என் மதம் சிறந்தது என்று சொல்லும் வரை பிரச்சனை இல்லை. உன் மதம் தாழ்ந்தது என்று சொல்லும் போதுதான் பிரச்சனைகள் ஆரம்பமாகிறது என்று எங்கோ யாரோ சொல்லியிருந்தார். இந்தக்கூற்றை இனம், மொழி, சாதி, மாநிலம், நாடு என பல விஷயங்களோடு பொருத்திப்பார்க்கலாம். குறிப்பாக பன்முகைத்தன்மை கொண்ட இந்தியா போன்ற நாடுகளின் ஒறுமைப்பாட்டிற்கு இதைப் பொருத்திப்பார்க்க வேண்டியது அவசியமாகிறது.
மதவாதிகள் என அடையாளம் காட்டப்படுவோரும், காட்டுவோரும் மேற்சொன்ன வாக்கியத்திலிருக்கும் உண்மையை உணர்ந்து கடைபிடித்தால் யாருக்கும் எந்த பிரச்சனையும் எழுப்போவதில்லை. மதவாதிகளுக்கு இவற்றை உணரும் தன்மை இல்லையென்று 'இவர்கள்' சொல்லிக்கொள்வதால், அவர்களை ஒரு பக்கமாக ஒதுக்கிவைத்துவிடலாம். கடவுள் நம்பிக்கை இல்லாதவன், பகுத்தறிவாளி, மூட நம்பிக்கைகளின் எதிரி , முற்போக்குச் சிந்தனையாளன் என்று தனக்குத் தானே சொல்லிக்கொள்ளும் 'நியாயவான்கள்' இவ்விசயத்தை உணர்ந்தபாடில்லை. கடவுள் இல்லை என்பதற்கு ஆதாரமாக கடவுளையே சொல்வது இவர்களுடைய தொன்றுதொட்ட தொண்ணூற்றியெட்டு வழக்கத்தில் ஒன்றாக இருக்கிறது. அதாவது, கடவுள் இருந்தால் அவனை இதை செய்து காட்டச்சொல், அதை நிறுத்திக்காட்டச்சொல் என்பதாகவே வாதிடுகிறார்களே தவிர ஒருபோதும் அதைவிடுத்து வெளியே வருவதில்லை.
கடவுளையும், கடவுள் நம்பிக்கையாளர்களையும் சாடுவதே இவர்களுடைய முழுநேரத் தொழிலாக இருக்கிறது.
கடவுள் இருக்கிறான் என்பதை என்னால் நிரூபித்துவிட முடியும் என்றால் அவன் கடவுளாக இருக்க முடியாது. அவனை சிந்தித்துணரலாம், சந்தித்தல்ல. அதனாலேயே நான் கடவுளை நம்புகிறேன். கடவுள் இல்லையென்று சொல்பவர்களுக்கு பலமுறை விடப்பட்ட சவால், நிரூபிக்க முடியாத சவாலாக இன்னும் தொடர்கிறது.
ஒன்றும் இல்லாததிலிருந்து ஏதாவதொன்றையோ அல்லது ஏதாவதொன்றை ஒன்றும் இல்லாததாகவோ ஆக்கிக்காட்டுங்கள். இது கடவுளால் மட்டுமே முடியும்.
இதற்கு ஒரே ஒரு கேள்வியைத்தான் திரும்ப திரும்ப வைக்கிறார்கள். 'கடவுள் எங்கிருந்து வந்தான்?' என்று. யாரும் படைக்க வேண்டியதில்லை என்பதாலேயே அவன் கடவுள், 'தி சூப்பர் நேச்சர் பவர்' என்கிறோம். மனித கற்பனைக்கு எட்டாத சக்தி அவனிடம் இருக்கிறது. சற்றே வேறு விதமாக வாசிக்க..
அவன் எத்தேவையும் அற்றவன். அவன் யாரையும் பெறவும் இல்லை. யாராலும் பெறப்படவும் இல்லை. அவனுக்கு நிகராக யாரும் இல்லை.
அதனாலேயே அவனை வணங்குகிறோம். அவனிடத்தில் உதவி தேடுகிறோம்.
ஐயாமார்களே, உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என்பதற்காக வேறு யாருக்கும் இருக்கக்கூடாது என்று நினைப்பது வாத நியாயமாகுமா? சரி.. நியாயமாமென்று ஏற்றுக்கொண்டாலும், முதலில் நீங்கள் அதை ஒழுங்காக கடைபிடிக்கிறீர்களா? கடவுள் நம்பிக்கை இல்லையென்றால் கடவுள் சார்ந்த மத விழாக்களில், சடங்குகளில், கலந்து கொள்வதிலிருந்து தவிர்ந்திருக்க வேண்டும். இதைச்சொன்னாலும், 'உங்கள் வீட்டு விழாக்களில் கலந்து கொள்ளக்கூடாதா?' என்று கேட்கின்றனர். தாராளமாக வந்து கலந்துகொண்டு சிறப்பிக்கலாம். ஆனால், எங்கள் வீட்டு பிரியாணியில் ஆட்டுக்கறி போட்டிருப்போம். அந்த ஆட்டை இறைவனின் பெயர் சொல்லி அறுத்திருப்போம். இவ்வளவும் தெரிந்து கொண்டு பிரியாணியில் ஆட்டுக்கறி போட்டிருக்கிறார்கள் அந்த ஆட்டை இறைவனின் பெயர் சொல்லி அறுப்பது மூட நம்பிக்கை. அந்த வீட்டிற்கு வரும் பெண்கள் பர்தா போட்டிருப்பது பெண்ணடிமைத்தனம். இஸ்லாமிய பெண்கள் பர்தாவை வீசியெறிய வேண்டும் என்றெல்லாம் பகுத்தறிவு கொள்கைகளை அவிழ்த்து விடுகின்றனர். பர்தா அணியும் பெண்கள் அனைவரும், 'நான் விரும்பியே பர்தா அணிகிறேன்' என்று சொன்ன பிறகும், இவர்களுக்கு அதற்கும் பின்னால் என்ன வேண்டிகிடக்கு என்பதும் புரியவில்லை.
ஒருவர் பொதுவில் ஒரு கருத்தை/கொள்கையை சொல்லும் முன்பு, தான் அந்தக்கொள்கையை கடைபிடிக்க வேண்டும். மாற்று மதத்தவரின் கடவுள் நம்பிக்கையை நான் மதிக்கிறேன். அவர்களுடைய வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்கிறேன். அங்கு கடைபிடிக்கப்படும் மதம் சார்ந்த சில நிகழ்வுகளில் எனக்கு விருப்பம் இல்லாததால் அவற்றில் இருந்து மட்டும் விலகி இருப்பேன். அது அவர்களுடைய நம்பிக்கை. அதனாலேயே வேறு எங்கும் சென்று அவற்றை நான் குறை கூறுவதில்லை. ஆனால், வரதட்சணை வாங்கப்படும் கொடுக்கப்படும் சில திருமணங்களுக்குச் செல்லாமல் என்னை கட்டுப்படுத்திக்கொள்கிறேன். என் சொந்த சகோதரனுடைய திருமணத்தில் வரதட்சணை வாங்கப்பட்டாலும் என்னுடைய நிலை அதுவாகவே இருக்கும். இந்நிலையில் இருக்கும் நான் வரதட்சணைக்கெதிராக எழுதுவது நியாயமாகும். அந்த கொடுமையை, மூட நம்பிக்கையையை எதிர்ப்பதில் அர்த்தம் இருக்கிறது. வரதட்சணை ஒரு சமூக குற்றம், கொடுமை, பெண்ணடிமை, ஆணாதிக்கம் என்றெல்லாம் கருத்துக்களை வாரிவழங்கிவிட்டு, அக்கா சொன்னாள், அம்மா அழுதாள் என்பதற்காக நானும் வரதட்சணை வாங்கினால் என்னை எதைக்கொண்டு அடித்தாலும் தகும். இன்னும் சொல்வதென்றால், நான் வரதட்சணையில் இருந்து விலகி இருக்கிறேன். அதையே மற்றவருக்கும் நாடுகிறேன் என்றால் முதலில் என் குடும்பம், சுற்றத்திற்கே அதைச் சொல்லி நடைமுறைப்படுத்த வேண்டும். கேட்காத பட்சத்தில் அங்கிருந்த வெளியேறி ஊருக்கு உபதேசம் செய்ய வரவேண்டும். மாறாக, என் சுற்றத்தில் இதைச்சொல்லி கெட்ட பெயர் வாங்கிக்கொள்ள விருப்பமில்லை என்ற நிலையிலிருப்பவர்களுக்கும் மேற்சொன்ன தண்டனை பொருந்தும். அதேபோல் விபச்சாரம் சம்பந்தப்பட்ட எந்த நிகழ்வுகளிலும் நான் கலந்துகொள்வதில்லை. அதனாலேயே விபச்சாரத்தை எதிர்க்க எனக்கு முழுத்தகுதி இருக்கிறது. அதைப்பற்றிய எனது எண்ணத்தைப் பதிவு செய்திருக்கிறேன்.
கடவுள் நம்பிக்கையில்லாதவர்கள் எந்நேரமும் அணியும் கருப்புசட்டையை விட்டுவிடுவார்கள், முஸ்லீம்கள் அணியும் வெள்ளைச்சட்டை மீது இவர்களுக்கு எந்த வெறுப்போ தெரியவில்லை. மட்டுமல்லாது...
முஸ்லீம்கள் அமர்ந்து சிறுநீர் கழிப்பதிலும்,
தாடி வைத்துக்கொள்வதிலும்,
மெக்காவிலிருக்கும் காபா 'வை முகம் நோக்கி வணக்குவதிலும்,
அரபியில் வணக்க வழிபாடுகளை செய்வதிலும்,
பின்னர் பிராத்தனைகளை தமிழில் செய்தாலும்,
பிரியாணியில் உப்பு குறைந்துவிட்டாலும்... என ஆகாத மருமகள் போல தொட்டதற்கெல்லாம் குற்றம் சொல்வதையே முழு நேரத்தொழிலாக வைத்திருக்கிறார்கள். குறைகளை கண்டுபிடிப்பதற்கென்றே பெயர் தெரியாதவர்கள் எழுதும் புத்தகங்களை வாங்கிப் படித்து தங்களைத் தாங்களே மெச்சிக்கொள்கிறார்கள்.
இன்னும் சிலர், தங்களுக்கிருக்கும் உயர்சாதி/சமஸ்கிருத வெறுப்பை சொல்லும் போது தன்னை நடுநிலையாளன் என காட்டிக்கொள்ளும் முயற்சிக்காக இஸ்லாமியர்களையும், கிறித்துவர்களையும் வலிந்து இழுத்து கருத்துச் சொல்வதை வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறார்கள். நான் கடவுள் மறுப்பாளன் என்று சொல்லிக்கொண்டே 'தமிழில் வழிபாடு' எனும் கோஷத்தையும் முன்வைக்கிறார்கள். மூட நம்பிக்கையின் எதிர்ப்பவன் என்று சொல்லிக்கொண்டே குடும்பத்தினர் சந்தோஷத்திற்காக அதை செய்பவர்களும் உண்டு. குடும்பத்தினர் சந்தோஷத்திற்காக சில பழக்கங்கள் கடைபடிப்பதை சரி என்று ஏற்றுக்கொண்டாலும், அதே பழக்கத்தை 'மூடநம்பிக்கையின் உச்சம்' என்று பொதுத்தளத்தில் முழங்குவதை என்னவென்று சொல்வது.
மதவாதிகளை விட அதி மூட நம்பிக்கையில் இருப்பது இவர்களே
ஒருவர் பொதுவில் ஒரு கருத்தை/கொள்கையை சொல்லும் முன்பு, தான் அந்தக்கொள்கையை கடைபிடிக்க வேண்டும். மாற்று மதத்தவரின் கடவுள் நம்பிக்கையை நான் மதிக்கிறேன். அவர்களுடைய வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்கிறேன். அங்கு கடைபிடிக்கப்படும் மதம் சார்ந்த சில நிகழ்வுகளில் எனக்கு விருப்பம் இல்லாததால் அவற்றில் இருந்து மட்டும் விலகி இருப்பேன். அது அவர்களுடைய நம்பிக்கை. அதனாலேயே வேறு எங்கும் சென்று அவற்றை நான் குறை கூறுவதில்லை. ஆனால், வரதட்சணை வாங்கப்படும் கொடுக்கப்படும் சில திருமணங்களுக்குச் செல்லாமல் என்னை கட்டுப்படுத்திக்கொள்கிறேன். என் சொந்த சகோதரனுடைய திருமணத்தில் வரதட்சணை வாங்கப்பட்டாலும் என்னுடைய நிலை அதுவாகவே இருக்கும். இந்நிலையில் இருக்கும் நான் வரதட்சணைக்கெதிராக எழுதுவது நியாயமாகும். அந்த கொடுமையை, மூட நம்பிக்கையையை எதிர்ப்பதில் அர்த்தம் இருக்கிறது. வரதட்சணை ஒரு சமூக குற்றம், கொடுமை, பெண்ணடிமை, ஆணாதிக்கம் என்றெல்லாம் கருத்துக்களை வாரிவழங்கிவிட்டு, அக்கா சொன்னாள், அம்மா அழுதாள் என்பதற்காக நானும் வரதட்சணை வாங்கினால் என்னை எதைக்கொண்டு அடித்தாலும் தகும். இன்னும் சொல்வதென்றால், நான் வரதட்சணையில் இருந்து விலகி இருக்கிறேன். அதையே மற்றவருக்கும் நாடுகிறேன் என்றால் முதலில் என் குடும்பம், சுற்றத்திற்கே அதைச் சொல்லி நடைமுறைப்படுத்த வேண்டும். கேட்காத பட்சத்தில் அங்கிருந்த வெளியேறி ஊருக்கு உபதேசம் செய்ய வரவேண்டும். மாறாக, என் சுற்றத்தில் இதைச்சொல்லி கெட்ட பெயர் வாங்கிக்கொள்ள விருப்பமில்லை என்ற நிலையிலிருப்பவர்களுக்கும் மேற்சொன்ன தண்டனை பொருந்தும். அதேபோல் விபச்சாரம் சம்பந்தப்பட்ட எந்த நிகழ்வுகளிலும் நான் கலந்துகொள்வதில்லை. அதனாலேயே விபச்சாரத்தை எதிர்க்க எனக்கு முழுத்தகுதி இருக்கிறது. அதைப்பற்றிய எனது எண்ணத்தைப் பதிவு செய்திருக்கிறேன்.
