Jul 4, 2009

மதுரை சாலைகள்

சென்ற மதுரை பதிவர் சந்திப்பில் நண்பர் ஒரு கேள்வி எழுப்பி இருந்தார், ‘மதுரை பல ஆண்டுகளாக பெரிய வளர்ச்சியடையாமலும், இன்னும் இது ஒரு பெரிய கிராமமாகவே இருக்கிறதே, ஏன்?’ தெரிந்தவர்கள் சொல்லுங்கள், ப்ளீஸ்.

இம்முறை திருச்சி விமான நிலைத்திலிருந்து மதுரை செல்வது இந்த அளவுக்கு எளிதாக இருக்கும் என்று நினைத்துப் பார்க்கவில்லை. முன்பொரு முறை திருச்சியில் இருந்து மதுரைக்கு கிட்டத்தட்ட 5 மணி நேரங்கள் ஆனது. இம்முறை வெறும் 2 மணி நேரங்கள் தான். நான்கு வழிச்சாலை கட்டுமான பணி மேலூர் வரை அனேகமாக அனைத்து இடங்களிலும் முடிந்துவிட்டிருந்தது. ஊர்களுக்கு வெளியேயே சாலையை கொண்டுபோயிருப்பதும் ஆங்காங்கே பேருந்து நிறுத்தங்களுக்கான அழகான நிழற்குடைகள் நிருவியிருப்பதும் இதன் சிறப்பு எனலாம். இடைப்பட்ட சிறிய பணிகள், மீதமிருக்கும் பாலம் கட்டுமானம் மற்றும் மேலூர் – மதுரை சாலையும் நிறைவடைந்துவிட்டால் 1 1/2 மணியில் திருச்சி – மதுரை யை கடக்கலாம் என நினைக்கிறேன். நகருக்கு வெளியே கட்டப்பட்டு வரும் சுங்க வாயில்கள்தான் வயிற்றில் சுண்ணாம்பைக் கறைக்கிறது.

மதுரை விமான நிலையத்தையும் சர்வதேச நிலையமாக்கும் பணிகள் நடப்பதாக அதுவும் அண்ணன் அமைச்சரான பிறகு விரைந்து நடப்பதாக வரும் தகவல்கள் வெளிநாட்டில் வேலை செய்யும் எம்போன்றோருக்கு மகிழ்ச்சி தருகிறது. மதுரை விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக்கப்பட்டால் மதுரை, திண்டுக்கல், இராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட பயணிகள் பயனடைவார்கள்.

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலை சுற்றி இருக்கும் சித்திரை வீதி நான்கிலும் வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது என முன்னமே அறிந்திருந்தாலும், தடைக்குப்பறகு அந்தப்பகுதிக்கு இதுவரை சென்றதில்லை. ஒரு முக்கிய பிரமுகரைக்காண நேரம் கேட்கையில் , ‘கோயிலைச் சுற்றி தான் காலையில் நடப்பதாகவும் நீயும் வந்தால் நடந்துகொண்டே பேசலாமே’ என்றதால், அவரைக் காண அதிகாலை ஆறு மணிக்கே அங்கு செல்லவேண்டி வந்தது. தட்டோடு போன்ற கற்கல் பதிக்கப்பட்டு சுற்றப்பாதை நன்றாகவே பராமறிக்கப்பட்டு வருகிறது. மாடுகள் குறுக்கே வராமலும் இன்னும் சற்று துப்புரவிலும் கவனம் செலுத்தினால், காலையில் வாக்கிங் செல்ல ஏற்ற இடம்.

பெரியார் பேருந்து நிலையம் அருகே இரயில்வே மேம்பாலம் அகலமாக கட்டியிருந்தாலும், பேருந்து நிலையத்தை சுற்றிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் குறைந்தபாடில்லை. மாவட்ட போக்குவரத்து ஆணையரும் அடிக்கடி போக்குவரத்தில் எத்தனையோ மாற்றம் கொண்டுவருகிறார். ஒன்றும் மாறியதாக இல்லை. மாநகராட்சி பேருந்து நிலையத்தின் வடக்கு பகுதி அதாவது ஜெயராம் பேக்கரி பகுதியில் தான் அதிகமான வாகன நெரிசலை காண முடிந்தது. அந்த பகுதியை கடப்பதுதான் எனக்கும் சிரமமாக இருந்தது. எனவே அங்குள்ள இருசக்கர வாகன நிறுத்தமும் அதை ஒட்டியுள்ள சிறு கடைகளும் மற்றும் மாநகராட்சி கட்டிடமும் சற்றே ஒதுக்கப்பட்டு அந்த சாலை விரிவு படுத்தப்படாத வரை வாகன நெரிசலை கட்டுப்படுத்த முடியாது என நினைக்கிறேன்.

