பெயர் : தமிழ் பதிவுலகம் வயது : அதிகமில்லை ஜென்டில்மென், (ரொம்ப கம்மி பியூட்டிஃபுல் லேடீஸ்)
தொழில் : அரிப்புக்கு சொறிதல் (தனக்கும் பிறருக்கும்) உபதொழில் : முதுகு புண்ணுக்கு மருந்திடல் (மற்றும் விளம்பரம்)
நண்பர்கள் : ஆமாஞ்சாமி போடும் அனைவரும் எதிரிகள் : அதை மறுக்கும் அனைவரும்
குணம் : எவ்வளவு அடிச்சாலும் தாங்குவது குடும்பம் : தனிமனித தாக்குதல் வேண்டாமே... அய்ய்ய்.
பிடித்த வேலை : எல்லோரையும் ஓட்டுவது. பிடிக்காத வேலை : யாருக்கும் ஓட்டு போடுவது.
பிடித்த திரட்டி : தன்னை தலையில் வைக்கும் அனைத்தும். பிடிக்காத திரட்டி : மதிக்காதது
பிடித்த பதிவு : சொறிந்துவிடும் அனைத்தும் பிடிக்காத பதிவு : சொறியச் சொல்லும் அனைத்தும்.
விரும்புவது : ஹிட்ஸ் விரும்பாதது : குட்ஸ்
பொழுதுபோக்கு : இதைவிட்டா வேற என்ன இருக்கு?
சமீபத்திய எரிச்சல் : மொக்கைகள் குறைந்தது. நீண்டகால எரிச்சல் : மொக்கைகள் அதிகமானது.
சமீபத்திய சாதனை : சுனாமிகள் தொழிலில் பிஸியாகியிருப்பது நீண்டகால சாதனை : கத்துக்குட்டிகள் ஆட்டம்
<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>
பெயர் : தமிழ் பதிவுலகம் வயது : கல்தோன்றி மண் தோன்றா காலத்தே....
தொழில் : தமிழ் வளர்ப்பது உபதொழில் : தமிழர்களையும் சேர்த்து
நண்பர்கள் : முகம் காணா பதிவர்கள் எதிரிகள் : முகம் மறைக்கும் பதிவர்கள்
குணம் : வந்தாரை வாழ்த்தி வரவேற்பது குடும்பம் : தமிழன் உணர்வுள்ள அனைவரும்.
பிடித்த வேலை : இலக்கியம், மொக்கைகள். (எழுத்தும், வாசிப்பும்) பிடிக்காத வேலை : பதிவுக்கு கரு கிடைக்காமல், இப்படி காப்பி, எடிட் செய்வது.
பிடித்த திரட்டி : பதிவை பரவலாக்கும் அனைத்தும் பிடிக்காத திரட்டி : அப்படி ஏதும் இருக்கா?
பிடித்த பதிவு : படிக்காமலேயே புரிவது. பிடிக்காத பதிவு : பத்து முறை படித்தாலும் புரியாதது.
விரும்புவது : அங்கீகாரம் விரும்பாதது : ஏளனம்
பொழுதுபோக்கு : இதைத்தவிர அனைத்தும்.
சமீபத்திய எரிச்சல் : சீரியஸ் விவாதங்கள் நீண்டகால எரிச்சல் : அரசியல்
சமீபத்திய சாதனை : உயிருக்கு போராடும் சக பதிவருக்கு உலகலாவிய உதவி. நீண்டகால சாதனை : எதற்கும் தயாராயிருப்பது.
மொக்கை பயோக்ராஃபி வேண்டாமே பீர்
ReplyDeleteநிஜ பயோக்ராஃபி மிகவும் நன்றாய் வந்துருக்கு......
:-)))
ReplyDeleteஅண்ணாச்சி இதுல எது நிஜம்
ReplyDeleteஒண்ணுமே புரியலயே...,
மொக்கை பயோக்ராஃபி தான் ஜூப்பர்.. தூக்கிறாதீக..
ReplyDeleteபீர்,
ReplyDeleteஇரண்டையும் சரிபாதியாய் கலந்து போட்டால் நிஜம்... அவ்வளவுதான்.
ரசிக்கும்படியாய் இருக்கிறது...
பிரபாகர்.
எப்பிடி இதெல்லாம்?
ReplyDeleteஐ மாடரேசன்...
ReplyDeleteஐ மாடரேசன்...
ஐ மாடரேசன்...
ஐ மாடரேசன்...
//Your comment has been saved and will be visible after blog owner approval. //
ReplyDeleteஐ ஜாலி...
இனிமே கும்மி ஓடாதே....
ஆசைகளைச் சொல்லிட்டீங்க!!
ReplyDeleteஓட்டும் போட்டாச்சு!!
ஹிட்டும் கூடிவிடும்!!
