நட்பு என்பது... 'மன்னிச்சுக்கோங்க பாஸ்' என்பதல்ல, 'தப்பு உம்மேல தான்டா' என்பது.
நட்பு என்பது... 'உனக்காக நான் இருக்கிறேன்' என்பதல்ல, 'எங்கடா அடி வாங்குன' என்பது
நட்பு என்பது... 'நான் புரிந்து கொண்டேன்' என்பதல்ல, 'எல்லாம் உன்னாலதான்டா' என்பது
நட்பு என்பது... 'உன்னை நான் கவனமாக பார்த்துக்கொள்வேன்' என்பதல்ல,'நாயே, உன்ன விட்டுட்டு எங்கடா போகப்போறேன்' என்பது
நட்பு என்பது... 'உன் வெற்றியில் மகிழ்கிறேன்' என்பதல்ல. 'பார்ட்டிக்கு ஏற்பாடு பண்றா மாப்ள' என்பது.
நட்பு என்பது... 'நான் அவளை காதலிக்கிறேன்' என்பதல்ல, 'டேய் மரியாதையோட பாருடா.. அவ உன் அண்ணி' என்பது
நட்பு என்பது... 'நாளைக்கு வெளிய போகலாமா?' என்று கேட்பதல்ல, 'நடிக்காதடா... நாளைக்கு நாம வெளிய போறோம்' என்பது
நட்பு என்பது... 'விரைவில் குணமடையணும்' என்பதல்ல, 'ஜாஸ்தி குடிச்சா இப்டித்தான் ஆகும், என்பது
நட்பு என்பது... 'உன் பதவி உயர்வுக்கு வாழ்த்துக்கள்' என்பதல்ல, 'வண்டி ஓவர் ஸ்பீட்ல போகுது, ப்ரேக் போட்றா' என்பது
நட்பு என்பது... 'அம்மா செலவுக்கு பணம் அனுப்பு' என்பதல்ல, 'அடுத்த தடவ போன் பண்ணும் போது மனசுவிட்டு பேசுடா, சின்ன வயசில பார்த்த சூப்பர் வுமன் இல்ல.. அம்மா, பக்கத்தில இருந்து கவனிச்சுக்கணும், உடனே ஊருக்கு கிளம்பி போ, காசு நாளைக்கு சம்பாதிக்கலாம்' என்பது.
இத்தகைய நட்பை எனக்கு பெற்றுத்தந்த இணையத்திற்கு.... ஐ... நன்றி சொல்வேன்னு நெனச்சீங்களா... போய் வேலைய பாருங்க...
நாங்க வேலையைப் பார்க்கிறது இருக்கட்டும்..இப்போ அம்மா எப்படி இருக்காங்க?
ReplyDeleteம்... நல்லாயிருக்காங்க சார்... வீட்டுக்கு வந்திட்டாங்க. நார்மலா இருக்காங்க.
ReplyDeleteஉறவினர்கள் கிராமத்தில இருந்து கம்பு கொண்டுவந்து கொடுத்திருக்காங்க. அம்மாவும் கூல் காய்ச்சி, தயிர் ஊற்றி ஒரே நாள்ல மூன்று முறை குடிச்சிருக்காங்க.. அதுதான் சுகர் அதிகமானதுக்கு காரணமாம்.
கம்பு கூல் குடிச்சா சுகர் அதிகமாகிடும் என்பது, இதுவரை எனக்கும் தெரியாது. ;(
அம்மா சுகமாயிருப்பதில் மிக்க சந்தோசம்....
ReplyDeleteநட்பு என்பது, 'மொக்கையான பதிவை' கூட மச்சான் சூப்பர்-ஆ எழுதியிருக்கேடா என சொல்லுவது...
சூப்பர்-ஆ எழுதியிருக்கீங்க பீர்...
பிரபாகர்.
அவ்வ்வ்....
ReplyDeleteபின்னிட்டீங்க பிரபாகர்.
பீர்: நட்பைப்பத்தி திருவள்ளுவர் சொன்னதைவிட நீங்க ஒரு படி மேலேதான் :)
ReplyDeleteஅம்மா உடல்நலக்குறைவும்,:( பின்பு நலமடைந்ததும் அறிந்தேன். :)))
சுகர்லாம் பெரிய வியாதி இல்லைங்க,பீர். கொஞ்சம் கவனமா சாப்பாடு விசயத்தில் இருக்க நீங்கதான் நல்லா ரிசேர்ச் பண்ணி எதை எதை அவங்க சாப்பிடனும், கூடாதுனு அவங்களுக்கு சொல்லனும்.
அவங்க உடலை கவனமாக பார்த்துக்கொண்டு 100 ஆண்டு சந்தோஷமா இருக்கனும்!
கலக்கல் பதிவு பீர்..
