May 11, 2009

கருணாநிதி, மோடி, ஜெயலலிதா - ஜிகர்தண்டா

வடக்கு வழங்குகிறது தெற்கு தேறுகிறது - கருணாநிதி.

ஆமாங்கையா உங்க தெற்கு நல்லாவே தேறுது.

ஈழத் தமிழர்களுக்காக இந்தியாவே கண்ணீர் விடுகிறது மோடி

பிணந்தின்னி நாயே, 2002 குஜராத்தை பார்த்து உலகமே கண்ணீர் விட்டதை நீ மறைத்தாலும எங்களால் மறக்க முடியாதடா. தேர்தலுக்காக மலம் தின்னச் சொன்னாலும் தின்னுவாய் நீ.

ஆம், பிணம் தின்ன உனக்கு மலம் எம்மாத்திரம்.

ஆமா...அம்மா வீட்ல தின்ன வரலையா, சோறு?

ஜெயலலிதா ஹெலிகாப்டரில் பறந்து தேர்தல் பரப்புரை

இதைத்தான் ஜெயலலிதா பிரதமர் கனவில் மிதக்கிறார் என்று சொல்கிறார்களோ...

கலைஞர் தொலைக்காட்சியில் வரும தேர்தல் விளம்பரங்களில் ஒன்று,

ஒரு பெண்ணுக்கு நிச்சயதார்த்த புடவை, நகைகள் வாங்கிவந்த தந்தை மாறடைப்பால் கீழே விழுகிறார். நலம் விசாரிக்க வந்த ஒருவர், "கவலைப்பட வேண்டாம்.. கலைஞர் மருத்துவ காப்பீடு திட்டம் இருக்கு. அனைத்து அரசு ஊழியர்களுக்கும் இலவச மருத்துவ காப்பீடு செய்து கொடுத்திருக்கார்" என்று சொல்வதாக வருகிறது,

ஆமா... அரசு ஊழியர் உசிரு மட்டும் தான் உசிரா... அப்ப எங்க உசிரெல்லாம்..........

ஆனாலும் அந்த பெண் கேட்பதற்காக வேண்டுமானால் போடலாம், ஓட்டு... உதயசூரியனுக்கு.

ஹி ஹி ஹி.. நமக்குத்தான் இளகிய மனமாச்சே...

மற்றொரு விளம்பரம், ஞாபகம் வருதே... ஞாபகம் வருதே... என்று. சகிக்கல... எல்லாம் முடிந்துவிட்டது, இனிமேல் அனுதாப ஓட்டுதான் வாங்க வேண்டும் என்பதற்காக இப்படியா? இறந்து போன முரசொலி மாறனைக்காட்டி...

மாறனின் பிள்ளைகளும் ஓட்டுக்காக எதைவேண்டுமானாலும் காட்டத் துணிந்துவிட்டாரகள். பாவம்.

இதற்காகவே அவர்களுக்கு ஓட்டு போட வேண்டாம்.

கஷ்மீர் இந்தியாவுக்குத்தான் சொந்தம் - ஆதாரம் நகைச்சுவையாக

அண்மையில் ஐ.நா சபையில் நடந்த ஒரு சம்பவம்.

கஷ்மீர் விடயமாக பேசுவதற்காக, இந்தியா மற்றும் பாகிஸ்தானை சார்ந்த பிரதிநிதிகள் அழைக்கப்பட்டிருந்தனர். இருவருக்கும் தங்கள் கருத்துக்களைச் சொல்ல நேரம் வழங்கப்பட்டிருந்தது.

முதலில் இந்தியப் பிரதிநிதி ஆரம்பிக்கிறார், 'நான் எனது உரையை ஆரம்பம் செய்யும் முன்பு, கஷ்மீர் என்று பெயர் வைத்த ரிஷி கஷ்யாப் பற்றிய ஒரு சம்பவத்தை இங்கு நினைவுபடுத்திக்கொள்ள ஆசைப்படுகிறேன். அவர் ஒரு நாள், ஒரு பாறையில் தட்டுகிறார். அப்போது அங்கிருந்து நீரூற்று கிளம்பி நல்ல சுவையான தண்ணீர் வழிந்தோடுகிறது. அதைக்கண்டதும் அவருக்கு குளிக்கலாம் என்ற ஆசை வந்துவிடுகிறது. தனது உடைகளை களைந்து, பாறையில் இருந்து சற்று தூரமாக வைத்துவிட்டு குளிக்கச் செல்கிறார். திரும்பி வந்து பார்க்கும் போது, அவரது உடைகளை காணவில்லை. அதை ஒரு பாகிஸ்தானி திருடிக்கொண்டு போயிருந்தார்' என்று சொல்லும் போது, பாகிஸ்தான் பிரதிநிதி குறுக்கிட்டு, 'அப்போது அங்கு பாகிஸ்தானி இருக்கவில்லை' எனகிறார். உடனே நம்மாள், 'இதைத்தான் எதிர்பார்த்தேன், இப்போது எனது உரையை ஆரம்பம் செய்கிறேன்' என்றாராம்.

