Oct 12, 2009

ஓசியில் ஓர் உலகத் தந்தி - ட்விட்டர்

ஓசியில் ஓர் உலகத் தந்தி - ட்விட்டர்

மாலையில் அலுவலகம் சென்று விட்டால், ஒரு காஃபி குடிக்கக்கூட வெளியில் செல்ல முடிவதில்லை. பின்ன.. அந்த கேப்புல நம்ம பசங்க ஏதாவது ட்விட்டுறாங்களே. நேத்து அப்டித்தான் 'சின்ன வேலையா' போயிட்டு வரதுக்குள்ள, நம்ம மேல அபாண்டமா குற்றம் சொல்லிட்டாங்க.. சாரி.. ட்விட்டிட்டாங்க. ஆனாலும் சில உண்மைகள், 'பெண்களுக்கு ரொம்ப பிடிச்சவன்'. அப்டிங்கிற ரேஞ்சில் ட்விட்டினதுனால போனாபோகுதுன்னு விட்டுட்டேன். நான் பொறுமையா இருந்ததால அத்தோட போச்சு இல்லைன்னா.. போன், பார், குத்து, ரத்தம், ஆஸ்பத்திரி அளவுக்கு பெருசா போயிருக்கும்.

அப்போ ட்விட்டர் அவ்ளோ மோசமானதா? இல்லைங்க...  நம்ம வீட்டு வேலைக்காரி மாதிரி, அக்கம் பக்கம் நடக்கிற விஷயத்தையெல்லாம் நம்ம அடுப்பங்கறையில வந்து சொல்லும். அண்டார்டிகாவில் இருந்து ஆஸ்டின்பட்டி வரை எல்லாமே ட்விட்டருக்கு அக்கம் பக்கம்தான்.
 • தலைமை அலுவலகத்தில் இருந்து மேனேஜர், என் அலுவலகம் வர ஆயத்தமாகிறார்.
 • சென்னையில் இரு முக்கிய பதிவர்களுக்கிடையே கைகலப்பு, ரத்தம்.
 • தேக்கடியில் படகு கவிழ்ந்தது.
 • சோழவந்தானில் பட்டாசுவெடி விபத்து.
 • திருப்பூர் அரசாங்க கடை எண் 214க்கு எதிரில் இருக்கும் பாட்டிக்கு அழகான பேத்தி இருக்கிறாள்.
 • பெங்களூருவில் மழை, விமான நிலையம் செல்ல பேருந்து இல்லை.
 • தமிழில் கிரந்தம் தேவையா?
 • புட்டு என்பதை இலங்கையில் பிட்டு என்று சொல்வார்கள்.
 • பாராக் ஒபாமாவிற்கு நோபல் பரிசு.
 • அடுத்த நோபல் ஒசாமாவிற்கு வழங்கப்படுமா?
 • சுமத்ராவில் சுனாமி எச்சரிக்கை.
 • அமெரிக்க சூறாவளிக்கு பெயர் கேத்ரீனா என்றால், தமிழக சூறாவளிக்குப் பெயர் புவனா?
 • வெண்பாம்... 
இது போன்ற அவசியமான மொக்கைகளும், அவசியமில்லாத குப்பைகளும் ட்விட்டரில் உடனுக்குடன் பரிமாறப்படும். ஆற்றுநீரில் அனைத்தையும் அள்ளிக் குடிக்க முடியாது, நமக்கு வேண்டியதை எடுத்து பயன்பெறலாம்.

யாரேனும் எனக்கு செய்தி சொல்ல வேண்டும் என்றால், நான் 24 மணி நேரமும் ஆன்லைனில் இருப்பேனே.. சாட்டிங்கில் சொல்லலாமே. என்றால், அங்குதான் ட்விட்டர் மாறுபடுகிறது, இது உங்களுக்கென்று சொல்லப்படும் செய்தியல்ல, ஆனால் உங்களுக்காகவும் சொல்லப்படும் செய்தி. உங்களுக்குத் தேவையானதை நீங்கள் எடுத்துக்கொண்டு மேலே உரையாடலாம்.

