நான் எட்டு முடித்து ஒன்பதின் முதல்நாள் வகுப்பில் அமர்ந்திருந்தேன். என் பழைய நண்பர்களில் சிலர் காணாமல் போயிருந்தனர். விசாரித்ததில், அடுத்த வருடம் பொது தேர்வு என்பதால் வேறு நல்ல பள்ளியில் சேர்ந்துவிட்டதாக அறியப்பெற்றேன். முதல் நாள் வகுப்பாசிரியர் வர தாமதம் ஆகும் என்பதால் அரட்டை அடித்துக்கொண்டிருந்தோம். அப்போது தான் அவர் வாசலில் நின்று எட்டிப்பார்த்தார். அரைக்கை காட்டன் சட்டை. மடித்து வாரப்பட்ட அடர்த்தியான தலைமுடி. மீசை மட்டுமல்லாது ஆளும் வளர்ந்திருந்ததால், பத்தாம் வகுப்பறையை தேடி வந்திருப்பார் போல என நினைத்து நான் தான் சொன்னேன், “என்ன பாஸ், பத்தாவதா? ரெண்டு க்ளாஸ் தாண்டி இருக்கு. போங்க”. அதற்கு அவர் சொன்னார், “இல்ல நைன்த் பி”. “அட நம்ம க்ளாஸ் தானா? உள்ள வாங்க, கடைசி பெஞ்சுல வந்து உட்காருங்க பாஸூ”. கவனிக்கவும் நானும் கடைசிபெஞ்ச் தான். சரியாக படிக்காதவர்களுக்குத் தான் கடைசி பெஞ்சு என்று நீங்கள் நினைத்தால், தவறு. நாங்கள் சுமாராக படித்தும், சற்றே உயரம் அதிகம் என்பதால் தான் கடைசியில் அமர வைக்கப்பட்டோம்.
கடைசி பெஞ்சில் என்னருகிலேயே வந்து அமர்ந்தார். வகுப்பில் அனைவரும் அவரையே பார்த்துக்கொண்டிருக்க, நான் தான் ஆரம்பித்தேன் “உங்க பேரு என்ன பாஸூ?” . “சிக்கந்தர் அலி” ‘”பாக்க பெரிய ஆளாட்டம் இருக்கீங்க, பெயில் ஆகிட்டீங்களா, சிக்கந்தர் அலி?”. “இல்ல. எங்க வாவாக்கு(அப்பாவுக்கு) மிலிட்டரில வேல, நார்த் சவுத்ன்னு மாறி மாறி அலஞ்சதுனால இடைல ரெண்டு வருஷம் மிஸ் ஆயிடுச்சு” “சிக்கந்தர் அலின்னு முழுப்பேரச் சொல்லி கூப்பிட வசதியா இல்ல, ஷாட்டா அலின்னு கூப்பிடவா, பாஸூ? அலி ன்னா அரபியில வீரன் ன்னு அர்த்தம், ஆனா இங்க அப்படி கூப்பிட்டா ஒரு மாதிரியா இருக்கும், சிக்கந்தர் – சிக் - சிக்கி ன்னு கூப்பிடலாமா?” இப்படியாக சிக்கி என்று நாமகரணம் சூட்டப்பட்டது. சிக்கி என்னைவிட இரண்டு வயது மூத்தவர். எனக்கு எப்படி அழைப்பது என்று தடுமாற்றம் இருந்ததை அவரேதான் கழைந்தார். “நீங்கன்னு ஏன் சொல்லிக்கிட்டு, நீ ன்னே சொல்லு. அப்பதான் நட்பு வலுப்படும்”. சிக்கந்தர் அலி என்ற அவர், சிக்கி என்ற அவனானான்.
எங்கள் பள்ளியிலேயே எட்டு ‘சி’யில் படித்த ராதா கிருஷ்ணன் என்ற ராதாவும், ஒன்பது ‘பி’க்கு மாற்றப்பட்டான். அவனும் சற்று உயரம் என்பதால் கடைசி பெஞ்சில் வந்தமர்ந்தான். மூவரும் சம்பிரதாயமாக பார்த்து சிரித்துக் கொண்டோம். சிக்கி, ராதா, நான் என்ற மூவர் கூட்டணி உருவானது இப்படித்தான்.
