கடைசியாக நான் சொந்த செலவில் பார்த்த திரைப்படம் வேட்டையாடு விளையாடு. அதற்குப் பிறகு, ஒரு நண்பன் செலவில் சிவாஜி பார்க்கவைக்கப்பட்டேன். முன்னது சொசெசூ என்றால், இரண்டாவது அசெஆ. இதுவரை தனியாக திரையரங்கு செல்லாத நான், இப்படம் பார்க்க ஒரு நாளுக்கு முன்பே ஒரு இருக்கை முன்பதிவு செய்திருந்தேன். நேற்று திரையரங்கு சென்றிருந்த போது, கவ்ண்டரில் இரண்டு நாளுக்கான டிக்கெட்டும் விற்றுவிட்டதாக பலர் திரும்பி வந்தனர். எனக்கான டிக்கெட்டை மெஷினில் எடுத்துக்கொண்டு, அரங்கினுள் சென்றமர்ந்தேன். 15:30 க்கு ஆரம்பித்த படம் 17:15 க்கு முடிந்தது. இடையில் 10 நிமிட இடைவெளி. கூட்டிக்கழித்து பார்த்தால், பல இடங்களில் வெட்டப்பட்டுள்ளது தெளிவாகியது. ஏற்கனவே வெட்னஸ்டே பார்த்திருந்ததால், வெட்டல் வெளிச்சமாகியது. மாலையில் ஒரு பிறந்த நாள் விருந்தில் கலந்து கொண்டேன். மிக்ஸிங் சரியில்லை என்று பலருக்கும் வருத்தம். 22 மணிவாக்கில் வீடு வந்து இழுத்து போர்த்தி உறங்கிவிட்டேன்.
காசு கொடுத்து பார்த்ததற்காக விமர்சனம் பண்ணியாக வேண்டுமா? அது மட்டுமின்றி எனக்கு சினிமா விமர்சனம் வருவதில்லை. விமர்சனம் செய்ய வேண்டும் என்பதற்காகவே, கண்ணில் ஆலிவ் ஆயில் ஊற்றி திரைப்படம் பார்ப்பதில்லை. பொழுது போனால் சரியே. ஆனாலும், ஒரு முயற்சி செய்து நிறை குறைகளைச் சொல்கிறேன்.
‘கமல் அசத்திவிட்டார்’ என்று சொல்ல, அவர் ஒன்றும் அவ்வளவு சிறப்பாக நடித்துவிடவில்லை. அவர் ஏன் இந்தப் படத்தில் நடித்திருக்க வேண்டும், என்பதே பலரின் கேள்வி, என்னதும். புதனில் நஸ்ருத்தீன் ஷா நடிப்பை பார்த்தவர்களுக்கு இது பிரமாதமாக தெரியாது. அதே போல், நஸ்ருத்தின் ஷா, ஒலக நாயகன் ஆகிவிட முடியாது.
நிறை.
- 1 1/2 மணிநேரம் பொழுது போனது தெரியவில்லை. கொடுத்த காசுக்கு பாதகமில்லை. (போன பொழுது, சற்று கவலையோடு போனது வேறு விஷயம்.)
குறைகள் அல்லது யதார்த்த மீறல்கள்.
- வெற்று பைகளை பொது இடங்களில் வைப்பதாக சுற்றப்பட்ட காட்சியமைப்பு தேவையில்லாதது. அதே போல, பல இடங்களில் சுற்றியிருக்கிறார், காதிலும்.
- மாடியில் ஏறும் போது, இஸ்லாமியர்களின் இறை வழிபாட்டு அழைப்பான ‘பாங்கு’ சொல்லப்படும். அது நேரம் தோராயமாக 8 - 9 மணியிருக்கலாம். அந்நேரத்தில் (காலை 6 லிருந்து உச்சி 12 வரை) ‘பாங்கு’ சொல்லப்படுவதில்லை.
- 2002ல் குஜராத்தில் நடந்த கலவரத்திற்கு பழிதீர்க்கவே 1998ல் கோவையில் குண்டுவைத்ததாக தீவிரவாதிக்கு கொசுவத்தி. (கமலுக்கும் தேசிய வியாதி?)
சில சந்தேகங்கள்.
- ஊடகத்துறையில், எல்லா பெண்களும் புகை பிடிக்கிறார்களா?பெண்களிடம் மைக்கை கொடுத்து, கேமரா பிடிப்பது தான் ஆண்கள் வேலையா?