ட்விட்டரில் கணக்கு துவங்குவது எப்படி? 

http://twitter.com/ நுழைந்து பயனர் கணக்கு துவங்கி கொள்ளுங்கள். உங்களுக்கு தெரிந்தவர்களை, உங்களை தெரிந்தவர்களை பின் தொடருங்கள்.  உங்கள் சகோதரனான என்னை பின்தொடர, http://twitter.com/PeerMhd சென்று Follow வை க்ளிக் செய்ய வேண்டியதுதான்.
Follow
இனி எனது ட்விட் (மெஸேஜ்) எல்லாம் உங்களுக்கும் தெரியவரும். உங்கள் (அடுப்பங்கறை) தளத்திற்கே வரும். நானும் உங்களை தொடர்ந்தால், உங்கள் ட்விட்களும் எனக்கு தெரியவரும்.
உங்கள் ட்விட்டர் தளத்தின் Home  சென்றால், கீழுள்ளவாரு பெட்டி வரும்.
twitting
பெட்டிக்குள் உங்களது ட்விட்டை எழுதி அப்டேட் செய்யுங்கள். அவ்வளவுதான்.. உங்கள் ட்விட் உலகத்திற்கு சொல்லப்பட்டுவிட்டது. ஓசியில் ஒரு உலக தந்தி. ம்.. ஒரு விஷயம், ஒரு ட்விட்டில் 140 எழுத்துக்களுக்கே அனுமதி. அதே நேரம், நீளமான சில சுட்டிகள் இணைக்கப்படும் போது, அவை தானாக சுருங்கிக்கொள்கிறது. (அதன் நுட்பம் தெரிந்தவர்கள் சொல்லவும்)

ட்விட்டர் ட்ரிக்ஸ்...
 • ஒருவர் பெயருக்கு முன்னால் @ சேர்த்தால், அது அவருக்கு சொல்லப்படும் செய்தி, ஆனாலும் அனைவரும் படிக்கலாம். எ.கா; @PeerMhd
 • ஒருவர் பெயருக்கு முன்னால் d சேர்த்தால், அது அவருக்கு மட்டும் சொல்லப்படும் நேரடி செய்தி, வேறு யாருக்கும் தெரியாது. (அவரும் நம்மை பின்தொடர வேண்டும்) எ.கா d peermhd (no case sensitive)
 • ஒரு வார்த்தைக்கு முன்னால் # சேர்த்தால் பிற்பாடு தேடி எடுக்க உதவும். எ.கா #Nobel
இவற்றை  செய்யலாம்..
 • எளிதாகவும் சிறியதாகவும் பயனர் பெயர் வைத்துக்கொள்ளலாம் 
 • உங்கள் எண்ணத்தோடு ஒத்துப்போகும் மற்ற ட்விட்டர்களை தொடரலாம்.
 • அடிக்கடி ட்விட்டுங்க..
 • இடையிடையே எதிர்வினைக்கு இடமளிங்க..
 • ஆசுவாசமா இருங்க..
 • ஒவ்வொரு எழுத்துக்கும முக்கியத்துவம் கொடுங்க.. 
 • ஒவ்வொரு ட்விட்டுக்கும் / வார்த்தைக்கும் மதிப்பு கொடுங்க..
 • பீக் அவர்ல ட்விட்டுங்க..
 • நேர்மையா இருங்க, சந்தோசமா இருங்க..
 • எந்தப்பொருளையும் விற்பனை செய்ய முயற்சிக்காதீங்க..
 • ஒரு பொருளுக்கும் நமக்கும் உண்டான தொடர்பை சொல்லலாம், தொடர்பு இல்லாததையும் சொல்லலாம்.
 • சுட்டிகளை பரிமாறலாம்,
 • நேரத்திற்கு ஏற்றாற்போல் சூடான தகவல்களை பரிமாறலாம்.
 • கேள்வி கேட்கலாம், பதில் சொல்லலாம்..
 • என்ன செய்துகொண்டிருக்கிறோம் என்று சொல்லலாம்..
 • நம்மை பின் தொடருபவர்களையும் மதிக்க வேண்டும்,
இவற்றை தவிர்க்கலாம்...
 • உங்களால் சமாளிக்க முடியாத அளவிற்கான ட்விட்டர்களை பின்தொடரவேண்டாம். 
 •  யாரையும், எதையும் குறை சொல்ல வேண்டாம். 
 •  ஒவ்வொரு ட்விட்டுக்கு முன்பும் கவனம். 
 •  140 எழுத்துக்கள்.. மற்றவருக்கு உதவியாகவோ, காயப்படுத்தவோ, ஆறுதலாகவோ அல்லது தவறான புரிதலாகவோ இருக்க முடியும்.
சரி.. ட்விட்டரினால் கிடைக்கும் லாபம் என்ன?
 • ஒத்த கருத்துக்களுடனான அறிவு பலப்படும். 
 •  மாற்று கருத்து குறித்தான பரவலான மனநிலை அறியலாம் 
 •  சமகால நிகழ்வுகளை உடனுக்குடன் அறியலாம். 
 •  வலைப்பக்கத்தின் தரம் உயரும். 
 •  வலைப்பக்க ஹிட்ஸ் அதிகரிக்கும் 
 •  மற்ற பதிவர்களுடனான தொடர்பு ஏற்படுத்தலாம்.
 •  ஒத்த கருத்துடையவர்களுடனான நட்பு பெருகும். 
 •  ட்விட்டர் விளம்பரத்தின் மூலம் பணமும் பண்ணலாம்.
Firefox நெருப்புநரி பாவிப்பவர்கள் http://twitterfox.net/ Addon இன்ஸ்டால் செய்துகொள்ளலாம். TwitterFox இப்போது EchoFon என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

