்கம் கொள்ளலாம்.
மீ த 40; இது சற்று வித்தியாசமானது. 40 பின்னூட்டங்கள் தாண்டிவிட்டால் ஒரு மறுமொழி திரட்டியிலிருத்து பின்னூட்டம் விரட்டப்பட்டுவிடும். அதற்காக சிலர் 40 வரை அடித்து ஆடி விட்டு பின்பு ஓடி விடுவார்கள். நானும் சில ஆயிரங்கள் வரை கூட பார்த்திருக்கிறேன். ஆனால் இதுவரை காணாதது, மீ த 9 மட்டுமே.
;) ; வெறும் ஸ்மைலி மட்டும் விட்டு செல்வதில் மூன்று வகையுண்டு. 1. நானும் இந்த பதிவை வாசித்தேன். 2. பின்னூட்ட நேரமில்லை, ம்.. ;) நல்ல இடுகை அல்லது ;( சரியில்லை என்பதை சிரிப்பானில் சொல்வது 3. பின்னூட்ட பின்தொடருதல் (Comment Follow-up) செய்வதற்காகவும் இடப்படுவதுண்டு.
ரிப்பீட்டு; இடுகை குறித்த தனது கருத்தை முன்னமே ஒருவர் தெரிவித்திருந்தால், அதையே எடுத்திட்டு ரிப்பீட்டு என்று தட்டிச் செல்வது. சொந்த கருத்து இல்லாதவர்களுக்கு இது கருத்து கொடுக்கும் ஆபத்பாந்தவான்.
//………………….// ; இடுகையிலிருந்தோ அல்லது பின்னூட்டத்திலிருந்தோ ஒருசில வார்த்தைகளை மட்டும் இரண்டு ஸ்லாஷிற்கு இடையில் வைத்து, அதற்கு கருத்து சொல்வது. இந்த முறை பெரும்பாலும் அனைவராலும் பின்பற்றப்படுவது. யார் எப்போது வாசித்தாலும் நேராக விசயத்தை விளங்கிக்கொள்ளலாம்.
கும்மி; இடுகைக்கு தொடர்பாகவோ அல்லது தொடர்பின்றியோ ஒருவரோ ஒன்றுக்கும் மேற்பட்டவரோ தொடர்ச்சியாக பின்னூட்டி சில நேரங்களில் சிரிப்பையும் வரவழைக்கும் பின்னூட்ட விளையாட்டு.
உள்குத்து; ஒன்றுக்கும் மேற்பட்ட உள் அர்த்தங்களோடு பின்னூட்டப்படுபவை. சில நேரங்களில் இடுகைக்கு தொடர்பாகவும் அமைந்துவிடுவதுண்டு.
அனானி; நான் முன்பே சொல்லியுள்ளது போல, தனது பெயர் வெளியிட விரும்பாதவர்களால் பின்னூட்டப்படுவது. பெயிரில்லா பின்னூட்டவாதி சில நேரங்களில் உண்மைகளை சொல்லிவிடுவதாலோ அல்லது முகம் சுளிக்கும்படியான ஆபாச வார்த்தைகளை விட்டு செல்வதாலோ, இந்த வகை பின்னூட்டங்கள் பதிவர்களால் விரும்பப்படுவதில்லை. அதனாலேயே சிலரது வலைப்பூவில் அனானி ஆபஷன் மட்டுறுத்தப்பட்டிருக்கும்.
பின் நவீனத்துவம்; முழுமையடையாத வாக்கியத்தில் இடம் மாற்றி எழுதப்பட்ட வார்த்தைகளால் பின்னப்பட்டிருக்கும் இந்தவகை பின்னூட்டங்களில் தீவிரஇலக்கியம், விளிம்புநிலை, கட்டுடைப்பு போன்ற வார்த்தைகள் இடம்பெற்றிருக்கும். பெரும்பாலும் இவை எந்த கருத்தாலனாலும் மறுத்து விவாதம் செய்வதாகவே இருக்கும். இரண்டு மூன்று முறை வாசித்தால் புரியும், ஆனால் புரியாது.
