Nov 24, 2009

விபச்சாரம் - சேவையா - தொழிலா

வெவ்வேறு அல்லது ஒத்த பாலினத்தைச் சார்ந்த (சிறியவரோ பெரியவரோ) இருவர் மனமுவந்து அல்லது மனம் வெறுத்து எதிர்வரும் லாபத்திற்காக தன் உடலை விற்பதும் வாங்குவதும் விபச்சாரம் எனப்படுகிறது. இதில் லாபம் என்பதில் பணம் பொருள் பதவி-உயர்வு சுகம் தன்மானம் மற்றும் உயிர்-பயம் ஆகியவை அடங்கும். இத்தொழில் உலகம் முழுக்க மலிந்து கிடப்பதாகவும் அதன் வரலாறையும் விக்கி சொல்கிறது. பண்டைய இந்தியாவில், மருத்துவம் புரோகிதம் நாவிதம் சலவை இடையம் போன்றவற்றோடு தேவதாசி முறையும் குலத்தொழிலாக இருந்திருக்கிறது. கடவுளுக்கு சேவையாற்றல் எனும் பெயரில் ஒரு பெண் பதின் வயதை அடைந்ததும் (அல்லது அதற்கு முன்னரே) அரண்மனைக்கு கொண்டுவரப்படுவாள். அவள் அரண்மைனையில் புளிக்கும்வரை சேவையாற்றிவிட்டு பிறகு பொதுச்சொத்தாக வீதிக்கு தள்ளிவிடப்படுவாள். தேவதாசியாக அரண்மனைக்கு சென்ற பெண் பிறகு நாட்டை ஆண்ட(பெட்டிகோட்) வரலாறும் உண்டு. இன்னும் சிலர் உயர்சாதியினருக்கு மட்டும் சேவை செய்பவளாக இருந்திருக்கிறார்கள்.

புத்த மதம் இந்தியாவில் அழியத்தோன்றியதும் தேவதாசி முறை பரவலாக்கப்பட்டுள்ளது. மடாலயங்கள்,  கோயில்களாக மாற்றப்பட்டபிறகு அங்கிருந்த துறவிகள் உயர்சாதியினரால் இத்தொழிலுக்கு (சேவைக்கு) இழுத்துவரப்பட்டிருக்கிறார்கள். மேலும் கோவில்களின் நடனப்பெண்களே தேவதாசிகளாக உயர் சாதியினருக்கு சேவை செய்திருக்கிறார்கள். இதை தேவதாசிகளே நடனப்பெண்களாகவும் இருந்திருக்கிறார்கள் என்றும் கொள்ளலாம். தென் மாநிலங்களில் பரவலாக இருந்த தேவதாசி முறை பிற்பாடு சோழர் காலத்தில் வட மாநிலங்களுக்கும் பரவியுள்ளது. பிறகு இந்தியாவை கொள்ளையடிக்க வந்து, இந்தியாவின் செல்வ செழிப்பிலும், பெண்களின் அழகிலும் மயங்கிய முகலாயர்கள் இங்கேயே தங்கிவிட்டனர். முகலாய மன்னர்கள், தங்களுக்கு பல மனைவிகளை வைத்துக்கொண்டனர். முகலாய மன்னன் ஜஹாங்கீருக்கு ஆயிரங்கணக்கில் மனைவிகள் இருந்ததாகவும் சொல்லப்படுவதுண்டு. எனில் முகலாயர்களுடைய அரண்மனையே விபச்சார விடுதியாக இயங்கியிருக்கிறது போல. ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில் படைவீரர்களுக்கு இளைப்பாறுதலுக்காக 'காமதிபுரா' என்ற விபச்சார சேவை நகரம் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. பிறகு சுதந்திர இந்தியாவில் அதே பாலியல் தொழிலாளர்களால் சிவப்பு விளக்கு பகுதியாக பரிணாமம் பெற்றிருக்கிறது.

