Nov 5, 2009

பத்துக்கு பத்து - பிடித்ததும் பிடிக்காததும்

1. அரசியல் தலைவர்
பிடித்தவர்: ஸ்டாலின்
பிடிக்காதவர்: அன்புமணி

2. எழுத்தாளர்
பிடித்தவர்: எஸ்.ராமகிருஷ்ணன்
பிடிக்காதவர்: ஞாநி

3. கவிஞர்
பிடித்தவர்: மு.கருணாநிதி
பிடிக்காதவர்: உயிரோடு இல்லை

4. திரைப்பட இயக்குனர்
பிடித்தவர்: அமீர்
பிடிக்காதவர்: மணிரத்னம்

5. நடிகர்/கை
பிடித்தவர்: ஜெயலலிதா
பிடிக்காதவர்: விஜயகாந்த்

6. விளையாட்டு வீரர்
பிடித்தவர்: விஸ்வநாதன் ஆனந்த்
பிடிக்காதவர்: அஜீத்

7. தொழில் அதிபர்
பிடித்தவர்: கலாநிதி மாறன்
பிடிக்காதவர்: ஷங்கர்

8. மதத் தலைவர்
பிடித்தவர்: கி.வீரமணி
பிடிக்காதவர்: இராமகோபாலன்

9. மருத்துவர்
பிடித்தவர்: புருனோ
பிடிக்காதவர்: ராமதாஸ்

10. வலைபதிவர்
பிடித்தவர்: லக்கிலுக்
பிடிக்காதவர்: யுவகிருஷ்ணா

என்னைத் தொடர அழைத்தது:  நாடோடி இலக்கியன்

நான் தொடர அழைப்பது:
விதி இங்க இருக்கு. 

டிஸ்கி: பிடித்த/பிடிக்காதவர் எந்த நிமிடமும் மாற்றப்படலாம்.@ சகோதரி சுமஜ்லா, @சகோதரர் ராஜூ, உங்களுடைய தொடர் விளையாட்டுக் கேள்விகள் கடினமாக இருப்பதால் இன்னும் எழுதமுடிவில்லை. விடை கிடைத்ததும் விரைவில் எழுதுகிறேன்.

36 comments:

 1. மீ த பர்ஸ்ட்!!!
  அருமையா இருக்கு உங்க பத்து. வாழ்த்துகள்! ஆனா கேள்விகளை பாத்தா ஆபத்தா இருக்கம் ​போல! ம்ம்ம்... நம்மளையும் களத்தில இறக்குனதுக்கு ​ரொம்ப நன்றி பாஸ்..!

  ReplyDelete
 2. ஜெகா, கேள்விகள் ஆபத்து இல்ல.. அப்பாவி பத்து. :)

  ReplyDelete
 3. ம். உங்கள் கருத்துக்களை சொல்லியிருக்கீங்க... ஆதவனை சார்ந்து உள்ளவை தவிர யாவும் எனது எண்ணங்களே....

  பிரபாகர்.

  ReplyDelete
 4. //டிஸ்கி: பிடித்த/பிடிக்காதவர் எந்த நிமிடமும் மாற்றப்படலாம்//

  I like this commitment

  ReplyDelete
 5. //4. திரைப்பட இயக்குனர்
  பிடித்தவர்: அமீர்
  பிடிக்காதவர்: மணிரத்னம் //

  காரணங்கள், நல்லாவே புரியுது.

  தொடர அழைத்ததிற்கு நன்றி பீர்.

  ReplyDelete
 6. ஷார்ட் அண்ட் ஸ்வீட்டா நல்லா இருக்கு.

  ReplyDelete
 7. சொன்னது போல் கிட்டத்தட்ட ctrl+C,ctrl+V தான் போலிருக்கு.

  //டிஸ்கி: பிடித்த/பிடிக்காதவர் எந்த நிமிடமும் மாற்றப்படலாம்//

  நானும் இதை ஃபாலோ பண்ணப்போறேன். :)

  ReplyDelete
 8. <<<
  திரைப்பட இயக்குனர்
  பிடிக்காதவர்: மணிரத்னம்
  >>>

  ஏன் ஏன் ஏன் ஏன் ஏன் ஏன் ஏன் ஏன் ஏன் ஏன் ஏன் பிடிக்காது????
  என்ன காரணம்?
  அருமையான இயக்குனர். நாயகன் மாதிரி ஒரு படம் சொல்லுங்க பாப்போம்? பிரபலங்களை பிடிக்காதுன்னு சொல்லி பிரபலாகலாமன்னா????


