ஸ்வைன் இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் (Swine Influenza Virus)
SIV என்று சொல்லப்படக்கூடிய ஸ்வைன் இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் (Swine Influenza Virus) தமிழில் பன்றி காய்சல் என்பது, ஐரோப்பிய நாடுகளிலிருந்து உலகம் முழுக்க பரவுவதற்கு சாத்தியமுள்ள நச்சுக்கிருமியாகும். (Swine Flu) பன்றி காய்சலானது (Birds Flu) பறவை காய்சலிலிருந்து மாறுபட்டு, மனிதனில் இருந்து மனிதனுக்கு பரவக்கூடியது.
2009 ல் முதல் பன்றி காய்சலின் திடீர் கிளர்ச்சியானது உடைந்த H1N1 இன்ஃப்ளூயன்ஸா வைரஸிலிருந்து வெடித்ததாக மெக்ஸிக்கோ பொது சுகாதார நிறுவனத்தால் மார்ச் 2009 ல் கண்டறியப்பட்டது. அதன் தொடற்சியாக, மெக்ஸிகோவின் எல்லைக்கு அருகாமையிலிருக்கும் அமெரிக்க நாடுகளில் மட்டுமல்லாது, கனடா,ஸ்பெயின் மற்றும் ஐக்கிய நாடுகளிலும் இதன் பாதிப்பு சுமார் 1800 நோயாளிகளுக்கு இருக்குமென்று அறியப்படுள்ளது.
பன்றி காய்சல் என்றால் என்ன?
ஸ்வைன் இன்ஃப்ளூயன்ஸா அல்லது ஸ்வைன் ஃப்ளு எனப்படுகிற பன்றி காய்சலானது, அதிகப்படியான ஸ்வைன் A(H1N1) வைரஸிலிருந்து மூர்கத்தனமாக பன்றிகளுக்கு தொற்றிக்கொண்டு அவற்றை செயலிலக்கச்செய்யும் ஒரு நுண் கிருமி ஆகும். இக்கிருமியின் பாதிப்பால் பன்றிகளுக்கு திடீர் நலக்குறைவு உண்டாகுமே தவிர அதிகமான பன்றிகள் கொல்லப்படுவதில்லை
இதே H1N1 வைரஸ் தான் மனித H1N1 வைரஸா?
இல்லை இந்த H1N1 ஆனது முற்றிலும் மாறுபட்டது, எனவே மனித H1N1 வைரஸிற்கான மருந்தானது இவற்றிக்கு பாதுகாப்பளிக்காது.
மனிதற்களுக்கு இந்நோய்கிருமி பரவும் அபாயம் உள்ளதா?
பன்றி காய்சலானது மனிதர்களுக்கு பரவும் அபாயம் இல்லை எனினும் சில சந்தர்பங்களில் பன்றி காய்சல் பாதிக்கப்பட்ட பன்றிகளுடன் நேரடி தொடர்புடைய தொழிலாளர் போன்றோருக்கு தொற்றிக்கொள்ள வாய்ப்புள்ளது.
அவ்வாறு தொற்றிக்கொண்டால் அதன் அறிகுறிகள் என்ன?
காய்சல், இருமல், சோர்வு, பசியின்மை, தொண்டை புண், உடல் வலி, தலை வலி சிலருக்கு வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தியும் ஏற்படலாம்
இதே வகையான (ஸ்வைன் ஃப்ளு) பன்றி காய்சல் தான் மெக்ஸிகோ, அமெரிக்கா மற்றும் இதர நாடுகளில் பாதிப்படைந்த நோயாளிகளுக்கு தொற்றிக்கொண்டுள்ளதா?
மெக்ஸிகோ மற்றும் அமெரிக்காவில் பாதிப்படைந்த நோயாளிகளின் கிருமி மாதிரி ஒரே வகையானது என்று நோய் தடுப்பு மற்றும் பாதுகாப்பு மையம் தெரிவித்துள்ளது. அந்த கிருமியானது வட அமெரிக்காவிலிருந்து மனித கிருமி மற்றும் பறவை கிருமியும், வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஆசிய நாடுகளின் பன்றி கிருமியும் சேர்ந்த கலவையாகும். அதாவது மிக்ஸ் வைரஸ்.
