Aug 4, 2009

ஜிகர்தண்டா - சென்றவை

சென்ற வாரம் - ஒரு அலசல்;

சமஉ களுக்கு சென்னையில் வீடு கட்ட மனை வேண்டும் என்று சமஉ ஆ.ஞானசேகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஐயா, உங்களுக்குதான் சென்னை வந்தால் தங்க சமஉ மாளிகை இருக்கே, அதுவும் நல்ல வசதிகளோட இருக்கறதா கேள்விப் பட்டிருக்கேனே. ஓ… அத்த ஐந்து வருஷத்துக்கு (அதுவே சந்தேகம்) தானே உபயோகப்படுத்த முடியும். வாழ்நாள் முழுவதுக்கும் ஒரு சின்ன வீடா சென்னையிலேயே கட்டிக்கலாம்னு பாத்தீங்களா? அது சரிதான். தொழில் முதலீடு அதிகமாகிடுச்சுல்ல… ஓட்டு வெல ஏறிப்போச்சு, இப்பல்லாம் ஒரு ஓட்டுக்கு 100, 200 கொடுத்தா வாங்க மாட்டிக்கிறாங்கலே, மதுர பக்கத்ல 500, 1000 கொடுத்து குடி மக்களயெல்லாம் கெடுத்து வச்சிருக்காங்ஞ. அடுத்ததா ஓட்டு போடுற உரிமை எதுக்கு இந்த குடிமக்களுக்குன்னு ஒரு அறிக்கை விடுங்க. சமஉ க்கான முதலீடாவது குறையும்.

<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>

உபியில் சொந்த சிலை நிறுவிவரும் மாயாவதிக்கு ஏற்கனவே எதிர்ப்புகள் இருந்துவருகிறது. இந்நிலையில் உபி அரசின் சிலை வைக்கும் முடிவில் தலையிட உச்சநீதி மன்றம் மறுத்துவிட்டதால், இன்னும் சிலை வைப்பதற்காக 27 கோடி ரூபாய் ஒதுக்க கோரியுள்ளார். ஏற்கனவே 1,500 கோடி ரூபாய் செலவில் உபி முழுவதும் பகுஜன் சமாஜ் கட்சியின் நிறுவனர் கன்ஷிராம் மற்றும் டாக்டர் அம்பேத்கருக்கு நினைவுச் சின்னங்கள் நிறுவியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இது சொசெசூ வா? இல்ல அசெஆ வா? அட எதுனாலும் அஇசா ப்பா…

<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>

வருகிற 9 ம் தேதி பெங்களூருவில் திருவள்ளுவர் சிலை திறக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்கு கைமாறாக சென்னையில் கன்னடக் கவிஞர் சர்வக்ஞனரின் சிலை 13ம் தேதி திறக்கப்படவுள்ளது. (நமக்கு திருவள்ளுவர் மாதிரி கன்னடர்களுக்கு சர்வக்ஞர். திருவள்ளுவர் இரண்டு அடியில் வாழ்க்கையை வழி நடத்தும் வழியை திருக்குறளில் சொன்னார், சர்வக்ஞர் மூன்று அடியில் சொன்னது திருபாதி. 17 ஆம் நூற்றாண்டின் மத்தியில் வாழ்ந்ததாகக் கருதப்படும் சர்வக்ஞரின் இயற்பெயர் புஷ்பதத்தா.) வழக்கம் போல பெங்களூருவில் திருவள்ளுவர் சிலை திறக்க சில கன்னட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

சிலையால் எங்கும் பிரச்சனைதான். சிலை திறக்காட்டியும் பரவாயில்லை, எட்டையூரப்பா தவிச்ச வாய்க்கு கொஞ்சம் தண்ணி கொடப்பா… புண்ணியமா போகும். திருவள்ளுவர நாங்க நெஞ்சில் வச்சுக்கிறோம்

<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>

இடைதேர்தலில் திமுகவின் வேதனை சாரி சாதனைகளை சொல்லி ஓட்டு கேளுங்கள் நாம் அதிமுக வினரின் ஓட்டுகளையும் வாங்க வேண்டும். இதுகுறித்த ரகசியத்தை நான் கடைசியில் சொல்லித் தருகிறேன் என்று அஞ்சா நெஞ்சன் அறிக்கை.

