இந்துக் கடவுள்களில் ஒன்றான கலைவாணியை நிர்வாண ஓவியமாக வரைந்ததற்காக 2006ம் ஆண்டு ஓவியர் எம்.எஃப்.ஹூசைன் நாடு கடத்தப்பட்டார். அதாவது அவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து இந்தியாவை விட்டு வெளியேறுமாறு பாதுகாப்புத்துறையால் அறிவுருத்தப்பட்டார். இப்போது இந்தியா திரும்ப இருக்கும் அவரை எதிர்க்க சில இந்து அமைப்புகள் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வருகிறது.
இந்தியப் பன்முகச்சமூகத்தில் ஒரு மதத்தை சார்ந்தவர்கள் வணங்கும் கடவுள்களில் ஒன்றை நிர்வாண ஓவிமாகவோ சிலையாகவோ வடிப்பதென்பது கண்டிக்கத்தக்கது, ஒறுமைப்பாட்டிற்கு எதிரானது. இத்தகைய குற்றத்தைச்செய்தவர் எந்த மதத்தவரானாலும் குற்றவாளியே, குறிப்பாக மாற்று மதத்தை சார்ந்தவர் அதைச்செய்யும் போது கண்டித்து அடக்குவதே சரியான தீர்வாகவும், பன்முகத்தன்மை கொண்ட சமுதாயத்தின் ஒற்றுமையை வழுப்படுத்துவதாகவும் அமையும். நாம் நியாயவான்களாக இருக்கும்பட்சத்தில், நீதி வழியில் போராடி தண்டனை பெற்றுத்தருவதும் அவசிமாகிறது. இல்லையென்றால் குற்றம்சாட்டப்பட்டவரை திட்டி தீர்ப்பதோ, கொலைமிரட்டல் விடுத்து நாடு கடத்துவதோ அல்லது ஓவியம் வரைந்த அவனது கைகளை காவு கேட்பதோ கூட அருவருப்போடு ஏற்றுக்கொள்ளப்படலாம். அதைவிடுத்து, (அல்லது அதையும் செய்துவிட்டு) அவர் சார்ந்திருப்பதாக எண்ணிக்கொண்டிருக்கும் (மதக் கொள்கைக்குட்பட்டு இச்செயலை அவர் செய்யாதவரை) மதத்தையும் அதன் மரியாதைக்குரியவர்களையும் இழிவுபடுத்துவதென்பது வெறுக்கத்தக்கது, கண்டிக்கத்தக்கது.
தோழர் மாதவராஜ் பதிவில் சகோதரி நாஸியா சொல்வதுபோல, '
என்னை பொறுத்த வரையில் இன்னொருவரின் நம்பிக்கை சார்ந்த விஷயஙகளை கொச்சை படுத்த யாருக்கும் உரிமை இல்லை.. அது தஸ்லிமாவாக இருந்தாலும் சரி, ஹூசஸைனாக இருந்தாலும் சரி. நிச்சயமாக அது கண்டிக்க்கத்தக்கது.'
இஸ்லாத்தில் சிலை கூடாது, உருவ ஓவியமும் கூடாது. கூடாததை வரைந்த ஓவியர் முஸ்லீமாகவும் இருக்க முடியாது. இஸ்லாமியர்களோ, இஸ்லாமிய நாடுகளோ எம்.எஃப்.ஹூசைனுக்கு ஆதரவு கொடுக்கவில்லை. இருந்தும், இஸ்லாமியர்கள் தன் உயிரினும் மேலாக மதிக்கும் முகம்மது நபியை அவமதித்து வார்த்தைகள் விழுவது இந்தியப்பன்முகச் சமூகத்திற்கு அழகில்லை. எங்கு அடித்தால் எதிரிக்கு வலிக்கும் என்று குருட்டுக் கணிப்பு செய்திருக்கிறார்கள். இங்கு எதிரியாக ஹூசைனை சொல்லவில்லை என்பதை கவனிக்க. மதம் சாராத ஒருவனின் 'சுயவிளம்பர' செயலுக்காக ஒரு மதத்தை இழிவுபடுத்துவதென்பது எந்த கோணத்தின் நியாயமாக பார்த்தாலும் அநியாயமே. இவ்வாறு செய்வதன் மூலம் இத்தகைய செயல்கள் நின்றுவிடும் என்று நம்பினால், அது முற்றிலும் தவறு. இத்தகைய இழிவுபடுத்துதலுக்கு எதிர்மறை விழைவுகளை ஏற்படுத்தும் ஆற்றலே அதிகம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>
வந்தேமாதரம் என்ற பாடலை இஸ்லாமியர்கள் பாடவேண்டாம் என்று ஜம்மியத்துல் உலமாயே ஹிந்த் என்ற அமைப்பு தனது மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