சரி.. இவற்றில் சிறந்த பின்னூட்டம் எது? பதிவுகளை வாசித்து தனது கருத்தைச் சொல்லும் அனைத்துமே, சிறந்த பின்னூட்டம்தான். அது பெயரில்லா பின்னூட்டமாக இருந்தாலும் சரியே. ஆனாலும் இதை நாம் சொன்னால் நம்மை தவறாக நினைப்பார்களே என்று நினைக்காமல் சொல்வதை தெளிவாக நேரடியாகச் சொல்லிவிடுவதே நல்லது. நகைக்கும் போது மட்டும் முகம் திறந்திருக்காமல், தவறை சுட்டும் போதும் இருக்கும் திறந்த முகமே நட்பை வலுவாக்கும், நல்ல பலன் தரும். நான் இதுவரை எங்கும் அனானியாக பின்னூட்டியதில்லை, இனியும் அந்த எண்ணமில்லை.
சில சுவாரஸ்ய பின்னூட்டர்கள், அனைவரும் விளங்கும் அழகான எளிய தமிழில் எந்த விசயத்திற்கும் தனது கருத்தை கவனமாக சொல்லும் பலரில் நான் அறிந்த வரையில் மணிகண்டன், ப்ராபகர் மற்றும் ஜெகநாதன் ஆகியோரின் பின்னூட்டங்கள் பிரபலம்.
சிந்தனையோடு சிரிப்பையும் வரவழைக்கும் பின்னூட்ட புயல் வால்பையன், வாசிக்கும் அனைத்து இடுகைகளிலும் பின்னூட்டும் ரொம்ப நல்ல மனதுக்காரர்.
அதிஷா பின்னூட்டுவது அபூர்வம். பானைக்கு ஒரு சொறு பதம் என்பது போல, இவரது பின்னூட்டத்தால் ஊரே அதிரும் ஒன்று சிரிப்பால், சிந்தனையால் அல்லது வன்முறையால். ரத்தக்களரி பின்னூட்டம்.
நாமெல்லாம் நாலு நாள் மல்லாக்க படுத்து யோசித்தாலும் வராத வார்த்தைகள், குசும்பனுக்கு நொடியில் வந்துவிழும். அசத்தல் ரகப் பின்னூட்டம்.
நையாண்டி நைனா, யாரையும் நோகடிக்காத நையாண்டி என்ன நையாண்டி?, நைனா நையாண்டி.
இன்னும் சில பி.ப மற்றும் மூ.ப எல்லாம் வட்டத்திற்குள் சதுரங்கம் ஆடுவதால் சுவாரஸ்யமாக இருந்தாலும், இங்கு வேண்டாம். இது பிரபல பின்னூட்டர்களை மட்டுமே அலசிய பகுதி.
வாசிக்கும் அனைத்து இடுகையிலும் அதைப்பற்றிய கருத்தை ஒரு ஸ்மைலியாவது இட்டு சொல்லிவிடுவது நல்லது. காசா பணமா...சிறு ஊக்கம்தானே... ஏனென்றால் இணைய வாசகன் ஒருவன் புதிதாக எழுத வரும்போது, அவனுக்கான ஊக்கமாக, உளியாக இந்தப்பின்னூட்டங்கள் இருக்கிறது. ஆரம்பகட்ட இணைய எழுத்தானளின் படைப்புக்கான மதிப்பெண்ணும், அவனுக்கு இடப்படும் பின்னூட்டங்களே. ஆனால் எழுத்தில் வெற்றி பெற, எதிர்பார்ப்பில்லா எழுத்து அவசியமாகிறது. பின்னூட்டம், எதிர்வினை, பாராட்டு என்ற எதிர்பார்ப்பில் மட்டுமே எழுதப்படும் எழுத்தில் படைப்பாளன் சமரசம் செய்துகொள்ள வேண்டிவரும். இத்தகைய எழுத்தில் படைப்பாளனுடைய உண்மை முகம் தெரிய வாய்ப்பில்லை. எதிர்பார்ப்பை தாண்டிய, சமரசமில்லா எழுத்து வேண்டும், அதை கொடுப்பது படைப்பாளனின் கடமையாகிறது.
