முன் குறிப்பு: தலைப்பை பார்த்து இரண்டு அமைச்சர்களுக்கிடையே நடந்த தொலைப்பேச்சுக்களை ஒட்டுக்கேட்டு எழுதப்பட்ட பதிவு என்றோ அல்லது வேறு தவறான புரிதலுடனோ வந்திருந்தால்.. மன்னிக்கணும். இது துறை சார்ந்த பதிவு. Cross Docking என்ற ஆங்கிலச் சொல்லிற்கு இணையான தமிழ் சொல் கிடைக்காததால், அதையே அப்படியே தமிழில் படுத்தியிருக்கிறேன்.
பலதரப்பட்ட அல்லது தனிப்பட்ட ஒரு உற்பத்தியாளர்களிடமிருந்து விற்பனையாளர்களுக்கு அனுப்ப வேண்டிய உற்பத்தி பொருள் (அல்லது சரக்கு), கிடங்கில் இருப்பு (Stock) வைக்கப்பட்டு, தேவைப்படும் பொழுது விற்பனையாளருக்கு அல்லது நுகர்வோருக்கு அனுப்பப்படும். இம்முறைக்கு பெயர் லாஜிஸ்டிக்ஸ் அல்லது வேர்ஹவுசிங் எனப்படுகிறது. இவற்றில் பல வகைகள் உண்டு, அவற்றை வேறொரு இடுகையில் பார்ப்போம். இங்கு, தளவாட மேலான்மையின் (Logistics Management) பொருட்செலவையும், நேரத்தையும் பெருமளவு குறைத்த நுட்பமான க்ராஸ் டாகிங் பற்றி தெரிந்து கொள்வோம்.
மேற்சொன்ன தளவாட வசதியை பயன்படுத்தாத உற்பத்தியாளருடைய உற்பத்தி பொருள் விற்பனையாளருக்கோ நுகர்வோருக்கோ நேரடியாக அனுப்பப்படும். இவ்வாறு அனுப்புவதால் நேரம், ஆள்பலம், பண விரயம் அதிமாகும்.
உதாரணத்திற்கு, ப்ரிட்டானியா பிஸ்கட் சென்னையில் உற்பத்தி செய்யப்படுகிறது. மதுரை, கொச்சின் மற்றும் ஹைத்ராபாத்தில் இருக்கும் மொத்த விற்பைனையாளர்களுக்கு முறையே 60, 40, 50 பெட்டிகள் அனுப்ப வேண்டும். இந்த 150 பெட்டிகளும் ஒரு (Truck) சுமை வாகனத்தில் அடைத்துவிடக்கூடியதாக இருந்தாலும், ப்ரிட்டானியா நிறுவனம் வெவ்வேறு ஊர்களுக்கும் தனித்தனியாக அனுப்புமேயானால், மேற்சொன்ன நேரம், ஆள்பலம், பண விரயம் ஆகியவற்றோடு எரிபொருளும் வீணாகும் என்பதால், இச்செலவுகளை ப்டிட்டானியா தன் உற்பத்தி பொருளான பிஸ்கட்டின் விலையிலேயே சேர்க்க வேண்டிவரும். இதனால் நுகர்வோரும் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலைக்கு ஆளாக்கப்படுவர். சில நேரங்களில் கிராமத்தில் விளையும் காய்களுக்கான உற்பத்தி செலவை விட, விற்பனை விலையை விட, சந்தைக்கு கொண்டு செல்லும் பொக்குவரத்து செலவு அதிகமாகிறது. அதாவது, தேவைக்கதிக விளைச்சல் காரணமாக விலை வீழ்ச்சி. காய்களை வைத்திருந்தால் தன்னோடு சேர்ந்து காயும் அழுகும் என்பதால், துக்கம் தன்னோடு போகட்டும் என்று விவசாயிகள், விளைந்த பொருட்களை கிராமத்திலேயே குழி தோண்டி புதைத்துவிடுவார்களாம்… வேதனை. இம்மாதிரி நேரங்களில் அரசு மானியம் கொடுத்து விவசாயிகளை ஆறுதல்படுத்த வேண்டும். ரிமோட்டை தேட வேண்டாம், விஷயத்திற்கு வருகிறேன்...எங்கவிட்டோம்.. ஆங்.. ப்ரிட்டானியா.