முதலில் ஒன்றை தெளிவுபடுத்துகிறேன், இந்த 'ஜம்மியத்துல் உலமாயே ஹிந்த்' இந்திய இஸ்லாமியர்களின் பிரதிநிதி அல்ல. இஸ்லாமியர்கள் எதைப்பாட வேண்டும், எதைக்கூடாது என்று இவர்கள் தீர்மானம் நிறைவேற்றுவதால் அது ஒட்டுமொத்த இஸ்லாமியர்களின் தீர்மானமாகிவிடாது. இஸ்லாமியர்களின் இறை வேதமான குர்ஆனிலும், வழிகாட்டியான நபிமொழியிலுமே இதற்கான ஆதாரத்தை தேட வேண்டும். இது ஒருபுறம் இருந்தாலும், சர்ச்சைக்குரிய 'வந்தேமாதரம்' என்ற வங்காள, சமஸ்கிருதப்பாடலை தவிர்ப்பதே நல்லது. ஏனென்றால், அந்தப்பாடலில் வரும் 'தாய் மண்ணே வணக்கம்' என்ற சொல்லும் அதை தொடர்ந்து வரும் வரிகளில் இந்துக்களின் கடவுள்களான துர்கையோடும் சரஸ்வதியோடும் இந்திய மண் ஒப்பிடப்பட்டுள்ளதுமே காரணம். மதச்சார்பற்ற இந்திய நாட்டில் ஒரு மதக்கடவுளை மட்டுமே வணங்குவதாக சொல்லும் இந்தப்பாடலை பிற மதத்தவர்களையும் பாடச் சொல்லி கட்டாயப்படுத்துவது, இந்திய இறையாண்மைக்கு எதிரானது. இத்தகைய விஷம பிரச்சாரத்தை மதவாத அமைப்புகள் தொடர்ந்து செய்துவருவது, சமூக ஒற்றுமையை சீர்கெடுக்கும் என்பதை தெரிந்திருந்தும் ஆட்சி அரசியலுக்காக இவற்றை மீண்டும் மீண்டும் அரங்கேற்றிவருகின்றனர்.
இஸ்லாமியர்களின் முதல் நம்பிக்கையும் அவர்கள் முஸ்லீமாக இருப்பதற்கு தகுதியும் அல்லாஹ்'வை மட்டுமே வணக்கத்திற்குரியவனாக ஏற்றுக்கொள்வதில் இருக்கிறது. அவனைத்தவிர வேறு யாரையும் வணங்குவதில்லை, வணங்கக்கூடாது. அல்லாஹ்'வுக்கு வேறு எதையும்/யாரையும் இணைவைத்தல் கூடாது. அது தாயாக, நாடாக, மண்ணாக ஏன்.. இஸ்லாமியர்கள் உயிரினும் மேலாக மதிப்பு வைத்திருக்கக்கூடிய முஹம்மது நபியாக இருந்தாலும் சரியே. ஒருவன் அல்லாஹ்வைத்தவிர மற்ற ஒன்றை வணக்குவானேயானால், இணைவைப்பானேயானால், அவன் இஸ்லாத்தை விட்டும் வெளியேறி விட்டவனாகவே கருதப்படுவான். வணக்கத்திற்குரியதாக மண்ணையும், அதற்கு இணையான துர்கையும் சரஸ்வதியும் இணையாக சொல்லப்படும் இந்தப்பாடலை கட்டாயம் பாடியே ஆக வேண்டும் என்று இஸ்லாமியர்களை வற்புறுத்துபவர்கள், இஸ்லாமியர்களை கட்டாய மத மாற்றம் செய்கிறார்கள் / தூண்டுகிறார்கள் என்று சொல்வதே சரியாகும். கிட்டத்தட்ட அவர்களுடைய எண்ணமும் அதுவே.
இந்தியனாக இருப்பதற்கு தகுதி வந்தேமாதரம் என்ற வங்காள, சமஸ்கிருதப்பாடலை பாடுவதில் மட்டுமே இருக்கிறதா? உதட்டில் தாய் மண்ணே வணக்கம் என்று பாடிக்கொண்டே இராணுவ ரகசியங்களையும் ஆயுதங்களையும் தீவிரவாதிகளுக்கும் அதை ஊக்குவிக்கும் நாடுகளுக்கும் விற்பனை செய்வதைக் காட்டிலும் இந்தப்பாடலை பாடாமல் இருந்துவிடுவதில் சிறந்த நாட்டுப்பற்று இருக்கிறது என்றே தோன்றுகிறது. ஏதோ ஒரு பாடல்தான் நாட்டுப்பற்றை தீர்மானிக்கிறது என்றால், இந்தியப் பன்முகச்சமூகத்தில் ஒரு சமுதாயத்தவரின் நம்பிக்கைக்கு எதிரான இருக்கும் ஒரு பாடலை மாற்றி புதிய ஒன்றை 'நாட்டுப்பற்று பாடலாக' அறிவிப்பதில் என்ன கேடுவந்துவிடப்போகிறது. அல்லது பாடலே இல்லையென்றாலும் ஒன்றும் குடிமுழுகிப் போய்விடாது. இதைவிட நாடு எதிர் நோக்கியிருக்கும் பிரச்சனைகள் ஏராளம்.
