Aug 28, 2009

ஹிந்தி கற்பது பாவச்செயலா?

அண்மையில் நமது மனிதவள மேம்பாட்டுதுறை அமைச்சர் கபில் சிபல் கூறியுள்ள 'தாய் மொழியுடன் சேர்த்து, ஹிந்தியும் கற்க வேண்டும்' என்ற கருத்து இங்கு மீண்டும் சில அசைவுகளை ஏற்படுத்தியுள்ளது.

எந்த தமிழனும் தமிழை தாழ்த்தி பேசுபவனில்லை. தமிழை தாழ்த்துபவன் தமிழனாக இருக்க முடியாது. தாய் மொழியை தாழ்த்தும் எவனும் பேச தகுதியற்றவன். எந்த மொழியும் பேச தகுதியற்றவன். தாய் பேசும் மொழிதான் தாய் மொழி என்பதில்லை. தாய் நாட்டு மொழிதான் தாய் மொழி என்பேன். இந்தியா பொன்ற பல மொழிகளை தன்னகத்தே கொண்டுள்ள நாடுகளில், மாநில எல்லைகள் மொழியால் பகுக்கப்பட்டிருப்பதால், அந்தந்த மாநிலங்களில் பேச்சுவழக்கில் உள்ள மொழியே அவரவர் தாய் மொழி எனலாம். தமிழ்நாட்டிலிருக்கும் தமிழர்களாகிய நமக்கு தாய் மொழி ‘தமிழ்’.

பணிநிமிர்த்தமாகவோ அல்லது சுற்றுலா போன்ற இதர காரணங்களுக்காகவோ தன் தாய் மாநிலத்திற்கு வெளியே செல்லும், எல்லையில் வரையப்பட்டிருக்கும் ஒரு கோட்டைத்தாண்டி செல்லும் ஒருவர் தாய் மொழி தவிர வேறு மொழி தெரியாத போது தான் அனுபவிக்கும் சிரமங்களை சொல்லித்தெரிய வேண்டியதில்லை. 1997ல் மும்பை சென்றபோது நான் அனுபவித்திருக்கிறேன். நம் அண்டை மாநிலமான கேரளா செல்லும் போது மலையாளமும், அதேபோல ஆந்திரா, கர்நாடகா செல்லும் போது தெலுகும், கனடமும் கற்றுக்கொள்ள வேண்டும் என்பது சற்று சிரமமே. ஆந்திராவை தாண்டி சென்று விட்டால், ஹிந்தி பொதுமொழியாக இருக்கிறது. ஹிந்தி என்ற ஒரு மொழி பேச தெரிந்தால் பெரும்பாலான வட மாநிலங்களில் சிரமமின்றி தம் தேவையை நிறைவேற்றிக்கொள்ளலாம். ஹிந்தி என்ற, இந்தியாவில் பெரும்பாலானோர் பேச்சு மொழியாக கொண்டிருக்கும் மொழியை வெளி மாநிலங்களோடு தொடர்பு இருக்கும் அனைவரும் பேச கற்றுகொள்ளுதல், அவரவர் வாழ்வில் நன்மைபயக்கும். நம் அண்டை மாநிலத்தவர் எப்போதோ இதை ஏற்றுக்கொண்டு விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகப் பொது மொழியான ஆங்கிலத்தையே கற்கலாமே, ஹிந்தி எதற்கு? என்ற வாதமும் கூடவே வருகிறது. ஆங்கிலம் கற்பதற்கு யார் தடை விதித்தார்கள்? தாராளமாக கற்கலாம். சர்வதேச தொடர்பில் தொழில் செய்பவர்களுக்கு கட்டாயம் ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டும் என்பது போலவே, நம்தேசம் முழுக்க தொழில் தொடர்பு செய்பவர்களுக்கு சாமானியர்களோடு பேச ஹிந்தி அவசியமாகிறது. ஹிந்தி பேசும் ஒருவனுக்கு தமிழ் நாட்டில் தொழில் தொடர்பு வேண்டும் என்றால், தமிழ் பேச கற்றுக்கொள்கிறான். தமிழ் திரைப்படங்களில் வருவது போல, நம்மிள் தங்கம் தரான், நிம்மிள் பொண்ணு தரான் என்பது போலல்லாமல் அழகாகவே தமிழ் பேசுவதை பார்க்கிறோம் / கேட்கிறோம். ஆனால், வட மாநிலங்களுக்குச் சென்று ஹிந்தி பேச கற்றுக்கொள்ளும் நம்மவர்களின் ஹிந்தி ஆயகா, ஜாயகா என்பதாகவே இருக்கிறது. ஆள் பாதி ஆடை பாதி என்பது போலவே நாம் உதிர்க்கும் சொற்களும் நம்மில் பாதி, நமக்கு மரியாதையை பெற்றுதருகிறது என்பதை மறுக்க முடியாது. இது அனைத்து மொழிகளுக்கும் பொருந்தும்.

சர்வதேச அளவில் அதிகமாக பேசப்படும் மொழி வரிசையில ஹிந்தி இரண்டாவது இடத்தில் வருகிறது என்பதையும், அதற்கடுத்த நிலையிலேயே ஆங்கிலம் இருக்கிறது என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். துபாய் அரபிகளில் பெரும்பாலானோர் ஹிந்தி பேசுபவர்களாக இருக்கின்றனர். வெளிநாடுகளில் வசிக்கும் பாகிஸ்தானியர், பெங்காளியர், நேபாளியர் மற்றும் ஆப்கானியருக்கான பொது மொழியாக ஹிந்தி இருக்கிறது. இவர்களுடைய தாய் மொழிக்கும் ஹிந்தி சொற்களுக்கும் சிறிதளவே மாற்றம் இருப்பதால், இவர்களால் எளிதில் பேச கற்றுக்கொள்ள முடிகிறது. தேவையிருக்கும் அனைவரும் கற்றுக்கொண்டு பேசுகின்றனர். ஆனால் தமிழர்களாகிய நம் பாடுதான் திண்டாட்டம், புதிய மொழி ஒன்றினை கற்றுக்கொள்ளும் முன் (சில தவறான வார்த்தை உச்சரிப்பால்) நரக வேதனையுடன் அவமானப்பட வேண்டியிருக்கிறது. ஹிந்தி மட்டும் அல்ல, நம் காதால் கேட்டிராத மலையாளம், தெலுகு மற்றும் கனடம் கற்ற முயலும் போதும் இதே நிலைதான்.

தமிழ்நாட்டிற்கு வரும் வெளி மாநிலத்தவரும் தமிழ் பேசுவது மகிழ்ச்சியளிப்பது போலவே, சிங்கப்பூர், மலேசியா பொன்ற நாடுகளில் தமிழ் இரண்டாம் மொழியாக இருப்பதால், அங்குவரும் மற்ற இந்திய மாநிலத்தவர் / நாட்டவர் தமிழ் கற்றுக்கொண்டு பேச முயற்சிப்பதும் மகிழ்ச்சியளிக்கிறது.

தமிழ் நாட்டில் ஹிந்தி எதிர்ப்பு ஒரு கழுகு பார்வை.
1937, தமிழ்நாட்டில் (அப்போது சில ஆந்திர பகுதிகளையும் உள்ளடக்கியது)  ஆங்கிலேயர் ஆட்சியில் ராஜாஜி தலைமையிலான அரசு 'பள்ளிகளில் கட்டாய ஹிந்தி' என்ற சட்டம் கொண்டுவருகிறது. தீவிர தமிழ் ஆர்வலர்கள் சிலர் மற்றும் ராஜாஜி எதிர்பாளர்கள் சிலரும் சேர்ந்து அத்திட்டத்தை எதிர்கின்றனர்.  கைது நடவடிக்கையின் போது சிலர் உயிர் நீத்தனர் என்றும் வரலாறு சொல்கிறது. 1940, அதே ராஜாஜியால் இச்சட்டம் திரும்ப பெறப்படுகின்றது. 1965, இந்திய அலுவல் மொழியான ஹிந்தி 'ஒரே மூச்சாக, அரபிக்கடலில் தூக்கி எறியப்பட வேண்டும்' என்ற கொள்கையோடு முதலாம் ஹிந்தி எதிர்ப்பு மாநாடு திருச்சியில் நடத்தப்படுகிறது. முன்னதாக குடியரசு பத்திரிக்கை, 'ஹிந்தி, ஆரிய மொழி என்பதாலும், சமஸ்கிருதம் தெரிந்த ஒரு சாதியினரின் மத கோட்பாடுகளை முன்னிருத்தும் முயற்சியே ஹிந்தி திணிப்பு' என்றும், மேலும் 'ஹிந்தியை ஏற்றுக்கொண்டால், ஹிந்தி பேசும் வட நாட்டவரைவிட நாம் தாழ்ந்த நிலையிலேயே இருக்க வேண்டிவரும்' என்பதாகவும் சொல்லிற்று. இயல்பான இனப்பற்று உணர்ச்சி மிகுதியில் ஹிந்தி எதிர்ப்பு பலமாகவே நடந்திருக்கிறது. ஹிந்தி ஆசிரியர்கள் கடைவீதியில் அடித்துவிரட்டப்பட்டிருக்கின்றனர். அவர்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டிருக்கின்றன. இதே நிலையில், சுதந்திர போராட்ட வீரர்கள் ஆங்கில எதிர்ப்பில் இருந்திருக்கின்றனர். அப்போதும், இவற்றை கண்டுகொள்ளாமல், ஆங்கிலம் கற்றவர்களின் சந்ததியின் வாழ்க்கைதரம் இன்று நல்ல நிலையில் உள்ளதையும் கவனத்தில் கொள்ளவேண்டும். ஹிந்தி எதிர்ப்பு முன்னுக்கு வர ஆங்கில எதிர்ப்பு பின்னால் சென்றது. அதைத்தொடர்ந்து திராவிட இயக்கங்கள், ஹிந்தி எதிர்ப்பு அரசியல் நடத்திக்கொண்டிருக்கின்றன. மத்திய ஆட்சியில் பங்குபெறும் திராவிட அரசுகளின் பிரதிநிதிகள் ஹிந்தி பேச்சுத் திறமைமிக்கவர்களாக இருந்திருக்கிறார்கள், இருக்கிறார்கள். இந்தியாவை ஆட்சி செய்ய ஹிந்தி தெரிந்திருக்க வேண்டும் என்பது, இயல்பான எதிர்பார்ப்பு.

ஹிந்தி எதிர்ப்பு என்பது அரசியலாகவும், சமஸ்கிருதம் தெரிந்த ஒரு சமுதாயத்தின் மீது அல்லது சமஸ்கிருதத்தின் மீது இருந்த / இருக்கும் வெறுப்பாகவுமே படுகிறது. ஒரு பொருளால் பலன்பெறும் அல்லது அந்தப்பொருள் இல்லாமல் அவதிப்படும் மக்களுக்கே புரியம் அப்பொருளின் அருமை. அப்பொருளுக்கு தொடர்பில்லாதவர்கள் அது கூடாதென்ற சாபம் இடக்கூடாது. அப்பொருளை பாவிக்காது, அதன் தீங்கு பற்றிய பொத்தாம்பொதுவான அவதானிப்பு கூடாது. ஒரு கற்பனை; எனக்கு ஹிந்தி தெரியாது, வட மாநிலத்திற்கு சென்றிருக்கிறேன். தமிழர்களுக்கெதிரான திடீர் கலவரம், ஹிந்தியில் பேசினால் உயிர் பிழைப்பேன். சொல்லுங்கள்… நான் ஹிந்தி கற்றிருக்க வேண்டுமா? கூடாதா?

தாய் மொழி தவிர பிற மொழிகள் கற்றுக்கொள்வது தவறா? பாவச் செயலா? அட, என்னங்க… உலகமயமாக்கலின் பலன்களை அனுபவித்து வரும் இந்த காலத்திலும், கற்றலுக்கு தடைவிதிப்பது கட்டுப்பெட்டித்தனம் இல்லயா? கல்விக்கு ஏது எல்லை, கற்கும் சூழலும் வாய்ப்பும் இருப்பவன் கற்கட்டும், அதை தடுக்கக்கூடாது. தனக்கு கணினிப் பாடம் வரவில்லை என்றால், கணினியை குறை சொல்வது மனித இயல்பு. ஆடத் தெரியாதவளுக்கு…. கல்வியின் மூலம் யாருக்கும் எந்த கேடும் வந்துவிடாது. கற்றது கை மண் அளவு. சீனா சென்றேனும் சீர்மிகு கல்வியை கற்றுக்கொள், என்பதான சொல்லாடல்கள் கற்றலை ஊக்குவிக்கின்றன.

பிற மொழி கற்பதனால் தமிழின் தொன்மையை, பெருமையை மறந்துவிடக் கூடாது என்பதை மட்டும் நினைவில் கொண்டு, கற்றலுக்கு அணை போடாமல், முறையாக பல மொழிகள் கற்று வாழ்வில் முன்னேற அனைவரையும் வாழ்த்துகிறேன்.

நன்றி!

 • அதிகம் திருத்தம் செய்யாமல், அவசரமாக எழுத முயற்சித்தது.
 • கொஞ்ச நாளைக்கு விடுப்பு தேவைப்படுகிறது. யாருக்கு ‘விடுப்பு விண்ணப்பக்கடிதம்’ அனுப்பணும்?

235 comments:

 1. // 1997ல் மும்பை சென்றபோது நான் அனுபவித்திருக்கிறேன்.//

  அதே போல் சென்னையிலோ பெங்களூரிலோ பணிபுரிய வரும் இந்திக்காரர்கள் ஏன் தமிழோ கன்னடமோ கற்பதில்லை

  // ஹிந்தி என்ற, இந்தியாவில் பெரும்பாலானோர் பேச்சு மொழியாக கொண்டிருக்கும் மொழியை வெளி மாநிலங்களோடு தொடர்பு இருக்கும் அனைவரும் பேச கற்றுகொள்ளுதல், அவரவர் வாழ்வில் நன்மைபயக்கும்.//

  இதற்கு பதில் இந்திக்காரர்கள் ஆங்கிலம் கற்றுக்கொண்டால் எந்த சிரமமும் இருக்காதே

  --

  பிற மாநிலத்தவர்கள் மூன்று மொழி கற்க வேண்டும். ஆனால் தாங்கள் ஒரு மொழி, தங்கள் தாய்மொழி, மட்டுமே கற்போம் என்று இந்திக்காரர்கள் கூறுவது எப்படி சரியாகும்


  --

  இன்று சுவிடனில் கூட நம் ஆட்கள் வேலை செய்கிறார்கள். அவர்கள் என்ன பள்ளியில் அந்த மொழிகள் கற்றவர்களா

  --

  ReplyDelete
 2. // ஆங்கிலம் கற்பதற்கு யார் தடை விதித்தார்கள்? தாராளமாக கற்கலாம்.//

  இதைத்தான் நான் கூறுகிறேன்

  இந்திக்காரர்கள் ஆங்கிலம் கற்றால் அவர்களுக்கும் நன்மை, நமக்கும் நன்மை

  ஆனால் அவர்கள் ஒரு மொழி மட்டுமே கற்பேன். மற்றவர்கள் மூன்று மொழி கற்கவேண்உம் என்று எதிர்பார்ப்பது எப்படி நியாயம்

  ReplyDelete
 3. // ஹிந்தி பேசும் ஒருவனுக்கு தமிழ் நாட்டில் தொழில் தொடர்பு வேண்டும் என்றால், தமிழ் பேச கற்றுக்கொள்கிறான். //

  அதே போல் தமிழ் பேசும் ஒருவர் இந்திமாநிலங்களில் தொழில் தொடங்க வேண்டுமென்றால் இந்தி கற்றூக்கொள்ளட்டும்

  அனைவரும் ஏன் கற்க வேண்டும்

  --

  அவர்கள் இங்கு வந்தால் மட்டுமே இந்தி கற்பார்களாம். ஆனால் நாம் இங்கு இருந்தாலும் இந்தி கற்கவேண்டுமா

  என்ன கொடுமை சார் இது

  ReplyDelete
 4. //குடியரசு பத்திரிக்கை, 'ஹிந்தி, ஆரிய மொழி என்பதாலும், சமஸ்கிருதம் தெரிந்த ஒரு சாதியினரின் மத கோட்பாடுகளை முன்னிருத்தும் முயற்சியே ஹிந்தி திணிப்பு' என்றும், மேலும் 'ஹிந்தியை ஏற்றுக்கொண்டால், ஹிந்தி பேசும் வட நாட்டவரைவிட நாம் தாழ்ந்த நிலையிலேயே இருக்க வேண்டிவரும்' என்பதாகவும் சொல்லிற்//

  இதை நீங்கள் மறுக்கிறீர்களா .... ????

  ReplyDelete
 5. // இதே நிலையில், சுதந்திர போராட்ட வீரர்கள் ஆங்கில எதிர்ப்பில் இருந்திருக்கின்றனர். //

  இல்லை தலைவரே

  தென்மாநிலங்களில் சுதந்திரப்போராட்டத்தில் ஆங்கிலேயர்கள் எதிர்க்கப்பட்டனர். ஆனால் அங்கிலேயம் எதிர்க்கப்படவில்லை

  ReplyDelete
 6. அடுத்தவன் தவறு செய்கிறான் என்பதற்காக நாமும் தவறு செய்யணுமா?

  அவனை தமிழ் கற்கச்சொல், நான் ஹிந்தி கற்கிறேன் என்பது எப்படி சரியாகும்?

  கல்விக்கு ஏன் டாக்டர் அணை கட்டணும்?

  பள்ளி காலத்திலேயே இவன் வட நாட்டிற்கு தொழிலுக்கு செல்லமாட்டான் என்ற முடிவுசெய்ய முடியுமா? கற்றுக்கொள்வதால் என்ன தவறு நேர்ந்துவிடப்போகிறது?

  ReplyDelete
 7. //ஹிந்தி எதிர்ப்பு என்பது அரசியலாகவும், சமஸ்கிருதம் தெரிந்த ஒரு சமுதாயத்தின் மீது அல்லது சமஸ்கிருதத்தின் மீது இருந்த / இருக்கும் வெறுப்பாகவுமே படுகிறது.//

  அதே போல் இந்தி ஆதரவு என்பது ஒரு அரசியலாகவும் சமஸ்கிருதம் தெரிந்து ஒரு சமுதாயத்தின் மீது அல்லது சமஸ்கிருதத்தின் மீது இருக்கும் விருப்பமாகவே படுகிறது என்பதையும் ஏற்றுக்கொள்வீர்கள் தானே

  --

  இதே இந்தி ஆதரவை (இடப்பங்கீட்டிற்கு ஆதரவான) அர்ஜூன் சிங் சொல்லியிருந்தால் இந்த அளவு எதிர்ப்பு வந்திருக்குமா என்பது கேள்வியே

  ஆனால் வந்தது முதல் இடப்பங்கீட்டிற்கு எதிராக செயல்பட்டுக்கொண்டிருக்கும் ஒருவர் கூறியது தான் பிரச்சனை என்பதையும் புரிந்து கொள்ளுங்கள்

  ReplyDelete
 8. //ஒரு கற்பனை; எனக்கு ஹிந்தி தெரியாது, வட மாநிலத்திற்கு சென்றிருக்கிறேன். தமிழர்களுக்கெதிரான திடீர் கலவரம், ஹிந்தியில் பேசினால் உயிர் பிழைப்பேன். சொல்லுங்கள்… நான் ஹிந்தி கற்றிருக்க வேண்டுமா? கூடாதா?//

  அப்படியென்றால் நீங்கள் கன்னடம் கற்க வேண்டும்

  இன்று வட மாநிலங்களுக்கு வேலைக்கு போகும் தமிழர்களை விட கர்நாடகாவிற்கு வேலைக்கும் போகிறவர்கள் தானே அதிகம்

  தமிழ் பள்ளிகளில் கன்னடத்தை மூன்றாவது மொழியாக வைத்துக்கொள்ளலாமா

  --

  ஏன் வட இந்தியர்கள் பெரும்பாண்மையானவர்கள் ராமேஷ்வரம், கன்னியாகுமரி வருகிறார்களே. அவர்கள் பள்ளியில் தமிழ் கற்க வேண்டியது தானே

  --

  ஹஜ் புனித பயணம் மேற்கொள்ளும் எத்தனை இஸ்லாமியர்கள் பள்ளியில் அராபிக் கற்கிறார்கள் ??

  ReplyDelete
 9. //தாய் மொழி தவிர பிற மொழிகள் கற்றுக்கொள்வது தவறா? பாவச் செயலா? //

  கண்டிப்பாக இல்லை

  இந்திக்காரர்களை இந்தியை தவிர அஸ்ஸாமிசையோ காஷ்மீரியையோ, மலையாளத்தையோ கற்றுக்கொள்ள சொல்லுங்கள்

  அதே போல் பிற மாநிலத்தவரை ஏதாவது ஒரு இந்திய மொழியை மூன்றாவதாக கற்றுக்கொள்ள சொல்லுங்கள்

  ஏற்றுக்கொள்ளலாம்

  ஒரு மொழி திணிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது நண்பரே

  ReplyDelete
 10. //அட, என்னங்க… உலகமயமாக்கலின் பலன்களை அனுபவித்து வரும் இந்த காலத்திலும், கற்றலுக்கு தடைவிதிப்பது கட்டுப்பெட்டித்தனம் இல்லயா//

  அது தானே

  ஆங்கிலம் கற்க மறுக்கும், தான் இரண்டாவது மொழி கூட கற்க மறுக்கும் இந்திக்காரர்களுக்கு நல்ல சூடு.... தொடருங்கள் சார் :) :)

  ReplyDelete
 11. //கல்விக்கு ஏது எல்லை, கற்கும் சூழலும் வாய்ப்பும் இருப்பவன் கற்கட்டும், அதை தடுக்கக்கூடாது.//

  கல்விக்கு ஏது எல்லை, கற்கும் சூழலும் வாய்ப்பும் இருப்பவன் கற்கட்டும், அதை திணிக்கக்கூடாது.

