வர வர கைப்புள்ளயோட அலப்பர ஏரியாக்குள்ள தாங்க முடியாம போச்சு. எப்ப பார்த்தாலும் நாங்க போகாத ஊரில்ல பார்க்காத ஆள் இல்ல. திருப்பரங்குன்றம், திருமங்கலம்....... இந்த ரேஞ்சுக்கு நாங்கல்லா...அ..அ..அ... ன்னு அழிம்பு பண்ணிக்கிட்டிருந்துச்சு. லேட்டஸ்டா...இப்ப, அரசியல் ஆர்வம் வேற வந்துடுச்சா?, டேய்... நேத்து வந்த பயபுள்ள, காச காட்டி சீட்ட வாங்கிபுட்டான். நாம பரம்பர பரம்பரயா.. கட்சிக்கு உயிர குடுத்துக்கிட்ருக்கோம். வட்டத்ல கூட ஒரு பதவி தர மாட்டேங்கிராய்ங்க......
உடனே கைப்புள்ளயோட கையாள் வாலு, 'தல...( காதுக்குள்ள ) ஒனக்கு ஏது தல பரம்பரல்லாம்? (சத்தமா) நீ ஒரு வார்த்த சொல்லு தல... அவன உண்டு இல்லனு பண்ணிருவோம்..'
"ஆமா.. போங்கடா...டுபுக்குகளா..., ஆள பாத்தா.. நல்லவன் மாதிரியேயேயே தெரியிராய்ங்க..ஆனா உடம்பெல்லாம் வெசம். அவன்ட போய்.. என்னய போட்டு குடுத்து, கறவ மாடும் பத்தாயிரமு வாங்றதுக்கு... _____ மூடிட்டு போங்கடா... எங்கொய்யால."
'தல சூடாயிடுச்சு... பக்கத்ல யாரும் நிக்காத... கூட்டம் போடாத.. போ...போ...போய்ட்டேரு.....'
அந்த நேரம் பாத்து...நம்ம கைப்புள்ளயோட தல, மதுர சிங்கம் 'கஞ்சா கெஞ்சன்', ஸ்கார்பியோல வர்ராப்டி. "டேய்ய்ய்ய்.... என்னடா... இங்க... சத்தம்..."
'அண்ணே... ஒண்ணுமில்லண்ணே... நீங்க போங்கண்ணே... நா பாத்துக்கிறேண்ணே... டாய்....எவன்டா... சத்தம் போட்டது..... ' இது நம்ம தல.
உடனே வாலு தலட்ட, 'தல நீதான் சவுன்டு குடுத்தன்னு ஒத்துக்க தல, என்ன செஞ்சிடுவாங்ஞனு பாத்துடுவோம்' 'அண்ணே எங்க தலதான்ணே 'நாங்க போகாத ஊரில்ல... பார்க்காத ஆள் இல்ல' னு சவுன்டு குடுத்தது, இப்ப என்னாங்குறீங்க?' என எகிற...
கைப்புள்ள மனசுக்குள்ள, 'அட வென்றுகளா..... இப்பிடி மாட்டிவிட்டுட்டாங்ஞ..."
உடனே பெரிய தல கோவமாயிட்டாப்டி, நம்ம கைப்புள்ளய பார்த்து, ' ங்கொய்யால...வாடா இங்க.... பெரிய இவனா நீ.... ஒனக்கு யார்ரா தெரியும், சொல்ரா..., சாருக்கான் தெரியுமாடா?
நம்ம கைப்புள்ளக்கி தேட்டர்ல விக்ற 'பாப்கான' விட்டா வேற எந்த கானயும் தெரியாது.
கைப்புள்ள பதில் சொல்றதுக்கு முன்னாடி வாலு உள்ள வந்துட்சு, ' எங்க தலக்கி ச்சார்கான்லருந்து பாப்கான் வரக்கும் எல்லா கானையு தெரியும்' அந்த கான்ட போய் தல பேர சொல்லிபாருண்ணே, பயந்து நடுங்குவாப்டி'
'சர்ரா... கெளம்புடா எ கூட... இப்பவே சாருக்கான போய் பாப்போம்.'
'அண்ணே... வேணாணே...அண்ணே... அண்ணே... ஓடியடையாதுண்ணே... அண்ணே...
எனக்கு யாரையு தெரியாதுண்ணே...'
அப்பறம் என்னாச்சுனு.. கைபுள்ளய ஃபாலோ நாளைக்கு சொல்றேங்க...
இரண்டாம் பாகத்தை வாசிக்க இங்கே சொடுக்கவும்
No comments:
Post a Comment
மனம் திறந்து செதுக்குங்கள், என் எழுத்துக்களை.