Dec 25, 2009

டைம் மேனெஜ்மண்ட்

சென்ற மாதம் நான் கலந்துகொண்ட ஒரு ஓரியண்டேஷனை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட பதிவு. டைம் மேனெஜ்மண்ட் -  இதை நம்முடைய தனிப்பட்ட வாழ்விலும் நடைமுறைப்படுத்தி பயனடையலாம் என்பதால் இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

டைம் மேனெஜ்மண்ட் - சமய | கால | நேர மேலாண்மை என்று பெயர்த்தெடுக்கலாமா? இல்லை டைம் மேலாண்மை? எதுவாகவும் இருந்துவிட்டு போகட்டும், எந்த மொழியில் இருந்தாலும் நம் தினசரி வாழ்வில் நமக்கான நேரத்தை திட்டமிட்டு செயல்படுத்துவதை டைம் மேனெஜ்மண்ட் எனலாம்.

டைம் மேனெஜ்மண்ட் ஏன்?
தினசரி வாழ்வில் நம்முடைய செயல்களை முறையாக திட்டமிடவும், பகுக்கவும். முக்கிய வேலைகளை கண்டறிந்து செயல்படுத்தவும்,
நம்முடைய மற்றும் நம் குழுவுடைய வேலைகளை கொடுக்கப்பட்ட நேரத்திற்குள் முடிக்கவும், செயல்திறன் மற்றும் எண்ணிக்கையை வளர்த்துக்கொள்ளவும் டைம் மேனெஜ்மன்ட் அவசியமாகிறது.
காலம் - சேமித்து வைக்க முடியாது, வெகு விரைவில் அழிந்து போகக்கூடியது. இறந்து போகக்கூடியது, அளவானது. அதனால் தான் அதை சரியாக திட்டமிடுவதும் பகுப்பதும் மிக அவசியமாகிறது.

பொதுப்பிரச்சனைகள்
தெளிவற்ற எதிர்பார்ப்புகள், குறிக்கோள்கள்.
போதிய தொடர்பின்மை.
வீணாகும் முயற்சிகள்.
முறையற்ற திட்டமிடல், முக்கியப்படுத்தல்.
மன அழுத்தம்.

சரியான திட்டமிடல் என்பது; ஆற்றல் மிக்கதாகவும், பயிற்சிக்குகந்ததாகவும், வலைவுதன்மை மிக்கதாகவும், இலகுவானதாகவும், எளிதில் நடைமுறைப்படுத்தக் கூடியதாகவும் இருக்க வேண்டும்.

நேரத்தை திட்டமிடும் போது கவனிக்க வேண்டியவை;
சந்திப்புகள், தொடர்புகள்
காலாவதி தேதி குறிக்கப்பட்டவை
நடந்து கொண்டிருக்கும் வேலைகளில் தற்போது செய்யவேண்டியவை
குறிப்புகள், எண்ணங்கள், ஆலோசனைகள்
நிதி நிலைகள்
சொந்த வேலைகள்
சமுதாய வேலைகள்
பொழுது போக்கு

குறிப்பாக நேரத்தை திட்டமிடும் போது, அவற்றை முடிக்க வேண்டிய காலத்தையும் வரையருக்க வேண்டும். உதாரணமாக செய்து முடிக்க வேண்டிய வேலை, ஒரு மணி நேரத்திலா, ஒரு நாளிலா அல்லது ஒரு வாரத்திலா என்பதையும் வரையருக்க வேண்டும். அவை அலுவலக வேலையா, சொந்த வேலையா, சமுதாய வேலையா என்பதை பொருத்து அவற்றிற்கான முக்கியத்துவத்தையும் வகைப்படுத்தலாம். இவை ஒவ்வொன்றிலிருந்தும் அவசரமாக செய்து முடிக்க வேண்டியதையும் பகுக்க முடியும். உதாரத்திற்கு; அலுவலகப் பணியில் நமக்கு அவசரமானதையும் முக்கியமானதையும் முதலில் செய்து முடிக்கவேண்டும்.

மேலாளருக்கு செய்து தரவேண்டிய பணிகள் = முக்கியம் ஆனால் அவசரமில்லை. (அது அவருக்கு அவசரமாகவும் முக்கியமானதாகவும் கூட இருக்கலாம்... நமக்கில்லை) இதற்கான முக்கியத்துவத்தை இரண்டாவதாக்கலாம். இதே போல ஒவ்வொறு பணியையும் வகைப்படுத்தி திட்டமிடலாம்.

கீழிருக்கும் மேட்ரிக்ஸ் பாருங்கள்.