தனக்கென்று வரும்போது தான் வலி தெரியும். மதவாதிகளைவிட கடவுள் நம்பிக்கை இல்லையென்று சொல்லிக்கொள்பவர்களே விஷக் கருத்துக்களை பரப்பி பயங்கரவாதம் செய்கிறார்கள். சமீப காலமாக வட மாநிலங்களில் நடந்து வரும் குண்டுவெடிப்புகளும் கடத்தல் கொலைகளும் கடவுள் நம்பிக்கை இல்லையென்று சொல்லிக்கொள்பவர்களாலேயே நடந்தேருகிறது. தெலுங்கானா பிரச்சனையிலும் நக்ஸலைட்டுகள் ஊடுருவல் இருப்பதாக செய்திகள் சொல்கிறது.'ஊருக்கு ஒரு கருத்தை சொல்லும் முன், நீ முதலில் கடைபிடியப்பா' என்று சொன்னால் மூக்கிற்கு மேல் கோபம் பொத்துக்கொண்டு வருகிறது.
கடவுள் நம்பிக்கையில்லாதவர்கள் எந்நேரமும் அணியும் கருப்புசட்டையை விட்டுவிடுவார்கள், முஸ்லீம்கள் அணியும் வெள்ளைச்சட்டை மீது இவர்களுக்கு எந்த வெறுப்போ தெரியவில்லை. மட்டுமல்லாது...
முஸ்லீம்கள் அமர்ந்து சிறுநீர் கழிப்பதிலும்,
தாடி வைத்துக்கொள்வதிலும்,
மெக்காவிலிருக்கும் காபா 'வை முகம் நோக்கி வணக்குவதிலும்,
அரபியில் வணக்க வழிபாடுகளை செய்வதிலும்,
பின்னர் பிராத்தனைகளை தமிழில் செய்தாலும்,
பிரியாணியில் உப்பு குறைந்துவிட்டாலும்... என ஆகாத மருமகள் போல தொட்டதற்கெல்லாம் குற்றம் சொல்வதையே முழு நேரத்தொழிலாக வைத்திருக்கிறார்கள். குறைகளை கண்டுபிடிப்பதற்கென்றே பெயர் தெரியாதவர்கள் எழுதும் புத்தகங்களை வாங்கிப் படித்து தங்களைத் தாங்களே மெச்சிக்கொள்கிறார்கள்.
இன்னும் சிலர், தங்களுக்கிருக்கும் உயர்சாதி/சமஸ்கிருத வெறுப்பை சொல்லும் போது தன்னை நடுநிலையாளன் என காட்டிக்கொள்ளும் முயற்சிக்காக இஸ்லாமியர்களையும், கிறித்துவர்களையும் வலிந்து இழுத்து கருத்துச் சொல்வதை வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறார்கள். நான் கடவுள் மறுப்பாளன் என்று சொல்லிக்கொண்டே 'தமிழில் வழிபாடு' எனும் கோஷத்தையும் முன்வைக்கிறார்கள். மூட நம்பிக்கையின் எதிர்ப்பவன் என்று சொல்லிக்கொண்டே குடும்பத்தினர் சந்தோஷத்திற்காக அதை செய்பவர்களும் உண்டு. குடும்பத்தினர் சந்தோஷத்திற்காக சில பழக்கங்கள் கடைபடிப்பதை சரி என்று ஏற்றுக்கொண்டாலும், அதே பழக்கத்தை 'மூடநம்பிக்கையின் உச்சம்' என்று பொதுத்தளத்தில் முழங்குவதை என்னவென்று சொல்வது.
மதவாதிகளை விட அதி மூட நம்பிக்கையில் இருப்பது இவர்களே
- பெரியார் என்ற மனிதருக்கு மாலை மரியாதை செய்து வழிபடுவது. அவரது எழுத்தையே வேதமாக கடைபிடிப்பது.
- திருமணம் சட்டவிரோதமாக்கப்பட வேண்டும், பெண்களின் கருப்பையை அறுத்தெறிய வேண்டும் என்ற பெரியாரின் கூற்றை எதிர்க்காதது.
- கடவுள் நம்பிக்கையில்லாதவர்கள் என்றாலும் சிவில் சட்டத்தில் அவர்களுடைய சொத்து ஏதாவதொரு மதச் சட்டதை சார்ந்தே கையாளப்படும். சொத்துக்காக்க ஏதாவதொரு மதச்சட்டத்தை ஏற்க தயாராயிருப்பது.
- இந்துவின் வாரிசு இந்து, முஸ்லீமின் வாரிசு முஸ்லீமாக வருவதைப்போல அல்லாமல் கடவுள் நம்பிக்கையில்லாதவரின் வாரிசுகளில் பெரும்பாலானவர்கள் பகுத்தறிந்து கடவுள் நம்பிக்கையுள்ளவர்களாகவே வளர்வதைப் பார்க்கிறோம்.
- இவர்களுக்கிருக்கும் முக்கியமான பிரச்சனை கட்டுப்பாடு. 'என்னை யாரும் கட்டுப்படுத்தக்கூடாது. நான் தான்தோன்றியாக வாழப்பிறந்தவன்' என்றுச் சொல்லி, மதங்கள் மனிதர்களை கட்டுப்படுத்துவதாக நினைக்கிறார்கள். இவர்களை கட்டுப்படுத்த யாரும் தேவையில்லை என்று நினைத்துக்கொண்டால் அப்படியே இருந்துவிட்டு போக வேண்டியதுதானே. கட்டுப்பாடாக வாழ நினைப்பவனை ஏன் நொட்டை சொல்ல வேண்டும்?
- கடவுள் நம்பிக்கை இல்லாவிட்டால், பலர் காட்டுமிராண்டிகளாக போயிருப்பார்கள்.
கடவுள் நம்பிக்கையையும், வேத வாக்கையும் சரியாக கடைபிடிப்பவர்கள் நிச்சயம் மதவாத செயல்களில் ஈடுபட மாட்டார்கள். கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களும் அவ்வாறென நிரூபித்துக்காட்டவேண்டிய கட்டாயம் அவர்களுக்கு வந்திருக்கிறது, நியாயவான்களாக இருக்கும்பட்சத்தில்.பல தளங்களில் நான் சொன்னதையே இங்கும் பதிக்கிறேன்.
நான் மனிதனாக இருக்கக் காரணம் என் கடவுள் நம்பிக்கையே என்று திடமாக நம்புகிறேன். இந்த கடவுள் நம்பிக்கையிலிருந்து மாறிவிட்டால் மிருகமாகிவிடுவேனோ என்று அச்சப்படுகிறேன்.
அதைவிட, எனக்கும் கடவுள் நம்பிக்கை அற்றுப்போனால், இப்போதிருக்கும் 'கடவுள் நம்பிக்கையில்லாதவன்' என்று சொல்லிக் கொள்பவர்களைப் போல அடுத்தவர்களை குறை சொல்லியே காலம் கடத்த வேண்டுமோ என்ற பயமே அதிகமாக இருக்கிறது. நான் இங்கு முன்மாதிரியாகவே இருக்க எண்ணுகிறேன். அது கடவுள் நம்பிக்கையாளனுக்கான முன்மாதிரியா அல்லது நம்பிக்கை இல்லாதவனுக்கா என்பதற்கு அவர்களுடைய வாழ்வையே பார்க்க வேண்டியிருக்கிறது. இதுவரை பார்த்த வரையில் கடவுள் நம்பிக்கையாளனுக்கு முன்மாதிரியாக வாழ்ந்துவிடவே ஆசைப்படுகிறேன். ஏனென்றால் கடவுள் நம்பிக்கையாளனை விட நம்பிக்கை இல்லாதவன் என்று சொல்லிக்கொள்பவன் போலி வேஷம் போட்டுச் செய்யும் மதவாதமே மிகவும் கொடியதாகத் தெரிகிறது.
மனிதர்களுக்கிடையே கடவுள் பெயரால் துவேஷத்தைப் பரப்பும் அனைவரும் மதவாதிகளே. அது, கடவுள் நம்பிக்கை இல்லையென்று சொல்லிக்கொண்டு பரப்பினாலும் சரியே.
முக்கிய டிஸ்கி: உண்மையில் மூட நம்பிக்கையை எதிர்க்கும் பல சகோதரர்கள், பதிவுலகிலும், அதற்கு வெளியிலும் எனக்கு நட்பாய் இருக்கிறார்கள். அவர்களிடம் நானும் பாடம் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது.
மனிதர்களுக்கிடையே கடவுள் பெயரால் துவேஷத்தைப் பரப்பும் அனைவரும் மதவாதிகளே. அது, கடவுள் நம்பிக்கை இல்லையென்று சொல்லிக்கொண்டு பரப்பினாலும் சரியே.
முக்கிய டிஸ்கி: உண்மையில் மூட நம்பிக்கையை எதிர்க்கும் பல சகோதரர்கள், பதிவுலகிலும், அதற்கு வெளியிலும் எனக்கு நட்பாய் இருக்கிறார்கள். அவர்களிடம் நானும் பாடம் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது.
கடவுள் மறுப்பு கொள்கை என்பது அவரவர் தனிப்பட்ட விசயமாக இருந்தாலும், அதை யாரும் நூறு சதவிதம் செய்கிறார்களா என்றால் சத்தியமாக இல்லை. நீங்கள் சொன்னாமாதிரி ஆட்டுகறியையும், பிரியாணியையும் பார்த்தால் சாப்பாடே கண்கண்ட கடவுள் ஆகிவிடுகிறது. எல்லாம் பப்ளிசிட்டிக்காக செய்யப்படுகிற ஒரு வெட்டித்தனமே கடவுள் மறுப்பைபற்றி பேசுவது.
ReplyDeleteநல்லதொரு பதிவு நண்பரே
ReplyDeleteமீண்டும் படிக்கனும்
நிறைய தெளிவடைய வேண்டும்(நான்)
நான் தெளிவாக நினைப்பதை மற்றவருக்க விளக்க முற்படவேண்டும்.
இன்ஷா அல்லாஹ்.
ஆருமையான பதிவு.
ReplyDelete//மனிதர்களுக்கிடையே கடவுள் பெயரால் துவேஷத்தைப் பரப்பும் அனைவரும் மதவாதிகளே. அது, கடவுள் நம்பிக்கை இல்லையென்று சொல்லிக்கொண்டு பரப்பினாலும் சரியே.// 100% உண்மை.
நல்ல பதிவு நண்பரே வாழ்த்துக்கள்..
ReplyDeleteஒரு துளியில் இருந்து மனிதன் உருவான விதம், அவன் வளர்வது, பின்னர் இறப்பது, இது போன்ற விடயங்களை சிந்திக்கும்போதே கடவுள் பற்றி தெளிவான விளக்கம் கிடைக்கும், இய்ற்கை நியதி என்று விவாதித்தாலும், அந்த நியதியை யாரோ ஒருவர் வரைந்து இருக்க வேண்டும். அடுத்து கடவுள் என்பதற்கு ஒரு அறிவுப்பூர்வமான இலக்கணம் வேண்டும். இவற்றை ஆராயவது பயனளிக்கும். நல்ல இடுகை பீர்.!!
ReplyDeleteமிக மிகச் சிறந்த இடுகை.பிடிங்க ரெண்டுலயுமே ஓட்டு.
ReplyDeleteதெளிவான இடுகை பீர்....நிறைய விஷயம் சொல்லியிருக்கீங்க..
ReplyDeleteபர்தாவை திருமதி சகுந்தலா எழுதிய இந்த பதிவை படித்தீர்களாஆ ?
http://vanjoor-vanjoor.blogspot.com/2008/09/blog-post_09.html
மன்னிச்சுக்குங்க தலைவரே .வழக்கம் போல தமிழ்மணம் தகராறு பண்ணுது.
ReplyDeleteகுழம்பிய குட்டையின் நடுவில் ஒரு தெளிவான சிந்தனை தாமரை
ReplyDeleteமிக நல்ல பதிவு பீர்...
ReplyDeleteநச் பதிவு.
ReplyDeleteநாத்திகனுக்குண்டான டெபினேஷனே இங்கே மாறிருச்சு தல..! ஆத்திகனை விமர்சிப்பவனும் திட்டுபவனுமே நாத்திகன்னு ஆகிப் போச்சு.
நானே, நிறைய தடவை ஆதங்கப் பட்டிருக்கேன். பெரியாருக்கேண்டா மாலை மரியாதை பண்றீங்கன்னு. விவேக் ஒரு படத்துல சொன்ன மாதிரி இவனுக பண்றது "பெரியார் தெருவில் மத ஊர்வலம்" பண்ற மாதிரி இருக்கு.
\\நான் மனிதனாக இருக்கக் காரணம் என் கடவுள் நம்பிக்கையே என்று திடமாக நம்புகிறேன். இந்த கடவுள் நம்பிக்கையிலிருந்து மாறிவிட்டால் மிருகமாகிவிடுவேனோ என்று அச்சப்படுகிறேன்.\\
ReplyDelete"கடவுளை நம்புவனே மனிதன்" என்கிற கருத்தை மறைமுகமாக சொல்வதைப் போல உள்ளதோ இந்த வரிகள்..!?!?