ஆட்சி அரசியலில் மதத்தை கலந்து விஷமேற்றுபவர்களாலேயே இத்தகைய சச்சரவுகள் முன் நின்று நடத்தப்படுகிறது. மட்டுமின்றி, மதச்சார்பற்ற ஒரு நாட்டின் நாட்டுப்பண்ணாகக்கூடிய தகுதி இந்தப்பாடலுக்கு இருக்கிறதா என்பதையும் அலசிப்பார்க்க வேண்டும். இப்பாடல் வரிகளில் உள்ள கருத்துக்களை விலக்கிவிட்டு பார்த்தால், இதை எழுதிய பன்கிம் சந்திர சட்டோபாத்யாய் என்ற வங்கமொழி நூலாசிரியர் ப்ரிட்டிஷ் அரசுப்பணியில் இருந்தவர். அனந்தமடம் என்ற மதநூலில்தான் இந்தப்பாடல் முதலில் இடம்பெற்றிருக்கிறது. ஜெகத்தாரி, காலி, துர்கா என் மூன்று கடவுள் உருவங்களாக பாரத மாதாவை பார்ப்பதாக ஆனந்தமாதாவில் எழுதியுள்ளார். மேலும் இந்நூலில் இஸ்லாமியர்களுக்கெதிரான துவேஷப்பரப்புரையை எழுதியிருக்கிறார். அவர் புழமை பெற்றிருந்த வங்காளம் மற்றும் சமஸ்கிருத மொழிகளை கலந்தே இதை எழுதியுள்ளார். மேலும் வாசிக்க...
மதச்சார்பற்ற நாட்டின் நாட்டுப்பண்ணை எழுதும் தகுதி ஒரு மதச்சார்பற்றவருக்கே உண்டு அல்லது தன்னை மதச்சார்பற்றவராக சொல்லிக்கொள்பவரால் மத நம்பிக்கை சாராமல் எழுதப்படும் ஒரு பாடலை நாட்டுப்பாடலாக சொல்லிக்கொள்ளலாம். இத்தகை எந்த தகுதியும் இல்லாத ஒரு மதக்கடவுளை மட்டுமே முன்னிருத்தும் இந்தப்பாடலை நாட்டுப்பாடலாக ஏற்றுக்கொள்ள வேண்டாம், பாடவேண்டாம் என்று சீக்கியர்களும் தமது எதிர்ப்பை பதிவுசெய்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்திய சுதந்திரத்திற்கு முன்பாகவே வந்தே மாதரம் பாடுவதை தேசிய தலைவர்கள் விட்டு விட்டார்கள். 1911ம் ஆண்டு டிசம்பர் 27ம் தேதி கல்கத்தாவில் இந்திய தேசிய காங்கிரஸின் மாநாடு நடந்தது. அந்த மாநாட்டில்தான் “ஜனகனமன…” என்று தொடங்கும் தேசிய கீதம் முதன் முதலாக பாடப்பட்டது.
இந்திய சுதந்திரத்திற்கு முன்பாகவே வந்தே மாதரம் பாடுவதை தேசிய தலைவர்கள் விட்டு விட்டார்கள். 1911ம் ஆண்டு டிசம்பர் 27ம் தேதி கல்கத்தாவில் இந்திய தேசிய காங்கிரஸின் மாநாடு நடந்தது. அந்த மாநாட்டில்தான் “ஜனகனமன…” என்று தொடங்கும் தேசிய கீதம் முதன் முதலாக பாடப்பட்டது.
இந்நிலையில் 1923ம் ஆண்டு காக்கி நாடாவில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் மஹாராஷ்டிராவைச் சேர்ந்த விஷ்ணு திகம்பர் பலுங்கர் என்பவர் இந்தப் பாடலைப் பாட முயன்றார். அப்போது சபையில் இருந்த மௌலானா முஹம்மது, “இது இஸ்லாத்திற்கு எதிரான பாடல். அதனால் இதைப் பாட அனுமதிக்க முடியாது…” என தடுத்தார்.
முஹம்மது அந்தப் பாடலை பாடக்கூடாது என்று தடுத்ததற்கு நியாயமான காரணங்கள் இருந்தன.
1. காங்கிரஸ் கட்சி வந்தே மாதரம் பாடலுக்கு விடை கொடுத்து விட்டுத்தான் “ஜனகனமன…” பாடலை 1911ல் எடுத்துக் கொண்டது.
2. 1922ல் அல்லாமா முஹம்மது இக்பா ன் “சாரே ஜஹான்ஸே அச்சா… ஹிந்துஸ் தான் ஹமாரா…” என்ற பாடலை காங்கிரஸ் துணை தேசிய கீதமாக ஏற்றுக் கொண்டது. (ஆதாரம் : ஆர்.எஸ்.எஸ்.ஸின் தேசிய பொதுச் செயலாளர் ஹொ.வெ. சேஷாத்திரி எழுதிய தேசிய பிரிவினையின் சோக வரலாறு. பக்கம் 169).
மேலும் வாசிக்க...
மீ த பஷ்ட்...
ReplyDeleteசரியான கருத்துக்கள் பீர்; எல்லாருக்கும் புரியும்படி தெளிவாக இருக்கிறது.