அந்த வருடம் நடந்த பள்ளி தேர்தலில், ஒவ்வொரு வகுப்பாக சென்று நாங்கள் மூவரும் சிக்கிக்காக வாக்கு சேகரிக்க, பள்ளி மாணவத் தலைவனாக சிக்கி தேர்ந்தெடுக்கப்பட்டான். அதன் பிறகு இரண்டு வருடம் பள்ளி எங்கள் கட்டுப்பாட்டில் இருந்தது நல்ல அனுபவமாக இருந்தது. தைரியமாக பல சேட்டைகள் செய்தோம்.
சிக்கியிடம் ஒரு நல்ல பழக்கம் இருந்தது. சக மாணவிகளை சைட் அடிக்க மாட்டான். அவனது தோற்றத்திற்கு மாணவிகள் தரும் மரியாதைக்காக இருக்கலாம் என்று நானாக எண்ணிக்கொண்டேன். அனைத்து மாணவிகளிடமும் அவன் சகஜமாக பேசுவான், அவைகளும் அவ்வாறே. ராதாவை கண்டாலே அனைவருக்கும் பயம் இருந்திருக்கும். யாரும் அவனிடம் பேசுவதில்லை. நான் மாணவிகளிடம் என்ன என்றால் என்ன அவ்வளவுதான் பேசுவேன்.
சிக்கிக்கு கொஞ்சம் டெக்னிகல் அறிவு இருந்தது. வீட்டில் பழைய ரேடியோ, டேப் ரிக்கார்டர் பொன்றவை அடுக்கிவைக்கப்பட்ட மேசை ஒன்றை வைத்திருந்தான். ஒருமுறை பள்ளியில் நடந்த விளையாட்டு போட்டியில் நாங்களே எங்கள் வீடுகளில் இருந்து மைக், ஸ்பீக்கர் செட் கொண்டு வந்து பள்ளியை ஒலியில் மூழ்கடித்தோம். அந்த ஏற்பாடு தலைமைக்கு பிடித்துப்போக, பள்ளியில் நிரந்தரமாக இதே ஏற்பாட்டைச் செய்து தினமும் காலை ப்ரேயர் ஒலியை பெருக்க முடிவு செய்துவிட்டனர். அதற்கான பொறுப்பும் எங்களிடமே வழங்கப்பட்டது. அஹூஜாவில் 4 ஸ்பீக்கரும் மைக்கும் வாங்கியதில் ஒரு தொகை கிடைத்தது. ஆளுக்கு ஒரு வெள்ளைச் சட்டை வாங்கியது போக மீதி இருந்த பணத்தில் ஒரு பாட்டில் வாங்கி இருவரும் குடித்தார்கள். அது பற்றி கேட்டதற்கு, “பீர், நீ குடிக்க வேண்டாம் சும்மா இருந்தால் போதும்” என்று சிக்கி சொன்னான். அப்போதுதான் தெரிந்தது அவர்கள் தண்ணி அடிப்பார்கள் என்று. அதன் பிறகு ராதா தம் பற்றவைக்க, சிக்கியும் அதிலேயே அவனது தம்மையும் நெருப்பாக்கினான். “அடப்பாவிகளா…” “இல்லடா, தண்ணி அடிச்சிட்டு தம் அடிக்கலைன்னா ஒரு மாதிரியா இருக்கும்” “இதெல்லாம் நல்லதுக்கு இல்லடா…” “அப்ப… நீ பண்றது மட்டும் நல்லதா?” “நான் என்னடா பண்ணேன்?” “டேய் அந்த சுதா மேட்ரு எங்களுக்கும் தெரியும்டா” அவர்கள் வாயில் நெருப்பு வைத்து என் வயிற்றில் ஐஸ் வைத்தார்கள்.