\ \கடவுள் நம்பிக்கை இல்லாவிட்டால், பலர் காட்டுமிராண்டிகளாக போயிருப்பார்கள். \\
ReplyDeleteஇது காமெடிங்ண்ணா...!
நல்ல விளக்கமான பதிவு பீர். “Charity begins at home" என்ற கருத்தில் நான் எழுத நினைத்திருந்தேன். நல்லவேளை, எழுதவில்லை. இவ்வளவு விவரமில்லை எனக்கு.
ReplyDeleteநாத்திகர்கள் என்று சொல்லிகொள்ளும் எல்லாருடைய வீட்டிலும் பார்த்தீர்களென்றால், பக்கா ஆத்திகம் இருக்கும். கேட்டால், அவர்களின் சுதந்திரத்தில் தலையிட மாட்டார்களாம். சொந்த மனைவியிடமே விளக்கி ஏற்க வைக்க முடியாத இவர்கள் ஏன் நம்மைத் துன்புறுத்துகிறார்களோ? வீட்டில எலி, வெளியில புலி கதைதான் இவர்கள்.
அல்லது தாங்கள் செய்யும் பாவங்களுக்கு மனைவியின் பிரார்த்தனை மூலம் விமோசனம் பெற்றுவிடலாம் என்ற நம்பிக்கையோ?
மிக மிக அருமையான இடுகை பீர். இரண்டுமுறை படித்துவிட்டுதான் பின்னூட்டம் போடுகிறேன்.
ReplyDelete///மனிதர்களுக்கிடையே கடவுள் பெயரால் துவேஷத்தைப் பரப்பும் அனைவரும் மதவாதிகளே. அது, கடவுள் நம்பிக்கை இல்லையென்று சொல்லிக்கொண்டு பரப்பினாலும் சரியே///
ReplyDeleteரொம்ப சரியாச் சொன்னீங்க.
தெளிவான இடுக்கைக்கு எனது பாராட்டுக்கள்
ReplyDeleteஒவ்வொரு அசைவையும், வளர்ச்சியையும் கூர்ந்து கவனித்தால் நிச்சயம் ஏதோ ஒரு மனித சக்திக்கு மேலான ஒரு சக்தி இருப்பது தெரியும், அதுதான் நம்மை படைத்த இறைவன்.
நாத்திகம் பேசும் நிறையபேர் தன் குடும்பத்தை கூட திருத்தமுடியாது, யாராவது ஒரு நபர் இறைவணக்குடையவராக இருப்பர்.
// மதவாதிகளைவிட கடவுள் நம்பிக்கை இல்லையென்று சொல்லிக்கொள்பவர்களே விஷக் கருத்துக்களை பரப்பி பயங்கரவாதம் செய்கிறார்கள். //
ReplyDeleteஇந்தியாவில் நடக்கும் தீவிரவாத செயல்கள் கூட இவர்களால் தான் நடக்கிறது என்று சொல்லுவிங்கபோல. -:))))))
//சமீப காலமாக வட மாநிலங்களில் நடந்து வரும் குண்டுவெடிப்புகளும் கடத்தல் கொலைகளும் கடவுள் நம்பிக்கை இல்லையென்று சொல்லிக்கொள்பவர்களாலேயே நடந்தேருகிறது.//
ஒரு சதவிகிதம்தான் அவங்க மீதி 99சதவிகிதம் யாரு ? & யாரு ? என்று உங்களுக்கே தெரியும் -:)
//கடவுள் நம்பிக்கை இல்லாவிட்டால், பலர் காட்டுமிராண்டிகளாக போயிருப்பார்கள்.//
உங்களுக்கு நகைச்சுவை உணர்வு ரொம்ப அதிகம், இப்ப உலகம் முழுக்கும்( எல்லா நாடுகளிலும் இலங்கையையும் சேத்து ) இருக்கும் காட்டுமிராண்டிகள் யாருன்னு உங்களுக்கு சொல்ல தேவை இல்லை.
***
கடவுள் மறுப்புன்னு சொன்னாலே உடனே எல்லாம் பெரியார் பின்னாடி போறவன்னு நினச்சிட்டிங்களா ? உங்களுக்கு பெரியார் மேல அல்லது தி.க மேல வெறுப்புன்னா நேர அவங்க பேர போட்டு எழுதுங்க அதவுட்டுபுட்டு, கடவுள் மறுப்பு கருத்து உடையவன் மட்டும் காட்டுமிராண்டி என்கிற அளவில் எழுதிருப்பது வருத்தத்துக்கு உரியது.
***
பர்தா அணிவது , தொப்பி, தாடி, தொழுகை,பட்டை,நாமம்,காவி உடை , மொழி இவைகள் எல்லாம் தனிமனிதனின் உரிமை எவனுக்கும் இதை எல்லாம் போடாதே என்று கூற தகுதி இல்லை ஆனால் விரும்பாத ஒருவருக்கு அணிவிக்கும் பொழுது / கட்டாயபடுத்தும் பொழுது ரோட்டுல போற குப்பனுக்கும் சுப்பனுக்கும் கூட அதை எதிர்க்க உரிமை உண்டு.
***
எல்லா மதங்களும் அன்பைத்தான் அடிநாதமாக கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால் இன்று உலகில் இழந்த பெரும்பாலான உயிர்கள் மதத்தின் பெயரால்தான் எடுக்கப்பட்டது என்று வரலாறு கூறுகிறது.
மனிதத்தை கற்றுக்கொடுக்கவந்த மதங்கள் இன்று மனிதத்தன்மையை இழக்கதானே பயன்படுகிறது.
மதத்தை நிறுவியவன் மனிதன்தான் என்று நாம் மறந்துவிட கூடாது.
நான் ஒரு இந்து/முகமதியன்/கிருத்தவன்/...... என்று சொல்லுவது பெருமை அல்ல நான் மனிதன் என்று சொல்லுவது தான் மனிதத்தை வளர்க்கும்.
***
சிறுபான்மையினருக்கு ஒரு பிரச்சனை என்றால் கடவுள் மறுப்பு / சுயமரியாதை / பொதுவுடைமை கூட்டம் தான் முதலில் அவர்களுக்காக குரல் கொடுக்கிறது... அப்பொழுது மட்டும் ஏற்பவர்கள் அவர்கள் விமர்சனம் வைக்கும்பொழுது அறிவை முந்திக்கொண்டு மதவாதிகளில் உணர்ச்சி மேலோங்குவது எந்தவகையை சாரும் ?
இந்த விசயத்தில் நடுநிலையான இடுகை எழுதும் பொழுது தான் சார்ந்திருக்கும் மதத்தை விட்டு வெளியேவந்து சுயசார்பின்றி எழுதவேண்டும்.
பல வரிகளில் உங்கள் கருத்து ஏற்புடையதாக இருந்தாலும் , சில வரிகளை பார்க்கும் பொழுது இது நடுநிலையான இடுகையாக எனக்கு தோன்றவில்லை...
குறிப்பு : அந்த காட்டுமிராண்டி(பெரியார்) போராடினதுனாலதான் நீங்கள், நான் எல்லாம் படிக்கமுடிந்தது, அதற்காக பெரியாரின் அனைத்து கொள்கைகளையும் ஏற்கிறேன் என்று அர்த்தம் கிடையாது -:)
வெற்றி-[க்]-கதிரவன்
[கடவுளை மறுப்பவனும் அல்ல கடவுளை/மதத்தை கட்டிக்கொண்டு அழுபவனும் அல்ல]
ரைட்டு!
ReplyDeleteவெற்றி-[க்]-கதிரவன், டிஸ்கி படித்திருப்பீர்கள், நீங்கள் டிஸ்கியில் இருப்பவர் என்றே நினைக்கிறேன்.
ReplyDelete1. மதச்சார்பற்றவன் எனும் போர்வையில் விஷமக்கருத்துக்களால் பயங்கரவாதம் செய்யப்படுகிறது என்பதில் மாற்றுக்கருத்தில்லை. அதேபோல சமீப கால தீவிரவாத செயல்கள் கடவுள் மறுப்பாளர்களால் தான் நடத்தப்படுகிறது என்பதும்.
2. [பார்க்க பதில் 1]
3. ஐயா, இருக்கும் காட்டுமிராண்டிகள் போதும், இன்னும் புதிதாக பலர் வேண்டாம் என்றே சொல்கிறேன். நான் உட்பட...
4. கடவுள் மறுப்புள்ளவன் எல்லாம் காட்டுமிராண்டியோ, நம்பிக்கையாளன் எல்லாம் நல்லவனோ என்று எங்குமே சொல்லவில்லை. ஆனால், நண்பர் ராஜூ சொன்னது போல, கடவுள் மறுப்பாளனுக்கான தகுதியாக கடவுள்/ நம்பிக்கையாளனை திட்டுவது ஒன்றே போதும் என்பதுபோலாகிவிட்டது.
5. மிகச்சரியான கருத்து. விரும்பி ஏற்றுக்கொண்டுள்ள நம்பிக்கையை [தொப்பி, தாடி, வணக்கம், பட்டை, பர்தா, காவி, மொழி உட்பட] விட்டு விலகச்சொல்வது சரியென்று சொல்கிறீர்களா? நான் விரும்பி ஏற்றுக்கொண்டுள்ள [பொதுவில் தொந்தரவில்லாத] என் உரிமையை தடுக்க எந்த குப்பனுக்கும் சுப்பனுக்கும் உரிமை இல்லை.
6. வரலாறு சரியே... நான் இல்லை என்று சொல்லவில்லை. இருக்கும் பிரச்சனைகள் போதும், கடவுள் மறுப்பு என்ற பெயரில் அதிகப்படியான பயங்கரவாதம் வேண்டாம் என்றே நான் சொல்கிறேன்.
7. சிறுபான்மையினருக்கு மட்டுமல்ல பெரும்பான்மையினருக்கும் ஒரு பிரச்சனை என்றால் குரல் கொடுக்கும் கடவுள் மறுப்பு / சுயமரியாதை / பொதுவுடைமை சகோதரர்களையே டிஸ்கியில் குறிப்பிட்டுள்ளேன். அவர்கள் விஷம கருத்துக்களை பரப்புவதில்லை. மூட நம்பிக்கைகளுக்கு எதிரான கருத்துக்களையே பரப்புகிறார்கள் மற்றும் உண்மையாக பின்பற்றுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
8. என் [கடவுள் நம்பிக்கை] தரப்பு நியாயத்தையே சொல்கிறேன். அதில் பல நடுநிலையாகவும் இருக்கலாம்.
9. மூட நம்பிக்கைக்கு எதிராக பெரியார் போராடினார் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. பாராட்டத்தக்கதும் கூட.. ஆனால் அவர் சொன்னதில் அத்தனையும் ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல.
கடவுள் நம்பிக்கை என்பது தனிநபர் சார்ந்த விஷயம், அவரவர் அனுபவத்தைப் பொறுத்தது மட்டுமே.
ReplyDeleteபிரச்சினை, ஒரு குழுவாகச் சேர்ந்து கொள்வதில்கூட இல்லை, குழுவாக என்னுடையது தான் சிறந்தது,என்னுடைய நம்பிக்கையை மற்றவர்களும் ஏற்றுக் கொண்டுதானாக வேண்டும் என்று ஆரம்பிக்கும்போது தான் சிக்கல் ஆரம்பிக்கிறது.
ஒரு உதாரணத்துக்கு,ஆப்ரஹாமைட் மதங்கள் மூன்றுமே சகிப்புத் தன்மையற்று இருந்ததையே வரலாறு சொல்கிறது. இவ்வளவு அழிவுக்குப் பின்னாலும் கூட யாரும் பாடம் கற்றுக் கொண்டதாகக் காணோம்!
இந்தச் சூழலில் தான் இறைமறுப்பு, அல்லது நாத்திகம் உருவாகிறது, அதுவும் இயல்பானதுதான்.
இங்கே நாத்திகனாக இருப்பதா, ஆத்திகனாக இருப்பதா என்பது தனிநபர்சார்ந்த, அவரை மட்டுமே பொறுத்த விஷயம் என்று இருந்தாலே தொண்ணூறு சதவீதப் பிரச்சினைகள் தீர்ந்துவிடும்.
பீர் என்கிற தனிமனிதரின் நல்ல எண்ணங்களாக இதைப் பார்க்க முடிவதில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது!
ஒரு தேவதாசியை விபச்சாரி என்று சொன்னதற்காக அவள் கோபித்துக்கொள்வது போலும், ஒரு ‘வக்கீலை’ அவர் காசுக்குப் பேசுகிறவரேயொழிய, நேர்மைக்காகப் பேசுகிறவல்லர் என்று சொன்னால் அவர் கோபித்துக் கொள்வது போலும், ஒரு வியாபாரியை பொய்பேசுகிறவர் என்று சொன்னால் அவர் கோபித்துக்கொள்வது போலும் -கடவுள் நம்பிக்கைகார்ர்களை ‘முட்டாள், அயோக்கியன், காட்டு மிராண்டி’ என்று சொன்னால் அவர்கள் கோபித்துக கொள்கிறார்கள்.
ReplyDeleteஒரு தேவதாசியை விபச்சாரி என்று சொன்னதற்காக அவள் கோபித்துக்கொள்வது போலும், ஒரு ‘வக்கீலை’ அவர் காசுக்குப் பேசுகிறவரேயொழிய, நேர்மைக்காகப் பேசுகிறவல்லர் என்று சொன்னால் அவர் கோபித்துக் கொள்வது போலும், ஒரு வியாபாரியை பொய்பேசுகிறவர் என்று சொன்னால் அவர் கோபித்துக்கொள்வது போலும் -கடவுள் நம்பிக்கைகார்ர்களை ‘முட்டாள், அயோக்கியன், காட்டு மிராண்டி’ என்று சொன்னால் அவர்கள் கோபித்துக கொள்கிறார்கள்.
