Jul 26, 2009

நட்பு, குங்குமம், பதிவர்கள்

நட்பு மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும். துக்கத்தில் பங்கு கொள்ளும். – பழஞ்சொல்.

அரை ஆண்டுகளுக்கு முன்பு இவர்கள் யாரையும் எனக்குத் தெரியாது, இவர்களில் யாருக்கும் என்னைத் தெரியாது. இன்று பல யுக பழக்கம் போல பேசிக்கொள்கிறோம். நல்ல விஷயங்களில் தோள் தட்டிக்கொடுப்பதும், தவறென்றால் தட்டிக்கேட்பதும், நட்புக்கு இலக்கணமாய் இருக்கிறோம். விவேகானந்தர் சொன்னாராம், ‘உன் நண்பர்களில் நான்கு பேரை காட்டு, நீ எப்படிப்பட்டவன் என்று சொல்கிறேன்’ என்று. நான் பெறுமையாகக் காட்டுவேன், இந்த இணைய நட்பு வட்டத்தை, இனிய வட்டத்தை. இதுவரை நான் கண்டிராத பிரபலம் நேற்று ஜிடாக்கில் சொல்கிறார், ‘என்ன உதவி வேண்டுமானாலும் தயங்காமல் தைரியமாக கேளுங்கள், நிச்சயம் செய்கிறேன்’ என்று. இத்தனைக்கும் நேற்றுதான் அவரிடம் முதல்முறையாக ஜிடாக்கியதும். (இவருக்கா கட்டம் கட்டினார்கள்?, பாவிகள்.) இந்தகைய நட்பு அமைய கொடுத்து வைத்திருக்க வேண்டும். நான் எங்கோ கொடுத்து வைத்திருக்கிறேன் போல…

இந்த நட்பை இன்னும் வழுப்படுத்தும் விதமாக, பாசமிகு மருத்துவர் தேவா அவர்கள் நட்புக்கான ஒரு வலைப்பூ பட்டை எனக்கும் கொடுத்திருக்கிறார். இது ஒரு தொடர் நட்பு பாராட்டல், நான் என் நட்பு வட்டத்திற்கு இதை வழங்க வேண்டும். யாருக்கும், எத்தனை பேருக்கும் இதை வழங்கலாம். நட்புக்கு ஏது வரைமுறை, சட்டசிக்கல் எல்லாம். எனவே நான் எனக்குத்தெரிந்த என்னைத்தெரிந்த அனைத்து வலைப்பூ வட்டார நண்பர்களுக்கும் இதை வழங்குகிறேன்.

Award Image

<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>

எனது முந்தைய ஒரு இடுகை ருசித்ததும் ரசித்ததும் என்பதில் நான் ரசித்த சிலவற்றை குங்குமம் வாசகர்களும் அல்லது ரசிகர்களும் ரசிப்பதற்காக குங்குமம், 23 ஜூன் 2009, 90 மற்றும் 91 ம் பக்கங்களில் வெளியிட்டுள்ளது. நன்றி!!!

90

91

நாமும் அச்சு ஊடகங்களால் கவனிக்கப்படுகிறோம். இனி எழுதுவது வாசிக்கத்தக்கதாக ரசனைக்குரியதாக மட்டுமின்றி சமூகத்திற்கானதாகவும் இருக்க வேண்டும். – எனக்குள் சொல்லிக் கொண்டது.

<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>

இந்தப்பகுதியை வாசிக்கும் போது, இதைச்சொல்ல இவனுக்கு என்ன தகுதி இருக்கிறது என்று நினைக்க வேண்டாம். எனக்கு இருக்கும் தகுதி ‘நான் உங்கள் நண்பன்’ என்பதே, அது மட்டுமே. சில நாட்களாக இங்கு நடந்துவரும் கோஷ்டி மோதல்களை அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அவற்றில் சில பற்றவைக்கப்பட்டவை, மற்றும் சில எரிகிற நெருப்பில் எண்ணை ஊற்றப்பட்டவை. இன்னும் சில விளையாட்டு வினைஆன கதை.

