Jun 5, 2009

மீண்டும் சிக்கிக் கொண்டேன்.

வந்துட்டேங்க… இருபது நாள் விடுப்பில் இந்தியா சென்று மீண்டும் இங்கு (குவைத்) வந்துவிட்டேன்.

இருந்தது இருபது நாட்கள் தான் என்றாலும் பல நிகழ்வுகள்.

 • எனது வாக்குக்காய் திணிக்கப்பட்ட 500 ரூபாய் கவர், என்னிடம் தரப்பட்டது.
 • வெற்றி பெற்றபின் ஒரு சேலையும், வேட்டியும் வீட்டில் எறியப்பட்டது.
 • என் சகோதரியின் மகளின் மகனுக்கு எல்.கே.ஜி அட்மிஷனுக்கு அலைந்த போது, ஒவ்வோரு பள்ளியிலும் ஒவ்வோரு பதில். தாயும் தந்தையும் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். 60,000 ரூபாய் டொனேஷன், அதுவும் ஜனவரியிலேயே அட்மிஷன் முடிந்து விட்டது. உங்களுக்கான இட ஒதுக்கீடான 3.5 % முடிந்துவிட்டது. முதலில் ப்ரி.கே.ஜி யில் தான் சேர்ப்போம். மற்றும் பல…
 • மழையில் நனைந்தது. மகனோடு நனைந்தது.
 • வெட்டியாய் சுற்றி வெய்யிலை வெறுப்பேத்தியது.
 • குற்றாலத்திற்கு செல்லும் வழியிலேயே அருவியில் தண்ணீர் இல்லை என்று செய்திவர, அப்படியே திரும்பியது.
 • மதுரை போத்தீஸ்ற்கு திறப்பு தினத்தன்று சென்று கூட்ட நெரிசலில் சாறானது.
 • 2 அரியர் குறுஞ்செய்தியோடு எழுதியது.
 • இன்னும் பல… (பிறகு)

அத்தனையையும் விட பதிவர் சகாக்களை சந்தித்தது மறக்க முடியாதது. அவற்றையெல்லாம் பிறகு பதிக்கிறேன்.

மீண்டும் அதே இயந்திரப் பற்களில் சிக்கிக் கொண்டேன். இனி அது தான் என்னை, என் வாழ்வை சுழற்றும். ஆனாலும் ஒரே மகிழ்ச்சி, பதிவுலக தொடர்பு தொடரும்.

9 comments:

 1. //வெட்டியாய் சுற்றி வெய்யிலை வெறுப்பேத்தியது.//

  வெயிலையே வெறுப்பேத்துனிங்களா!

  அதனால தான் நீங்க போன பிறகு அது எங்களை வறுதெடுக்குது!

  சைடிஷ்சுக்கு நன்றி சகா!

  ReplyDelete
 2. என் சகோதரியின் மகளின் மகனுக்கு எல்.கே.ஜி அட்மிஷனுக்கு அலைந்த போது, ஒவ்வோரு பள்ளியிலும் ஒவ்வோரு பதில். தாயும் தந்தையும் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். 60,000 ரூபாய் டொனேஷன், அதுவும் ஜனவரியிலேயே அட்மிஷன் முடிந்து விட்டது. உங்களுக்கான இட ஒதுக்கீடான 3.5 % முடிந்துவிட்டது. முதலில் ப்ரி.கே.ஜி யில் தான் சேர்ப்போம். மற்றும் பல…//

  இது இங்கே ரொம்ப சகஜமாப்போச்சுங்க!!

  ReplyDelete
 3. அத்தனையையும் விட பதிவர் சகாக்களை சந்தித்தது மறக்க முடியாதது. அவற்றையெல்லாம் பிறகு பதிக்கிறேன்.//

  உங்க கருத்துகளை எழுதுங்க!

  ReplyDelete
 4. அதுக்குள்ளே விடுமுறைகள் முடிந்ததா ?