ReplyDelete//கடவுள் நம்பிக்கைகார்ர்களை ‘முட்டாள், அயோக்கியன், காட்டு மிராண்டி’ என்று சொன்னால் அவர்கள் கோபித்துக கொள்கிறார்கள். //
ReplyDeleteரொம்ப நன்றி
சுயமரியாதைக்காரர்களின் உழைப்பு பலனளிக்காமலும் போவதில்லை. சேரி சீறுவதும், அக்ரகாரம் அழுவதும், பூசுரர் பார்ப்பனரானதும், சூத்திரன் தமிழனானதும், புரோகிதனின் கெம்பீரநடை தள்ளாட்டமானதும், புராணிகளின் குரல் மங்கினதும், தத்துவார்த்தங் கூறுவோர் தடுமாற்றமடைந்ததும் எதனால்? சடங்ககுகளை செய்வதிலே பெருமை கொண்டிருந்தவர்கள் இன்று ஒழிக்க முடியவில்லையே, பழக்கமாகி விட்டதே, படிப்படியாகத்தானே நீக்க முடியும் என்ற பக்குவமாகப் பேசி சமாதானங் கூற முன் வருவது எதனால்? நீறு நிகண்டு தூக்கி, நாம நெற்றி என வேடமிடுவோரின் எண்ணிக்கை குறைவதன் காரணமென்ன? பொதுவாக வைதீகத்தின் ஆட்டம் ஓரளவு ஒடுங்கக் காரணம் என்ன? சுயமரியாதைக்காரனின், சளையாத உழைப்பு, வைதீக அச்சு முறிந்து, சுனாமாக்காரன் அனுபவித்த மண், கல் வீச்சு, காலம் முழுவதும் சொல்லடிப்பட்டு சோர்வின்றி உழைக்கும் தலைவரின் தளராத ஊக்கம் இவைகளே. விதவைத்துயரம் துடைக்கப்பட்டது. கலப்பு மணம் ஓங்கிற்று. கபோதி காணலாயினர். ஊமைகள் உக்கிரமாக பேசினர். புரட்சி மனப்பான்மை தாண்டவமாடிற்று சமுதாயத்தில் சரியானதோர் புரட்சி, துருக்கியில் கமால் பாட்சாவும், சீனாவில் சன்யாட்சனும் செய்தது போன்ற மாறுதல் இங்கு ஏற்படத் தொடங்கிற்று.
ReplyDelete\ \கடவுள் நம்பிக்கை இல்லாவிட்டால், பலர் காட்டுமிராண்டிகளாக போயிருப்பார்கள். \\
ReplyDeleteசிவலிங்கம் சாட்சி சொல்வது, எலும்பு பெண்ணுருவாவது, பண ஓலைத் துண்டு வெள்ளத்தை எதிர்த்துச் செல்வது, அறுத்து கரி சமைத்த பிள்ளை உயிர்பெற்று எழுந்து வருவது, பன்றியும் அன்னமும் அடிமுடி தேடுவது, ஒருவர் முதுகில் பிரம்பால் அடித்ததும் அனைவர் முதுகிலும் அடி விழுவது, யானை கதறினதும் ஆண்டவன் வருவது, சிலங்தி பந்தல் போடுவது, சிவனாரை பூஜித்த யானை சிவபாதம் அடைவது போன்றவைகள், எங்கும் எக்காலத்திலும் நிகழ்ந்திருக்க முடியாத கட்டுத் கதைகள். அண்டப்புளுகும் கூட!
அந்தந்த மதவாதிகள், தங்கள் தங்கள் சமயத்திற்கு ஆள் சேர்க்கவும், அவ்வாறு சேர்த்த பேர்களை ஏமாற்றி சுக ஜீவிகளாக காலங்கழிக்கவும் செய்துவைத்த தந்திரங்களே ஆகும். இவையனைத்தும் காட்டு மிராண்டிகாலத்துக் கருத்தோவியங்களாகும். இந்தக் குருட்டுப் போக்கு இந்த நாட்டில் மட்டுமன்றி எந்த நாட்டிலும் ஓர் காலத்தில் மக்களிடம் இருந்துதான் வந்திருக்கிறது. இந்த இழிநிலை, இருண்ட மதி மற்ற நாடுகளில் எல்லாம் மாறி அறிவுக்குகந்த புதிய போக்கு ஏற்பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டன.
well said... 100% agree with you
ReplyDeleteI don't think believers should actually debate on their beliefs :)- This is my personal opinion !
ReplyDeleteஅவரவர் நம்பிக்கை அவரவர்க்கு.
ReplyDeleteஅருமையான பதிவு. ஓட்டு போட்டாச்சு
ReplyDeleteஇண்டர்னெட், விமானம் இன்னும் ஏராளமான விசயங்களை கண்டுபிடித்த காண்டுமிராண்டிகள் இருப்பதால்தான் உலகில் சண்டை வருகிறது.
ReplyDeleteபன்முக சமுதாயம் ஏன் இந்தியாவிற்கு மட்டும்? உலகிற்கே பொதுவானதாக இருக்கவேண்டும்.
கடவுள் நம்புபவனோ,நம்பதாவனோ அனைவருக்கும் வாழும் உரிமை உண்டு. மதங்களின் கருத்து மதங்களை நம்பாதவனை மதிக்கிறதா? அதே போல்தான் நம்பாதவன் மதங்களை மதிப்பதில்லை. மதங்களுக்கு இருக்கும் உரிமை அவனுக்கும் உண்டு.(உம்) (நம்பாதவன் நரகத்தில் நெருப்பில் எரிக்கப்படுவான்).
பன்முக சமுதாயத்தில் நாத்திகனுக்கும் இடமுண்டு, அவனை விமர்சிக்கவும் உங்களுக்கு உரிமையுண்டு, நரகமெல்லாம் கிடையாது.தொடர்ந்து விமர்சிக்கவும்.
This comment has been removed by the author.
ReplyDelete//
ReplyDeleteகுடுகுடுப்பை said...
இண்டர்னெட், விமானம் இன்னும் ஏராளமான விசயங்களை கண்டுபிடித்த காண்டுமிராண்டிகள் இருப்பதால்தான் உலகில் சண்டை வருகிறது.
பன்முக சமுதாயம் ஏன் இந்தியாவிற்கு மட்டும்? உலகிற்கே பொதுவானதாக இருக்கவேண்டும்.
கடவுள் நம்புபவனோ,நம்பதாவனோ அனைவருக்கும் வாழும் உரிமை உண்டு. மதங்களின் கருத்து மதங்களை நம்பாதவனை மதிக்கிறதா? அதே போல்தான் நம்பாதவன் மதங்களை மதிப்பதில்லை. மதங்களுக்கு இருக்கும் உரிமை அவனுக்கும் உண்டு.(உம்) (நம்பாதவன் நரகத்தில் நெருப்பில் எரிக்கப்படுவான்).
பன்முக சமுதாயத்தில் நாத்திகனுக்கும் இடமுண்டு, அவனை விமர்சிக்கவும் உங்களுக்கு உரிமையுண்டு, நரகமெல்லாம் கிடையாது.தொடர்ந்து விமர்சிக்கவும்.
//
I second this!
I would like to post a detailed reply...if time permits may be tomorrow...
For starters, I am an athiest...And I am always ready to face questions/criticisms...But what about believers? For example, Is Qur'on ready to accept anybody questioning it or Prophet? Remember Fatwa?? Remember witch-hunting?
In the last few years how many non-connected people are killed by so-called believers in the name of religion comparing with people killed by atheists??
Yes, I agree, we criticize that "so-called" believers, because the bottom line of all religions is to capture the seats of power...(And also, it is that those so called believers who always try to force themselves upon others)...No exception....And then force their will on people who have no faith in those "so called" prophets, gods, religions etc. You want examples? There are plenty. Starting from Mogul invasion of India, spread of Christianity in Europe, the nucleus of Srilankan problem, happenings in Sudan (Which militia is actually killing people in Darfur? And for what purpose??)....the ultimate Goal of Taliban....The believers murdered a a lot more innocent people than atheists ever did.
You talk about women willingly covering their face? Oh right....I can sight/site you loads of examples where they are forced to wear it...How about a girl who was canned in Malaysia, because she was drinking beer??
More, if i can find some time...
The bottom line is, religion and I mean all the religions....Hinduism/Islam/Christianism to name a few... brought so much problems than good to the mankind...I dont really want to get started with those so called prophets/Gods and their "Golden" words...
And about respecting other peoples beliefs that's an entirely different topic...which I hope to post later.
Thank you.
//
ReplyDeleteநவயுகம் said...
ஒரு தேவதாசியை விபச்சாரி என்று சொன்னதற்காக அவள் கோபித்துக்கொள்வது போலும், ஒரு ‘வக்கீலை’ அவர் காசுக்குப் பேசுகிறவரேயொழிய, நேர்மைக்காகப் பேசுகிறவல்லர் என்று சொன்னால் அவர் கோபித்துக் கொள்வது போலும், ஒரு வியாபாரியை பொய்பேசுகிறவர் என்று சொன்னால் அவர் கோபித்துக்கொள்வது போலும் -கடவுள் நம்பிக்கைகார்ர்களை ‘முட்டாள், அயோக்கியன், காட்டு மிராண்டி’ என்று சொன்னால் அவர்கள் கோபித்துக கொள்கிறார்கள்.
//
இல்லை நவயுகம் அவர்களே...
ஊரின் மிகப்பெரிய, மிக மோசமான தாசியாக இருப்பவள் அடுத்தவர்களை தாசி என்று ஏளனம் செய்வது குறித்தே கோபப்படுகிறார்கள்...
முட்டாளும், அயோக்கியனும், காட்டுமிராண்டியுமாக இருப்பதில் புகழ்பெற்றவர்கள் யார் என்று எல்லாருக்கும் தெரியும்....எல்லாருக்கும் தெரிந்த உதாரணம் பின்லேடன்! அவன் நாத்திகவாதி என்று சாதிக்க விரும்புகிறீர்களா???
நல்ல இடுகை.
ReplyDeleteஉங்களின் சில கருத்துகளில் உடன்படுகிறேன்,சில கருத்துகளை ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை.
மொத்தத்தில் இது உங்களின் பார்வை,அதை முன்வைக்க உங்களுக்கு உரிமை உண்டு.
May be it is off the topic. But see how much Islam offered to science. I am sure they(pahuthariuvadhi endur koorum pathiarivuvathigal) will come up with counter argument....
ReplyDeletehttp://www.youtube.com/watch?v=tIMifWU5ucU
periyar pondra vaaysol veerargalal thamilan irandupattu nirkindran.tamilnaatil koothadigalai uruvaakiyadhai thavira avar veru edhaiyum seyyavillai.evan aandaalum avanukku jaalra adithar.tamilnaatin ella valarchikkum(kalvi utpada) kaaranam kamaraj oruvarey,idhu sathyam.VIZZY
ReplyDeleteபெரியாரை வணங்குவது, கருப்புச்சட்டை அணிவது போன்ற நிறைய கருத்துக்கள் ஒத்துப்போகின்றன நண்பா...
ReplyDeleteபிரபாகர்.
நவயுகம், உங்கள் பின்னூட்டக் கருத்துக்களோடு முழுவதும் ஒத்துப்போகிறேன்.
ReplyDeleteபெரியாரின் தொண்டு பாராட்டுக்குரியது என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
தமிழரின் மூட நம்பிக்கைகள், ஏற்றத்தாழ்வுகள் இன்னபிற பிரச்சனைகளுக்கெல்லாம் மிக முக்கிய காரணியாக அவர் கண்டெடுத்தது 'பார்பானியம்' மட்டுமே. ஆரிய; சூத்திர வேறுபாட்டை ஒழிக்க வேண்டும் என்றே கடைசிவரை போராடினார். அவருடைய கருத்துக்கள் அனைத்தும் பார்பனியத்தை எதிர்ப்பதாகவே அமைந்துவிட்டது. அதனாலேயே முழு வெற்றியடைய முடியவில்லை என்பதும் உண்மை. ம்.. இருக்கலாம், ஆரிய; சூத்திர வேறுபாடுகள் பெருமளவு குறைந்துவிட்டது. ஆனால், சாதிய ஏற்றத்தாழ்வுகள் முழுவதுமாக ஒழிந்தபாடில்லை என்பதையும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். கடவுள் மறுப்பு என்ற கருத்தில் அவர் உறுதியாக இருக்கவில்லை. சில நேரங்களில் கடவுளை ஆதரித்திருக்கிறார்.
மீண்டும், உங்கள் பின்னூட்டக் கருத்துக்களோடு முழுவதும் ஒத்துப்போகிறேன். [போலி] கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களை ‘முட்டாள், அயோக்கியன், காட்டு மிராண்டி’ என்று சொன்னால் நீங்களும் கோவித்துக்கொள்கிறீர்களே. உங்கள் நம்பிக்கையை குறை கூறவில்லை, கடவுள் நம்பிக்கை இல்லை என்ற போர்வையில் இருப்பவர்களை மட்டுமே நான் சொல்கிறேன்.
மூட நம்பிக்கையை ஒழிப்பதில் பெரியார் தொண்டர்களின் பங்கு அளப்பரியது. அதேநேரம் அவர்களிடத்திலும் மூட நம்பிக்கை இருக்கிறது என்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.
சகோதரி ஹூசைனம்மாவின் பின்னூட்டத்தையும் வாசிக்கவும். Charity begins at home
Athu Sari.
ReplyDelete//I can sight/site you loads of examples where they are forced to wear it...How about a girl who was canned in Malaysia, because she was drinking beer??