இந்த சூழ்நிலையில் ப்ரிட்டானியா என்ன செய்யும், செய்ய வேண்டும்?
1. உற்பத்தி சரக்கை முன்னமே கொண்டு வந்து தளவாடத்தில் இருப்பு வைத்து, தளவாட சேவையாளரிடம் (Logistics Provider) சரக்கு சேர்ப்பிடத்திற்கான (Destination) தகவலை கொடுத்துவிட்டால், தேவையான பொருளை தேவையான இடத்தில் அவரே சேர்த்துவிடுவார். இம்முறையில், போக்குவரத்து செலவு மட்டுமின்றி, தளவாடத்தில் இருப்பு வைப்பதற்கான (Warehousing) வாடகையும் தர வேண்டும்.
2. க்ராஸ் டாகிங் முறையை பயன்படுத்தலாம்.
க்ராஸ் டாகிங் - Cross Docking
ப்ரிட்டானியா போல இன்னும் பல உற்பத்தியாளர்களால் வணிக மையத்திற்கு கொண்டுவரப்படும் சரக்குகள் இறக்கப்பட்டு, பிரிக்கப்பட்டு, சேர்ப்பிடத்திற்கு செல்லும் வாகனத்தில் ஏற்றப்படும். உதாரணமாக; அ, இ, உ, ஏ என்ற நான்கு உற்பத்தியாளரிடமிருந்து வரும் சரக்கானது க, ச, ட என்ற மூன்று விற்பனையாளர்களுக்கு மாற்றி ஏற்றப்படும்.
வலது மேல் படத்தில்; உற்பத்தியாளர், உற்பத்திப் பொருளை நேரடியாக விற்பைனையாளரிடம் சேர்ப்பதையும், வலது கீழ் படத்தில், அவையே க்ராஸ் டாகிங் செய்யப்பட்டு விற்பனையாளருக்கு அனுப்பப்படுவதையும் புரிந்து கொள்ளலாம்.
மேற்சொன்ன வகைகள் மட்டுமல்லாது, கடல், வான் மற்றும் தரை வழியில் வரும் சரக்குகள் ஒன்றிலிருந்து மற்றொன்றிற்கு மாற்றி ஏற்றி அனுப்பப்படுவதும் க்ராஸ் டாகிங் என்றே அழைக்கப்படுகறது. அதாவது, தாய்லாந்திலிருந்து மும்பை செல்ல வேண்டிய சரக்கானது, சென்னை வரை கப்பலில் கொண்டுவரப்படும். சென்னையில் க்ராஸ் டாகிங் செய்யப்பட்டு, தரைவழியிலோ அல்லது விமானத்திலோ மும்பைக்கு அனுப்பி வைக்கப்படும். இதேயே மும்பை வரையில் கடல் வழியிலேயே அனுப்பவேண்டுமெனில், கப்பல் தலையை சுற்றி மூக்கைத்தொட வேண்டும் என்பது சொல்லித்தெரிய வேண்டியதில்லை.
மத்திய கிழக்கு நாடுகளுக்கான (Hub) இணைப்பாக துபாய் செயல்படுகிறது. அங்கு ஒரு தளவாட நகரமே இயங்குகிறது.
க்ராஸ் டாகிங் செய்யப்படுவதன் நன்மைகள்.
குறைந்த செலவு.
உற்பத்தி பொருளின் மீதான விலை குறைப்பு.
குறைந்த காலஅவகாசத்தில், நிறைந்த தூரம்.
அவசியமற்ற தளவாட வாடகை.
ஒருங்கிணைந்த தொழில் திட்டம்.
பரவலான வேலைவாய்ப்பு.
எரி பொருள் சிக்கனம்.
தளவாட மொழியில் (Logistics Language) இன்னும் பல நன்மைகளையும் அடுக்கலாம்.