நன்றி!
மீ த பர்ஸ்டு...
ReplyDeleteநம்ம பதிவுக்கு நாம கூட சொல்லாட்டி நல்லாருக்காதுல... ;)
இதற்கு பெயர்; பின்னூட்ட கயமைத்தனம், டூபூரித்தனம், கபூடித்தனம்.
//ஆனாலும் இதை நாம் சொன்னால் நம்மை தவறாக நினைப்பார்களே என்று நினைக்காமல் சொல்வதை தெளிவாக நேரடியாகச் சொல்லிவிடுவதே நல்லது.//
ReplyDeleteகரெக்ட்டு....
மீ த தேர்ட்
ReplyDeleteதல பின்னூட்டத்துக்கு இவ்வளவு இருக்கா, கலக்கல் அலசல்
:)
ReplyDeleteபின்னூட்டதின் குரு...
ReplyDeleteநீ வாழ்க, நின் கொடை வாழ்க,
கொற்றம் வாழ்க....
பின்னூட்டம் பற்றி பதிவு இட்டதால் இன்று முதல் அனைவராளும்
"பின்னூட்ட சக்கரவர்த்தி" என்று அன்போடு அழைக்க பெறுவாய்..
u only taught me how to post comment.
thanks & hats off to Mr.Peer.
ignore the spelling mistake.
நன்றி பீர் | Peer, (ஐயோ, அது நான்தானா?)
ReplyDelete<<<>>>
நன்றி வசந்த்,
<<<>>>
நன்றி சுரேஷ், ;)
<<<>>>
நன்றி பாலா, ஏன் இந்த கொலைவெறி?
அரபு நாடுகளில் எழுத்தார்வம் உள்ளவர்கள் பலர் இருக்கிறார்கள். ஆனால், தீவிரமாக எக்ஸ்பாட்ரியேட்டுகளைப் பற்றிய ஒரு நாவல் இன்னும் ஆங்கிலத்திலோ தமிழிலோ யாரும் எழுதவில்லை. குவைத் போன்ற நகரில் வாழும் தமிழர்களுக்கு அது கை வராது என்று தோன்றுகிறது. காரணம், நல்ல இருப்பிடங்கள், நல்ல வாழ்க்கை, கட்டுப்பாடான அரசு, நல்ல சம்பளம், இலவசப் படிப்பு, சலுகை விலையில் மின்சக்தி, குடிநீர், நிறைய தினார். எழுதுவதற்கு கோபம் வேண்டும்; அவர்களுக்கு அதற்கான விஷயம் இல்லை
ReplyDeleteஇத எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கே...
ReplyDeleteநன்றி புதுகைச் சாரல்.
//வாசிக்கும் அனைத்து இடுகையிலும் அதைப்பற்றிய கருத்தை ஒரு ஸ்மைலியாவது இட்டு சொல்லிவிடுவது நல்லது.//
ReplyDelete:)
!!
நன்றி தருமி, :) புரியுது அதென்ன !!
ReplyDelete(நான் தருமி வாசித்துக்கொண்டிருந்த போது, நீங்கள் இங்கே. அதுக்கா இந்த !! ?)
:)
ReplyDelete//(நான் தருமி வாசித்துக்கொண்டிருந்த போது, நீங்கள் இங்கே//
ReplyDeleteநல்ல பொருத்தமில்லை அது!
ஆனால் நீங்கள் சொன்ன !! அதற்காக இல்லை ... !
