நடிகர் எம்.ஆர். ராதா பற்றிய கிழக்கு பாட்காஸ்ட் நிகழ்ச்சி கேட்டேன். அதில் எம்.ஆர்.ராதா மலேசிய மேடையில் பேசியதன் ஒரு பகுதியை ஒலிபரப்பியிருந்தார்கள். கேடுகெட்ட அயோக்கியர்கள், வரி ஏய்ப்பு செய்பவர்கள் என்று சினிமாக்காரர்களை திட்டுகிறார். கேட்டுப்பாருங்கள்...
எம்.ஆர்.ராதாவுடைய முழு உரையும் இங்கே கிடக்கிறது. அதில் அரசியல்வாதிகளையும் விமர்சிப்பதோடு, எம்.ஜி.ராமசந்திரனை தான் சுட்ட கதையையும் விளக்குகிறார்.
இன்று ஆதித்யாவில் விவேக் சேலையில் நடித்த ஒரு காமெடியை பார்க்க நேரிட்டது. சகிக்கவில்லை... தினமலர் விவகாரத்திற்குப் பிறகு விவேக் காமெடியை ரசிக்க முடிவதில்லை. திரைக்கு வெளியே நடிக்கும் போது, சக நடிகைகளுக்கு கோயில் கட்டி கும்பிடச் சொல்லும் விவேக், திரையில் பெண் வேடத்தில் அல்லது முற்போக்குவாதி வேடத்தில் வந்து பெண்களை (சக நடிகைகளையும்) கொச்சைப்படுத்தும் போது டிவியை உடைத்துவிடலாமா என்று ஆத்திரம் வருகிறது.
வீட்டிற்கு ஒரு தொலைக்காட்சிப்பெட்டி இலவசமாக கொடுத்து, மானும் மயிலும் ஆடுவதை கண்டு கைகொட்டி சிரித்தும், திருமதி செல்வத்தை பார்த்து கண்ணீர்விட்டு அழுதும் கிடக்கச் செய்துவிட்டார்கள். மெகா தொடருக்கு அப்பால் நம்முடைய அறிவு செல்லக்கூடாது என்பதில் தீர்மானமாய் இருப்பதன் மூலம், நாட்டு மக்களுக்கு நடப்பு அரசியலை பற்றிய விமர்சனம் / மாற்றுக்கருத்து எழாதவாறு கவனமாக பார்த்துக்கொள்கிறார்கள். எதிர் கட்சிகள் நடத்தும் தொலைக்காட்சி செய்திகளுக்கும் தன் தலைவர்களுடைய அரை மணி நேர அறிக்கையை வாசிப்பதற்கே நேரம் கிடைப்பதில்லை. அநியாயம்.. நமது பொழுதை எந்த வழியில் போக்க வேண்டும் என்பதை அரசே தீர்மானித்து நமது அறிவை மழுங்கச்செய்கிறது.
நண்பர் நர்சிம், கோலங்கள் தொடரின் ஒரு காட்சிக்காக அதன் இயக்குனரை பாராட்டி ஒரு பதிவிட்டிருந்தார். நல்ல காட்சியமைப்பு என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால், தொடரை தொடர்ந்து பார்க்கும் யாருக்கும் 'அந்த' நிகழ்வு நினைவு வந்திருக்க வாய்ப்பில்லை. அண்டை நாட்டில் ஒரு இனம் அழிக்கப்பட்ட அண்மைய துர் நிகழ்வு, மெகா சீரியல் பார்க்கும் பெண்களில் எத்தனை பேருக்கு தெரிந்திருக்கும் என்பது சந்தேகமே.