தற்போது உலகம் சந்தித்து வரும் பொருளாதார நெருக்கடியில் அதிகம் பாதிப்படையாதது தளவாட துறை. இப்பவும் இதில் வேலை வாய்ப்புகள் வந்துகொண்டிருக்கின்றன. இரண்டு மாதங்களுக்கு முன்னர் எனக்கு தெரிந்த ஒரு தளவாட நிறுவனத்தில், 20 முதல் 25 சதவிகிதம் ஊதிய உயர்வு கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இத்தகைய தளவாடத்துறையில் தான் நாங்களும் ஆணி புடுங்குகிறோம்… ஸ்ஸ்ஸ்ஸப்பா.. இதைச் சொல்ல இவ்வளவு இழுவையா? ம்… காதில் விழுகிறது…
டிமாண்ட் - சப்ளை கல்லூரியில் படித்து இப்போது மீண்டும் இதைப்படிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. சுலபமாக மற்றவர்களுக்கு புரியும்படி எழுதியிருக்கிறீர்கள். ஓட்டு போட்டாச்சு
ReplyDeleteஎன்ன சொல்லல வர்றோம்னு தெரியாதவங்க (பிரபு மாதிரி) மத்தியில, என்ன சொல்ல வர்ரோம்கிறதை தெளிவா சொல்றதுல, பீர் அண்ணன் பீர் அண்ணன் தான்.
ReplyDeleteரொம்ப பயனுள்ள செய்தி.
டிஸ்கி: நண்பா பாலா... அண்ணாத்த பதிவை இட்டு ரொம்ப நேரமாச்சு. இன்னும் ஒரு இடுகை கூட நீ போடல... டாமஜெர் நெறைய ஆணி புடுங்க சொல்லிட்டாரா?
பயனுள்ள செய்தி
ReplyDeleteதுறை சார்ந்த பதிவா தல..
ReplyDeleteஅவசியமான விஷயங்கள்...
உதாரணங்களை தமிழ்படுத்தியிப்பது அழகு...
ReplyDeleteவெற்றிக்கு வாழ்த்துகள்
:)
informative
ReplyDeleteneed more info on cross docking.
keep rocking
:)
அருமையான கட்டுரை. தொடரட்டும் உங்கள் பணி.
ReplyDeleteஒரு விருது உங்களுக்கு
ReplyDeletehttp://chinnaammini.blogspot.com/2009/10/blog-post_14.html
அருமையான பதிவு அன்பரே.
ReplyDeleteLogistics - துறிஅயில் பணிக்கு சேர என்ன படிப்பு படிக்க வேண்டும், என்ன விதமான வாய்ப்புகள் உள்ளது,
கொஞ்சம் சொல்லுவீர்களா?
உங்களுடைய துறை பற்றி அழகாக எல்லோருக்கும் புரியும்படி சொல்லி இருக்கீங்க நண்பா..:-)))
ReplyDelete//Logistics - துறையில் பணிக்கு சேர என்ன படிப்பு படிக்க வேண்டும், என்ன விதமான வாய்ப்புகள் உள்ளது,
கொஞ்சம் சொல்லுவீர்களா?//
சொல்லுங்களேன்..
தங்களின் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக....
ReplyDeleteதங்களின் விளக்கமான பதிவிற்கு நன்றி. //இம்முறைக்கு பெயர் லாஜிஸ்டிக்ஸ் அல்லது வேர்ஹவுசிங் எனப்படுகிறது. இவற்றில் பல வகைகள் உண்டு, அவற்றை வேறொரு இடுகையில் பார்ப்போம்// ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்.
மேலும் இத்துறையில் பணிபுரிய தேவையான அடிப்படை தகுதிகள் என்னவென்பதையும் அறியத்தாருங்கள்.
அபுசுஹைல்
என்ன விஷயம் பீர், போன பதிவிலருந்து ஒரே விளக்கப் பாடங்களா இருக்கு? ஆனா புரியற மாதிரி இருக்கதுனால, நன்றி!!