கூட்ட நெரிசல் இல்லாது இருந்த மேலமாசி வீதி தெற்கு பகுதியில் ஆலுகாஸ், பீமா நகைக்கடைகளும் தற்போது போத்தீஸூம் வந்த பிறகு நடக்க கூட இடமில்லை. போத்தீஸ் திறப்பு தினத்தன்று அந்த சாலையில் வாகன போக்குவரத்து முற்றிலும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

பைபாஸ் ரோடு நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது. காளவாசல் ஜோத்தீஸில் இருந்து நாயுடுஹால், அழகப்பச்செட்டி அசைவ உணவகம் மற்றும் பல கடைகள் புதிது புதிகாக முளைத்துள்ளது நகர் விரிவடைவதையும் நுகர்வோர் தேவை அதிகரிப்பதையும் காட்டுகிறது.

மதுரையில் நகர்புறச் சாலைகள் மேம்பட்டிருக்கிறது. ஒரு நாட்டின் உள்கட்டுமானம், அந்நாட்டு வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது என்பது மறுக்க முடியாதது. ஆக இனி மெல்ல மதுரை வளர்ச்சியடையும் என நம்பலாம்.

நன்றி.

21 comments:

  1. //மதுரை பல ஆண்டுகளாக பெரிய வளர்ச்சியடையாமலும், இன்னும் இது ஒரு பெரிய கிராமமாகவே இருக்கிறதே, ஏன்?’ //

    என்னை பொறுத்தவரை இது சந்தோசப்பட வேண்டிய விசயம்!

    ReplyDelete
  2. //இனி மெல்ல மதுரை வளர்ச்சியடையும் என நம்பலாம்.//

    அண்ணாத்த பாக்கெட்டும் நிரம்பும்!

    ReplyDelete
  3. மதுரை , மிக பெரிய நகரமாக மாறுவதற்கு மிக பெரிய உடன்பாடில்லை பீர் அவர்களே.இப்பொளூது எப்படி உள்ளதோ அப்படி யெ இருக்க்ட்டும். சென்னை மாதிரி வந்து மனிதாபிமானம் தொலைந்து போக மனமில்லை.
    மதுரையை என்னுடைய உயிரினும் மேலாய் மதிக்கிரேன்.அன்பு என்பது மதுரைக்காரங்களுக்கு தான் தெரியும்.
    மிக பெரிய வளர்ச்சி கண்டு , எல்லோரும் பணம் பின்னால் போகும் நிலை நம் ஊருக்கு வரவேண்டாம். சென்னை போல போலி வாழ்க்கை வேண்டாம் நண்பா

    ReplyDelete
  4. நன்றி குப்பன்_யாஹூ,

    ஆமாம் வால், அதனால் தான் மதுரைக்காரர்கள் என்று சொல்வதில் பெருமைப்படுகிறோம்.

    ReplyDelete
  5. நன்றி KaveriGanesh,

    மதுரை, மதுரைக்காரர்களின் தனிச்சிறப்பு மனிதாபிமானம். பணம் மற்றும் நாகரிக வளர்ச்சியால் அது மாறாது என்பது என் எண்ணம். நாம் நாமாகவே இருப்போம் கணேஷ்.

    ReplyDelete
  6. நீங்கள் சொல்வது நியாயம்தான் நண்பா.. முன்னைக்கு இப்போ பரவாயில்லை.. மதுரை மக்களோட மனசு மாதிரி ரோடுகளும் பளிச்சுன்னு ஆகி ஊரும் முன்னேறுனா சந்தோஷம்தான்..

    ReplyDelete
  7. கடைசியாக மதுரைக்கு போகும் போது நான் பத்தாவது படித்து கொண்டிருந்தேன்.

    எட்டு வருடங்களுக்கு பிறகு,மதுரையிலிருந்து இப்போது உங்கள் மூலம் ஒரு சிறுநற்செய்தி.

