Oct 6, 2009

பாலியல்புவனா, கேரளமண், கிழக்கு - ஜிகர்தண்டா

அண்டை மாநில கனமழைக்கு பலியானவர்களுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்.

ஜார்கண்ட் நக்சல் தீவிரவாதிகள்,  காவல்துறை அதிகாரி ஃப்ரான்ஸிஸை கடத்தி கொண்டுபோய் தலை துண்டித்து கொலை செய்திருக்கிறார்கள். ஃப்ரான்ஸிஸ் குடும்பத்தாருக்கு அஞ்சலிகள். தீவிரவாதத்திற்கு கடும் கண்டனங்கள்.

சோழவந்தான் ரயில் நிலையத்தில் குண்டுவெடிப்போ, பட்டாசு வெடிப்போ, 4 பேர் பலி, பலர் காயம். பெரிய சைஸ் பட்டாசு தானே குண்டு... உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலிகள். (சிலிண்டர் வெடிப்பாம்)
<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>

தமிழ்நாட்டிலிருந்து கேரளாவிற்கு சென்றுகொண்டிருந்த ஆற்றுமணல் நிறுத்தப்பட்டுவிட்டது. இதனால் கேரளாவில், ரூபாய் பத்து ஆயிரத்திற்கு விற்கப்பட்ட மணல், தற்போது நாற்பத்துஐந்து ஆயிரம் ரூபாயாம். கட்டுமானப்பணிகள் தடைபட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தரும்வரை, இங்கிருந்து மணல் அனுப்பப்படாது என்பது காரணமாம். தேசிய அரசியலை கழுகாய் பார்த்தால், இது சரியா என்பது எனக்குத்தெரியவில்லை. ஆனால், தமிழக அரசியலில் இது ஒரு வரவேற்கப்பட வேண்டிய நல்ல முடிவாகப்படுகிறது.
<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>

பாலியல் தொழிலாளி கம் நடிகை புவனேஸ்வரியின் வாக்குமூலத்தை தினமலரில் படித்தேன். சில நடிகைகளின் பெயர்களை குறிப்பிட்டே எழுதியிருந்தார்கள். இப்படி நேரடியாக பெயர் குறிப்பிடுவதால் ஏதும் பிரச்சனை வராதா என்று ட்விட்டரிலும் கேட்டிருந்தேன். நினைத்த மாதிரியே நடிகர் சங்கத்துகாரர்கள் பிரச்சனை செய்துவிட்டார்கள். நினைத்த மாதிரியே பிரச்சனைக்கு அந்த நடிகைகளும் வந்திருந்தார்கள். நினைத்த மாதிரியே கோவியாரும் பதிவு போட்டுவிட்டார்... நினைத்த மாதிரியே மீ த எஸ்கேப்பு...
பாலியல் தொழில் பற்றிய சட்டத்தை தெரிந்து கொள்ள இங்கே செல்லவும்.
<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>

நடிகை பூமிகா சாவ்லா, மார்பக புற்று நோய் விழிப்புணர்விற்காக நடை பயணம் மேற்கொண்டாராம். நடிகைகளின் பப்ளிசிட்டியை சோப்பு சீப்பிற்கு மட்டுமல்லாது, இந்த மாதிரி சமூக விழிப்புணப்புணர்வு விளம்பரங்களுக்கும்  பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>

வாராவாரம் ஆஹா எஃப்எம்மில் கிழக்கு பதிப்பகத்தார் நடத்தும் கிழக்கு பாட்காஸ்ட் நிகழ்ச்சி பயனுள்ளதாக இருக்கிறது. வியாபார நுணுக்கம் அனைத்தும் தெரிந்திருக்கிறார்கள். இது வாஷிங் பவுடர் நிர்மாவை விட நல்ல விளம்பரம் என்பதில் சந்தேகம் இல்லை. வீடு வீடாக சென்று சாம்பிள் பேக் கொடுப்பதை போல, ஒலிப் புத்தகத்திலிருந்து சில பகுதிகளும் ஒலிபரப்பப்படுகிறது. குறிப்பிட்ட புத்தகத்திலிருந்தே கேள்விகளை கேட்டு புத்தகத்தையே பதிலாக சொல்வது.. எல்லாமே அருமை. ஆனால், பேட்டி எடுப்பவர் கிட்டத்தட்ட அனைத்து பேட்டியிலும், 'அதாவது... நான் உங்க புத்தகத்தில படிச்சேன், இந்த மாதிரி சொல்லியிருக்கீங்கல்லையா... இதப்பத்தி என்ன சொல்றீங்க' என்பது டிபிகல் நாடகத்தனமாக இருக்கிறது. கொஞ்சமா மாத்தி மாத்தி யோசிங்க... மேடம்.
<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>

