May 13, 2009

நாளை வருகிறேன் முத்தமிட...

இரண்டு மாத பிரிவாயினும், பல யுகங்களை பிரிந்த உணர்வு. நீ இல்லாத குவைத்தில் குப்பை கொட்டுவதும் பிடிக்கவில்லை. நாளை வருகிறேன் பெண்ணே முத்தமிட, உன்னையும் தாய் மண்னையும் - அன்பு மகனுக்கும் சொல்லிவிடு, அப்பா வருகிறார் நம்மை அள்ளிக் கொஞ்ச என்று - உனக்காய் நான் வாங்கியதைச் சொன்னால் வெட்கப்படுவாய், சோப்பு சீப்போடு சேர்த்து நீ சொல்லாத உன் ஆடையும் - நாளைய ஆரம்பத்திற்கு ஆயத்தமாயிரு.

உன்னைக் காண ஊர் வருவது எப்போதும் போல இப்போதும் மகிழ்ச்சி, இம்முறை சற்று அதிகம் ஆம்...இதுவரைக் காணாத பதிவர் சகாக்களையும் சந்திக்கப் போகிறேன்.

மற்றவை நேரில்...

சகாக்களே, இன்று இரவு இங்கிருந்து விமானம். நாளை முதல் இருபது நாட்களுக்கு நம் மதுரையில் இருப்பேன். என் புதிய சகாக்களை சந்திப்பது சத்தியமாய் ஆவல்.

மற்றவை நேரில்...

இந்திய செல்பேசி எண்; 9791579981.

சென்ற முறை ஆயுளுக்காய் வாங்கியது, ஆயுல் உள்ளதா என்பது அங்கு வந்தால்தான் தெரியும்.

12 comments:

  1. //சகாக்களே, இன்று இரவு இங்கிருந்து விமானம். நாளை முதல் இருபது நாட்களுக்கு நம் மதுரையில் இருப்பேன். என் புதிய சகாக்களை சந்திப்பது சத்தியமாய் ஆவல். //

    வாழ்த்துகள்,

    ஐயா சீனா, தருமி, சாலி சம்பர் ஆகியோர் மதுரையில் இருக்கிறார்கள்.

    ஊருக்குப் போனோமா ? மனைவி, மகன் பெற்றோர்களைப் பார்த்தோமான்னு இருக்கனும், அங்கேயும் போய் பதிவு, இடுகை, திரட்டின்னு சுற்றிக் கொண்டு உறவுகளுக்கு செலவிடும் நேரங்களை தொலைத்துவிடாதீர்கள்.

    அன்புடன்
    கோவி

    ReplyDelete
  2. வாங்க நண்பரே..!
    வருகை இனிதாய் அமைய வாழ்த்துகின்றேன்.

    ReplyDelete
  3. கோவி,
    //ஐயா சீனா, தருமி, சாலி சம்பர் ஆகியோர் மதுரையில் இருக்கிறார்கள்.

    ஊருக்குப் போனோமா ? மனைவி, மகன் பெற்றோர்களைப் பார்த்தோமான்னு இருக்கனும், //

    குழந்தையையும் பார்த்தோமா; கொஞ்சம் கிள்ளியும் உட்டோமா என்று ஒரு பின்னூட்டம். ஒண்ணும் சரியில்லை'ப்பா!

    ReplyDelete
  4. வாங்க chill-peer. கட்டாயம் சந்திப்போம்.

    ReplyDelete
  5. நன்றி, கோ.

    //தருமி said...
    கோவி,
    //ஐயா சீனா, தருமி, சாலி சம்பர் ஆகியோர் மதுரையில் இருக்கிறார்கள்.

    ஊருக்குப் போனோமா ? மனைவி, மகன் பெற்றோர்களைப் பார்த்தோமான்னு இருக்கனும், //

    குழந்தையையும் பார்த்தோமா; கொஞ்சம் கிள்ளியும் உட்டோமா என்று ஒரு பின்னூட்டம். ஒண்ணும் சரியில்லை'ப்பா!//

    அதான...

    ReplyDelete
  6. @ முத்துராமலிங்கம், நன்றி முத்துராமலிங்கம்.

    @ தருமி, நன்றி ஐயா. கட்டாயம் சந்திப்போம்.

    ReplyDelete
  7. வாங்க பாஸு..வாங்க பாஸு..!
    ஏர்போர்ட்டுக்கு அஞ்சா நெஞ்சனக் கூப்பிட்ருவோமா?

    ReplyDelete
  8. அண்ணே இது என்னோட நம்பரு!
    9994500540

    வந்துட்டு ஒரு மிஸ்டுகால் கொடுங்க!

    ReplyDelete
  9. ஒரு வாரம் முன்ன வந்து இருந்தா அழகிரியிடம் பேசி உங்க விமான டிக்கெட் செலவையே வாங்கித் தந்திருப்போம்.. :))))

    ReplyDelete
  10. //டக்ளஸ்....... said...
    வாங்க பாஸு..வாங்க பாஸு..!
    ஏர்போர்ட்டுக்கு அஞ்சா நெஞ்சனக் கூப்பிட்ருவோமா?//

    வேண்டாம் டக்ளஸ், அண்ணே நேத்தே, 'பிஸியா இருக்கேன் நல்லபிடியா வந்துசேர வாழ்த்துச் சொல்லி' SMS அனுப்பிட்டாப்டி. நேர்ல போயி பார்த்துக்கிறேன்.



    //வால்பையன் said...
    அண்ணே இது என்னோட நம்பரு!
    9994500540

    வந்துட்டு ஒரு மிஸ்டுகால் கொடுங்க!//

    கண்டிப்பா கால் பண்றேங்க.


    //கார்க்கி said...
    ஒரு வாரம் முன்ன வந்து இருந்தா அழகிரியிடம் பேசி உங்க விமான டிக்கெட் செலவையே வாங்கித் தந்திருப்போம்.. :))))//


    அதான் நேர்ல போய் பார்க்கப் போறேன்ல, அப்பவே வாங்கிக்கிறேன். வெற்றி பெற்ற சந்தோஷத்தில நிறையவே அள்ளி கொடுப்பார்... :)))

    ReplyDelete
  11. வாங்க ! தாய் மண்ணுக்கு வரவேற்கிறோம்!!

    ReplyDelete
  12. அன்பின் பீர்

    சந்திப்பில் சந்தித்தது குறித்து மிக்க மகிழ்ச்சி - அதிகம் பேச இயலவில்லை. பரவாய் இல்லை - நல்வாழ்த்துகள்

    ReplyDelete

மனம் திறந்து செதுக்குங்கள், என் எழுத்துக்களை.