கொடுத்தவச்ச தொகுதி மக்கா…

<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>

சென்ற வாரம் முழுவதும் ‘அரசுக்கு ஒளிவட்டம் உண்டு; ஊழியர்களுக்கு இல்லை’ என்ற தோழர் மாதவராஜ் இடுகையில் தொடர் பின்னூட்டம் நீண்டது. இந்த வாரம் திசை மாறி நீள்வதாய் இருந்த ‘லேசா லேஸா ஈசா ஈஸா’ என்ற கோவியாரின் இடுகை நிறைவுக்கு? வந்ததில் மகிழ்ச்சி.

விஜய் டிவியில் நீயா நானா பார்க்கும் வாய்ப்பு முதல் முறையாக கிடைத்தது. கோவில் திருவிழாக்களில் ஆபாசமா? என்ற தலைப்பென்று நினைவு. தலைப்பு எதுவாகினும் கரு அதுதான். அதில் இரு தரப்புமே அவர்களுக்கு வாய்ப்பிருந்தும் தெளிவான கருத்துகளை முன்வைக்கவில்லை. கடைசியில் திருவிழாக்கள் அவசியமே என்பதாக நிகழ்ச்சியில் வணக்கம் சொல்லப்பட்டது. அதில் ஆபாச நடனங்கள் / வசனங்கள் மற்றும் நேரம் ஆக ஆக அவிழ்க்கப்படும் ஆடைகள் குறித்த விவாதங்கள் எல்லாம் முற்றுப்பெறவில்லை.

ஒரு நல்ல விவாதம் மூலம் சிந்தனை விரிவடைகிறது, தெளிவடைகிறது, தெளிவுபடுத்தப்படுகிறது. அது எதிராளியின் நம்பிக்கையை மாற்ற வேண்டும் என்றோ அல்லது தகர்த்தெறிய வேண்டும் என்றோ செய்யப்படுவதல்ல. தெளிவு ஒன்றே அதன் முடிவாகும். துரதிஷ்டவசமாக (அல்லது அதிஷ்டவசமாக) இணைய விவாதங்களில் அந்த தெளிவை எந்த தரப்பும் அடையாமல் விவாதங்கள் முடிவடைந்துவிடுகிறது. விவாதத்தினூடே சில கு’பீர்’ சிரிப்புகளும் அவசியம், அது விவாதப் பொருளின் தன்மையை மாற்றாமல் விவாதத் தன்மையை / போக்கை மட்டும் சிறிதாக மாற்றுகிறவரை விவாதம் இன்னும் ஆரோக்கியம் ஆகும் என்பது என் புரிதல். கார்ப்ரேட்களின் ரெக்ரியேஷன் போல,

<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>

10 ஹாட் என்ற வலையில் மூத்தபதிவர் பாஸ்டன் பாலாஜி தலை பத்துகளை (சில இடுகைகளில் பலபத்தும்) பட்டியலிடுகிறார். சுவாரஸியமாக இருக்கிறது. அதில் தொகுக்கப்பட்டிருந்த தமிழ் பதிவர்கள் / ட்விட்டர்கள் பயன்படுத்தும் சுவாரஸிய சுருக்கெழுத்து பட்டியல்.