சுதா அப்போதுதான் என்னை திரும்பி பார்க்க ஆரம்பித்து இருந்தாள். அதை நான் பார்ப்பதற்குள் இவர்கள் பார்த்துவிட்டார்கள் போல, க்ராதகர்கள். ஆனால் நல்லவர்கள், எப்போதாவது நான் அவளை பார்க்காமல் பாடத்தை கவனித்தால், சிக்கிதான் என் தொடையில் கிள்ளி திரும்பி பார்க்கச் சொல்லுவான். சில நாட்களிலேயே எங்கள் பார்வை புன்னகையாக உறுப்பெற்றது. அப்படி ஒருநாள் புன்னகைத்துக் கொண்டிருந்த போதுதான் தலையில் ‘டொய்ங்’ ஒரு குட்டு விழுந்தது, ஆ… தமிழம்மா. அடுத்த நாள் சுதா வகுப்பில் இல்லை. 9 ‘ஏ’ க்கு மாற்றிவிட்டார்களாம். புள்ளி வைப்பதற்குள் கொள்ளி வைத்து விட்டார்கள்.
ராதா அப்போதே தீபாவளிக்கு கிடைத்த பண்டிகை பணத்தை சேர்த்து வட்டிக்கு விட்டிருந்தான். இப்போதும் அதே தொழில் தான் என்று சிக்கி சொல்லக் கேட்டிருக்கிறேன். கடந்த மாதம் தான் திருமணம் முடிந்தது. நான் ஊரில் இருந்தேன், இருந்தாலும் கலந்து கொள்ளவில்லை. முதலாவது வரதட்சணை வாங்கப்படும் / கொடுக்கப்படும் திருமணங்களுக்கு செல்வதில்லை என்ற எனக்குள் நான் வைத்திருக்கும் கோட்பாடு. இரண்டாவது, வட்டி.
சிக்கி க்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். என் திருமண வரவேற்பிற்கும் வந்திருந்தார்கள். சின்னதாக ஒரு செல்போன் சர்வீஸ் சென்டர் வைத்திருக்கிறான். வரவுக்கும் செலவுக்கும் சரியாக இருப்பதாகவும், வெளிநாட்டில் நல்ல வேலை வந்தால் தெரியப்படுத்தவும் சொன்னான். சிக்கிக்கு அப்போது நான் சொன்னது, “வெளிநாடு ஒரு போதை மாதிரி, அங்கிருப்பவர்கள் இங்கு வரவும், இங்கிருப்பவர்கள் அங்கு செல்லவும் நினைப்பார்கள். வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு இழப்புகள் அதிகம். இதுவரை இழந்தது போதும் என்றுதான், நான் இங்கு வர நினைக்கிறேன். உனது தொழிலில் முழு திறமையை வெளிப்படுத்தினால் நிச்சயமாக இதை முன்னேற்றலாம், இதிலிருந்து முன்னேறலாம். வெளிநாட்டில் கூலி வேலை செய்யும் உன் மனோநிலையை மாற்றி, இந்த தொழிலை முன்னேற்ற அல்லது குறைந்தபட்சம் இதே நிலையில் தொடர்ந்து நடக்குமாறு பார்த்துக்கொள். குடும்பத்தோடு மகிழ்ச்சியாக இருக்கலாம். எனக்கு நம்பிக்கை இருக்கிறது நிச்சயம் இருப்பாய்” என்று வாழ்த்திவிட்டு வந்தேன்.
நன்றி!
\\கவனிக்கவும் நானும் கடைசிபெஞ்ச் தான். \\
ReplyDeleteஅப்பறம் கவர்னர் ஸீட்டா கிடைக்கும்.
\\நாங்கள் சுமாராக படித்தும்,\\
ReplyDeleteஆனாலும் உங்களுக்கு இவ்வளவு குசும்பு ஆகாதண்ணே.
\\மிஸ் ஆயிடுச்சு”\\
ReplyDeleteஅது எப்போ "மிஸஸ்" ஆகுமாம்..?
நல்லா இருக்கு கதை.... ஆமா இது எந்த புஸ்தகத்திலே வந்துச்சு....
ReplyDelete\\“பீர், நீ குடிக்க வேண்டாம் சும்மா இருந்தால் போதும்”\\
ReplyDeleteபீர் அடிக்காட்டி என்ன..?
"ஹாட்" அடிக்க வேண்டியதுதான...!