உள்குத்து,வெளிக்குத்து ஏதும் இல்லாமல் நல்லதொரு கும்மாங்குத்து பதிவு. :))
ReplyDeleteசொல்ல வந்ததை சரியாக சொல்லிவிடீர்கள்.
நன்றி பாஸ்டன் பாலா ஜி,
ReplyDeleteதருமி, புரியுது ஆனா புரியல.
ReplyDeleteதவறென்றால் மன்னிக்கவும், டிலிட் செய்துவிடவா?
நன்றி துபாய் ராஜா, கும்மாங்குத்தா? பீதிய கெளப்புறீங்களே...
ReplyDeleteஅடடா! அதெல்லாம் ஒண்ணுமில்லைங்க. நீங்க சொன்னதை - :) - மட்டும் போட்டு உட்டுட்டேன்ல அதுக்காக ...
ReplyDeleteசும்மானாச்சுக்கும் ....... சரியா?
ஸ்ஸ் அப்பாடா...
ReplyDeleteஆனாலும், குச்சி ரொட்டியும், குருவி பொம்மையும் வாங்கி தந்தால் தான் பயம் தெளிந்து நம்பிக்கை வரும் ;)
//‘உங்கள் வலைப்பூவையே நான் எப்போதும் உற்றுநோக்கி, புதிய இடுகைக்காக காத்துக் கொண்டிருக்கிறேன். என்னையும் கொஞ்சம் கவனியுங்கள்’//
ReplyDelete// பீர் | Peer said...
மீ த பர்ஸ்டு...//
இங்கதான் மிகச்சரியாக பயன்படுத்தப் பட்டுள்ளது.
நம்மைத்தவிர நமது பதிவுக்கு காத்திருக்கும் உண்மையான உசுரு வேறயாருங்கோவ்???
//ஆனால் இதுவரை காணாதது, மீ த 9 மட்டுமே//
ReplyDeleteஒருதடவை போட்டாலும் சும்மா விட்டிருவோமா???
மானம் கேட்டு மகுளி பூத்திராது?
//வாசிக்கும் அனைத்து இடுகையிலும் அதைப்பற்றிய கருத்தை ஒரு ஸ்மைலியாவது இட்டு சொல்லிவிடுவது நல்லது//
ReplyDelete:))
// தருமி said...
ReplyDelete//வாசிக்கும் அனைத்து இடுகையிலும் அதைப்பற்றிய கருத்தை ஒரு ஸ்மைலியாவது இட்டு சொல்லிவிடுவது நல்லது.//
:)
!!//
ரிபிட்டேய்
me the 24
ReplyDeleteand me the 25
ReplyDelete//‘உங்கள் வலைப்பூவையே நான் எப்போதும் உற்றுநோக்கி, புதிய இடுகைக்காக காத்துக் கொண்டிருக்கிறேன். என்னையும் கொஞ்சம் கவனியுங்கள்’ //
This comment has been removed by the author.
ReplyDeleteஇன்னும் சிலவகைப் பின்னூட்டங்கள் இருக்கின்றன:
ReplyDelete1. அழைப்பு: அப்படியே நம்ம பக்கம் வந்துட்டுப் போங்க.. என்று ஆரம்பித்து, என்ன கொஞ்ச நாளா ஆளையே காணோம் ரேஞ்சுக்கு போவும். இதை மிஸ்டு-கால் பின்னூட்டம் என்று அழைப்பதுண்டு
2. ஆப்பு: ரொம்ப காண்டாகி, கண்ணெல்லாம் சிவந்து, நாக்குத் தள்ளி, ஒரு சில பதிவர்களை போட்டுத் தாக்கணும் என்று எல்லா வலைப்பதிவிலும், நான் அடி வாங்கிறவன் இல்ல; ஆப்பு அடிச்சிட்டு போறவன்னு டாஸ்மாக் ஜந்து கணக்கா கட்-காப்பி-பேஸ்ட் பின்னூட்டம் போடுவது
3. (அ)ஞானி: அனானிகள் கூட பரவாயில்ல. இந்த அஞ்ஞானிகள் போடுற பின்னூட்டங்கள் சில தடவை ஒரிஜினல் இடுகைய விட பெர்ர்ர்ருசா போய்விடுவதுண்டு. இடம் பற்றாமல் ஒரே பின்னூட்டத்தை மூணு, நாலு பாகங்களா பிரிச்சு போடும் அநியாயம் கூட நடந்ததுண்டு.
