Apr 24, 2009

உங்கள் பதில் என்ன? ஹெச். ஆர். கேள்விகள்

. 23-04-2009 தமிழக அரசு வெற்றிகர வேலை நிறுத்தத்தின் போது, நீங்கள் தனியாக இரு இருக்கை மகிழுந்தை ஓட்டிச்செல்கிறீர்கள். வழியில் ஒரு பேருந்து நிறுத்தத்தில்,

1. ஒரு வயதான பெண், தற்சமயம் முதலுதவி கிட்டவில்லை என்றால்... இறந்துவிடும் தறுவாயில்.

2. ஒரு பழைய நண்பன், முன்பொரு முறை உங்கள் உயிரைக்காத்தவன்.

3. ஒரு பதின்வயது பெண், நீங்கள் இவ்வளவு நாளாக தேடிக்கொண்டிருந்த உங்களுக்கான வாழ்க்கைத்துணை.

மூவரும் நின்றுகொண்டிருக்கிறார்கள்

உங்கள் வாகனத்தில் இன்னும் ஒருவருக்கே இடமுள்ள நிலையில், நீங்கள் யாரை தேர்ந்தெடுப்பீர்கள்?

1. சாகக்கிடக்கும் வயதான பெண்னை ஏற்றிச்சென்றால், ஓர் உயிரைக்காத்த புண்ணியம் கிட்டும்.

2. பழைய நண்பன், சந்தேகமில்லாமல், உங்கள் உயிரைக்காத்தவனுக்கு நன்றிக்கடன் தீர்க்கவேண்டிய சந்தர்ப்பம் இதுதான்.

3. எப்படியிருந்தாலும் உங்களுக்கான சரியான வாழ்க்கைத்துணையை தேர்ந்தெடுக்க இதைவிட்டால் வேறு சந்தர்பம் கிட்டாது.

இருநூறு பேரிலிருந்து ஒருவனாய் நிறுவனத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டவன் சொன்ன விடை என்ன தெரியுமா?

வாகனச்சாவியை பழைய நண்பனிடம் கொடுத்து, வயதான பெண்னை அருகிலிருக்கும் மருத்துவமனையில் விடச்சொல்லுவேன், நான் எனது வாழ்க்கைத்துணையுடன் பேருந்திற்காக காத்திருப்பேன்.

சில நேரங்களில், வரட்டு பிடிவாத எண்ணங்களை விட்டுக்கொடுத்தலும் நன்மை பயக்கும்.

; நான் உனது சகோதரியுடன் ஓடிப்போய்விட்டால், என்ன செய்வாய்?

தேர்ந்தெடுக்கப்பட்டவன் சொன்ன விடை; 'உங்களைவிட சிறந்த வாழ்க்கைத்துணை எனது சகோதரிக்கு கிட்டாது ஐயா...'

; (மாணவியிடம்) ஒருநாள் காலையில் எழும்போது, நீ கருவுற்றிருப்பதை உணர்கிறாய், சொல் என்ன செய்வாய்?

அன்றைய தினத்தை மிகவும் மகிழ்ச்சியாக விடுமுறை எடுத்துவிட்டு, எனது கணவனுடன் கொண்டாடச்செல்வேன்.

கேள்வியை ஏன் தவறான கண்ணோட்டத்தில் அணுக வேண்டும்? இது, திருமணமான பிறகு அவளிடம் கேட்கப்படுவதாய் எடுத்துக்கொள்ளலாமே?

; தேர்வாளர் ஒரு காபி வரவழைத்து, உங்களுக்கு முன்பாக வைக்கிறார், கேள்வி ஆங்கிலத்தில் கேட்கப்படுகிறது, 'உனக்கு முன்னால் என்ன வைக்கப்பட்டுள்ளது?'

'டீ' என்று சொன்னவன் தேர்வு செய்யப்பட்டான். ஏன்?

ஆங்கிலத்தில், "U" என்ற அச்சரத்திற்கு முன்னால் வருவது "T" என்ற அச்சரம்.

; ராமபிரான் தனது முதல் தீபாவளியை எந்த இடத்தில் கொண்டாடியிருப்பார்?