/*நான் 8 முடித்து 9 ன் முதல்நாள் வகுப்பில் அமர்ந்திருந்தேன்.*/
ReplyDeleteஅட... நானும் இங்கே எட்டு ரவுண்டு முடிச்சி ஒம்பதாவது ரவுண்டுக்கு வெயிட்டிங்.
சரி நடக்கட்டும்... இன்னிக்கு நானா???
ReplyDelete\\வரதட்சணை வாங்கப்படும் / கொடுக்கப்படும் திருமணங்களுக்கு செல்வதில்லை என்ற எனக்குள் நான் வைத்திருக்கும் கோட்பாடு. இரண்டாவது, வட்டி.\\
ReplyDeleteநல்ல கொள்கை தலைவா...!
/*நான் 8 முடித்து 9 ன் முதல்நாள் வகுப்பில் அமர்ந்திருந்தேன்.*/
ReplyDeleteபாசு.... நாங்கல்லாம் டைரெக்ட்டா ஒன்பதாம் வகுப்பு போனோம்.
\\எந்த புஸ்தகத்திலே வந்துச்சு....\\
ReplyDelete:)
// நையாண்டி நைனா said...
ReplyDeleteநல்லா இருக்கு கதை.... ஆமா இது எந்த புஸ்தகத்திலே வந்துச்சு....//
நல்லவேளை... எங்க நம்பிடுவீங்களோன்னு பயத்தில இருந்தேன். ;(
டேய்... டக்கு நீயும் இங்கே தான் இருக்கியா...
ReplyDeleteபக்கத்திலே நம்ம பாசு படத்தை பாருடா... அப்பிடியே அண்ணாதுரை மாதிரியே இல்லே.
மொதல்ல அண்ணாத்துரை யாருன்னு சொல்லுங்க நைனா..!
ReplyDeleteஅப்பறம் நைனா, வீட்ல எல்லாரும் சௌக்கியமா...?
ReplyDelete/*மொதல்ல அண்ணாத்துரை யாருன்னு சொல்லுங்க நைனா..!*/
ReplyDeleteஅண்ணாதுரை தெரியாது உனக்கு..???
/*மொதல்ல அண்ணாத்துரை யாருன்னு சொல்லுங்க நைனா..!*/
ReplyDeleteஅடப்பாவி.... அண்ணாதுரை தெரியாது உனக்கு..!!!
ஐயகோ.... என் செய்வேன் நான்....
ReplyDeleteடக்குக்கு அண்ணாதுரையை தெரியாதாம்....!!!
இதை கேட்டதும் என் உள்ளம் குமுருகிறதே... கொதிக்கிறதே.... அவனுக்கே தெரியவில்லை என்றால் நான் யாரிடம் கேட்டு தெரிந்து கொள்வேன்.
வீட்லே அனைவரும் நலம்.
ReplyDeleteதெரியாதே..!
ReplyDeleteயாரு சரத் குமாரா..?
/*என் பழைய நண்பர்களில் சிலர் காணாமல் போயிருந்தனர். விசாரித்ததில், அடுத்த வருடம் பொது தேர்வு என்பதால் வேறு நல்ல பள்ளியில் சேர்ந்துவிட்டதாக அறியப்பெற்றேன்.*/
ReplyDeleteஅடப்பாவி பயபுள்ளைகளுக்கு என்னா அறிவு? அப்பவே.
உங்க கூட இருந்த ஒன்னும் வேலைக்கு ஆகாதுன்னு தெரிஞ்சி வச்சிருந்திருக்கான்களே..!!! ஆஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
டக்கு,
ReplyDeleteசரதுகுமாறு....பேரு ஐயாத்துரை.
/*"ரெண்டு க்ளாஸ் தாண்டி இருக்கு. போங்க."*/
ReplyDeleteரெண்டு கிளாஸ் தாண்டி போனா அங்கே இருக்குறது V.S.O.P எனக்கு தேவை OLD MONK
அப்போ, யாரு இந்த அண்ணாத்துரை.