ஒரு காலத்தில மாதுரி தீக்ஷித் பின்னால ஜொள்ளு விட்டு அலைஞ்ச இந்த எம்.எஃப். ஹுஸைனையெல்லாம் இஸ்லாமிய மதத்தின் பிரதிநிதியாக கருதுவது எல்லாம் டூ மச்!!
ReplyDelete****
ReplyDeleteஇல்லையென்றால் குற்றம்சாட்டப்பட்டவரை திட்டி தீர்ப்பதோ, கொலைமிரட்டல் விடுத்து நாடு கடத்துவதோ அல்லது ஓவியம் வரைந்த அவனது கைகளை காவு கேட்பதோ கூட அருவருப்போடு ஏற்றுக்கொள்ளப்படலாம்.
****
ஓஹோ ! அப்புறம் வேற என்ன பண்ணலாம் ? :)-
வாங்க ஹூசைனம்மா, முதலாவதா வந்ததற்கு ஒரு வாழ்த்து. :)
ReplyDeleteமணி, தப்பு பண்ணினவனை என்ன வேணா பண்ணிக்கட்டும். யார் கேட்டா... எல்லாரையும் ஏன் புண்படுத்தணும்னுதான் நான் கேட்பது.
சரியான கருத்துக்கள்
ReplyDeleteஎனக்கு தெரியாத பல செய்திகள். நல்ல பதிவு
ReplyDeleteபல உண்மைகளை தெளிவாக சொல்லி இருக்கின்றீர்கள். முயற்சிக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteசரியான கருத்துக்கள்.
ReplyDeleteதெளிவான விளக்கம் கொடுத்திருகின்றீர்கள் பீர். அருமையான இடுகை.
ReplyDeleteஜனவரி 24 - 1950 ராஜேந்திர பிரசாத் தலைமையில் Constituent Assembly வந்தேமாதரம் என்ற பாடலை national song ஆக தேர்ந்தெடுத்தார்கள். அதற்கு ஜன கன மன - national anthem அளவிற்கான status கொடுத்தார்கள். அன்று நடந்த கூட்டத்தில் முஸ்லிம் லீக் கட்சியின் 28 உறுப்பினர்களும் ஒருமனதாக ஆதரவு தெரிவித்தனர்.
ReplyDeleteதரூல் உலூம் ஒன்றும் யாருக்கும் தெரியாத இஸ்லாமிய அறிஞர் அல்ல. இவரது / JUH பத்வா பல இஸ்லாமிய அறிஞர்கள் மதிக்கும் ஒன்றே. அடுத்ததாக 2007 ஆண்டு இந்த பாடலின் centenary celebration போது ஆல் இந்தியா பர்சனல் முஸ்லிம் லா போர்டு இஸ்லாமியர்கள் இந்த பாடலை பாடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. அந்த சமயத்தில் JUH / Darool Ulloom பாடலை பாடுவதற்கு எதிராக fatwa கொடுக்க மறுத்தனர். திடீரென்று 2009 ம் இப்ப்ரச்சனையை கொண்டு வருவது ஏதோ அரசியல் காரணமாக வேண்டுமென்றால் இருக்கலாம். இந்நாள்வரை நான் சென்ற பள்ளியிலோ / பொது நிகழ்ச்சியிலோ ஒருமுறை கூட வந்தேமாதரம் பாடப்பட்டதில்லை. அப்படி இருக்கும் பொழுது இந்த fatwa மற்றும் அதை சார்ந்து வரும் விவாதங்கள் அனைத்தும் தேவையற்றது. ஏதாவது புதிதாக பிரச்சனை வருவதற்கு வழிவகை செய்யத்தான் பயன்படும்.
இந்தியா மதசார்பற்ற தேசமாக வேண்டுமென்றால் இருக்கலாம் ஆனால் மதநம்பிக்கையற்ற தேசம் கிடையாது. சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது போல வந்தே மாதரம் பாடுவது /பாடாதது தனிமனித விருப்பமே. ஆனால் அதற்காக ஒவ்வொரு இயக்கமும் fatwa கொடுப்பது விமர்சனத்துக்கு உட்படும். அதுவும் பலவருடங்கள் சும்மா இருந்து விட்டு திடீரென்று பிரச்சனையை கிளப்புவது அரசியல் சார்ந்ததே . மதம் சார்ந்தது அல்ல.
****
ReplyDeleteஎன்னை பொறுத்த வரையில் இன்னொருவரின் நம்பிக்கை சார்ந்த விஷயஙகளை கொச்சை படுத்த யாருக்கும் உரிமை இல்லை.. அது தஸ்லிமாவாக இருந்தாலும் சரி, ஹூசஸைனாக இருந்தாலும் சரி. நிச்சயமாக அது கண்டிக்க்கத்தக்கது.
****
வேண்டுமென்றே பிரச்சனை கிளப்ப இதுபோன்று ஓவியங்களோ / புத்தகமோ எழுதினால் விமர்சனம் செய்யலாம்/கண்டிக்கலாம். ஹுசைன் / தஸ்லிமா இருவரையும் இந்தவகையில் கொண்டுவர காரணங்கள் இருப்பதாக தெரியவில்லை. நாத்திகர் ஒருவர் மசூதிக்கு அருகிலோ / மாரியம்மன் கோவில் அருகிலோ ஒரு வீட்டில் குடியிருந்தால் அவரது நம்பிக்கை கூட கொச்சைப்படுத்தப்பட்டதாக கருதலாம்.