ReplyDeleteசில வருஷங்களுக்கு முன் ஒரு "MLM" மார்க்கெட்டிங் மீட்டிங் (மட்டும்) போனப்போ, இதத்தான் முதல்ல விவரமா சொன்னாங்க, விலைவாசி கூடுவதன் காரணமாக.
//சந்தைக்கு கொண்டு செல்லும் பொக்குவரத்து செலவு அதிகமாகிறது//
உள்நாட்டு விளைபொருட்கள் வாங்கினால் (wherever possible) விலை குறைவாக இருக்கும். ஆனால் இந்தியாவிலிருந்து வரும் பூண்டுதான் வேண்டும்; இஞ்சிதான் வேண்டும் என்று அதிக விலை கொடுத்து வாங்கும் நாட்டுப் பற்று (!!) மிக்கவர்கள் சிலர் இங்கும் இருக்கிறார்கள்.
அபுதாபி வரும் என்னிடம், இந்தியாவிலிருந்து ஒரு தாய் கொடுத்துவிட்ட பொருளை,துபாயில் வேலை செய்யும் அவர் மகனிடம் நான் சேர்ப்பிப்பதும் இந்த தளவாடத்துறையில் வருமா? ;-D
நல்ல விளக்கங்கள்!! புரியற மாதிரி சொல்லியிருக்கீங்க!! வாழ்த்துகள்!! :-)
ReplyDeleteபீர் அருமையான விளக்கம், அந்த முதல் படமே போதும் எல்லாமே தெளிவா சொல்லுது
ReplyDeleteநீங்கள் தளவாடத்தில் வேலை செய்பவரா.. அருமை
இவ்வாறு அந்ததந்த துறையை சேர்ந்தவர்கள் விளக்கம் கொடுத்தால் அடுத்த துறைபற்றி தெரிந்துக்கொள்ள இலகுவாக இருக்கும்
ஐ டி யில் இருக்கு எனக்கு தளவாடம் பற்றி ஓரளவாவேனும் தெரிந்துக்கொண்டேன்..
//தற்போது உலகம் சந்தித்து வரும் பொருளாதார நெருக்கடியில் அதிகம் பாதிப்படையாதது தளவாட துறை. இப்பவும் இதில் வேலை வாய்ப்புகள் வந்துகொண்டிருக்கின்றன. இரண்டு மாதங்களுக்கு முன்னர் எனக்கு தெரிந்த ஒரு தளவாட நிறுவனத்தில், 20 முதல் 25 சதவிகிதம் ஊதிய உயர்வு //
துபாயில் அதிகம் இந்த துறையும் பாதிப்படைந்துள்ளது, நிறைய ஆட்களும் வேலைக்குறைப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
நன்றி சின்ன அம்மிணி, உங்கள் விருதால், நான் கௌரவப்படுத்தப்பட்டிருக்கிறேன். விருதிற்கு பெருமை சேர்ப்பேன்.
ReplyDeleteமிக்க மகிழ்ச்சி!
நன்றி பிரபு, (பாலா தீபாவளி கொண்டாட கிளம்பிட்டாப்லையே)
ReplyDeleteநன்றி TVR,
நன்றி வசந்த், ஆமா தல துறைசார்ந்துதான்.
நன்றி முரு,
நன்றி யாசவி,
ReplyDeleteநன்றி இந்தியன்,
நின்றி சின்ன அம்மிணி, (இது வருகைக்காக)
நன்றி தராசு, வேலை வாய்ப்பிற்கான தகவல்களையும் தொகுத்து எழுதுகிறேன். இறைவன் நாடினால்..
நன்றி கார்த்திக், ம்.. எழுதுகிறேன் நண்பா.
நன்றி அபுசுஹைல், (உங்களுக்கும் அவ்வாறே)ம்.. அடிப்படை தகுதி என்றால்.. திறமைதான். விளக்கமாக எழுதுகிறேன். இறைவன் நாடினால்..
ReplyDeleteநன்றி ஹூஸைனம்மா,
ReplyDeleteஅது ஒண்ணும் இல்லங்க.. யாம் பெற்ற இன்பம், வையகமும் பெறட்டும் என்ற எண்ணம் தான்.
