Apr 16, 2009

மனிதநேய மக்கள் கட்சி - என்ன செய்ய வேண்டும்?

மனிதநேய மக்கள் கட்சி ‍ என்ன செய்ய வேண்டும் இனி?

தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் தனக்கு கொடுக்கப்பட்ட வக்ஃப் வாரிய பணியை செவ்வனே செய்தது. கோடிக்கணக்கான சொத்துக்கள் பறிமுதல் செய்தது மிகச்சிறந்த பணி எனலாம். அதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகத்தின் அரசியல் பிரிவான மனிதநேய மக்கள் கட்சி தொடங்கப்பட்டு, முதல் தேர்தலையும் சந்திக்கிறது. சவாலான தேர்தல் தான். திமுக கூட்டணியில் இருந்திருந்தால் இலகுவாக பதவி / அதிக ஓட்டுகள் கிடைத்திருக்கும். வெளியே வந்தாகிவிட்டது.

தனித்து போட்டி என்ற முடிவு தான் மனிதநேய மக்கள் கட்சிக்கு பெரும்பான்மை முஸ்லீம்களிடமும் மாற்று அரசியலை நோக்கி இருப்பவர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றுத்தந்துள்ளது. தமிழின தலைவனைக்காட்டி கையை பிடித்து கெஞ்சிய போதும் விட்டுக்குடுக்காத மனிதநேய மக்கள் கட்சி தலைவர்களின் (கொடுத்தால் ஒன்றுக்கு மேற்மட்ட தொகுதி) உறுதியை பாராட்டவேண்டும். இந்த பிப்ர‌வ‌ரியில் உத‌ய‌மான‌ க‌ட்சி குறுகிய‌ கால‌த்தில் சமூக ஜனநாயக முன்னணிக்கு த‌லைமை தாங்கும் நிலைக்கு உய‌ர்ந்துள்ள‌து பிர‌மிக்க‌வைக்கிற‌து.

தி மு க‌ கூட்ட‌ணியை விட்டு பிரிந்த‌த‌ற்கு த‌ன்னிலை விள‌க்க‌ம் கொடுத்துள்ளார்க‌ள். http://www.tmmk.in/news/999356.htm

(ஒரு தொகுதி வாங்கி தி மு க கூட்டணியில் சேர்ந்திருந்தாலும் த‌ன்னிலை விள‌க்கம் கொடுத்திருப்பார்கள் என்பது வேறு விடயம்) காரணம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும்,

வெகுசன அரசியலில் வெற்றிபெற இப்பொழுது மனிதநேய மக்கள் கட்சி செய்ய‌வேண்டியது:

1. வாக்கு அர‌சிய‌ல் செய்ய‌ வெண்டும்

2. முய‌லுக்கு மூன்று காலென்றிருக்கும் பி.ஜைனுலாபுதீனுட‌ன் ச‌மாதான‌ பேச்சு ந‌டத்துவதன் மூலம் மனிதநேய மக்கள் கட்சிக்கு தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத்தின் ஆத‌ர‌வு திர‌ட்ட‌ வேண்டும். குறைந்த‌ப‌ட்ச‌ம் மனிதநேய மக்கள் கட்சிக்கு எதிராய் ப‌ணியாற்றுவ‌திலிருந்து அவ‌ர்க‌ளை வில‌கியிருக்க‌ச்சொல்ல‌லாம். பி ஜெ வுக்கென‌ ஒரு ர‌சிக‌ர் கூட்டம் (வாய்ச்சொல் வீரர்கள்) இருப்ப‌து ம‌றுக்க‌ முடியாதது.

3. ஜமாத்தே இஸ்லாமியுட‌னும் பேச்சு வார்த்தை ந‌ட‌த்த‌லாம். அவ‌ர்களுக்கு இராமநாதபுர சுற்று வட்டார மற்றும் பரவலான தென் மாவட்ட கிராமங்களில் வெளியில் திரியாத‌ மக்கள் செல்வாக்கு உள்ளது. 67 வருட பழமை வாய்ந்த ஜமாத்தே இஸ்லாமியும் த‌னிக்க‌ட்சி தொட‌ங்கும் நிலையில் இருப்ப‌தால், ஒரு முன்னோட்ட‌மாக‌ ஆத‌ர‌வு த‌ர‌ வாய்ப்பு அதிக‌ம். கேரளாவிலும் 18 தொகுதிகளில் LDF க்கு ஆதரவு, ஆந்திராவில் 37 நாடாளுமன்ற மற்றும் 267 சட்டமன்ற தொகுதிகளில் காங்கிரசுக்கும் குக்க‌ட்ப‌ல்லியில் லோக் ச‌ட்டா பார்ட்டி வேட்பாள‌ர் ஜெய‌ப்ர‌காஷ் நாராய‌ன‌னுக்கும் ஜமாத்தே இஸ்லாமி அதிகார‌ பூர்வ‌ ஆத‌ர‌வு தெரிவித்துள்ள‌து குறிப்பிட‌த்த‌க்க‌து.

4. S.M.பாக்கர். தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத்திலிருந்து பிரிந்து வந்த இவர், இந்திய தவ்ஹீத் ஜமாத் என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கியுள்ளார். இங்கு ஆள் பலம் குறைவு என்றாலும், ஊடக பலம் கிட்டும்.

5. ஜமாத்துகளில் தனது நிலைப்பாட்டை எடுத்து கூறுதல் மூலம், வேறு யாருக்கும் கிடைத்திராத மிகச்சிறந்த பிரச்சாரமான வெள்ளி மேடையை பயன்படுத்தலாம்.

இதெல்லாவற்றையும் விட களப்பணி மிக முக்கியம். களப்பணிக்கு சற்றும் களைத்தவர்கள் அல்லர் த மு மு க தொண்டர்கள்!!! இந்த சொல்லை நிரூபிக்க அவர்களுக்கு நேரம் வந்துவிட்டது.

என்ன செய்யப்போகிறது மனிதநேய மக்கள் கட்சி? பொறுத்திருந்து பார்ப்போம்!!!

தொகுதிவாரியான அலசல் அடுத்த பதிவில் எழுதப்படலாம்... உங்கள் ஆதரவு இதற்கிருந்தால்...

2 comments:

  1. பிஜே வுக்கு கட்சி அரசியல் பிடிக்கவில்லை என்றால் விலகி நிற்க வேண்டியதுதானே? திமுக வின் நடிகருக்கு இராமநாதபுரத்தில் ஓட்டு கேட்பார்களாம். தமுமுக வின் ஸலீமுல்லாஹ் வுக்கு எதிராக பிரசாரம் செய்வார்களாம். முஸ்லிம்களுக்கு எதிராக பிஜேபி யின் அத்வானி மோடி எல்லாம் தேவையில்லை.பிஜே குரூப் ஒன்றே போதும். அல்லாஹ்தான் இவர்களுக்கு நேர்வழியை தரனும்.

    ReplyDelete

மனம் திறந்து செதுக்குங்கள், என் எழுத்துக்களை.