//
loads of examples..but you ended up writing a wrong example.
the girl was a model, she was sentenced to that puniushment, yes, her punishment was stopped once, and till date she was never been canned.
"practice what you preach" அப்படின்னு சொன்னா யாராலையும் preach பண்ண முடியாது பீர்....
ReplyDelete//குறைகளை கண்டுபிடிப்பதற்கென்றே பெயர் தெரியாதவர்கள் எழுதும் புத்தகங்களை வாங்கிப் படித்து தங்களைத் தாங்களே மெச்சிக்கொள்கிறார்கள்//
என்னுடைய கருத்துகளை நிறைய அங்கேயே எழுதிட்டேன், முடிந்தால் படிக்கவும்.
//There are plenty. Starting from Mogul invasion of India, spread of Christianity in Europe, the nucleus of Srilankan problem, happenings in Sudan (Which militia is actually killing people in Darfur? And for what purpose??)....the ultimate Goal of Taliban....The believers murdered a a lot more innocent people than atheists ever did.
ReplyDelete//
how about World War 1 and World war 2.....by the way you are quoting examples, you should have included that also.
உங்களுடைய கட்டுரையில் ஒரு சில இடங்களில் உங்களது நல்ல எண்ணங்கள் தெரிகிறது. ஆனால் பல இடங்களில் நடுநிலையாகவும் அதேசமயம் கடவுள் நம்பிக்கையை விட்டு ஒரு அடி கூட எடுத்து வைக்க முற்படாதவராகவும் குழம்பி போய் எழுதி இருக்கிறீர்கள்.
ReplyDeleteஅதனாலேயே அவனை வணங்குகிறோம். அவனிடத்தில் உதவி தேடுகிறோம்.
இது வரை நீங்கள் சொல்லி இருக்கும் விஷயங்கள் ஏதோ சாமியார் ஞான உபதேசம் செய்யற மாதிரி இருக்கு. தப்பா நினைச்சுக்காதீங்க. அப்படித்தான் தோணுச்சு.
அவனை இதை செய்து காட்டச்சொல், அதை நிறுத்திக்காட்டச்சொல் என்பதாகவே வாதிடுகிறார்களே தவிர ஒருபோதும் அதைவிடுத்து வெளியே வருவதில்லை.
ஏன் கடவுள் நம்பிக்கையாளார்கள் கூடத்தான் இப்படி பக்கம் பக்கமாய் அரூபம், உணர்ந்து மட்டுமே அறிய முடிபவன் என்று திரும்ப திரும்ப ஒரே மாதிரியே பேசுகிறீர்களே தவிர அதைத் தாண்டி வர மறுக்கிறீர்கள். சரி நீங்கள் உணர்ந்து விட்டீர்கள் என்பதற்காக நாங்களும் உணர்ந்து விட்டதாக சொல்ல வேண்டுமா? நாங்கள் உணர்வால் அறியும் வரை கேள்விகள் கேட்கப்பட்டுக் கொண்டுதானே இருக்கும். இல்லை கேள்விகளே கேட்காமல் ஆட்டு மந்தைகளாய் இருக்க வேண்டுமா என்ன?
அந்த ஆட்டை இறைவனின் பெயர் சொல்லி அறுப்பது மூட நம்பிக்கை. அந்த வீட்டிற்கு வரும் பெண்கள் பர்தா போட்டிருப்பது பெண்ணடிமைத்தனம். இஸ்லாமிய பெண்கள் பர்தாவை வீசியெறிய வேண்டும் என்றெல்லாம் பகுத்தறிவு கொள்கைகளை அவிழ்த்து விடுகின்றனர்.
கடவுள் நம்பிக்கையாளார்கள் பிரச்சாரமே செய்யாதது போலவும், கடவுள் மறுப்பாளர்கள் மட்டுமே பிரச்சாரம் செய்வது போலவும் பேசியிருக்கின்றீர்கள். நாம் செய்யும் செயல்கள், சடங்குகள் ஒவ்வொன்றிற்கு பின்னாலும் கடவுளின் பெயரால் வயிற்றை வளர்க்கும் கூட்டத்தின் கருத்தாக்கங்கள் நிறைண்டிருக்கின்றது. அதை கேள்விகள் கேட்கக்கூடாதா?
பர்தா விஷயத்தில் உங்களது பார்வை வருத்தப்பட வைக்கின்றது.
பர்தா அணியும் பெண்கள் அனைவரும், 'நான் விரும்பியே பர்தா அணிகிறேன்'
இங்கே அனைவரும் என்ற வார்த்தையை அழகாய் புகுத்தி இருக்கின்றீர்கள். எவ்வளவுதான் நன்றாக சிந்திக்கும் நண்பர்கள் கூட பெண்ணடிமை விஷயத்தில் பிற்போக்காளர்களாகவே இருப்பது வருத்த்ப்பட வேண்டிய, வெட்கப்பட வேண்டிய ஒன்று. எத்தனை பெண்களுக்கு பர்தா எனக்கு வேண்டாம் என்று சொல்ல சமூகம் விட்டு வைக்கின்றது.
வரதட்சணை, மூடநம்பிக்கை குறித்தான உங்களது கருத்துக்களை மறு பேச்சு பேசாமல் ஏற்றுக் கொள்கின்றேன்.
தெலுங்கானா பிரச்சனையிலும் நக்ஸலைட்டுகள் ஊடுருவல் இருப்பதாக செய்திகள் சொல்கிறது.
பாஸ் தெலுங்கானா பிரச்சினையைப் பற்றிய முழு வடிவம் உங்களுக்கு தெரியுமா? ”செய்திகள் சொல்கின்றது” என்பது மாதியான வார்த்தைகளை வைத்துக் கொண்டு எதை நிறுவ முயல்கின்றீர்கள்? தெலுங்கானாவின் உள்ளடக்கமே வேறு. அதை புரியாமல் எழுத முயற்சிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கின்றேன்.
இன்னும் சிலர், தங்களுக்கிருக்கும் உயர்சாதி/சமஸ்கிருத வெறுப்பை சொல்லும் போது தன்னை நடுநிலையாளன் என காட்டிக்கொள்ளும் முயற்சிக்காக இஸ்லாமியர்களையும், கிறித்துவர்களையும் வலிந்து இழுத்து கருத்துச் சொல்வதை வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்துக்களை மட்டும் குற்றம் சொன்னால் ஏன் மற்ற மதக்காரர்கள் உங்கள் கண்ணுக்குத் தெரிவதில்லையா என்று கேட்பது, எலலாவற்றிலும் நடக்கின்ற பிற்போக்குத்தனங்களை சொன்னால் நடுநிலையாளன் வேஷம் போடுகிறான் என்று சொல்வது... ஆகாத மருமகள் போல எதைச் சொன்னாலும் குற்றம் சொல்வது நீங்களா நாங்களா?
நான் கடவுள் மறுப்பாளன் என்று சொல்லிக்கொண்டே 'தமிழில் வழிபாடு' எனும் கோஷத்தையும் முன்வைக்கிறார்கள்.
இந்தக் கேள்வி ஏற்கனவே பலமுறை எழுப்பப்பட்டு விட்டது. ஒரு ஆணாகிய பெரியார்தான் பெண் விடுதலைக்காக பேசி இருந்திருக்கிறார். ஓர் தாழ்த்தப்படாத சாதியைச் சேராத இவர்தான் பல்வேறு சமூக மக்களின் எழுச்சிக்கு காரணமாய் இருந்திருக்கிறார். அதை போலத்தான் கடவுள் மறுப்பாளர்களாய் இருந்தும் தமிழ் மொழியில் வழிபாடு செய்வதை முன்மொழிகின்றார்கள். என்ன செய்ய சொல்கின்றீர்கள். சம்ஸ்கிருதம் தேவ பாஷைடா அம்பி? என்று சோவும், இன்ன பிற பிராமணர்களும் சொல்வதை கேட்டுக் கொண்டு என்னமோ பண்ணுங்க என்று அமைதியாய் போகச் சொல்கின்றீர்களா?
கடவுள் நம்பிக்கையில்லாதவர்கள் என்றாலும் சிவில் சட்டத்தில் அவர்களுடைய சொத்து ஏதாவதொரு மதச் சட்டதை சார்ந்தே கையாளப்படும். சொத்துக்காக்க ஏதாவதொரு மதச்சட்டத்தை ஏற்க தயாராயிருப்பது.
ReplyDeleteபாஸ் நீங்க பேசறதுல ஏதாவது லாஜிக் இருக்கா?
பெரும்பாலானவர்கள் பகுத்தறிந்து கடவுள் நம்பிக்கையுள்ளவர்களாகவே வளர்வதைப் பார்க்கிறோம்.
பகுத்தறிவுவாதிகள் பலரும் கடவுள் நம்பிக்கையாளர்களின் பிள்ளைகளே. இது அவரவர் சிநதனை வளார்ச்சியைப் பொறுத்தது. இதன் மூலம் நீங்க்ள் சொல்லவரும் பாயிண்ட்??? அப்புறம் கடவுள் நம்பிக்கையாளர்களில் பெரும்பாலானோர் பகுத்தறிபொஅவர்கள் இல்லை என்பது என்திடமான எண்ணம். அதுவும் குறிப்பாய் மதம் மற்றும் கடவுள் விஷயங்களில். இல்லைன்ன தாய்மொழியில் இறைவழிபாடு, காரண காரியம் எதுவும் கேட்காமல் எங்க அப்பா, தாத்தா எல்லாரும் செஞ்சாங்க அதனால நானும் செய்யறேன்ன்னு சடங்குகளை கண்ணை மூடிக் கொண்டு ஏற்றுக் கொள்வது (அது எவ்வளவு பிற்போக்குத்தனமாய் இருந்தாலும்) என்று இருப்பார்களா? இவங்க எப்படி பகுத்தறிபவர்கள் கணக்கில வருவாங்கன்னு எனக்குத் தெரியலை
கடவுள் நம்பிக்கை இல்லாவிட்டால், பலர் காட்டுமிராண்டிகளாக போயிருப்பார்கள்.
மன்னிக்கவும் மகா மொக்கையான கருத்து இது.
கடவுள் நம்பிக்கையையும், வேத வாக்கையும் சரியாக கடைபிடிப்பவர்கள் நிச்சயம் மதவாத செயல்களில் ஈடுபட மாட்டார்கள். கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களும் அவ்வாறென நிரூபித்துக்காட்டவேண்டிய கட்டாயம் அவர்களுக்கு வந்திருக்கிறது, நியாயவான்களாக இருக்கும்பட்சத்தில்.
பாபர் மசூதியை இடித்தவர்களும், ட்வின் டவர்களை இடித்தவர்களும் மிகத் தீவிரமான கடவுள் நம்பிக்கையாளார்கள்தான். கடவுள் நம்பிக்கை இல்லாதவன் எந்த ஒரு கோயிலையும், மசூதியை இடித்துத் தள்ளுகிறேன் என்று கிளம்பியதில்லை.
எனக்கும் கடவுள் நம்பிக்கை அற்றுப்போனால், இப்போதிருக்கும் 'கடவுள் நம்பிக்கையில்லாதவன்' என்று சொல்லிக் கொள்பவர்களைப் போல அடுத்தவர்களை குறை சொல்லியே காலம் கடத்த வேண்டுமோ என்ற பயமே அதிகமாக இருக்கிறது.
ஏனென்றால் கடவுள் நம்பிக்கையாளனை விட நம்பிக்கை இல்லாதவன் என்று சொல்லிக்கொள்பவன் போலி வேஷம் போட்டுச் செய்யும் மதவாதமே மிகவும் கொடியதாகத் தெரிகிறது.
மகா மோசமான கருத்துக்கள். ஏற்கனவே சொன்னது போல நீங்கள் கடவுள் ந்ம்பிக்கையை விட்டு ரு தப்படி கூட எடுத்து வைக்க முற்பவட வில்லை. ஆனால் நடுநிலையாக எழுத முயற்சிப்பது போல முயற்சி செய்துள்ளீர்கள். ஆனால் உங்களையும் மீறி கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களின் மீதான துவேஷம் உங்களது வார்த்தைகளில் தென்படுகின்றது.
பதிவை விட பின்னூட்டங்களில் சில இடங்களில் உங்களது மனிதாபிமான உணர்வுகள் தென்பட்ட போதிலும் இந்தக் கட்டுரை என்னைப் பொறுத்த வரை ஏற்பில்லாததே.
அன்பின் நந்தா,
ReplyDeleteஉங்களது நீண்ட பின்னூட்டத்திற்கு நன்றி.
இந்தப்பதிவு நடுநிலையோடு எழுதப்பட்டிருப்பதாக நான் எங்கே சொன்னேன்? (நடுநிலை என்பதற்கு பதிலாக என்னுடைய பகுத்தறிவு என்று சொல்லலாம்) இது ஒரு கடவுள் நம்பிக்கையாளனுடைய கருத்துக்கள்.கடவுள் நம்பிக்கையுள்ள அல்லது நம்பிக்கையில்லாத ஒருவனால் கடவுள் சார்ந்த நடுநிலையான கருத்துக்களை சொல்லிவிட முடியாது. ஆனாலும், இந்தப்பதிவின் கருத்துக்களில் பல (அல்லது சில) நடுநிலையோடு எழுதப்பட்டிருப்பதாக நீங்கள் (கடவுள் நம்பிக்கையில்லாதவர்கள்) ஏற்றுக்கொள்வது மகிழ்ச்சியளிக்கிறது.
கடவுள் நம்பிக்கையையும், வேத வாக்கையும் சரியாக கடைபிடித்திருப்பார்களேயானால் நிச்சயம் பாபர் மசூதியும், ட்வின் டவரும் இடிக்கப்பட்டிருக்காது.