  ReplyDelete
 12. //அப்படியென்றால் நீங்கள் கன்னடம் கற்க வேண்டும்//

  எனக்கு தொழில் பெங்களூருவில் என்றால் நான் கன்னடம் கற்க வேண்டியதுதான்.

  //ஹஜ் புனித பயணம் மேற்கொள்ளும் எத்தனை இஸ்லாமியர்கள் பள்ளியில் அராபிக் கற்கிறார்கள் ?? //

  அங்கும் ஹிந்தி பொதுமொழியாக இருக்கிறது.

  ReplyDelete
 13. இருக்கும் நிலையிலேயே தாய்மொழிக்கல்வி, ஆங்கிலக்கல்வி கொண்டே மாணவர்களின் தேர்ச்சி விகிதம், dropout விகிதம்,மனனம் செய்யாமல் புரிந்து கற்கும் கல்வி முறை,அனைவருக்கும் (அரசு பள்ளியில் படிப்பவருக்கும்) நன்கு கல்வி கிடைக்க வழிவகை.. என பல முக்கியமான பிரச்சனைகள் இருக்க, மேலும் ஒரு மொழி புகுத்துவதால் மேலும் குழப்பம்தான்..

  உணர்ச்சிவசப்படாமல், அறிவுபுர்வமாக யோசியுங்கள் என சொல்பவர்கள் ஏன் இதை யோசிக்க தவறுகிறார்கள்..

  சில மாதங்கள் திருவனந்த்தபுரத்திலும்,2 வருடம் கொல்கத்தாவிலும், சில மாதங்கள் டெல்லியிலும், சில மாதங்கள் புவனேஷ்வரிலும் இருந்திருக்கிறேன்.. சென்ற இடங்களில் சில நாட்களில் தேவைப்பட்ட மொழியை எளிதாய் கற்றுக்கொண்டு தேவைப்பட்டபோது சமாளித்துக்கொள்ளவே முடிந்தது.. ஹிந்தி தெரியாவிடில் உயிர் ஒன்றும் போய்விடவில்லை.. :-)

  ReplyDelete
 14. //அதிகம் திருத்தம் செய்யாமல், அவசரமாக எழுத முயற்சித்தது.//

  அவசரமாக எழுதியது என்று தெரிகிறது :) :) :)

  பரவாயில்லை

  பல இடங்களில் நான் திருத்தியிருக்கிறேன் :) :) :)

  ReplyDelete
 15. //கொஞ்ச நாளைக்கு விடுப்பு தேவைப்படுகிறது. யாருக்கு ‘விடுப்பு விண்ணப்பக்கடிதம்’ அனுப்பணும்?//

  குசும்பன் !!

  (அவருக்கு அனுப்பினால் எங்களுக்கு ஒரு கார்ட்டூனாவது கிடைக்கும்)

  ReplyDelete
 16. //அடுத்தவன் தவறு செய்கிறான் என்பதற்காக நாமும் தவறு செய்யணுமா?

  அவனை தமிழ் கற்கச்சொல், நான் ஹிந்தி கற்கிறேன் என்பது எப்படி சரியாகும்?//

  இல்லை என்றால் இந்தி வாழும். தமிழ் அழிந்து விடும்

  --

  நான் உங்களிடமிருந்து பணம் வாங்குகிறேன் என்று வைத்துக்கொள்ளுங்கள்

  அதை திருப்பித்தராமல் நான் மட்டும் வாங்கிக்கொண்டிருந்தால் சரியாகுமா

  நாளடைவில் நீங்கள் ஒட்டாண்டி ஆகிவிடுவீர்கள் அல்லவா

  நான் வாங்கவும் வேண்டும்
  அளிக்கவும் வேண்டும்

  அப்பொழுது தான் நானும் முன்னேறுவேன்
  நீங்களும் முன்னேறுவீர்கள்


  -

  அப்படி இல்லாமல்

  புருனோ காசு தரவே மாட்டான். வாங்க மட்டும் தான் செய்வான். நான் அவனுக்கு அளித்துக்கொண்டே இருப்பேன் என்று நீங்கள் நினைப்பது பெருந்தன்மை இல்லை. இளிச்சவாய்த்தனம்

  ReplyDelete
 17. //கல்விக்கு ஏது எல்லை, கற்கும் சூழலும் வாய்ப்பும் இருப்பவன் கற்கட்டும், அதை திணிக்கக்கூடாது. //

  ஏற்றுக்கொள்கிறேன்...

  அதேபோல தடுக்கக்கூடாது என்பதையும் ஏற்றுக்கொள்வீர்களா?

  ReplyDelete
 18. //கல்விக்கு ஏன் டாக்டர் அணை கட்டணும்?

  பள்ளி காலத்திலேயே இவன் வட நாட்டிற்கு தொழிலுக்கு செல்லமாட்டான் என்ற முடிவுசெய்ய முடியுமா? கற்றுக்கொள்வதால் என்ன தவறு நேர்ந்துவிடப்போகிறது?//

  அதைத்தானே நானும் கேட்கிறேன்

  அவர்கள் ஏன் தமிழோ, கன்னடமோ, ஆங்கிலமோ கற்றுக்கொள்ள மறுக்கிறார்கள்.. யோசித்து பாருங்கள்

  ReplyDelete
 19. //அங்கும் ஹிந்தி பொதுமொழியாக இருக்கிறது//

  சவுதியில் இந்து பொதுமொழியா !!!!

  ReplyDelete
 20. >>அதேபோல தடுக்கக்கூடாது என்பதையும் ஏற்றுக்கொள்வீர்களா?<<

  தமிழ்நாட்டில் ஒன்றும் ஹிந்தி பிரச்சார சபாக்களுக்கோ, ஹிந்தி சொல்லித்தருபவர்களுக்கோ தடா இல்லையே ?!?!

  ReplyDelete
 21. //ஏற்றுக்கொள்கிறேன்...

  அதேபோல தடுக்கக்கூடாது என்பதையும் ஏற்றுக்கொள்வீர்களா?//

  மூன்றாவது மொழியை இந்திக்காரர்கள் கற்றால், கண்டிப்பாக தடுக்கக்கூடாது

  அவர்கள் இரண்டாவது மொழியை கூட கற்காமல் நம்மை மூன்றாவது மொழியை கற்ற கூறுவதை நாம் ஏற்றால் அது இளிச்சவாய்த்தனம்

  வாழ்க்கையில் “கொடுக்கல்-வாங்கல்” இருக்கவேண்டும்

  நாம் எதையும் பெறாமல் அளித்து கொண்டு மட்டும் இருந்தால் கொஞ்சம் நாளில் திவாலாகிவிடுவோம் சார்

  ReplyDelete
 22. //சர்வதேச அளவில் அதிகமாக பேசப்படும் மொழி வரிசையில ஹிந்தி இரண்டாவது இடத்தில் வருகிறது என்பதையும்,//

  இல்லை

  அது இந்தி மட்டும் உருது இரு மொழிகளையும் சேர்த்து கூறப்பட்டுள்ளது

  இதுவும் விக்கிபிடியாவில் நடக்கும் அரசியல்களில் ஒன்று தான்

  இதைத்தான் குழலி http://kuzhali.blogspot.com/2009/06/tami-wikipedia.html எழுதினார்

  படித்துப்பாருங்கள் !!

  ReplyDelete
 23. //சர்வதேச அளவில் அதிகமாக பேசப்படும் மொழி வரிசையில ஹிந்தி இரண்டாவது இடத்தில் வருகிறது என்பதையும்,//

  அது இந்தி அல்ல நண்பரே

  இந்துஸ்தானியாம்

  அந்த மொழிக்கு இரு எழுத்துக்கள் உண்டாம் !!!

  http://en.wikipedia.org/wiki/Hindustani_language

  Hindustani (हिन्दुस्तानी, ہندوستانی, Hindustānī, IPA: [hɪn̪d̪ʊst̪aːniː]), literally meaning 'Of or from the land of Hindustan' also known as Hindi-Urdu,[2] is a term covering several closely related dialects in Pakistan and northern India, especially the vernacular form of the two national languages, Standard Hindi and Urdu, also known as Khariboli, but also several nonstandard dialects of the Hindi languages.

  இரண்டாவதாக காட்ட வேண்டும், பலரை ஏமாற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் எழுதபப்ட்ட கட்டுரை அது

  இதுவும் விக்கிபிடியாவில் நடக்கும் அரசியல்களில் ஒன்று தான்

  இதைத்தான் குழலி http://kuzhali.blogspot.com/2009/06/tami-wikipedia.html எழுதினார்

  படித்துப்பாருங்கள் !!

  ReplyDelete
 24. // நம் அண்டை மாநிலத்தவர் எப்போதோ இதை ஏற்றுக்கொண்டு விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  உலகப் பொது மொழியான ஆங்கிலத்தையே கற்கலாமே, ஹிந்தி //

  அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை

  நாம் 1960ல் விழித்துக்கொண்டோம்

  அவர்கள் இப்பொழுது தான் விழிக்கிறார்கள்

  மகாராஷ்ட்ராவில் என்ன நடக்கிறது என்று தெரியும் தானே

  கர்நாடகவில் என்ன நடக்கிறது என்று விசாரித்து பாருங்கள்

  ReplyDelete
 25. டாக்டர் சார்,

  தம்பி பீர் அவர்களை விட்டுவிடுங்க.

  :)

  ReplyDelete
 26. //இதே இந்தி ஆதரவை (இடப்பங்கீட்டிற்கு ஆதரவான) அர்ஜூன் சிங் சொல்லியிருந்தால் இந்த அளவு எதிர்ப்பு வந்திருக்குமா என்பது கேள்வியே//

  ஹிந்தி என்பது மொழி என்ற வட்டத்தை தாண்டி இனம் என்று பார்க்கப்படுவதே காரணம்.

  ReplyDelete
 27. //கோவி.கண்ணன் said...

  டாக்டர் சார்,

  தம்பி பீர் அவர்களை விட்டுவிடுங்க.//

  அப்படியே... இவன் ரொம்ப நல்லவன்ன்ன்னு சொல்லிட்டு போங்க. பொருத்தமா இருக்கும். :)

  ReplyDelete
 28. //எனக்கு தொழில் பெங்களூருவில் என்றால் நான் கன்னடம் கற்க வேண்டியதுதான்.//
  கன்னடம் என்றில்லை ..இந்தியோ எந்த மொழியோ தனிப்பட்ட முறையில் உங்களுக்கு தேவையென்றால் நீங்கள் கற்றுக்கொள்ளுங்கள் ..யாரும் உங்களை தடுக்கவில்லை ..எல்லோரும் கண்டிப்பாக கற்றுக்கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையை தானே எதிர்க்கிறோம் ..இது கூட புரியவில்லையா ? என்ன கொடுமை சார் இது?

  ReplyDelete
 29. //இந்திக்காரர்கள் ஆங்கிலம் கற்றால் அவர்களுக்கும் நன்மை, நமக்கும் நன்மை//

  தமிழோடு இரண்டற கலந்துவிட்ட ஆங்கிலம் உங்களுக்கு அபாயமாக தெரியவில்லையா?

  மிக அழகாக தமிழில் எழுதும் உங்களாலேயே பேச்சில் ஆங்கிலம் கலக்காமல் பேச முடிவதில்லையே?

  அந்நிய மொழி வேண்டாம் என்றால் ஆங்கிலத்தையும் ஒதுக்கியிருக்கணும் டாக்டர்.

  ReplyDelete
 30. //தம்பி பீர் அவர்களை விட்டுவிடுங்க.

  :)//

  சரி தலைவரே :) :)

  ReplyDelete
 31. //..இந்தியோ எந்த மொழியோ தனிப்பட்ட முறையில் உங்களுக்கு தேவையென்றால் நீங்கள் கற்றுக்கொள்ளுங்கள் ..யாரும் உங்களை தடுக்கவில்லை ..எல்லோரும் கண்டிப்பாக கற்றுக்கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையை தானே எதிர்க்கிறோம் ..இது கூட புரியவில்லையா ? என்ன கொடுமை சார் இது?//

  வழிமொழிகிறேன் :)

  ReplyDelete
 32. டாக்டர்....

  அப்ப மிஜீக் ஓவரா?

  ReplyDelete
 33. //
  அண்மையில் நமது மனிதவள மேம்பாட்டுதுறை அமைச்சர் கபில் சிபல் கூறியுள்ள 'தாய் மொழியுடன் சேர்த்து, ஹிந்தியும் கற்க வேண்டும்' என்ற கருத்து இங்கு மீண்டும் சில அசைவுகளை ஏற்படுத்தியுள்ளது.
  //
  இங்கயே தப்பு...
  இந்தி கற்பது கட்டாயமாக்கப்பட வேண்டும் அப்படின்னு சொல்லீருக்கார்...

  ReplyDelete
 34. //ஜோ/Joe said...
  ..எல்லோரும் கண்டிப்பாக கற்றுக்கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையை தானே எதிர்க்கிறோம்//

  நிபந்தனையை எதிர்க்க வேண்டியதுதான்.
  ஆங்கிலம் போல அதுவும் இரண்டாம் அல்லது மூன்றாம் பாடமாக, விருப்ப பாடமாக இருந்துவிட்டு போகட்டுமே..

  அதைஏன் யாரும் சொல்வதில்லை?

  ReplyDelete
 35. //எனக்கு தொழில் பெங்களூருவில் என்றால் நான் கன்னடம் கற்க வேண்டியதுதான்.//

  எனக்கு இப்போது பெரும்பாலும் தொழில் வியட்நாமில் ,தேவையானால் நான் வியட்நாம் மொழி கற்றுக்கொள்ள வேண்டுமே தவிர தமிழ்நாட்டில் எல்லோரும் இதற்காக வியட்நாம் மொழி கற்றுக்கொள்ள வேண்டும் என அடம் பிடிக்க கூடாது

  ReplyDelete
 36. ஜெகதீசன்,
  >>பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அவரவர் மாநில மொழியுடன் தேசிய மொழியான ஹிந்தியையும் கற்பிக்க வேண்டும். அப்போதுதான் எதிர்காலத்தில் மொழிப் பாகுபாடின்றி மாணவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து அறிவுசார் விடயங்களை உருவாக்க முடியும்.<<

  இப்படிதானே சொல்லியிருக்கிறார்?

  ReplyDelete
 37. //புருனோ Bruno said...

  //தம்பி பீர் அவர்களை விட்டுவிடுங்க.

  :)//

  சரி தலைவரே :) :)
  //
  மருத்துவரே,
  ஆனால் அவரு விடுவதாகத் தெரியவில்லை. உங்கள் பணியைத் தொடருங்கள்.

  ReplyDelete
 38. ஜோ, ஹிந்தி கற்பதினால் இருக்கும் சாதக பாதகங்களை அரசியல் / இனத்திற்கு அப்பாற்பட்டு அலசுங்கள். பயனுள்ள விவாதமாக இருக்கும்.

  ReplyDelete
 39. //தமிழோடு இரண்டற கலந்துவிட்ட ஆங்கிலம் உங்களுக்கு அபாயமாக தெரியவில்லையா?//

  அபாயம் தான்

  ஆனால் கட்டாய இந்தி திணிப்பை விட மிக மிக மிக குறைவான அபாயம்

  ReplyDelete
 40. //அந்நிய மொழி வேண்டாம் என்றால் ஆங்கிலத்தையும் ஒதுக்கியிருக்கணும் டாக்டர்.//

  அந்நிய மொழி வேண்டாம் என்பது வாதமில்லை சார்

  இந்தியாவில் ஒரு மொழியை முன்னிலைப்படுத்தி பிற மொழிகளை இரண்டாம் நிலைக்கு தள்ளும் நிலை வேண்டாம் என்பதே வாதம்

  ReplyDelete
 41. //கோவி.கண்ணன் said...

  //புருனோ Bruno said...

  //தம்பி பீர் அவர்களை விட்டுவிடுங்க.

  :)//

  சரி தலைவரே :) :)
  //
  மருத்துவரே,
  ஆனால் அவரு விடுவதாகத் தெரியவில்லை. உங்கள் பணியைத் தொடருங்கள்.//

  இல்ல.. இல்ல...

  நான் விட்டுட்டேன்.. டாக்டர் நீங்க அங்கேயே இருங்க.

  ReplyDelete
 42. //மிக அழகாக தமிழில் எழுதும் உங்களாலேயே பேச்சில் ஆங்கிலம் கலக்காமல் பேச முடிவதில்லையே?//

  இல்லை தலைவரே. என்னால் ஆங்கிலம் கலக்காமல் பேச முடியும். ஆனால் பேசுவது எந்த விஷய்ம் என்பது முக்கியம். அதே போல் நாம் பேசுவது மற்றவர்களுக்கும் புரியவேண்டும் என்பதும் முக்கியம்

  ஆங்கிலம் கலக்காமல் தமிழ் பேசினால் அது பலருக்கும் புரியாத நிலை இருப்பது மிக மிக வருத்தத்குரிய விஷய்ம் என்பதில் கருத்து வேறுபாடில்லை. அது மாற்றப்பட வேண்டும்

  நான் ஒரு அதிகம் புழக்கமில்லாத தமிழ் வார்த்தையை எழுதும் போது விளக்கம் அளிக்க முடியும். ஆனால் உரையாடலிலோ, உரையாற்றலிலோ பலரும் அறியாத ஒவ்வொரு வார்த்தைக்கும் ஆங்கில அர்த்தம் அளிக்க முடியாது

  எழுதும் போது ஊடுகதிர் (x ray) என்று எழுதலாம்

  என்னிடம் வரும் நோயாளியிடம் ஊடுகதிர் பரிசோதனை செய்ய வேண்டும் என்று (மட்டும்) கூறமுடியாது ... அதற்கு மேலும் சில ஆண்டுகள் ஆகும்.. அந்த நிலை நோக்கி தான் சென்று கொண்டிருக்கிறோம்

  உதாரணமாக http://www.tn.gov.in/pressrelease/pr210809/pr210809_519.pdf அறிவிப்பை பாருங்கள்

  எதிர் சவ்வூடு பரவல் என்றால் என்ன என்று தெரிகிறதா

  கண்டிப்பாக இதை படிக்கும் 90 சதவிதத்தினருக்கு தெரியாமல் இருக்கலாம்

  ஆனால் விக்சனரியில் பார்த்தால் நாளடைவில் இந்த வார்த்தை புழக்கத்திற்கு வருமல்லவா

  ReplyDelete
 43. நான் ஹிந்தியில் “பானி” தவிர வேறு வார்த்தை தெரியாமல், தில்லிக்கு டிரான்ஸ்பர் ஆகிப் பட்ட கஷ்டம் எனக்குத் தான் தெரியும்.(அதுவும் Sales வேலையில்)
  ஹிந்தி கற்றால் கண்டிப்பாக advantage தான்.
  கற்க மாட்டேன்னு அடம் பிடிச்சா அப்படியே இருங்க, நஷ்டம் உங்களுக்குத்தான்.
  ஆனால் எதையுமே விரும்பாதவர்கள் மீது திணிப்பதில் எனக்கு உடன்பாடில்லை
  என்றும் அன்புடன்
  பாஸ்டன் ஸ்ரீராம்
  bostonsriram.blogspot.com

  ReplyDelete
 44. //ஜோ, ஹிந்தி கற்பதினால் இருக்கும் சாதக பாதகங்களை அரசியல் / இனத்திற்கு அப்பாற்பட்டு அலசுங்கள். பயனுள்ள விவாதமாக இருக்கும்.//

  கண்டிப்பாக ..சாதங்களை விட பாதகங்கள் அதிகம் என்ற என் கருத்தையும் தாண்டி ,அவசியம் என்ற ஒன்றிருக்கிறது .

  எந்த ஒரு காரியத்தையும் செய்ய்ம் போது அதற்கு செலவழிக்கும் கவனம் ,நேரம் எல்லாம் எந்த அளவுக்கு பயனுள்ளது என்பதையும் பார்க்க வேண்டும் .

  இப்போ ஒரு வட இந்திய காரன் தமிழ் படிப்பதில் சாதகம் உண்டா இல்லையா ? இன்னொரு மொழியை தெரிந்து கொள்ளுவது சாதகம் தானே என்று நீங்கள் சொன்னால் அவன் சொல்லுவான் ..ஆனா எனக்கு அது அவசியம் இல்லையே ..அது போல் தான் எனக்கு இந்தி அவசியம் என்று படவில்லை .உங்களுக்கு படலாம் ..அப்போது நீங்கள் கற்றுக்கொள்ளுங்கள் .. எல்லா குப்பனையும் சுப்பனையும் கற்றுக்கொண்டே ஆக வேண்டும் என வற்புறுத்தாதீர்கள் .