நாளடைவில் நாகரீக வளர்ச்சியில் மற்ற தொழில்கள் போலவே தேவதாசியும் குலத்தொழில் என்ற நிலையிலிருந்து மாறிவிட்டிருக்கிறது. ஏனைய தொழில்கள் போல மாற்றத்திற்கு நீண்ட காலம் எடுக்காமல் மன்னராட்சி ஒழிந்த சில ஆண்டுகளிலேயே பாலியல் தொழிலாக முழுப்பரிணாமம் பெற்றுவிட்ட தேவதாசி முறையை, 1934 இந்திய தேவதாசிகள் பாதுகாப்பு சட்டம், முற்றிலும் தடைசெய்துவிட்டது. பிறகு, 1980ல் இச்சட்டம் மீண்டும் வலுப்படுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் ஆந்திர கர்னாடக மாநிலங்களின் சில மாவட்டங்களில் இப்போதும் நடைமுறையில் இருப்பதாக சொல்லப்படுகிறது. கடவுள் சேவையாக இப்போதும் அது நம்பப்படுவதே காரணம்.

அண்மையில் மக்களவையில் அளிக்கப்பட்ட தகவல், இந்தியாவில் 28 லட்சம் பாலியல் தொழிலாளர்கள் இருப்பதாக சொல்கிறது. இதில் 35 சதவிகிதத்தினர் குழந்தை தொழிலாளர்களாம். இந்த எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிப்பதாகவும் சொல்கிறது. புதிதாக இத்தொழிலுக்கு நேபாளம் மற்றும் பங்களாதேஷிலிருந்து அதிகமான பெண்கள் மற்றும் குழந்தைகள் இறக்குமதியாவதும், மத்தியகிழக்கு நாடுகளுக்கு வீட்டு வேலை என்ற பெயரில் ஏற்றுமதி செய்யப்படுவதும் தொடர் நிகழ்வு. வீட்டு வேலைக்கு அனுப்பப்படும் பெண்களுக்கான 'வெளிநாட்டு டொமஸ்டிக் ஒர்கர்ஸ்' விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டிருந்தாலும், சென்னை விமானநிலையத்தில் விதிமுறை கடுமையாக பின்படுவதால் திருவனந்தபுரத்திலிருந்து விமானமேற்றுகிறார்கள். வீட்டு வேலைக்கு அனுப்பப்படும் பெண்களில் பெரும்பாண்மையோர், உழைப்போடு உடலையும் விற்கவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறார்கள், அறியாமலேயே இத்தொழிலுக்கு தள்ளிவிடப்படும் அப்பாவி பெண்கள் இவர்கள். இதை தவிர்த்துப் பார்த்தால், சுய விருப்பத்திற்காகவும், அதீத உடல் இச்சையை தீர்த்துக்கொள்ளவும், பதவி உயர்விற்காக அவ்வப்போது இத்தொழிலில் நுழைபவர்களையும் தனிவகைப்படுத்தலாம். அண்மையில் பரவிவரும் எஸ்காட்ஸ் எனப்படுகிற பணத்திற்காக ஊர் சுற்றும் விபச்சார வகையும் வேகமாக பரவிவருகிறது.