ஹுசைன் குறித்து விமர்சனங்கள் செய்யலாம். விவாதிக்கலாம். அதே சமயம் நாட்டைவிட்டு துரத்துவது / வன்முறையில் ஈடுபடுவது எல்லாம் முட்டாள்தனமானது.
நல்ல விளக்கம்.. நிறைய தெளிவு
ReplyDeleteநான் எழுத நினைத்த இடுகையை நீங்கள் எழுதி இருக்கின்றீர்கள். நான் எழுதி இருந்தால்கூட இத்தனை நன்றாக நிச்சயம் இருந்திருக்காது. வாழ்த்துகள் சகோதரர் பீர்.
ReplyDelete//இந்நாள்வரை நான் சென்ற பள்ளியிலோ / பொது நிகழ்ச்சியிலோ ஒருமுறை கூட வந்தேமாதரம் பாடப்பட்டதில்லை//
ReplyDeleteஇது முக்கியமான விஷயம் மணி, நாம் கலந்துகொள்ளும் பொது நிகழ்ச்சிகளோ அல்லது ஒட்டுமொத்த இந்துக்களின் பிரதிநிதியாக தன்னை நினைத்துக்கொள்ளும் ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிகளோ கூட இந்தப்பாடல் பாடப்படுவதில்லை. ஆனால் ஆர்எஸ்எஸின் அரசியல் பிரிவான பாஜக ஆளும் மாநிலங்களின் பள்ளிகளில் பாட வற்புறுத்தப்பட்டுள்ளனர். நாளை பாஜக நாட்டை ஆளும் நிலை வந்தால், நமக்கும் அதே கதி ஏற்படலாம். மட்டுமல்லாது தாருல் உலூமும், ஜமாத்தே உலமாவும் இத்தகைய வற்புறுத்தல் இருக்கும் வட மாநிலங்களில் இருந்தே தீர்மானம் நிறைவேற்றுகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
உச்சநீதிமன்ற தீர்ப்பின் படியே, இஸ்லாமியர்களுக்கு 'மண்ணையும் துர்கையையும் வணங்கச்சொல்லும்' பாடலை பாட விருப்பம் இல்லை என்று தீர்மானம் நிறைவேற்றுவது ஒன்றும் தவறில்லை.
நீங்கள் சொல்லியது போல இது முற்றிலும் ஆட்சி அரசியல் சார்ந்த விஷயம் தான். மதவாதிகள் கையில் சிக்கியிருப்பதும் அதற்காகவே.
ஹூசைனை நாட்டைவிட்டு துரத்தினால் அது ஹூசைனோடு போய்விடும். ஆனால், இவ்விசயத்தில் அல்லாஹ்வையும், முஹம்மது நபியையும் இழுப்பது, தொட்டதற்கெல்லாம் முஸ்லீம்களை புண்படசெய்யும் வழக்கமான மதவாத செயலே.
ReplyDelete'நான் நாத்திகன்' என்ற கேப்ஷனோடு வருபவர்களும் இந்த மதவாதத்தில் ஈடுபடுவது வேதனை.
//இப்போது இந்தியா திரும்ப இருக்கும் அவரை எதிர்க்க சில இந்து அமைப்புகள் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வருகிறது//
ReplyDeleteஅப்படியா ? எனக்கு என்னாமோ , அவருடையா ரசிகர்கள் மற்றும் மீடியாக்கள்(media) தான் விஷயத்தை கிளறி விடுறாங்கனு தோணுது,
எந்த அமைப்பு இப்ப அவருக்கு மிரட்டல் கொடுத்தாங்க ?, மனுஷனுக்கு 95 வயசு, கடைசி காலத்தில் யாரும் அவரை தாக்க மாட்டாங்கனு நான் நினைக்கிறேன் ..அதுக்கு, மனுஷன் புதுசா ஏதும் வரையாமல் இருக்கனும்.
வந்தே மாதரம் பாட்டு பாடும் போது, எப்படி மூச்சு பிடிச்சு பாடாம இருக்கணும்னு, அதே மாநாட்டில், பாபா ராம்தேவ் பயிற்சி கொடுத்தாராமே ?....உண்மையா ? . இங்கு சம்பந்தம் இல்லாத ஒரு தகவல், அந்த மாநாட்டில் தீவிரவாதத்துக்கு எதிராவும் தீர்மானம் கொடுக்க பட்டது.
ReplyDeleteசாம், அவர் ஒரு விளம்பர பிரியர் என்பது எல்லோரும் தெரிந்த ஒன்று. மறுபடி எதுவும் வரையமாட்டார்னு சொல்ல முடியாது. லண்டனில் இருக்கும் அவரை, நமது அரசுதான் திரும்ப அழைத்துவரப்போகுதாம்.