  ReplyDelete
 45. //எனக்கு இப்போது பெரும்பாலும் தொழில் வியட்நாமில் ,தேவையானால் நான் வியட்நாம் மொழி கற்றுக்கொள்ள வேண்டுமே தவிர தமிழ்நாட்டில் எல்லோரும் இதற்காக வியட்நாம் மொழி கற்றுக்கொள்ள வேண்டும் என அடம் பிடிக்க கூடாது//

  புரிகிறதா பீர் சார் :) :)

  ReplyDelete
 46. //ஆங்கிலம் கலக்காமல் தமிழ் பேசினால் அது பலருக்கும் புரியாத நிலை இருப்பது மிக மிக வருத்தத்குரிய விஷய்ம் என்பதில் கருத்து வேறுபாடில்லை. அது மாற்றப்பட வேண்டும்//

  //அந்த நிலை நோக்கி தான் சென்று கொண்டிருக்கிறோம்//

  ஆங்கிலம் கற்பது முற்றாக நிறுத்தப்படும் வரை, இதை மாற்ற முடியாது.

  ஆங்கிலக் கல்வியை தடுப்பது சாத்தியம் இல்லை.

  ReplyDelete
 47. //ஜோ, ஹிந்தி கற்பதினால் இருக்கும் சாதக பாதகங்களை அரசியல் / இனத்திற்கு அப்பாற்பட்டு அலசுங்கள். பயனுள்ள விவாதமாக இருக்கும்//

  இந்திக்காரர்கள் பிற மொழிகற்காமல், பிற மொழிக்காரர்கள் இந்தி கற்கும் போது

  சாதகம் இந்திக்காரர்களுக்கு
  பாதகம் பிற மொழி பேசுபவர்களுக்கு

  போதுமா !!

  இந்தியாவில் உள்ள அனைவருமே தங்கள் தாய்மொழியுடன் மேலும் ஒரு மொழி கற்றும் போது

  சாதகங்கள் அனைவருக்கும்

  புரிகிறதா

  ReplyDelete
 48. //ஆங்கிலம் கற்பது முற்றாக நிறுத்தப்படும் வரை, இதை மாற்ற முடியாது.//

  இல்லை

  கண்டிப்பாக முடியும்

  தமிழில் எழுதப்படிக்கத்தெரியாதவர்கள் கூட பஸ் என்று கூறுகிறார்கள்

  ஆங்கில கலப்பிற்கு காரணம் ஆங்கிலம் கற்பது என்ற வாதத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை

  //ஆங்கிலக் கல்வியை தடுப்பது சாத்தியம் இல்லை.//

  தடுக்க வேண்டாம்

  ஆங்கில கல்வியை தடுக்காமலேயே நல்ல தமிழில் பேசும் நிலையை வரவழைக்க முடியும்

  ReplyDelete
 49. //இப்போ ஒரு வட இந்திய காரன் தமிழ் படிப்பதில் சாதகம் உண்டா இல்லையா ?//

  பீர் உங்கள் கருத்து என்ன

  // இன்னொரு மொழியை தெரிந்து கொள்ளுவது சாதகம் தானே என்று நீங்கள் சொன்னால் அவன் சொல்லுவான் ..ஆனா எனக்கு அது அவசியம் இல்லையே ..அது போல் தான் எனக்கு இந்தி அவசியம் என்று படவில்லை.உங்களுக்கு படலாம் ..அப்போது நீங்கள் கற்றுக்கொள்ளுங்கள் .. எல்லா குப்பனையும் சுப்பனையும் கற்றுக்கொண்டே ஆக வேண்டும் என வற்புறுத்தாதீர்கள் . //

  வழிமொழிகிறேன்

  ReplyDelete
 50. பீர்,
  ஒரு கதை கேள்விப்பட்டிருக்கிறேன் .ஒரு பெரிய அறிவியல் அறிஞர் எப்போதும் பூட்டிய சோதனை அறையிலேயே இருப்பாராம் ..அவர் ஒரு பூனை வைத்திருந்தாராம் ..அது வெளியே போய் வர கதவில் ஒரு பெரிய ஓட்டை போட்டிருந்தாராம் .பின்னர் பூனை ஒரு குட்டி போட்டதும் ,குட்டி பூனை சென்று வர இன்னும் ஒரு சின்ன ஓட்டை போட்டாராம் .

  ஆங்கிலம் என்ற உலகம் முழுதும் செல்லுபடியாகும் பெரிய ஓட்டை இருக்க தேவையில்லாமல் இந்தி என்ற சின்ன ஓட்டை போட வேண்டும் என சொல்லுவது எனக்கு புரியவில்லை .

  அது உலகத்துக்கு ,இது இந்தியாவுக்கு என்றால் ..இந்தியா இந்த உலகத்தில் தானே இருக்கிறது?

  ReplyDelete
 51. //ஆங்கில கல்வியை தடுக்காமலேயே நல்ல தமிழில் பேசும் நிலையை வரவழைக்க முடியும் //

  என் மகன் பஸ் என்று ஆங்கிலத்தில் எழுதி படிக்கும் போது, படிக்கத்தெரியாத என் அம்மா எப்படி பேருந்து என்று சொல்வார்?

  அதைவிடுங்கள், ஆங்கிலம் தேவை என்பது தான் அனைவரின் நிலையும்.

  ----

  உங்களுக்க மத்திய சுகாதார அமைச்சகத்தில் பணிவாய்ப்பு வருகிறது. மத்திய அமைச்சகம் என்பதால் ஹிந்தி தெரிந்திருக்க வேண்டும் என்பது நிபந்தனை. நீங்கள் ஹிந்தி கற்றுக்கொண்டு போவதற்கு முன் ஹிந்தி கற்றிருந்த உங்கள் சக பணியாள், உங்களுக்கும் பிறகு பணியில் சேர்ந்தவர், உங்களைவிட திறமை குறைவானவர் சென்றுவிடுவார். பாதகங்களை அலசுங்கள்,
  1. திறமை குறைவானவருக்கு பணி வாய்ப்பு.
  2. பணியில் மூத்தவருக்கு வாய்ப்பு மறுக்கபடுவது.
  3. பொருளாதாரம்.

  ReplyDelete
 52. /./பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அவரவர் மாநில மொழியுடன் தேசிய மொழியான ஹிந்தியையும் கற்பிக்க வேண்டும்.//

  மாநில மொழிகள் கட்டாயம் படிக்க வேண்டும் என்கிற வழி யுறுத்தல் அந்தந்த மாநிலத்தில் உண்டு. அத'னுடன்' என்ற சொல்லில் இருக்கும் 'கட்டாயம்' உங்களுக்கு புரியால் இருப்பது வியப்பளிக்கிறது.

  வார்த்தை விளையாட்டுகளை புரிந்து கொள்ள முடியாத அப்பாவியா நீங்கள்.

  அவரை என்னுடன் அழைத்துவருகிறேன் என்று மற்றொருவரிடம் சொன்னால், அந்த என்னுடன் என்பதில் அவர் (கட்டாயமாக/ உறுதியாக) வருகிறார் என்கிற தகவலே இல்லையா ?

  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் !

  ReplyDelete
 53. //உங்களுக்க மத்திய சுகாதார அமைச்சகத்தில் பணிவாய்ப்பு வருகிறது. மத்திய அமைச்சகம் என்பதால் ஹிந்தி தெரிந்திருக்க வேண்டும் என்பது நிபந்தனை. நீங்கள் ஹிந்தி கற்றுக்கொண்டு போவதற்கு முன் ஹிந்தி கற்றிருந்த உங்கள் சக பணியாள், உங்களுக்கும் பிறகு பணியில் சேர்ந்தவர், உங்களைவிட திறமை குறைவானவர் சென்றுவிடுவார். //

  இந்தி தெரிந்திருக்க வேண்டும் என்ற நிபந்தனை நியாயமற்றது ..அதை எதிர்க்க வேண்டும் .மாற்ற வேண்டும்.

  ReplyDelete
 54. //பாதகங்களை அலசுங்கள்,
  1. திறமை குறைவானவருக்கு பணி வாய்ப்பு.
  2. பணியில் மூத்தவருக்கு வாய்ப்பு மறுக்கபடுவது.
  3. பொருளாதாரம்.//

  நானும் இந்தி கற்றால் பிரச்சனை இல்லையே

  --

  ஒரு கேள்வி : ஏன் இந்தி கற்றவருக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்றும் ஏன் அஸ்ஸாமி மொழி தெரிந்தவர் பின்னால் இருக்க வேண்டும் என்று கூறுங்களேன்

  ReplyDelete
 55. பீர் சார்

  எனது August 28, 2009 5:33 AM கேள்விக்கு பதில தெரியவில்லை என்றால் ஜோ சாரின் ugust 28, 2009 5:32 AM மறுமொழியை பாருங்கள். பதில் ஒளிந்துள்ளது !

  ReplyDelete
 56. யாத்ரீகன்,

  //ஹிந்தி தெரியாவிடில் உயிர் ஒன்றும் போய்விடவில்லை//

  ஹிந்தி தெரிந்திருந்தால்... நிச்சயமாக அதன் சாதகங்கள் வேறுமாதிரியாக இருந்திருக்கும்.

  ReplyDelete
 57. //புருனோ Bruno said...
  பீர் சார்

  எனது August 28, 2009 5:33 AM கேள்விக்கு பதில தெரியவில்லை என்றால் ஜோ சாரின் ugust 28, 2009 5:32 AM மறுமொழியை பாருங்கள். பதில் ஒளிந்துள்ளது !//

  டாக்டர் சார், உங்களோட திரைக்கதை அமைப்பும் சுவாரஸ்யமா இருக்கு, வாழ்த்துகள்

  :)))

  ReplyDelete
 58. //இந்தி தெரிந்திருக்க வேண்டும் என்ற நிபந்தனை நியாயமற்றது ..அதை எதிர்க்க வேண்டும் .மாற்ற வேண்டும்.//

  ஜோ, கிட்டதட்ட 9 மாநிலங்களில் ஹிந்தியை ஆட்சி மொழியாக கொண்ட நாட்டின் அமைச்சகத்திற்கு, 40 விழுக்காட்டினர் பேசும் ஹிந்தி தெரிந்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையை எதிர்க்க வேண்டுமா? அல்லது ஹிந்தி கற்றுக்கொண்டு அந்த பதவிக்கு செல்லவேண்டுமா? வாதத்திற்கு எதிர்க்கலாம். ப்ராக்டிகலாக சிந்திக்கும் ஒருவன் ஹிந்தியை கற்றுக்கொண்டு அமைச்சக பணிக்குச் செல்வான்.

  ReplyDelete
 59. >இந்தி தெரிந்திருக்க வேண்டும் என்ற நிபந்தனை நியாயமற்றது ..அதை எதிர்க்க வேண்டும் .மாற்ற வேண்டும்.<

  மிகச்சரியான அனுகுமுறை.. நியாயமற்ற,பயனற்ற நிபந்தனையை நீக்க போராடுவதை விட்டு விட்டு.. அதன் படி நடக்க முயற்சிப்பேன் என்பது என்ன வகை ?!

  >அதன் சாதகங்கள் வேறுமாதிரியாக இருந்திருக்கும்.<

  ஹிந்தி முன்னரே கற்காமல் விட்டதால் என்னால் ஒரிரு மாதங்களில் அதை கற்றுக்கொள்ள முடியாமல் போகவில்லை, உடனே கற்று,தேவையான இடங்களில் (கடலை போட ஆல்ல, மார்கெட்டில் பேரம் பேச என்று சொல்லவந்தேன்) பயன்படுத்தி என்னால் வாழ முடிந்தது.. முன்னரே கற்றிருந்தால்தான் பிழைக்க முடியும் என்ற நிலை ஒரு மாயை

  ReplyDelete
 60. /////
  //ஹஜ் புனித பயணம் மேற்கொள்ளும் எத்தனை இஸ்லாமியர்கள் பள்ளியில் அராபிக் கற்கிறார்கள் ?? //

  அங்கும் ஹிந்தி பொதுமொழியாக இருக்கிறது.
  /////


  உலகெங்கிலும் இந்தி தான் பொது மொழி... எனவே உலகத்தில் இருப்பவர்கள் அனைவரும் இந்தி கற்றுக் கொள்ளவேண்டும்!!!

  ReplyDelete
 61. மிக மிக மிக நல்ல பதிவு;
  சென்னைக்கு வடக்கே ஒரு முறை பயணம் செய்வதர்களும் 100% ஒப்புக்க கொள்ளும் விஷயம் . பின்னூட்டம் எழுதுபவர்கள் தமிழகத் துள்ளேye இருந்து கொண்டு விவாதிப்பார்கள்.
  உண்மையில் பல பின்னூட்டங்களை நான் படிக்கவே இல்லை;
  1965 இந்தி எதிர்ப்பு போராட்ட காலங்களில் ,
  தாய்ப் பால் தமிழ் இருக்க
  புட்டிப் பால் இருக்க
  கழுதைப் பால் இந்தி எதற்கு ?
  என்று கேட்ட பொது கை தட்டியவன் தான். அப்போது மாவட்டத்து எல்லையைத் தாண்டாதவன்; இப்போது, சுமார் 25 ஆண்டுகள் வெளி மான்லங்களிலேயே இருந்தபின் எனக்கு தெரியும் இந்தியின் அருமை. (வாடா வட நாட் டான் அடி வருடி என பின்னூட்டம் இடுவார்கள்; அவர்களும் வாழ்க)
  (இந்தியை அறிந்து கொள்வதனால் ஒருவன் தமிழ் எதிரி ஆக மாட்டான் என உணர்ந்தால் போதும்)

  ReplyDelete
 62. //முன்னரே கற்றிருந்தால்தான் பிழைக்க முடியும் என்ற நிலை ஒரு மாயை //

  யாத்ரீகன்,

  ம்..மாயை வைத்துக்கொள்வோம். இப்போது கற்றுகொண்டது பயனளிக்கிறது தானே? அதே போல் அனைவருக்கும் பயனளிக்கட்டுமே? ஆரம்பத்திலிருந்து... இன்னும கூடுதலாக சந்தைப்படுத்தலாமே, (மார்கெட்டிங்)

  ReplyDelete
 63. //
  sriram said...

  நான் ஹிந்தியில் “பானி” தவிர வேறு வார்த்தை தெரியாமல், தில்லிக்கு டிரான்ஸ்பர் ஆகிப் பட்ட கஷ்டம் எனக்குத் தான் தெரியும்.(அதுவும் Sales வேலையில்)
  ஹிந்தி கற்றால் கண்டிப்பாக advantage தான்.
  கற்க மாட்டேன்னு அடம் பிடிச்சா அப்படியே இருங்க, நஷ்டம் உங்களுக்குத்தான்.
  ஆனால் எதையுமே விரும்பாதவர்கள் மீது திணிப்பதில் எனக்கு உடன்பாடில்லை
  என்றும் அன்புடன்
  பாஸ்டன் ஸ்ரீராம்
  //

  தேனீருக்குக் கூட மலாய் மொழியில் என்ன என்று தெரியாமல் மலேசியா சென்ற போது நான் கஸ்ட்டப்பட்டேன்.. எனவே எல்லோரும் மாநில மொழியுடன் மலாய் சேர்த்துக் கற்கவேண்டும்.
  அதுவும் தேனீர் அருந்துவோருக்கு அது மிகவும் முக்கியம்..
  கற்க மாட்டேன்னு அடம் பிடிச்சா அப்படியே இருங்க, நஷ்டம் உங்களுக்குத்தான்.
  ஆனால் எதையுமே விரும்பாதவர்கள் மீது திணிப்பதில் எனக்கு உடன்பாடில்லை

  ReplyDelete
 64. பீர், கிட்டதட்ட 20 மாநிலங்களில் பேசப்படாத ஒரு மொழியை, பாதிக்கும் மேற்பட்ட மக்களுல்லு தெரியாத ஒரு மொழியை தெரிந்திருக்கவேண்டும் என்ற நிபந்தனை சரியா என்று யோசியுங்கள்

  ஒரு தவறை (இந்தி கட்டாயம்) மற்றும் தவறு (இந்தி திணிப்பு) மூலம் அணுகவேண்டுமா

  ReplyDelete
 65. ----
  //ப்ராக்டிகலாக சிந்திக்கும் ஒருவன் ஹிந்தியை கற்றுக்கொண்டு அமைச்சக பணிக்குச் செல்வான்.//
  இது முழுக்க முழுக்க சரி
  பணி கிடைத்தவன் கற்று செல்லட்டும். அதை யாரும் வேண்டாம் என்று சொல்லவில்லையே

  ஏன் அனைவரும் கற்ற வேண்டும் என்பது தான் கேள்வி

  ReplyDelete
 66. //இந்தியை அறிந்து கொள்வதனால் ஒருவன் தமிழ் எதிரி ஆக மாட்டான் என உணர்ந்தால் போதும்//

  அதை நாங்கள் உணர்ந்துள்ளோம் ..ஆனால் இந்தியை கண்டிப்பாக கற்றால் தான் ஒருவன் இந்தியன் ஆவான் என்ற பிதற்றலை நீங்கள் உணர்ந்தால் போதும்.

  ReplyDelete
 67. // nerkuppai thumbi said...
  ... (இந்தியை அறிந்து கொள்வதனால் ஒருவன் தமிழ் எதிரி ஆக மாட்டான் என உணர்ந்தால் போதும்)//

  சரியான கருத்து,

  முன்பு ஹிந்திப்படம் பார்த்துவிட்டு வரும்போது, ஹிந்திபுரியவில்லை என்பதற்காக தபால் அலுவலக பெயர் பலகையில் கரிக்கட்டையால் கிறுக்கியவன் நான். என்ன செய்ய அப்போது அதன் அருமை புரியவில்லை. :)

  ReplyDelete
 68. // பின்னூட்டம் எழுதுபவர்கள் தமிழகத் துள்ளேye இருந்து கொண்டு விவாதிப்பார்கள். //

  அப்படியா

  கோவி சார் தமிழகத்திற்குள் தான் இருக்கிறாரா

  //உண்மையில் பல பின்னூட்டங்களை நான் படிக்கவே இல்லை; //

  பிறகு எப்படி சார் உங்களுக்கு உண்மை தெரியும் :) :)

  ReplyDelete
 69. //இப்போது கற்றுகொண்டது பயனளிக்கிறது தானே? அதே போல் அனைவருக்கும் பயனளிக்கட்டுமே? ஆரம்பத்திலிருந்து... இன்னும கூடுதலாக சந்தைப்படுத்தலாமே, //

  நீங்கள் ஏன் இந்திக்காரர்களை தமிழ் கற்க சொல்லவிலலை. அது அவர்களுக்கும் பலன் தானே

  ReplyDelete
 70. இனி சீரியசாக பேசி பயனில்லை என நினைக்கிறேன் :) ஜெகதீசன் போல இறங்கி விட வேண்டியது தான்.

  நான் வியட்நாம் சென்ற போது வியட்நாம் மொழி தெரியாமல் நான் பட்ட பாடு எனக்குத் தான் தெரியும் ..தமிழ் நாட்டில் உள்ள அனைவருக்கும் வியட்நாம் மொழியை கட்டாயம் ஆக்கியிருந்தால் இந்த இழிநிலை எனக்கு வருமா ? ஐயகோ.

  ReplyDelete
 71. //தேனீருக்குக் கூட மலாய் மொழியில் என்ன என்று தெரியாமல் மலேசியா சென்ற போது நான் கஸ்ட்டப்பட்டேன்.. எனவே எல்லோரும் மாநில மொழியுடன் மலாய் சேர்த்துக் கற்கவேண்டும்.
  அதுவும் தேனீர் அருந்துவோருக்கு அது மிகவும் முக்கியம்..
  கற்க மாட்டேன்னு அடம் பிடிச்சா அப்படியே இருங்க, நஷ்டம் உங்களுக்குத்தான்.
  ஆனால் எதையுமே விரும்பாதவர்கள் மீது திணிப்பதில் எனக்கு உடன்பாடில்லை//

  அட்றா சக்கை அட்றா சக்கை

  ReplyDelete
 72. //அதை நாங்கள் உணர்ந்துள்ளோம் ..ஆனால் இந்தியை கண்டிப்பாக கற்றால் தான் ஒருவன் இந்தியன் ஆவான் என்ற பிதற்றலை நீங்கள் உணர்ந்தால் போதும்.
  //

  அட்றா சக்கை !!!

  ReplyDelete
 73. //ஒரு தவறை (இந்தி கட்டாயம்) மற்றும் தவறு (இந்தி திணிப்பு) மூலம் அணுகவேண்டுமா //

  எந்த விசயத்திலும் திணிப்பு மிகத்தவறு டாக்டர். அதை வன்மையாக கண்டிக்கிறேன்.

  ஒரு அதிகப்படியான திறமை அல்லவா?
  விருப்ப பாடமாக ஏற்றுக்கொள்ளலாமே?

  ReplyDelete
 74. //கோவி சார் தமிழகத்திற்குள் தான் இருக்கிறாரா//

  நான் கூட கன்னியாகுமரியை தாண்டவில்லை :)

  ReplyDelete
 75. //எந்த விசயத்திலும் திணிப்பு மிகத்தவறு டாக்டர். அதை வன்மையாக கண்டிக்கிறேன்.//

  இத்தோடு பஞ்சாயத்து கலைகிறது :)

  ReplyDelete
 76. //எந்த விசயத்திலும் திணிப்பு மிகத்தவறு டாக்டர். அதை வன்மையாக கண்டிக்கிறேன்.