ஒரு பதிவர் என்ன வகையில்...
  1. அலுவலகப் பணி = முக்கியமானது+அவசரமானது - முதலில் செய்து முடிக்கப்பட வேண்டியது.
  2. சொந்த மடல்கள் வாசிப்பது = முக்கியமானது ஆனால் அவசரமில்லை - அடுத்ததாகச் செய்யலாம்.
  3.  பதிவு எழுதுவது = அவசரம் ஆனால் முக்கியமில்லை - மதியத்திற்கு மேல் வைத்துக்கொள்ளலாம்.
  4. பின்னூட்டம் | கும்மி | ஜங்க் மெயில் ஃபார்வட் = அவசரமுமில்லை முக்கியமுமில்லை - நேரமிருந்தால் செய்யலாம்.
[யாருப்பா அது... தீர்ப்ப மாத்தி எழுதச் சொல்றது :)]
  • ஒரு வேலையை செய்து முடிக்க நம்மிடம் இருக்கும் காலமும் இன்னபிற சாதனங்களையும் பொருத்து அவற்றிற்கான திட்டத்தை பகுக்க வேண்டும். - ஆள், பொருள், பண பலம்
  • ஒரு வேலையில் நமக்கான பங்களிப்பை பொருத்தே அவற்றின் முக்கியத்துவத்தை அமைக்க வேண்டும் - பணியிடம், குடும்பம், சமூகம்
  • ஒரு வேலையில் நமக்கான பொறுப்பு - மேலாண்மை, உறவு, பொதுநலன்
  • ஒரு வேலையை செய்து முடிக்கும் போது அதற்கிருக்கும் மதிப்பையும் கவனத்தில் கொண்டே நேரத்தையும் திட்டமிட வேண்டும்.
குறைந்தபட்சம் நம்முடைய அன்றாட வேலைகளை ஒரு வாரத்திற்கேனும் சரியாக திட்டமிட்டுச் செய்தால், அடுத்துவரும் வாரத்தில் முந்தைய (திட்டமிட்ட) வார பலன் கண்கூடாகத்தெரியும்.

ஆயிரம் மைல்களுக்கான பயணம் முதல் ஒரு அடியில் இருந்தே ஆரம்பிக்கிறது என்று யாரோ சொல்லியிருக்கிறார். நமக்கான பலன் தரக்கூடிய நம் வாழ்வின் திட்டமிடுதலை இன்றிலிருந்தே ஆரம்பிப்போம்.




26 comments:

  1. me the first.

    உங்க ஆஃபிஸ்லருந்து இந்த நேர மேலாண்மைப் பயிற்சியை ஏற்பாடு செஞ்சிருந்தாங்களா? அப்படியாவது பயபுள்ளைக வேலை செய்யட்டும்னு நினச்சாங்க போல!!

    ReplyDelete
  2. நல்ல தகவல் நண்பரே ... நன்றி.::)

    ReplyDelete
  3. useful post, related book is Stephen Covey's First come First & 7 Habits of effective people

    ReplyDelete
  4. ஹூசைனம்மா, முதலாவதாக வந்ததற்கு வாழ்த்துக்கள். இந்த பயபுள்ள ஒரு தடவை முடிவு செஞ்சிட்டா...

    பலா பட்டறை, நன்றி.

    வாங்க அருணா, நன்றி.

    வாங்க குப்பன்.யாஹூ, 7 Habits of effective people அலுவலக நூலகத்தில் வாசித்த நினைவிருக்கிறது. தகவலுக்கு நன்றி நண்பரே.

    ReplyDelete
  5. நல்ல பயிற்சி!! தொடர்ந்து பின்பற்றுவது.....சாத்தியமா?

    ReplyDelete
  6. வாங்க TVR சார், நன்றி.

    டாக்டர், மூன்று மாதத்திற்கு தொடர்ந்த நடைமுறையாக்கிக் கொண்டால்.. அதன் பிறகு விடுவது கூட கடினமாகிவிடும். பலன் உண்டு என்று தெரியும் போது சற்றே சிரமமாக இருந்தாலும் பின்பற்றுவதில் என்ன தவறு. நீங்கள் தரும் தொடர் மாத்திரைகளைப் போல :)

    ReplyDelete
  7. தண்டப் பதிவு :)- வெட்டிப்பதிவு :)-

    &&&&
    [யாருப்பா அது... தீர்ப்ப மாத்தி எழுதச் சொல்றது :)]
    &&&&

    நீதிபதியை மாத்தவேண்டிய நேரம் வந்தாச்சு :)-

    ReplyDelete
  8. 1. பதிவு எழுதுவது - ரொம்ப ரொம்ப முக்கியம். நம்கடமையை முதலில் செய்யனும்.
    2. பின்னூட்டம் - ரொம்ப முக்கியம்... இரண்டாவது செய்யனும்.
    3.சொந்த மடல் வாசிப்பது- மதியத்திற்கு மேல் பார்த்துக்கொள்ளலாம்.
    4. ஆபிஸ் வேலை- மேலே சொன்னதை செய்தபிறகு நேரமிருந்தால் பார்த்துக்கொள்ளலாம்.

    இதுதாங்க கார்ப்பரேட் விதி இதை திடீர்னு மாத்துன்னு சொன்னா எப்படி மாத்துறது.அதெல்லாம் முடியாது.

    ReplyDelete
  9. ஆகா ஆகா - நல்லாவே சொல்லிக் கொடுத்திருக்காங்க

    நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  10. எல்லாம் சரி அண்ணே...டிவிட்டருக்கு எப்ப நேரம் ஒதுக்குறீங்க..