மற்றபடி உங்களுடைய பின்னூட்டத்தை வரிக்குவரி எடுத்து பதில் சொன்னாலும் அதனுடைய சாராம்சம் இதுவாகவே இருக்கும்:
நான் கடவுள் நம்பிக்கையை விட்டு ஒரு அடியும் எடுத்துவைக்க வேண்டிய அவசியம் என்ன?
மீண்டும் சொல்கிறேன், யாரைபோல் இருக்கக்கூடாது என்பதற்கு போலி பகுத்தறிவு பேசி குழப்பத்தை உண்டுபண்ணும் 'போலி கடவுள் மறுப்பாளர்களையே' உதாரணமாக எடுத்துள்ளேன். எனவே, நான் கடவுள் நம்பிக்கையை விட்டுவிட்டால் உலகம் அமைதியாகிவிடும், உலக மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாய் இருப்பார்கள் என்பதற்கு கடவுள் நம்பிக்கையில்லாத நீங்கள் முன்னுதாரணமாக வாழ்ந்து காட்ட வேண்டிய கட்டாயம் உங்களுக்கு இருக்கிறது. அதாவது 'சொல்வதையே செய்தும் காட்டுவது' சாம் மற்றும் ஹூசைனம்மா சொல்வதைப்போல practice what you preach and Charity begins at home என்பதாக.
தெலுங்கானா குறித்து:
ReplyDeleteம்.. தனித் தெலுங்கானா கேட்பதில் நியாயம் இருக்கலாம். நாம் தனி ஈழம் கேட்ட(ப)தைப்போல. நான் இங்கே சொல்வது தவறானவர்கள் கையில் சிக்கினால் உண்மையான போராட்டத்திற்கும் வெற்றி கிடைக்காது தவறான அர்த்தம் கொடுக்கப்படும் என்பதே.
மூட நம்பிக்கைக்கு எதிராக பலர் உண்மையில் போராடிவரும் வேளையில் போலி பகுத்தறிவு பேசும் சிலரை மேற்சொன்ன நிகழ்வில் பொருத்திப்பார்க்கலாம்.
நந்தா
ReplyDelete// கடவுள் நம்பிக்கை இல்லாதவன் எந்த ஒரு கோயிலையும், மசூதியை இடித்துத் தள்ளுகிறேன் என்று கிளம்பியதில்லை.
//
ஆனா பெரியார் சிலைக்கு எதனாச்சு நடந்தா மட்டும் பயங்கர கலவரம் பன்னுவாங்க, அதுவும் அவர் சிலையை சரியா கோயில் முன்னாடி வச்சா தான் இவிங்களுக்கு திருப்தி, அப்ப தானே கலவரம் ஆரம்பிக்கும்.
பெண் விடுதலைக்காக குரல் கொடுத்தவர், அவருடைய சிலைக்கு களங்கம் பன்னா கலவரம் பன்ன சொல்லிருக்காரோ ?
http://en.wikipedia.org/wiki/Vint_Cerf
ReplyDelete//
ivarukku sorkama? narakama?
பீர், ஒன்றைத் தெளிவாய் சொல்லிக் கொள்ள விம்புகிறேன். சொல்லப்போனால் போன பின்னூட்டத்திலேயே சொல்ல நினைத்தது. ஆனால் உங்களுக்கு பின்னூட்டம் போடும் போது ஏதோ 4098 கேரக்டருக்கு மெலே அனுமதி இல்லை என்பது மாதிரியான error message வந்தது. அதான் போன முறையே 2 பின்னூட்டம்.
ReplyDeleteகடவுள் மறுப்பாளர்கள் என்பதற்கு வீரமணி கும்பலை நான் உதாரணமாய் எடுத்துக் கொள்ளவில்லை. உங்களுடைய கட்டுரையைப் போலவே சில இடங்களில் ஒத்துப் போகவும், சில இடங்களில் அவர்களது செயல்பாடுகள் வெறுப்பையும் அளித்திருக்கின்றன.
//கடவுள் நம்பிக்கையையும், வேத வாக்கையும் சரியாக கடைபிடித்திருப்பார்களேயானால் நிச்சயம் பாபர் மசூதியும், ட்வின் டவரும் இடிக்கப்பட்டிருக்காது.//
எல்லா மதங்களிலும் கடவுள் நம்பிக்கையாளார்கள் 3 வகையினர் இருக்கின்றனர். அடிப்படைவாதிகள், நம்பிக்கையுடைய சாதார்ண மனிதர்கள், நம்பிக்கையுடைய நல்ல சிந்தனையாளர்கள். இவற்றில் 3 வது வகை மட்டுமே கட்டுமே கடவுள் நம்பிக்கையின் பெயரால் சக மனிதர்களுக்கு துன்பம் விளைவிக்க முன்வ்ராதவர்கள். (உங்களைப்போல. முகஸ்துதி அல்ல. உங்களது பதில்களை வைத்து சொல்கிறேன்) ஆனால் அடிப்படைவாதிகள் மிகப்பெரும் ஆபத்தானவர்கள். அவர்கள் தஸ்லீமா, ஹுசைன், ரசூல், முகம்மது மீரான், வகையறாக்களின் தலையைத் தண்டிக்க காலக்கெடு விதிப்பது, பாபர் மசூதி இட்த்ததற்கு நான் பெருமைப்படுகிறேன் என்பது போன்ற அடிப்படைவாதமும், வன்மமும் நிறைந்த பேட்டிக்களை கொடுப்பதற்கும், கடவுள் நம்பிக்கையுள்ள சாதாரண மனிதர்களை மதவெறி பிடித்து சங்பரிவார் கூட்டங்களாகவும், தாலிபான்களாகவும் ஆக்கவும் தொடர்ந்து மாற்றி வருகின்றனர்.
3 வது வகையினராகிய நீங்கள் ஏற்றுக் கொண்டாலும் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் அவர்கள் கடவுள் நம்பிக்கையாளர்களே. சொல்லப்போனால் அவர்களை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டிய அவசியம் மறுப்பாளர்களை விட இந்த 3 வது வகையினருக்குதான் அதிகம் இருக்கின்றது. ஆனால் வெகு சிலர் மட்டுமே செய்கின்றனர்.
//எனவே, நான் கடவுள் நம்பிக்கையை விட்டுவிட்டால் உலகம் அமைதியாகிவிடும், உலக மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாய் இருப்பார்கள் என்பதற்கு கடவுள் நம்பிக்கையில்லாத நீங்கள் முன்னுதாரணமாக வாழ்ந்து காட்ட வேண்டிய கட்டாயம் உங்களுக்கு இருக்கிறது.//
அமைதி, மகிழ்ச்சி என்பது அல்ல கடவுள் எதிர்ப்பாளர்களின் முயற்சிகள். சொந்த மண்ணிலேயே இரண்டாம் தர குடிமக்களாய் நடத்தப்படும் மக்கள் கடவுள் பக்தி இருந்தாலும், இல்லாவிட்டாலும் எப்படி மகிழ்ச்சியாய் இருந்து விட முடியும். மதங்களை எதிர்ப்பவன் மதங்களை மட்டும் எதிர்க்க வில்லை. மூடத்தனமான பழக்க வழக்கங்கள், பெண்ணடிமைத்தனங்கள், தாய் மொழி எதிர்ப்பு, பிற்போக்குத்தனங்கள், ஒரு சில கூட்டத்தினரின் நன்மைக்காக எப்போதோ சொல்லப்பட்ட சடங்குகள், எல்லாவற்றிற்கும் மேலாய் சக மனிதனை மனிதனாய் மதிக்காத உயர் சாதீய மனப்பான்மை ஆகிய எல்லாவற்றாஇயுமே சேர்ந்துதான் எதிர்க்கின்றார்கள்.
என்னைப் பொறுத்த வரை ஆம்பளை அப்படி இப்படித்தான் இருப்பான், பொம்பளைப் புள்ளைதான் அடங்கிப் போகணும் என்று பர்தாவை திணித்த மதமும், பெண்கள் நுழைந்ததற்காக கோயிலை சுத்தம் செய்த குருவாயூர், சபரிமலை சாமிக்களின் மதங்கள் உள்ளிட்ட அனைத்து மதங்களும் அடிப்படைவாதத்தைப் போதிப்பவையே. கடவுள் எதிர்ப்பாளனாக இல்லாவிட்டாலும், ஒரு மனிதனாக, ஆறாம் அறிவு உடையவனாக தவறு அல்லது அடிமைத்தனம் என்று மனதுக்குப் படும் விஷயங்களை எதிர்த்து குரல் கொடுத்தே தீர வேண்டியிருக்கிறது. அதில் பெருமைப்பட்டுக் கொள்கின்றோம்.
//ஆனா பெரியார் சிலைக்கு எதனாச்சு நடந்தா மட்டும் பயங்கர கலவரம் பன்னுவாங்க, அதுவும் அவர் சிலையை சரியா கோயில் முன்னாடி வச்சா தான் இவிங்களுக்கு திருப்தி, அப்ப தானே கலவரம் ஆரம்பிக்கும்.
ReplyDeleteபெண் விடுதலைக்காக குரல் கொடுத்தவர், அவருடைய சிலைக்கு களங்கம் பன்னா கலவரம் பன்ன சொல்லிருக்காரோ ?//
முந்தைய பின்னூட்டத்திலேயே சொன்னது போல வீரமணி கும்பலை முழு பகுத்தறிவுவாதிகளாக ஏற்றுக்கொள்ள என்னால் முடிந்ததில்லை. ஆனல் எனக்குத் தெரிந்து ராஜீவ்காந்தி சிலையை உடைச்சதுக்குதான் கலவரம் எழுந்திருக்கிறது. பெரியார் சிலையை உடைச்சதுக்கு ஆர்ப்பாட்டங்களை மீறி பெரிதாய் எதுவும் நடந்ததாய் நினைவில்லை.
அவர் சிலைலை கோயில் முன்னாடியேதான் வைக்க விரும்புகிறாகளா? அந்த பிரச்சினை ஒரே ஒரு இடத்தில்தான் நடந்தது. ஆனால் இங்கே உயர் சாதீய இந்துக்களால் அமைதியாக நமது மண்ணின் சாமிகளின் கோயில்களில் சிலையை நிறுவும் கலாச்சாரம் நடந்தேறி வருகின்றது. பல இடங்களில் ஏதேனும் ஒரு முருகர் சிலையோ, பிள்ளையார் சிலையோ திடீர் திடீரென இந்தக் கோயில்களின் முன்புறமோ, அல்லது அங்கே உள்ள ஆலமரத்தினடியிலோ முளைத்து விடுகின்றது. பின்பு உயர் சாதி இந்துக்களால் ”இங்கே நரபலி இடவேண்டாம் என்று கேட்டுக் கொள்கின்றோம்” என்று போர்டு வைக்கப்படுகின்றது.
இந்த மண்ணின் சாமிகளும், அதன் வழிபாட்டு முறையும் மெல்ல புறந்தள்ளப்பட்டு வரும் முயற்சி இது. இதை எதிர்த்தும் பகுத்தறிவுவாதிகள் மட்டுமே குரல் கொடுத்துள்ளனர். கடவுள் இருக்குன்னு சொல்ற யாரும் இதை தப்புப்பான்னு சொல்ல முன்வந்ததில்லை.
சுருக்கமா என்ன சொல்றீங்கனா.
ReplyDeleteமத நம்பிக்கை இல்லாதவர்கள் பன்னும் பிரச்சினைகளுக்கு நாத்திகம் காரணம் இல்லை.
மத ரீதியான பிரச்சினைகளுக்கு(பின் லேடன்) மத நம்பிக்கை உள்ள அனைவரும் காரணம்....
நான் ஏன் ஸ்ரீரங்கம் பிரச்சினை சொன்னேனா, you made a broad statement.. //// கடவுள் நம்பிக்கை இல்லாதவன் எந்த ஒரு கோயிலையும், மசூதியை இடித்துத் தள்ளுகிறேன் என்று கிளம்பியதில்லை./// ஆனா நடந்த விஷயங்கள் சொன்னா "நான் அவன் இல்லை" அபப்டின்னு சொல்றீங்க.
சாமி, சிரீரங்கம் புரச்சினை வெறுமனே வறட்டு ஆர்ப்பாட்டம். சங்பரிவார் கூட்டங்கள், கோத்ரா எரிப்பு, பெஸ்ட் பேக்கரி, ராமஜென்மபூமி , ஃபத்வா, காஃபீர், விஷயங்களுக்கு முன்னால் இந்த பிரச்சினை ஒன்றுமே இல்லாத ஒன்று. இதற்கு இவ்வளவு முக்கியத்துவமே தர வேண்டியதில்லை. அதற்காக இதை நான் நியாயப்படுத்த வில்லை என்பதற்காக மேற்குறிப்பிட்ட வரிகளைச் சொன்னேன். நீங்கள் அதிலும் குற்றம் காண்கின்றீர்கள். ஆனால் நான் கேட்பதும் அந்த சிரீரங்கம் பிரச்சினை ஒன்றே உங்களுக்கு கடவுள் மறுப்பாளார்கள் மீது வெறுப்பினை ஏற்படுத்தினால், நான் மேற் சொன்ன பிரச்சினைகளுக்கு இதை விட பன்மடங்கு நீங்கள் கடவுள் நம்பிக்கையாளார்களையும், மதத்தையும் வெறுக்க வேண்டி வருமே? அதை குறித்து பேச மறுக்கின்றீர்களே.
ReplyDeleteநீங்க சொல்லுவது எப்படி இருக்குனா...."பாபர் மசூதி" இடிச்சி தள்ளுன மாதிரி ஒன்னும் நாங்க ஸ்ரீரங்கம் கோயில் இடிக்களையே. மறுபடியும் சொல்றேன் நீங்கள் கொடுத்த ச்டடேமேன்ட் பாருங்கள், என்ன சொன்னீர்கள் என்று.