விபச்சாரி என்ற வார்த்தையே பெண்களுக்குள் இருக்கும் வலியையும் சிரமத்தையும் சொல்கிறது. பாலியல் தொழிலில் புதியவர்கள் வருகைக்கு மிக முக்கிய காரணமாக இத்தொழிலில் கிடைக்கும் உடனடி வருமானத்தை சொல்லலாம். மற்ற தொழில்களைப்போல உடல் உழைப்பையோ அதிகாரத்தையோ பணத்தையோ மூலதனமாக கொள்ளாமல் உடலையே மூலதனமாக கொண்டுள்ளதும் இத்தொழிலுக்கு பெரும்பாண்மையோரை இழுத்துவரக்காரணம். மேலும்,
 • கூடா நட்பு.
 • மகிழ்ச்சியற்ற திருமண வாழ்வு.
 • பெற்றோர்களால் மூன்றாம் தரமாக நடத்தப்படுவது.
 • போதிய பாலியல் கல்வி அறிவின்மை.
 • இத்தொழில் குறித்தான விழிப்புணர்வின்மை.
 • ஊடகங்கள்.
 • வன்புணர்ச்சி.
 • காதல், 'ஓடிப்போதல்'.
 • சமுதாய தொடர்பு/பழக்கத்திற்காக.
 • மகிழ்ச்சி, ஆசை, விருப்பம், தேடல்.
 • பணியிடங்களில் மிரட்டல், பதவி உயர்விற்காக இசைதல்.
போன்ற பல காரணங்களே விபச்சாரத்தில் நுழைய காரணமாக இருந்தாலும், அதன் பிறகு இத்தொழிலிலேயே நீடித்திருக்க முழு முதல் காரணமாக இருப்பது மேற்சொன்னவாறு உடனடி லாபம் மட்டுமே. இதற்காக குழந்தைகள் கல்வி, தங்கை திருமணம், அம்மா மருத்துவம் போன்ற அழுவாச்சி காரணங்களும் சொல்லப்படுவதுண்டு. இத்தகைய காரணங்களையே பிடித்து தொங்கிக்கொண்டிருக்கும் சில சென்டிமெண்டல் இடியட்ஸ், இட்லி வியாபாரம் செய்து மகனை ஐஐடியில் படிக்க வைத்த தாயை வசதியாக மறந்துவிடுகிறார்கள். பாலியல் தொழில் செய்பவளுடைய மகன்/மகள் சாதனையாளராகும் போது, 'என் தாய் விபச்சாரம் செய்து என்னை படிக்க வைத்தாள்' என்று சொல்லிக்கொள்ள முடியாது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். மட்டுமல்லாது பாலியல் தொழிலாளியுடைய குழந்தைகளும் இத்தொழில் தவறென்பதை உணராது (அல்லது உணர்ந்தாலும்) கண்முன் கிடைக்கும் நிகர லாபத்தால் சட்டென விழுந்துவிடும் ஆபத்தும் அதிகம் இருக்கிறது.

இவற்றையெல்லாம் பாலியல் சேவை என்றும் இச்சேவையை நடைமுறைப்படுத்தி அங்கீகரிக்கப்பட்ட சட்டம் கொண்டுவர வேண்டும் என்று ஒரு சாரார் சொல்லி வருகிறார்கள். அதாவது, குடும்ப பொறுப்புகளாலும், இன்னபிற சமுதாய சூழல்களாலும் திருமணம் செய்யாமல் இருப்பவர்களுக்கும், திருமண வாழ்கையில் சுகம் கிடைக்காதவர்களுக்கும், குடும்ப வாழ்வை சுமை என்பவர்களுக்கும் சேவை செய்யவதற்காகவே இயங்கும் இந்த பாலியல் தொழிலை அனுமதிக்க சட்டம் வேண்டும் என்கின்றனர். இன்னும் சிலர், நமக்கு வேண்டாம் என்றால் போகாமல் இருந்துவிடலாம், யாரும் போக வேண்டாம் என்று சொல்வது நியாயமில்லை என்கின்றனர்.

ஊரான் வீட்டு பெண்களிடம் சுகம் அனுபவிக்க நினைக்கும் இவர்களிடம் சில கேள்விகள்,
 1. பாலியல் தொழில் நடைமுறைப்படுத்தப்பட்டால், குடும்ப சூழல் காரணமாக கைதொழில் செய்து பிழைக்கும் பல பெண்களை "அங்கீகரிக்கப்பட்ட தொழில்" உள்ளே இழுத்துவரும் என்பதை சிந்தித்ததுண்டா?
 2. ஊருக்கு நியாயம்/கருத்து சொல்லும் இவர்களால் பாலியல் தொழிலில் இருப்பவர்களை சகோதரிகளாக நினைக்க முடியுமா? எனில்...
 3. இதே சட்டம் அவர்களுடைய குடும்ப பெண்களுக்கும் பொருந்திவரும் என்பதை ஏற்றுக்கொள்கிறார்களா?
 4. தாய்லாந்து, இந்தோனேஷிய பாடாய் தீவு போன்ற பாலியல் தொழில் அங்கீகரிக்கப்பட்ட நாடுகளுக்கு பாலியல் சுகம் அனுபவிக்கவே சுற்றுலா பயணிகள் போவது போல இந்தியாவிற்கும் வருவது இந்தியாவின் எதிர்காலத்திற்கும், பண்பாட்டிற்கும் நல்லதா?
முறையான பாலியல் கல்வி மூலம், திருமண வாழ்வின் மீதிருக்கும் பயத்தை போக்கலாம். குடும்ப வாழ்வை சுமையாக நினைப்பது ஒரு வகை மன வியாதியே, இவர்களுக்கு கவுன்ஸ்லிங் கொடுக்கலாம். இத்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களின் மீள்வாழ்விற்கும் மாற்று தொழிலுக்கு ஏற்பாடு செய்யலாம், கடனுதவி வழங்கலாம். துரதிஷ்டவசமாக இவர்களை மீட்டு வருவது அவ்வளவு எளிதல்ல. ஆனாலும், புதியவர்கள் நுழையாமல் தடுக்க பாலியல் கல்வியும் கவுன்ஸ்லிங்கும் நிச்சயம் உதவும்.