- எல்லா கணவன்களும் மனைவியிடம் அடி வாங்குகிறார்களா?மனைவியிடம் அடிவாங்கும், எல்லா கணவன்களும் காவல்துறையில் புகார் செய்கிறார்களா?
- எல்லா வீட்டிலும் சந்தைக்குச் செல்வது கணவன்களா? காலையில் தக்காளி வாங்க சென்றவர், மாலையில் தான் வீடு திரும்புவாறா? மாலை வீடு திரும்ப இருப்பவர் ஏன் காலையே தக்காளி வாங்க வேண்டும்?
- எல்லா கணினி ஹேக்கர்களும் ஒரு மாதிரி தலையை ஆட்டி ஆட்டித்தான் பேசுவார்களா?
- எல்லா கணினி மேதைகளும், ஒரு முறை பாவித்த மடிக்கணினியை மறு முறை பாவிக்க மாட்டார்களா?
- வாங்கிய 6 கிலோ ஆர்டிஎக்ஸில், காவல் நிலையத்தில் வைத்தது போக மீதி எங்கே?
- ரிலையன்ஸில் போலி சிம் வாங்குவது எளிதா? 5 அல்லது 6 முறை தொலைபேசுவதற்கு, ஒரு பிஸ்னஸ் கார்ட் ஆல்பம் முழுவதும் சிம் கார்ட் வைத்திருப்பது ஏன்?
- வெடிகுண்டு தீவிரவாதிக்கு, வெடிகுண்டு தண்டனை, சரி. பிறப்புறுப்பில் கைவைத்த தீவிரவாதிக்கு? :-( தீவிரவாதத்திற்கு தீவிரவாதம் தான் தீர்வா? எனில், குறை எண். 3 ற்கும் இதற்கும் தொடர்புள்ளதா? ஆம் எனில், ஒவ்வொரு காமன் மேனுக்காகவும் ஆர்டிஎக்ஸ், ரேஷன் கடையில் விற்பனை செய்ய வேண்டி வருமே... யு... ஸ்டுப்பிட் காமன் மேன்.
வெட்னஸ்டே பார்த்தவர்களும் ஒரு முறை பார்க்கலாம்.
மாறுபட்ட விமர்சனங்களுக்கு - உன்னைப் போல் ஒருவன் - வலையுலக விமர்சனங்களின் தொகுப்பு – உண்மைத்தமிழன்.
//6.வாங்கிய 6 கிலோ ஆர்டிஎக்ஸில், காவல் நிலையத்தில் வைத்தது போக மீதி எங்கே? //
ReplyDeleteஜீப்பு வெடித்தே !
:)
\\எல்லா வீட்டிலும் சந்தைக்குச் செல்வது கணவன்களா? காலையில் தக்காளி வாங்க சென்றவர், மாலையில் தான் வீடு திரும்புவாறா? மாலை வீடு திரும்ப இருப்பவர் ஏன் காலையே தக்காளி வாங்க வேண்டும்?\\
ReplyDeleteஅண்ணே, இப்போ தக்காளி கிலோ எவ்ளோண்ணெ..!
:-)
நன்றி கோ, ஒரு சந்தேகம் தெளிவாகிடுச்சு...
ReplyDelete***
ReplyDeleteகாசு கொடுத்து பார்த்ததற்காக விமர்சனம் பண்ணியாக வேண்டுமா? அது மட்டுமின்றி எனக்கு சினிமா விமர்சனம் வருவதில்லை.
****
எனக்கும்.
எழுத ஆரம்பிச்சேன். கேவலமா இருந்தது. டெலீட் பண்ணிட்டேன் :)- நீங்க புல்லட் பாய்ண்ட் போட்டு சமாளிச்சிட்டீங்க.
//ஊடகத்துறையில், எல்லா பெண்களும் புகை பிடிக்கிறார்களா?//
ReplyDeleteஅந்த படத்தில் ஊடகத்துறையை சேர்ந்த அனைத்து பெண்களும் புகைப்பிடித்தார்களா?
//மாடியில் ஏறும் போது, இஸ்லாமியர்களின் இறை வழிபாட்டு அழைப்பான ‘பாங்கு’ சொல்லப்படும். அது நேரம் தோராயமாக 8 - 9 மணியிருக்கலாம். அந்நேரத்தில் (காலை 6 லிருந்து உச்சி 12 வரை) ‘பாங்கு’ சொல்லப்படுவதில்லை.//
ReplyDeleteஉலகில் எதாவது ஒரு மூளையில் பாங்கு சொல்லி கொண்டே தானே இருப்பார்கள்!