சமையில் எரிவாயுவிற்கு வழங்கிவந்த மானியத்தொகையை தமிழக அரசு விலக்கிக்கொண்டுள்ளது. பாதகமில்லை.. தேர்தல் நெருங்கும் போது முற்றிலும் இலவசமாகக்கூட தருவார்கள். அது கிடக்கட்டும், எரிவாயு சிலிண்டர் காலாவதியாகும் தேதி ஒவ்வொரு சிலிண்டரிலும் அச்சிடப்பட்டிருக்கும். C10 என்றிருந்தால், மூன்றாம் காலாண்டு 2010ல் காலாவதியாகிறது என்று கொள்ளவேண்டும். அதாவது. A B C D முறையே முதல், இரண்டாம், மூன்றாம், நான்காம் காலாண்டை குறிக்கிறது. 10 என்பது வருடத்தை குறிக்கிறது என்பது தெரிந்திருக்கும். காலாவதி (எக்ஸ்பயர்டு) ஆன பிறகு சிலிண்டரை பாவிக்காது திரும்ப கொடுத்துவிடுவதன் மூலம் விபத்துக்களை தவிர்க்கலாம்.
சென்றவாரத்தின் ஒரேநாளில் Wrong Turn 3, Rest Stop என்ற இரண்டு திரைப்படங்களை அடுத்தடுத்து பார்த்தேன். இரண்டுமே கானிபலிஸம் வகை. இரண்டையும் பார்த்து முடித்ததும் ஒரே திரைப்படம் பார்த்தது போன்ற எண்ணம். ஒரே மாதிரியான பழைய பிக்அப், பேசாத 'அதுகள்', பேசும் ஆயுதங்கள், நிலா வெளிச்ச இரவுகள் என நான் பார்த்த அனைத்து 'மனித மாமிச உண்ணி' திரைப்படங்களின் காட்சிப்படுத்துதலிலும் கதை அம்சத்திலும் எந்த வித்தியாசமும் காட்டப்பட்டதில்லை. இதே உணர்வு பல விஜய் திரைப்படங்களை பார்க்கும் போதும் ஏற்படுவதுண்டு. கார்க்கி அடிக்கவர வேண்டாம், நான் சொல்வது திரைக்கதை மற்றும் காட்சி அமைப்பை மட்டுமே. யார் மனதையும் புண்படுத்த அல்ல.
அவிய்ங்க ராசா, சென்னையில் தனக்கு வீடு கிடைக்காத கதையை பதிவிட்டிருக்கிறார். சாதி மத சிறுபான்மையினருக்கு பெருநகரங்களில் வாடகைக்கு வீடு கொடுக்க யாரும் தயாராயில்லை. இவர்களுக்கு வாழ்வாதார உரிமைகள் மறுக்கப்படுவதை பற்றிய கவலை, குறைந்தபட்சம் அனுதாபம் கூட இங்கே இல்லை. போலி தேசியம் பேசுகிறார்கள், கடந்த கிரிக்கெட் போட்டியின் போது பாகிஸ்தான் வெற்றிபெற பிராத்தனை செய்த விளையாட்டு வெறியர்களான போலி தேசியவாதிகள்.
பஹ்ரைன் நாட்டை சார்ந்த ருகையா அல் கஸ்ரா என்ற பெண், ஹிஜாப்-பர்தா (தலை முதல் கால் வரை மறைக்கப்பட்ட உடை) அணிந்து ஒலிம்பிக் 200 மீட்டர் ஒட்டப்பந்தயத்தில் முதலிடம் பிடித்திருக்கிறார். இஸ்லாம், பெண்களுக்கு சுதந்திரம் அளிக்கவில்லை என்று சொல்லி மற்றவர் நம்பிக்கையில் மூக்கை நுழைந்து போலி மதசார்பின்மை பேசும் ‘மதவாதிகளின்’ முகத்தில் கரியை பூசியிருக்கிறார். பர்தா பெண்களுடைய முன்னேற்றத்திற்கும், விளையாட்டு துறையில் வெற்றி பெறவும் தடையாக இருப்பதில்லை என்பதை ஒலிம்பிக் ஓட்டப்பந்தயத்தில் முதலிடம் பெற்று நிரூபித்திருக்கிறார். பெண்களின் அரைகுறை ஆடை ஆண்களின் கழுகுப்பார்வைக்கான விருந்தேயன்றி, அது அவர்களுடைய நேர்மையான முன்னேற்றத்திற்கு அல்ல என்பதை போலி பெண்ணியவாதிகள் உணர்ந்துகொள்ள வேண்டும். பொது இடங்களில் ஆடை குறைப்பதில்தான் பெண் சுதந்திரம் அடங்கியிருக்கிறது என்ற பிம்பத்தை உடைத்த சகோதரிக்கு வாழ்த்துக்கள்.
