சிட்டி லிமோஸின்ஸ் இந்தியா லிமிடெட் என்ற நிதி நிறுவனம், 500 கோடிக்கும் மேல் மோசடி செய்திருப்பதாக செய்தி.
குறுகிய காலத்தில் அதிக லாபம் தருவதாய் சொல்லும் எவனும் நேர்மையான தொழிலில் (அல்லது எந்த தொழிலிலும்) முதலீடு செய்திருக்க முடியாது. அவனும் ஏதாவது மோசடி செய்துதான் தன் பங்காளர்களுக்கும் அதன் லாபத்தை பங்கிட்டுத்தர முடியும். மோசடிகள் நீண்ட நாட்களுக்கு நடக்காது. இனிதே ஒருநாள் இடியோடு நிறைவுபெறும். பிறகு சொல்ல வேண்டியது தான், ஸ்டார்டிங்கெல்லாம் நல்லாத்தான் இருந்தது, ஆனா.. ஃபினிஷிங் சரியில்லையேப்பா… என்று. எவ்வளவு அடிச்சாலும் தாங்குற ரொம்ப நல்ல வடிவேலுவை விட, ரொம்ப ரொம்ப நல்ல மக்கா… திருந்தவே மாட்டீங்களா? வால் ஸ்ட்ரீட்காரனே வேர் கடல தின்னுக்கிட்டிருக்கான். இந்தியா லிமிடட்னு பேர் இருந்ததால, நம்பி இன்வெஸ்ட் பண்ணிணோம்னு ஒரு பெண் சொல்கிறார்… அளவுக்கு அதிகமா அசைப்படுகிற பெண் மட்டுமல்ல… எவனும் நல்லா வாழ்ந்ததா சரித்திரம் இல்ல. – வேதனை.
<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>
திருநாவுக்கரசர், காங்கிரசுக்கு தாவுகிறாராம்.
தவறான இடத்தில் இருக்கும் நல்ல மனிதர் என்று சொல்லப்பட்டவர், திருநாவுக்கரசர். கடந்த நாடாளுமன்ற தேர்தலில், ராமநாதபுரத்தில், இவருக்கே வெற்றி வாய்ப்புகள் இருப்பதாக பரவலாகப் பேசப்பட்டது. இவருக்கு பயந்து, ரித்தீஷ் தேர்தலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பே வந்து டிவிஎஸ் நகரில் ரூம் போட்டு விட்டதாக சொல்லப்பட்டது. கடைசியில் திருநாவுக்கரசர் சார்ந்திருந்த கட்சியின் தமிழக எதிர்ப்பு அலை காரணமாக தோற்கடிக்கப்பட்டார். கட்சி மாறும் அவரை வரவேற்போம். – வாழ்த்துக்கள்.
<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>
புதசெவி – பெண்ணியம் என்றால் என்ன? அமெரிக்க பெண்ணியம், இந்திய பெண்ணியம், தமிழ் பெண்ணியம், மதுரை பெண்ணியம் என்று வேவ்வேறு பெண்ணியம் உள்ளதாமே, அமெரிக்கா சென்ற மதுரைப் பெண்ணுக்கானது எந்தப்பெண்ணியம்? அவரே திரும்ப மதுரை வந்தால்? அனைத்து பெண்ணியத்திலும் பொது அம்சமாக இருப்பது ஆண்களை எதிர்ப்பதும், காப்பி அடிப்பது மட்டும்தானா?
சரி.. ஆணியம் என்றால் என்ன? பெண்ணியத்திற்கு எதிராக பேசுவதா? பெண்ணியவாதிகள் லெஸ்பியன் ரைட்ஸ் கேட்பது போல, ஹோமோ செக்ஸூவல் ரைட்ஸ் கேட்பது ஆணியமா? – புதசெவி.
<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>
திரட்டிகளில் நான் இணைக்காத, இணைக்க விரும்பாத, என் இடுகையை தமிழ்மணத்தில் வேறொருவர் இணைக்கிறார். மற்ற திரட்டிகளில் இணைத்தவர் யாரென தெரிந்து கொள்ள முடிகிறதே? தமிழின் முண்ணனி திரட்டியான தமிழ் மணம் அந்த வசதியை வழங்க முடியாதா? அதே போல… ஓட்டுப்போட்டவர் யாரென தெரிந்து கொள்ளவது, இடுகையை இணைத்தவருக்கு மட்டும் ஓட்டுப்போட்டவர் யாரென தெரிந்து கொள்ளும் வசதி கொடுக்கலாமே. எக்ஸ்ப்ளோரரில், ஓட்டு எண்ணிக்கையும் தெரிவதில்லை. அண்மை காலங்களில் தமிழிஷில் இருந்து பதிவுக்கு வருபவர்கள் எண்ணக்கை கணிசமாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. – ஆலோசனை.
<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>
சென்ற வாரம் வாசித்ததில் மோகன் கந்தசாமியின் போலி டோண்டு விவகாரம் என்ற தொடர் இடுகை (இதுவரை 6 பகுதிகள்), ஒரளவு இந்த விவகாரத்தை புதியவர்களுக்கு புரியவைக்கிறது.