echo

http://www.tweetdeck.com/beta/ இன்ஸ்டால் செய்துகொள்ளலாம். TweetDeck ப்ரௌஸர் இல்லாமலேயே இயங்கக்கூடியது. ரிப்ளை ஆல், வியூ ப்ரோஃபைல் போன்ற பல பில்ட்இன் ஆப்ஷன்ஸ் உள்ளது.
TwitterDeck
  ட்விட்டர் தளத்தின் ஸ்டேட்ஸ் தெரிந்து கொள்ள http://tweetstats.com/ செல்லலாம். அங்கு கீழுள்ளது போன்ற விபரங்கள் திரட்டி தரப்படுகிறது.
  tweetstats
  tweetstats1 tweetstats2

  ட்விட்டர் பிரபலங்களின் முகவரி,
  http://twitter.com/PeerMhd – பீர் | Peer [Its Me… :-)]

  http://twitter.com/BarackObama – ஒபாமா
  http://twitter.com/schwarzenegger - அர்னால்ட்
  http://twitter.com/mrskutcher – டெமிமூர்
  http://twitter.com/britneyspears – ப்ரிட்னி ஸ்பியர்ஸ்

  http://twitter.com/SMKrishnaCong – எஸ்.எம். கிருஷ்ணா
  http://twitter.com/ShashiTharoor – சசி தரூர்
  http://twitter.com/chetan_bhagat – சேட்டன் பகத்
  http://twitter.com/PrabhuChawla – பிரபு சாவ்லா
  http://twitter.com/MallyaMan – விஜய் மல்லையா
  http://twitter.com/heshpathi – மகேஷ் பூபதி
  http://twitter.com/mdhoni – ம. சிங் தோனி
  http://twitter.com/Aamir_Khan – ஆமிர்கான்
  http://twitter.com/amitabh_bachan – அமிதாப் பச்சன்
  http://twitter.com/preityzinta – ப்ரீதி ஜிந்தா
  http://twitter.com/DuttaLara லாரா தத்தா
  http://twitter.com/arrahman – ஏ ஆர் ரஹ்மான்
  http://twitter.com/aishwarya_rai - ஐஷ்வர்யாராய்
  http://twitter.com/Shahrukh_Khan – ஷாருக்கான்
  http://twitter.com/R_Khanna – ராகுல் கண்ணா
  http://twitter.com/konkonas – கொங்கனா சென்
  http://twitter.com/priyankachopra – ப்ரியங்கா சொப்ரா
  http://twitter.com/MallikaLA – மல்லிகா ஷெராவத்
  http://twitter.com/Neha_Dhupia – நேஹா தூபியா
  http://twitter.com/kunal_deshmukh – குனால் தேஷ்முக்
  http://twitter.com/emraanhashmi – இம்ரான் ஹாஷ்மி
  http://twitter.com/Asin_Thottumkal – அசின்
  http://twitter.com/chinmayi – சின்மயி
  http://twitter.com/shrutihaasan – ஷ்ருதிஹாசன்
  http://twitter.com/shreyaghoshal – ஷ்ரேயா கோஸல்
   
  http://twitter.com/nramind – ஹிந்து ராம்
  http://twitter.com/maalan – மாலன்
  http://twitter.com/writerpara – பா.ராகவன்
  http://twitter.com/nchokkan - சொக்கன்
  http://twitter.com/luckykrishna – யுவகிருஷ்ணா
  http://twitter.com/snapjudge – பாஸ்டன் பாலா
  http://twitter.com/NagoerRumi – நாகூர் ரூமி
  http://twitter.com/orupakkam – ஒருபக்கம்
  http://twitter.com/bseshadri – கிழக்கு பத்ரி
  http://twitter.com/spinesurgeon – புருனோ
  http://twitter.com/ivansivan – இவன்சிவன்
  http://twitter.com/dynobuoy – டைனோ
  http://twitter.com/jyovramsundar - ஜ்யோவ்ராம்
  http://twitter.com/rozavasanth – ரோஸாவசந்த்
  http://twitter.com/athisha – அதிஷா
  http://twitter.com/elavasam -  இலவசகொத்தனார்