//வெட்னஸ்டே பார்த்தவர்களும் ஒரு முறை பார்க்கலாம். //
ReplyDeleteமற்றவர்கள் முறைத்துப் பார்க்கலாம் !
:)
//உலகில் எதாவது ஒரு மூளையில் பாங்கு சொல்லி கொண்டே தானே இருப்பார்கள்//
ReplyDeleteகரெக்ட்டு..ஆனா எந்த நாட்டிலயும் பீர் சொன்ன டைம் பீரியட்ல பாங்கு சொல்ல மாட்டாங்க...!!!
//கரெக்ட்டு..ஆனா எந்த நாட்டிலயும் பீர் சொன்ன டைம் பீரியட்ல பாங்கு சொல்ல மாட்டாங்க...!!! //
ReplyDeleteபதிவை விட்டு விலகி சென்றாலும் அப்பப்ப சொறிந்து கொள்வது நமக்கு பழக்கம் தானே!
அந்த நேரங்களில் ஏன் தொழுகை இல்லை!
அது கடவுளுக்கு ஓய்வு நேரமா?
கோவில் மட்டும் பூட்டுகிறார்களே என்று கேட்க வேண்டியது இந்துக்களை பார்த்து, நிச்சயமாக என்னை பார்த்து அல்ல!
//அதே போல, பல இடங்களில் சுற்றியிருக்கிறார், காதிலும்.//
ReplyDeleteசூப்பர் !!
// காலையில் தக்காளி வாங்க சென்றவர், மாலையில் தான் வீடு திரும்புவாறா? மாலை வீடு திரும்ப இருப்பவர் ஏன் காலையே தக்காளி வாங்க வேண்டும்?//
ReplyDeleteஅலுவலகம் செல்கிறார்
திரும்ப வரும் போது வாங்கிக்கொண்டு வருவார்
//எழுத ஆரம்பிச்சேன். கேவலமா இருந்தது. டெலீட் பண்ணிட்டேன் - //
ReplyDeleteஅப்படி எல்லாம் செய்யாதீர்கள்
சித்திரமும் கைப்பழக்கம், விமர்சணமும் ப்ளாக் பழக்கம்
பீர்....இந்த படம் தொடர்பான பதிவுகளிலேயே உங்க கேள்விகளும், பதிவும் ரொம்ப யதார்த்தமாக இருக்கிறது.
ReplyDeleteநன்றாகவும் இருக்கிறது.
நன்றி.
Present my Brother.
ReplyDeletei think this is ur first review.
nice.
//அந்த நேரங்களில் ஏன் தொழுகை இல்லை!
ReplyDeleteஅது கடவுளுக்கு ஓய்வு நேரமா?//
வால் !!
அது கடவுளுக்கு ஓய்வு நேரம் இல்லை.அது மனிதர்களுக்கு ஓய்வு நேரம்.
ஒரு நாளில் ஐங்கால தொழுகையை தொழுபவர்களுக்கு இடையில் சிறிது ஓய்வு தேவைப்படாதா ????
//பதிவை விட்டு விலகி சென்றாலும் அப்பப்ப சொறிந்து கொள்வது நமக்கு பழக்கம் தானே!//
ReplyDelete:-))))))))
வேறொன்னுமில்ல..பதிவு போட்ட இடம் அப்படி..
//அது கடவுளுக்கு ஓய்வு நேரம் இல்லை.அது மனிதர்களுக்கு ஓய்வு நேரம்.//
ReplyDeleteஅதான் வாரத்துல ஒருநாள் ஓய்வு நாள்னு சொல்லியிருக்கார்ல!
சும்மா 24 மணி நேரமும் தொழுதுகிட்டே இருந்தா தானே சொர்க்கத்துல நல்ல சீட்டா கிடைக்கும்!
எதாயிருந்தாலும் பார்த்து செய்யுங்க!
template super..
ReplyDelete//அதே போல, பல இடங்களில் சுற்றியிருக்கிறார், காதிலும்.//
ReplyDeleteசூப்பர் !!!!
நன்றி கோ,
ReplyDelete---
நன்றி ராஜூ, தக்காளி விலை தெரிந்தால் நான் ஏன் இத உங்ககிட்ட கேட்கிறேன்..
---
மணி, நான் சொன்னேனே ஒற்றுமை..
//வால்பையன் said...