ஏர் இந்தியா விமானத்தில் பணியாளர்கிடையே ஏற்பட்ட தகராறில் பயணிகள் அதிருப்தி. இந்த நேரத்தில், நான் அனுபவித்த விமான சேவையின் தரத்தை சொல்வது சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன். குவைத் ஏர்லைன்ஸ், சௌதியா - அவர்கள் தருவதுதான் சேவை, விருப்பமிருந்தால் வா என்கிற தோணி. ஏர் இந்தியா - சொல்லவேண்டாம், சில நேரங்களில் கொசு அடிக்க வேண்டியிருக்கும், சிலநேரங்களில் எலி(புலி வராத வரை பாதகமில்லை). அல்ஜஸீரா, ஏர் அரேபியா - பட்ஜட் ஏர்லைன்ஸாம், குடிக்க தண்ணீர் கூடத்தர மாட்டார்கள். அல்ஜஸீராவில், குவைத்-மும்பை ஒரு தினாருக்கும் டிக்கெட் விற்கப்பட்டதுண்டு. ஏர் அரேபியா, இப்போது குவைத்-சென்னை 3780 ரூபாய். ஸ்ரீலங்கன், எமரேட்ஸ் - நான் அனுபவித்ததில் நல்லதாகப்பட்டது.
<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>

தனித்தமிழ், விக்கி-தமிழ் பற்றிய எழுத்தாளர் ஜெயமோகன் பதில்கள் யோசிக்கவைக்கிறது. ஜெர்மனியை செர்மனி என்றும், ஸ்பெயினை எசுப்பானியா என்று எழுதுவதையும் விமர்சிக்கிறார். வாசித்து பாருங்கள்...
<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>

என் ஒரே மகன் ஃபர்ஹான் நேற்றைக்கு முந்தின நாளோடு பதின்இரண்டு மாதம் நிறைவு செய்து, நேற்று முதல் வயதில் நான்கு அடி எடுத்துவைத்திருக்கிறான். அவன் வயதை எப்படி சொல்வது. இப்போது அவனுக்கு ஒரு வயதா? இரண்டு வயதா? Promil வாங்கும் போது, 1 முதல் 3 வயது வரை என்று போட்டிருக்கிறார்களே... 12 மாதங்கள் கடந்தால் தான் ஒரு வயது ஆரம்பிக்கிறதா? தெரிந்தவர்கள் விளக்கவும். பிறந்தநாளான நேற்று, ஜட்டிகூட போடாமல் குற்றாலத்தில் குளித்துக் கொண்டிருந்தானாம். ஷேம் ஷேம்.. நோ பி'டே பார்ட்டீஸ்...

35 comments:

  1. Belated Birthday Wishes to ஃபர்ஹான்...

    ReplyDelete
  2. ஜிகர்தண்டா நன்றாக இருக்கிறது. // 12 மாதங்கள் கடந்தால் தான் ஒரு வயது ஆரம்பிக்கிறதா// ஆம். முடிந்த வருடங்களை மட்டுமே வயதாக சொல்ல வேண்டும்.

    ReplyDelete
  3. மகனுக்கு பிறந்தநாள் வாந்த்துக்கள் சொல்லுங்கள் , ங்கா , மா , ம் என்று நான் சொன்னதாகவும் சொல்லிவிடுங்கள் , புரிந்து கொள்வான்

    ReplyDelete
  4. உங்கள் மகனுக்கு என்னுடைய பிறந்த நாள் வாழ்த்துகள்.இப்போது ஒரு வயது என்றுதான் சொல்ல வேண்டும்.

    ReplyDelete
  5. //ஜார்கண்ட் நக்சல் தீவிரவாதிகள், காவல்துறை அதிகாரி ஃப்ரான்ஸிஸை கடத்தி கொண்டுபோய் தலை துண்டித்து கொலை செய்திருக்கிறார்கள். //

    கடுமையாக தண்டிக்கபட வேண்டிய குற்றம்!

    மனிதன் இயற்கையாக இறப்பதை விட வன்முறையால் இருப்பது அதிகமாகி கொண்டிருப்பது வருத்தமளிக்கிறது!

    ReplyDelete
  6. நன்றி லோகு,

    நன்றி அமர பாரதி, (ப்ளாக் டெஸ்டிங் தவிர வேறு பதிவு போடும் எண்ணமில்லையா?) ;)

    நன்றி காளவாசல், மதுரை காளவாசல்?

    நன்றி மதி.இண்டியா,

    நன்றி ஸ்ரீ,

    ReplyDelete
  7. வால்,

    //மனிதன் இயற்கையாக இறப்பதை விட வன்முறையால் இருப்பது அதிகமாகி கொண்டிருப்பது வருத்தமளிக்கிறது!//

    பதிவு எழுதும் போதே இதையும் எழுத எண்ணியிருந்தேன்..