ReplyDelete//அந்த சிரீரங்கம் பிரச்சினை ஒன்றே உங்களுக்கு கடவுள் மறுப்பாளார்கள் மீது வெறுப்பினை ஏற்படுத்தினால்///
எனக்கு எதுக்குங்க அவிங்க மேல வெறுப்பு வரணும்.....சரி யாரு சொன்னா அது one-off இன்சிடென்ட் அப்படின்னு....உலக வரலாற புரட்டி பார்த்தா நிறைய இருக்கு, நான் எதை சொன்னாலும் நீங்கள் அவர்களை ரொம்ப எளிதா விளக்கி வைப்பீர்கள்.(வீரமணி மாதிரி)
//இதை விட பன்மடங்கு நீங்கள் கடவுள் நம்பிக்கையாளார்களையும், மதத்தையும் வெறுக்க வேண்டி வருமே? //
பாஸ்... உங்களுக்கும் எனக்கும் இப்ப என்ன பிரச்சினைனா....இந்த பிரச்சினை பண்றவங்களை ஒதுக்கி வைக்ரதில் தான் பிரச்சினை.
அப்புறம் இன்னொரு பிரச்சினை யாரோ போட்ட தவறான calculation படி உங்களுக்கு உலகத்தில் மத ரீதியான கொலை கொள்ளைகள் தான் அதிகம் அப்படின்னு சொல்றீங்க....எல்லாருக்கும் நியாபகம் வர நாலு இன்சிடென்ட் வச்சிட்டு இப்படி சொல்றீங்க, ரொம்ப கஷ்டமான ஸ்டாடிஸ்டிக்ஸ் எளிதா அடிச்சு எழுதிரீர்கள்.
//அப்புறம் இன்னொரு பிரச்சினை யாரோ போட்ட தவறான calculation படி உங்களுக்கு உலகத்தில் மத ரீதியான கொலை கொள்ளைகள் தான் அதிகம் அப்படின்னு சொல்றீங்க....எல்லாருக்கும் நியாபகம் வர நாலு இன்சிடென்ட் வச்சிட்டு இப்படி சொல்றீங்க, ரொம்ப கஷ்டமான ஸ்டாடிஸ்டிக்ஸ் எளிதா அடிச்சு எழுதிரீர்கள். //
ReplyDeleteவிஞ்ஞானிகளையே கல்லால் அடிச்ச பரம்பரை தானே இந்த மதவாத கூட்டங்கள், இவர்களுக்கு என்ன சொன்னாலும் புரியாது நந்தா!
அவுங்க எதாவது புள்ளிவிபரம் கொடுப்பாங்க நாம என்னான்னு தெரிஞ்சிகலாம்!
எனக்கு தெரிஞ்சி மதநம்பிக்கையில்லாத விஞ்ஞானிகள் சோதனைகுற பேர்ல ஏகபட்ட உயிர்களை கொல்றாங்க இந்த மனுஷபதர்களை காப்பாற்ற, அதனால மத,கடவுள் நம்பிக்கையாளர்கள் இனிமேல் மருத்துவமனைக்கு செல்லாமல் ஒன்லி கோவில் தான் பாருங்களேன்!
அவுங்க கடவுளுக்கு தான் பெரிய பெரிய சக்தியெல்லாம் இருக்கே, எயிட்ஸை கூட குணப்படுத்துவார்!
//அப்புறம் இன்னொரு பிரச்சினை யாரோ போட்ட தவறான calculation படி உங்களுக்கு உலகத்தில் மத ரீதியான கொலை கொள்ளைகள் தான் அதிகம் அப்படின்னு சொல்றீங்க....எல்லாருக்கும் நியாபகம் வர நாலு இன்சிடென்ட் வச்சிட்டு இப்படி சொல்றீங்க, ரொம்ப கஷ்டமான ஸ்டாடிஸ்டிக்ஸ் எளிதா அடிச்சு எழுதிரீர்கள்.//
ReplyDeleteகடவுள் மறுப்பாளர்கள் பெரியளவு வன்முறையில் ஈடுபடவே இல்லை என்பதில் இப்போது நிலையாக இருக்கிறேன்.
//நீங்க சொல்லுவது எப்படி இருக்குனா...."பாபர் மசூதி" இடிச்சி தள்ளுன மாதிரி ஒன்னும் நாங்க ஸ்ரீரங்கம் கோயில் இடிக்களையே. மறுபடியும் சொல்றேன் நீங்கள் கொடுத்த ச்டடேமேன்ட் பாருங்கள், என்ன சொன்னீர்கள் என்று.//
உண்மையை சொல்லணும்னா அதைச் சொல்லுவதில் என்ன தவறு? சிலையை உடைத்ததற்கான ஓர் ஆர்ப்பாட்டம். இதில் பக்கம் பக்கமாய் குற்றம் காண என்ன இருக்கிறது? ஏன் கடவுள் மறுப்பாளர்களாய் இருப்பவர்கள் அதைக்கூட செய்யக் கூடாது என்கின்றீர்களா?
இதே பாபர் மசூதியில் இந்துக்கூட்டங்களால் கொண்டு வந்து வைக்கப்பட்ட ராமர் சிலையால்தான் டிசம்பர் 6 சம்பவமே நடந்தது. பெரியார் சிலையால் என்ன நடந்து விட்டது? கடவுளை நேசிக்கிறவன்தான் என் சாமிதான் பெரிசுன்னு மாற்று மதக் கடவுளையும், கோயிலையும் இடிக்கக் கிளம்புகிறான். இதை நீரூபிக்க உங்களுக்கு எத்தனை புள்ளி விவரங்கள் வேண்டும்.
அடுத்தவர் ஸ்டேட்டிக்ஸ் தவறு என்று சொல்ல்வதற்கு முன்னால் முதலில் சரியான விவரங்களை தந்து விட்டுப் பேச வேண்டும். ஏன்னா “சாமிங்கிற பேர்ல என்ன சொன்னாலும் நம்பிக் கொண்டு போவதற்கு நான் கடவுள் நம்பிக்கையாளன் கிடையாது.” :)
//இவர்களுக்கு என்ன சொன்னாலும் புரியாது நந்தா!
ReplyDeleteஅவுங்க எதாவது புள்ளிவிபரம் கொடுப்பாங்க நாம என்னான்னு தெரிஞ்சிகலாம்!//
:) இப்போ புதுசா இந்த கதை வேற கிளம்பி இருக்கு. மத ரீதியிலான வன்முறைகள் ஒண்ணும் பெரிசா நடக்கவே இல்லைன்னு.
//மத ரீதியிலான வன்முறைகள் ஒண்ணும் பெரிசா நடக்கவே இல்லைன்னு.//
ReplyDeleteஒண்ணுமே நடக்கலைன்னு சொல்லாம விட்டாங்களே!
பாபர் மசூதி ஒரு சம்பவம் மாதிரி வச்சுகுவோம்! ஆனால் அதன் பின் நடந்த படுகொலைகள் தான் மிக முக்கியம்!
சமண படுகொலைகள், சிலுவை போர் போன்ற வரலாற்று ரத்தம் தோய்ந்த நிகழ்வுகள் கடவுள் மதத்தை முன்வைத்தே செய்யப்பட்டது!
ஒருவரது உடமையை சேதப்படுத்துவதற்கும், உயிரை பிடுங்குவதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது!
மோடி, பின்லேடன் இருவருமே கிருமிகள் தான், மதம் தான் வேறு வேறு!
//உண்மையை சொல்லணும்னா அதைச் சொல்லுவதில் என்ன தவறு? சிலையை உடைத்ததற்கான ஓர் ஆர்ப்பாட்டம். //
ReplyDeleteஅட்ரா சக்கை.....ஏன் அந்த சிலையை பகுத்து அறிஞ்சு பார்த்தா..அது வெறும் ஒரு கல்லுன்னு தெரியலையா ?..எல்லாரும் கேட்டுகோங்க இவியின்கலாம் பகுத்தறிவாலர்கலாம் !!!
////மத ரீதியிலான வன்முறைகள் ஒண்ணும் பெரிசா நடக்கவே இல்லைன்னு.//
ஒண்ணுமே நடக்கலைன்னு சொல்லாம விட்டாங்களே!//
ஆமா நான் எழுதாத விஷயத்தை நீங்களே எழுதி, ரெண்டு பெரும் உங்களுக்குள்ளையே காமெடி பண்ணிகுறீங்க...எல்லாருக்கும் சிரிப்பு வந்திருந்தாள் எனக்கும் மகிழ்ச்சியே. :-)
//விஞ்ஞானிகளையே கல்லால் அடிச்ச பரம்பரை தானே இந்த மதவாத கூட்டங்கள், இவர்களுக்கு என்ன சொன்னாலும் புரியாது நந்தா//
அது என்ன "விஞ்ஞானிகளையே" ...பாகிஸ்தான் அணுகுண்டு விஞ்ஞானி a.q.khan , அவரும் விஞ்ஞானி தான், அளவுக்கு அதிகமா விஞ்ஞானிகள் மீது "நம்பிக்கை" ? ...பகுத்து அறிய வேண்டாமா ?
ஹிட்லர் பன்ன கொலைகள் 17 million civilians, ஸ்டாலின் கொன்றது அது ஒரு சுமார் 10-20 மில்லியன் இருக்கும்னு சொல்றாங்க...கம்யூனிஸ்ட் நாடுகளில் மதங்களை சேர்ந்தவர்களையும், பொது ஜனங்களையும் கொன்றது அது ஒரு 10-15 மில்லியன் இருக்கும்னு சொல்றாங்க.....இன்னும் இதில் உலகப்போரில் இவர்கள் கொன்றதை சேர்க்கவில்லை....ஆனா உலக போருக்கும் இவர்களும் காரணம் என்பது நல்லா தெரிந்துருக்கும்.
ReplyDeleteசரி இப்ப முக்கியமான கேள்வி, ஸ்டாலின் ,ஹிட்லர், கம்யூனிஸ்ட்கல் ...இவின்கலாம் யாரு, மத வெறுப்பாளர்கள், மதங்களை ஒடுக்க நினைத்தவர்கள் என்று எல்லாருக்கும் தெரிந்துருக்கும். திடுதிப்புன்னு வந்து ஹிட்லரும்,ஸ்டாலினும் பிறப்பால் கிறிஸ்தவர்கள் அப்படின்னு மட்டும் சொல்லிடாதீங்க, பிறப்பினால் டார்வின் குட கிறிஸ்தவர் தான்.
வால் --
//விஞ்ஞானிகளையே கல்லால் அடிச்ச பரம்பரை தானே......//
சரி அந்த விஞ்ஞானிகள் எந்த பரம்பரையில் இருந்து வந்தவங்க ? எதுக்கு சார் பரம்பரை இங்க.
//ஒண்ணுமே நடக்கலைன்னு சொல்லாம விட்டாங்களே!//
ReplyDeleteஆமா நான் எழுதாத விஷயத்தை நீங்களே எழுதி, ரெண்டு பெரும் உங்களுக்குள்ளையே காமெடி பண்ணிகுறீங்க..//
நல்லா பாருங்க,
விட்டாங்களேன்னு தான் சொல்லியிருக்கேன்!
சொல்லிட்டிங்களேன்னு வருத்தபடல!
புரிதல் உங்க தவறு
////விஞ்ஞானிகளையே கல்லால் அடிச்ச பரம்பரை தானே இந்த மதவாத கூட்டங்கள், இவர்களுக்கு என்ன சொன்னாலும் புரியாது நந்தா//
ReplyDeleteஅது என்ன "விஞ்ஞானிகளையே" ...பாகிஸ்தான் அணுகுண்டு விஞ்ஞானி a.q.khan , அவரும் விஞ்ஞானி தான், அளவுக்கு அதிகமா விஞ்ஞானிகள் மீது "நம்பிக்கை" ? ...பகுத்து அறிய வேண்டாமா ?//
அது சரி!
அணுகுண்டை தயாரிச்சவர் கூட தான் விஞ்ஞானி அவரை வில்லன் லிஸ்டுல சேர்துடலாமா?
சாரயம் காய்ச்சுவது கூடத்தான் விஞ்ஞானமுறை அது!
**
நான் எதை சொன்னேன்னு உங்களுக்கு
புரியலையா, இல்ல புரியாத மாதிரி நடிக்கிறிங்களா?
வால்
ReplyDeleteநீங்களும் நல்லா பாருங்க....நந்தா என்ன எழுதினாருன்னு....அதை எடுத்து வச்சு நீங்கள் எழுதியதையும். நீங்க ஒன்னும் நான் சொல்லியதை எடுத்து வைத்து எழுதலையே..அதை தான் "உங்களுக்குள்ளையே காமெடி" அப்படின்னு சொன்னேன்.
புரிதல் தவறாக இருந்தாலும் இதில் சுத்தமா வருத்தம் ஒன்னும் இல்லை.
AQ KHAN NUCLEAR டெக்னாலஜி மறைமுகமாக அரசுக்கு தெரியாமல் காசுக்காக வித்தவர்....அப்புறம் பாஸ் அவர் உலக வில்லன் லிஸ்டில் ரொம்ப வருடமாக இருப்பவர்..ஏன்னா அதை வாங்கின நாடுகள் அந்த மாதிரி நாடுகள்
//ஹிட்லர் பன்ன கொலைகள் 17 million civilians, ஸ்டாலின் கொன்றது அது ஒரு சுமார் 10-20 மில்லியன் இருக்கும்னு சொல்றாங்க...கம்யூனிஸ்ட் நாடுகளில் மதங்களை சேர்ந்தவர்களையும், பொது ஜனங்களையும் கொன்றது அது ஒரு 10-15 மில்லியன் இருக்கும்னு சொல்றாங்க..//
ReplyDeleteகம்யூனிஷத்தையும் மதம் மாதிரி நினைச்சு வாழ்ந்தா வேற என்ன நடக்கும், பெரியாரிஷமே ஒரு மதம் ஆன பிறகு கம்யூனிஷம் மட்டும் தப்பிக்குமா என்ன!?
