Aug 3, 2009

வெண் பாவம்

எண்ணிச் செய்யலம்மா கன்னி முயற்சியம்மா மன்னிப்பது ஐயம்மா பாராமாத்மா?

<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>

ஒன்னால நான் கெட்டேன் என்னால நீ கெட்ட – ஆனது ஆகிப்போச்சு ஓடிப்போயி ரெண்டு பேரும் ஒண்ணா வாழாத... பின்ன,

காதலிச்ச உன்ன அங்க கைவிட்டு வந்தா இங்க காக்கா குருவி கூட காறிதுப்பி கதக்கிதடி கண்கலங்காம அவள காப்பாத்த வக்கில்ல கணக்கெழுத வந்திட்டானாம் - கம்பனாட்டம் இவன் கம்ப்யூட்டர் முன்னால தூ.

<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>

ஊரெல்லாம் சொத்து நீ சேக்கற நாளெல்லாம் செத்து நான் பொழைக்கிறேன் ஏசி காத்தில நீ உறங்கற - தூக்கமில்லா என்னை தூசு கட்டில்ல பார்.

<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>

பானைல இருக்கற பாயாசம் ஊத்துன்னா… ஏனையா ஒமக்கு இந்த அவசரம், பேசாம இருமையா மிஞ்சினா பாப்போங்கறா - தவிச்ச என் வாய்ல தண்ணி கொஞ்சம் காணிச்சாக்கா - பிரிச் தண்ணி பையனுக்கு வேணுங்கறா.

<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>

ஆத்திகரா நாத்திகரா அதுதான் மீண்டும் அனைவருக்கும் சந்தேகம் - அறிந்தது நான் நாத்திகம் பேசும் ஆத்திகர் அவர் என - தெரிந்தாலும் அண்ணன் கோ ச்சுக்க மாட்டார்.

<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>

கம்பனின் காதலை கண்ணியமாய் சொல்லி கண்முன் காட்டினான் கார்பரேட் கவிஞன் விளையாட்டாய் சிலர் விரித்த வீம்பு வலையில் விழாமல் விரட்டி - விட்டான் திரட்டி

<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>

கதைகள் சில பின்னினான் கின் என்ற பையன் அவைகள் பல கண்களுக்கு பலாதென் தெரிய ஒவ்வொன்றாய் எடுத்துச்சொல்லி அவ்வாறே அவன் வினவ - அவ்விதழ் அவதானிப்பு அங்கணம் - அதனால்நான் ஆக்கினேன் அங்ஙனம் - அதுதான் எமக்கிருந்த அக்குத்து - நீ கொஞ்சம் அப்டிகா ஒத்து மாமேன்னான் - நீலர் ஆட்டமாடும் நம் வாலிபகண்ணன்.

<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>

பிரபல பதிவர் அவர் - எவருக்கும் பிறர் பலம் பாராது பின்னூட்டார் - அவருக்கும் பின்னாளிட்டார் ஆப்பு யார்?

<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>

சத்தியமா நான் பத்தாப்பு தாண்டலப்பு சந்திச்ச பத்தியில ஏதாச்சும் தப்பிருந்தா பக்குவமா திட்டுங்கப்பு - என் தாத்தா பயபுள்ள திண்ணையில நிக்கறவ - பாத்தா ஆகிடுவா பத்திரகாளியாட்டம்.

<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>

இவைக்கெல்லாம் வைத்த பெயர் வெண்பாம் அவையோர் வைதார், இங்கு வந்த எமக்கு இதுவும் வேணுமாம் இன்னமும் வேணுமாம், இத்தோடு வைத்தேன் பேனாவை தூர.

இனியேனும் அங்கே இனியதாய் இருக்கட்டும் இன்ஷா அல்லாஹ்.