  ஒரு அதிகப்படியான திறமை அல்லவா?
  விருப்ப பாடமாக ஏற்றுக்கொள்ளலாமே?
  //

  நானும் அதைத்தானே சார் சொல்கிறேன்

  இந்திக்காரர்கள் தமிழை விருப்ப பாடமாக எடுத்துக்கொள்ளட்டும்

  கன்னியாக்குமரி, ராமேஷ்வரம் வரும் போது அவர்கள் கஷ்டப்படமாட்டார்கள்

  நீங்கள் தமிழர்கள் மீது இவ்வளவு அக்கறையாக கூறுவது போல் இந்திக்காரர்கள் மீதும் அக்கறை வைக்க வேண்டும் எனப்தே என் கருத்து

  ReplyDelete
 77. //நீங்கள் தமிழர்கள் மீது இவ்வளவு அக்கறையாக கூறுவது போல் இந்திக்காரர்கள் மீதும் அக்கறை வைக்க வேண்டும் எனப்தே என் கருத்து//
  அட்றா சக்கை..அடறா சக்கை. :)

  ReplyDelete
 78. //இனி சீரியசாக பேசி பயனில்லை என நினைக்கிறேன் :) ஜெகதீசன் போல இறங்கி விட வேண்டியது தான்.//

  ஜோ, சீரியஸ் இல்லாத காமெடி பின்னூட்டங்களை மதிப்பதில்லை.

  வேண்டாம்.

  ReplyDelete
 79. நான் என் கருத்தில் இருந்து மாற வேண்டும் என்று நினைத்தால் நல்ல / ஆரோக்கிய விவாதம் மட்டும் செய்யுங்கள்.

  ReplyDelete
 80. //ஜோ, சீரியஸ் இல்லாத காமெடி பின்னூட்டங்களை மதிப்பதில்லை.//

  இல்லை ..நான் சீரியஸான காமெடி பின்னூட்டங்கள் தான் இட்டிருக்கிறேன்.

  ReplyDelete
 81. //நீங்கள் தமிழர்கள் மீது இவ்வளவு அக்கறையாக கூறுவது போல் இந்திக்காரர்கள் மீதும் அக்கறை வைக்க வேண்டும் எனப்தே என் கருத்து //

  டாக்டர், காமெடி... கீமெடி...???

  ReplyDelete
 82. ////நீங்கள் தமிழர்கள் மீது இவ்வளவு அக்கறையாக கூறுவது போல் இந்திக்காரர்கள் மீதும் அக்கறை வைக்க வேண்டும் எனப்தே என் கருத்து//
  அட்றா சக்கை..அடறா சக்கை. :) //

  ஜோ... உங்களுக்கும் அதேதான்.. ;)

  ReplyDelete
 83. //நான் என் கருத்தில் இருந்து மாற வேண்டும் என்று நினைத்தால் நல்ல / ஆரோக்கிய விவாதம் மட்டும் செய்யுங்கள்//

  நீங்கள் தான் திணிப்பை எதிர்ப்பதாக சொல்லியாகிவிட்டதே .அதானே நாங்கள் எதிர்பார்த்த மாற்றம்.

  இப்போ மீண்டும் முதலில் இருந்தா ? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

  ReplyDelete
 84. //நான் வியட்நாம் சென்ற போது வியட்நாம் மொழி தெரியாமல் நான் பட்ட பாடு எனக்குத் தான் தெரியும் ..தமிழ் நாட்டில் உள்ள அனைவருக்கும் வியட்நாம் மொழியை கட்டாயம் ஆக்கியிருந்தால் இந்த இழிநிலை எனக்கு வருமா ? ஐயகோ//

  நான் சென்னைக்கு வந்த போது சென்னை தமிழ் தெரியாமல் கஷ்டப்பட்டேன்

  எனவே அனைவரும் சென்னை தமிழ் கற்க வேண்டும்

  பாடப்புத்தகங்கள் அனைத்தும் சென்னை தமிழில் தான் எழுதப்பட வேண்டும்

  உதாரணமாக புவிஈர்ப்பு விசை என்பதற்கு பதிலாக “பூமி புட்சு இய்க்கும் போர்ஸ்” என்று தான் அறிவியல் பாட நூல்களில் எழுதப்பட வேண்டும்

  அசோகர் ரோட்டுக்கு அந்தாண்ட மரம் நட்டுக்கினா என்று சரித்திரப் பாடப்புத்தகங்களில் எழுதப்பட வேண்டும்

  இப்படி எல்லாம் பாடப்புத்தகங்களில் மாற்றுவதன் மூலம்

  தலைமைச்செயலகத்தில் வேலை செய்ய விரும்புபவர்களுக்கும், திரைப்படத்தில் நடிக்க, திரைப்ப்டங்களை இயக்க, வருபவர்களும் சென்னை வந்தால் கவலைப்பட தேவையில்லை

  ReplyDelete
 85. /உதாரணமாக புவிஈர்ப்பு விசை என்பதற்கு பதிலாக “பூமி புட்சு இய்க்கும் போர்ஸ்” என்று தான் அறிவியல் பாட நூல்களில் எழுதப்பட வேண்டும்//

  செம ஹாட்டு மச்சி !

  :)

  ReplyDelete
 86. //இல்லை ..நான் சீரியஸான காமெடி பின்னூட்டங்கள் தான் இட்டிருக்கிறேன்.//

  ரைட்டு... இனி நீங்களே விளையாடுங்க.. எனக்கு தூக்கம் வருது...

  ReplyDelete
 87. >அதன் சாதகங்கள் வேறுமாதிரியாக இருந்திருக்கும்.<

  பாஸ்.. இரண்டே மாதங்களில் கற்கமுடிந்தது என்று கூறியிருந்தேனே அதை வசதியா மறந்துட்டிங்களா ?!

  நான் ஆரம்பத்தில் கேட்ட கேள்விகள் மருத்துவரின் பின்னூட்ட சுனாமியில் காணமல் போயிருந்திருக்கும்.. கொஞ்சம் பார்த்து பதில் சொல்லுங்க..

  இரண்டே மாதத்தில் தேவையான மொழியை தேவைப்பட்டவாறு கற்றுக்கொள்ளலாம்.. மலாய் தேவைப்பட்டோருக்கு மலாய்,ஹிந்தி தேவைப்பட்டோருக்கு ஹிந்தி, பெங்காலி தேவைப்பட்டோருக்கு பெங்காலி (வங்காளத்தில் பொதுமக்கள் ஹிந்தி பேசுவதில்லை, பெங்காலிதான்).. இதுவே எளிய வழிமுறை..

  படிக்கும்போது, மூன்றாம் மொழி கற்பதை (தேவை படுமோ படாதோ) கற்பதில் சக்தியை செலவழிப்பதை விட, தற்போது அறைகுறையாய் மனனம் செய்யும் முறையை ஒழித்து உறுப்படியாய் கற்றுக்கொள்ளச்செய்வதில் சக்தியை செலவழிக்கலாமே..

  ReplyDelete
 88. பீர்,
  சீரியஸாகவே சொல்லி விடுகிறேன்.

  நாங்கள் இந்தியை எதிர்க்கவில்லை .இந்தித் திணிப்பைத் தான் எதிர்க்கிறோம்.

  ReplyDelete
 89. பிருத்வி சம்புக்தாவை இஸ்துகினு பூட்டான் என்றே பள்ளி வரலாற்று புத்தகங்களில் எழுதப்பட வேண்டும்

  அப்படி எழுதுவதால் ஏற்படும் சாதக பாதகங்களை அலசுங்களேன் சார்

  ReplyDelete
 90. 80 சதவீதம் மக்கள் சீன மொழி பேசும் நாட்டில் பள்ளிகளில் சீன மொழி கட்டாயம் இல்லை... ஆனால் 50க்கும் குறைவான மக்கள் இந்தி பேசும் நாட்டில் பள்ளிகளில் இந்தி கட்டாயம் கற்க வேண்டும்....

  ReplyDelete
 91. //நீங்கள் தான் திணிப்பை எதிர்ப்பதாக சொல்லியாகிவிட்டதே .அதானே நாங்கள் எதிர்பார்த்த மாற்றம்.//

  ஜோ, நான் எப்போதும், திணிப்பை ஆதரிப்பதாக சொல்லவே இல்லையே..

  எனது முந்தைய இடுகை கழிவரை நீதி வாசித்து பாருங்கள்.

  விருப்ப பாடமாகவேணும் ஹிந்தி கற்றுக்கொள்ள வேண்டும், அல்லது ப்ராத்மிக் லயாவது ஆரம்பிக்க வேண்டும், அது ஒரு அதிகப்படியான திறமை என்று.

  ReplyDelete
 92. //ஒரு அதிகப்படியான திறமை அல்லவா?
  விருப்ப பாடமாக ஏற்றுக்கொள்ளலாமே//

  விருப்பபாடம் என்றால் என்ன? விரும்பியவர்கள் மட்டும் படிக்கலாம் .விருப்பம் (அல்லது அவசியம் இல்லை என நினைக்கிறவர்கள்) இல்லாதவர்கள் படிக்க வேண்டிய கட்டாயம் இல்லை என்று அர்த்தமா ? இதைத் தான் கபில் சிபில் சொல்கிறாரா என விசாரித்து சொல்லவும்.

  ReplyDelete
 93. //பிருத்வி சம்புக்தாவை இஸ்துகினு பூட்டான் //

  டாக்டர் தயவுசெய்து தமிழில் எழுதவும். எனக்கு தமிழ் மட்டுமே ஒரளவு எழுதி புரிந்து படிக்கத் தெரியும்.

  ReplyDelete
 94. ////பிருத்வி சம்புக்தாவை இஸ்துகினு பூட்டான் //

  டாக்டர் தயவுசெய்து தமிழில் எழுதவும். எனக்கு தமிழ் மட்டுமே ஒரளவு எழுதி புரிந்து படிக்கத் தெரியும்//

  சென்னை வந்தால் என்ன பாடுபடப் போகிறீர்களோ .

  ReplyDelete
 95. //
  டாக்டர் தயவுசெய்து தமிழில் எழுதவும். எனக்கு தமிழ் மட்டுமே ஒரளவு எழுதி புரிந்து படிக்கத் தெரியும்.
  //
  பீர்...
  உங்களுக்கு சென்னைத் தமிழ் புரியாததால் ஏற்பட்ட கஸ்ட்டத்தைப் பார்த்தீர்களா... டாக்டரின் பின்னூட்டத்தை உங்களால் புரிந்துகொள்ள முடியவில்லை...
  எனவே எல்லாரும் சென்னைத் தமிழ் கற்றுக் கொள்ளுங்கள்... விருப்பப் பாடமாகவேனும்...

  ReplyDelete
 96. //டாக்டர் தயவுசெய்து தமிழில் எழுதவும். எனக்கு தமிழ் மட்டுமே ஒரளவு எழுதி புரிந்து படிக்கத் தெரியும்.//

  உங்களுக்கு பள்ளியில் சென்னைத்தமிழை கட்டாய பாடமாக்கியிருந்தால் இந்த கஷ்டம் வந்திருக்குமா

  சென்னை தமிழை படிக்கவிடாமல் ஒரு தலைமுறையே பாழ் பட்டு கிடக்கிறதே.. ஐயகோ.. இந்த கொடுமையை நான் எங்கே போய் சொல்வேன்

  சென்னைக்கு ஒரு முறையாவது வந்திருக்கும் யாரிடம் வேண்டுமானாலும் கேட்டுப்பாருங்கள் சென்னை தமிழ் தேவை என்று கூறுவார்கள்

  அது தெரியாததால் பெற்ற சிரமங்களையும் பட்டியலிடுவார்கள்

  உங்களுக்கு சென்னையில் வேலை கிடைக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். பள்ளியில் சென்னைத்தமிழை பாடமாக கற்காத உங்களுக்கு சென்னையில் எவ்வளவு சிரமங்கள்

  நினைக்கவே பதறுகிறதே சார்

  இதற்கு பதில் உங்கள் வரலாற்று பாட புத்தகத்திலேயே பிருத்வி சம்புக்தாவை இஸ்துகினு பூட்டான் என்று எழுதியிருந்தால் உங்களுக்கு இந்த சிரமம் வந்திருககாது அல்லவா

  ReplyDelete
 97. பீர்,
  இங்கு யாரும் இந்தியை எதிர்க்கவில்லை.. இந்தித் திணிப்பை மட்டுமே எதிர்க்கிறோம்..
  எனக்கும் தேவைப் பட்டால் நான் இந்தி கற்பேன்.. மலாய், மாண்ட்ரினும் கற்பேன்...
  என்னைப் பொறுத்த வரை மாண்ட்ரின் ஒரு வேற்று மொழி.. அதைப் போலவே இந்தியும் ஒரு வேற்று மொழி அவ்வளவே..

  ReplyDelete
 98. Peer: I agree with the tone of your analysis. The probability of one working in an area where Hindi is spoken/ understood is very high. your argument makes more sense.even in bangalore people can surviv with Hindi.

  ReplyDelete
 99. @THIYAGARAJAN dude, if ur not able to learn a language when its needed at most where you live by then, then how do you expect students to learn when they know this language might/might not help ?!

  >probability of one working in an area where Hindi is spoken/ understood is very high.<

  so what is the that probability ? can you explain in numbers please ?

  ReplyDelete
 100. சென்னைத்தமிழ் நகைச்சுவையோடு தூங்கப்போகிறேன்.

  பிறகு விவாதிக்கலாம்.

  நன்றி டாக்டர்,
  நன்றி ஜோ,
  நன்றி ஜெகதீசன்,
  நன்றி யாத்ரீகன்,
  நன்றி கோவியண்ணே,
  நன்றி முரு,
  நன்றி ஸ்ரீராம்,
  நன்றி nerkuppai thumbi,
  நன்றி THIYAGARAJAN,

  ReplyDelete
 101. இனிய இரவாக இருக்கட்டும்...
  இருந்தாலும் தூங்குறப்ப கொஞ்சம் யோசிங்க...நீங்க உங்க ஊருக்கு வரப்ப எப்படியும் சென்னை வழியாத் தான் வரவேண்டியிருக்கும்... அதனால சென்னைத் தமிழ் கற்றுக் கொள்வது பற்றி கொஞ்சம் யோசிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்... "சென்னைத் தமிழ் கற்பது பாவச்செயலா?"
  :P

  ReplyDelete
 102. ஏக் காவ் மே, ஏக் கிஸான் ரக‌ தாத்தா...!
  ஏக் காவ் மே, ஏக் கிஸான் ரகு தாத்தா...!
  ஏக் காவ் மே, ஏக் கிஸான் ரக‌ தாத்தா...!
  ஏக் காவ் மே, ஏக் கிஸான் ரகு தாத்தா...!
  ஏக் காவ் மே, ஏக் கிஸான் ரக‌ தாத்தா...!
  ஏக் காவ் மே, ஏக் கிஸான் ரகு தாத்தா...!


  \\ ந‌ம் காதால் கேட்டிராத மலையாளம், தெலுகு மற்றும் கனடம் கற்ற முயலும் போதும் இதே நிலைதான். \\
  வாயாலதான் பேச முடியுமாம்..!
  :)

  ReplyDelete
 103. // நாடுகளில் தமிழ் இரண்டாம் மொழியாக இருப்பதால், அங்குவரும் மற்ற இந்திய மாநிலத்தவர் / நாட்டவர் தமிழ் கற்றுக்கொண்டு பேச முயற்சிப்பதும் மகிழ்ச்சியளிக்கிறது.//

  இந்த கொடுமையை இப்ப தானே பாக்குறேன் .

  மத்த நாட்டவன் கத்துக்குவானே தவிர மத்த மாநிலத்தவன் கத்துக்கிறதில்ல ..இங்கே சிங்கையில் இருக்கும் வடநாட்டினர் மலாய் ,சீனம் கத்துக்குவானே தவிர நம்ம நாட்டு மொழி தானே -ன்னு தமிழ் கத்துக்குறத நான் கேள்விப்பட்டதில்ல .

  அவனுக்கு அவ்வளவு இருக்கும் போதும் ,நமக்கு கொஞ்சமாவது சுரணை இருக்கணும்.

  ReplyDelete
 104. அடேங்கப்பா பெரிய விவாதமே நடக்கிறது இங்கே :))

  நல்ல பதிவு. இது தொடர்பான எனது பதிவையும் நேரம் இருந்தால் படியுங்கள்.

  http://senthilinpakkangal.blogspot.com/2009/08/blog-post_27.html

  பீர், நல்ல பதிவு. நம்மை யாரும் இந்தியைப் படித்தே தீர வேண்டும் என்று கட்டாயப் படுத்த முடியாது.

  இந்தியை ஆட்சி மொழியாக அறிவித்துள்ளது 9 மாநிலங்களில் மட்டுமே. இந்தி அல்லாத மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் 60% உள்ளனர்.

  நாம் இங்கே யோசிக்க வேண்டியது, நாடு முழுவது சென்று வர ஒரு மொழி வேண்டும். அது எந்த மொழி? அது இந்தி என்றால் தமிழகத்தில் எப்படி இந்தியைப் கற்பிக்கப் போகிறோம்?

  ஒரு விடயம் உங்களுக்குத் தெரியுமா? நம்மவர்களுக்கு தமிழையே பிழையில்லாம் எழுதவோ, பேசவோ தெரியாது:))

  ReplyDelete
 105. அடேங்கப்பா பெரிய விவாதமே நடக்கிறது இங்கே :))

  நல்ல பதிவு. இது தொடர்பான எனது பதிவையும் நேரம் இருந்தால் படியுங்கள்.

  http://senthilinpakkangal.blogspot.com/2009/08/blog-post_27.html

  பீர், நல்ல பதிவு. நம்மை யாரும் இந்தியைப் படித்தே தீர வேண்டும் என்று கட்டாயப் படுத்த முடியாது.

  இந்தியை ஆட்சி மொழியாக அறிவித்துள்ளது 9 மாநிலங்களில் மட்டுமே. இந்தி அல்லாத மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் 60% உள்ளனர்.

  நாம் இங்கே யோசிக்க வேண்டியது, நாடு முழுவது சென்று வர ஒரு மொழி வேண்டும். அது எந்த மொழி? அது இந்தி என்றால் தமிழகத்தில் எப்படி இந்தியைப் கற்பிக்கப் போகிறோம்?

  ஒரு விடயம் உங்களுக்குத் தெரியுமா? நம்மவர்களுக்கு தமிழையே பிழையில்லாம் எழுதவோ, பேசவோ தெரியாது:))

  ReplyDelete
 106. நான் 10-வகுப்பில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் ''பாலிடெக்னில்''இடம் கிடைத்து பட்டயப் படிப்பு படித்து இன்று துபையில் ஜெர்மன் நிறுவனத்தில் பணிபுரிகிறேன். பத்தாம் வகுப்பில் இந்தி பாடம் ஒன்று கூடுதலாக இருந்திருந்தால் எனக்கு பாலிடெக்னில் 1984-ல் இடம் கிடைத்து இருக்காது, அன்று நான்(என் அப்பா) கட்டிய நுழைவுக் கட்டணம் '280' ரூபாய். இந்தி வேண்டும் என்பவர்களின் நோக்கமே என்னைபோண்ற பிற்பட்ட சமுக மக்கள் படித்து முன்னேறிவிடக் கூடாது என்பதுதான். மற்ற பாடங்களில் 90% மதிப்பெண் வாங்கிய நான் தட்டு தடுமாறி ஆங்கிலத்தில் 72 மதிப்பெண் வாங்கியிருந்தேன்.இந்தி பாடம் ஒன்று கூடுதலாக இருந்திருந்தால் எனது மொத்த மதிப்பெண் குறைந்து இருக்கும். இந்தி பாடத்தில் 50 - 60 மதிப்பெண் வாங்கியிருப்பேன். அந்த ஆண்டு நான் படித்த அந்த கிராமப்புற அரசு மேல் நிலைப்பள்ளியில் 100% தேர்ச்சி பெற்றனர். இவ்வளவுக்கும் அப்பள்ளியில் நாந்தான் முதல் மதிப்பெண் பெற்ற மாணவன். என்னாலேயே ஆங்கிலத்தில் 72 மதிப்பெண் பெறமுடிந்தது என்றால் மற்ற மாணவர்கள் இந்தி பாடத்தில் தேர்ச்சி பெறுவது கனவில் கூட நடக்காது
  பூபதி - துபை

  ReplyDelete
 107. http://www.straitstimes.com/ST+Forum/Online+Story/STIStory_417904.html

  ReplyDelete
 108. திணிப்பை எதிர்க்கவேண்டும் என்று ஒத்துக்கொண்டுவிட்டபடியால் இது சம்மந்தமாக ஒரு சில விஷயங்களைப் பேசலாம் என்று நினைக்கிறேன்

  1) கபில் சிபல் அப்ப்பேச்சில் இன்னொன்றையும் சொல்கிறார்: இப்போது நமது அலுவல்களுக்குப் பொது மொழியாக ஆங்கிலம் இருக்கிறது. நாளடைவில் நமது மொழியே இருக்க வேண்டும்.

  முன் தலைமுறை ஆங்கில எதிர்ப்பாளர்களை (லோஹியா, கோபிந்த் வல்லப் பந்த் ஆகியோர்) ஓரளவு புரிந்துகொள்ள முடிந்தது. விடுதலை போராட்ட காலத்தின் ஆங்கிலேய எதிர்ப்பின் சொச்சம் அது.

  கடந்த பல ஆண்டுகளில் வளர்ச்சியும், வடவர் தென்னகத்தில் நம்மவர் அங்கும் என்று சென்று இந்தியாவின் பன்முகத்தன்மை பற்றிய புரிதல் ஆழப்பட்டிருக்கிறது. (இதெல்லாம் எழுத்தில் முழுதாகப் புரியாது என்பது என் கருத்து). சிபல் கட்டுப்பெட்டி அல்ல, ஒரு உச்சநீதமன்ற வழக்கறிஞர்.ஆனாலும் இவ்வளவு ஆண்டுகளுக்குப் பிறகும் சகலோரும் இந்தி பேசவேண்டும் என்ற விழைவு ஏன் ?