ReplyDelete/*நானும் கடைசிபெஞ்ச் தான். சரியாக படிக்காதவர்களுக்குத் தான் கடைசி பெஞ்சு என்று நீங்கள் நினைத்தால், தவறு. நாங்கள் சுமாராக படித்தும், சற்றே உயரம் அதிகம் என்பதால் தான் கடைசியில் அமர வைக்கப்பட்டோம்.*/
ReplyDeleteIn our Native Tamil there is a saying "மேரா பப்பா குதுள் கே அந்தர் நகி"
ஹரே, ஓ நைனா ஓ 'குதுள்' நகி ஹே, ஓ 'குதுர்'..
ReplyDeleteசம்ஜே..?
அன்ட் தென், கூ இஸ் பிரதர்ரோப்பன்...?
நீங்க "சிக்கி"ன்னு பேரு வச்சதுதானாலதாஆண் "சிக்கி"ட்டீங்க.?
ReplyDeleteஅப்புறம் என்னா மேட்டரு?
ReplyDeleteநைனா, இன்னும் சின்னப்புள்ளையாவே இருக்கீங்க..?
ReplyDeleteஎன்னா மேட்டர்ன்னு கேக்கப்புடாது..! யாரு மேட்டர்..? அப்டி கேக்கனும்.
\\நீங்கள் இடும் பின்னூட்டங்களே எனக்கான ஊக்க மருந்து, என்னைச் செதுக்கும் உளி. \\
ReplyDeleteஅப்போ, "ஆப்பு" யாரு..?
இதபத்தி சீரியஸா நான் ஒரு பதிவு சீக்கிரமே எழுதுறேன்!
ReplyDelete/பீர், நீ குடிக்க வேண்டாம் சும்மா இருந்தால் போதும்//
ReplyDeleteபீர பீர குடிக்கவேணானு சொல்றாய்ங்களே.
/“இல்லடா, தண்ணி அடிச்சிட்டு தம் அடிக்கலைன்னா ஒரு மாதிரியா இருக்கும்”//
ஆமா சாமி..
// புள்ளி வைப்பதற்குள் கொள்ளி வைத்து விட்டார்கள்//
விட்டால் நீங்கள் புள்ளியில் இருந்து பள்ளிக்கு புள்ளைய அனுப்புவியனு கொள்ளி வச்சிருப்பாஉங்களோ
எச் யூச் மீ நானும் வரலாமா ஆட்டத்துக்கு
ReplyDeleteயாருன்னாலும் ஆட்டத்திற்கு வரலாம்.
ReplyDeleteசும்மா தனியா இங்கே உக்காந்திருக்க பயமா இருக்கு...
ReplyDelete/*வால்பையன் said...
ReplyDeleteஇதபத்தி சீரியஸா நான் ஒரு பதிவு சீக்கிரமே எழுதுறேன்!*/
அண்ணே... இந்த சினிமா தேட்டரிலே எழுதி வச்சிருப்பாங்களே... வகுப்பு மாறி உக்காரக்கூடாதுன்னு அது மாதிரி நீங்க வகுப்பு மாறி வந்துட்டீங்கன்னு நினைக்கிறேன்.
தேங்க்ஸ் நைனா தோ வந்துட்டேன்
ReplyDeleteதேங்க்ஸ் நைனா தோ வந்துட்டேன்
ReplyDeleteடக்ளஸ் எஸ் ஆகிட்டாரா
ReplyDeleteநன்றி! டக்ளஸ், நையாண்டி நைனா மற்றும் பாசக்கார அனானி அண்ணன்கள்.....
ReplyDeleteஇப்போ சந்தோசமா? போய் சாப்டு தூங்குங்கப்பா... நாளைக்கு வேலைக்கு போகணும்...
நன்றி வால், சீரியஸ் பதிவை சீக்கிரம் எதிர் பார்க்கிறேன்.
ReplyDeleteநன்றி சூரியன்,
ReplyDeleteNaanum Kadaisi Bench,9B class than!
ReplyDelete//புள்ளி வைப்பதற்குள் கொள்ளி வைத்து விட்டார்கள்.//
ReplyDeleteரசித்தேன்
/*பீர் | Peer said...
ReplyDeleteநன்றி! டக்ளஸ், நையாண்டி நைனா மற்றும் பாசக்கார அனானி அண்ணன்கள்.....