நடைமுறையில் இருக்கும் இந்திய தண்டனை சட்டம் என்ன சொல்கிறது?
விபச்சார தடுப்புச்சட்டம் 1956 தான் விபச்சார வழங்குகளில் பரதானமாக பயன்படுத்தப்படுகிறது. இச்சட்டப்படி, பாலியல் தொழிலோ, தொழிலாளர்களோ குற்றவாளிகளாக கருதப்படுவதில்லை. மாறாக விபச்சாரத்திற்கு உதவி செய்யும் மூன்றாம் ஆட்கள், அதாவது விபச்சார விடுதி நடத்துவது, விபச்சாரத்திற்கு இடம் வாடகைக்கு விடுவது மற்றும் விபச்சாரத்திற்கு அழைப்பது போன்றவையே குற்றம் என இச்சட்டம் தண்டிக்கிறது. இவ்வகையில் கைது செய்யப்படுவோர், பரஸ்பர ஒப்பந்த (நீ பணம் தா, நான் உடல் தருகிறேன்) அடிப்படையில் தொழில்/சேவை பெற்றாலும் தண்டனை வழங்கப்படலாம். (கீழே பிடிஎஃப் இணைக்கப்பட்டுள்ளது) இப்போதிருக்கும் சட்டம், விபச்சாரத்தில் ஈடுபடும் பெண்களை தண்டிப்பதாகவே இருக்கிறது அல்லது இச்சட்டத்தால் பெரும்பாலும் பெண்களே பாதிக்கப்படுகிறார்கள். விபச்சாரத்தில் ஈடுபடும் ஆண்களின் போட்டோக்களையோ கைது தகவல்களையோ பார்க்க முடிவதில்லை. முன்பு ரேணுசா சவுத்ரி சொல்லியிருந்தார், 'விபச்சாரத்தில் ஈடுபடும் ஆண்களுக்கும் 7 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கும்படியான சட்டத்திருத்தம் வேண்டும். விபச்சார விடுதியில் 18 வயதுக்குட்பட்ட பெண்ணுடன் விபச்சார உறவு கொண்டு பிடிபடும் ஆண்களுக்கு கற்பழிப்பு அல்லது கற்பழிப்பு முயற்சி என வழக்கு தொடரப்பட வேண்டும்' என்பதாக.

ஆம். இது போன்று விபச்சார தடுப்பு சட்டம் கடுமையாக்கப்பட வேண்டும். கடுமையான சட்டத்தாலேயே குற்றத்தை கட்டுப்படுத்த முடியும் என்றாலும் திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால்... :(

விபச்சாரம்- சேவையாக இருந்தாலும், தொழிலாக இருந்தாலும் கண்டிப்பாக ஒடுக்கப்பட வேண்டும். அது உண்மையில் சிலருடைய வாழ்வாதார பிரச்சனையாக இருந்தாலும் சரியே. உதாரணமாக சிலருடைய வாழ்வை பிரகாசிக்கச்செய்தாலும், பலருடைய வாழ்வை இருளச்செய்ததால் தடைசெய்யப்பட்டு ஒழிக்கப்பட்ட லாட்டரியை சொல்லலாம்.

The Immoral Traffic Prevention) Act, 1956

29 comments:

 1. விபச்சாரம் என்பது தொழில் அதை செய்விப்பவர்களுக்கு
  அது ஒரு சேவை செய்பவளுக்கு

  ReplyDelete
 2. சேவைன்னாலும் தொழில்னாலும் அது ஒரு கொடுமைங்க.

