May 2, 2009

த்ரிஷா இடுப்பு எனக்கு பிடிக்கும் - ஜிகர்தண்டா©

ஜிகர்தண்டா தெரியாத மதுரைக்காரர்கள் இருக்க முடியாது. மற்றயாருக்கும தெரியாது என்று சொல்வதற்கில்லை. தெரியாதவர்களுக்காக சிறிய முன்னுரை, ஜிகர்தண்டா என்பது பாலாடை, ஐஸ்க்ரீம், கடல்பாசி (ஒருவகை தாவரத்தின் தண்டுப்பகுதியிலிருந்து எடுக்கப்படுகிறதாம், ஆங்கிலத்தில் ChinaGrass என்று சொல்கிறார்கள்) போன்றவற்றின் கலவை தான் ஜிகர்தண்டா என்பது. அதன் சரியான சுவையை ருசிக்க மதுரை விளக்குத்தூண் அருகேயுள்ள ஃபேமஸ் ஜிகர்தண்டாவுக்கு (இவர்களுக்கு வேறு கிளைகள் கிடையாதாம்) செல்லலாம். ஜிகர்தண்டாவுக்கு பெயர் காரணமாக அவர்கள் சொல்வது, ஹிந்தியில் (जिगर) ஜிகர் என்றால் இதயம், (ठंडा) தண்டா= குளிர், அதாவது ஜிகர் தண்டா = இதயத்திற்கு குளிர்ச்சி. (ஜிகர் க்கு அவர்கள் சொல்லாத தைரியம் என்ற ஒரு அர்த்தமும் ஹிந்தியில் உண்டாம் . நான் புரிந்துகொண்டது, தைரியம் இருந்தால் வந்து குடித்துப்பார், குளிர்ச்சியாவாய் என்பது).

அதெல்லாஞ்சரி... வெளக்குத்தூண் ஜிகர்தண்டாவுக்கு வெளம்பரஞ்செய்யத்தான் இன்னிக்கி கட திறந்தியான்னு நீங்க கேட்டா, இல்லங்க இல்ல...சத்தியமா இல்ல. கஸ்டமர கவர்பண்றதுக்காக, எங்க கடையிலையும் ஆன்லைன்ல ஜிகர்தண்டா விக்க ஆரம்பிச்சாச்சு. அட.. அதாங்க கொத்துபுரோட்டா, அவியல், குவியல், புவியல், வரலாறு, கிச்சடி, பச்சடி அந்த வரிசையில் ஜிகர்தண்டா©.

அதென்ன ஜிகர்தண்டா க்கு பக்கத்ல ©?

காபி ரைட் வாங்கிட்டோம்ல..

யார்ட வாங்ன?

யார்டயோ...

அடிவாங்க போறடா... டேய்....

எங்களுக்கேவா... நாங்கல்லாம்... மதுரக்காரங்ஞ, தெரியும்ல... எங்களுக்கு இல்லாம வேற யாருக்கு இந்த பேரு... யார் வந்தாலும் பாத்துக்குவோம்ல...

இந்த வாய்சவடாலுக்கு மட்டும் எந்த கொறச்சலும் இல்ல, மொதல்ல விசயத்துக்கு வாடா….

இந்தா வந்துட்டேங்க..

நேற்று வெள்ளி வார விடுமுறை அறைக்குள் பொழுதுபோகவில்லை என வலைக்குள் வந்தால்... (உழைப்பாளர் அனைவரும் குவாட்டர் அடிச்சுட்டு குப்புர படுத்துட்டாங்க போல) வெகு சிலரே பதிவிட்டிருந்தார்கள் அவர்களிடமும் புன்னகைத்துவிட்டு வந்தேன். என்ன செய்யலாம்... டிவி பார்த்து நாட்களாகிவிட்டிருந்தது, ரிமோட்டை தேடியெடுத்து டிவி ஆன் செய்தால்... என்ன கொடுமைங்க இது, கலைஞர் மட்டும்தான் காட்சிதந்தார். அதில் தலயும் சதாவும் அசாதரணமாக ஆடிக்கொண்டிருந்தனர். இந்த பசங்கல்லாம் தல தலன்னு அடிச்சுகிறாங்களே... அவருக்கு இன்று பிறந்தநாள் வேறு... சரி தல படம் பார்க்கலாமென்று ஜிஞ்சர் டீயுடன் வந்தமர்ந்தேன். படம் பெயர் திருப்பதியாம், இயக்கம் பேரரசு (நீ போர் அரசு). தல பஞ்ச் டயலாக் , 'நான் எறங்கி போறவன் இல்லடா, ஏறிப்போறவன்' நல்லா ஏறிப்போங்க எங்க தல...