மூர்த்தியின் தந்தை திரு. மருதமுத்து, கீழ்திருப்பாலக்குடி மண்ணார்குடியில் நேற்று காலமானதாக செய்தி – அன்னாருக்கு அஞ்சலி.
<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>
பால்பொருள் அங்காடியில் ஒருவர் அரைக் கிலோ வெண்ணை வேண்டும் என்று கேட்கிறார். அதற்கு கடை பணியாளர், ‘இங்கு ஒரு கிலோ பேக்தான் இருக்கிறது, கொஞ்சம் வெயிட் பண்ணுங்க… மேனேஜர் கிட்ட கேட்டுட்டு வரேன்’ என்று உள்ளே சென்று மேனேஜரிடம் கேட்கிறார். ‘சார்.. ஒரு வெண்ணை வந்து அரைக் கிலோ வெண்ணை வேணும்னு கேட்கிறான்’ என்று சொல்லிவிட்டு திரும்பும் போது வெண்ணை கேட்டவர் பின்னால் நின்று பேசுவதை கவனித்துக்கொண்டிருக்கிறார். உடனே கடை பணியாளர், ‘அதே மாதிரி இந்த ஜென்டில் மேனுக்கும் அரை கிலோ வேணுமாம்’ என்று நிலைமையை சமாளித்தாராம்.
<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>
ஜிகர்தண்டா எழுதுவது எனக்கு எப்போதும் எளிதாக இருக்கிறது. இரண்டு, மூன்று வரிகளை வைத்து பில்ட்அப் கொடுக்கலாம். அதிகம் யோசிக்க வேண்டாம், (மற்ற இடுகைகளுக்கு!?), சமகால நிகழ்வுகளில் நமது கருத்தை சொல்லிக்கலாம். ஒரு வணிகத் திரைப்படம் போல, சென்டிமெண்ட், காமெடி, அதிரடி என எல்லாம் அமையப்பெற்று கமர்ஷியலாக இருப்பது. இப்படியே எழுதுவதால் என்றாவது ஒருநாள் சுவாரஸியமாக எழுதிவிட மாட்டோமா என்று கனவோடு எழுதுவது.
<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>
அளவுக்கதிகமான ஆசை..?
ReplyDeleteஇதை யார் வரையறுப்பதுன்னு அவர் வந்து கேட்டா இன்னா சொல்லுவீங்க..?
\\ஓட்டுப்போட்டவர் யாரென தெரிந்து கொள்ளவது,\\
ReplyDeleteஆமா, இங்க சும்மாவே மக்கள்ஸ் கொஞ்சி கொளாவிகிட்டு இருக்காங்க..!
இதுல இது வேறயா..?
\\வால் ஸ்ட்ரீட்காரனே வேர் கடல தின்னுக்கிட்டிருக்கான்\\
ReplyDeleteஎனி உள்குத்து இன் திஸ் வரி..?
அல்லது சென்ற பதிவிற்கும் இதற்கும் ஏதாவது சம்பந்தம்.?
:-)
பதிவு சுவாரஸியம் !!
ReplyDeleteஈத் முபாரக் பீர் !!! தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் !!!
எனக்கு வேர்கடலை ரொம்ப பிடிக்கும்!
ReplyDeleteஇனிய ரமலான் நல்வாழ்த்துகள் நண்பா..
ReplyDelete\ஓட்டுப்போட்டவர் யாரென தெரிந்து கொள்ளவது,\\
ReplyDeleteஆமா, இங்க சும்மாவே மக்கள்ஸ் கொஞ்சி கொளாவிகிட்டு இருக்காங்க..!
இதுல இது வேறயா..////
ரிப்பீட்!!! - இது ரொம்ப ஈசியாவும் இருக்கு!
ரமலான் வாழ்த்துக்கள்! பிரியாணி சுவையாக அமைந்ததா?
ReplyDelete//ஜிகர்தண்டா எழுதுவது எனக்கு எப்போதும் எளிதாக இருக்கிறது. இரண்டு, மூன்று வரிகளை வைத்து பில்ட்அப் கொடுக்கலாம்.//
ReplyDeleteஎன்னை மாதிரி ஆளுங்களுக்கு அதுவும் கஷ்டம் :0
:-)))
ReplyDeleteVery interesting! The way u illustrated the news is awesome! All the best Peer!!
ReplyDeleteநன்றி ராஜூ, பத்தவக்க நினைச்சியே பரட்ட...
ReplyDelete---
நன்றி செய்யது,
---
நன்றி வால், எனக்கும்தான் படிக்கும்.. யாராவது உரிச்சு தரணும் ;(
---
நன்றி கார்த்திக்,
---
நன்றி டாக்டர், ஹோட்டல்ல பிரியாணி... ;( வெறுப்பேத்திட்டானுக.
---
நன்றி சின்ன அம்மிணி, எனக்கும் ஆரம்பத்தில ஸ்மைலி பொடறது கூட கஷ்டமா தான் இருந்திச்சு. ;(
---
நன்றி TVR,
---
நன்றி ஜெகா, உங்ளுடைய தீஅதீ ர இல்லையா? ;)