  ReplyDelete
 3. நானும் விபச்சாரத்தை அங்கீகரிக்கலாம் என எண்ணியிருந்தேன் உங்கள் இடுகையை படிக்கும் வரை. ஆனால் இப்போது யோசிக்க வைத்திருக்கிறது. மிக அருமையாய் அலசியிருக்கிறீர்கள்...

  பிரபாகர்.

  ReplyDelete
 4. அருமையான அலசல் நண்பா.. கேள்விகள் நச்.. ஆனால் இப்போதும் உங்களின் சில கருத்துக்களில் இருந்து நான் வேறுபடுகிறேன்.. சூழிநிலைகள் தான் எப்போதும் ஒரு மனிதனின் வாழ்க்கைப் பாதையை தீர்மானிக்கின்றன என்பது என் எண்ணம்

  ReplyDelete
 5. விபசார சட்டம் கடுமையாக்கப்பட்டால் வன்முறை அதிகமாகும்!

  பாலியல் விழிப்புணர்ச்சி ஏற்ப்பட வேண்டும் என நினைப்பதே சிறந்தது!

  ReplyDelete
 6. சட்டம் எவ்வளவு கடுமையாக கொண்டு வந்தாலும் விபச்சாரத்தை ஒழிக்கமுடியாது........

  திருடனாய் பார்த்து திருந்தா விட்டால்...............(உண்மையிலும் உண்மை)

  ஒரு நல்ல பகிர்வு........

  ReplyDelete
 7. விபச்சாரம் தொழிலாகவே இருந்துவிட்டுப் போகட்டும். அதனால் நோய் வராதிருந்தால் சட்டப்படி தப்பில்லை என்றே சொல்லி விட்டு விடலாம்.

  http://kgjawarlal.wordpress.com

  ReplyDelete
 8. பிரிச்சி மேயுறேள்..பீர் !!!

  செய்திகளை சேகரித்து தொகுத்த விதம் பாராட்டுக்குரியது.

  நிறைய கருத்துகள் சொல்லலாம்.நான் ரொம்ப சின்னப்பையனுங்கோ !!!

  ReplyDelete
 9. நல்ல பதிவு பீர்

  சட்டங்கள் கடுமையாக இருந்தால் தான் குற்றங்கள் குறையும். அதுமட்டுமல்லமல் சுயடட்டுபாடும் அவசியம்.

  ReplyDelete
 10. சில சமயம் நல்ல விஷயத்துக்காக குட இதை பன்னுவாங்க, உதாரணதுக்கு வில்லன் கும்பலில் infiltrate பன்னி, நாட்டை காப்பாத்த.

  அய்யய்யோ ...சினிமாவில் வரத எழுதிட்டேனா..பரவா இல்லை நாங்கலாம் சீரியஸ் பதிவிலும் மொக்கை போடுவோம்.....

  ReplyDelete
 11. அன்பின் பீர்

  அருமையான இடுகை - ஒரு பிரச்னையை அல்சி ஆராய்ந்து ஒரு முடிவுடன் இடப்பட்ட இடுகை.

  பொதுவாக சூழ்நிலைதான் காரணம் என்பதே பெரும்பாலானவர்கள் கருத்து. நான் உட்பட.

  நல்வாழ்த்துகள் பீர்

  ReplyDelete
 12. அருமையான கட்டுரை...! சில தினங்களுக்கு முன் 'இப்படிக்கு ரோஸ்' நிகழ்ச்சியில் 'நளினி' என்ற பெண்மணி.. ஒரு பாலியல் தொழிலாளி.. ஒரு மாறுபட்ட கோணத்தில் பேசியிருந்தார். சில பல விஷயங்கள்... சரி என்றோ தவறு என்றோ சட்டென்று முத்திரை குத்திவிட முடியாது. இதுவும் அப்படித்தான்... லட்சக்கணக்கான குழந்தைகள் மற்றும் பெண்களின் வலியும்... துன்பமும்... கொடுமை... ஒரு பக்கம்..! மறு பக்கம்... 'நளினி' போன்றவர்களின் விவாதங்களும் ஏற்றுக்கொள்ளக் கூடியவையே..!

  ReplyDelete
 13. பாராட்டுக்குரிய நல்ல பதிவு பீர் அண்ணே

  ReplyDelete
 14. நல்ல அலசல்..