ReplyDeleteதீவிரவாதத்திற்கு எதிராக கொடுக்கப்பட்ட தீர்மானம் யாருக்கு வேணும். அது வெளியில் தெரியாமல் இருக்கும் வரைதான் இவர்களை தீவிரவாதிகளாக படம் வரைந்து பாகம் குறிக்க முடியும்.
ReplyDeleteபாபா பற்றிய தகவலை தெளிவுபடுத்திவிட்டுச் சொல்கிறேன். தகவலுக்கு நன்றி சாம்.
வந்தே மாதரம் உருது மொழியில் இருந்தால் ஒருவேளை பாடலாமோ!?
ReplyDeleteஎன்னை கேட்டால், அவரை அறிந்தோ அறியாமலையோ சில சமூகத்தினரை புண் படித்திட்டார், இந்தியா வருவதுக்கு
ReplyDeleteமுன்னாடி ஒரு மன்னிப்பு கேட்டா மேட்டர் க்ளோஸ் ஆயிடும்.
வழக்கம் போல முற்போக்கு சிந்தனை இருக்குறதா நினைக்கும் மக்கள், குறிப்பிட்ட இந்த சமூகத்தினர் புண் பட்டது தப்பு அப்படின்னு கோயில் சிலைகள் ஆராய்ச்சி பண்ணிட்டு இருந்தா, அது எனக்கு சரியாக தோன்றவில்லை.
நமக்கு கலை ரசனை, மத நல்லிணக்கம் இதில் எது நமக்கு முக்கியம் ? அப்ப அவர் வரைந்ததை வன்முறை இல்லாமல் கண்டிக்கலாமே.
இசை,ஓவியமெல்லாம் கூடாதா? அப்போ ரகுமான், பதிவர் அப்துல்லா போன்றவர்கள் இசைத்துறையில் இருப்பதும் தவறா? எனக்குத்தெரிந்து அனைத்து முஸ்லீம் நண்பர்களும் பாடல் கேட்கிறார்கள்.
ReplyDeleteவால், தேசிய துணைப்பாடலாக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது உருது மொழிப்பாடல்... தெரியுமா?
ReplyDeleteபிரச்சனைக்குரிய இந்தப்பாடலை தவிர்த்து மற்ற பாடல்களுக்கு யாராவது ஏதாவது சொன்னாங்களா?
ஜன கண மன, நீராறும் கடல் உடுத்த...
//பாபா பற்றிய தகவலை தெளிவுபடுத்திவிட்டுச் சொல்கிறேன். தகவலுக்கு நன்றி சாம்.//
ReplyDeleteஅட ஜோக் அடிக்க கூடாதா உங்க பதிவில் ....பாபா ராம்தேவ் பயிற்சி கொடுத்தது உண்மை, ஆனா வந்தே மாதரம் பாட்டுக்கு சம்பந்தம் இல்லை...ஒரு வாரம் கழித்து ரவி ஷங்கர் (art of living) கூட அங்கு சென்று பேச்சு வார்த்தை நடத்தினார்....பிற மத தலைவர்களையும் வரவேற்று இருக்கார்கள் போல.
சாம், அவர் ஏற்கனவே மன்னிப்பு கேட்டாருன்னு நினைக்கிறேன். அவர் இங்கு வந்து என்ன பண்ணப்போறார்? லண்டன்லேயே இருக்கட்டும், அதுதான் நல்லது.
ReplyDelete//பிரச்சனைக்குரிய இந்தப்பாடலை தவிர்த்து மற்ற பாடல்களுக்கு யாராவது ஏதாவது சொன்னாங்களா? //
ReplyDeleteஹ்ம்ம் சொல்லிருக்காங்க பீர்.
குடுகுடுப்பை, இசை வெறுக்கப்பட்ட வகையில் வருகிறது.
ReplyDeleteஉதாரணம்; மது தடுக்கப்பட்டுள்ளது, சிகரட் வெறுக்கப்பட்டுள்ளது. மட்டுமின்றி, இசை தடுக்கப்பட்டுள்ளது என்ற காரணத்திற்காக இந்தப்பாடலுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை.
எனக்கு இசை பிடித்திருக்கிறது :)
சாம், சுட்டி?
ReplyDeleteசுட்டி கிடைக்கலை .....செய்தியில் கேட்டது, பொதுவாக டிவி, கேளிக்கை எதிராக ஏதோ சொல்லி இருக்கார்கள், நண்பர் அதை தான் சொல்லிருபாருனு நினைச்சேன்.
ReplyDeletePerfect Post Mr.Peer !!!
ReplyDeleteநிச்சயம் எம்.எஃப் ஹூசைனின் செயல் கண்டனத்திற்குரியது தான்.
வந்தே மாதரம் தொடர்பான உங்கள் கருத்துகள் புரிதலை தந்தது.
இன்னும் இது பற்றிய தொடர் இடுகைகளை எதிர்பார்க்கிறோம்.
உங்கள் கருத்துக்களோடு முழுமையாக ஒத்துப்போகிறேன். மிகவும் அருமையாக எழுதியிருக்கிறீர்கள். இதைப் பற்றிய எனது பதிவு http://meiyeluthu.blogspot.com/2009/11/blog-post.html நன்றி.