  அது 'இந்தி' மனோபாவத்தைக் காட்டுகிறது.

  அதென்ன மனோபாவம் ? தன் மொழியை மட்டும் வைத்துக்கொண்டு எங்கும் சமாளித்தவிடலாம் என்ற மனோபம். மும்பையில் மராட்டி தெரியாமல் கஷ்டப்பட்டேன் என்று யாராவது சொல்லிக்கேட்கிறோமா ? பிஹாரில் மைதிலி தெரியாமல் கஷ்டப்பட்டவர்கள் என்று ? ஏனென்றால் செல்லும் இடங்களில் எல்லாம், இருக்கும் மொழிகளை இரண்டாம்பட்சமாக்கி முன்னிற்கும் மொழி ஹிந்தி.

  இந்த மனோபாவம் நமக்கும் உண்டு என்றும் நான் குறிப்பிடாகவேண்டும். பெங்களூரிலேயே பல வருடம் இருந்தும் கன்னடம் கற்காமல் இருக்கும் தமிழர்களை எனக்குத் தெரியும். 'எல்லாருக்கும் தமிழ் புரியும்' என்று அவர்கள் சொல்லும் காரணம் மேலும் பிழையானது. சென்னையில் யாருக்கும் இந்தி தெரிய மாட்டேன் என்கிறது என்று வடக்கத்தியவர்களின் அங்கலாய்க்கும் அதே மனோபாவம்.

  அந்த எதிர்பார்ப்பை அவர்கள் ஒரு தவறாகவே நினைப்பதில்லை. என் அனுபவத்தில் ஒரு உதாரணம் :

  மும்பையில் படித்துக்கொண்டிருந்தபோது எங்கள் கல்லூரி உணவகத்தில் நானும் உ.பி.யை சேர்ந்த என் வகுப்பறைத்தோழனும் சாப்பிட்டுக்கொண்டிருந்தோம். ஒரு சக தமிழ்மாணவன் எங்கள் மேசைக்கு வந்து என்னிடம் தமிழில் பேசத் துவங்கினான். மூவர் இருக்கும் மேசையில் எங்கள் இருவருக்கு மட்டும் தெரிந்த மொழியில் அவன் பேசுவதை நான் சங்கோஜமாக உணர்ந்தேன். அப்போது உ.பி நண்பன் "ஏய்.... எனக்கு புரியாத உன் தென்னிந்திய மொழியில் (அது தமிழா, தெலுங்கா என்று அவனுக்குத் தெரியவில்லை :-) ) பேசாதே" என்றான் ஆங்கிலத்தில். நானும் என் தமிழ் நண்பனைப் பார்த்து " ஆமாம்...தமிழில் பேசாதே...நம்மை வைத்துக்கொண்டு அவர்கள் ஹிந்தி பேசுவது போல அநாகரீகமானது" என்றேன் ஆங்கிலத்தில். அவனுக்கு உரைத்த மாதிரி தெரியவில்லை.

  2) இது நான் கேள்விப்பட்ட ஒன்று. வரலாறு தெரிந்தவர்கள் மேலும் கூறலாம். 50/60 கள் வரையில் சமஸ்கிருதம் தமிழகத்தில் விருப்பபாடமாக சில பள்ளிகளில் இருந்திருக்கிறது. பிரட்டனில் பள்ளிகளில் லத்தீன் கற்றுக்கொடுப்பது போல இருந்திருக்கும் என்று நினைக்கிறேன். ஹிந்தியை வளர்க்கிறேன் என்று நடுவண் அரசு செய்த முயற்சிகளில் ஒன்று ஹிந்தி படிப்பவர்களுக்கு ஊக்கத்தொகை போன்ற சலுகைகள். இதனால் பலர் சமஸ்கிருதத்திலிருந்து ஹிந்திக்குத் தாவினர். அதனால் ஹிந்தி-சமஸ்கிருதம் என்று இரண்டையும் ஒரே அணியில் வைத்துப் பார்ப்பதை விட கொஞ்சம் நுட்பமாகப் பார்க்கவேண்டும்.

  கொசுறு செய்தி: ஹிந்தி மொழியில் சத்தியப்பிரமாணம் எடுத்துக்கொண்ட நேபாள பிரதமரை, மறுபடி நேபாளி மொழியில் எடுத்துக்கொள்ளச் சொல்லி உத்தரவிட்டிருக்கிறார்கள். ஏனோ கைத்தட்டவேண்டும் என்று தோன்றுகிறது

  ReplyDelete
 109. maie kaun hoon? main kahaan hoon? என்னய்யா இது ரத்த பூமி கணக்கா?

  ReplyDelete
 110. டாக்டர்/ஜோ/ஜெகதீசன்,

  போட்டு தாக்கிட்டிங்க :)))

  Well said!!!

  அத்தோட இதையும் படியுங்க

  ReplyDelete
 111. மொழிய, மொழிய பார்த்தல் பிரச்சனையே இல்ல.
  எதையும் திணிக்கும் போது அதை எதிர்ப்பது தானே நம்மளோட இயல்பு.

  ReplyDelete
 112. நன்றி ஜெகதீசன்,

  நன்றி டக்ளஸ்,

  நன்றி ஜோ,

  நன்றி செந்தில்வேலன்,

  நன்றி பூபதிபெருமாள்,

  நன்றி டகால்டி,

  நன்றி கார்த்திக்,

  நன்றி இந்தியன்,

  நன்றி பாலா,

  அனைவரின் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி,

  என்நிலைபாடு; ஹிந்தி திணிப்பு தவறென்றால், படிக்க நினைப்பதை தடுப்பதும் தவறுதான்.

  ReplyDelete
 113. //என்நிலைபாடு; ஹிந்தி திணிப்பு தவறென்றால், படிக்க நினைப்பதை தடுப்பதும் தவறுதான்.//

  சரிதான்.

  ReplyDelete
 114. நான் ஹிந்தி கற்றுக் கொண்டது எனது முன்னேற்றப் பாதையில் உதவியது என்பேன். அதுக்காக ஹிந்தி கத்துக்கனுமா? கூடாதா என்பதற்கு ரிசல்ட் எல்லாம் சொல்ல வரலை... ;-))

  ReplyDelete
 115. //யாத்ரீகன் said...

  @THIYAGARAJAN dude, if ur not able to learn @THIYAGARAJAN dude, if ur not able to learn a language when its needed at most where you live by then, then how do you expect students to learn when they know this language might/might not help ?!//

  Sir, the ability to learn an additional language is very high when one is young. it is not taxing. so no harm done if you learn hindi... again, i agree with Peer-- "என்நிலைபாடு; ஹிந்தி திணிப்பு தவறென்றால், படிக்க நினைப்பதை தடுப்பதும் தவறுதான்."

  >probability of one working in an area where Hindi is spoken/ understood is very high.<

  //so what is the that probability ? can you explain in numbers please ?//

  --let's put it this way- the chances of one working within India is very high compared to going outside.( so no big advantage of learning say Vietnamese!) Within India, the chances are relatively high to "work in a transferable job or to go on a business trip" outside TN. This is my belief (gut feeling/ perception/intuition). No one can give an absolute probability number- except to state that it is a reasonably high and not to ignore it and hence better to get an exposure to hindi at an early age. If you feel otherwise that's ok; you don't have to learn it. no compulsions here.... At least I don't want to confuse myself that learning hindi is not an insult to tamil.
  Thanks for your comment.

  ReplyDelete
 116. இதில் எளிமையான பதிலை என்னால் எழுதமுடியும்.

  தேவை என்றால் ஹிந்தி என்ன, சைனீஸ், ஜாப்பனீஸ், கொரியன், ஜெர்மன், ப்ரெஞ்சு கூட பழகுங்கள்.

  என் அண்ணன் சீமான் சொன்னதுபோல,

  தமிழ் நம்முடைய தலைவாசலாகவும், வேற்று மொழிகள் நம்முடைய வீட்டு சன்னலாகவும் இருந்தால் நன்று.

  அதே சமயம், நமக்கு தேவை இல்லாத ஒன்றை நம்மிடம் திணிக்க முயல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.

  ஹிந்தி எதிர்ப்புக்கும் ஹிந்தி திணிப்புக்கும் உள்ள வித்தியாசத்தை நீங்கள் புரிந்துகொண்டால் போதும். விடையோ வடையோ கிடைக்கும்.

  ReplyDelete
 117. //என்நிலைபாடு; ஹிந்தி திணிப்பு தவறென்றால், படிக்க நினைப்பதை தடுப்பதும் தவறுதான்//

  படிக்க நினைச்சவங்களை யார் சார் தடுத்தாங்க ? உங்களுக்கு படிக்கணுமுண்ணா படிங்க சார் ..நாங்க எல்லாரும் கண்டிப்பா படிச்சா தான் நான் படிப்பேன் -ன்னு அடம் பிடிக்காதீங்க ..ஐய்யோ எங்களை விட்டுடுங்க ..நான் வியட்நாமிஸும் ,ஜெகதீசன் மாண்டிரீனும் படிச்சுட்டு போறோம் .

  ReplyDelete
 118. //செந்தழல் ரவி said...
  ... தமிழ் நம்முடைய தலைவாசலாகவும், வேற்று மொழிகள் நம்முடைய வீட்டு சன்னலாகவும் இருந்தால் நன்று.//

  அருமை ரவி, சன்னல் அமைவதால் காற்றுவரும். கருப்பு வராமல் பார்த்துக்கொள்ள வேண்டியது நம் கடமை.

  வீட்டு சுவரை இடித்து சன்னல் வைக்க சொல்வது பெருந்தவறு.
  சன்னல் வைக்காதே என்று சொல்வதும் தவறு.

  இதையே கழிவறை நீதி - வள்ளுவன் என்ற முந்தைய இடுகையில் சொல்லியிருப்பேன் வாசித்து பாருங்கள்.

  ReplyDelete
 119. // ஜோ/Joe said...
  .. படிக்க நினைச்சவங்களை யார் சார் தடுத்தாங்க ? உங்களுக்கு படிக்கணுமுண்ணா படிங்க சார் ..நாங்க எல்லாரும் கண்டிப்பா படிச்சா தான் நான் படிப்பேன் -ன்னு அடம் பிடிக்காதீங்க //

  இல்ல ஜோ, தவறா புரிஞ்சிருக்கீங்க, இல்ல.. இல்ல..நான் சரியா விளக்கல. மெட்ரிக் பள்ளியிலையோ, தனியாக பணம் கட்டியோ படிக்க விசதி இல்லைங்க. இதுவே அரசு பள்ளிகளில் விருப்ப பாடமாக இருந்தால், விரும்புபவர்கள் படிப்பார்கள்.

  ReplyDelete
 120. அன்புள்ள பீர்!

  நீங்கள் சரித்திரத்தின் ஒரு பக்கத்தை அதுவும் ஒருதலை பட்சமான முறையில் விளக்க முற்படுகிறீர்கள்.

  சரித்திரத்தை ஓரளவுக்கேனும் அறிந்து கொள்ள விருப்பமிருந்தால், இன்போசிஸ் முன்னாள் தலைவர் நந்தன் நிலேகேணி (இவர் தமிழர் அல்லர். ஒருசிலரால் வர்ணிக்கப் படுவது போல ஒரு தமிழ் வெறி பிடித்தவரும் அல்லர்) எழுதிய இமேஜினிங் இந்தியா என்ற புத்தகத்தை படியுங்கள்.

  முதலில் ஒன்று புரிந்து கொள்ளுங்கள்

  இங்கு யாருமே எந்த மொழிக்கும் விரோதிகள் அல்லர். விருப்பமும் வாய்ப்பும் கிடைத்தால் எல்லா மொழிகளுமே கற்றுக் கொள்ளப் படவேண்டியதுதான். சொல்லப் போனால் மற்ற மொழியினருடன் அவர்கள் மொழியிலேயே பேசினால் ஒருவித மன ஒருமைப்பாடும் நேசமும் உருவாகும் என்பது அனைவருக்கும் தெரியும்.

  ஒரு மொழியை இன்னொரு சமுதாயத்தின் திணிக்கப் பட முயலும் போதுதான் (அதற்கு நீங்கள் விருப்பப் பாடம், ஒரு மொழிப் பாடம், மும்மொழி திட்டம் என்று என்ன பெயர் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம்) பிரச்சினை ஆரம்பிக்கிறது. அவ்வாறு திணிக்கும் முயற்சியின் பெயர்தான் ஆதிக்க மனப்பான்மை. தொன்மையான மொழி, பெரும்பான்மையோனர் மொழி என்று சொல்லி ஒரு மொழியை தூக்கிப் பிடிப்பதும் ஒருவித ஆதிக்க மனப்பான்மைதான்.

  ஹிந்தியை விட ஆங்கிலத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்ததுதான் இன்று இந்தியா முக்கியமாக தென்னாடு பெரிய அளவில் வளர காரணம். மொழியை அரசியலாக்கியதால்தான் வட நாடு இன்னும் வாடிய நாடாகவே இருந்து வருகிறது என்று நந்தன் நிலேகேணி கூறுகிறார். இந்த சமுதாய மற்றும் பொருளாதார புரட்சிக்கு அடிகோலியது தமிழர்களின் ஹிந்தி எதிர்ப்பு போராட்டம்தான் என்று நந்தன் கூறுகிறார். ஒரு மொழி திணிப்பை தவிர்த்திருந்தால் இலங்கையும் இன்று இந்தியா போல ஓரளவுக்கேனும் அமைதியாக இருந்திருக்கும் என்றும் அவர் கூறுகிறார்.

  மீண்டும் சொல்கிறேன்.

  இவர் தமிழர் அல்லர். இங்கு ஒருசிலரால் வர்ணிக்கப் படுவது போல ஒரு தமிழ் வெறி பிடித்தவரும் அல்லர்.

  இன்னும் நிறைய ஆதாரங்களுடன் சொல்லியிருக்கிறார். சரித்திரம் ஓரளவுக்கு படித்தவன் என்று நினைத்திருந்த எனக்கே பல விஷயங்கள் புதிதாக இருந்தது. விவரமாக தெரிந்து கொள்ள புத்தகத்தை படியுங்கள்.

  நீங்கள் அராபிய நாட்டில் இருக்கிறீர்களா? அராபிய மொழி கற்பது நியாயம். நான் மும்பையில் இருக்கிறேன். மராத்தி கற்று கொண்டால் நல்லது. கர்நாடகாவில் இருந்த போது தவிர்க்காமல் கன்னடம் கற்றுக் கொண்டேன்.

  எந்த மொழியையும் கற்றுக் கொள்ள சில நாட்கள், சில வாரங்கள் அல்லது அதிக பட்சம் சில மாதங்கள் போதும். எழுதப் படிக்கத் தெரியாதவர்களால் கூட மற்றொரு மொழியை எளிதாக கற்றுக் கொள்ள முடியும்.

  மேலும், வட நாட்டில் வேலை வாய்ப்பு அதிகம் இருந்தால் அங்கிருப்போர் ஏன் மும்பை பெங்களூர் வந்து இங்கிருப்பவர்களிடம் உதை வாங்குகிறார்கள். அப்படி வடநாட்டில் ஏராளமான வேலை வாய்ப்பு இருக்கிறது என்று நினைப்பவர்கள் தனியாக டுயூசன் வைத்து படித்துக் கொள்ளட்டுமே?

  நிலைமை இப்படி இருக்கையில், ஏகப் பட்ட மக்கள் பணத்தை செலவழித்து, யாரோ சிலரின் மொழி வெறிக்காக, சிலரின் ஆதிக்க மனப்பான்மைக்காக, மூட்டைப் பூச்சிக்காக வீட்டை கொளுத்தும் இது போன்ற திணிப்புகளை ஆதரிக்காதீர்கள்.

  மீண்டும் சொல்கிறேன்.

  ஹிந்தி பெரும்பான்மையோர் பேசும் மொழி, வட நாட்டில் வாழ உதவியாக இருக்கும் (நானும் வட நாடு சென்றவன்தான்), ஹிந்தி கற்றால் ஒருமைப் பாடு வளரும் என்று சொல்வது எல்லாம் ஒரு சமுதாயத்தின் மீது இன்னொரு சமுதாயத்தினர் செலுத்த விரும்பும் ஆதிக்க மனப்பான்மையின் வெளிப்பாடுதான்.

  நன்றி.

  ReplyDelete
 121. வீட்டு சுவரை இடித்து சன்னல் வைக்க சொல்வது பெருந்தவறு.
  சன்னல் வைக்காதே என்று சொல்வதும் தவறு.


  -------------

  இல்லையே ? யாரும் சொல்லவில்லையே ?

  தமிழகத்தில் ஹிந்தி மட்டுமல்ல, ப்ரெஞ்சு, சமஸ்கிருதம் கூட தனியார் பாடசாலைகளில் பயில வழி உண்டே ?

  ReplyDelete
 122. அரசு பள்ளிகளில் கட்டாயப்பாடமாக ஆங்கிலம் உள்ளது.

  ஏன் விருப்ப பாடமாக ஹிந்தியை மட்டும் கேட்கிறீர்கள் ?

  சைனீஸை ஏன் கேட்கவில்லை ?

  40 கோடி பேர் பேசும் ஹிந்தியை தமிழக அரசு விருப்ப பாடமாக அரசு பள்ளிகளில் வைக்கவேண்டும் என்று சொல்லும் நீங்கள், 120 கோடி பேர் பேசும் சீன மொழியையும் வைக்குமாறு கேட்கலாமே ?

  ஹிந்தி படித்தால் தான் வேலை கிடைக்கும் என்றால், இந்திக்காரன் ஏன் தமிழகத்தில் சொட்டர் விற்கிறான் ? இதுவும் அண்ணன் சீமான் சொன்னதுதான்.

  தேவை ஏற்படுபவர்கள் இந்தியை மட்டுமல்ல, கொரிய மொழியையும் பழகிக்கொள்ளுங்கள்.

  மும்பை அந்தேரியில் கட்டிட வேலைக்கு போய் அங்கே தங்கி உள்ள தமிழர்கள் அட்சர சுத்தமாக ஹிந்தி பேசுகிறார்களே ? அவர்கள் என்ன அரசு பாடசாலையில் ஹிந்தியை விருப்ப பாடமாக வைத்ததாலா பேசுகிறார்கள் ? தொழில் என்று வந்துவிட்டதும், தேவை என்று வந்துவிட்டதும், அப்படியே பழகிக்கொள்ளவில்லையா ?

  ReplyDelete
 123. सीखना । अधिक-से-अधिक भाषाओं, हमेशा क्या अच्छा है! यह एक हमारे २ाान विस्तार! मॅँ जानता हूं कि छ: भाषाओं और यद्यपि पूरी तरह नहीं, मुझे यह काफी मदद की कई बार के दौरान!

  ReplyDelete
 124. நன்றி ஐயா, இமேஜினிங் இந்தியா வாசித்துப் பார்க்கிறேன்.

  அதோடு இந்தியா ஆஃப்டர் காந்தி (ராமசந்திர குஹா) வாசிக்கவும் நினைத்துள்ளேன்.

  சரித்திரத்தின் இரு பக்கங்களையும் பார்க்க.

  வித்தியாசமாக (வேறு கோணத்தில்) விளக்க முற்பட்டுள்ளீர்கள், நன்றி.

  ReplyDelete
 125. //செந்தழல் ரவி said...
  ... தமிழகத்தில் ஹிந்தி மட்டுமல்ல, ப்ரெஞ்சு, சமஸ்கிருதம் கூட தனியார் பாடசாலைகளில் பயில வழி உண்டே ?//

  நண்பர் ஜோ விற்கு அளித்துள்ள பதிலே பொருந்தும் என்று நினைக்கிறேன்.

  ReplyDelete
 126. எனக்கு தாய் மொழி தமிழ் தான்! ஆனால், பள்ளியில் படித்த ஹிந்தி தான் பல நேரங்களில் கைகொடுத்தது. நான் ஹஜ் சென்றிருந்த சமயம், யாராவது வந்து எதாவது கேட்டால், என் மாமனாரும், கணவரும் என்னை தான் கூப்பிடுவார்கள். காரணம் எனக்கு 6 பாஷைகள் (ஆர்வ கோளாறால் சிறிதளவு மட்டும் கற்று கொண்டேன்) எழுத படிக்க, கொஞ்சமாக பேச தெரியும்! அதிகம் கற்பதால், எந்த கேடும் வர போவதில்லை.

  நான், ஹரமுக்கு போனால், ஹிந்தி பெண் அருகில் தான் போய் அமருவேன். முதலிலேயே சொல்லி விடுவேன், எனக்கு சரியாக ஹிந்தி தெரியாது அரை குறை தான் என்று...பின்பு, அரை மணி நேரமாயிருந்தாலும், அவருடன், ஹிந்தியில் பேசிக் கொண்டே இருப்பேன். குடும்ப விஷயம், ஊர் விஷயம் எல்லாம் பேசி பேசி, புது புது வார்த்தைகள் கற்று கொள்வேன்.

  இது எனக்கு எவ்வளவு உதவிகரமாக இருந்தது என்று எனக்கு தான் தெரியும்!

  அடுத்தவரை (ஹிந்திகாரரை) நாம் நிர்பந்தபடுத்த முடியாது, நாம் தான் தேவையென்றால் கற்று கொள்ளவேண்டும்.