  //.. விபச்சார தடுப்பு சட்டம் கடுமையாக்கப்பட வேண்டும். ..//

  சட்டம் கடுமையானால் திருட்டுத்தனம் அதிகமாகிவிடும், குற்றங்கள் குறையாது..

  ReplyDelete
 15. வாங்க சித்தூர்.எஸ்.முருகேசன், அது எதுவாக இருந்தாலும் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும்.

  கலகலப்ரியா, நல்ல திரும்ப வந்ததால தப்பிச்சீங்க. இல்லைன்னா ஆட்டோ அனுப்பலாம்னு இருந்தேன்.

  ஆமா சின்ன அம்மிணி, கண் முன்னால் நடக்கும் கொடுமையை 'சட்டம் அங்கீகரிக்க வேண்டும்' என்று சொல்வது அதைவிடக்கொடுமை. :(

  வாங்க பிரபாகர், நானும் பல கோணத்தில் சிந்தித்திருக்கிறேன். நல்ல முடிவாகப்பட்டது இதுதான்.

  ReplyDelete
 16. கார்த்திக், சூழ்நிலையை காரணம் காட்டித்தான் 'தீவிரவாதம்' நடைபெறுகிறது. அப்போ வெடிகுண்டு தயாரிப்பையும் குடிசை தொழிலாக அங்கீகரிக்கலாமா? அதைவிட அந்தச்சூழலை மாற்ற முனைவதே தீர்வாக அமையும். ரேஷன் கடையில் நல்ல அரிசி நியாயவிலையில் கிடைத்தால், தீவிரவாதியும் பாலியல் தொழிலாளியும் திருந்திவிடுவார்கள் என்றிருந்தால், அதை செய்வது தான் அறிவுடைமை.

  ReplyDelete
 17. வால், பாலியல் விழிப்புணர்ச்சி ஏற்பட வேண்டும் என்பதில் எனக்கு எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. உண்மையில் பாலியல் விழிப்புணர்ச்சி ஏற்பட்டுவிட்டால் கடுமையான சட்டத்திற்கு அவசியம் இல்லைதான். ஆனால், அது இல்லாத போது.. கடுமையான சட்டமே அவசியமாகிறது. இதனால் வன்முறை அதிகரிக்கும் என்று எப்படி சொல்கிறீர்கள்?

  ReplyDelete
 18. வாங்க TVR சார், நன்றி.

  சங்கவி, திருடனாய் பார்த்து திருந்தாத வரை திருட்டை ஒழிக்க முடியாது, ஆனால் கடுமையான சட்டத்தால் குற்றத்தைக் குறைக்கலாம்.

  ஜவகர், நோய் மட்டுமே பிரச்சனையா? அதையும் தாண்டிய பல வாழ்வாதார பிரச்சனைகள் இருக்கிறதே. விபச்சாரம், நமது குடும்ப அமைப்பை குலைத்துவிடும் இடுகையில் விடுபட்ட விஷயம், ஒரு பாலியல் தொழிலாளியுடைய வருமானத்தில் 60% க்கும் மேலாக ஏஜண்டிற்கு போகிறதாம்.

  ReplyDelete
 19. வாங்க செய்யது, நீங்க ச்சின்னப்பையனா? எந்த ஊரு.. பூனா தான?

  ஷாகுல், சுயக்கட்டுப்பாடு... பாலியல் விழிப்புணர்வு மூலமே வரும்.

  சாம், என்னாச்சு நல்லாதான இருந்தீங்க... :))

  வாங்க சீனா ஐயா, மிக்க மகிழ்ச்சி... சூழ்நிலைக்கான விளக்கம் நண்பர் கார்த்திக்கிற்கு கொடுத்துள்ளேன்.

  ReplyDelete
 20. கலகலப்ரியா, நளினி நிகழ்ச்சி நானும் பார்த்த நினைவு. சாரு கூட கலந்துகிட்டாரே..?
  அவர்களுடைய வலியையும், வேதனையையும், விவாதங்களையும் நாம் உணர வேண்டும். அதற்கு தீர்வாக 'இதைவிட்டால் வேற வழியில்லை' என்ற அவர்களுடைய நினைப்பு தவறு என்பதையும், மீள்வாழ்வு சாத்தியம் என்பதையும் உணர்த்த வேண்டும்.