  ரொம்ப விரைவுதான்.
  :(

  ReplyDelete
 5. இப்பவே 60000ம்னா, என்னோட புள்ளை வரும் போது, பத்து லட்சத்தை தாண்டும் போலயே..!
  என்ன பண்ண போறேனோ..?

  ReplyDelete
 6. பத்திரமா ஊர் போய் சேர்ந்தாச்சா? வாழ்த்துக்கள் நண்பா

  ReplyDelete
 7. அதையும் ரசிக்க கத்துக்கோங்க.. இல்லைன்னா வாழ்க்கை போரடிக்கும்

  ReplyDelete
 8. /*
  முரு, சொந்த வேலை காரணமாக கொஞ்ச நாட்களாக வலை மேய வரவில்லை.

  எதிர் கருத்துக்கள் பல வந்திருந்தாலும் நான் உங்கள் கருத்தோடு ஒத்துப் போகிறேன். தாய் நாட்டிற்கு சாபமிடுபவர்களை, துரோகம் செய்பவர்களை பாரபச்சமின்றி நாடு கடத்த வேண்டும் அது கவிஞரானாலும் கலைஞரானாலும்.
  எங்கள் பணத்தில் சொகுசு வீட்டில் சுடு சோறு உண்ணும் உனக்கு தகுதியில்லை எங்கள் மக்களை சபிக்க. கவிஞருக்கு கவிதைதான் எழுதத்தான் தெரியுமாம்... பாதிக்கப்பட்டோருக்கு ஆதரவாய் எழுதுவது சரி, எந்த பாதிப்பும் ஏற்படுத்தாத எம்மக்களுக்கு எதிராய் எழுதுவது எந்த விதத்தில் நியாயம் நண்பர்களே,

  //ஒரு சொட்டு தண்ணீருக்காய் விக்கி மடிந்த
  எங்கள் குழந்தைகளின் ஆத்மா சாந்தியடைய
  இனி ஒரு நூற்றாண்டுக்கு
  உன் ஆறுகள் எல்லாம் வற்றிப் போகட்டும்!//

  //தானியங்கள் எல்லாம் தவிட்டுக்குப்பைகளாய்
  அறுவடையாகட்டும்!//

  உனக்கு எங்கிருந்தாவது மினரல் வாட்டரும் பாஸ்மதியும் வந்துவிடும், வானம் பார்த்து நிற்கும் நாங்கள் எங்கு செல்ல?

  //தெருக்கள் எல்லாம் குண்டுவெடித்து
  சிதறிய உடல்களோடு
  சுடுகாடு மேடாகட்டும்!//

  //ஆழிப்பேரலை
  பொங்கியெழுந்து
  அத்தனையும் கடல் கொண்டுபோகட்டும்!//

  குளிர் அறையில் கவிதை எழுதும் உனக்குத் தெரிய வாய்பில்லை, இதனால் எத்தனை தலைமுறை சோற்றுக்கில்லாமல் தவிக்கிறதென்று.

  //உங்கள் பெண்களெல்லாம்
  படுக்கையைப் பக்கத்து வீட்டில் போடட்டும்!//

  என்னத்த சொல்ல...

  பத்தினி சாபம் பலிக்குமாமே? நல்ல வேளை உன் சாபம் எதுவும் பலிக்காதென்பது ஆறுதல்.
  */  நன்பா பீர்

  ஒரு சொட்டு தண்ணீருக்காய் விக்கி மடியவைத்த‌
  தெருக்கள் எல்லாம் குண்டுவெடித்துசிதறிய டல்களோடு
  சுடுகாடு மேடாக்கிய‌
  பெண்களெல்லாம் படுக்கையைப் பக்கத்து வீட்டில் போடச்செய்த‌

  கயவர்களை என்ன செய்வாய், சொல் நன்பா

  ReplyDelete

மனம் திறந்து செதுக்குங்கள், என் எழுத்துக்களை.