Apr 22, 2009

பதிவுலகினர்காக - நயந்தாராவும் ஞானும் இன்னபிறவும் :)

நயந்தாராவும் ஞானும் இன்னபிறவும் :)

நயந்தாரா - அறிமுகம் தேவையில்ல, அதனால அத பத்தி அடுத்த பத்தில பார்ப்போம்,

ஞான் - அதாங்க நான் றத மலையாளத்தில அப்டிதான சொல்றாங்ஞ... அதாவது என்னையபத்தி இரண்டாவது பத்தி.

இன்னபிற - அதென்ன இன்னபிற, இன்னாபிற? எல்லா பதிவுலக பிரபலங்கலும் இந்த தலைப்பை வச்சு பதிவு போட்டாச்சு. அப்டினா? இந்த இன்னபிறவ தலைப்புல போட்டாத்தான்

எங்க கடைலயும் கூட்டம் சேரும்னா...

சரக்கு விக்கும்னா...

ஹிட்ஸ் வாங்க முடியும்னா...

சூடான இடுகைல வர முடியும்னா...

பிரபலமாக முடியும்னா… (ஐ சொல்லியாச்சு)

தமிழில் பத்து கோடி ஹிட்டுகளை கடந்த முதல் தனிநபர் வலைப்பூவை மேய்ந்துக் கொண்டிருக்கிறீர்கள்! ன்னு நோட் போட முடியும்னா...

இன்னபிற முடியும்னா... முடியும்னா... முடியும்னா...

நானும் ஆட்டத்துக்கு ரெடி... (ஸ்..ஸ்.. அப்பா...இப்பவே... மூச்சு முட்டுதே)

இன்னுமொரு இன்னபிற - என் மனைவி குவைத் வரும்வரை நிறுவன வதிவிடத்தில் காலந்தள்ளிய போது மலையாளம் சம்சாரிக்காம்படிச்சு (அட.. பேச கத்துக்கிட்டேங்க). ஐந்து மாதம் முன்பு மனைவியும் மூன்றுமாத ஃபர்ஹானும் குவைத் வந்தபோது நானும் ஒரு ஃப்ளாட் எடுக்க வேண்டியதாப்போச்சு.

எங்க ஃப்ளாட்டுக்கு பக்கத்து ஃப்ளாட்ல ஒரு மலையாள பெண் கணவனுடன் தங்கியிருந்தாள். அவனுக்கு தமிழ் தெரியாது, மலையாளமும் ஹிந்தியும் தெரியும். எனக்கு தமிழ், மலையாளம், ஹிந்தி மற்றும் இன்ன பிறவும் தெரியும். (நம்ம பெருமைய நாமதான் சொல்லணும், கடைல வியாபாரம் சூடுபிடிக்கும் வரை)

நான் அவர்களை அறிமுகப்படுத்துவதற்காக அவர்களுடைய ஃப்ளாட்டிற்கு என் மனைவியை அழைத்துச்சென்றேன். அங்கு இவள் பேசும் தமிழ் அவளுக்கு விளங்கவில்லை, அவளது மலையாளம் இவளுக்கு விளங்கவில்லை, நான்தான் இருவருக்கும் மொழிபெயர்பாளனாக இருக்க வேண்டியதாயிற்று. இவளது மொழியை அவளுக்கும், அவளது மொழியை இவளுக்குமாய் பெயர்த்துக்கொண்டிருந்தேன். இதைச்சொல்லியே ஆக வேண்டும், (மரபு) கேரளா பெண்கள் இயற்கையிலேயே அழகும் அனைவரிடமும் தன்மையாய் சிரித்து பேசும் தன்மையும் கொண்டவர்கள். சிறிது நேரத்தில் அவளின் கேள்விக்கான என் மனைவியின் பதிலையும் நானே நேரடியாய் சொல்ல ஆரம்பித்துவிட்டேன். விளைவு???

நிற்க...

இது ஞான் -

இப்பவே... கண்ணகெட்டுதே...

ஞானும், நயந்தாராவும் நாளை.... என்ன சொல்றீங்க?

4 comments:

  1. இப்ப என்னதான் சொல்ல வர்றீங்க? நயன் படத்த போட்டு ஹிட்ஸ் வாங்கிக்கிறேன்றீங்களா?

    ReplyDelete
  2. வாங்க பப்பு, கொஞ்சம் காத்திருங்க... நயன்தாரா படத்தை ஏன் போட்டேன்னு சொல்றேன்.

    ReplyDelete
  3. தொடரும் போட்டுட்டீங்களே பாசு.. மலையாள பிகர்கிட்ட மொக்கை போட்டதுக்கு உங்க ஆத்துக்கார அம்மா குத்துன கும்மாங்குத்தை எல்லாம் சென்சார் பண்ணாம போடுங்க ராசா.. அப்புறம் அந்த நயன் மேட்டர சீக்ரமா அவுத்து விடுங்க..

    ReplyDelete
  4. இன்னோர் இன்னபிற இருக்கு தெரியுமா ராசா?

    கேரளான்னாலே நயன் கிடயாது..!
    அசின். பாவனா, கோபிகான்னு ஏகப்பட்ட எக்ஸ்ட்ரா இன்னபிற இருக்கு..!

    ReplyDelete

மனம் திறந்து செதுக்குங்கள், என் எழுத்துக்களை.