டிஸ்கி: இது மீள்பதிவு இல்லீங்க... :(
அண்ணே, நிறைய வாசிக்கிறீங்க போலயே...!
ReplyDeleteநல்ல காரமான ஜிகர்தண்டா..
ReplyDelete//.. பெண்களின் அரைகுறை ஆடை ஆண்களின் கழுகுப்பார்வைக்கான விருந்தேயன்றி, அது அவர்களுடைய நேர்மையான முன்னேற்றத்திற்கு அல்ல ..//
உடை பற்றிய கருத்து அருமை..
<<<
ReplyDeleteமுற்போக்குவாதி வேடத்தில் வந்து பெண்களை (சக நடிகைகளையும்) கொச்சைப்படுத்தும் போது டிவியை உடைத்துவிடலாமா என்று ஆத்திரம் வருகிறது
>>>
cooooollll..... less tension more work, more tension less work :D so cooooolll Peer
<<<
பெண்களின் அரைகுறை ஆடை ஆண்களின் கழுகுப்பார்வைக்கான விருந்தேயன்றி, அது அவர்களுடைய நேர்மையான முன்னேற்றத்திற்கு அல்ல என்பதை போலி பெண்ணியவாதிகள் உணர்ந்துகொள்ள வேண்டும். பொது இடங்களில் ஆடை குறைப்பதில்தான் பெண் சுதந்திரம் அடங்கியிருக்கிறது என்ற பிம்பத்தை உடைத்த சகோதரிக்கு வாழ்த்துக்கள்.
>>>
superb :D
Congrats Ruhaiya... so proud of her
பர்தா ஹிஜாப் என்றாலே ஒரு முழு நீள ( பொக்கிஷம் படத்தில் பத்மப்பிரியாவைப்
ReplyDeleteபோல ) கருப்பு அங்கியை அணிவது என்று பல நணபர்களுக்கு தவறான கருத்து
இருந்திருக்கும்.
ருகையாவை பார்த்து புரிந்து கொள்ளட்டும்.
ஒரு பெண் முழுமையாக ( முகம் தவிர ) தன்னை மறைத்து கொள்வது அடிமைத்தனம்
என்று நினைக்கும் போலி முற்போக்கு வாதிகள் இன்னும் தூங்குவது போல்
நடிக்க வேண்டாம்.
சற்று முன்னர் தான் இது குறித்த செய்தியை படித்து கொண்டிருந்தேன்.
Hats off to you Peer !!!
நல்ல பதிவு.. புது தகவல்களுக்கு நன்றி ஸார்.
ReplyDelete-Toto.
www.pixmonk.com
//போலி தேசியம் பேசுகிறார்கள், கடந்த கிரிக்கெட் போட்டியின் போது பாகிஸ்தான் வெற்றிபெற பிராத்தனை செய்த விளையாட்டு வெறியர்களான போலி தேசியவாதிகள்.//
ReplyDelete:)
<<<
பெண்களின் அரைகுறை ஆடை ஆண்களின் கழுகுப்பார்வைக்கான விருந்தேயன்றி, அது அவர்களுடைய நேர்மையான முன்னேற்றத்திற்கு அல்ல என்பதை போலி பெண்ணியவாதிகள் உணர்ந்துகொள்ள வேண்டும். பொது இடங்களில் ஆடை குறைப்பதில்தான் பெண் சுதந்திரம் அடங்கியிருக்கிறது என்ற பிம்பத்தை உடைத்த சகோதரிக்கு வாழ்த்துக்கள்.
>>>
நானும் வாழ்த்துகிறேன்
குழந்தை பார்க்க கூடிய சினிமாவா எடுக்கிறார்கள் என்றும் கேட்கிறார்..
ReplyDeleteசரிதானே..