    வருத்தமளிக்கிறது, வால்.. :((

    ReplyDelete
  8. முதலாம் வருட பிறந்த நாள் என்பதால் முதலாம் வருட பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  9. அருமையான ஜிகர்தண்டா ..

    //.. முடிந்த வருடங்களை மட்டுமே வயதாக சொல்ல வேண்டும். ..//

    நானும் அப்படித்தான் படித்த ஞாபகம்..

    ReplyDelete
  10. குழந்தைக்குப்பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  11. //நடிகை பூமிகா சாவ்லா, மார்பக புற்று நோய் விழிப்புணர்விற்காக நடை பயணம் மேற்கொண்டாராம். நடிகைகளின் பப்ளிசிட்டியை சோப்பு சீப்பிற்கு மட்டுமல்லாது, இந்த மாதிரி சமூக விழிப்புணப்புணர்வு விளம்பரங்களுக்கும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். //

    வழிமொழிகிறேன்

    பர்ஹானுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  12. //பதின்இரண்டு// - புது கலை சொல்லா?

    ReplyDelete
  13. ஜிகர்தண்டா ரொம்ப டேஸ்ட்டா இருந்தது.

    ReplyDelete
  14. ஃபர்ஹானுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்! :-)

    ReplyDelete
  15. ஜிகர்தண்டா அருமை..

    ReplyDelete
  16. ஆஹா தினமலர் லிங்கில இருக்க லிஸ்ட்ட பாத்து மிரண்டுட்டேன்.

    வாழ்க தமிழ்த்திரையுலகம் !!! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் !!!

    ReplyDelete
  17. jarkantil kazuththu aruththu kollappatta kaval athikari sambavaththai patri common man kal enna solkiraarkal.

    ReplyDelete
  18. இயற்கை சீர்ற்றதாலும், தீவிரவாதத்தாலும் உயிர் இழந்தவர்களுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்.

    ///ஏர் அரேபியா, இப்போது குவைத்-சென்னை 3780 ரூபாய்.///
    குவைத் ஏர்வேஸில் இப்போ குவைத்-சென்னை-குவைத் 9,150 ரூபாய்.

    ///ஸ்ரீலங்கன், எமரேட்ஸ் - நான் அனுபவித்ததில் நல்லதாகப்பட்டது.///
    மேலும் ஓமன், கத்தார் ஏர்வேஸ் ஸர்விஸும் நல்லா இருக்கு அண்ணே.

    அன்பு மகன் ஃபர்ஹானுக்கு, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

    அண்ணே, ஜிகர்தண்டா நீங்க எங்க குடிப்பீங்க? நான் நவ்பத் கானா தெருல...

    ReplyDelete
  19. தனித்தமிழ் என்றுக் கூறிக்கொண்டு தமிழை பாடாய்ப்படுத்துகிறார்கள். ஆஸ்திரேலியா என்பதை அவுஸ்திரேலியா என்று அவஸ்தைப்படவைகிறார்கள். டிவி என்பது ரிவி! என்ன எழவு இது?(நன்றி:வினு சகரவர்த்தி). நமது துணை முதல்வர் இதற்கு ஒரு சரியான முடிவுக் கட்டவேண்டும். இல்லையென்றால் அவரின் பெயருக்கும் இதேக்கதிதான்!

    ReplyDelete
  20. சாரி. மறந்துட்டேன். உங்க பையனுக்கு என் பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
    12 மாதங்கள் முடிந்தால்தான் ஒரு வயது. ஆனால் நம்ம ஊரில் சிலர் கணக்குப்படி, குழந்தைப் பிறந்து, இரண்டாம் வருடத்தில் பிரவேசிப்பதால் இரண்டு வயது என்று கூறுவர். அதே தவறு. அப்படி என்றால் பிறந்த குழந்தைக்கு ஒரு வயதா?

    ReplyDelete
  21. ஜிகர்தண்டா அருமை.. ஃபர்ஹானுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்..:-))))

    ReplyDelete
  22. நன்றி வால்,

    நன்றி பட்டிக்காட்டான், ம்.. அதுதான் சரியா இருக்கும்.

    நன்றி சின்ன அம்மிணி,

    நன்றி வசந்த்,

    நன்றி TVR,

    முரு, அதை சரியா எழுதத்தெரியல... :( . எழுதியது தவறென்றால், சரியா எப்படி எழுதணும்னு சொல்லி கொடுங்க, தல.

    நன்றி நாடோடி இலக்கியன்,

    நன்றி சந்தனமுல்லை,

    நன்றி கேபிள் அண்ணே,

    செய்யது, அதையெல்லாம் பார்த்து கெட்டுப்போயிடாதீங்க.. இப்போ சென்னைல தான இருக்கீங்க?