ReplyDelete... அந்த படத்தில் ஊடகத்துறையை சேர்ந்த அனைத்து பெண்களும் புகைப்பிடித்தார்களா?//
நல்ல கேள்வி...
இன்னோரு முறை படம் பார்த்துவிட்டு மொன்னைப் போல் ஒருவன் பாகம் 2ல் எழுதுகிறேன்.
புகை வண்டிக்கு அருகில் இருக்கும் படத்தில், புகையை வாலுக்கு பின்னால் மறைத்து புகைப்படம் எடுத்த மாதிரி ஏதாவது புகையுதான்னு பார்த்து சொல்றேன். :)
//கோவில் மட்டும் பூட்டுகிறார்களே என்று கேட்க வேண்டியது இந்துக்களை பார்த்து, நிச்சயமாக என்னை பார்த்து அல்ல!//
ReplyDeleteமற்ற கேள்விகளுக்கு செய்யது பதிலளித்துவிட்டார்..
கோவிலை பற்றி நான் எப்போதாவது யாரிடமாவது கேட்டிருக்கேனா?
//அதான் வாரத்துல ஒருநாள் ஓய்வு நாள்னு சொல்லியிருக்கார்ல!//
ReplyDeleteஅப்படியா? யார் சொன்னா?
//சும்மா 24 மணி நேரமும் தொழுதுகிட்டே இருந்தா தானே சொர்க்கத்துல நல்ல சீட்டா கிடைக்கும்!//
சரி... நான் தொழுதுக்கிறேன். ஆனால்... அந்த நேரத்தில் யாரும் அழைப்பு கொடுப்பதில்லை. வேண்டியதுமில்லை. நானாகப் போய் கொள்கிறேன்.
//பதிவை விட்டு விலகி சென்றாலும் அப்பப்ப சொறிந்து கொள்வது நமக்கு பழக்கம் தானே!//
நமக்கு அரிப்பு அடங்குனா சரி... :))
//புருனோ Bruno said...
ReplyDelete// காலையில் தக்காளி வாங்க சென்றவர், மாலையில் தான் வீடு திரும்புவாறா? மாலை வீடு திரும்ப இருப்பவர் ஏன் காலையே தக்காளி வாங்க வேண்டும்?//
அலுவலகம் செல்கிறார்
திரும்ப வரும் போது வாங்கிக்கொண்டு வருவார்//
நன்றி டாக்டர், ஆனால் நான் கேட்டது.. மாலை வீடு திரும்ப இருப்பவர் ஏன் காலையே தக்காளி வாங்க வேண்டும்?
நன்றி கும்க்கி,
ReplyDelete---
நன்றி பாலா,
---
நன்றி சுவனப்பிரியன்
---
நன்றி [ஞான]-[பி]-[த்]-[த]-[ன்], (உங்க பேர டைப் பண்றதுக்குள்ள ரெண்டு பதிவு போட்டிரலாம் போல.. )
ம்ம்ம்.. படம் பாத்திட்ட இறுமாப்பில பேசறீங்க போல.. கடைசியிலே சொசெசூ-வாப் போயிடும் போல! நீங்க பட்டியலிட்ட குறை, சந்தேகங்கள் எல்லாம் தேங்காய் உடைச்ச மாதிரி இருக்கு.
ReplyDelete:::
ஸ்ரெயிட்டா கமலுக்கே மெயில் பண்ணிடவேண்டியதுதானே?
அப்புறம் எப்படி பெரபலம் ஆவறது?
:::
சீரிய முயற்சி! வாழ்த்துக்கள் நண்பா!
Boring review.... The doubts you have raised make me to feel you look for 100% reality in a movie. I feel it's funny.. After all it's a movie..
ReplyDelete-Senthil
***
ReplyDeleteநன்றி டாக்டர், ஆனால் நான் கேட்டது.. மாலை வீடு திரும்ப இருப்பவர் ஏன் காலையே தக்காளி வாங்க வேண்டும்?
***
இதுக்கு நீங்க ஏன் அவர் பைன்ஆப்பிள் வாங்கவில்லை என்று கூட கேட்டு இருக்கலாம் !!! :)-
அது கிடக்கட்டும்.. நம்ம மேட்டர் என்னாச்சு?
ReplyDeleteநல்லா கேட்டிருக்கீங்க!
ReplyDelete//நன்றி [ஞான]-[பி]-[த்]-[த]-[ன்], (உங்க பேர டைப் பண்றதுக்குள்ள ரெண்டு பதிவு போட்டிரலாம் போல.. )//
ReplyDelete:))))