  என்னைப் பொறுத்த வரை ஹிந்தி காரர்களுக்கு அறிவு நம்மவரை விட குறைச்சல். ஆனால், வியாபார நுணுக்கம் நன்றாக தெரிந்துள்ளது.

  ReplyDelete
 127. //செந்தழல் ரவி said...

  அரசு பள்ளிகளில் கட்டாயப்பாடமாக ஆங்கிலம் உள்ளது.

  ஏன் விருப்ப பாடமாக ஹிந்தியை மட்டும் கேட்கிறீர்கள் ?

  சைனீஸை ஏன் கேட்கவில்லை ?//

  சைனீஸ் அரசு பள்ளிகளில் வருவதாக இருந்தால் ஏற்றுக்கொள்வீர்களா?

  நாமும் சைனீஸ் கற்றுக்கொண்டால், சீனர்கள் நம்மை உலக சந்தையில் முந்திவிடாமல் தடுக்கலாம், (அவர்களுக்கு ஆங்கிலம் வராது) என்று அரசு முடிவு செய்து இலவச விருப்ப பாடமாக சைனீஸையும் அரசாங்க பள்ளியில் கற்பித்தால் நான் கற்றுக்கொள்வேன். எனக்கு அது ஒரு அதிகப்படியான திறமை, அவ்வளவே.

  ReplyDelete
 128. என்ன...யாரும் எதும் கத்துக்காதீங்க...நமக்கு இருக்கவே இருக்கு இண்டர்நேஷனல் பாஷை....அதாங்க, சைகை! எல்லாரும் ஊமை பாஷை கத்துக்கிட்டா எவ்ளோஓஓஓஓஓஓ நல்லது. ஆனால் அதிலும் ஒரு பிரச்சினை, வாய் சண்டை மாறி, கை சண்டையாகி விடும் :-)

  ReplyDelete
 129. //SUMAZLA/சுமஜ்லா said...

  सीखना । अधिक-से-अधिक भाषाओं, हमेशा क्या अच्छा है! यह एक हमारे २ाान विस्तार! मॅँ जानता हूं कि छ: भाषाओं और यद्यपि पूरी तरह नहीं, मुझे यह काफी मदद की कई बार के दौरान!//

  என்னாதிது???

  என்னைய திட்டுறீங்களா, வாழ்த்துறீங்களா? (இல்ல வேற யாரையாவது?....)

  ஹிந்தி படிச்சிருந்தா இந்த மாதிரி தலைய பிச்சுக்கிட்டிருக்க வேண்டி வந்திருக்காது. ம்...

  அட.. எனக்கு ஹிந்தி பேசதான் தெரியும். அதே போல, வெளி மாநிலத்திற்கு வேலைக்கு போறவங்க பேசதான கத்துக்குவாங்க? இனிமே வேலை வெட்டிய விட்டுட்டு, எழுதி படிக்க போக முடியுமா?

  ReplyDelete
 130. Look here:
  http://sumazla.blogspot.com/2009/08/blog-post_29.html

  ReplyDelete
 131. வணக்கம், எல்லோர்க்கும் எப்படியும் ஏதாவ்தோரு நல்ல விஷயத்தை மட்டுமே கொடுக்க வேண்டும் என்பதை தீர்மானமாக செய்து வரும் மனமாஎந்த பாரட்டுதல்களுக்குரிய உங்களிடம் ஒரு வேண்டுகோள்! தயவு செய்து என் ப்ளாக் http://chinthani.blogspot.com/ கடந்த இரு பதிவுகளையும் அதை தொடர்ந்து அதில் குறிப்பிட்டுள்ள மற்ற ஆங்கில இணையப்பக்கங்களையும் படித்து உங்கள் மனதுக்கு சரியென்று படுவதை உங்கள் ப்ளாக்கை படிப்பவர்களிடம் பகிர்ந்து கொள்ளவும்!! இது ஒரு மொத்த இனத்தின் வாழ்வாதார போராட்டத்துக்கு நம்மால் முடிந்த உதவி!

  ReplyDelete
 132. முதலில் அமைச்சர் என்ன சொன்னார் .. கபில் சிபல் சொல்லும் விளக்கம்,
  தாய் மொழி --கலாசார ஒருங்கிணைப்புக்கு உதவும்
  ஆங்கிலம் -- சர்வதேச ஒருங்கிணைப்புக்கு உதவும்
  ஹிந்தி மொழி -- தேச ஒருங்கிணைப்புக்கு உதவும்.
  இது மூன்றும் படிக்கணும்னு சொல்றார்...இதில் மலேசியா(டி குடிக்க கஷ்டப்பட்டவர்), வியட்நாம் , சிங்கப்பூர் மற்றும் அரபியாயவில் வரி கட்டுபவர்களை பற்றி அவர் அக்கறை கொல்ல வில்லை. அதனால் அதை நாம எதிர்பார்பது தப்புங்க ....என்ன சரியா ?..
  சர்வதேசம்னா சர்வதேசமும் பேசும் பாஷை. இது எல்லாமே பள்ளிகூடத்தில் படித்து வெளிவருபவர்களுக்கு,

  ReplyDelete
 133. சரி ..தேச ஒருங்கிணைப்புக்கு எல்லாரும் தமிழ் படிக்க சொல்லுங்கன்னு சொல்லலாம் ..நம்ம டாக்டர் நிறைய தடவை கேட்டார், ஏன் இந்திக்காரன் தமிழ் படிக்க கூடாது ? என்னிகாவது ஒரு நாள் ஒரு தமிழன் மத்தியில் அமைச்சரவை அமைக்கட்டும், அன்னிக்கு தமிழ் கல்வின்னு ஒரு சட்டம் போடுங்க...எனக்கு தெரிஞ்சு இது நடக்காத காரியம், இது ஜனநாயகம் கத்து கொடுக்கும் பாடம்..

  ReplyDelete
 134. நண்பர் ஒருவர் எங்க போனாலும் ரெண்டு மாசத்துல பாஷை கத்துக்கலாம்னு சொன்னார் ..அதுக்காக ஏன் பள்ளிகூடத்தில் படிக்கணும்னு கேட்டார்...ஏன் சார் அந்த ரெண்டு மாசம் , உங்க அலுவல் பாதிக்காதா, உங்க கம்பனிக்கு அது நஷ்டம் தானே ..மத்திய அரசு பதவியில் இருந்தால், அரசுக்கு நஷ்டம்,

  'மருத்துவமனைக்கு செல்லும் வழி' அப்படின்னு போர்டு போட்டுர்காங்க,படிச்சிர முடியுமா ஹிந்தியில், எல்லாரும் உங்களையும் என்னையும் மாதிரி கூகிள் மாப்சில் வழி பார்த்து போக மாட்டாங்க .... மிலிடரியில் உங்களுக்கு கீழ ஒரு பத்து ஜவான் இருகாங்க, சமாளிப்பது ரொம்ப கஷ்டம், உயிர் பணயம் வைக்கும இடத்தில் இந்த பிரச்சினை வேற தேவையா ....இது தான் சார் தேசிய ஒருங்கினைப்பு சொல்றார், எல்லாத்தையும் விட்டுட்டு
  "வீழ்வது நாமாக இருபினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும்னு" சொன்னா நமக்கு தான் நஷ்டம் ...
  அது ஒரு மொழி சார் !...நாட்டுக்காக படிங்க...நீங்க வியட்நாம் போவேன் , எனக்கு ஹிந்தி தேவை இல்லைன்னு சொல்லலாம் ..ஆனா எல்லாராலையும் போக முடியாது ..சிலர் கஷ்மிர்ல எல்லை காவல நிக்க போவாங்க, அவுங்களுக்கு அது பல மடங்கு உதவும்

  ReplyDelete
 135. 'பீர்' சார் ...படம் முடிஞ்சிருச்சா ? இல்லை ஏதும் லூசுத்தனமா எழுதிட்டேனா ? தமிழ் காவலர்களின் பதிலே காணோம்.
  யாரோ ஒருவர் ஆங்கில படிப்பையும், கணினி படிப்பையும் நம்மீது தினித்திருகாங்க..ஆரம்பத்தில் எல்லாருக்கும் கஷ்டமா தான் இருந்திருக்கும். நிறைய காவலர்கள் எதிர்ப்பு செஞ்சிருபாங்க..ஆனால் இங்க பின்னுடம் எழுதினவுங்க எல்லாரும் அதில் பயனடைந்தவர்கள் தானே.

  ஜோ சார்
  //ஆங்கிலம் என்ற உலகம் முழுதும் செல்லுபடியாகும் பெரிய ஓட்டை இருக்க தேவையில்லாமல் இந்தி என்ற சின்ன ஓட்டை போட வேண்டும் என சொல்லுவது எனக்கு புரியவில்லை .//

  உசிலம்பட்டியில் இருந்து அமெரிக்கா செல்பவர்க்கு ஆங்கிலம் பெரிய ஓட்டை உங்களுக்கு ஹிந்தி என்ற சிறிய ஓட்டை தேவை படாது...
  அதே உசிலம்பட்டியில் இருந்தி வட மாநிலம் போறவனுக்கு ஆங்கிலம் ஒரு சிறிய ஓட்டை அவனுக்கு ஹிந்தி என்ற பெரிய ஓட்டை இருந்தா அவன் முன்னரே உதவும் .

  இப்ப சொல்லுங்க உசிலம்பட்டியில் இருந்து அமெரிக்கா போறவன் அதிகமா ..இல்லை வட மாநிலம் போறவன் அதிகமா. அரசு யாரை பத்தி கவலைப்படும்.

  ReplyDelete
 136. திரும்பவும் முதல்ல இருந்து ஆரம்பிக்கனுமா.... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

  நில்லுங்க, ஜோ வையும் புருனோவையும் கூப்பிடுறேன்...

  ReplyDelete
 137. //
  'மருத்துவமனைக்கு செல்லும் வழி' அப்படின்னு போர்டு போட்டுர்காங்க,படிச்சிர முடியுமா ஹிந்தியில்,
  //
  தமிழகத்திற்கு வேலைக்கு வரும் வட மாநில மத்திய அரசு அதிகாரி, "மருத்துவமனைக்கு செல்லும் வழி" அப்படின்னு தமிழ்ல படிச்சிற முடியுமா?

  ReplyDelete
 138. தமிழகத்திலிருந்து வேலைக்காக இந்தி பேசும் மாநிலங்களுக்குச் செல்வோர் (அது மிலிட்டரிக்காகவும் இருக்கலாம் இல்லை வேறு எந்த வேலைக்காகவாவது) அதிக பட்சம் 10% இருக்குமா?

  அதுக்காக எதுக்கு மற்ற 90% பேரும் படிக்கனும்?

  இந்தி வேண்டும் என்று நினைப்பவர்கள் படித்துக் கொள்ளலாம்... அவர்களை யாரும் தடுப்பதில்லை..

  ReplyDelete
 139. மருத்துவர் புருனோ ஒரு கொலைவெறியோடு தான் பின்னூட்டங்களில் இறங்கியிருக்கிறார்!

  அதுக்காக, இப்படியா?

  சீரியல் கில்லர், மெகா சீரியல் எடுத்துக் கில்'றவர் மாதிரி, இத்தனை கில்லர் பின்னூட்டமா?

  'அவன நிறுத்தச் சொல்லு! நான் நிறுத்திக்கறேன்' இது வடிவேலு கேட்டாக் காமெடி!

  /சென்னையிலோ பெங்களூரிலோ பணிபுரிய வரும் இந்திக்காரர்கள் ஏன் தமிழோ கன்னடமோ கற்பதில்லை /
  இதையே மருத்துவர் கேட்டா, செம காமெடி!

  யார் சொன்னார்கள், அவர்கள் தமிழைக் கற்றுக் கொள்வதில்லை என்று?

  தமிழை ஆதரிக்கிற பலபேர் பேசும் டமிலை விட, அவர்கள் நன்றாகவே தமிழ் பேசுவதைப் பார்த்ததில்லையா?

  ReplyDelete
 140. യെന്സാര്‍ ഇപ്പടി ഹിന്ടിയ കത്തുക്ക സോല്ലുരിങ്ങ എല്ലാരും യെന്‍ തമില കട്ടുക്കകൂടാത് തമിള്‍ കത്തുകിട്ടാ അത് ദേശ മോളിയാ ആക്കിടലാം സൊ എല്ലാരും തമിള്‍ കത്തുക്കുങ്ങ. ഹിന്ദി ബേടാ

  ReplyDelete
 141. எனக்கு மலையாளம் தெரியும் சோ எல்லாரும் மலையாளம் கத்துக்குங்க.. நா கேரளா போனப்ப என் நண்பர்கள் எல்லாம் என்னதான் எது வாங்குறது நாளும் கூப்பிட்டு மலையாளத்துல பேச சொல்லுவாங்க.. ஆகவே அனைவரும் மலையாளம் கற்றுக்கொள்ளவேண்டும்

  ReplyDelete
 142. ಕನ್ನಡಾ ಇಸ್ ವೆರಿ ಬೇಯುತ್ಯ್ಫುಲ್ ಲಂಗುಅಗೆ ಸೊ ಆಲ್ ನೀಡ ಟು ಲೆಅರ್ನ್ ಕನ್ನಡಾ, ದಿಸ್ ವಿಲ್ ಹೆಲ್ಪ್ ಯೌ ಟು ಸುರ್ವಿವೆ ಇನ್ ಕರ್ನಾಟಕ, ಅಲ್ಸೋ ಕನ್ನಡಾ ಇಸ್ ವೆರಿ ಓಲ್ಡ್ ಅಂಡ್ ಕ್ಲಾಸಿಕಾಲ್ ಲಂಗುಅಗೆ, ಒನ್ ಆಫ್ ದಿ ಓಲ್ಡ್ ದ್ರವಿದನ್ ಲಂಗುವಗೆ ಸೊ ಎವೆರ್ಯ್ಬೋಡಿ ಶೌಲ್ದ್ ಲೆಅರ್ನ್ ಕನ್ನಡಾ. ದಿ ಇಮ್ಪಾತನ್ ಥಿಂಗ್ ಇಸ್ ಕನ್ನಡಾ ಇಸ್ ವೆರಿ ಕ್ಲೋಸ್ ರೆಳತಿಒಂಶಿಪ್ ವಿಥ್ ತಮಿಳ್ ಸೊ ಆಲ್ ತಮಿಳನ್ಸ್ ಶೌಲ್ದ್ ಲೆಅರ್ನ್ ಕನ್ನಡಾ. ದಟ್ಸ್ ವಿಲ್ ಗಿವೆ ಮೊರೆ ಕನೋವ್ಳೆಡ್ಗೆ ಟು ವ್ರಿತೆ ತಮಿಳ್ ಲಿತೆರತುರೆ ಅಂಡ್ ಬೆಸ್ಟ್ ಲಿತೆರುತತುರೆ.

  ReplyDelete
 143. கன்னடாவும் ஒரு அற்புதமான மொழி என்பதை யாரும் மறுக்கமுடியாது அதுமட்டும் இல்லாமல் அதுவும் ஒரு செம்மொழி நீண்ட இலக்கியமரபை கொண்டது சோ அனைவரும் அதையும் தேசியமொழியாக ஏற்று அதனை கறக்கவேண்டும்.. மற்றும் மீதமுள்ள அனைத்து அங்கீகரிக்கப்பட்ட மொழிகளையும் கட்டாயம் பாடபுத்தகத்தில் சேர்த்து கறக்கவேண்டும் அப்படி இல்லையே நாம் இந்தியர்களே அல்ல

  இன்னொரு முக்கியமான விஷயம் இந்தியாவில் எதுவும் தேசியமொழி கிடையாது அனைத்தும் அங்கீகரிக்கப்பட்ட மொழி மட்டுமே இந்தி உட்பட

  ReplyDelete
 144. vankkam Sammy
  ஏன் இந்திய ஏத்துக்கணும் ? சிறு சிறு நாடா இருந்தத சேர்த்து ஆட்சி பண்ணினது ஆங்கிலேயன்.. ஆனா அவன் தயவால இந்தியான்னு ஒரு நாட்டுருவாக்கி அதுல நாப்பது சதவிகிதம் பேரு மட்டும் பேசும் ஒரு மொழிய மட்டும் எத்துக்கசொல்லுவது எந்த விதத்துல ஞாயம் ? ஒபிசியால் மொழியா ஆங்கிலத்த மட்டுமே வச்சிருந்தா இந்த பிரச்சனை கிடையாது... அவர்கள் சுயநலத்துக்கு நாம எல்லாம் பலிகிடாவா ???

  அவனுக இந்திய தவற ஒரு மொழியையும் பேச மாட்டானுகளாம் நாம மட்டும் பள்ளியிலேயே படிக்கணுமாம் ? என்ன கொடும இது?

  பல மொழி படிக்குது நமக்கு நல்லது ஆதற்காக அரசாங்க காசுல ஒரு குறுப்பிட்ட( அடுத்தவன்) மொழிய மட்டும் படிக்க சொல்லுறது எந்த விதத்துல ஞாயம்?


  வடக்க பலபேர் இரண்டு தலை முறையா தாய் மொழிய பேசாம இந்திய பேசினதுனால இன்னைக்கு அவர்கள் தாய் மொழி ஹிந்தி ஆகிடுச்சி தெரியுமோ ?.

  தமிழ் நாட்டுக்கு வந்தா அவன் தமிழ் கத்துக்கணும் நான் அங்க(எங்க) போனா அவன் மொழிய கத்துக்குவேன்... அவளவுதான்

  அவனுக சுகமா இருக்க நான் தேவை இல்லாம இந்திய கத்துக்கணும்ன்னு அவசியம் இல்ல.

  ReplyDelete
 145. எனக்கு ஒரு டவுட் .. நம்ப எல்லோருக்கும் இங்கிலீஷ் தெரியும்.

  1. இங்கிலீஷ் திணிப்பில் - நம்ப எல்லோரும் இங்கிலீஷ் படிச்சோமா ?

  2.இங்கிலீஷ் அறிவு கிட்டதட்ட எல்லா அரசு வேலையிலயும் கட்டாயம் - இதை நாம் எப்படி ஏற்றுகொண்டோம் ?

  3 கம்ப்யூட்டர் பாடம் .. கட்டாயம் வேண்டுமா ? திணிப்பா ? விருப்பமா ?

  இங்கிலீஷ் - கம்ப்யூட்டர் இதை விட ஹிந்தி ரொம்ப முக்கியமா ?

  60 வருட இந்திய முன்னேரததை "ஹிந்தி அறியாமை " எவ்ளவு பாதித்தது ?

  ReplyDelete
 146. //யாரோ ஒருவர் ஆங்கில படிப்பையும், கணினி படிப்பையும் நம்மீது தினித்திருகாங்க..//

  யாரும் திணிக்கவில்லை

  //ஆரம்பத்தில் எல்லாருக்கும் கஷ்டமா தான் இருந்திருக்கும். நிறைய காவலர்கள் எதிர்ப்பு செஞ்சிருபாங்க..//

  ஊகம் !!!.. ஊகூம்... .... தகவல்களுடன் பேசுவோம்

  //ஆனால் இங்க பின்னுடம் எழுதினவுங்க எல்லாரும் அதில் பயனடைந்தவர்கள் தானே. //

  புரியல

  ReplyDelete
 147. //சென்னையிலோ பெங்களூரிலோ பணிபுரிய வரும் இந்திக்காரர்கள் ஏன் தமிழோ கன்னடமோ கற்பதில்லை //

  ஐயா

  முதலிலிருந்து படியுங்கள் !!

  அவர்களுக்கு பள்ளியில் தமிழ் ஒரு கட்டாய பாடமாக கற்பிக்கப்படுகிறதா என்பதே என் கேள்வி. இல்லை என்ற பதில் எனக்கு தெரியும். உங்களுக்கு தெரியவேண்டும் என்பதற்கான அறிவினா இது

  ReplyDelete
 148. //யார் சொன்னார்கள், அவர்கள் தமிழைக் கற்றுக் கொள்வதில்லை என்று?
  //

  அவர்கள் சொந்த விருப்பத்தின் பேரில் தமிழ் கற்றுக்கொள்வது போல் இங்கிருப்பவர்களும் இந்தி பிரசார சபாவில் சேர்ந்து இந்தி கற்கலாமே

  ஆனால் அவர்கள் பள்ளியில் இந்தி, ஆங்கிலம் மற்றும் மூன்றாவது மொழியாக இந்தி அல்லாத வேறொரு இந்திய மொழியை கற்காமல் ந்ம்மை தமிழ் ஆங்கிலம் தவிர மூன்றாவது மொழியை கற்கச்சொல்வது எப்படிநியாயம் என்பதே கேள்வி

  ReplyDelete
 149. //அவனுக இந்திய தவற ஒரு மொழியையும் பேச மாட்டானுகளாம் நாம மட்டும் பள்ளியிலேயே படிக்கணுமாம் ? என்ன கொடும இது?
  //

  இது தான் எனது கேள்வி

  அவர்கள் இரண்டாவது மொழி கூட கற்க மாட்டார்களாம்

  நாம் மூன்றாவது மொழியாக அவர்களின் மொழியை கற்க வேண்டுமாம்

  ReplyDelete
 150. //தமிழ் நாட்டுக்கு வந்தா அவன் தமிழ் கத்துக்கணும் நான் அங்க(எங்க) போனா அவன் மொழிய கத்துக்குவேன்... அவளவுதான் //

  வழிமொழிகிறேன்

  //அவனுக சுகமா இருக்க நான் தேவை இல்லாம இந்திய கத்துக்கணும்ன்னு அவசியம் இல்ல. //

  நச்

  ReplyDelete
 151. //
  'பீர்' சார் ...படம் முடிஞ்சிருச்சா ? இல்லை ஏதும் லூசுத்தனமா எழுதிட்டேனா ? தமிழ் காவலர்களின் பதிலே காணோம்.
  //
  உங்களை மாதிரி ஒரு "ஹிந்தி காவலர்" திடீருன்னு அதிரடியா வருவாருன்னு தெரியாம, பீர் சார் கம்ப்யூட்டரை ஆப் பண்ணீட்டுத் தூங்கப் போயிட்டார்.. அதான் சொன்ன பதில்கள் எல்லாம் ரிலீஸ் ஆகாம இருக்கு.