ReplyDeleteஇவ்வளவு பேரு நீங்க எழுதி இருக்கறதோட முழுசா ஒத்துப்போறாங்க. சோ, நானும் எதுவும் சொல்லக்கூடாது. பயமா இருக்கே :)-
ReplyDelete------------------------------------
ReplyDeleteCan anybody post the original/ transliteration/translation of Vande Maatharam song here? please.
ReplyDeleteவந்தே மாதரம் பாடுவது அவரவர் சொந்த விருப்பம்...இதைப் பாடினால் தான் தேசபக்தி என்பது வெறும் வெற்றுக் கூச்சல்...எந்த அமைப்பும்/அரசும் கட்டுப்படுத்த முடியாது...அது தனி மனித வாழ்க்கையில் தலையிடுவது.
ReplyDeleteஆனால், இதே போன்றதே மதுவும், இசையும். தனி மனித விருப்பம். இதையும் அரசோ/மதமோ கட்டுப்படுத்த முடியாது, அது எந்த மதமாக இருந்தாலும், எந்த அரசாக இருந்தாலும்!
//
ஆட்சி அரசியலில் மதத்தை கலந்து விஷமேற்றுபவர்களாலேயே இத்தகைய சச்சரவுகள் முன் நின்று நடத்தப்படுகிறது.
//
இதைச் செய்யாதே...அதை செய்யாதே...செய்தால் நீ பாவி...நீ விலக்கப்படுவாய் என்று மிரட்டும் எல்லா மதங்களும் செய்வது அரசியல் தான்..
மதமே ஒரு மிகப்பெரிய அரசியல்..இதற்கு எந்த மதமும் விதிவிலக்கல்ல...ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதும், மக்களை மரண பயம் காட்டி அடிமையாக்குவதும் தான் மதங்களின் நோக்கமாக இருக்கிறது...
சாம், நான் கூடத்தான் முந்தைய இடுகையில் தொலைக்காட்சிக்கு எதிரா அறிக்கை விட்டிருக்கிறேன். அதெல்லாம் தீர்மானம் ஆகாது.
ReplyDelete======
செய்யது, தொடர் இடுகைகளா? அவ்வ்வ்.. வேணா இதையே தொடரா மாத்தி உங்களுக்கு டைவர்ட் பண்ணிடவா?
உதயம், விரிவா அலசியிருக்கீங்க.. நன்றி.
ReplyDeleteமிஸ்டர் S, பதிவின் வந்தேமாதரத்திலேயே சுட்டி கொடுத்துள்ளேன். நீங்க நண்பர் உதயத்தோட பதிவும் வாசிக்கவும்.
மணி, நீங்க சொல்றத பார்த்தா எனக்கும் பயந்துவருது.
அது சரி... நீங்கள் சொல்வது சரிதான். ஆனால், என்னை மனிதனாக வைத்திருப்பது 'இஸ்லாம்' என்று திடமாக நம்புகிறேன்.
ReplyDeleteமிகவும் நல்ல அலசிருக்கீங்க பீர்.
ReplyDeleteபுரிவேண்டியவுங்க எவ்வளவு கத்தினாலும் புரிஞ்சுக்க மாட்டங்க...
நாட்டை பற்றி இப்படி பேசும் அவர்கள், மதுகுடாவின் ஊழலை பற்றி ஏதாவது வாய் திறந்தார்களா?
கொஞ்சம் தாமதமா வந்துட்டேன் போல.. ஹ்ம்ம்ம்.. ரொம்ப தெளிவாக எழுதிருக்கீங்க.. நன்றி.. :)
ReplyDelete\\ஆனால் அதற்காக ஒவ்வொரு இயக்கமும் fatwa கொடுப்பது விமர்சனத்துக்கு உட்படும். அதுவும் பலவருடங்கள் சும்மா இருந்து விட்டு திடீரென்று பிரச்சனையை கிளப்புவது அரசியல் சார்ந்ததே . மதம் சார்ந்தது அல்ல\\
உடன்படுகிறேன்..
\\வேண்டுமென்றே பிரச்சனை கிளப்ப இதுபோன்று ஓவியங்களோ / புத்தகமோ எழுதினால் விமர்சனம் செய்யலாம்/கண்டிக்கலாம். ஹுசைன் / தஸ்லிமா இருவரையும் இந்தவகையில் கொண்டுவர காரணங்கள் இருப்பதாக தெரியவில்லை.\\
எப்படி சொல்ல முடியும்? இருவருமே விளம்பர பிரியர்களாக இருக்கலாம் அலல்வா?
