அது கர்னாடகா, பெங்கலூருவிலுள்ள மருத்துவமனை.
10 வயது மதிக்கத்தக்க ஒரு சிறுவனை அவனது பெற்றோர் வெளி நோயாளிகள் பரிவில் காத்திருந்து, மருத்துவரிடம் காட்டுகிறார்கள். 'டாக்டர்...பையனுக்கு பத்து நாளா ஒரே காய்ச்சல், வாந்தி, மயக்கமா இருக்கு டாக்டர்,'
மருத்துவர் சிறுவனை பரிசோதிக்கிறார். ஏதோ பொறிதட்ட, பெற்றோரிடம், சிறுவனின் இரத்தத்தை சோதிக்க பரிந்துரைக்கிறார்.
இரத்த பரிசோதனையில் தெரியவருகிறது, 'சிறுவனுக்கு எய்ட்ஸ'
பெற்றோர் அதிர்கிறார்கள், ' சான்ஸே இல்ல டாக்டர்.. குட் யு ப்ளீஸ், செக் அன் கன்ஃபம் இட் ஒன்ஸ்அகைன்?'
'இல்லம்மா, நாங்க கன்ஃபம் பண்ணிதான் சொல்றோம், அவனுக்கு எய்ட்ஸ் கிருமிகள் ஆரம்பம் ஆகிடுச்சு'
சிறுவனிடம் விசாரனை செய்கிறார்கள், அவன் எங்கெங்கு சென்றான்? என்னென்ன சாப்பிட்டான், எனபதெல்லாம்... சிறுவன் இறுதியாய் சொன்ன, 'ரோட்டு வண்டில பைன் ஆப்பில் சாப்டேன்' மருத்துவர்களுக்கு சந்தேகத்தை கிளப்ப... விரைகிறார்கள்... அந்த தெருவோர வண்டியை நோக்கி...
பெங்கலூரு நகரின் சந்தடிமிக்க தெருவோர வண்டி, அன்னாசி பழத்தை கூர்மையான கத்தியை கொண்டு நருக்கிக்கொண்டிருக்கும் வியாபாரியின் கையில் சிறிய ஒரு காயம்... இரத்தம் கசிகின்றது…
மருத்துவர்கள் வியாபாரியை மருத்துவமனை கொண்டு சென்று சோதித்த பொழுது உறுதிசெய்கிறார்கள், 'அன்னாசி பழ வியாபாரிக்கும் எய்ட்ஸ்' அவர் கைகாயத்திலிருந்து இரத்தம் கசிந்து அன்னாசி பழத்தில் விழுந்திருக்கிறது, அந்த பழத்தை உண்ட அச்சிறுவனுக்கும் எய்ட்ஸ் பரவியிருக்கிறது.
வியாபாரியும் அதுவரை அறிந்திருக்கவில்லை, தனக்கு 'எய்ட்ஸ் இருப்பதை'
நான் விசாரித்த / எனக்கு விளக்கப்பட்ட வரையில், எய்ட்ஸ் நோயை தரக்கூடிய, HIV கிருமியானது உணவின் மூலமோ, காற்றின் மூலமோ, பரவக்கூடியது அல்ல. சிறிதளவு HIV பாதிக்கப்பட்ட இரத்தம் உட்கொள்ளப்பட்டாலும் அது, வயிற்றிலிருந்து சுரக்கப்படுகின்ற ஒரு அமிலத்தால் அழிக்கப்பட்டுவிடும். எய்ட்ஸ் உணவு வழியாக பரவியதாக இது வரை நிருபிக்கப்படவில்லை. HIV பாதிக்கப்பட்ட இரத்தம் உள்ள உணவை கையால் வாங்கும் போது, ஒரு வேளை சிறுவனின் கையிலும் காயமிருந்து இரத்தம் கசியுமாயின், அந்த இரத்தத்தினூடாய் HIV பரவ வாய்ப்புள்ளது. அதே நேரம் டைப்பாயிட் போன்ற நோய்கள் இப்படி பரவ வாய்ப்புள்ளது.
ஐயம்; மருத்துவம் கற்றவர்களிடம், இவ்வாறு சம்பவிக்க சாத்தியம் உள்ளதா? தயவுசெய்து விளக்கவும்...
ஆனாலும், நண்பர்களே, தெருவோர கடைகளிலிருந்து உண்பதை தவிர்த்திடுங்கள் / கவனமாயிருங்கள். 'குறிப்பிட்டு குழந்தைகள் விடயத்தில்'
//மருத்துவர்கள் வியாபாரியை மருத்துவமனை கொண்டு சென்று சோதித்த பொழுது உறுதிசெய்கிறார்கள், 'அன்னாசி பழ வியாபாரிக்கும் எய்ட்ஸ்' அவர் கைகாயத்திலிருந்து இரத்தம் கசிந்து அன்னாசி பழத்தில் விழுந்திருக்கிறது, அந்த பழத்தை உண்ட அச்சிறுவனுக்கும் எய்ட்ஸ் பரவியிருக்கிறது.//
ReplyDeleteபடித்ததுமே பகீரென்றாகி விட்டது!!!
What is the source of this information? I believe it's a rumor.
ReplyDeleteஇதுபோல் சரியாக ஆராயாமல் தவறான தகவல்கள் பறப்புவர்களுக்கும் எயிட்ஸ் நெட் மூலம் பரவுதாம்!