பகிர்வுக்கு நன்றி பீர்
நல்ல சூப்பரான சூடான ஜிகர்தண்டா. நான் கூட வாசிம் அக்ரம் பவுலிங் போடும்போது சிலசமயம் பாகிஸ்தான் கிரிக்கெட் டீம் சப்போர்ட் பண்ணுவேன். நானும் போலி தேசியவாதியா ! அவ்வ்வ்வ்வ்வ்வ்.
ReplyDeleteஎடுத்துரைத்த கருத்துக்களும் செய்திகளும் அருமை பீர்.
ReplyDeleteஅவிய்ங்க ராசா.. போன்ற அனுபவங்கள்
ReplyDelete(வாடகை வீடு இல்லிங்கோ, வேற), சிறு வயதில் இருந்தே நமக்கும் நடந்ததுண்டு, சில நண்பர்கள் மூலமாக அந்த காயங்கள் மறைந்தும் விட்டது.
சிலிண்டர் தகவலுக்கு நன்றி. பர்தா பற்றிய கருத்தை முழுவதும் ஆதரிக்கிறேன்.
அப்புறம் பீர், கொஞ்சம் தெளிவு படுத்த அனுமதிக்கவும், ருகையா வெற்றி பெற்றது ஒலிம்பிக் தகுதி சுற்றில்.
பேப்பர் படிக்கிறதுக்குப் பதிலா உங்க பிளாக் படிக்கலாம் போல!!
ReplyDeleteநேரத்தை வேஸ்ட் பண்ணாமல் நிறையவே செய்திகளை மேய்கிறது தெரிகிறாது, இது மாதிரி பதிவுகள் ஒரு தலைப்புச்செய்தி
ReplyDeleteஎனது பின்னூடத்திற்கு தமிலிஷிசை பார்க்கவும் -:)
ReplyDeleteரொம்ப சூப்பருன்னே
ReplyDelete//பெண்களின் அரைகுறை ஆடை ஆண்களின் கழுகுப்பார்வைக்கான விருந்தேயன்றி, அது அவர்களுடைய நேர்மையான முன்னேற்றத்திற்கு அல்ல என்பதை போலி பெண்ணியவாதிகள் உணர்ந்துகொள்ள வேண்டும். பொது இடங்களில் ஆடை குறைப்பதில்தான் பெண் சுதந்திரம் அடங்கியிருக்கிறது என்ற பிம்பத்தை உடைத்த சகோதரிக்கு வாழ்த்துக்கள்//
உண்மைதான் நானும் அவரை வாழ்த்துகிறேன்
<<<
ReplyDeleteமணிகண்டன் said...
நல்ல சூப்பரான சூடான ஜிகர்தண்டா. நான் கூட வாசிம் அக்ரம் பவுலிங் போடும்போது சிலசமயம் பாகிஸ்தான் கிரிக்கெட் டீம் சப்போர்ட் பண்ணுவேன். நானும் போலி தேசியவாதியா ! அவ்வ்வ்வ்வ்வ்வ்.
>>>
யாருப்பாது அங்கே... இங்கே ஒரு திவிரவாதி இருக்காரு :D...
//இங்கே ஒரு திவிரவாதி இருக்காரு//
ReplyDeleteஅவர் கிரிக்கெட் தீவிரவாதி, இன்னும் சொல்ல போனால், சச்சின் தீவிரவாத குழுவில் முக்கியமான ஆளும் இவரே.......:)
@mastan,sam
ReplyDelete:)-
சாம், தப்பு. நான் சச்சின் பத்தி எழுதப்படும் எல்லா இடத்துலயும் விவாதம் புரியலை. அதை ஒரு provocation ஆக எழுதுபவர்களிடம் மட்டும் provocate ஆகி விவாதம் செய்வேன். :)- இது ஜஸ்ட் ஒரு விளையாட்டு.
எனக்கு சச்சினை விட பிடித்த கிரிக்கெட்டர்கள் ஒரு சிலர் இருக்கின்றனர் !
ராஜூ, நிறைய இடங்களில் வாசிக்கிறேன் என்பது சரியாக இருக்கும்.