  http://twitter.com/bbcbreaking – பிபிசி
  http://twitter.com/the_hindu – தி ஹிந்து
  http://twitter.com/vikatan - விகடன்
  http://twitter.com/youthfulvikatan – யூத் விகடன்
  http://twitter.com/dinamalarweb - தினமலர்
  ட்விட்டர் உபயோகமில்லாதது என்று மட்டுமே நினைத்துக் கொண்டிருக்காமல், முயற்சி செய்து பாருங்கள். இது ஒரு குழுமம், சமூகம், இங்கிருந்து பல அறிய தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.. ஒவ்வொரு ட்விட்டும் ஒரு நுண் வலைப்பதிவு.
  நன்றி.

  25 comments:

  1. ஐயா! “பிட்டு” என்பதுதான் சரியான தமிழ்ச்சொல்! ஆனாலும் நாங்கள் இலங்கையில் “புட்டு” என்று தான் பேச்சுவழக்கில் உபயோகிக்கிறோம்.

   ReplyDelete
  2. ஆவ்வ்வ், இணையத்துக்கு வர்றதுக்கே நமக்கு நேரம் அதிகம் கிடைக்கறதில்லை. ட்விட்டர்ல இன்னும் ஏனோ பழக்கமாகலை.

   ReplyDelete
  3. எளிமையான தகவல்கள்
   நன்றி.
   ------------

   பிரபலத்தில் என் பெயரை காணோமே! ;)

   ReplyDelete
  4. நன்றி .... நல்ல பகிர்வு

   ReplyDelete
  5. ரொம்ப எளிமையா விரிவா எழுதி இருக்கீங்க

   இதை அதிகம் நான் பயன்படுத்துவதில்லை ஆனால் தெரிந்து கொள்ள விருப்பம்.

   ReplyDelete
  6. இத்தனை நாளா என்னன்னே தெரியாமக் குழம்பிக் கிடந்தேன்.. அருமையா, தெளிவா அறிமுகம் பண்ணி இருக்கீங்க நண்பா.. ரொம்ப நன்றி... பயன்படுத்த முடியுமான்னு பாக்குறேன்..

   ReplyDelete
  7. தெளிவான விளக்கம்

   பகிர்வுக்கு நன்றி

   ReplyDelete
  8. ரொம்ப தெளிவா, எளிமையா எனக்கும் புரியும் வண்ணம் எழுதியிருக்கீங்க..சூப்பர்..

   ஷ்ரேயா கோஷல் முகவரி கிடைச்சது ரொம்ப சந்தோசம்.

   நிறைய புதிய தகவல்கள் கிடைத்தது. நன்றி.

   ReplyDelete
  9. மிகவும் நன்றாக / பயனுள்ளதாக இருந்தது.
   தெரியாத பற்பல "ட்விட்டர்" செய்திகளை தொகுத்தளித்தமைக்கு நன்றி.
   படிச்ச உடனே, ட்விட்டர் சைன் அப் பண்ணிட்டு இருக்கேன் அண்ணே.

   " http://twitter.com/chinmayi – சின்மயி" இது எனக்காக தானே?

   ReplyDelete
  10. பீர்,

   கேள்வியறிவில் அறிந்த செய்திகள் என்றாலும் ஒரு தொகுப்பாக வாசித்ததில் நல்ல விளக்கங்கள் கிடைத்தன!!

   ஆனாலும் இப்போதைக்கு இதில் நேரம் செலவழிக்க விருப்பம் இல்லை; ஏற்கனவே இணையத்தில் இருந்தால் நேரம் போவதே தெரியவில்லை. அதனாலேயே ஃபேஸ்புக், ஆர்குட் போன்ற தளங்களிலும் போவதில்லை. ட்விட்டும் வேண்டாம்.

   தகவல்களுக்கு நன்றி!!

   ReplyDelete
  11. //•நேரத்திற்கு ஏற்றாற்போல் சூடான தகவல்களை பரிமாறலாம். ///

   சமீபத்தில் ஜெர்மன் பொது தேர்தல் வாக்கு எண்ணிக்கை ரிசல்ட், முதலில் ட்விட்டரில் தான் வந்தது, இது எப்படி நடந்ததுனு ஒரு விசாரணை நடக்குது ஜெர்மனியில்.