  <<<
  மதத் தலைவர்
  பிடித்தவர்: கி.வீரமணி
  >>>
  வீரமணி எப்ப மதத் தலைவர் ஆனார்?

  ReplyDelete
 9. மஸ்தான்,

  பெரியாரைக் கடவுளாகக் கொண்ட மதத்தின் தலைவர் வீரமணி.

  //பிரபலங்களை பிடிக்காதுன்னு சொல்லி பிரபலாகலாமன்னா????//

  பிடிக்காதவர்களும் பிரபலமாகத்தான் இருக்க வேண்டும் என்பது விதி. அது நானான இருந்தாலும்... :)

  ReplyDelete
 10. நாடோடி இலக்கியன், நான் எழுதும் போது உங்க லிஸ்ட் நினைவில் இல்லை. ஆனாலும் கிட்டத்தட்ட.... இல்லையா? :)

  சின்ன அம்மிணி, இந்தப்பதிவை இதைவிட விரிவா எழுத முடியாது. :)

  சாம், சீக்கரம் எழுதணும்.

  முரு, நன்றி.

  பிரபாகர், ஆதவனை???

  ReplyDelete
 11. கொஞ்சம்(ரொம்ப) வித்தியசமாத்தான் இருக்கு பீர் பாய்

  ReplyDelete
 12. எல்லாம் சரி
  எதுக்காக பிடிக்கும் எதற்காக பிடிக்காது என்கிற காரணம் சொல்லிருந்தால் இன்னும் சுவராஸ்யமா இருந்திருக்கும்

  ReplyDelete
 13. நவாஸ் காக்கா, ஹிஹி... எல்லாம் ஒரு விளம்பரம்தான்.

  நாஸியா தங்கச்சி, நன்றியெல்லாம் இருக்கட்டும். சீக்கரம் எழுதி அண்ணன் பேர காப்பாத்துங்க. :)

  அபு அஃப்ஸர், வாசிப்போர் எண்ணத்தில் விட்டுவிடலாம் என்றே சொல்லவில்லை. எந்த துறையில் விளக்கம் வேணும்னு கேட்டால் சொல்றேன்.

  ReplyDelete
 14. இந்த ஒரே ஒரு தொடருக்கு மட்டும் மன்னிச்சி விட்டுடுங்க ப்ளீஸ். :)-

  ReplyDelete
 15. நோ வே. அட்வான்ஸ் புக் பண்ணியிருந்தேன்.

  ஏன் ட்விட்டரில் 'சும்மா மேயும்போது' மாட்டிடுவீங்கன்னு பயமா ☠

  ReplyDelete
 16. பீர் அண்ணா நல்லாத்தான் சொல்லியிருக்கீங்க..பெரியவங்க
  சொன்னா கேட்டுக்கோனும்..

  ReplyDelete
 17. //திரைப்பட இயக்குனர்
  பிடித்தவர்: அமீர்
  பிடிக்காதவர்: மணிரத்னம்//

  எனக்கு மணிரத்னம் ரொம்ப பிடிக்குங்க..!!!

  ReplyDelete
 18. மலிக்கா அக்கா, நன்றி.

  (எல்லாருக்கும் அண்ணனா... நான் ரொம்ப சின்னப்பையனுங்க. நல்ல வேளை ஹூசைனம்மா தம்பின்னு சொல்லுவாங்க)

  ReplyDelete
 19. நன்றி ரவி, இப்பவாவது வழி தெரிஞ்சுதே.

  செய்யது, எனக்கு மணிரத்னம் படங்களின் காட்சியமைப்பு பிடிக்கும். அமீரின் கதை படிப்பதில்லை.

  கார்க்கி, :) (யுவா புரிஞ்சுப்பாருன்னு நினைக்கிறேன்)

  ReplyDelete
 20. ***
  ஏன் ட்விட்டரில் 'சும்மா மேயும்போது' மாட்டிடுவீங்கன்னு பயமா
  ***

  ஹாஹாஹா. இதுக்கெல்லாமா பயப்படுவாங்க ! இந்த தொடர் என்னவோ அவ்வளவு சுவாரசியமா தெரியலை.