4. எங்கள் வீட்டில்..: எடுத்த எடுப்பிலயே மாப்ள, மச்சான், தல, குரு, சிஷ்யா, அண்ணன்-தம்பி, பங்காளி.. என்று வழுக்கி வழுக்கி விழும் பாசக்காரப் பின்னூட்டங்கள். ஆனா பாருங்க, பெண்பதிவர்களை மட்டும் மாமாபொண்ணே, கொழுந்தியா, மச்சினிச்சி.. அட அட்லீஸ்ட் தங்கச்சீ, அக்காச்சீ என்றோ கூப்பிடுவதேயில்லை.
5. எஸ்கேப்: பெர்ர்ர்ருசா இருக்கிற இடுகைளை பக்கம் வந்துவிட்டால், இன்னும் படிக்கலே.. படிச்சுட்டு வந்து போடுறேன் பாஸ் என்றுபேக்-ஃபுட் போடுவது. திரும்ப வந்து.. இடுகையை படிக்காமல், இருக்கிற பின்னூட்டங்களை வைத்தே ஒரு மாதிரி கெஸ் பண்ணி பின்னூட்டத்தை போட்டுவிட்டு (என்னா சாமார்த்தியம்டா சாமி?!!) எஸ்ஸாகிவிடுவது.
இன்னும் 6, 7 வகைகள் இருக்கின்றன. எழுதினால் இந்தப் பின்னூட்டம் 3ம் வகை ஆகிவிடும் (அல்லது ஆகிவிட்டதா??) ஆபத்து இருப்பதால்.... எஸ்கேப்ப்ப்ப்!
மீ த 9...!
ReplyDelete\\நையாண்டி நைனா, யாரையும் நோகடிக்காத நையாண்டி என்ன நையாண்டி?, நைனா நையாண்டி.\\
ReplyDeleteஅடப்பாவிகளா..?
உங்களுக்கென்னய்யா, நீங்க பாட்டுக்க சொல்லிட்டு போயிருவீங்க..!
கிடந்து அவஸ்தை படுறது யாரு..?
நாங்கதான்யா. என்னோட கஷ்டம் உங்களுக்கு புரியாது சாமி...!
:(
நல்ல அலசல்...
ReplyDeleteபெருமாபாலும் நாம் பின்னூட்டம் போட்டால், நமக்கு பின்னூட்டம் என்கின்ற மன நிலை தானே இங்கு அதிகம் இருக்கிறது.. அப்புறம் எப்படி பின்னூட்டம் போட்டால் என்ன????
வழக்கம் போல் கலக்கல்!
ReplyDeleteஅசத்திட்டிங்க!
பிடித்த வரிகள்
போன்ற சொறிஞ்சிவிடும் பின்னூட்டங்களை விட்டுடிங்களே தல!
இன்னோரு விசயம் பிரபல பதிவர்களிடமிருந்து பின்னூட்டம் வாங்குவது ரொம்ப கடினம், தற்காக நாம் அவர்களை சொறிஞ்சி விட்டுகிட்டே இருக்கனும்!
ReplyDeleteமிக ரசித்தேன் தலைவா.அருமை.