சாதாரணமாக நமக்கு குழப்புவது அயோத்தியா? மிதிலையா? இலங்கையா? (ஐயோ.. சொல்லலாம்ல?) என்று...

ஆனால் உண்மையில் தீபாவளி கொண்டாடப்படுவது, "யுவகிருஷ்ணன்" நரகாசுரனை கொன்றதற்காகவே...

தசாவதாரத்தில், ராமாவதாரத்திற்கு பிறகே கிருஷ்ணாவதாரம் வருகிறது. எனவே ராமபிரான் தீபாவளி கொண்டாடியிருக்க முடியாது.

; கடைசி கேள்வியை கேட்கிறார், இந்த மேசையின் நடுப்பகுதி எது?

தேர்வானவன் ஒரு இடத்தில் தோராயமாக கை வைத்துச்சொல்கிறான் ,'இது தான் நடுப்பகுதி' என்று.

தேர்வாளர் கேட்கிறார், 'எப்படிச்சொல்கிறாய்'

'ஐயா, இதற்கு முந்தைய கேள்விதானே கடைசிக்கேள்வி என்றீர்கள்?"

Chill: இது மாதிரியான பதில்களையே தேர்வாளர்கள், தேர்வு செய்யப்படவேண்டியவர்களிடம் எதிர்பார்க்கிறார்கள் (நான் உட்பட...நீ எப்படா..............ன்னு கேக்காதீங்க..... கேள்விப்பட்டதில்லையா? Every dog has a day…நமக்கும் அந்த day வராமயா போயிடும், அடடே.... )

'கட்டத்திற்கு வெளியேயும் சிந்தியுங்கள்'

அன்பார்ந்த வாக்காள பெருங்குடிமக்களே..

ஒங்க பொன்னான வாக்குகள்ல ஒண்ண எனக்கும் க்ளிக்குங்க......

5 comments:

 1. nalla thanya yosikiranga!!!!

  ReplyDelete
 2. ஏம்பு, எம்புட்டு நாளைக்கு இதே பதிலை சொல்லுறது?!!!

  ReplyDelete
 3. \\ராமபிரான் தனது முதல் தீபாவளியை எந்த இடத்தில் கொண்டாடியிருப்பார்?
  சாதாரணமாக நமக்கு குழப்புவது அயோத்தியா? மிதிலையா? இலங்கையா? (ஐயோ.. சொல்லலாம்ல?) என்று...
  ஆனால் உண்மையில் தீபாவளி கொண்டாடப்படுவது, "யுவகிருஷ்ணன்" நரகாசுரனை கொன்றதற்காகவே...
  தசாவதாரத்தில், ராமாவதாரத்திற்கு பிறகே கிருஷ்ணாவதாரம் வருகிறது. எனவே ராமபிரான் தீபாவளி கொண்டாடியிருக்க முடியாது.\\

  யோவ்... நேத்து நைட்டு குவைத்துல‌ "பிரியமான தோழி" படம் போட்டாங்களா...?

  ReplyDelete
 4. Engg collegeல இருக்குறதால இதுல ஒரு சில தெரியும் நண்பா.. சுவாரசியமான பதிவு

  ReplyDelete
 5. //madura sen said...
  nalla thanya yosikiranga!!!!//

  வாங்க madura sen,

  //ஊர் சுற்றி said...
  ஏம்பு, எம்புட்டு நாளைக்கு இதே பதிலை சொல்லுறது?!!!//

  எம்புட்டு நாளைக்கு இதே கேள்விய கேக்குறாங்ஞலோ அம்புட்டு நாளைக்கு

  //டக்ளஸ்....... said...
  யோவ்... நேத்து நைட்டு குவைத்துல‌ "பிரியமான தோழி" படம் போட்டாங்களா...?//

  டக்ளஸ்.......நான் அதிகமாக படம்பார்ப்பது இல்லை

  //கார்த்திகைப் பாண்டியன் said...
  Engg collegeல இருக்குறதால இதுல ஒரு சில தெரியும் நண்பா.. சுவாரசியமான பதிவு//

  நன்றி கார்த்திகைப் பாண்டியன், இப்போ எங்க இருக்கீங்க?

  ReplyDelete

மனம் திறந்து செதுக்குங்கள், என் எழுத்துக்களை.