ReplyDeleteபட்டிக்காட்டான், ஜிகர்தண்டா காரமா? அப்போ தயாரிப்பு குறைபாடு.
மஸ்தான், டென்ஷன் மோரா இருந்தாலும் லஸ்லியா இருந்தாலும் நம்மளோட வொர்க்கும் வொர்த்தும் கம்மிதான்.
செய்யது, அவர்களுடைய இதயங்கள் சீலிடப்பட்டுவிட்டனவா?
Toto, புது தகவல்களுக்கு?? :)))
வாங்க முரு, :)
வசந்த், சரிதான்.. முழு பேச்சையும் கேட்டுப்பாருங்கள். திரைத்துறையில் இருந்து கொண்டே அவர்களை விமர்சித்த மகாத்மா அவர்.
ReplyDeleteமணி, கோடிகளில் புழங்கும் ஒரு விளையாட்டை காசு கொடுத்து ரசிப்பதில்தான் தேச பற்று இருக்கிறதா? சச்சினுக்கு காசும் ஹம்மரும் கொடுத்தால் பாகிஸ்தானுக்காக ஆட மாட்டாரா?
ReplyDeleteவாங்க ஷஃபிக்ஸ், நன்றி.
ReplyDeleteசாம், ஏதோ ஒரு சுற்று. வெற்றி பெற வில்லையென்றாலும், விளையாட்டு போட்டிகளில் கலந்துகொள்ள உடை ஒரு தடையில்லை என்பதை நிரூபித்துவிட்டாரே. [உண்மையில் இந்த சுற்று விவகாரமெல்லாம் எனக்குத்தெரியாது. மைதான விளையாட்டுகளில் ஏனோ அவ்வளவு ஆர்வம் இல்லை :) ]
ஹூசைனம்மா, அப்டி தவறான முடிவுக்கு வந்துடாதீங்க. :) என் கண்ணில்படும் செய்திகளில் எனக்கு பிடித்தவற்றை தொகுத்து எழுதுகிறேன். இன்னும் சொல்லணும்னா பிடிக்காததைதான் அதிகமா எழுதுறேன். அதுக்காக இந்தப்பக்கம் வாரத நிறுத்திடாதீங்க :)
வாங்க அபு அஃப்ஸர், முன்பைவிட நிறைய வாசிக்கிறேன் என்பது சரிதான். ஆனால் இவையெல்லாம் வாழ்க்கைக்கு உதவுமான்னு தெரியல.. :(
ReplyDeleteஞான பித்தன், தமிழிஷில் பதிலூட்டம் பார்க்கவும்.
வாங்க ஷாகுல், இதை நண்பர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
பர்தா[ஜிஹாப்] ஒருதடையே இல்லை
ReplyDeleteஎன்பதை
நிருபித்துக்காட்டிய சகோதரிக்கு வாழ்த்துக்கள்,
முழுவதும்மூடியபடியே நம்மால் எதையும் சாதிக்கமுடியும்.
பர்தா அனியச்சொல்வது ஆணினம் பெண்ணினத்தை அடிமைப்படுத்துவதற்காக என நினைப்போர்கள் தாம் நினைப்பது தவறு என்று
சொல்லும் நாள் வெகுதூரத்தில் இல்லை..
நான் கவிதை வாசிக்கபோகும்போது இருகண்கள்மட்டும் தெரியும்படியாகத்தான் சென்று வாசிக்கிறேன், அது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது,
என்குரல் எழும்பவில்லையா கைதட்டல்கள்தான் என்காதில்விலவில்லையா.
சாதிக்கநினைக்கும் ஒருவருக்கு
முழுநீள உடை என்றுமே
தடையில்லை
இதையும் பாருங்க. சானியா என்று ஒன்று இருக்கு. அதையும் பாருங்க.
ReplyDeleteடைட்டாக உடை அணிவது தான் இஸ்லாத்தில் தவறு!
ReplyDeleteதலை முதல் கால் வரை நீச்சல் உடை கூட அணியலாமே!
மதத்தை தினிக்காமல் எதுவும் எழுதமுடியாதோ!?