ReplyDeleteஅம்மாவுக்கு என்ன ஆச்சி.
நார்மலா ஆயிட்டாங்கன்னு சொல்றீங்க..கவனமா பாத்துக்கோங்க..!!!
எங்களுடைய தூ ஆக்களுடன்,
இணைய நட்பு
//அம்மா சுகமாயிருப்பதில் மிக்க சந்தோசம்....
ReplyDeleteநட்பு என்பது, 'மொக்கையான பதிவை' கூட மச்சான் சூப்பர்-ஆ எழுதியிருக்கேடா என சொல்லுவது...
சூப்பர்-ஆ எழுதியிருக்கீங்க பீர்...//
ரிப்பீட்டேய்
அம்மாவின் உடல் நலத்தை கேட்டதாகச் சொல்லவும்!
ReplyDeleteநல்லா சொல்லி இருக்கீங்க பீர்
ReplyDeleteஇது தான் நட்பு!
ReplyDelete:) நட்பூ!!
ReplyDeleteகலக்கல் நண்பா.. இதே மாதிர் ஒரு சிலது நமக்கு எஸ்.எம்.எஸ்ல வந்திருக்கு.. ரசித்தேன்..
ReplyDeleteஏன் இப்படி..!
ReplyDeleteநல்லாருக்குப்பா உன் நட்பு
அம்மாவுக்கு நலமாகிடுச்சா
இப்போவெல்லாம் நம்ம மக்கள் கிட்டே சுகர் மூட்டை மூட்டையா இருக்கு....
சாப்பாட்டுவிசயத்தில் கவனம் தேவை, தொடர் மருந்தும் முக்கியம்
:-)))))
ReplyDeleteவருண், சுகர் பெரிய வியாதியில்லைன்னு நம்பவைக்கப்படுதோன்னு சந்தேகம் இருக்கு. சுகர் வரும் போதே பயமும் சேர்ந்தே வந்துவிடுகிறதே..
ReplyDeleteசெய்யது, கலக்கல் பதிவு.. இது பிரபாகர் சொன்ன அகராதில வருமா? ;) அம்மா நல்லாயிருக்காங்க, இப்போ நார்மல். துஆ செய்யுங்க.
சின்ன அம்மிணி, அவ்வ்வ்வ்...
டாக்டர், நீங்கள் நலம் விசாரித்ததாகச் சொல்லிவிடுகிறேன். மருத்துவ குறிப்புகள் கொடுத்தா நல்லாயிருக்கும். இலவச மருத்துவ ஆலோசனை... ;)
வாங்க நவாஸூத்தீன்,
வாங்க வால், இத்தகைய நட்புதான் வேண்டும் இல்லையா?
ஷஃபிக்ஸ், உங்களுக்கு ஒரு சிரிப்பூ..
ReplyDeleteகார்த்திக், எல்லாம் யார் யாரோ சொன்னது தான.. வார்த்தைகளை முன்ன பின்ன போட்டு பில்ட்அப் பண்ண வேண்டியிருக்கு.
ஆமாம் அப்அஃப்ஸர், சுகர் மலிந்து கிடக்கிறது. சாப்பாட்டு விஷயத்தில கவனமா இருக்கணும்.
ஸ்ரீ, உங்களுக்கும் புன்னகைகள்.
நட்பின் இலக்கணம் நன்றாக இருக்கு,
ReplyDeleteஅம்மாவை கவனமாக பார்த்துக்கோங்க,
அம்மா மட்டும்தான் யாரோடும் எதிலும் இணைத்து சொல்லமுடியாத சொர்க்கம்,
நான் சலாம் சொன்னதாக சொல்லுங்கள்..
ம்.. இனி கவனமா பார்த்துக்கொள்கிறேன் மலிக்கா அக்கா. உங்களது சலாத்தையும் சொல்லிவிடுகிறேன். துஆ செய்யுங்கள்.
ReplyDeleteநட்பு என்பது... 'மீ த பர்ஸ்ட்' என்பதல்ல, 'என்னடா பதிவு காத்து வாங்கிட்டு இருக்கு' என்பது.
ReplyDeleteநட்பு என்பது... 'எப்படி இந்த மாதிரி இடுகை எழுத முடியுது' என்பதல்ல, 'நேத்து சரக்கு மாத்தி அடிச்சியா' என்பது.
நட்பு என்பது... 'ஓட்டுப் போட்டாச்சு' என்பதல்ல, 'முதல்ல எனக்கு 2 பின்னூ போடு.. அப்ப்ப்பால உன்னுதை பாப்போம்' என்பது.
* * *
செம கலக்கலா இருக்குங்க பீர்!
நட்புக்கு புதுவிதமான விளக்கம் நல்லாருக்கு....பூங்கொத்து!
ReplyDelete