  ReplyDelete
 21. வாங்க கருவாச்சி, நன்றி.

  பட்டிக்காட்டான், ஒரு விஷயம் ஏற்றுக்கொள்கிறேன்... எந்தச் சட்டத்தாலும் குற்றத்தை முழுமையாக ஒழிக்க முடியாது. ஆனால், குறைக்கலாம், குற்றவாளிகள் திருந்தலாம். கடுமையான சட்டத்தால், குற்றம் அதிகமாகிறது என்றால் அது சட்ட அமைப்பின் பிழையே.

  ReplyDelete
 22. //ஆமா சின்ன அம்மிணி, கண் முன்னால் நடக்கும் கொடுமையை 'சட்டம் அங்கீகரிக்க வேண்டும்' என்று சொல்வது அதைவிடக்கொடுமை. :(//

  எது தான் கொடுமையில்லை!
  அரசே சாராயம் விற்பது நியாயமா?,
  பெட்டி கடைகளில் பீடி சிகரெட் விற்பது நியாயமா!?

  விபசார தொழிலால் வழுகட்டாயமாக திணிக்கப்படும் சில பெண்களுக்கு பாதிப்பு இருப்பது உண்மை தான்,

  ஆனால் அத்தொழிலால் சமுதாயத்துக்கு என்ன சீர்கேடு கண்டீர்கள்!

  பாலியலை பொத்தி பொத்தி வைக்கும் நாடுகளில் தான் பாலியல் குற்றங்கள் அதிகமாக நடக்கின்றன!
  மேலும் விபச்சார தொழில் ஒழிக்கபடுவதால் முறையற்ற பாலியல் உறவுகள் அதிகமாகும்!

  இதை தான் நீங்கள் விரும்புகிறீர்களா?

  ReplyDelete
 23. நான் கருத்து சொல்வதற்குள் பதிவைத் தூக்கிவிட்ட உங்களுக்கு என் கடுமையான கண்டனங்கள்!!

  விபச்சாரம் மட்டுமல்ல, கெட்டவர்களை அழிக்க உதவுவதால் கொலையையும் சட்டபூர்வமாக்க வேண்டும்.

  பணமில்லாதவர்களுக்கு உதவமுடிவதால் கொள்ளையடிப்பதையும் அங்கீகரிக்க வேண்டும்.

  //அரண்மனைக்கு சென்ற பெண் பிறகு நாட்டை ஆண்ட(பெட்டிகோட்) வரலாறும் உண்டு. //

  அதென்ன பெட்டிகோட் ஆட்சின்னு நக்கல்? அந்தப் பெண்ணின் ஆளுமைத்திறன் போற்றப்படவேண்டியது.

  ReplyDelete
 24. உங்கள் பதிவை விமர்சித்து தனிப்பதிவு போட்டுள்ளேன். நம் இருவரின் நோக்கமும் அவர்களின் நல்வாழ்வே . என்ன செயல் திட்டத்தில் தான் வித்யாசம் . ஓகே. ஜூட்

  ReplyDelete
 25. ஜவஹர் அவர்களே,
  தங்கள் கருத்தே என் கருத்தும் தனிப்பதிவிட்டுள்ளேன். படித்து கருத்து தெரிவிக்கவும்

  ReplyDelete
 26. அவசரமான பதிவு.
  >ஒருவனுக்கு ஒருத்தி அது தான் நம் பண்பாடும்.எல்லா ஆண் மகன்களும் இதை பின்பற்றுங்கள்.
  >வெளியே போகும் கணவன் வீட்டிற்கு வரும் வரை தாலியை கண்ணில் ஒற்றிக்கொண்டிருக்கும் மனைவி.இவளை விட சிறநதவளா அந்த லிப்ஸ்டிக் தேவதை
  >திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது அது அந்த காலம்க!
  திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருடனை ஒழித்து விடுவோம் இது இந்த காலம்க.
  கண்டிப்பாக சட்ட்ம் தேவை.
  பிழைப்பதற்கு வேற வேலயே இல்லையா.

  ReplyDelete
 27. good article.certainly we should appreciate this at any reason.

  ReplyDelete

மனம் திறந்து செதுக்குங்கள், என் எழுத்துக்களை.