  ReplyDelete
 152. //
  'பீர்' சார் ...படம் முடிஞ்சிருச்சா ? இல்லை ஏதும் லூசுத்தனமா எழுதிட்டேனா ? தமிழ் காவலர்களின் பதிலே காணோம்.
  //

  கேட்ட கேள்விகளை சாய்ஸில் விட்டுக்கொண்டிருக்கும்போது.. திருப்பி திருப்பி வந்து வெளக்கம் சொல்லிகிட்டு இருக்க முடியாது.. அதான்..

  இங்க யாரும் தமிழை காவல் காக்க தேவையில்லை.. அதென்ன ஆயா சுட்ட வடயா.. எ.கொ.ச. !!! :-)))

  ReplyDelete
 153. [பி]-[த்]-[த]-[ன்],

  மலையாளமும், கன்னடமும் ஒரு மாநிலத்தில் மட்டுமே பேசப்படும் மொழிகள். இருந்துவிட்டு போகட்டும்...

  அதே பதில் தான், என்னைப்பொருத்த வரை, இவைகளும் தகவல் தொடர்பிற்கான மொழி மற்றுமே. இதில் நான் அரசியலோ, இனமோ பார்க்கவில்லை. எத்தனை மொழிகள் பள்ளிகளில் விருப்ப பாடமாக வைக்கப்பட்டாலும் (அதை நீங்கள் ஏற்றுக்கொண்டால்) படிக்க நான் தயார். இதனால் நான் என் தாய் தமிழை மறந்துவிட மாட்டேன். மற்ற மொழி கற்பதால் தன் நிலை மறந்து தாய் மொழியை மறந்துவிடுவோம் என்ற பயப்படுவோர் அதை எதிர்க்கின்றனர்.

  ReplyDelete
 154. வாக்குவாதம் பண்றேன் பேர் வலின்னு, ஏன் சார் சொன்னதேயே சொல்றீங்க ...மலையாளம், கன்னடம் படிக்க சொல்லுங்கன்னு ..அதான் சொன்னேனே சில சமயம் தேச ஒருங்கினைபுக்காக நாம ஒரு மொழி படிக்கணும், அது 40% தெரிந்த மொழியா இருக்கட்டுமே...
  இப்ப காங்கிரஸ் ஒரு பேச்சுக்கு கன்னடம் மொழி கட்டாய படுத்தினா, அது ஆட்சியில் இருக்க முடியும்னு நினைகிறீங்களா ? ஆனா ஹிந்திய படிக்க சொல்லிடு ஆட்சியில் இருக்க முடியும் , அதான் ஜனநாயகம் சம்பந்த பட்ட முடிவு அப்படின்னு சொன்னனேன்.

  //60 வருட இந்திய முன்னேரததை "ஹிந்தி அறியாமை " எவ்ளவு பாதித்தது ?//
  இந்திய முன்னேரததை பத்தி இவ்ளோ கவலையா ? ஹிந்தி தெரியாத வட மாநிலத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் ரொம்பவே பாதிகபடிருக்கு..சார் கேள்வி கேட்கும் பொது கொஞ்சம் , தேசிய ஒருங்கிணைப்பு , சாமானிய மக்கள், இவர்களை பத்தி யோசிச்சுட்டு கேளுங்க ...சொல்றேன்

  இப்ப தொலைகாட்சியில் ஒரு படம் பாத்தேன் நல்ல வசனம். .சில பேர்
  "நான் செத்தாலும் 'தண்ணி தானு' தமிழ்ல கேட்டுட்டு தான் சாவேன்"
  ..அப்படின்னு சொல்லிட்டு வட நாட்ட விட்டுட்டு வந்தாங்களாம்

  ReplyDelete
 155. //ஜெகதீசன் said...
  ... உங்களை மாதிரி ஒரு "ஹிந்தி காவலர்" திடீருன்னு அதிரடியா வருவாருன்னு தெரியாம, பீர் சார் கம்ப்யூட்டரை ஆப் பண்ணீட்டுத் தூங்கப் போயிட்டார்.. அதான் சொன்ன பதில்கள் எல்லாம் ரிலீஸ் ஆகாம இருக்கு.//

  ஜெகதீசன்........... ????????? :)

  ReplyDelete
 156. // யாத்ரீகன் said...
  ... இங்க யாரும் தமிழை காவல் காக்க தேவையில்லை.. அதென்ன ஆயா சுட்ட வடயா.. எ.கொ.ச. !!! :-)))//

  எந்த ஆயாவாலும் சுட முடியாதது நம் தமிழ், இதற்கு யாரும் காவல் நிற்க தேவை இல்லை என்பதே என் கருத்தும்.

  ReplyDelete
 157. //என்னால் ஒரிரு மாதங்களில் அதை கற்றுக்கொள்ள முடியாமல் போகவில்லை//

  யாத்ரிகன் நீங்க கேட்ட கேள்விக்கு நன் பதில் எழுதிரிகேன் படிங்க ..ஏன் பீர் சார் எழுதின தான் ஒதுக்குவீங்களா ...ஒரிரு மாதங்களில் சில கம்பென்யில் தூகிருவாங்க ..

  ReplyDelete
 158. //1. இங்கிலீஷ் திணிப்பில் - நம்ப எல்லோரும் இங்கிலீஷ் படிச்சோமா ?
  //

  இல்லை

  ஆங்கிலேயர் காலத்தில் இங்கிலீசு படித்தால் நல்ல வேலை கிடைத்ததால் கற்றுக்கொண்டோம்

  //2.இங்கிலீஷ் அறிவு கிட்டதட்ட எல்லா அரசு வேலையிலயும் கட்டாயம் - இதை நாம் எப்படி ஏற்றுகொண்டோம் ? //

  ஆங்கிலேயர் காலத்தில் ஏற்றுக்கொண்டோம்

  //3 கம்ப்யூட்டர் பாடம் .. கட்டாயம் வேண்டுமா ? திணிப்பா ? விருப்பமா ? //
  விருப்பம்

  //இங்கிலீஷ் - கம்ப்யூட்டர் இதை விட ஹிந்தி ரொம்ப முக்கியமா ? //
  இல்லை

  //60 வருட இந்திய முன்னேரததை "ஹிந்தி அறியாமை " எவ்ளவு பாதித்தது ? //
  விடை இங்கு உள்ளது நாசமாய் போன தமிழகம்

  ReplyDelete
 159. //
  இங்க யாரும் தமிழை காவல் காக்க தேவையில்லை.. அதென்ன ஆயா சுட்ட வடயா.. எ.கொ.ச. !!! :-)))
  //

  சூப்பர்

  ReplyDelete
 160. //கேட்ட கேள்விகளை சாய்ஸில் விட்டுக்கொண்டிருக்கும்போது.. திருப்பி திருப்பி வந்து வெளக்கம் சொல்லிகிட்டு இருக்க முடியாது.. அதான்.. //

  அதான் அதேதான்

  ReplyDelete
 161. //மற்ற மொழி கற்பதால் தன் நிலை மறந்து தாய் மொழியை மறந்துவிடுவோம் என்ற பயப்படுவோர் அதை எதிர்க்கின்றனர்.
  //

  பயம் இல்லை நண்பரே.. நிதர்சணம்

  பஞ்சாபிக்கும், மராத்திக்கும் என்ன ஆச்சு

  ReplyDelete
 162. //அதான் சொன்னேனே சில சமயம் தேச ஒருங்கினைபுக்காக நாம ஒரு மொழி படிக்கணும், அது 40% தெரிந்த மொழியா இருக்கட்டுமே...//

  ஏன் 100 % க்கும் தெரிந்த ஆங்கிலமாக இருக்கட்டுமே

  ReplyDelete
 163. //புருனோ Bruno said...
  ... அவர்கள் சொந்த விருப்பத்தின் பேரில் தமிழ் கற்றுக்கொள்வது போல் இங்கிருப்பவர்களும் இந்தி பிரசார சபாவில் சேர்ந்து இந்தி கற்கலாமே//

  சார், மறுபடியும் பிரச்சார சபாவ சொல்லாதீங்க... எத்தன ஊர்லங்க அந்த சபா இருக்கு? ஒரு ரூபாய்க்கு அரிசி வாங்கி சோறாக்கும் என் மக்களுக்கு அதுக்கெல்லாம் வசதி இல்லங்க. மெட்ரிகுலேஷ்ன்ல ஒரு பாடமா இருக்கிற மாதிரி அரசாங்க பள்ளிகளிலும் வைத்தால் என்ன? மத்த மார்க் குறைஞ்சிடும் என்பதெல்லாம் சும்மாங்க. மெட்ரிகுலேஷன்ல படிக்கிறவங்களுக்கு ஹிந்தி னால ஏதாவது பிரச்சனை இருக்கா?

  மறுபடியும் சொல்றேன், இதை ஒரு மொழி என்பதாக மட்டும் பாருங்கள். அதிகப்படியான ஒரு திறமை என்பதாக மட்டும் பாருங்கள்.

  ReplyDelete
 164. //எத்தன ஊர்லங்க அந்த சபா இருக்கு?//

  தெரியாது

  ஆனால் எந்த ஊரிலும் சபாவிற்கு தடை கிடையாது என்பது மட்டும் தெரியும்

  அதே நேரம் வடமாநிலங்களில் தமிழ் பிரச்சார சபா என்று ஒன்றை மத்திய அரசு ஆரம்பிக்குமா என்று சிந்தித்து பாருங்கள்

  ReplyDelete
 165. //புருனோ Bruno said..
  ... ஏன் 100 % க்கும் தெரிந்த ஆங்கிலமாக இருக்கட்டுமே//

  ஆங்கிலம் தான் இருக்கே, அவர்களுக்கு இல்லைஎன்றால் நாம் ஏன் வருத்தப்படவேண்டும்? நாம் அடுத்த நிலைக்கு செல்வோம்.

  ReplyDelete
 166. //மறுபடியும் சொல்றேன், இதை ஒரு மொழி என்பதாக மட்டும் பாருங்கள். அதிகப்படியான ஒரு திறமை என்பதாக மட்டும் பாருங்கள். //

  உண்மைதானே. உத்திரபிரதேசத்தில் தமிழை பள்ளிகளில் கட்டாயமாக கற்றுக்கொடுக்க சொல்லுங்கள் பார்ப்போம்

  ReplyDelete
 167. //புருனோ Bruno said...
  அதே நேரம் வடமாநிலங்களில் தமிழ் பிரச்சார சபா என்று ஒன்றை மத்திய அரசு ஆரம்பிக்குமா என்று சிந்தித்து பாருங்கள்//

  ஏன் ஆரம்பிக்க வேண்டும்?

  ReplyDelete
 168. //ஏன் ஆரம்பிக்க வேண்டும்? //

  தமிழர்கள் ஏன் இந்தி கற்க வேண்டும் என்று நீங்கள் கூறிய அதே காரணங்களுக்காக

  ReplyDelete
 169. ////////
  பீர் | Peer said...

  //புருனோ Bruno said...
  அதே நேரம் வடமாநிலங்களில் தமிழ் பிரச்சார சபா என்று ஒன்றை மத்திய அரசு ஆரம்பிக்குமா என்று சிந்தித்து பாருங்கள்//

  ஏன் ஆரம்பிக்க வேண்டும்?
  ///////////

  இதே போல,
  ///
  மெட்ரிகுலேஷ்ன்ல ஒரு பாடமா இருக்கிற மாதிரி அரசாங்க பள்ளிகளிலும் வைத்தால் என்ன
  ///

  இதற்கும் "ஏன் வைக்கவேண்டும்?" என்று கேட்கலாம்...

  ReplyDelete
 170. //அது 40% தெரிந்த மொழியா இருக்கட்டுமே...//

  //ஏன் 100 % க்கும் தெரிந்த ஆங்கிலமாக இருக்கட்டுமே//

  அமைச்சர் அறிக்கை படிங்க.
  மருத்துவ துறையில் வேணா 100% ஆங்கிலம் பேசலாம் ...மொத்தமா என்னுடைய கணிப்பில் ஒரு 15-20% ஆங்கிலம் பேசுவாங்க நம்ம நாட்டில்

  ReplyDelete
 171. இப்போது இருக்கும் கேள்வி பள்ளிகளில் இந்தி பாடம் வைக்க முடியுமா முடியாதா என்பதல்ல....
  "அவசியமா அவசியம் இல்லையா" என்பதே

  ReplyDelete
 172. //மொத்தமா என்னுடைய கணிப்பில் ஒரு 15-20% ஆங்கிலம் பேசுவாங்க நம்ம நாட்டில் //

  அவர்களும் இந்தி தவிர இரண்டாவது மொழியாக கற்று ஆங்கிலம் பேசட்டுமே

  நாம் ஏன் தமிழ், ஆங்கிலம் தவிர மூன்றாவது மொழி கற்க வேண்டும் (அவர்கள் இரண்டாவது மொழி கற்க மாட்டார்களாம்)

  ReplyDelete
 173. //தமிழர்கள் ஏன் இந்தி கற்க வேண்டும் என்று நீங்கள் கூறிய அதே காரணங்களுக்காக //

  ஹிந்தி தெரியாம நீங்க சிரமப்பட்டதுண்டா?

  ஹிந்தி தெரிந்ததால் நீங்கள் பலன் அடைந்ததுண்டா?

  நான் இரண்டுமே அனுபவித்தவன். அதனால்தான், என் மக்களுக்கும் ஹிந்தியின் பலன் போய் சேர வேண்டும் என்ற காரணத்தினால்தான் கேட்கிறேன். தமிழன் திறமை வளர்த்துக்கொள்வதை தடுக்காதீர்கள். ஒவ்வொறு திறமைக்கும் ஒரு படி மேலே போவோம்.

  மறுபடியும் அவனை கற்கச்சொல் நானும் கற்கிறேன் என்றே சொல்லாதீர்கள். ஹிந்தி கற்பதால் விழையும் சாதக பாதகங்களை அலசுங்கள்,

  நண்பர் சாம் சில சாதங்களை சொல்லியுள்ளார் அதற்கு மறுப்பு சொல்லுங்கள், அல்லது வேறு பாதகங்களை சொல்லுங்கள்...

  ReplyDelete
 174. //இப்போது இருக்கும் கேள்வி பள்ளிகளில் இந்தி பாடம் வைக்க முடியுமா முடியாதா என்பதல்ல....
  "அவசியமா அவசியம் இல்லையா" என்பதே
  //

  இப்போது இருக்கும் கேள்வி உத்திரபிரதேச பள்ளிகளில் தமிழை பாடமாக வைக்க முடியுமா முடியாதா என்பதுதான்

  :) :) :)

  ReplyDelete
 175. கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்....

  இதுக்கு மேல சொல்றதுக்கு எதுவுமே இல்லை...

  ReplyDelete
 176. //அவர்களும் இந்தி தவிர இரண்டாவது மொழியாக கற்று ஆங்கிலம் பேசட்டுமே//

  மறுபடியும் சொல்றேன் ..அமைச்சர் அறிக்கை படிங்க

  ReplyDelete
 177. ஷார்ட் கமர்ஸியல் ப்ரேக்...

  ReplyDelete
 178. அவர்களையும் ஆங்கிலம் படிக்க தான் சொல்றார்

  ReplyDelete
 179. //
  Sammy said...

  அவர்களையும் ஆங்கிலம் படிக்க தான் சொல்றார்
  //
  அவங்களும் தான் ஆங்கிலம் படிக்கப் போறாங்களே...
  அப்புறம் எதுக்கு நம்ம இந்தி வேற படிக்கனும்??????

  இங்க திரும்பவும் அந்த சின்ன நாய்க்கு சின்னக் கதவு, பெரிய நாய்க்கு பெரிய கதவு கதையை சேர்த்துக்கொள்ளவும்.  இந்தி படிச்சாத் தான் "தேச ஒருமைப்பாடு வரும்" அப்படின்னு நீங்க சொன்னா..... ஒன்னும் சொல்றதுக்கில்லை.....

  ReplyDelete
 180. //அவர்களையும் ஆங்கிலம் படிக்க தான் சொல்றார் //

  அதை செய்து முடித்து விட்டபின்னர் உங்களுக்கு ஏன் இந்தி தேவை என்று விளக்குங்கள்

  ReplyDelete
 181. //
  நான் இரண்டுமே அனுபவித்தவன். அதனால்தான், என் மக்களுக்கும் ஹிந்தியின் பலன் போய் சேர வேண்டும் என்ற காரணத்தினால்தான் கேட்கிறேன். தமிழன் திறமை வளர்த்துக்கொள்வதை தடுக்காதீர்கள். ஒவ்வொறு திறமைக்கும் ஒரு படி மேலே போவோம்.
  //
  "என்" மக்களுக்கு ஏற்கனவே பள்ளிகளில் அதிக பாடச்சுமை இருக்கிறது... "என் தமிழனுக்கு" மேலும் அதிக பாடச் சுமை தேவையில்லை.. இது "என் தமிழனின்" திறமையைப் பாதிக்கும்...

  "என்" அரசு இதற்காக பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்களை நியமிக்கவேண்டும். இதனால் "என்" அரசுக்கு வெட்டியாக நிறையப் பணம் செலவாகும்.

  ReplyDelete
 182. //தமிழை ஆதரிக்கிற பலபேர் பேசும் டமிலை விட, அவர்கள் நன்றாகவே தமிழ் பேசுவதைப் பார்த்ததில்லையா?//

  இது தான் சேம் சைட் கோல் :)

  அவர்களெல்லாம் அவர்கள் மாநிலத்தில் கட்டாயமாக தமிழ் படித்தவர்களா ? இல்லை அவசியபட்ட போது கற்றுக்கொண்டவர்களா?

  ஐயா ! அவசியப்படுறவங்க கத்துக்குவோம் .எதுக்கு எல்லோரும் கண்டிப்பா படிசாகணும் -ன்னு சொல்லுறீங்க ? அதானே இப்போ பிரச்சனை.

  ReplyDelete
 183. //
  பீர் | Peer said...

  ஷார்ட் கமர்ஸியல் ப்ரேக்...
  //
  எங்களை வச்சு காமெடி எதும் பண்ணலையே?

  ReplyDelete
 184. //

  இப்போது இருக்கும் கேள்வி உத்திரபிரதேச பள்ளிகளில் தமிழை பாடமாக வைக்க முடியுமா முடியாதா என்பதுதான்

  :) :) :)
  //
  டாக்டர் சார்,,,, பீர் சீரியஸாப் பின்னூட்டம் போட்டாத் தான் பதில் சொல்வார்... இப்படி காமெடி பண்றதெல்லாம் அவருக்குப் பிடிக்காது....
  :))))

  ReplyDelete
 185. பீர்,

  அனைவருக்கும் அரபியைக் கூட கட்டாயப் பாடமாக்கலாம், ஏனெனில் இஸ்லாம் உலகில் இரண்டாவது பெரிய மதம், இஸ்லாமியர்களுக்கு ஓரளவுக்கு அரபி தெரியும், இஸ்லாமியர்கள் அல்லாதவர்களாக இருந்து அவர்களுக்கு அரபி தெரியவில்லை என்றால் அரபி மட்டுமே தெரிந்த இஸ்லாமியர்களிடம் மற்றவர்கள் உரையாட முடியாமல் சிரமப் படுவார்கள்.

  ReplyDelete
 186. அன்புள்ள பீர்!

  //மெட்ரிகுலேஷ்ன்ல ஒரு பாடமா இருக்கிற மாதிரி அரசாங்க பள்ளிகளிலும் வைத்தால் என்ன? மத்த மார்க் குறைஞ்சிடும் என்பதெல்லாம் சும்மாங்க. மெட்ரிகுலேஷன்ல படிக்கிறவங்களுக்கு ஹிந்தி னால ஏதாவது பிரச்சனை இருக்கா?

  மறுபடியும் சொல்றேன், இதை ஒரு மொழி என்பதாக மட்டும் பாருங்கள். அதிகப்படியான ஒரு திறமை என்பதாக மட்டும் பாருங்கள். //

  அரசாங்க பள்ளிகளில் வைத்தால் கற்று கொடுக்க ஆசிரியர்களுக்கு எங்கே போவது? அவர்களுக்கான சம்பளத்தை யார் கொடுப்பது?

  யார் வீட்டு பணத்தில் எந்த மொழியை வாழ வைக்க விரும்புகிறீர்கள்?

  ஹிந்தி படிப்பதனால் அதிக பலனா அல்லது அதே நேரத்தில் கம்ப்யூட்டர் போன்ற தொழிற் கல்விகள் படிப்பதனால் அதிக பலனா?

  ஊடகங்களும் பேரினவாத கட்சிகளும் பரப்பி வரும் தவறான பிரச்சார வலையில் நீங்களும் வீழ வேண்டாம்.