ReplyDelete//(சில வலைபூவில் இடுகைக்கு கீழேயே) காணப்படும் வெற்று பெட்டியில் கருத்துகளை பதிவு செய்யலாம். அங்கு கேட்கப்படும் அடையாளத்தை கூகில் ஐடி அல்லது ஓப்பன் ஐடி எனப்படும் வலை முகவரியுடன் கடவுச்சொல் கொடுத்து பின்னூட்டம் வெளியிட வேண்டியது தான்.//
ReplyDeleteஇந்தவகை பின்னூட்ட முறை பெரும்பாலும் தொல்லையானது என்பது என் கருத்து. மிகவும் காலதாமதமாகுவதால் சிலசமயம் பின்னூட்டமிடாமலே சென்றுவிடுவதுண்டு. அதேபோல் மேல் தோன்றும் சாளர பின்னூட்டமுறை (தங்கள் வலையில் இருப்பது போன்ற முறை)யையும் மாற்றிவிடுவது நல்லது. ஏனெனில் சில வலைத்தளங்களை பார்வையிடமுடியாமல் எழுத்துகள் இருக்கும். அந்த நேரங்களில் பின்தோன்றும் சாளர முறை பின்னூட்ட முறை இருந்தால் அங்கு காணப்படும் Show Original Post என்பதை க்ளிக் செய்து படிக்கலாம். அப்படி படிக்க முடியாமல் இருக்கும் வலைப்பதிவுகளையும் தவிர்த்துவிடுகிறேன்.
:)
ReplyDeleteGood one
//இது பிரபல பின்னூட்டர்களை மட்டுமே அலசிய பகுதி.//
ReplyDeleteஅவ்வ்வ் அண்ணாச்சி பி.ப வரிசையில் நானுமா அவ்வ்வ்வ் அண்ணே எதா இருந்தாலும் நாம பேசி தீர்த்துப்போம் இப்படி போட்டு தாக்கவேண்டாம்:)))
//வாசிக்கும் அனைத்து இடுகையிலும் அதைப்பற்றிய கருத்தை ஒரு ஸ்மைலியாவது இட்டு சொல்லிவிடுவது நல்லது.//
ReplyDeleteஇல்லீங்க இந்த ஸ்மைலி போடுவதில் உடன்பாடு இல்லை இருந்தாலும் ஒன்னும் சொல்வதுக்கு இல்லை!
நான் பலர் பதிவுகளை படிச்சாலும் அறிமுகம் இல்லாதவர்கள் பதிவில் நாம பின்னூட்டம் போட்டால் அவர்கள் தவறாக நினைக்கிறார்கள் என்பதால் நண்பர்கள் பதிவில் மட்டும்
கும்மிங். பைத்தியகாரன், சுந்தர் ஆகியோர் என்ன சீரியஸாக எழுதி இருந்தாலும் அங்கு நான் தைரியமாக குசும்பாக கமெண்ட் போட முடிகிறது காரணம் இருவருக்கும் இருக்கும் புரிதல். தெரியாதவர்கள் பதிவில் போய் பின்னூட்டம் போட்டு வாங்கிகட்டிக்கிட்டதும் உண்டு:)
ஆகா பின்னூட்டங்களில் ஆராய்ச்சி செய்து ஒரு Ph.d வாங்கிடுவீங்க போலிருக்கே..
ReplyDeleteமுதலில் இதற்கு பின்னூட்டம் போடுவதா என்று யோசித்தேன்.. (இதுக்கும் ஏதாவது வகையறா கண்டு பிடிசிடுவீங்களோ என்றொரு பயம் தான்..)
இதற்கு பெயர்; பின்னூட்ட கயமைத்தனம், டூபூரித்தனம், கபூடித்தனம்.//
கலக்கல்..
நீங்கள் குறிப்பிட்ட அத்தனை பெரும் வந்து பிரசன்ட் போட்டுட்டாங்களா?
நல்ல பதிவு சகா
ReplyDelete;-)
ReplyDeleteகலக்கல்!