இப்போ சந்தோசமா? போய் சாப்டு தூங்குங்கப்பா... நாளைக்கு வேலைக்கு போகணும்...*/
அண்ணே கோவிச்சுகாதீங்க,
நேத்து டூப்ளிகட் சரக்க அடிச்சிட்டோம் அதனாலே கொஞ்சம் மட்டையாயிட்டோம். அதனாலே இன்னிக்கு வேலைக்கு வர கொஞ்சம் லேட் ஆகி போச்சு...
கவலைபடாதீங்க... இன்னிக்கு சீக்கிரம் வேலைய படார்னு முடிச்சி தந்துர்றோம்.
/*சிக்கந்தர் – சிக் - சிக்கி ன்னு கூப்பிடலாமா?” இப்படியாக சிக்கி என்று நாமகரணம் சூட்டப்பட்டது.*/
ReplyDeleteஇப்படி அவரு உங்க கிட்டே சிக்கினார், "சிக்கி"ஆனார்.
இப்ப நீங்க எங்க கிட்டே சிக்கிகிட்டீங்க.
இஃகி... இஃகி... இஃகி... இஃகி...
/*சிக்கந்தர் அலி என்ற அவர், சிக்கி என்ற அவனானான்.*/
ReplyDeleteஅருமையான சொல்லாடல். மிக ரசித்தேன்.
/*எங்கள் பள்ளியிலேயே எட்டு ‘சி’யில் படித்த ராதா கிருஷ்ணன் என்ற ராதாவும், ஒன்பது ‘பி’க்கு மாற்றப்பட்டான்.*/
ReplyDeleteபாசு... இவரு உங்களை மாதிரி எட்டு முடிச்சிதானே ஒன்பது வந்தாரு???
இந்த தகவலை கொஞ்சம் சொல்லுங்களேன்.
/*சிக்கி, ராதா, நான் என்ற மூவர் கூட்டணி உருவானது இப்படித்தான். */
ReplyDeleteஅப்படின்னா வருகிற எலேக்சன்லே எதிர்பார்க்கலாம்????!!!!
/*சக மாணவிகளை சைட் அடிக்க மாட்டான். அவனது தோற்றத்திற்கு மாணவிகள் தரும் மரியாதைக்காக இருக்கலாம் என்று நானாக எண்ணிக்கொண்டேன்.*/
ReplyDeleteஅவரு அடிக்காததிற்கு மாணவிகளை பாராட்டும் உங்கள் எண்ணம், உங்களுக்குளே ஒரு கே. பாக்கியராஜ் இருக்காருன்னு காட்டுது.
50
ReplyDeleteஹே...ஹே.... நான்தாண்டா அம்பது.... நான்தாண்டா அம்பது.... நான்தாண்டா அம்பது.... ஹே...ஹே....
ReplyDelete( ஜெய் ஹோ... பேக் ரவுண்டில்)
ReplyDeleteமதுரை தோற்றது. நெல்லை வென்றது...!!!!
மதுரை தோற்றது. நெல்லை வென்றது...!!!!
மதுரை தோற்றது. நெல்லை வென்றது...!!!!
அன்பர் டக்கு அவர்களே... முடிந்தால் உங்களால் முடிந்தால் நூறடித்து உங்கள் பெருமையை காப்பாற்றி கொள்ளவும்.
(அப்பாடா... சிறுத்தைய சுரண்டி விட்டாச்சு.... பாப்போம் பொங்கி எழுதான்னு)
சார்... பீர் சார்...
ReplyDeleteபார்த்தீங்களா, நான் சொன்ன மாதிரி படாபட்-ன்னு வேலைய முடிச்சிட்டேன்...
இந்த டக்கு பயதான், அந்த சுவருக்கு அந்த பக்கமா நின்னு மட்டம் போட்டுக்கிட்டு இருக்கான்...
இப்ப வருவான் பாருங்க.
\\அன்பர் டக்கு அவர்களே... முடிந்தால் உங்களால் முடிந்தால் நூறடித்து உங்கள் பெருமையை காப்பாற்றி கொள்ளவும். \\
ReplyDeleteஇந்த சதியின் பின்னால் குங்குமம் புகழ் பிரபல பதிவர் பீர் அவர்கள் உள்ளாரோ..?