  ஹிந்தி மொழியின் ஆதிக்கத்தில் சில மாநிலங்கள் வீழ்ந்ததன் பலன் என்ன தெரியுமா?

  சொந்த மாநிலத்தில் உள்ள கீழ்மட்ட மத்திய அரசு பணிகளில் சேருவதற்கு கூட மகாராஷ்டிரா, கர்நாடக மாநில மக்களால் இயல வில்லை.

  எதிர்த்துக் கேட்டால், பிராந்திய வாதம், மொழி வெறி என்றெல்லாம் பேசுகிறார்கள்.

  அடுத்தவர் வீட்டில் ஆதிக்கம் செய்ய விரும்புவது இனவாதமா அல்லது தட்டிக் கேட்பது இனவாதமா?

  மீண்டும் சொல்கிறேன்.

  மொழி சுதந்திரம் என்பது பெரிய விஷயம். இழந்தவர்களுக்கு மட்டும்தான் அதன் அருமை தெரியும். பல உயிர்கள் பலி கொடுத்து, தமிழருக்கு மட்டுமல்ல முழு தென்னிந்தியாவிற்கும் வாங்கிக் கொடுத்த இந்த மொழி சுதந்திரத்தை மறுப்பதன் மூலம் வரும் சந்ததிக்கும் துரோகம் செய்து விடுபவர்கள் ஆகி விடுவோம்.

  இன்று தென்னிந்தியா மற்றும் மேற்கு இந்தியா பெற்ற வளர்ச்சிக்கு உண்மையான காரணம் மொழி விஷயத்தில் நாம் தாராளமாக இருப்பதுதான். வட இந்தியா வாடிய இந்தியாவாகவே இருப்பதற்கு முக்கிய காரணம் அவர்களின் ஒரு மொழிக் கொள்கைதான்.

  உண்மையில் இந்தியா வளர வேண்டுமென்றால் வட இந்தியாவும் முன்னேற வேண்டும். அதற்கு அவர்கள் ஹிந்தி வெறியை கை விட்டு மற்ற மொழிகளை குறிப்பாக ஆங்கிலத்தையும் பின்னர் தமிழ் கன்னடம் போன்ற சமூக பொருளாதார வளர்ச்சி பெற்ற வேலை வாய்ப்பு மிக்க மொழிகளையும் பயில வேண்டும்.

  அதை விடுத்து நம்மை ஹிந்தி படிக்க வைத்தால் முழு இந்தியாவே பின்னேறிய நாடாக மாறி விடும்.

  மீண்டும் சொல்கிறேன்

  சுதந்திரத்திற்கு பிந்தைய இந்தியாவின் சமூக பொருளாதார வரலாற்றை ஒரு முறை நன்கு படித்து விட்டு வாதங்களை முன் வையுங்கள்.

  இதெல்லாம் சொல்வதனால் நான் தமிழ் காவலனோ அல்லது தமிழ் பித்தனோ அல்ல.

  பேரினவாதத்தால் சிதறுண்ட நாடுகளையும் பின்தங்கிப் போன பிராந்தியங்களையும் ஓரளவுக்கேனும் புரிந்து கொள்ள முயற்சி செய்யும் ஒரு யதார்த்தவாதிதான்.

  இந்த விஷயத்தில் நான் முன்வைக்கும் கடைசி வாதம் இதுதான்.

  இதற்கு மேல் உங்கள் இஷ்டம்.

  நன்றி.

  ReplyDelete
 187. தாய்மொழி என்பது அவரவர் கலாச்சாரத்தின் அடையாளம்.

  தெரிந்தோ தெரியாமலோ ஆங்கிலம் உலகம் முழுதும் பேசப்படும் அல்லது புரிந்துகொள்ளப்படும் மொழியாக இருப்பதனால் அது அவசியமாகவும் ஆகிறது..

  ஹிந்தியை பொறுத்தமட்டில் அது தமிழை போல இந்தியாவில் பேசப்படும் மற்றும் ஒரு மொழி..அவ்வளவுதான்..அதனை எதற்கு தமிழ் படிப்பவர்கள் தெரிந்து கொள்ளவேண்டும்..
  நீங்கள் கூறுவதில் ஹிந்தி மட்டும்தான் இந்தியாவின் பிரதான மொழி என்பதாக இருக்கிறது.. இங்கு பேசப்படும் அனைத்து மொழிகளும் ஒன்றுக்கொன்று குறைந்ததில்லை நண்பரே..

  வேண்டுமென்றால் இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளையும் அனைவரும் கற்றுக்கொள்ளவேண்டும் என்று கூறட்டும்..நான் ஏற்று கொள்கிறேன்..

  ஹிந்தி பேசுபவர்களிடம் சென்று தமிழ் அல்லது கன்னடம் , மலையாளம் தெரிந்துகொண்டால்தான் தென் இந்தியாவில் பிழைக்க முடியும் என்று சொல்லும் தைரியம் ஏன் இவர்களுக்கு வரவில்லை?

  ஹிந்தி தெரியாததால் இழந்துவிட்டோம் என்பது மாயை.. இங்கு இருக்கும் ஹிந்தி பேசுபவர்களிடம் வலுக்கட்டாயமாக தமிழில் பேசினால் இதே போன்ற ஒரு மாயையை நாம் உருவாக்க முடியும்.ஹிந்தி மட்டுமே தெரிந்த அவர்கள் இங்கு வந்து பிழைப்பு நடத்த வில்லையா..யாருக்கு தேவையோ அவர்கள் கற்றுக்கொள்ளட்டும்.

  ReplyDelete
 188. //இன்று தென்னிந்தியா மற்றும் மேற்கு இந்தியா பெற்ற வளர்ச்சிக்கு உண்மையான காரணம் மொழி விஷயத்தில் நாம் தாராளமாக இருப்பதுதான்.//

  இந்த தாராளமயத்தை சற்று விளக்குங்கள்.

  ---

  //வட இந்தியா வாடிய இந்தியாவாகவே இருப்பதற்கு முக்கிய காரணம் அவர்களின் ஒரு மொழிக் கொள்கைதான். //

  பல மொழி கொள்கையினால் நிச்சயம் பலன் உண்டு என்று தானே சொல்கிறீர்கள்?

  ReplyDelete
 189. //கோவி.கண்ணன் said...

  பீர்,

  அனைவருக்கும் அரபியைக் கூட கட்டாயப் பாடமாக்கலாம், //

  சென்னைத்தமிழுக்கும், மலையாளத்திற்கும், கன்னடத்திற்கும் சொன்ன அதே பதில் இதற்கும் பொருந்தும்.

  >என்னைப்பொருத்த வரை, இவைகளும் தகவல் தொடர்பிற்கான மொழி மற்றுமே. இதில் நான் அரசியலோ, இனமோ பார்க்கவில்லை. எத்தனை மொழிகள் பள்ளிகளில் விருப்ப பாடமாக வைக்கப்பட்டாலும் (அதை நீங்கள் ஏற்றுக்கொண்டால்) படிக்க நான் தயார். இதனால் நான் என் தாய் தமிழை மறந்துவிட மாட்டேன். மற்ற மொழி கற்பதால் தன் நிலை மறந்து தாய் மொழியை மறந்துவிடுவோம் என்ற பயப்படுவோர் மட்டுமே அதை எதிர்க்கின்றனர்.<

  ReplyDelete
 190. @Sammy @Peer

  >It's a colossal waste of time in the most productive years of children to teach them a third language which is nothing but a new set of signifiers standing for the same old objects and ideas. It is a crime against children to teach them three different ways of naming objects and ideas when one way suffices, and when that time is better spent in delving deeper and broader into the beauty and secrets of the world around the children.<

  http://karnatique.blogspot.com/2009/08/hindi-crap-again.html

  ReplyDelete
 191. ஹாலோ பீர் சார்! வரிந்து கட்டு கொண்டு களத்தில் இறங்க ஒரு பெரிய படையே உம் பின்னால் நிற்கிறதே!:-)

  ReplyDelete
 192. வரிந்து கட்டிக்கொண்டு களத்தில் நற்பது என் நண்பர்கள் படை. கோவியார், மருத்துவர் மற்றும் நண்பர்களின் பல கருத்துக்களோடு நானும் ஒத்துப்போகிறேன். தன் கருத்தையே அனைவரும் கொண்டிருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதும் நியாயமில்லையே. அவர்கள் கருத்தை எனக்கோ, என் கருத்தை அவர்களுக்கோ தெளிவாக விளக்கினால், நானோ அவர்களோ புரிந்துகொள்ள முடியும். தன் கருத்தில் இருந்து மாறவோ அல்லது எதிர் கருத்தாளியின் நிலைபாட்டை விளங்கி கொள்ளவோ முடியும்.

  இந்த விசயத்தில், தமிழர்கள் ஹிந்தி கற்பதால் உள்ள சாதக பாதகங்களை, தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை ஒதுக்கிவிட்டு விவாதிப்பது மட்டுமே நன்மை பயக்கும். மாறாக அவனை தமிழ் கற்கச்சொல், நான் ஹிந்தி கற்கிறேன் என்றும் மலையாளம், கன்னடம், அரபி, சைனீஸ், வியட்நாம் மொழிகளை பாடதிட்டத்தில் சேர்க்க சொல்லவேண்டியது தானே.. என்பது போன்ற விதண்டாவாதங்கள் தீர்வை தராது என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

  இணைய விவாதங்களில் பெரிதாக பலனை எதிர்பார்த்துவிட முடியாது.

  ReplyDelete
 193. அன்புள்ள பீர்!

  //இந்த தாராளமயத்தை சற்று விளக்குங்கள்.//

  இதைப் பற்றி விளக்கமாக நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமானால், நான் ஏற்கனவே சொன்ன படி சுதந்திரத்திற்கு பிந்தைய இந்தியாவின் சரித்திரத்தை இமேஜினிங் இந்தியா போன்ற புத்தகங்களின் உதவியுடன் படியுங்கள்.

  இங்கே ஓரளவுக்கு சுருக்கமாக சொல்ல முயற்சிக்கிறேன்.

  ஆரம்ப கால சுதந்திர இந்தியாவில் மொழிக் கொள்கை பற்றிய விவாதங்கள் ஏராளமாக இருந்தன. இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கு ஒருமொழி கொள்கைதான் தேவை என்று பேரினவாதிகளும், தாய்மொழியோடு ஆங்கிலம் மட்டுமே போதும் மொழி/மத சிறுபான்மையினர் மற்றும் தலித்துகளின் தலைவர்கள் கோரினார்கள்.

  முதலில் பலவந்தமாக மொழி திணிப்பை பலவந்தமாக கொண்டுவந்த மத்திய அரசு எதிர்ப்பு வலுவாகவும், தமிழகத்தில் துவங்கிய இந்த எதிர்ப்பு மற்ற மாநிலங்களுக்கும் பரவியதும் தனது மொழிக் கொள்கையை மாற்றிக் கொண்டது.

  அதே சமயம் வடக்கே மட்டும் ஒரு மொழிக் கொள்கை முழுவீச்சில் அமல் படுத்தப் பட்டு அங்கிருந்த சிறிய மொழிகள் பலவும் வழக்கொழிந்து போயின.

  ஆங்கிலத்தில் தென்னிந்தியா பெற்ற முன்னேற்றம், உலகமயமாக்கலுக்கு பிறகு குறிப்பாக தகவல் தொழிற்நுட்ப துறை அதிக முக்கியத்துவம் பெற்ற பிறகு, தென்னிந்தியா வட இந்தியாவை விட பல மடங்கு அதிகம் பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் வளர உதவியது. ஒரு மொழி கொள்கையை வலியுறுத்தாத மேற்கு இந்தியாவோ வணிக துறையில் பெருமளவு முன்னேறியுள்ளது.

  அரசியல்வாதிகளின் மொழி வெறியினால் பாதிக்கப் பட்ட வட இந்திய மக்கள், ஹிந்தி மட்டுமே அதிகம் அறிந்திருந்தனர். அரசு வேலை வாய்ப்புக்கு ஹிந்தி அதிகம் உதவினாலும், தனியார் மயமாக்கலுக்கு பிறகு, அரசு துறையில் விட தனியார் துறையிலேயே வேலை வாய்ப்புக்கள் அதிகமாகி விட்டன. . இதனால்தான் வெளிநாடுகளில், இந்தியாவிலேயே அதிக சம்பளம் பெறக் கூடிய நவீன துறைகளில் வட இந்தியர்களின் எண்ணிக்கை சதவீதம் தென்னிந்தியர்களை விட குறைவாக உள்ளது.

  இப்போது ஆங்கில கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்து கொண்ட பல வட இந்திய குப்பன்களும் சுப்பன்களும் தங்கள் பிள்ளைகளை ஆங்கில வழி கல்விமுறையிலேயே படிக்க வைக்க விரும்புகிறார்கள்.

  ஹிந்தி வழி கல்விமுறையை வலியுறுத்திய முலாயம் போன்ற அரசியல்வாதிகள் சமீபத்தில் தோல்வியை தழுவினார்கள். வட இந்தியாவிலேயே இது போன்ற ஒரு மனமாற்றம் நிகழும் போது, மீண்டும் இந்தியா முழுக்க ஹிந்தியை திணிக்க விரும்புவது தேவையற்றது.

  //பல மொழி கொள்கையினால் நிச்சயம் பலன் உண்டு என்று தானே சொல்கிறீர்கள்? //

  சிங்கப்பூர் போன்ற நாடுகள் அனைத்து மொழிகளையும் அனைவரும் கற்றுக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தின. இலங்கை போன்ற நாடுகள் பெரும்பான்மையினரின் மொழியை சிறுபான்மையினர் கற்றுக் கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தின.

  விளைவு என்னவாயிற்று என்பதை சரித்திரம் சொல்கிறது.

  தாய்மொழியோடு ஆங்கிலம் போன்ற வாழ்வாதாரத்திற்கு தேவையான மொழியை கற்றுக் கொடுப்பதில்தான் மக்கள் நல அரசுகள் கவனம் செலுத்த வேண்டுமே தவிர, மற்ற மொழிகளை கற்றுக் கொள்வது அவரவர் சொந்த விருப்பமாகவே இருக்க வேண்டும்.

  //இணைய விவாதங்களில் பெரிதாக பலனை எதிர்பார்த்துவிட முடியாது. //

  உண்மைதான். இணையங்களில் விவாதிக்கும் பலருக்கும் இது போன்ற நுணுக்கமான விஷயங்களில் அதிக ஆளுமை இருப்பதில்லை. சரித்திரம் மற்றும் சமூகவியலை அதிகம் அறிந்ததில்லை.

  இருந்தாலும் ஏதோ முதலில் சொல்லி விட்டோமே என்ற ஒரே காரணத்திற்காக தனது விதண்டாவாதத்தில் விடாப்பிடியாக இருக்கிறார்கள்.

  இந்த விஷயம் நன்கு புரிந்தாலும், சரித்திரம் சமூகவியல் ஓரளவுக்கு அறிந்தவர்களும் இங்கு தொடர்ந்து விவாதம் செய்வது முன்னவர்கள் மீது இருக்கும் தனிப்பட்ட அன்பின் காரணமாகவும் நாம் அறிந்ததை நம் நண்பர்களும் அறிந்து கொள்ளட்டுமே என்ற ஆதங்கத்தினாலும்தான்

  நான் கூட உங்கள் மீதான அன்பின் காரணமாக மட்டுமே இது வரை இங்கு நான் 'அறிந்து கொண்ட' சில சரித்திர உண்மைகளை இங்கு முன்வைத்தேன்.

  ஏற்றுக்கொள்வதும் மறுப்பதும் உங்கள் இஷ்டம்.

  ReplyDelete
 194. >>தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை ஒதுக்கிவிட்டு விவாதிப்பது மட்டுமே நன்மை பயக்கும்<<

  அதைத்தான் மேற்கோள் காட்டிய ஆங்கில மறுமொழி செய்கிறதே.. மேலும்,ஆங்கிலத்தில் ட்வீட்டிய என்னுடைய சில கருத்துக்கள்

  was talking to my Punjabi roomie born & brought up in Noida.He/cousins of his gen doesn't knows to read or write Punjabi (Gurmukhi script)and they only to know speak hindi & punjabi.His grandma speaks only Punjabi,mom speaks/writes/reads Pubjabi & Hindi,Son speaks hindi fluent but doesn't knows to read/write mothertongue, he's sure that his son & gen might not know punjabi at all.He feel's this is hapening in most & he also feels d same towards 1 national Lang.Another bihari friend,doesn't knows to read/write/speak fluently in her lang but spks Hindi.

  the prev Punjabi/Bihari r not just 1 case examples,but a generation of examples.I talked 2 them without mentioning 1 Nat Lang issue they felt that another 50 yrs,for sure their mothertongue will be spoken very little in their villages only,& indeed they felt bad abt it.

  ReplyDelete
 195. இதைத்தான் நானும் எதிர்பார்க்கிறேன்.

  நான் முன்பே சொன்னேன், உங்கள் விவாத தன்மை வேறு கொணத்தில் உள்ளது. இத்தன்மையே எதிர் கருத்தாளனுக்கு தன் நிலையை விளக்கவல்லது. என்னையும் சற்று வேறு கோணத்தில் சிந்திக்கவைக்கிறது.

  ஒரு கருத்தை சொல்லும் அனைவரிடமும் ஒரே கோணத்தில் விவாதிக்க கூடாது என்பதை அனைவரும் உணர்ந்து கொள்ளவேண்டும். மாற்று கருத்தில் இருக்கும் நேர்மையும் மதிக்கப்பட்டு, இரு கருத்திற்கான தேடலையும் விரிவாக்க வேண்டும்.

  //இங்கு தொடர்ந்து விவாதம் செய்வது முன்னவர்கள் மீது இருக்கும் தனிப்பட்ட அன்பின் காரணமாகவும் நாம் அறிந்ததை நம் நண்பர்களும் அறிந்து கொள்ளட்டுமே என்ற ஆதங்கத்தினாலும்தான்//

  இதுதான் சார் வேணும். கருத்துக்கள் மாறுபட்டாலும் தனிப்பட்ட அன்பு மாறக்கூடாது. மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி!!!

  ReplyDelete
 196. பதிவையும்,
  நீண்...ட பின்னூட்டங்களையும் வாசித்தேன் பீர்.
  உங்களின் பதிவில் இந்தி எதிர்ப்பு குறித்த தகவல்கள் மிக மிக சாதாரணமாக குறிப்பிடப்பட்டிருபதுடன்,இந்தி எதிர்ப்பிற்க்கான பல பேருடைய உயிர்தியாகங்களும் சிறை துன்புறுத்தல்களும் போகிற போக்கில் சொல்லிச்சென்றிருப்பது வருத்தமாக இருக்கிறது.

  பின்னூட்டஙகளில் வீணான வரட்டு பிடிவாதம்தான் தெரிகிறது.
  வாதங்களிலுள்ள உண்மைகளை ஏற்றுக்கொள்ள ஏன் தயங்குகிறீர்களென புரியவில்லை.

  இதைப்போலவே சுதந்திர போராட்டத்தை கூட கிண்டலாக்கி பதிவு போடலாம் போலிருக்கிறது.

  நானும் கூட அன்புடனே உங்களை கடிந்துகொள்கிறேன் பீர்.

  ReplyDelete
 197. Hi

  Don't force aloo paratha at home to be our breakfast. It can be a choice to eat. you may be going to North India one day and to practice their eating habbit we should eat their food daily at home as a part of our meal. (not option, or wish or choice, out of compeltion). Do you agree ? same is the case, if I like Aloo Paratha, I may eat daily in Tamilnadu as my break fast. don't force me to eat that.

  ReplyDelete
 198. யாத்ரீகன் ..
  //was talking to my Punjabi roomie born & brought up in Noida.He/cousins of his gen doesn't knows to read or write Punjabi (Gurmukhi script)and they only to know speak hindi & punjabi//////

  ஏன் சார் ..Punjabi roomie born & brought up in '''Punjab'''...அந்த மாதிரி யாரும் தெரியாத ..நோய்டாவில் வளர்ந்த அவர் , பஞ்சபி எழுத படிக்க தெரியலனா , அது யார் குற்றம் ....இப்ப உங்க குழந்தை இந்தியாவில் பிறந்து, அமரிக்காவில் வளர்ந்து வந்தா, தமிழ் எழுத படிக்க தெரியலனா ..அது தப்பா ..தப்பா இருந்த யார் தப்பு ?
  உங்க தலைமுறையில் மொழி அழிஞ்சு போயிடுச்சுனா. அது வழக்றவன் மேல தான் தப்பு ...அமைச்சர் அறிக்கை படிங்க என்ன என்ன படிக்க சொல்றாருன்னு ...

  // they felt that another 50 yrs,for sure their mothertongue will be spoken very little in their villages only,& //

  அவர்கள் புரியாம சொல்றாங்க ...தாய் மொழி கட்டாயமா படிக்க தான் சொல்றாங்களே..
  நமக்கு தெரிஞ்ச நாலு பேர வச்சிக்கிட்டு, பஞ்சபி ,மராத்தி ...அழிஞ்சு போயிடுச்சு சொல்றது, தமிழ் அழியாம இருக்குன்னு சொல்றது ...சுத்த மடத்தனம். அந்த அந்த கிராமத்துக்கு போய பாருங்க. அதான் சொன்னேன் சாமானிய மக்களை பத்தி யோசிச்சு கேள்வி கேளுங்க.

  ReplyDelete

மனம் திறந்து செதுக்குங்கள், என் எழுத்துக்களை.