//வால் --
ReplyDelete//விஞ்ஞானிகளையே கல்லால் அடிச்ச பரம்பரை தானே......//
சரி அந்த விஞ்ஞானிகள் எந்த பரம்பரையில் இருந்து வந்தவங்க ? எதுக்கு சார் பரம்பரை இங்க. //
மதவாதிகளை தான் பொதுவாக சொன்னேன்!
//AQ KHAN NUCLEAR டெக்னாலஜி மறைமுகமாக அரசுக்கு தெரியாமல் காசுக்காக வித்தவர்....அப்புறம் பாஸ் அவர் உலக வில்லன் லிஸ்டில் ரொம்ப வருடமாக இருப்பவர்..ஏன்னா அதை வாங்கின நாடுகள் அந்த மாதிரி நாடுகள்//
ReplyDeleteஅவர் ஏன் வித்தார்னு அவரை தான் கேட்கனும். அவரை பத்தி எனக்கு தெரியாது, அவர் என்னாத்த கண்டுபிடிச்சார்!?
//கம்யூனிஷத்தையும் மதம் மாதிரி நினைச்சு வாழ்ந்தா வேற என்ன நடக்கும், பெரியாரிஷமே ஒரு மதம் ஆன பிறகு கம்யூனிஷம் மட்டும் தப்பிக்குமா என்ன!?//
ReplyDeleteஎக்ஸாக்ட்லி வால், இதுவே தான் நான் சொல்ல வருவது.. Atheism ம் தனி மதமாகிவிட்டது.
//எக்ஸாக்ட்லி வால், இதுவே தான் நான் சொல்ல வருவது.. Atheism ம் தனி மதமாகிவிட்டது. //
ReplyDeleteஆகிருச்சான்னு தெரியல, ஆனா ஆகலாம், ஆனா நிச்சயமா அப்போ நான் உள்ளே இருக்க மாட்டேன்!
&&&&&&&&&
ReplyDeleteஆகிருச்சான்னு தெரியல, ஆனா ஆகலாம், ஆனா நிச்சயமா அப்போ நான் உள்ளே இருக்க மாட்டேன்
&&&&&&&&&
atheism theism ரெண்டுத்துக்கும் நடுவுல இருப்பீங்களா வால் ? அந்த மாதிரி ஆளுங்க தான் இன்னுமே dangerous :)-
சாமி புரிந்து கொள்ள மறுக்கின்றீர்கள். ஹிட்லர், ஸ்டாலினின் கொலைகளுக்கான காரணங்களே வேறு. அங்கே படுகொலை செய்யப்பட்டவர்களில் எல்லா வகையினரும்தன் அடங்குவர். அவர்கள் ஒன்றும் பார்த்து பார்த்து கடவுள் நம்பிக்கை உள்ளவர்களாய் கொலை செய்ய வில்லை. உங்களுடைய லாஜிக்கின் படி பார்த்தால் அவர்கள் செய்த தவறுகளுக்கு காரணம் அவர்கள் கடவுள் நம்பிக்கை இல்லதவர்களாய் இருந்ததால்தான் என்று சொல்கின்றீர்கள். ஏற்றுக் கொள்ளவே முடியாத ஒன்று.
ReplyDeleteஹிட்லர் வகையறாக்கள் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களாய் இருந்தாலும் சரி இருப்பவர்களாய் இருந்தாலும் சரி மேற்சொன்ன படுகொலைகள் நடந்தேறிதான் இருக்கும். இங்கே
ஆனால் நானோ, வால்பையனோ சுட்டியிருப்பவை முழுக்க முழுக்க கடவுளின் பெயராலும், மதத்தின் பெயராலும் மட்டுமே நடந்தவைகள். அது கடவுள் நம்பிக்கை அதீதமாய் இருந்ததாலேயே நடந்த ஒன்று. இது வரை நீங்கள் இது குறித்தான ஓர் சின்ன முனகலைக் கூட வெளிப்படுத்த வில்லை. ஆனால் தொடர்ந்து சிரீரங்கத்தில் நடந்த தம்மாத்தூண்டு ஆர்ப்பாட்டத்திற்கு ராமகோபலனிற்கு மிச்சமாய் ஆவேசப்படுகின்றீர்கள்.
பகுத்தறிவுவாதிகளாய் இருப்பதால்தான் வீரமணி கும்பலே தவறுகள் செய்யும் போது அது தவறானது என்று சுட்டிக் காட்டுகின்றோம். ஒரு சிலரால் நாத்திகத்தின் பெயரால் தவறுகள் செய்கின்றனர் என்பதை உங்களை விட அதிகமாய் விமர்சனம் வைக்கின்றோம்.
ஆனால் கடவுள் நம்பிக்கையாளர்கள் மதம், கடவுள், ஆகம விதிகள் இன்ன பிற சாத்திரங்களின் பெயரால் தொடர்ச்சியாக பெண்ணடிமைத்தனம், தாய் மொழி எதிர்ப்பு, சாதியல் ரீதியிலான காழ்ப்புணர்வு, அடிப்படை உரிமைகளை மறுத்தல், சக மனிதனை கீழோனாய் பார்த்தல், உய்ர் சாதியினர் சொல்வதை கேள்விகள் ஏதுமின்றி ஏற்றுக் கொள்ளல், மூட நம்பிக்கைகளின் மீது அபரமான பக்தி வைத்தல் போன்றவற்றை லஜ்ஜையில்லாமல் செய்து வருகின்றனர். அதை குறித்து பெரும்பாலானோர் எந்த வித சவிமர்சனமுமில்லாமல் ஏற்றுக் கொள்கின்றனர். இதனை கேள்வி கேட்க ஒருவன் கடவுள் மறுப்பாளனாய் இருக்க வேண்டியதில்லை. குறைந்த பட்ச மனிதாபிமான பார்வையுடையவனாய் இருந்தாலே போதும்.
நான் மேற்சொன்ன எவை குறித்தேனும் ஒருவன் கேள்விகள் எழுப்பக்கூடாது என்று சொல்ல ஒரே ஒரு அழுத்தமான காரணத்தைச் சொல்லுங்கள். நாங்கள் அமைதியாகி விடுகின்றோம்.
நந்தா,
ReplyDeleteமூட நம்பிக்கைகளுக்கு எதிராய் கேள்வி எழுப்புவது தவறே இல்லை. ஆனால், அதை கேட்கும் முன்பு நாம் எந்தளவுக்கு மூட நம்பிக்கையில் இருந்து விலகி இருக்கிறோம் என்பதும் முக்கியம். உதாரணத்திற்கு நான் பதிவில் கேட்டுள்ள, பெரியார் சிலை வணக்கம், கருப்பு சட்டை போன்றவை மூட நம்பிக்கைகளாகத் தெரியவில்லையா?
கடவுள் நம்பிக்கையில்லாதவன் என்பதற்கு தகுதியாக 'கடவுள் நம்பிக்கையாளர்களைத் திட்டுதல்' போதும் என்பது மூட நம்பிக்கையாகத் தெரியவில்லையா?
சொல்லவருவது; மூட நம்பிக்கைகளை எதிர்ப்பது தனிமனித உரிமை என்றால், அவற்றிலிருந்து விலகி இருக்க வேண்டியது அவனுக்கு கட்டாயக் கடமையாகிறது. குறைந்தபட்சம் அவன் எடுத்துச் சொல்லும் கருத்துகளின் மூட நம்பிக்கைகளில் இருந்தாவது தவிர்ந்திருக்க வேண்டும்.
நந்தா
ReplyDeleteமனித குலத்துக்கே மதம் தான் எதிரி, இது வரை மதம் ரீதியா கொலைகள் தான் அதிகம் நடந்திருக்குன்னு ...இங்கு எழுதிய சிலர் சொன்ன மாதிரி இருந்தது, உங்களையும் சேர்த்து.
நீங்க நிறைய விஷயம் எழுதும் போது, ரெண்டு முனு இடத்தில், கொஞ்சம் மிகை படுத்தி எழுதிற மாதிரி இருந்தது....எல்லா மத நம்பிக்கை இல்லாதவர்களும் நல்லவர்களே...அந்த மாதிரி. அதை சுட்டி காட்டுவதற்காக தான் எழுதினேன், மற்றபடி நான் எந்த "முனகலையும்" கொடுக்கலையே சொல்லிட்டு, நீங்களா நான் சொன்ன மாதிரி ஒரு கருத்தை எழுத வேண்டாமே.
//
ReplyDeleteatheism theism ரெண்டுத்துக்கும் நடுவுல இருப்பீங்களா வால் ? அந்த மாதிரி ஆளுங்க தான் இன்னுமே dangerous :)- //
பெரியாரிஷமும் நாத்திகம் தான் பேசுது, ஆனா பெரியாரிஷ தத்துவங்கள் என்று அதை தவிர வேறு எதையும் யோசிக்க மறுக்குது!
அது மாதிரி ஆச்சுன்னா இப்ப எப்படி அதிலிருந்து விலகி இருக்கேனோ, அப்படியே தான் இருப்பேன்!
நான் என் கொள்கைகளை மாத்திகுவேன்னு எப்ப சொன்னேன்!
நல்லா எழுதி இருக்கீங்க பீர்.
ReplyDeleteவெளியில் நாத்தீகம் பேசிவிட்டு,வீட்டில் சாய் பாபாவிடம் ஆசீர்வாதம் வாங்குபவர்கள் தான் இங்கு அதிகம்.
தன் கருத்துகளை தன் வீட்டினர் ஏற்றுக் கொள்ள வைத்து விட்டு பின்னர் பொது இடத்தில் சொல்லலாம்.
வாழ்த்துக்கள்
\\மனிதர்களுக்கிடையே கடவுள் பெயரால் துவேஷத்தைப் பரப்பும் அனைவரும் மதவாதிகளே. அது, கடவுள் நம்பிக்கை இல்லையென்று சொல்லிக்கொண்டு பரப்பினாலும் சரியே.// நச்சென்று போட்டீர்கள் ஒரு போடு! நான் தங்களை வழிமொழிகிறேன்! மொத்தப் பதிவுமே அருமை! கலப்படமில்லாத உண்மை!
ReplyDelete//'நான் விரும்பியே பர்தா அணிகிறேன்' என்று சொன்ன பிறகும், இவர்களுக்கு அதற்கும் பின்னால் என்ன வேண்டிகிடக்கு என்பதும் புரியவில்லை.//
ReplyDeleteஆமாங்க பீர், தலையில தேங்காயை உடைத்து நேர்த்திக்கடன் செய்பவரும், அலகு குத்திக்கொள்பவரும்கூட தாங்கள் செய்வதை 'நான் விரும்பியே இதைச் செய்கிறேன்' என்று சொன்ன பிறகும், இவர்களுக்கு அதற்கும் பின்னால் என்ன வேண்டிகிடக்கு என்பதும் புரியவில்லை!!!
//குறைகளை கண்டுபிடிப்பதற்கென்றே பெயர் தெரியாதவர்கள் எழுதும் புத்தகங்களை வாங்கிப் படித்து தங்களைத் தாங்களே மெச்சிக்கொள்கிறார்கள்.//
ReplyDeleteச்சே என்ன ஆளுங்க. இந்த மாதிரி பண்ற ஆளுங்க யாருங்க பீர்?
ஆமாம் தருமி, அதே நேரம்.. அவர்கள் விரும்பியே செய்யும் போது அவற்றால் மற்றவர்களுக்கு இருக்கும் பாதிப்பை பொருத்து நம்முடைய எதிர்ப்பை காட்டலாம்.
ReplyDeleteஅவன் அலகு குத்துவதால் மற்றவர்களுக்கு பாதிப்பில்லாத போது நாம் ஏன் மூக்கை குத்த சாரி நுழைக்க வேண்டும்?
//அவன் அலகு குத்துவதால் மற்றவர்களுக்கு பாதிப்பில்லாத போது நாம் ஏன் மூக்கை குத்த சாரி நுழைக்க வேண்டும்? //
ReplyDeleteஒருவர் தற்கொலை செய்து கொள்வதால் கூடத்தான் நமக்கு எந்த பாதிப்பும் இல்லை!
வால், ஒருவர் தற்கொலை செய்து கொள்வதால் மற்ற யாருக்கும் பாதிப்பு இல்லையா? உறுதியாகச்சொல்ல முடியுமா?
ReplyDeleteபர்தா, அலகு இவற்றோடு தற்கொலை ஒப்பீடு சரியா? இவற்றை தடுக்க நினைப்பது தனி மனித சுதந்திரத்தை பரிப்பதாகாதா?
வாழ்வதும், சாவதும் அவரது தனி மனித சுதந்திரம் இல்லையா!?
ReplyDeleteகொலை, தற்கொலை தனிமனித சுதந்திரம் இல்லை. வாழ்வை தீர்மானிக்க அவன் யார்? [ஆத்திகம்..:)]
ReplyDeleteமுதல் கேள்விக்கு பதில்?
விரும்பி அணிகிறார்கள் என்பதும் ஆத்திகத்தின் கட்டாயத்தின் பேரில் தானே!
ReplyDelete1700 வருடங்களுக்கு முன்னர் ஆணாதிக்க சிந்தனையோட ஒருவர் எழுதியிருக்க முடியாது என்பதற்கு என்ன மறுப்பு!?
நல்ல பதிவு......பின்னூட்டங்களும் பட்டிமன்றம் (ஆரோகியமான) போல இருந்தன
ReplyDeletewhere religion begin , knowledge end
ReplyDelete