    அதுல பின்னி பெடல் எடுக்கறீங்களே..

    ரொம்ப நல்ல இடுகை.

    // மேலாளருக்கு செய்து தரவேண்டிய பணிகள் = முக்கியம் ஆனால் அவசரமில்லை. //

    நல்ல வேலை என் கீழ் வேலைச் செய்பவர்களுக்கு தமிழ் தெரியாது... தப்பிச்சேண்டா சாமி..

    ReplyDelete
  11. நீங்க சொல்லியிருக்கிறது நல்ல விஷயங்கள் நண்பா.. ஆனா கடைபிடிக்கிறதுதான் கொஞ்சம் கஷ்டம்.. முயற்சிக்கிறேன்.. அருமையான இடுகை..:-))

    ReplyDelete
  12. மணி, இனிமே தீர்ப்பே சொல்லல.. பதவிய பறிச்சுடாதீங்க.

    பிரதாப், மாத்தலைன்னா மாத்திடுவாய்ங.. பீ கேர்ஃபுல்.

    வாங்க சீனா ஐயா, இன்னும் நிறையவே சொல்லிக் கொடுத்திருக்காங்க. நல்லா பட்டைத்தீட்டிதான் வெளிய அனுப்புறாங்க.

    இராகவன் அண்ணே, எல்லாம் அதுவா அமையறது. ட்விட்டர் 'உ' வகைதான். அதாவது.. அவசரமுமில்லை, முக்கியமுமில்லை. உண்மைய சொல்லணும்னா இப்போ தூங்குற நேரம் தவிர மத்ததெல்லாம் அப்பிடதாங்க.

    கார்த்திக், நல்ல பலன் தரக்கூடியது.. பின்பற்றிப்பாருங்க.

    ReplyDelete
  13. நேற்று ஜும்மா பயானில் தொழுகையை நேரம் பற்றி சொல்லி டைம் மேனேஜ்மண்ட் பற்றியும் லேசா தொட்டு சொன்னாங்க.

    அதை இன்னும் விரிவாக செய்ய நினைத்திருந்தேன்.

    அருமை பகிர்வு.

    நீங்களும் அதை சுட்டியிருப்பீர்கள் என நினைத்தேன் ...

    ReplyDelete
  14. பயனுள்ள பதிவு.

    நாஞ்சில் பிரதாப் சொன்னது நல்ல நகைச்சுவை.

    ReplyDelete
  15. ஆ.. டைம் மேனேஜ்மென்ட். நாம அடிக்கடி அடி வாங்குற மேட்டர்..

    Thanks for the reminder!

    ReplyDelete
  16. பதிவு அருமை. நன்றி.

    ReplyDelete
  17. நன்றாக இருந்தது..புதிதாக பதிவெழுத ஆரமித்து இருக்கிறேன்.. பதிவுக்கு வருமாறு அழைக்கிறேன்.. வந்து கமெண்ட் போடுங்க..

    ReplyDelete
  18. நல்ல பகிர்வு, இப்ப உள்ள பதிவுலகில் மூழ்கி இருப்பர்களுக்கு இது நச் ஊசி போல் ...
    ஒரு விழிப்புண‌ர்வு...

    எல்லாத்திலும் டைம் மேனேஜ்மெண்ட் இருந்தால் டென்ஷ‌ன் இல்லாம‌ல் இருக்க‌லாம்....

    ReplyDelete
  19. பயனுள்ள தகவல்கள் பீர். நன்றி.

    ReplyDelete
  20. சேமித்து வைக்க வேண்டிய பதிவு!

    ReplyDelete
  21. பீர் அண்ணா. இடுகை சூப்பர்.

    காலநேரம் மிகுந்த அவசியம்
    அதை ஒரு நொடிவிடாமல் நல்வழியிலும்.

    சில நேரம் இதுபோல் பின்னுட்டம் மற்றும் கும்மியடிக்கவும் பயன்படுத்திக்கொள்ளவும் நல்லது.

    எப்படியெல்லாம் நேரத்தை பயன்படுத்திக்கொள்வதுன்னு சொல்லிக்கொடுத்தமைக்கு டேங்ஸ் அண்ணா..

    ReplyDelete
  22. ம்ம்ம்... ​தெளிவாயிருக்கீங்க பீரு!
    இ​தை முழுசா பா​​லோ பண்ணுங்க ப்ரதர்ஸ்.. ஃபிகர் மடிய வாய்ப்பிருக்கு!
    ஏன்னா... எனக்கு யாரும் (அந்த காலத்தில...)
    //நேரத்தை திட்டமிடும் போது கவனிக்க வேண்டியவை;// ​சொல்லித்தர்​வே இல்​​லே...!
    அவ்வ்வ்வ்!!!
    ...
    ச்சும்மா காமடிக்கு.. ஆனா இது நல்ல பதிவு! உப​யோகமான விஷயங்கள்!

    ReplyDelete
  23. பீர் அண்ணா நேரம்கிடைகும்போது இதையும் பாருங்க
    http://fmalikka.blogspot.com/

    ReplyDelete

மனம் திறந்து செதுக்குங்கள், என் எழுத்துக்களை.