    ReplyDelete
  23. பராரி, காமன் மேனுக்கு கண்ணு தெரியலையாம் ;(

    பாலா, நான் ஜிகர்தண்டா குடிப்பது, ஏஒன் ஜிகர்தண்டா... விளக்குத்தூண். வேறெங்கும் கிளைகள் இல்லை. ;)

    நன்றி M.S.E.R.K., தனித்தமிழ்.. பிரச்சனைக்குரிய விஷயம் தான்.

    நன்றி கார்த்திக், பிஸியா இருக்கீங்களா? ஆளையே பார்க்க முடியிறதில்ல...

    ReplyDelete
  24. உங்கள் மகனுக்கு என்னுடைய பிறந்த நாள் வாழ்த்துகள்.

    ReplyDelete
  25. //செய்யது, அதையெல்லாம் பார்த்து கெட்டுப்போயிடாதீங்க.. இப்போ சென்னைல தான இருக்கீங்க?//

    நான் நேத்தே சென்னைலர்ந்து கெளம்பிட்டேன்.இப்ப பூனே.

    ReplyDelete
  26. நன்றி Maximum India சார்,

    செய்யது, புனேவா.. அப்ப இன்னும் கவனமா இருக்கணும்.. :)

    ReplyDelete
  27. //12 மாதங்கள் கடந்தால் தான் ஒரு வயது ஆரம்பிக்கிறதா?//

    12 மாதங்கள் சேர்ந்ததுதான் ஒரு வருடம்; அதனால் 12 மாதங்கள் நிறைந்தால்தான் ஒரு வயது.

    அதுசரி, எதப்பத்தியெல்லாமோ புள்ளிவிவரத்தோட விரிவா எழுதுறீங்க, இதில இப்படி குழம்பிட்டீங்க?

    இல்ல ஃபர்ஹானை இப்பவே பெரிய ஆளாக்கிப் பாக்க ஆசையா?

    ReplyDelete
  28. ஹூசைன்அம்மா, சரியா மடக்கிட்டீங்க.. அவ்வ்வ்...

    அதாவது, 12 மாதங்கள் நிறைவடைந்தால், ஒரு வயது நிறைவடைந்ததாக கொள்ள வேண்டுமா?

    பாருங்க.. இந்தமாதிரி சின்ன சின்ன விசயம் கூட தெரியலைன்னா.. நான் இன்னும் சின்னப்பையன் தான?

    ReplyDelete
  29. ஃபர்ஹானுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  30. உங்களது பையனுக்கு எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்... :)
    கொஞ்சம் லேட்..

    எப்டிங்க.. அங்க இருந்துகிட்டே இங்க நடக்குற விஷயத்த எல்லாம் புட்டு புட்டு வைக்குறீங்க..??

    நக்ஸலைட்ங்க தொல்ல தாங்க முடியல.... 17-பேர சுத்தி வளைச்சி கொன்னுட்டாங்க... :(

    /*தமிழ்நாட்டிலிருந்து கேரளாவிற்கு சென்றுகொண்டிருந்த ஆற்றுமணல் நிறுத்தப்பட்டுவிட்டது. இதனால் கேரளாவில், ரூபாய் பத்து ஆயிரத்திற்கு விற்கப்பட்ட மணல், தற்போது நாற்பத்துஐந்து ஆயிரம் ரூபாயாம். கட்டுமானப்பணிகள் தடைபட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தரும்வரை, இங்கிருந்து மணல் அனுப்பப்படாது என்பது காரணமாம். தேசிய அரசியலை கழுகாய் பார்த்தால், இது சரியா என்பது எனக்குத்தெரியவில்லை. ஆனால், தமிழக அரசியலில் இது ஒரு வரவேற்கப்பட வேண்டிய நல்ல முடிவாகப்படுகிறது.*/

    ஆற்று மணல் எடுப்பது என்பது எப்போதுமே ஒரு தவறான செயல்.. எப்படியோ.. தண்ணீர் பிரச்சனையில் ஒரு பிரச்சனைக்கு தீர்வு கிடச்சி இருக்கு..

    ReplyDelete
  31. நன்றி மலிக்கா,

    ---

    நன்றி கனகு,
    //அங்க இருந்துகிட்டே இங்க நடக்குற விஷயத்த எல்லாம் புட்டு புட்டு//

    எல்லாம் கூகிலார் புண்ணியத்திலதான்... இந்தியாவிற்கு வெளியே இருக்கும் போது, முழு இந்தியாவையும் உற்று நோக்கும் வாய்ப்பு கிடைக்கும்.

    ReplyDelete
  32. //சார், ஏற்கனவே மெக்ஸிகோ சலவைக்காரிக்கு விடை தெரியாம பல வருஷமா தலையை பிச்சுக்கிட்டிருக்கேன்... இப்போ இது வேறையா? //

    கூகிளில் தேடி பாருங்கள்

    ReplyDelete

மனம் திறந்து செதுக்குங்கள், என் எழுத்துக்களை.