    ReplyDelete
  8. \\மதுரை விமான நிலையத்தையும் சர்வதேச நிலையமாக்கும் பணிகள் நடப்பதாக அதுவும் அண்ணன் அமைச்சரான பிறகு விரைந்து நடப்பதாக வரும் தகவல்கள் வெளிநாட்டில் வேலை செய்யும் எம்போன்றோருக்கு மகிழ்ச்சி தருகிறது. \\

    'அ'ண்ணன் செயவாரா...?
    எம்.ஜி.ஆரின் கனவை பலிக்கச் செய்தால் நல்லதுதான்..!
    அப்டியே அவரோட அடிபொடிகள அடக்கினாலும் நல்லது.
    ஆமா. யார் அந்த பிரமுகர், வர்தானா..?

    ReplyDelete
  9. சென்னையில் என்ன நடந்தாலும் அதைப் பத்துப் பதினைந்து வருடம் கழித்து மதுரை காப்பியடிக்கும் என்று சொல்வார்கள். மதுரைக் காரன் என்ற முறையில், கேட்கும்போது சங்கடமாக இருந்தாலும், நடப்பதைப் பார்க்கும் போது உண்மை என்று தான் தெரிகிறது.
    நான்கு வெளிவீதிகளுக்குள் உள்ள மதுரையை முற்றிலும் மாற்ற முடியாது, ஆனால் மேலும் மேலும் சீரழிவதைத் தடுக்கலாம். நடைபாதையில் கடை விரிப்பதைக் கண்டிப்போடு தடுத்தாலே, பாதிப் பிரச்சினை தீர்ந்தது.

    மதுரையின் முக்கியமான பலவீனம், நடைபாதை ஆக்கிரமிப்புக்கள், நாங்க மாறமாட்டோம்ல என்று வாந்தி எடுத்ததன் மேலேயே விழுந்து கிடப்பது என்ற குணாதிசயம். யாரோ ஒரு ஹீரோ வந்து நம்மைக் காப்பாற்றுவான், நாம் ஒன்றுமே செய்ய வேண்டியது இல்லை என்ற அசமந்தத்தனம்...இப்படி வளர்ச்சிக்குத் தடையாக,நம்மிடமே ஏராளமான காரணங்கள் இருக்கும்போது, பாண்டியனின் மதுரைக்குப் புதிய பெருமை சேர்ப்பது எது என்று போத்தீஸ் விளம்பரத்தைப் பார்த்துத் தான தெரிந்து கொள்ள வேண்டும்?

    சிங்காரச் சென்னை வந்து விட்டது!! அடுத்து மதுரைக்கும் புதிய பெருமை கிடைத்து விட்டது! யாராவது இல்லை என்று சொல்ல முடியுமா, என்ன!!

    ReplyDelete
  10. எத்தனை லேன் வந்து என்ன செய்ய. அதற்குள் தான் செல்ல வேண்டும் என்ற எண்ணம் எந்தவித வாகனத்திற்கும் இல்லை. முக்கியமாக heavy vehiclesக்கு இல்லை. இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் எவன் எப்பொழுது எதிர்த்து வருவான் என பயந்து வயிற்றில் புளியைக் கரைத்துக்கொண்டே ஓட்ட வேண்டியிருக்கிறது.

    ReplyDelete
  11. //நகருக்கு வெளியே கட்டப்பட்டு வரும் சுங்க வாயில்கள்தான் வயிற்றில் சுண்ணாம்பைக் கறைக்கிறது//

    You wanna see all the changes without paying anything... Government is not from MARS / VENUS.. We are the government.. we need to pay the Tax / Tolls / levies..

    ReplyDelete
  12. மீனாட்சி அம்மன் கோவில் சுற்றுச்சாலை நடப்பது ஏற்ற மாதிரி இருந்தாலும் அந்த கட்டணக்கழிப்பிடம் உள்ள சாலை சந்திக்கும் இடம்!!! மூக்கை பிடிக்காமல் கடக்கமுடியாது.
    கூடிய விரைவில் சரி செய்யப்படும் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  13. ////இனி மெல்ல மதுரை வளர்ச்சியடையும் என நம்பலாம்.//
    நிச்சயமாக.

    ReplyDelete
  14. ஆமாம் கார்த்திக், ஊரும் மதுரை மக்கள் போல முன்னேற்றம் அடையும் என்பதில் சந்தேகம் இல்லை.