   வோட்டு எண்ணிக்கை பண்ணவன் நேரத்திற்கு ஏற்றாற்போல் ட்வீட் பன்னிருகான் போல.

   ReplyDelete
  12. naan ubayogichi paathen.. enakku sari varala..

   nalla thagaval thogupu :)

   pagirvukku nandri.. :)

   ReplyDelete
  13. டிவிட்டரை உபயோகம் செய்ய ஆரம்பிக்கலாமா என்று யோசிக்கிறேன்.

   ஏற்கெனவே பிளாகுக்கு அடிமையாகி...ம்ஹூம்..இதுல இது வேறயா தல ?

   ReplyDelete
  14. நன்றி ஆதித்தன், பிட்டை தெரிந்துகொண்டேன். :)

   நன்றி சின்ன அம்மிணி, ட்விட்டர் பழகிப்பாருங்க... போர் அடிக்காம போகும்.

   நன்றி TVR சார்,

   நன்றி ஜமால், ஹி.. ஹி... சில பிரபலங்கள் பெயர் விடுபட்டு விட்டது. விரைவில் சேர்க்க ஆவண செய்யப்படும்.

   நன்றி ஆ. ஞானசேகரன்,

   நன்றி r.selvakkumar,

   நன்றி கிரி,

   ReplyDelete
  15. நன்றி கார்த்திக், பயன்படுத்தி பாருங்க..

   நன்றி மஸ்தான்,

   நன்றி அபுஅஃப்ஸர்,

   நன்றி லோகு, நீங்க சொன்னதனாலதான் இந்த பதிவு.. ;)

   நன்றி பாலா, ஹி ஹி.. சின்மயி..

   நன்றி ஹூசைன் அம்மா, பொழுது போகாம என்னை மாதிரி சும்மா இருக்கிறவங்களுக்குத்தான் இந்த ஆர்குட், பேஸ்புக், ட்விட்டர் எல்லாம்...

   நன்றி சாம்,

   நன்றி கனகு,

   நன்றி வால்,

   நன்றி செய்யது, நீங்கல்லாம் வந்தால் தான் ட்விட்டருக்கு பெருமை.. ;)

   ReplyDelete
  16. பயன்படுத்திப் பார்க்கிறேன் .

   ReplyDelete
  17. really superb...

   follow me at

   http://twitter.com/amalan_a

   we have tried something like twitter you can visit

   http://dcubeloyola.co.cc

   ReplyDelete
  18. // அதே நேரம், நீளமான சில சுட்டிகள் இணைக்கப்படும் போது, அவை தானாக சுருங்கிக்கொள்கிறது. (அதன் நுட்பம் தெரிந்தவர்கள் சொல்லவும்)//

   இது சுட்டிகள் சுருங்கிக்கும் ஒரு தொழிநுட்பமே, நீங்களும் இதனை நேரடியா
   http://bit.ly/ இருந்து பயன்படுத்தல்லாம். ட்விஇட்டேர் வந்தனால் இது போன்ற இணையங்கள்கு வந்தது வாழ்வு.

   பெரிய சுருக்கி http://bit.ly/ போன்ற இணையதளத்தில் சுருக்க பட்டு, இரண்டுக்கும் மெப்பிங் செய்துவிடுவார்கள், இனி இந்த சுருக்கிய சுட்டிகள் நீங்கள் எங்கு வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.

   ReplyDelete
  19. நீங்கள் குறிபிடுள்ள அனைவரும் உண்மையானவர்கள் என்று உறுதியாக கூறமுடியாது. ட்டுவீட்டர் சான்றிதள் பெற்றவர்களை(Twitter Verified Accounts) இங்கே பாருங்கhttp://twitter.com/verified/following , இது பாலோ பண்ணுவோர்கள் உண்மையான நபருடையது.
   http://twitter.com/ShashiTharoor ல் பெயருக்கு மேல் Verified account என்பதை பார்க்கலாம்
   மேலும் விபரங்களுக்கு http://twitter.com/help/verified
   இதில் தோனி,ஆமிர்கான், ஷாருக்கான் போன்றோர் போலி,
   ப்ரியங்கா சொப்ரா, சசி தரூர் போன்றொர் உண்மை
   சின்மயி உண்மை என்று நம்புகிறேன் ARR சிந்தேகமே.
   http://blog.twitter.com/2009/10/hello-bharti-airtel.html

   ReplyDelete
  20. தகவல்களுக்கு நன்றி தனசேகர்.

   ReplyDelete

  மனம் திறந்து செதுக்குங்கள், என் எழுத்துக்களை.