1.நீங்க விருந்துக்கோ கல்யாணத்துக்கோ போறீங்க; ஒரு அழகான வசீகரமான பொண்ண பாக்கறிங்க, நேரா அவள்ட போய் , "நான் பணக்காரன், என்னை கல்யாணம் பண்ணிக்கிரியா? " - நேரடி சந்தைப்படுத்துதல்(Direct Marketing) 2.நீங்க கூட்டமா பசங்களோட விருந்துக்கோ கல்யாணத்துக்கோ போறீங்க; ஒரு அழகான வசீகரமான பொண்ண பாக்கறிங்க, நம்ம பசங்கள்ள யாராவது ஒருத்தன் அவள்ட போய், " இவண் பணக்காரன், கல்யாணம் பண்ணிக்கோ" - விளம்பரம் (Advertising)
3.நீங்க விருந்துக்கோ கல்யாணத்துக்கோ போறீங்க; ஒரு அழகான வசீகரமான பொண்ண பாக்கறிங்க, நேரா அவள்ட போய் (அல்லது அவளோட தோழிகளிடம்) அவளுடைய தொலைபேசி எண் வாங்கிட்டு அடுத்தநாள் தொலைபேசியில் அழைத்து,"நான் பணக்காரன், என்னை கல்யாணம் பண்ணிக்கிரியா?" - தொலைபேசி வழி சந்தைப்படுத்துதல் (Telemarketing) 4.நீங்க விருந்துக்கோ கல்யாணத்துக்கோ போறீங்க; ஒரு அழகான வசீகரமான பொண்ண பாக்கறிங்க, எழுந்து நின்று சட்டையை சரி பண்ணிவிட்டு அவளுக்கு சாம்பார் ரசம் மோர் ஊத்தி, நான் வேணா வண்டில கொண்டு போய் உங்க வீட்ல விடட்டுமா? (Offer) வண்டில போகும் போது,"ம்ம்.. ம்ம்.. "நான் பணக்காரன், என்னை கல்யாணம் பண்ணிக்கிரியா? " - பொதுமக்கள் தொடர்பு (Public Relations) 5.நீங்க விருந்துக்கோ கல்யாணத்துக்கோ போறீங்க; ஒரு அழகான வசீகரமான பொண்ணு உங்கள பாக்குறா. நேரா உங்கள்ட்ட வந்து," நீ பணக்காரன், என்னை கல்யாணம் பண்ணிக்கிரியா? " - வர்த்தக குறி அறிதல் (Brand Recognition) 6.நீங்க விருந்துக்கோ கல்யாணத்துக்கோ போறீங்க; ஒரு அழகான வசீகரமான பொண்ண பாக்கறிங்க, நேரா அவள்ட போய் , "நான் பணக்காரன், என்னை கல்யாணம் பண்ணிக்கிரியா?..... அவள் உடனே உங்கள் கன்னத்தில் செருப்பால் அடித்தால் - வாடிக்கையாளர் பின்ஊட்டு (Customer Feedback) 7.நீங்க விருந்துக்கோ கல்யாணத்துக்கோ போறீங்க; ஒரு அழகான வசீகரமான பொண்ண பாக்கறிங்க, நேரா அவள்ட போய் , "நான் பணக்காரன், என்னை கல்யாணம் பண்ணிக்கிரியா?..... அவள் தனது கணவனை உங்களுக்கு அறிமுக படுத்துகிறாள் - கிராக்கி மற்றும் விநியோக இடைவெளி (demand and supply gap) 8.நீங்க விருந்துக்கோ கல்யாணத்துக்கோ போறீங்க; ஒரு அழகான வசீகரமான பொண்ண பாக்கறிங்க, நேரா அவள்ட போய், ஏதும் சொல்றதுக்கு முன்னாடியே, வேறொருத்தன் வந்து, "நான் பணக்காரன், என்னை கல்யாணம் பண்ணிக்கிரியா? ன்னு கேக்குறான், அவளும் அவனுடனேயே போய்விட்டால்..." - போட்டி உங்கள் சந்தைப்பங்கை சாப்பிடுகிறது (competition eating into your market share) 9.நீங்க விருந்துக்கோ கல்யாணத்துக்கோ போறீங்க; ஒரு அழகான வசீகரமான பொண்ண பாக்கறிங்க, நேரா அவள்ட போய் , "நான் பணக்காரன், என்னை கல்யாணம் பண்ணிக்கிரியா? " அப்டின்னு சொல்றிங்க... உங்க மனைவி வர்றாங்க. - புதிய சந்தைக்குள் நுழைய கட்டுப்பாடு (That's restriction for entering new markets)
கலக்குறீங்களே பாசு..
ReplyDeleteம்ம்ம்..அடிச்சு ஆடுங்க..!
நம்ம பக்கமும் அடிக்கடி வந்து போங்க!
ரொம்ப சூப்பர் பீர்.. ரொம்ப நல்லாருக்கு
ReplyDeleteஇந்த வேர்ட் வெரிபிகேஷனை தூக்கிருங்க
வருகைக்கு ரொம்ப நன்றி Cable Sankar அண்ணே, வேர்ட் வெரிபிகேஷனை தூக்கிட்டேன்.
ReplyDeleteஅடிக்கடி நம்ம பக்கம் எட்டி பார்த்து இந்த மாதிரி ஏதாவது சொல்லி/கொட்டி தேத்தி விடுங்கண்ணே...
நன்றி டக்ளஸ்.......
ReplyDelete