நான் அறிந்தவரை இங்கு யாரும் பணமோ பொருளோ வாங்கிக்கொண்டு எழுதுவதில்லை, எழுதுவதில் எற்படும் ஒரு ஆத்மதிருப்தி, சிறிய மகிழ்ச்சி மட்டுமே எஞ்சி இருப்பது. இங்கு எழுத்துப் பயிற்சி செய்து, அச்சு ஊடகத்தில் கால் ஊன்றியவர்களும் உண்டு என அறியப்பெறுகிறேன். பல இடுகைகள் கருத்துப் பரிமாற்றத்திற்காகவும் ஆரோக்ய விவாதத்திற்காகவும் இங்கே இடப்படுவது நமது வாசிப்பனுபவத்தை அதிகரிக்கச் செய்கிறது. சில நாட்கள் முன்பு நண்பர் சதாசிவம், மேன்சன் தண்ணிருக்காக தான் பட்ட சிரமங்களை இடுகையிட, அங்கே ஒலித்த பின்னூட்ட ஆதரவு குரல்கள் நம்மை பிரமிப்பில் ஆழ்தின. இவை ஒரு பக்கம் இருந்தாலும்…

ஒரு பதிவர் திரட்டி மோசடி என்று இடுகை இடுகிறார், அவர் ஏதோ ஒரு வகையில் பாதிக்கப்பட்டிருப்பார் அல்லது அவரால் எழுத முடிந்தது அதுதான். அந்த இடுகையில், நான் மிகவும் மதிப்பு வைத்திருந்த பல பிரபலங்களும் அவரை கேலி கிண்டல் செய்து பின்னூட்டிய விதம் சற்றும் ரசிக்கும் படியாக இல்லை. அது போதாதேன்று பின்னர் தனி இடுகைகள் வேறு. உங்களுக்கு எழுத் தெரியும், சுவாரசியமாகவும் எழுதத் தெரியும், அதற்காக வேறு யாரும் இங்கு எழுதக்கூடாதா? தவறிருந்தால் சுட்டிக்காட்டுங்கள், கற்றுக்கொடுங்கள், ஏற்றுக்கொள்கிறோம். பிறக்கும் போது யாரும் பதிவர் இல்லை, உள்ளிருக்கும் அனைத்தும் கற்றுக்கொண்டது தானே…

ஒரு பெயர் இல்லாதவர், அனைவருக்கும் ஆப்பு வைக்கப்போவதாகச் சொல்லி ஒரு பதிவு தொடங்கினார். அதில் ஆழ்ந்த வாசிப்பும், எழுத்தனுபவமும் உள்ள சுவாரஸ்ய பதிவர்கள் பலரையும் அவர்களது தனிப்பட்ட வாழ்வை கொச்சைப்படுத்தி, அசிங்கமான வார்த்தைகளை மட்டுமே உள்ளடக்கிய இடுகைகள் இடுகிறார். பின்பு காணாமல் போகிறார். ஐயா, உங்களுக்கு அவர்களது எழுத்தோ அல்லது மற்ற நடவடிக்கைகளோ தவறாகப்பட்டால் கண்ணியமான முறையில் சொல்லுங்கள். உங்கள் எழுத்துக்கள் பலராலும் கவனிக்கப்படும், அங்கு சுட்டிக்காட்டப்படுபவர்கள் தன்னை மாற்றிக்கொள்ள வாய்ப்புண்டு. புதிய பதிவர்களுக்காக நீங்கள் கொடுத்த குரலுக்கு அவர்கள் ஆதரவே இல்லாமல் போய் உங்கள் முயற்சியும் தோற்றுப்போனது. தகாத வார்த்தைகள் என்றும் தீயவர்களை திருத்தாது.