  வால்பையன் பதிவு படிச்சா தான் ஐடியா வருது.

  பிடிக்காதவர் / ரொம்ப பிடிக்காதவர் என்று எழுதலாமே என்று :௦)-

  ReplyDelete
 21. //மதத் தலைவர்
  பிடித்தவர்: கி.வீரமணி//

  நல்ல குசும்பு!

  ReplyDelete
 22. மணி, உங்க விருப்பம் எப்டினாலும் எழுதலாம்.

  வால், என்ன பண்றது... அவரை எனக்கு பிடிக்கும், சொல்றதுக்கு வேற வகை தெரியல.

  ReplyDelete
 23. [எல்லாருக்கும் அண்ணனா... நான் ரொம்ப சின்னப்பையனுங்க. நல்ல வேளை ஹூசைனம்மா தம்பின்னு சொல்லுவாங்க[

  பின்னே நீங்க எனக்கு அண்ணந்தானுங்க ஏன்னா என்னவிட நீங்க 3 வருடம் 11 மாதம் 18 நாள் மூத்தவங்க அப்போ நீங்க எனக்கு அண்ணன் தானுங்களே

  இன்னும் சின்னப்பிள்ளையாயிருக்க ஆசையோ, அப்ப நாங்கமட்டும்:[

  ReplyDelete
 24. //எல்லாருக்கும் அண்ணனா... நான் ரொம்ப சின்னப்பையனுங்க. நல்ல வேளை ஹூசைனம்மா தம்பின்னு சொல்லுவாங்க//

  அப்ப நான் உங்களுக்கும் அக்காவா?

  உங்களுக்கு, அப்துல்லா, நாஸியாவுக்கெல்லாம் என்மேல என்ன கோவம்?

  //இன்னும் சின்னப்பிள்ளையாயிருக்க ஆசையோ//

  அதானே...

  ReplyDelete
 25. நடிகர்/கை பிடித்தவர்:

  இப்படி படிக்கனுமா ... ;)

  ReplyDelete
 26. எனக்கு கிடைத்த கேள்விகள் சில இங்கே இல்லையோ?

  நல்லா எழுதி இருக்கீங்க சூப்பர்!

  //டிஸ்கி: பிடித்த/பிடிக்காதவர் எந்த நிமிடமும் மாற்றப்படலாம்//


  இதுதான் யதார்த்தம்!!

  ReplyDelete
 27. ம்ம்ம்...ரைட்டு பீர்!!

  ReplyDelete
 28. மலிக்கா, ஏங்க அந்த நிமிஷம் நொடியெல்லாம் விட்டுட்டீங்க.. அதையும் சேர்த்து எழுதிடவேண்டியதுதான...

  ஹூசைனம்மா, உங்களை 'என்னம்மா தங்கச்சி' அப்டின்னா நல்லாயிருக்காது. அக்கா கேரக்டரே நல்லா இருக்கும்.

  ஜமால், நீங்க எப்டினாலும் படிங்க.. என்னை தப்பா நினைக்கக் கூடாது. டிஸ்கிக்கு சுத்தி போடணும்.. ஓவர் கண்ணு.


  முதல் வருகைக்கு நன்றி ரம்யா, அப்போ பதில்களில் யதார்த்தம் இல்லையா?

  வாங்க ஷஃபிக்ஸ்... :)

  ReplyDelete
 29. உண்மையில் நான் எழுதிய / இதுவரை வாசித்த தொடர் பதிவுகளில் எனக்கு மிகவும் பிடித்தமானது இந்தப் பதிவே.

  நன்றி தோழர் மாதவராஜ்!

  ReplyDelete
 30. //9. மருத்துவர்
  பிடித்தவர்: புருனோ
  பிடிக்காதவர்: ராமதாஸ்

  10. வலைபதிவர்
  பிடித்தவர்: லக்கிலுக்
  பிடிக்காதவர்: யுவகிருஷ்ணா// மிகவும் ரசித்தேன். :)

  ReplyDelete

மனம் திறந்து செதுக்குங்கள், என் எழுத்துக்களை.