<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>

எண்ணிச் செய்யலம்மா கன்னி முயற்சியம்மா மன்னிப்பாரம்மா என்னை பாராமாத்மா! ;)

<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>> <<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>> <<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>

இது வெண்பா

ஓரடி முக்கால் குறள்வெண் பாவே ஈரடி முக்கால் சிந்தியல் வெண்பா மூவடி முக்கால் அளவியல் வெண்பா பலவடி முக்கால் பஃறொடை வெண்பா பஃறொடை மிக்கது கலிவெண் பாவே. -தொல்காப்பியம்.

16 comments:

  1. கடைசி நாலு கரைக்டா புரியுது கவிஞரே...!

    ReplyDelete
  2. ஆகா... அவுகளா நீங்க? தெரியாப் போச்சே.. ;-))

    ReplyDelete
  3. நம்ம மரமண்டைக்கு ஒண்ணு ரெண்டுதான்ப்பா புரியுது

    ReplyDelete
  4. என்னால யார் யாருன்னு கடைசி வரைக்கும் கண்டு பிடிக்க முடியல.. ஏதாவது க்ளு கொடுங்க சார்..

    ReplyDelete
  5. //கார்த்திகைப் பாண்டியன் said...
    நம்ம மரமண்டைக்கு ஒண்ணு ரெண்டுதான்ப்பா புரியுது//பேராசிரியருக்கே இப்டின்ன சிரியரான எங்களுக்கு ஒன்னும் பிரியல !

    ReplyDelete
  6. ஓடுங்க.. ஓடுங்க.. எல்லொரும் ஓடுங்க..

    ReplyDelete
  7. //டக்ளஸ்... said...
    கடைசி நாலு கரைக்டா புரியுது கவிஞரே...!//

    புரிந்த நான்கை சீர்பிரிந்து, அசை எடுத்து காட்டுக.

    நன்றி டக்ளஸ் (இப்ப உங்க பேர் என்ன, டக்ளஸா ராஜூவா)

    ReplyDelete
  8. // தமிழ் பிரியன் said...
    ஆகா... அவுகளா நீங்க? தெரியாப் போச்சே.. ;-))//

    நன்றி தமிழ் பிரியன், ஆமா...அவுகள்னா எவுக?

    ReplyDelete
  9. // கார்த்திகைப் பாண்டியன் said...
    நம்ம மரமண்டைக்கு ஒண்ணு ரெண்டுதான்ப்பா புரியுது//

    எனக்கு ஒண்ணு கூட புரியலங்க... நன்றி கார்த்திக்.

    ReplyDelete
  10. // லோகு said...
    என்னால யார் யாருன்னு கடைசி வரைக்கும் கண்டு பிடிக்க முடியல.. ஏதாவது க்ளு கொடுங்க சார்..//

    சத்தமா க்ளு கொடுத்தா இது
    ரத்த பூமி ஆகிடும்பா - அப்பாலிக்கா
    காத காட்டு ஜிடாக்ல.

    ReplyDelete
  11. // சுந்தர் said...
    ...பேராசிரியருக்கே இப்டின்ன சிரியரான எங்களுக்கு ஒன்னும் பிரியல !//

    இதுதான் நான் எதிர்பார்த்தது. நன்றி சுந்தர்.

    ReplyDelete
  12. // கார்க்கி said...
    ஓடுங்க.. ஓடுங்க.. எல்லொரும் ஓடுங்க..//

    ஓடுங்/க - எல்லொ/ரும்
    நிரை/நேர் - நிரை / நேர்
    புளிமா - புளிமா
    ஈரசைச்சீர்

    கார்க்கி, அருமை அசத்திட்டீங்க...

    ReplyDelete
  13. //கன்னி முயற்சியம்மா//
    பின்ன எப்பூடி?
    நான் எல்லாம் பத்தாம் வகுப்பு
    படிக்கும் போது
    " நேர் நேர் தேமா
    நேர் நிறை புளிமா... "

    ஐயோ மறந்து போச்சு
    எஸ்கேப்.

    ReplyDelete
  14. நன்றி வால்,

    நன்றி பாலா,

    நன்றி சூரியன், (சூரியனுக்கே சுத்துதா?)

    ReplyDelete

மனம் திறந்து செதுக்குங்கள், என் எழுத்துக்களை.