---
இந்தியாவில் இருந்து வரும் காய் / பொருட்களின் சுவை தனி தானே.. நானும் இந்திய பொருட்களையே தெரிவு செய்கிறேன்.
---
கிட்டத்தட்ட இதுவும் தளவாடத்துறைதான். இதை 2nd Party Logistics என்று சொல்லுவோம். விரிவாக ஒரு பதிவில் விளக்குகிறேன்.
நன்றி சந்தனமுல்லை,
ReplyDeleteநன்றி அபுஅஃப்ஸர், மற்ற துறைகளோடு ஒப்பிடும்போது, தளவாடத்துறையில் வேலை இழப்பு குறைவு என்றே தோன்றுகிறது. எனக்கு இப்போதும் மற்ற இடங்களில் வேலை வாய்ப்பு வந்துகொண்டிருக்கிறது.
இப்பதிவு தொடர்பாக மின்னஞ்சல் செய்திருந்த தோழர் B. Shoban Babu. Ph.D., அவர்களுக்கும் நன்றி.
ReplyDeleteவாய்ப்பிருந்தால் அடிக்கடி எழுதுகிறேன், வாழ்த்திற்கு நன்றி.
அருமையான கட்டுரை!
ReplyDeleteஇதே முறையை நான் கூரியரில் வேலை செய்யும் போது பயன்படுத்தியிருக்கிறேன்!
துறை சார்ந்த பதிவா ?? எல்லாத்துலயும் பூந்து கலந்து கட்டி அடிக்கறீங்க..!!!
ReplyDeleteபீர் ”உண்மை” தெரிந்தும் அதற்கு ஒரு பதில் போடவிடாமல் பண்ணீட்டீங்களே, வருத்தமாக உள்ளது
ReplyDeleteரொம்ப நாளைக்கு முன்னாடி Strategic Management/Supply Chain Management இல படிச்ச ஞாபகம்.. ரொம்ப அழகா தமிழ்ல விளக்கி இருக்கீங்க.. ஜஸகல்லாஹ்
ReplyDeleteநன்றி வால், FedEx பற்றிய ஆங்கிலப்படம் ஒன்று பார்த்தேன்.. பெயர் நினைவில்லை, கூரியர் தொழில் பற்றிய அருமையான படம்.
ReplyDeleteநன்றி செய்யது, (இதுதான் தல ரியலு)
நன்றி மலிக்கா அக்கா, (உங்கள் வருத்தம் போக்க, விரைவில் வாய்ப்பு தருகிறேன்)
நன்றி நாஸியா, (ஃபீ அமானில்லாஹ்.)
நல்லா விளக்கீருக்கீங்க பீர்.
ReplyDeleteநானும் துபாயில் ஒரு வேர்கவுசிங்காக சாப்ட்வேர் செய்யும் போது இதெல்லாம் ஓரளவுக்கு தெரிஞ்சுகிட்டேன்.
லாஜிஸ்டிக், வேர்ஹவுஸிங் பற்றிய பதிவுகளளை சீக்கிறமா எதிர் பார்க்கிறேன்.
அப்புறம் பீர், "தொடர்ந்து வாசிக்க... " என்பது பதிவும் உள்ளே வரவேண்டியதில்லை...
ReplyDeleteநீங்கள்
< b:if cond='data:blog.pageType == "item"' > மற்றும் < /b:if > என்ற டேக் உள்ளே "தொடர்ந்து வாசிக்க... " என்ற டேக்கை மாற்றிவிட்டால் போதும்.
(please remove space between < >)
பயனுள்ள தகவல், எளிமையான நடையில் விளக்கம் தந்ததற்க்கு நன்றி.
ReplyDeleteமஸ்தான், துறைசார்ந்த பதிவுகள் விரைவில் வரும்....
ReplyDeleteஷஃபிக்ஸ், நன்றி.
value stream mapping இல் பெரிய ஆள் போலிருக்கே! நிறைய எழுதுங்கள். சேமித்து வைத்துக் கொள்கிறேன்.
ReplyDeletehttp://kgjawarlal.wordpress.com