Apr 13, 2009

சந்தைப்படுத்துதலில் வகைகள்... 9 முக்கிய குறிப்புகள்!

அதே பழைய சோறு தான், புது பாத்திரத்தில் (யூத் ஃபுல் விகடன் டாட் காமில் )வெளியாகியுள்ளது. இங்கே மீண்டும் பதிக்கிறேன்.

http://youthful.vikatan.com/youth/peermohamadarticle13042009.asp

1. நீங்க விருந்துக்கோ கல்யாணத்துக்கோ போறீங்க; ஓர் அழகான வசீகரமான பொண்ண பாக்கறிங்க, நேரா அவள்ட போய், "நான் நல்லவன்.. பணக்காரன்.. என்னை கல்யாணம் பண்ணிக்கிறியா?"-ன்னு கேட்கறீங்க.

- இது நேரடி சந்தைப்படுத்துதல் (Direct Marketing)

-----------------------------------------------------------------------------------

2. நீங்க கூட்டமா பசங்களோட விருந்துக்கோ கல்யாணத்துக்கோ போறீங்க; ஒரு அழகான வசீகரமான பொண்ண பாக்கறிங்க, நம்ம பசங்கள்ள யாராவது ஒருத்தன் அவள்ட போய், "இவன் நல்லவன்.. பணக்காரன்.. கல்யாணம் பண்ணிக்கோ"-ன்னு சொல்றாங்க.

- விளம்பரம் (Advertising)

-----------------------------------------------------------------------------------

3. நீங்க விருந்துக்கோ கல்யாணத்துக்கோ போறீங்க; ஒரு அழகான வசீகரமான பொண்ண பாக்கறிங்க, நேரா அவள்ட போய் (அல்லது அவளோட தோழிகளிடம்) அவளுடைய தொலைபேசி எண் வாங்கிட்டு அடுத்தநாள் தொலைபேசியில் அழைத்து, "நான் நல்லவன்.. பணக்காரன்.. கல்யாணம் பண்ணிக்கிறியா?"-ன்னு கேட்கறீங்க.

- தொலைபேசி வழி சந்தைப்படுத்துதல் (Telemarketing)

-----------------------------------------------------------------------------------

4. நீங்க விருந்துக்கோ கல்யாணத்துக்கோ போறீங்க; ஒரு அழகான வசீகரமான பொண்ண பாக்கறிங்க, எழுந்து நின்று சட்டையை சரி பண்ணிவிட்டு அவளுக்கு சாம்பார் ரசம் மோர் ஊத்தி, நான் வேணா வண்டில கொண்டு போய் உங்க வீட்ல விடட்டுமா? (Offer) வண்டில போகும் போது, "ம்ம்.. ம்ம்.. நான் நல்லவன்.. பணக்காரன்.. என்னை கல்யாணம் பண்ணிக்கிறியா?"-ன்னு கேட்கறீங்க.

- பொதுமக்கள் தொடர்பு (Public Relations)

-----------------------------------------------------------------------------------

5. நீங்க விருந்துக்கோ கல்யாணத்துக்கோ போறீங்க; ஒரு அழகான வசீகரமான பொண்ணு உங்கள பாக்குறா. நேரா உங்கள்ட்ட வந்து, "நீ நல்லவன்.. பணக்காரன்.. என்னை கல்யாணம் பண்ணிக்கிறியா?-ன்னு கேட்கறாங்க.

- வர்த்தக குறி அறிதல் (Brand Recognition)

-----------------------------------------------------------------------------------

6. நீங்க விருந்துக்கோ கல்யாணத்துக்கோ போறீங்க; ஒரு அழகான வசீகரமான பொண்ண பாக்கறிங்க, நேரா அவள்ட போய்,"நான் நல்லவன்.. பணக்காரன்.. என்னை கல்யாணம் பண்ணிக்கிறியா?"-ன்னு கேட்கறீங்க. அவங்க உடனே உங்கள் கன்னத்தில் செருப்பால் அடித்தால்...

- வாடிக்கையாளர் பின்னூட்டம் (Customer Feedback)

-----------------------------------------------------------------------------------

7. நீங்க விருந்துக்கோ கல்யாணத்துக்கோ போறீங்க; ஒரு அழகான வசீகரமான பொண்ண பாக்கறிங்க, நேரா அவள்ட போய், "நான் நல்லவன்... பணக்காரன்... என்னை கல்யாணம் பண்ணிக்கிறியா?"-ன்னு கேட்கறீங்க. அவள் தனது கணவனை உங்களுக்கு அறிமுகபடுத்துகிறாள்.

- தேவை மற்றும் விநியோக இடைவெளி (demand and supply gap)

-----------------------------------------------------------------------------------

8. நீங்க விருந்துக்கோ கல்யாணத்துக்கோ போறீங்க; ஒரு அழகான வசீகரமான பொண்ண பாக்கறிங்க, நேரா அவள்ட போய், ஏதும் சொல்றதுக்கு முன்னாடியே, வேறொருத்தன் வந்து, "நான் நல்லவன்... பணக்காரன்... என்னை கல்யாணம் பண்ணிக்கிறியா?"-ன்னு கேக்குறான். அவளும் அவனுடனேயே போய்விட்டால்...

- போட்டி உங்கள் சந்தைப் பங்கை சாப்பிடுகிறது (competition eating into your market share)

-----------------------------------------------------------------------------------

9. நீங்க விருந்துக்கோ கல்யாணத்துக்கோ போறீங்க; ஒரு அழகான வசீகரமான பொண்ண பாக்கறிங்க, நேரா அவள்ட போய், "நான் நல்லவன்... பணக்காரன்... என்னை கல்யாணம் பண்ணிக்கிறியா?"-ன்னு சொல்றீங்க. அப்ப உங்க மனைவி வர்றாங்க...

- புதிய சந்தைக்குள் நுழைய கட்டுப்பாடு (That's restriction for entering new markets)

5 comments:

  1. demand and supply gap - Simply superb!!!

    ReplyDelete
  2. ''நீங்க விருந்துக்கோ கல்யாணத்துக்கோ போறீங்க; ஒரு அழகான வசீகரமான பொண்ண பாக்கறிங்க, நேரா அவள்ட போய்,"நான் நல்லவன்.. பணக்காரன்.. என்னை கல்யாணம் பண்ணிக்கிறியா?"-ன்னு கேட்கறீங்க. அவங்க உடனே உங்கள் கன்னத்தில் செருப்பால் அடித்தால்...''
    (Customer Feedback)
    Samey Addi..... kalakitinga

    ReplyDelete
  3. kalaikitinga ponga maduraina madura than

    ReplyDelete

மனம் திறந்து செதுக்குங்கள், என் எழுத்துக்களை.