\\இப்ப வருவான் பாருங்க.\
ReplyDelete\
இது திட்டமிட்ட சதி..
யோவ் நைனா, இன்னும் 45 இருக்குய்யா..!
ReplyDeleteஎன்னால முடியாதப்பா...!
ReplyDeleteமீ த எஸ்கேப்பு..!
Naina Back to form, I mean comment form.
ReplyDeleteஇப்பவாவது சொல்லுங்க நைனா, யாரு அண்ணாத்தொரன்னு...!
ReplyDelete/*அவைகளும் அவ்வாறே.*/
ReplyDeleteஆணாதிக்கத்தின் வெளிப்பாடு.
வன்மையாக கண்டிக்கிறேன்.
/*நான் மாணவிகளிடம் என்ன என்றால் என்ன அவ்வளவுதான் பேசுவேன்.*/
ReplyDeleteஇப்படி "நேசம்" வடிவேலு மாதிரி பேச கூடாது. என்னன்னு கேட்டா பதிலை சொல்லோனும்.
/*.....அதற்கான பொறுப்பும் எங்களிடமே வழங்கப்பட்டது*/
ReplyDeleteபடிப்பே வராத என்னை மாதிரி மக்கு பிள்ளைகிட்டே வேற என்ன பொறுப்பை கொடுக்க முடியும்?
/*அஹூஜாவில் 4 ஸ்பீக்கரும் மைக்கும் வாங்கியதில் ஒரு தொகை கிடைத்தது. ஆளுக்கு ஒரு வெள்ளைச் சட்டை வாங்கியது போக மீதி இருந்த பணத்தில் ஒரு பாட்டில் வாங்கி இருவரும் குடித்தார்கள்.*/
ReplyDeleteஇங்கே பார்ரா.... ஆட்டைய போட்ட மேட்டரை எவ்ளோ நாசுக்கா சொல்லுது புள்ளை.
/*“பீர், நீ குடிக்க வேண்டாம் சும்மா இருந்தால் போதும்” என்று சிக்கி சொன்னான்.*/
ReplyDeleteஆமா... சரிதான். குடிச்சா ஒரு பாட்டிலோ ரெண்டு பாட்டிலோ உள்ளே அனுப்பனும், சும்மா கேஸ் கேசா அனுப்புனா இப்படிதான் சொல்வாங்கோ. அது மட்டும்னா கூட பரவா இல்லே... சரக்கு அடிசிப்புட்டு பண்ணுற அக்கிரமத்திற்கு வேற என்ன சொல்வாங்க.
/*அவர்கள் வாயில் நெருப்பு வைத்து என் வயிற்றில் ஐஸ் வைத்தார்கள்.*/
ReplyDeleteஇவ்ளோ சொல்லியும் நம்ம ஆளு பீர், பீரை குடிச்ச மேட்டரை எப்படி லாவகமா சொல்றாரு பாரு.
/*புள்ளி வைப்பதற்குள் கொள்ளி வைத்து விட்டார்கள்.*/
ReplyDeleteஅப்படில்லாம் ஒன்னும் இருக்காது... உங்க "ரோமான்சு" பார்வை அவ்ளோ டெர்ரரா இருந்திருக்கும்
we will meet after a short commercial break.
ReplyDelete//Vinitha JayaSeelan said...
ReplyDeleteNaanum Kadaisi Bench,9B class than!//
நன்றி Vinitha JayaSeelan, அப்படியா மிக்க மகிழ்ச்சி, வாங்க 'கடைசி பெஞ்சில் அமர்ந்தோர் சங்கம்' ஆரம்பிப்போம்.
<<<>>>
நன்றி சின்ன அம்மிணி,
ரசிக்கும்படியான பதிவு! சொல்லாடல் மிகவும் அருமை.
ReplyDeleteகூலி வேலையை (அது எவ்வளவு அதிக கூலியாக இருந்தாலும்) விட சுய தொழில்தான் உயர்ந்தது என்ற உங்கள் கருத்து வரவேற்கத் தக்கது.
நன்றி மற்றும் வாழ்த்துக்கள்!