    நன்றி செய்யது, இது ஒரு நற்செய்தி தான்.

    டக்ளஸ், அந்த பிரமுகர் அங்கெல்லாம் நடக்க வருவதில்லை.

    நன்றி கிருஷ்ணமூர்த்தி, சிறிது சிறிதாக நடைபாதை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருவதாக அறியப்பெற்றேன். பார்ப்போம்.

    நன்றி சொல்லச் சொல்ல, ஒரு வழிச்சாலையைக் காட்டிலும் இதில் ஆபத்து குறைவுதானே? என்ன சொல்கிறீர்கள்?

    அனானி அண்ணே, சரிங்கண்ணே... வரி கொடுத்துடுவோம். நன்றி.

    ஆமாம் வடுவூர் குமார், கூடிய விரைவில் சரி செய்யப்படலாம். செய்யப்பட வேண்டும். நன்றி.

    நிச்சயமாக ஸ்ரீதர், வளர்ச்சியை பார்க்கத்தான் போகிறோம்.

    ReplyDelete
  15. // மதுரை விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக்கப்பட்டால் மதுரை, திண்டுக்கல், இராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட பயணிகள் பயனடைவார்கள்.//

    அப்பு தேனி மாவட்டத்தை விட்டு புட்டீகளே. தேனிக்கார பய நானு...

    மதுரையின் மகத்துவமே, அதன் பழமை மாறாதிருப்பது தான். எஸ்.ரா கூட தனது வலைமனையில் மதுரையைப் பற்றி சிறப்பான பதிவுகள் பதிந்துள்ளார்...

    ReplyDelete
  16. //Blogger பிரசன்னா இராசன் said...
    .. அப்பு தேனி மாவட்டத்தை விட்டு புட்டீகளே. தேனிக்கார பய நானு...

    மதுரையின் மகத்துவமே, அதன் பழமை மாறாதிருப்பது தான். எஸ்.ரா கூட தனது வலைமனையில் மதுரையைப் பற்றி சிறப்பான பதிவுகள் பதிந்துள்ளார்..//

    தேனியை மதுரை மாவட்டம் என்ற நினைப்பிலேயே இருந்துவிட்டேன்... ஹி ஹி...
    இனி மதுரையில் இருந்து பிரித்து, பதிவுகளில் சேர்த்துப்புடுவோம்ப்பு...

    சரியா இந்தப்பதிவுக்கு அடுத்து நாள் எஸ்ரா பதிவு, மதுரை தெருக்களைப் பற்றியது வந்திருந்தது என்று நினைவு.

    நன்றி பிரசன்னா இராசன்,

    ReplyDelete
  17. திருச்சி-மதுரை பயண நேரம் குறைந்திருப்பது மகிழ்ச்சிதான்.. முன்பெல்லாம் மூன்று மணி நேரமாகும்..

    மீனாட்சியம்மன் கோவிலைச் சுற்றியுள்ள கடைகளை அப்புறப்படுத்தி உண்மையாகவே அதை ராஜவீதியாக வைத்திருக்க வேண்டும்..

    அரசும், அரசியலும், அரசியல்வியாதிகளும் ஒன்று சேர்ந்து கூட்டுக் கொள்ளையடித்து இஷ்டத்திற்கு அனுமதி கொடுக்க.. இப்போது ராஜகோபுரத்திற்கு இணையான உயரத்திற்குக்கூட கட்டிடங்கள் வளர்ந்துவிட்டன.

    திருக்கல்யாண கோலம் உலா வரும் பெரிய வீதிகளும் இன்றைக்கு அடைக்கப்பட்ட வியாபார கேந்திரங்களாகிவிட்டன.

    கோவில் மாநகரம் என்ற பெயர் போய் நெரிசல் மாநகரமாகிவிட்டது..

    ReplyDelete
  18. அன்பு பீர், மதுரையை பற்றிய உங்களின் அக்கறையிலும்,கரிசனையிலும் ,நானும் இந்த மதுரைக்காரன் என்ற முறையில் தலை வணங்குகிறேன்.பதிவு சூப்பர்.
    "ஜெரி ஈசானந்தா".

    ReplyDelete
  19. நன்றி உண்மைத்தமிழன்,

    <<<>>>

    நன்றி ஜெரி ஈசானந்தா,

    ReplyDelete

மனம் திறந்து செதுக்குங்கள், என் எழுத்துக்களை.