மீ த 40 போடாத சென்ஷியைக் கண்டித்து, மி த 41
ReplyDelete:)
கொலைவெறி ஒன்னும் இல்ல.
ReplyDeleteஅப்போ இதுதான் கிளிக் ஆச்சு
அதான்.
நன்றி.
This comment has been removed by the author.
ReplyDelete:)
ReplyDelete45
ReplyDelete46
ReplyDelete47
ReplyDelete48
ReplyDelete49
ReplyDeleteஅம்பது நானுங்கோ !
ReplyDeleteசில பின்னூட்டங்கள் பதிவில் உள்ள தவுறுகளை திருத்திக்கொள்ள உதவுகிறது.
ReplyDeleteநன்றி gulf-tamilan, :)
ReplyDelete//Blogger அப்பாவி முரு said...
ReplyDelete.. இங்கதான் மிகச்சரியாக பயன்படுத்தப் பட்டுள்ளது.
நம்மைத்தவிர நமது பதிவுக்கு காத்திருக்கும் உண்மையான உசுரு வேறயாருங்கோவ்???//
சரியா புரிஞ்சுக்கிட்டீங்க முரு..
//மானம் கேட்டு மகுளி பூத்திராது?//
எங்க பார்ப்போம், மகுளி பூக்குதான்னு...
ஜெகா, அழைப்பு வகை கண்டிப்பா சேர்த்திருக்கணும், நினைவிருந்தும் விட்டுவிட்டேன்....
ReplyDeleteநன்றி,,,
//Blogger டக்ளஸ்... said...
ReplyDeleteமீ த 9...!//
அவ்வ்வ்வ்...
//Blogger டக்ளஸ்... said...
.. அடப்பாவிகளா..?
உங்களுக்கென்னய்யா, நீங்க பாட்டுக்க சொல்லிட்டு போயிருவீங்க..!
கிடந்து அவஸ்தை படுறது யாரு..?
நாங்கதான்யா. என்னோட கஷ்டம் உங்களுக்கு புரியாது சாமி...!//
இப்ப புரியுது சாமி நல்லா புரியுது...
//Blogger லோகு said...
ReplyDeleteநல்ல அலசல்...
பெருமாபாலும் நாம் பின்னூட்டம் போட்டால், நமக்கு பின்னூட்டம் என்கின்ற மன நிலை தானே இங்கு அதிகம் இருக்கிறது.. அப்புறம் எப்படி பின்னூட்டம் போட்டால் என்ன????//
பெரும்பாலும் அப்படி என்றாலும், அப்படி நினைக்காத சிறுபான்மையில் நானும் ஒருவன்.
//Blogger வால்பையன் said...
ReplyDeleteவழக்கம் போல் கலக்கல்!
அசத்திட்டிங்க!
பிடித்த வரிகள்
போன்ற சொறிஞ்சிவிடும் பின்னூட்டங்களை விட்டுடிங்களே தல!//
அதையும் நெனச்சேன் வால், ஓவரா சொறிஞ்ச மாதிரி ஆகிடுமோன்னு... விட்டுட்டேன்.
நன்றி நர்சிம்,
ReplyDeleteநன்றி குடந்தை அன்புமணி, மாற்றிவிடுகிறேன்.
ReplyDeleteநன்றி Pradeep, ;)
ReplyDelete//Blogger குசும்பன் said...
ReplyDelete//இது பிரபல பின்னூட்டர்களை மட்டுமே அலசிய பகுதி.//
அவ்வ்வ் அண்ணாச்சி பி.ப வரிசையில் நானுமா அவ்வ்வ்வ் அண்ணே எதா இருந்தாலும் நாம பேசி தீர்த்துப்போம் இப்படி போட்டு தாக்கவேண்டாம்:)))//
குசும்பன், நீங்க ஒரிஜினல் அக்மார்க் பி.ப தான், இருந்தாலும் உங்கள இங்க பி.பி வரிசையில தான் கொண்டுவந்திருக்கேன்.