நான் சினிமா பார்ப்பதில்லை என்பதை பல முறை சொல்லி இருக்கிறேன். எப்போதாவது பார்க்கத் தோன்றினால் அஜீத் நடித்த படங்கள் விரும்பி பார்ப்பதுண்டு. அஜீத் சினிமாவில் மட்டுமல்ல தன் தனிப்பட்ட வாழ்விலும் நாகரீகமானவர். ஆனால் இங்கு விஜய் ரசிகர்கள் கடைபிடிக்கும் நாகரீகம் கூட அஜீத் ரசிகர்களால் கடைபிடிக்கப் படுவதில்லை என்பது என் எண்ணம். சமீபத்திய பத்துக்களும் அதற்கு சான்றாக இருக்கிறது. தல ரசிகர்களே, குறைந்தபட்ச நாகரீகமாவது எழுத்தில் காட்டுங்கள். உங்கள் நடிகர்களுக்கு வைஸ்வெர்ஸாவாக இருக்கின்றீர்களே…

நன்றி!

10 comments:

  1. //பழஞ்சொல்.//

    கரெக்ட்....பழமொழின்னு சொல்லக் கூடாதில்ல.

    //இங்கு விஜய் ரசிகர்கள் கடைபிடிக்கும் நாகரீகம் கூட அஜீத் ரசிகர்களால் கடைபிடிக்கப் படுவதில்லை //

    இவ்வாறு, ஒரு நடு நிலையான நீங்கள் கருதியிருக்கின்றீர்களெனில் ஒரு அஜீத் ரசிகன் எனும் முறையில்
    தலைகுனிகின்றேன்.

    ReplyDelete
  2. குங்குமத்தில் வந்தமைக்கு வாழ்த்துக்கள் பீர்...

    தொடர்ந்து கலக்குங்க....!

    ReplyDelete
  3. PEER வாழ்த்துக்கள் விருது பெற்றமைக்கு குங்குமத்தில் வந்தமைக்கு !!!!

    ReplyDelete
  4. மனசுல பட்டத சொல்லி இருக்கீங்க.. ஒத்துக்கிறோம்.. திருத்திக்கிறோம்.. குங்குமத்துக்கும், விருதுக்கும் வாழ்த்துகள் நண்பா

    ReplyDelete
  5. விருதுக்கு வாழ்த்துக்கள்!

    மற்ற சர்ச்சைகுறிய விசயங்களுக்கு கருத்து சொல்லுமளவுக்கு நான் பெரிய ஆள் இல்லை என்பதால் வுடு ஜூட்!

    ReplyDelete
  6. //தல ரசிகர்களே, குறைந்தபட்ச நாகரீகமாவது எழுத்தில் காட்டுங்கள். உங்கள் நடிகர்களுக்கு வைஸ்வெர்ஸாவாக இருக்கின்றீர்களே…//

    சரியாச் சொன்னீங்க.

    ReplyDelete
  7. நன்றி டக்ளஸ் ராஜூ, உரிமையோடு சொன்னேன்.

    நன்றி செய்யது,

    நன்றி அபுஅஃபஸர்,

    நன்றி கார்த்திக்,

    நன்றி வால்,

    நன்றி ஸ்ரீதர்,

    ReplyDelete
  8. வாழ்த்துகள் தலை.. இன்ன்னும் சிகரம் தொட சக்கரையின் இனிப்பான வாழ்த்துகள்

    ReplyDelete
  9. வாழ்த்துகள் சகா...

    //இங்கு விஜய் ரசிகர்கள் கடைபிடிக்கும் நாகரீகம் கூட அஜீத் ரசிகர்களால் கடைபிடிக்கப் படுவதில்//

    இரண்டு தரப்பிலும் இப்படி சிலர் இருப்பதுண்டு.. என்னதான் அடிச்சிக்கிட்டாலும், நடிகர்கள், நட்பைத் தாண்டிதான் என்று நினைத்தால் நலம்..

    ReplyDelete
  10. //தல ரசிகர்களே, குறைந்தபட்ச நாகரீகமாவது எழுத்தில் காட்டுங்கள். உங்கள் நடிகர்களுக்கு வைஸ்வெர்ஸாவாக இருக்கின்றீர்களே…//

    இப்பொழுதுதான் படித்தேன்...

    யோசிக்க வைத்தது.. திருத்தி கொள்கிறேன்..

    ReplyDelete

மனம் திறந்து செதுக்குங்கள், என் எழுத்துக்களை.