அடுத்துவந்த அரைமணி ஹாரிஸ் ஜெயராஜுக்கு, பரவாயில்லை. அதன்பிறகு வந்தார் ஆதி... தளபதி. (அடப்பாவிங்களா... அதுக்குள்ள அடுத்த படமா...) இயக்குனர் ரமணா, திரைக்கதை நல்ல வேகம். தளபதியும் டயலாக் பேசினார்... ஒன்றும் மனதில் நிற்கவில்லை. புல்லட் விவேக், சும்மா சொல்லக்கூடாது... அருமை. மறுபடியும் தளபதி டயலாக் பேசவந்த போது டிவி யை மியூட்டில் போட்டுவிட்டு மீண்டும் தூங்கிவிட்டேன்.

கண்விழித்தால், ப்ரகாஷ் ராஜும் ப்ரியதர்ஷினியும்(உங்களுக்கு எப்போ டீன் ஏஜ் முடியும் மேடம்?) சைகையில் பேசிக்கொண்டிருந்ததை பார்க்க பாவமாயிருந்தது. போனால் போகட்டுமென்று அவர்களுக்கு பேச்சு அருள் கொடுத்தேன். நன்றாகத்தான் பேசினார்கள்.

ப்ரியதர்ஷினி; அபியும் நானும் படத்ல த்ரிஷாவ கொஞ்சம் கூட கிளாமர் இல்லாம காட்டியிருந்தத பத்தி?

ப்ரகாஷ் ராஜ்; அந்த படத்ல அபியா நடிகறதுக்கு எனக்கு முன்னனி நடிகை தேவைப்படல... ஆனாலும் த்ரிஷா இருக்கட்டுமேன்னு புக் பண்ணினோம். எல்லோருக்கும் அவ அபியாதான் தெரியணுமே த்ரிஷாவா தெரியக்கூடாதுங்றதில கவனமாயிருந்தோம். ஒரே ஒரு ஊரு... பாட்டுல ஒரு சீன் த்ரிஷா கைய மேல தூக்கி ஆடுற மாதிரி வரும். அப்டி ஆடும் போது த்ரிஷா இடுப்பு கொஞ்சம் தெரிஞ்சது. நானும் ராதாவும் ஓடுப்போயி 'த்ரிஷா, நீ கை தூக்கி ஆடும் போது, உன் இடுப்ப தெரியுது. நீ ஏதாவது கருப்பு இன்னர் போட்டுக்கோயேன்னு' சொன்னோம். அதுக்கு த்ரிஷா சொன்னா, 'ஏன் சார், எல்லாரும் என் இடுப்ப காட்ட சொல்வாங்க. என் இடுப்ப மறைக்க சொன்ன முதல் ஆள் நீங்கதான்.' அதுக்கு நான் சொன்னேன், அம்மா த்ரிஷா, உன் இடுப்பு எனக்கு பிடிக்கும், ஆனா அபி இடுப்பு காட்ட மாட்டான்னு.

இது எனக்கு மிகவும் பிடித்தது.

