May 3, 2009

அத்வானி, பன்றிக்காய்சல், இலங்கை - ஜிகர்தண்டா

செய்தி; இந்தியாவிலும் பன்றிக்காய்சல். லண்டன், அமெரிக்கா போன்ற நாடுகளில் இருந்து டெல்லி வந்த 6 பேரில் 5 பேருக்கு பன்றி காய்சல் இல்லை என்பது உறுதிசெய்யப்பட்டதாக சுகாதாரதுறை செயலர் தெரிவித்துள்ளார்.

நல்லா செக் பண்ணுங்கப்பா… கோட்டை சண்டைல இத கோட்ட விட்றாதீங்க…

பன்றி காய்சல் பற்றிய எனது முந்தைய பதிவை வாசிக்க இங்கே செல்லவும்.

செய்தி; ராணுவ வாகனங்கள் மீது தாக்குதல். இலங்கைக்கு ஆயுதம் கொண்டு செல்வதாக சந்தேகம் எழுந்ததால், கோவையில் இந்திய ராணுவ வாகனம் தாக்கப்பட்டது.

சாலைமறியல் போன்று எதிர்ப்பை வெளிப்படுத்தியிருக்கலாம். ராணுவ வாகனம் தாக்குதல் கொஞ்சம் ஓவராயிடுச்சோ?

செய்தி; முதல்வர் கருணாநிதி கடும் காய்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதி.

என்ன காய்சல் னு பார்த்து, அவர ரெஸ்ட் எடுக்கவிடுங்கப்பா… ரெஸ்ட் இன் பீஸ்.

செய்தி; இந்தியா உடனடியாக அணுகுண்டு தயாரிக்க வேண்டும் – அத்வானி.

ராஜபக் ஷே ட்டருந்து எத்தன கிலோவுக்கு பர்சஸ் ஆர்டர் வந்திருக்கு?

ஒரு திருமணமாகாத பெண் தன் அம்மாவிடம் தான் கருவுற்றிருக்கதாக சொல்கிறாள். அவளுடைய அம்மா காச் மூச் என்று கத்திவிட்டு,'யார் அந்த கருப்பாடுன்னாவது தெரியுமான்னு' கேட்க, உடனே அந்த பெண் மொபைல எடுத்து SMS அனுப்பினாளாம். அடுத்த 5 நிமிசத்துல ஒரு BMW வாசல்ல வந்து நிக்குது, அதிலருந்து நம்ம ___________(யார் பேரையாவது போட்டுக்குங்கப்பா) மாதிரி ஒருத்தர் இறங்கி வீட்டுக்குள்ள வந்து, ஜென்டில்மென் அக்ரிமென்ட் போடுகிறார்.

நடந்தது நடந்து போச்சு, உங்க பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தால், '50 லட்ச ரூபாய் பேங்ல டெபாசிட் பண்றேன். பெண் குழந்தைன்னா, 1 கோடி. ரெட்டைக்குழந்தை பிறந்தால், ஒவ்வொறுத்தர் பேர்லயும் 50 லட்சமும் அம்பத்தூர்ல இருக்குர என்னோட ஒரு பேக்டரியும் சேர்த்து தருகிறேன். ஆனால், இடையிலேயே அபார்ஷன் ஆயிடுச்சுன்னா என்ன பண்ணலாம்னு நீங்களே சொல்லுங்க' என்று கேட்க..

அவ்வளவு நேரமா அமைதியா இருந்த அந்தப்பெண்ணுடைய அப்பா, 'இன்னொரு தடவ முயற்சி பண்ணுங்கன்னு' சொன்னாறாம்.

Chill: better luck next time.

அன்பார்ந்த வாக்காள பெருங்குடிமக்களே.. ஒங்க பொன்னான வாக்குகள்ல ஒண்ண எனக்கும் க்ளிக்குங்க......

7 comments:

 1. இன்னொரு தடவையா?

  ReplyDelete
 2. அத்வானி மேட்டரு சூப்பரு..!

  ReplyDelete
 3. கடைசி ஜோக் அபாரம். :)-

  ReplyDelete
 4. @ pukalini, வருகைக்கு நன்றி... எந்த இன்னொரு தவவைய சொல்றீங்க?

  @ டக்லஸ்..... எனக்கும் பிடித்தது.

  @ மணிகண்டன், நன்றி.
  அப்ப எல்லாத்தையும் ஜோக் வகைல சேத்துட்டீங்களா? அதுக்கு மேல இருக்குறதெல்லாம் செய்தி நண்பா...

  ReplyDelete
 5. சரி. மறுபடியும் முயற்சிக்கறேன். கடைசியா வந்த ஜோக் அபாரம். :)-

  ReplyDelete
 6. சரி. மறுபடியும் முயற்சிக்கறேன். கடைசியா வந்த ஜோக் அபாரம். :)-

  ReplyDelete
 7. //மணிகண்டன் said...
  சரி. மறுபடியும் முயற்சிக்கறேன். கடைசியா வந்த ஜோக் அபாரம். :)-//


  திரும்ப திரும்ப பேசுற நீ,

  அசத்துறீங்க மணி... :)

  ReplyDelete

மனம் திறந்து செதுக்குங்கள், என் எழுத்துக்களை.