ReplyDelete:(
ReplyDeleteஇவ்வாறு எய்ட்ஸ் பரவ சாத்தியங்கள் உள்ளன. சாதாரண்மாக எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவ வேண்டுமானால் எய்ட்ஸ் கிருமிகள் உள்ளவரிடமிருந்து உடல் திரவம் (குறைந்தது 0.05 மிலி) மற்றவருடைய உடலுக்குள் செல்ல வேண்டும். இந்த சம்பவத்தைப் பார்க்குமிடத்து, பையனுக்கு வாயிலோ, தொண்டையிலோ புண் ஏதும் இருந்திருக்க வேண்டும். அதன் வழியாக பழ வுயாபாரியின் கையிலிருந்து விழுந்த இரத்தம் சிறுவனின் உடலுக்குள் சென்றிருக்கலாம். உதட்டோடு உதடு முத்தம் கொடுப்பவர்களுக்குக் கூட இவ்வாறு எய்ட்ஸ் பரவ வாய்ப்புண்டு. ஆனால் இதுவரை அப்படி பரவியதாக நிருபிக்கப்படவில்லை.
ReplyDelete(பாம்பு கடித்த காயத்திலிருந்து விசத்தை வாய் வழியாக உறிஞ்சும் போது கூட வாயில் புண் இருந்தால் விசம் உறிஞ்சுபவரின் இரத்தத்தில் கலந்துவிடும் அபாயம் உண்டு.)
இவ்வாறு எய்ட்ஸ் பரவ சாத்தியங்கள் உள்ளன. சாதாரண்மாக எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவ வேண்டுமானால் எய்ட்ஸ் கிருமிகள் உள்ளவரிடமிருந்து உடல் திரவம் (குறைந்தது 0.05 மிலி) மற்றவருடைய உடலுக்குள் செல்ல வேண்டும். இந்த சம்பவத்தைப் பார்க்குமிடத்து, பையனுக்கு வாயிலோ, தொண்டையிலோ புண் ஏதும் இருந்திருக்க வேண்டும். அதன் வழியாக அல்லது பையனின் கையில எதாவது புண் இருந்து பழ வுயாபாரியின் கையிலிருந்து விழுந்த இரத்தம் சிறுவனின் உடலுக்குள் சென்றிருக்கலாம். உதட்டோடு உதடு முத்தம் கொடுப்பவர்களுக்குக் கூட இவ்வாறு எய்ட்ஸ் பரவ வாய்ப்புண்டு. ஆனால் இதுவரை அப்படி பரவியதாக நிருபிக்கப்படவில்லை.
ReplyDelete(பாம்பு கடித்த காயத்திலிருந்து விசத்தை வாய் வழியாக உறிஞ்சும் போது கூட வாயில் புண் இருந்தால் விசம் உறிஞ்சுபவரின் இரத்தத்தில் கலந்துவிடும் அபாயம் உண்டு.)
//குசும்பன் said...
ReplyDeleteஇதுபோல் சரியாக ஆராயாமல் தவறான தகவல்கள் பறப்புவர்களுக்கும் எயிட்ஸ் நெட் மூலம் பரவுதாம்!//
அதான்... குசும்பன் ங்றது...
நன்றி மருத்துவர் புருனோ ஐயா...
ReplyDelete// பையனுக்கு வாயிலோ, தொண்டையிலோ புண் ஏதும் இருந்திருக்க வேண்டும்.//
ReplyDeleteகையில் கூட புண் இருந்திருக்கலாம்
நான் எச் ஐ விக்கான சிறப்பு மருத்துவமனையில் மூன்று வருடங்களாக பணி புரிகிறேன் .எனக்கு தெரிந்த வரை இவ்வாறு நோய் பரவ வாய்ப்பில்லை .இந்த செய்தி அரைகுறையாக குழப்பம் விளைவிக்க மட்டுமே பரப்பப்பட்டு வருகிறது .இப்படிப்பட்ட தவறான செய்திகளால் இந்த நோய் பாதிப்பு உள்ளவர்களின் தினசரி வாழ்க்கையே நரகமாகி இருக்கிறது .
ReplyDeleteசிறுவனின் பெற்றோருக்கு நோய் இருக்கிறதா ?
இந்த பழம் தின்ற எத்தனை நாளில் பரிசோதனை செய்யப்பட்டது ?
அன்னாசி பழக்காரருக்கு பரிசோதனை செய்யும் உரிமையை இவர்களுக்கு கொடுத்தது யார் ?
இப்படி எத்தனை பேருக்கு இந்த சிறுவனுக்காக பரிசோதனை செய்திருக்கிறார்கள் ?
அந்த அன்னாசி பழக்கரருக்கு நோய் இருந்தது ஒரு கோ இந்ஸிடெந்ஸ் (co incidence ) மட்டுமே
http://www.noimuthalnaadi.blogspot.com/
//மருத்துவர்கள் வியாபாரியை மருத்துவமனை கொண்டு சென்று சோதித்த பொழுது உறுதிசெய்கிறார்கள், 'அன்னாசி பழ வியாபாரிக்கும் எய்ட்ஸ்' அவர் கைகாயத்திலிருந்து இரத்தம் கசிந்து அன்னாசி பழத்தில் விழுந்திருக்கிறது, அந்த பழத்தை உண்ட அச்சிறுவனுக்கும் எய்ட்ஸ் பரவியிருக்கிறது.//
ReplyDeleteஅச்சோ பகீர் தான் நல்ல பதிவு
நன்றி! தோழர் பனங்காட்டான், வருகைக்கும் விளக்கத்திற்கும் நன்றி!!!
ReplyDeleteநன்றி! தோழர் பூங்குழலி, வருகைக்கும் விளக்கத்திற்கும் நன்றி!!! மேற்சொன்ன சம்பவம் கட்டுக்கதையாய் இருந்தாலும், HIV பரவுவதற்கான சாத்தியக்கூறுகளை மருத்துவர் புருனோ ஐயாவும், தோழர் பனங்காட்டானும் தெளிவாக்கியிருக்கிறார்கள்.
நன்றி! தோழர் Suresh வருகைக்கு நன்றி!!!