செய்தி; தமிழகத்தில் பேருந்து கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. இது தேர்தல் நடத்தைவிதி மீறல், தேர்தல் ஆணையம் நிச்சயம் நடவடிக்கை எடுக்கும் என்று தமிழக தேர்தல் ஆணையர் குப்தா சொல்லியிருக்கிறாராம். நேரு அண்ணே உடனே, 'அப்டியெல்லாம் ஒண்ணுமில்லைன்னு' விளக்கம் கொடுத்துள்ளார்.

ஐயா... கட்டணம் குறைத்தால் தான் என்னன்னு கேட்கிறேன்.

செய்தி; மதுரையில் கட்டு கட்டாக பணம் ஸ்கார்பியோ டிக்கியில் இருந்தது பிடிபட்டது.

எங்க வீட்ல ஸாலிடா 10 ஓட்டு இருக்கு... யாருக்காவது வேணும்னா எனக்கு மடலிடலாம்

ஒருத்தர் வீட்ல நைட்டு திருட்டு போயிடுச்சாம். அவர் உடனே போலிஸ்ல கம்ப்ளைன்ட் கொடுத்து, திருடனும் பிடிக்கப்பட்டான். அவர் போலிஸ்ட கேட்டாராம், 'சார் நான் அவன்ட கொஞ்சம் பேசணும்' 'அதெல்லாம் முடியாது, எதுனாலும் கோட்ல பேசிக்கலாம்' னு போலீஸ் சொல்ல, அதுக்கு அவர், 'சார் வேற ஒண்ணும் இல்ல, என் மனைவி தூங்கிட்ருக்கப்ப, அவ எழுந்திரிக்காம எப்டி வீட்டுக்குள்ள வந்தான்னு மட்டும் கேட்டுக்கிறேன். நான் ரொம்ப நாளா முயற்சி பண்ணி மாட்டிக்கிறேன்.' அப்டின்னு சொன்னாராம்.

ஒரு குட்டிப்பொண்ணு கடவுளிடம்; எனக்கு தம்பி பாப்பா குடுத்ததுக்கு நன்றி கடவுளே, ஆனா நான் உன்ட நாய் குட்டிதான வேணும்னு கேட்டேன்.

9 comments:

 1. நல்லா இருக்கு வாழ்த்துக்கள். :)))

  ReplyDelete
 2. ஜிகர்தண்டா formula யாருக்கும் தெரியாது என்பார்களே உண்மையா?

  ஸ்வீட்,காரம்,ஜிகர்தண்டா,இடுப்பு நல்லாத்தான் இருக்கு.

  வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 3. என்னாது..!
  ஆதி பட டயரடக்கரு ரமணாவா..?
  அவுங்க நைனா இல்லயா?

  ReplyDelete
 4. \\எங்க வீட்ல ஸாலிடா 10 ஓட்டு இருக்கு..\\

  ஆமா..எங்க வீட்டுலயும் 5 ஓட்டு..!

  ReplyDelete
 5. ஜிகர்தண்டாவா?
  ஏப்பா..இந்த மதுரக்காரய்ங்கே லொள்ளு வர வர தாங்கமுடியல...

  ReplyDelete
 6. @ வேந்தன் அண்ணே, ரொம்ப ரொம்ப நன்றிண்ணே...

  @ கே. ரவிஷங்கர் அண்ணே, இப்போ நிறையபேர் தெரிந்துகொண்டு புதிதாய் கடை திறக்கிறார்கள், (சத்தியமா... எனக்கு தெரியாதுங்க)

  வாழ்த்துக்கு நன்றிண்ணே...

  @ டக்லஸ்...... வாப்பா சல்லிப்பயலே... லொல்லு இல்லாம மதுரயா?

  ReplyDelete
 7. ஜிகர்தண்டா சூப்பர். பிரகாஷ் ராஜ் ஒழிகன்னு சொல்லிக்கறேன்.

  ReplyDelete
 8. நல்ல கீழவாசல் ஜிகிர்தண்டா

  ReplyDelete
 9. ஜிகர்தண்டா சும்மா ஜில்லுன்னு இருந்துச்சு!

  ReplyDelete

மனம் திறந்து செதுக்குங்கள், என் எழுத்துக்களை.