தொலைபேசி கோப்பில் நம் பெயர் இடம் பிடிப்பது எளிது,

ஒருவரின் மனதில் இடம் பிடிப்பது கடினம்.

அடுத்தவரின் தவறுகளை மதிப்பிடுவது எளிது,

நம் சொந்த தவறுகளை புரிந்துகொள்வது கடினம்.

பிரியமானவரின் மனதை காயப்படுத்துவது எளிது,

அம்மனதின் காயம் ஆற்றுவது கடினம்.

மற்றவரை மன்னிப்பது எளிது,

மற்றவரிடம் மன்னிப்பு கேட்பது கடினம்.

வெற்றியை காட்டுவது எளிது,

தோல்வியை ஏற்றுக்கொள்வது கடினம்.

சவுதியில் ஆல்கஹால் பாவித்தால் 20 கசையடி தண்டனை.

இந்த செய்தியைவைத்து இச்சம்பவம் கட்டப்பட்டது.

ஒரு நாள் பெங்காலி, பாகிஸ்தானி மற்றும் சந்தேகமில்லாமல் நம் இந்தியன் ஆகிய மூவரும் ஆல்கஹால் பாவித்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு தண்டனைக்கு மன்னர் முன் அழைத்துவரப்படுகிறார்கள். மன்னர் கேட்கிறார், 'சொல்லுங்கள், கசையடிக்கு முன் உங்கள் ஆசை என்ன?' என்று.

பெங்காலி, 'எனது முதுகில் ஒரு தலையனை கட்டிவிடுங்கள்'

அவ்வாறே செய்யப்படுகிறது, ஆனால் 10 அடிகளில் தலையனை பிய்ந்துவிட்டது. மீதி 10 அடி வெற்றுடம்பில் கிடைக்கிறது.

பாகிஸ்தானி 'என் முதுகில் 2 தலையனை கட்டிவிடுங்கள்'

அவ்வாறே கட்டப்பட்டது. 15 அடிகளில் தலையனை பிய்ந்துவிட, 5 வெற்றுடம்பில் கிடைக்கிறது.

நம்ம இந்தியனிடம் மன்னர் சொல்கிறார், 'எனக்கு இந்தியர்களை மிகவும் பிடிக்கும். மன்மோகன் சிங் எனது நாட்டிற்கு நிதி ஆலோசனை வழங்கியுள்ளார். நீ 2 ஆசைகளை சொல்லலாம்' என்று.

நம்மாள் சொல்ல வேண்டுமா என்ன, (கேப்பு கிடைத்தால் காற்று அடிப்போம். காற்றே கிடைத்தால் பறந்துவிட மாட்டோமா), மன்னரிடம், 'நீங்கள் எங்கள் மேல் வைத்துள்ள நன்மதிப்பை காப்பற்றுவோம், நான் செய்த தவற்றை உணர்ந்துவிட்டேன். எனக்கு 20 அல்ல 40 கசையடி தாருங்கள், இது தான் முதல் ஆசை' என்கிறான்.

மன்னர், 'இந்தியர்கள் வீரமானவர்கள் என்று கேள்விப்பட்டதுண்டு, இன்றுதான் காண்கிறேன், சொல் உனது இரண்டாவது ஆசை என்ன' என்று கேட்கிறார்.

நம்மாள், 'என் முதுகில் பாகிஸ்தானியை கட்டிவிடுங்கள்' என்கிறான்.

பணக்கார கைப்புள்ள இரண்டு நச்சல்குளம் கட்டுகிறார். ஒன்று அவருக்காகவும் மற்றொன்று பொதுநலன் (அடுத்த தேர்தலில் போட்டியிட உத்தேசம்) கருதி மக்களுக்காகவும்.

ஆனால் அவருக்கான குளத்தில் ஒருபோதும் தண்ணீர் நிரப்பியதில்லை.