இப்படி அந்நியன் ஸ்டைலில் 2 விதமா எழுதி, கும்மியடியிலிருந்து க்ரேட் எஸ்கேப் ஆயிட்டீங்களே பீர்!? உங்க அப்ரோச் ரொம்ம்ம்பப் பிடிச்சிருக்கு!
ReplyDelete:)
ReplyDeleteEnakku thannadakkam Romba Athikam...!
இதில் இருக்கும் அனைத்தையும் ரசித்தேன்..
ReplyDelete"தலைப்பே பிரிச்சு மேயுதுங்க"
ReplyDelete//நண்பர்கள் : முகம் காணா பதிவர்கள்// ஆஹா!
//தொழில் : அரிப்புக்கு சொறிதல் (தனக்கும் பிறருக்கும்)
உபதொழில் : முதுகு புண்ணுக்கு மருந்திடல் (மற்றும் விளம்பரம்)//
நொறுக்குங்க!
முதலில் உள்ளதுதான நிஜ பயோகிராஃபி?
ஹி.. ஹி...
ரெண்டுமே நல்லாயிருக்கு...
ReplyDeleteஉக்காந்து யோசிப்பீங்களோ !!!
நல்லா எழுதி இருக்கீங்க நண்பா
ReplyDeleteஅருமை!
ReplyDeleteகலக்கல் கண்ணா கலக்கல்!
ReplyDeleteநிஜத்தை விட மொக்கை சூப்பர். :)
ReplyDelete// பிரியமுடன்...வசந்த் said...
ReplyDeleteமொக்கை பயோக்ராஃபி வேண்டாமே பீர்//
நன்றி வசந்த்,
எனக்கு ஒரு டைவர்ஷன் தேவைப்பட்டதால் தான், இந்த மொக்கை வந்தது. இது யார் மனதையும் புண்படுத்துவதற்கில்லை. இதில் நான் கூட அடங்குவேன்.
உங்களை வருத்தப்படுத்தியிருந்தால், வருந்துகிறேன்.
ஆமா.... எதை மொக்கைன்னு சொல்றீங்க? (ஜோக்குப்பா... சிரிங்க)
நன்றி TVR, வருகைக்கு மிக்க மகிழ்ச்சி,
ReplyDelete<<<>>>
//SUREஷ் (பழனியிலிருந்து) said...
அண்ணாச்சி இதுல எது நிஜம் //
அதனாலதான் தலைப்பு போடல...
நன்றி SUREஷ்,
<<<>>>
நன்றி ♫சோம்பேறி♫, தூக்கல...
<<<>>>
நன்றி பிரபாகர், (@ SUREஷ், பிரபாகர் சொல்லிட்டார்)
//அப்பாவி முரு said...
ReplyDeleteஎப்பிடி இதெல்லாம்?//
அதா வருது.... ஹி ஹி...
//Blogger அப்பாவி முரு said...
ஐ மாடரேசன்...//
முந்தைய பதிவில் அனாமத்துக்களை கட்டுபடுத்த போடப்பட்டது, இப்ப தூக்கிட்டேன்.
இனி ஓட்டலாம், கும்மி.
நன்றி டாக்டர்,
ReplyDelete<<<>>>
நன்றி ஜெகா, கும்மியிருந்து எஸ்ல்லாம் ஒண்ணும் இல்ல,,,, எனி டைம் ரெடி ஃபார் கும்மி. மொக்கை கும்மி.
<<<>>>
நன்றி டக்ளஸ், உங்கள பத்திதான் தெரியுமே, ரொம்ப தன்னடக்கம்.
<<<>>>
நன்றி நைனா, (நையாண்டி எங்க போச்சு?)
<<<>>>
நன்றி பாலா, நீங்க சொல்றீங்க... ஏத்துக்க வேண்டியதுதான்.
<<<>>>
நன்றி செய்யது, ஆமா...பஸ்ல உட்கார்ந்து யோசிச்சது,
ReplyDelete<<<>>>
நன்றி கார்த்திக், (பிஸியா இருக்கீங்களா?)
<<<>>>
நன்றி வால்,
<<<>>>
நன்றி ஜி, பாலா ஜி... (மிக்க மகிழ்ச்சி)
<<<>>>
நன்றி மகேஷ்வரன் ஜோதி,
<<<>>>
இப்பதிவை வாசித்து முன் பக்கம் கொண்டு சென்ற அனைவருக்கும் நன்றி...
இரண்டுமே கலக்கல்..
ReplyDeleteபாஸு..........நானும் ஜய்ஹிந்த்புரம் தான்.....நேத்தாஜி தெரு ........அப்போ நீங்க...........?
ReplyDeleteநன்றி பட்டிக்காட்டான்,
ReplyDelete---
நேசன், நான் ஜீவாநகரில் இருந்தேன். 25 வருடங்களாக. வருகைக்கு நன்றி.