இந்த ஸ்மைலி விசயத்தில எனக்கும் இதே யோசனை இருந்தது.
என்னையும் அறிமுக லிஸ்ட்ல சேர்த்துடுங்க.. ;)
நன்றி,
//Blogger LOSHAN said...
ReplyDelete.. நீங்கள் குறிப்பிட்ட அத்தனை பெரும் வந்து பிரசன்ட் போட்டுட்டாங்களா?//
நன்றி LOSHAN,
இன்னும் வரவேண்டியிருக்கு.. ;)
நன்றி கார்க்கி,
ReplyDelete<<<>>>
நன்றி சென்ஷி,
<<<>>>
நன்றி கோ, கொலைவெறி?
நன்றி சுந்தர்,
ReplyDelete<<<>>>
நன்றி Thomas Ruban,
இந்த பின்னூட்டம் எந்த வகையை சார்ந்ததென்று தெரிய வில்லை. இருந்தாலும் கூட சொல்கிறேன்.
ReplyDelete"நன்கு ரசித்து எழுதியிருக்கிறீர்கள். படிப்பவர்களையும் ரசிக்க வைத்திருக்கிறீர்கள்."
வாழ்த்துக்கள்.
நன்றி சார்,
ReplyDeleteஉண்மைய சொல்லணும்னா...
மனசில் தோன்றியதை அப்படியே எழுத்தாக்கினேன்.
அப்ப திரும்பவும் அதையே வாசிக்கும் போது இன்னும் கூட ரசிக்கும்படி எழுதியிருக்கலாமோ என்று தோன்றுகிறது.
'பீர்'பால் ...
ReplyDelete//நான் அறிந்த வரையில் மணிகண்டன், ப்ராபகர் மற்றும் ஜெகநாதன் ஆகியோரின் பின்னூட்டங்கள் பிரபலம்.//
என்னுடைய லிஸ்டில் நீங்க தான் சார் முதல் ஆள். நீங்க ஒரு பின்னூட்டம் பல்கலைகழகம்.
:)
ReplyDelete//Blogger Sammy said...
ReplyDelete'பீர்'பால் ...
... என்னுடைய லிஸ்டில் நீங்க தான் சார் முதல் ஆள். நீங்க ஒரு பின்னூட்டம் பல்கலைகழகம்.//
நன்றி சாம்,
//பல்கலைகழகம்// எழுத்துப்பிழை ஏதும் இருக்கான்னு யாராவது பார்த்து சொல்லுங்கப்பா...
நன்றி வெட்டிப்பயல், ;)
ReplyDeleteகலக்கல்.
ReplyDelete//;) ; வெறும் ஸ்மைலி மட்டும்//
:))))
பிற்சேர்க்கை; இணைய வாசகன் ஒருவன் புதிதாக எழுத வரும்போது, அவனுக்கான ஊக்கமாக, உளியாக இந்தப்பின்னூட்டங்கள் இருக்கிறது. ஆரம்பகட்ட இணைய எழுத்தானளின் படைப்புக்கான மதிப்பெண்ணும், அவனுக்கு இடப்படும் பின்னூட்டங்களே. ஆனால் எழுத்தில் வெற்றி பெற, எதிர்பார்ப்பில்லா எழுத்து அவசியமாகிறது. பின்னூட்டம், எதிர்வினை, பாராட்டு என்ற எதிர்பார்ப்பில் மட்டுமே எழுதப்படும் எழுத்தில் படைப்பாளன் சமரசம் செய்துகொள்ள வேண்டிவரும். இத்தகைய எழுத்தில் படைப்பாளனுடைய உண்மை முகம் தெரிய வாய்ப்பில்லை. எதிர்பார்ப்பை தாண்டிய, சமரசமில்லா எழுத்து வேண்டும், அதை கொடுப்பது படைப்பாளனின் கடமையாகிறது.
ReplyDelete