\\நாத்திகர் ஒருவர் மசூதிக்கு அருகிலோ / மாரியம்மன் கோவில் அருகிலோ ஒரு வீட்டில் குடியிருந்தால் அவரது நம்பிக்கை கூட கொச்சைப்படுத்தப்பட்டதாக கருதலாம். \\
அது எப்படிங்க? எனக்கு உடன்படாத ஒரு நம்பிக்கை ஒருவர் பின்பற்றினால் அது எப்படி என் நம்பிக்கையை கொச்சைபடுத்துவது போல் ஆகும்? எனக்கு தனிப்பட்ட முறையில் அதில் கொஞசம் கூட நாட்டம் இல்லாமலோ, வெறுப்போ இருக்கலாம், ஆனால் அது என்த வகையிலும் அவரின் சமய நம்பிக்கை சார்ந்த விஷயங்களில் அவரை வேதனை படுத்த எனக்கு உரிமை இல்லை. ஒரு சக மனிதராக அவரின் மீதுள்ள மரியாதையே அவரின் நம்பிக்கை விஷய்த்தில் என்னை கண்ணியத்தை கடைப்பிடிக்க வைக்கிறது.
Good Post
ReplyDelete***
ReplyDeleteஅது எப்படிங்க? எனக்கு உடன்படாத ஒரு நம்பிக்கை ஒருவர் பின்பற்றினால் அது எப்படி என் நம்பிக்கையை கொச்சைபடுத்துவது போல் ஆகும்?
***
நாசியா - நீங்கள் கொச்சைப்படுத்த செய்யாவிடினும் அவர் கொச்சைப்படுத்தியதாக கருதலாம் அல்லவா. அது தான் இங்கு முக்கியம். ஒவ்வொருவரும் இதுபோன்று கருதிக்கொண்டு கையை உடைப்போம், காலை உடைப்போம், இந்தியாவுக்குள் வராதே, உயிருக்கு பத்வா கொடுத்துக்கொண்டு இருந்தால் நாட்டில் யாரும் அவருடைய நம்பிக்கையை வெளிப்படுத்தவே முடியாது. சோ, ஒருவித புரிதலுடன் அனைவருக்கும் வழிவிடுவதே மேல். என்னால் தஸ்லிமா / ஹுசைன் இருவரும் விளம்பரத்துக்கோ / வேண்டுமென்றே பிரச்சனையை கிளப்பவோ செய்ததாக கருத முடியவில்லை. நீங்களும் அவர்கள் ஓவியம் / புத்தகங்கள் படித்து பாருங்கள். புரியும்.
அருமையான இடுகை தெளிவான விளக்கம்கொடுத்திருக்கீங்க பீர் [அண்ணா]..
ReplyDeleteமணி..
ReplyDelete//ஒவ்வொருவரும் இதுபோன்று கருதிக்கொண்டு கையை உடைப்போம், காலை உடைப்போம், இந்தியாவுக்குள் வராதே, உயிருக்கு பத்வா கொடுத்துக்கொண்டு இருந்தால் நாட்டில் யாரும் அவருடைய நம்பிக்கையை வெளிப்படுத்தவே முடியாது. சோ, ஒருவித புரிதலுடன் அனைவருக்கும் வழிவிடுவதே மேல். என்னால் தஸ்லிமா / ஹுசைன் இருவரும் விளம்பரத்துக்கோ / வேண்டுமென்றே பிரச்சனையை கிளப்பவோ செய்ததாக கருத முடியவில்லை. நீங்களும் அவர்கள் ஓவியம் / புத்தகங்கள் படித்து பாருங்கள். புரியும்.//
தலைவரே, ரொம்பவே யோசிக்க வச்சுடீங்க ......ஹ்ம்ம் ஒத்து போலாமா வேணாமானு ...ஒரே.. டீலா நோ டீலா மாதிரி இருக்கு :).
அன்புள்ள நண்பர்களே இந்தவிவாதத்தை நடுநிலையோடு யோசிக்கனும்
ReplyDeleteஇந்த பாடலை உருது மொழியில் இலலை அரபி மொழியில் இல்லை என்பதளோ
இதை வேற்று மதத்தவன் எழுதினான் என்பதளோ அல்ல (அதன் அர்த்தம் தான்)
மற்றும் இதை முஸ்லீம் மற்றும் எதிக்கவில்லை
கடவுள் இல்லை என்கின்ர நாத்திகன்
புத்தமதத்தை சேர்ந்தவர்க்ள்
சீக்கியர்கள் இந்துகலிலேயே கடவுள் நம்பிக்கையுள்ள சிலர்
( மன்னிக்கனும் சொல்லிதான் ஆகனும் தமிழகத்தில் பெரியாரை கடவுளாக ஏற்றுக்கொண்டவர்களும் தான் )
இதல்லாம் யாருகும் பெருசா தெரியாதுங்க
முஸ்லீம் எதிர்கிரார்களா !
முஸ்லீம் யாராவது தப்புசெய்கிறானா!
அதசொன்னாதனுங்க ஒரு கிக்கு>>>>>>
சமீபத்தில் வந்தேமாதரம் சம்பந்தமாய் ஒரு தளத்தில் படித்தேன். அது தொடர்பான, நமக்குத்தெரியாத வரலாற்றுத்தகவல்கள் மற்றும் விபரங்கள் நிறைய இங்கே. உள்ளே சென்று வாருங்களேன்.
ReplyDeletehttp://meiyeluthu.blogspot.com/2009/11/blog-post.html
இதை எழுத தூண்டிய ஜெயமோகன்.இன்னுக்கு ஒரு நன்றி சொல்லியிருக்கலாம் ,
ReplyDelete