வால் கேட்கிறான், 'ஏன் தல, உங்க நீச்ச தொட்டில தண்ணி நெரப்பாம வச்சிருக்கீங்க?'

கைப்புள்ள, 'எனக்குத்தான் நீச்சல் தெரியாதேடா'

கைப்புள்ள அவர் மகன் படிக்கும் பள்ளியின் ஆசிரியையிடம் சென்று, 'மிஸ், நீங்க நேத்து எனக்கு போன் பண்ணியிருந்தீங்களா?'

மிஸ், 'இல்லையே, ஏன் கேக்குறீங்க?'

கைப்புள்ள, 'இல்ல, என் மொபைல்ல பார்த்தேன், 1 மிஸ் கால்டு ன்னு இருந்தது'

10 comments:

  1. கலக்குறீயே தலிவா...!
    அதுவும் ஆல்கஹால் மேட்டரு சூப்பரு..!
    "வால்"ன்றது யாரு நம்ம அருண் அண்ணனா..?
    அப்டியே கலைஞர் டிவியில மாறன் சாகுறதக் காட்ற மாதிரி கொஞ்சம் நம்ம தா.கி. சாகுறதையும் காட்டியிருந்தா, ஓட்டு எகிறும்ல..!
    அப்பறம் அது மிஸ் கால் இல்ல. மிஸ்டு கால்...!

    ReplyDelete
  2. முதலில் நல்ல காரம் சும்மா சாட்டையால் அடித்த மாதிரி

    பின்பு நகைச்சுவையால் கூள் ;) நல்லா இருக்கு நண்பா

    ReplyDelete
  3. //டக்ளஸ்....... said...
    யாரு நம்ம அருண் அண்ணனா..?//

    இந்த வால்தனம் தான வேணாங்றது...
    அது வேற... தலயோட வாலு...

    //அப்பறம் அது மிஸ் கால் இல்ல. மிஸ்டு கால்...!//

    'மிஸ் கால்டு' இப்ப சரியா?

    ReplyDelete
  4. //Suresh said...
    முதலில் நல்ல காரம் சும்மா சாட்டையால் அடித்த மாதிரி

    பின்பு நகைச்சுவையால் கூள் ;) நல்லா இருக்கு நண்பா//

    ஹாட்டா வந்தாலும், கூலா அனுப்புவோம்ல...

    ReplyDelete
  5. மோடி பற்றிய வரிகளில் காரம் அதிகம்.. தனி மனித தாக்குதல் வேண்டாமே நண்பா..அரசியலில் ஆரம்பித்து ஜோக்கில் முடித்த விதம் அருமை.. கலக்கல் காக்டெயில்...:-)

    ReplyDelete
  6. //கார்த்திகைப் பாண்டியன் said...
    மோடி பற்றிய வரிகளில் காரம் அதிகம்.. தனி மனித தாக்குதல் வேண்டாமே நண்பா..//

    எனக்கும் தனிமனித தாக்குதலில் இணக்கமில்லை கார்த்திக். இரட்டை வேடக்காரர்களை காணும்போது சும்மா இருக்கமுடிவதில்லை.
    குறைத்துக்கொள்கிறேன். நிறுத்த முயற்சிக்கிறேன்.

    ReplyDelete
  7. எல்லாமே hot ஆக இருக்கு, சில்லுனு கொடுங்க

    ReplyDelete
  8. //வால் கேட்கிறான், 'ஏன் தல, உங்க நீச்ச தொட்டில தண்ணி நெரப்பாம வச்சிருக்கீங்க?'//

    நான் எப்பங்க கேட்டேன்!

    ReplyDelete
  9. வருகைக்கு நன்றி சுந்தர்,

    //தேனீ - சுந்தர் said...
    எல்லாமே hot ஆக இருக்கு, சில்லுனு கொடுங்க//

    கொடுத்திடுவோம்...
    தேனீக்கு விருப்பம், ச்சில்லா ஸ்வீட்டா சுந்தர்?

    ReplyDelete
  10. //வால்பையன் said...
    //வால் கேட்கிறான், 'ஏன் தல, உங்க நீச்ச தொட்டில தண்ணி நெரப்பாம வச்சிருக்கீங்க?'//

    நான் எப்பங்க கேட்டேன்!//

    நான் உங்களை எப்போ சொன்னேன்?

    ReplyDelete

மனம் திறந்து செதுக்குங்கள், என் எழுத்துக்களை.