  1. கககபோ: ருத்துக்களை ச்சிதமாக வ்விக் கொண்டாய் போ!
  2. சொசெசூ: சொந்த செலவில் சூனியம்
  3. நாபிமுமூகா: நான் பிடிச்ச முயலுக்கு மூணே கால்
  4. அஇசா: ரசியல்ல தெல்லாம் சாதாரணமப்பா
  5. இரூபோயோ: துக்குன்னே ரூம் போட்டு யோசிப்பாங்களோ ?
  6. அசெஆ: அடுத்தவன் செலவில் ஆப்பு
  7. புதசெவி: புரியவில்லை; யவு செய்து விளக்கவும்
  8. எகொஇச: ன்ன கொடுமை து… ரவணன் (சந்திரமுகியில் பிரபு)
  9. ஏஇகொவெ: ன் ந்த கொலை வெறி?
  10. OSI – ஒசொஇ: ண்ணும் சொல்றதுக்கு ல்ல!
  11. நுகபிநி: நுண்ணரசியலை ண்டு பிரமித்து நிற்கிறேன்!
  12. இசெநாபா: ன்னைக்கு செத்தால் நாளைக்கு பால்.
  13. அஆகூ - னுபவிக்கணும்! ராயக் கூடாது
  14. இமா: ரண்டாம் மாடி = டூ மச்சு!
  15. சாநீஎபோ: சார் நீங்க ங்கேயோ போய்டீங்க
  16. எவேபொஇ: னக்கு வேபொழப்பு ல்லே?
  17. எதஇசொ: ன்ன லைவா ப்படி சொல்லிடீங்க
  18. வேவேவஅ: வேண்டாம்…வேண்டாம்…லிக்கிறது, ழுதுவிடுவேன்
  19. இஎவபோ: து ன்னடா ம்பா போச்சு!
  20. கெகெ: கெளம்பிட்டாங்கய்யா கெளம்பிட்டாங்கய்யா
  21. OPU - ஒபிஉ: ண்ணுமே பிரியல லகத்தில

<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>

இனி ஒவ்வொரு ஜிகர்தண்டாவிலும் நான் வாசித்ததில் எனக்கு ருசித்த இடுகையை பகிரலாமென்றிருக்கிறேன். இது நல்ல இடுகையை நாலு பேருக்கு கொண்டுசெல்லும் முயற்சியே. அந்த வகையில் இந்த இடுகையில்,

என்ன தலைப்பு வைப்பது? என்ற இடுகையை ‘சென்றவார சிறப்பு’ இடுகை என்பேன். ‘என்’ எழுத்து இகழேல் என்ற பூவில் சுமஜ்லா என்ற பெயரில் எழுதிவரும் சகோதரி, சிலகாலம் முன்பு தன் வாழ்வில் எதிர்நீச்சல் போட்டு முன்னேறும் துணிச்சலை தந்த கருப்பு தினங்களை கண்முன்னே கொண்டு வருகிறார். இடையிடையே தேர்ந்த மருத்துவரைப் போல சில நோய்தன்மைகளையும், சிகிச்சைகளையும் சொல்லி ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறார். நீங்களும் வாசித்துப் பாருங்கள்.

<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>

நான் எழுதிய இடுகைகளிலேயே எனக்கு பிடித்தது, இதற்கு முந்தைய எனது வெண் பாவம் தான். விருப்பத்திற்கான காரணம் பல இருந்தாலும், முக்கியமானது அது தோற்றுப்போன குதிரை என்பதே. என் நண்பர்களால் ரசிக்கப்படாத என் குதிரை. மற்ற அனைத்தையும் விட அதைத்தான் தட்டிக்கொடுத்து அரவணைக்க வேண்டும். அதன் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும். செம்மைபடுத்த வேண்டும்.

ஜெமோ சொல்லுவார் ‘இது என் பக்கம். வாசகர்களுக்கு பிடித்தமானதாக இருக்க இங்கே எந்த முயற்சியும் செய்யப்படாது.’ என்று. அப்படியே நானும் இருக்க இது என்ன என் பக்கமா, இது என் நண்பர்களுக்கான பக்கம். என் நினைவுகளை நண்பர்களோடு பகிர்ந்துகொள்ளும் நம் பக்கம். என் வாழ்வின் மறு பக்கம். இதுதான் என்னை விமர்சனத்திற்கு வைத்து பக்குவப்பட்டவனாக ஆக்கும் முயற்சிகளை நான் எடுக்கும் தளம்.

கடைசியாக,

ட்விட்டரில் நல்ல பல தகவல்கள் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன. வாய்ப்பிருப்பவர்கள் நுழைந்துபாருங்கள். நானும் பேருக்கு ட்விட்டுறேன், http://twitter.com/jaihindpuram என்ற பேரில். நம்மிடம் விசயம் இல்லாவிட்டாலும் வேடிக்கை பார்க்கலாம். பல உபயோகமான தகவல்கள் கிடைக்கும்.