இதற்கு நிவாரண மருந்து?
டாமிஃப்ளு (TamiFlu) மாதிரியான 4 வகை மருந்துகள் அமெரிக்காவில் அனுமதிக்கப்பட்டுள்ளது, எனினும் பாதிப்பிற்கான அறிகுறிகள் தென்பட்டால் முதலில் அருகிலுள்ள மருத்துவமனையை அனுகுவது நல்லது.
அமெரிக்காவின் கலிஃபோர்னியா மற்றும் டெக்ஸாஸில் வாழ்பவர்களுக்கு ப்ரத்யேகமாக ஏதாவது?
நோய் பரவுவதிலிருந்து முன்னெச்சரிக்கையாக இருக்க; அடிக்கடி கைகழுவுதல், இருமல் அல்லது தும்மலின் போது வாயையும் மூக்கையும் மூடிக்கொள்ளுதல், பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து விலகியிருத்தல் மற்றும் பாதிக்கப்பட்டவர் நீங்களாயிருந்தால் வீட்டிலேயே இருக்கவும் மற்றவர்களிடமிருந்து விலகியிருக்கவும் அறிவுருத்தப்பட்டுள்ளது.
இது அனைத்து நாட்டினருக்குமான பொது அறிவுரையாகவே தோன்றுகிறது
நாடு | உறுதி செய்யப்பட்டது | மற்ற வாய்ப்பிருப்பது | இறப்பு | தொடுப்பு |
26 | 1,995 | 149 (20) | ||
48 | 212+ | 0 | ||
6 | 28+ | 0 | ||
2 | 21 | 0 | ||
1 | 35 | 0 | ||
நியுஸிலாந்து | 0 | 56 | 0 | |
ஆஸ்திரேலியா | 0 | 19 | 0 | |
கொலம்பியா | 0 | 12 | 0 | |
பிரேசில் | 0 | 11 | 0 | |
ஸ்விசர்லாந்து | 0 | 5 | 0 | |
டென்மார்க் | 0 | 4 | 0 | |
ஐயர்லாந்து | 0 | 4 | 0 | |
செக் குடியரசு | 0 | 3 | 0 | |
போலந்து | 0 | 3 | 0 | |
பிரான்ஸ் | 0 | 3 | 0 | |
கவுட்மாலா | 0 | 3 | 0 | |
இஸ்ரேல் | 0 | 2 | 0 | |
அர்ஜன்டீனா | 0 | 1 | 0 | |
கொஸ்டாரிகா | 0 | 1 | 0 | |
பெரு | 0 | 1 | 0 | |
ரஷ்யா | 0 | 1 | 0 | |
தென் கொரியா | 0 | 1 | 0 | |
மொத்தம் | 83 | 2,443+ | 149 (20) | |
* Not all cases have been confirmed as being due to this strain. Possible cases are cases of influenza-like illness ( |
இந்த தகவல்கள் யாவும் பொதுநலன் கருதி கீழே குறிப்பிட்டுள்ள வலைகளில் இருந்து திரப்பட்டது.
• http://en.wikipedia.org/wiki/2009_swine_flu_outbreak_in_Mexico
Good info. Keep updating.
ReplyDeleteசரியான நேரத்தில் நல்ல பதிவு.. நண்பா.. எப்ப ஊருப்பக்கம் வரீங்க?
ReplyDelete@ Muralidharan: Thanks Dr.Muralidharan for your visit and comments.
ReplyDelete@ கார்த்திகைப் பாண்டியன்: நன்றி கார்த்திக்,
வருகிற 14 ம் தேதி நம் மண்ணில் என் காலிருக்கும். எப்பொழுதுமிருக்கும சந்தோசத்தை விட இம்முறை உங்களை எல்லாம் சந்திக்கும் ஆர்வமும் சேர்ந்துள்ளது.
பதிவு பயனுள்ளதாக இருந்தது
ReplyDelete