நன்றி!!!

16 comments:

  1. பிரமாதம்... பிரமாதம்...

    ReplyDelete
  2. \\அசெஆ: அடுத்தவன் செலவில் ஆப்பு\\

    ஆனா உ.பி ல ந்டந்தது "அரசாங்க செலவில் ஆப்பு"..!
    :)

    ReplyDelete
  3. நல்லா இருக்குங்க..

    ReplyDelete
  4. ஏண்ணே! நீங்க ஜெய்ஹிந்துபுரமா? நானும்!!! :)

    ReplyDelete
  5. //இது என்ன என் பக்கமா, இது என் நண்பர்களுக்கான பக்கம். என் நினைவுகளை நண்பர்களோடு பகிர்ந்துகொள்ளும் நம் பக்கம்//

    Very Nice.

    "ககசொ"

    ReplyDelete
  6. கொடுக்கப்பட்ட தகவல் அனைத்தும் அருமை

    ReplyDelete
  7. நன்றி முரு,

    நன்றி டக்ளஸ்,

    நன்றி லோகு,

    நன்றி நாளைப்போவான், (ஆமாண்ணே, அப்டியாண்ணே. நீங்க எந்த தெருண்ணே?)

    நன்றி வால், (கெகெ)

    நன்றி பாலா,

    நன்றி அபுஅஃப்ஸர்,

    ReplyDelete
  8. உள்ளத உள்ளபடியே சொல்லணுமா? ஓக்கே!

    வழக்கம் போல என்னோட கூகுள் அனாலிடிக்ஸ் ரிப்போர்ட் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போதான் 3 பேர் உங்க வலைப்பூ வழியா வந்திருக்கறது தெரிஞ்சுது. அதான் நேரா இங்க வந்து பார்த்தா, அட நம்ம பீர் சார்!

    என்னுடைய இடுகைக்கு முக்கியத்துவம் கொடுத்து என்னை பாராட்டி எழுதியதற்கு நெகிழ்ச்சியும் வெட்கமும் கலந்த நன்றிங்க!

    ReplyDelete
  9. நான் வீரகாளியம்மன் கோயில் குறுக்குத் தெரு. நீங்க???

    ReplyDelete
  10. நன்றி சுமஜ்லா ஆப்பா,

    பீர் சார் எல்லாம் வேண்டாம், மரியாதையா தம்பின்னு சொல்லுங்க. இல்லைன்னா ஆட்டோ வரும்.

    ReplyDelete
  11. நாளைப்போவான், நான் ஜீவாநகர் 1வது தெருல இருந்தேன். நன்றி.

    பதிலூட்டமே தனிப்பதிவாக - ஜெய்ஹிந்துபுரம் நினைவுகள் 01 வாசித்து பார்க்கவும்

    ReplyDelete
  12. சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி.. மதுரையில் ஒரு பதிவர் சந்திப்பு நடந்தது என்பதை அந்தப் பதிவிலில்ருந்து தெரிந்து கொண்டேன். அது போல வேறு ஏதும் சந்திப்புகளுக்கு வரும் சமீபங்களில் வாய்ப்புள்ளதா? அப்படி சந்திப்பதாக இருந்தால் எனக்கும் தெரியப்படுத்தவும். உங்கள் யாவரையும் சந்திக்க ஆவலாய் உள்ளேன்!

    நன்றி!

    ReplyDelete
  13. நன்றி சூரியன்,

    நன்றி நாளைப்போவான், நிச்சயமாக தெரியப்படுத்துகிறோம். நண்பர் கார்த்திகைப் பாண்டியன் தான் நமக்கெல்லாம் ஒருங்கிணைப்பாளர்.

    ReplyDelete
  14. ஹா...ஹா..! நல்லாயிருக்குங்க! பீர் | Beer கையில ஜிகிர்தண்டா குடிச்ச மாதிரி சும்மா சில்லுனு இருக்குங்க! பாலோ பண்ண வேண்டிய ஆளுங்க நீங்க!

    ReplyDelete

மனம் திறந்து செதுக்குங்கள், என் எழுத்துக்களை.