Jul 11, 2009

நமக்காகத்தான் இந்த குறள்

(18+) தப்பா நினைக்காதிங்க...

ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒருவர் மருத்துவமனை சென்று ஸெமன் சோதனை செய்ய வேண்டும் என்கிறார். மருத்துவரும் அவருக்கு ஒரு சிறிய ப்ளாஸ்டிக் டப்பா கொடுத்து, அதில் சிறிது அளவு ஸ்பெர்ம் பிடித்து கொண்டு வரச்சொல்கிறார். ப்ளாஸ்டிக் டப்பாவுடன் சென்றவர் மறுநாள் வந்து அதை மருத்துவரிடம் கொடுக்கிறார்.

மருத்துவர் அதைப்பார்த்து விட்டு, 'என்னையா, உள்ள ஒண்ணுமே இல்ல, டப்பா நான் கொடுத்த மாதிரி அப்படியே இருக்கு' என்று கேட்க,

அவர் சொன்னாராம், ' ஐயா, நான் எவ்வளவோ முயற்சி செய்து பார்த்தேன் முடியவில்லை, என் மனைவியிடம் உதவி செய்யச்சொன்னேன் அவளும் வலது கை, இடது கை, வாய், பல் என முயற்சி செய்தும் முடியவில்லை. பிறகு அவளே அடுத்த வீட்டு பெண்ணிடம் முயற்சி செய்யச்சொன்னாள், அவளும் பலவாறு முயன்றும் முடியவில்லை, டாக்டர்.

மருத்துவர், ‘என்னது பக்கத்து வீட்டு பொண்ணா?’

‘ஆமாம் டாக்டர், இனி நீங்கள் தான் முயற்சி செய்ய வேண்டும். என்று சொல்ல...

மருத்துவர் மிரண்டு போகிறார், 'நானா?' '

‘ஆமா டாக்டர். நீங்கள் தான் எப்படியாவது இந்த டப்பாவை திறந்து தர வேண்டும்' என்றாராம்.

எப்பொரு ளெத்தன்மைத் தாயினும் அப்பொருள் மெய்பொருள் காண்ப தறிவு. - குறள்

<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>

(16+) மறுபடியும் தப்பா நினைக்காதீங்க

ஒரு அமெரிக்கர், ஒரு பாகிஸ்தானி, ஒரு இந்தியர் (அதாங்க நம்மாள்) மூவரும் கடும் வெய்யில் காலத்தில் நயாகராவில் குளிக்கச் செல்கிறார்கள். வெய்யில் அதிகம் என்பதால் முற்றும் திறந்த மேனியோடு குளித்துவிட்டு, அப்படியே வந்து சாய்விருக்கையில் சாய்ந்து கிடக்கிறார்கள். அப்போது அவ்வழியே இளம் பெண்கள் நான்கைந்து பேர் செல்வதைக்கண்டதும், உடைகள் எட்டும் தூரத்தில் இல்லை என்பதால் உடனடியாக அமெரிக்கரும் பாகிஸ்தானியும் தங்களது ப்ரைவேட் பார்ட்டை கைகளால் மூடுகின்றனர். நம்மாள் தன் கைகளால் முகத்தை மட்டும் மூடிக்கொண்டார். பெண்கள் சென்றதும் அவர்கள் நம்மாளிடம் கேட்டார்களாம், ‘ஏன்யா… முகத்தை மூடிக்கொண்டாய்’ என்று. அதற்கு நம்மாள், ‘எங்கள் ஊரில் முகத்தைதான் அடையாளம் வைத்துக் கொள்வார்கள்’ என்று சொன்னாராம்.

அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை ஆரிருள் உய்த்து விடும் – குறள்.

<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>

(60+) பதிவுலக பிரபலம்

ஒரு அரசியல்வாதி, ஒரு திருடன், ஒரு பதிவுலக பிரபலம் மூவரும் இறந்த பின்பு நரகம் செல்கின்றனர். (பிறகு இவர்களுக்கெல்லாம் சொர்கமா கிடைக்கும்)

அரசியல்வாதி நரக வரவேற்பு பெண்ணிடம் வந்து, 'நான் என் நாட்டையும், நாட்டு மக்களையும், என் தொண்டர்களையும் இழந்து மிகவும் தவிக்கிறேன். அவர்களுடன் பேச விரும்புகிறேன்' என்று சொல்லி 10 நிமிடம் தொலைபேசுகிறார்.

பேசி முடித்தவுடன் வரவேற்பு பெண் பில் தருகிறார் ‘பத்தாயிரம் ரூபாய்.’

இதைப்பார்த்த திருடனும் பேச வேண்டும் என்று 20 நிமிடம் தொலை பேசுகிறான், அவனுக்கு இருபதாயிரம் பில் வருகிறது.

நம்ம பதிவுலக பிரபலம், இவருக்கு தான் யார் எது செய்தாலும் உடனே அதுக்கு எதிரா ஏதாவது செய்தாகனுமே, அவரும் பதிவுலக சகாக்களிடம் பேச ஆசைப்படுகிறார். ஒரு மணி நேரம் கிசு கிசு, எதிர் கவிதை, எதிர் கடிதம், யார் செய்தது தவறு சரி இன்னபிற பிற பிற தொலை பேசிவிட்டு, பில்லுக்காக காத்திருக்கிறார்.

அப்போ அந்தப்பெண் சொன்னாராம், 'லோக்கல் கால் இலவசம், நீ போகலாம்'

இதை ஒரு குறளில் அடக்கிவிட முடியுமா, என்ன…

<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>

பொருள் அறிந்து பொருத்துக.

பொருத்தியதை பொருந்தியதோடு பொருத்திப்பார்க்க வேண்டியது அவரவர் பொறுப்பு.

எண்

குறள்

யாருக்கு

1

பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி நட்பாடல் தேற்றா தவர்.

வஜ்ராயுதம்

2

எப்பொரு ளெத்தன்மைத் தாயினும் அப்பொருள் மெய்பொருள் காண்ப தறிவு.

பக்கவாத்தியங்கள்

3

சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அசொல்லை வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து.

வாதி

4

அவையறிந் தாராய்ந்து சொல்லுக சொல்லின் தொகையரிந்த தூய்மை யவர்.

பிரதிவாதி

5

யாகாவா ராயினும் நாகாக்க காவாக்காற் சோகாப்பர் சொல்லிழுக்கப்பட்டு.

நமக்கு

6

தகுதி யெனவொன்று நன்றே பகுதியாற் பாற்பட டொழுகப்பெறின்.

எனக்கு

7

நன்றென் றவற்றுள்ளும் நன்றே முதுவருள் முந்து கிளவாச் செறிவு.

நடுவர்

குறள் உரை

1. இனிமையாக பழகி நட்புறவை தொடரத் தெரியாதவர்கள், நட்புக் கெடுமளவுக்கு புறங்கூறி நண்பர்களை இழந்து விடுவார்கள்.

2. வெளித்தோற்றத்தைப் பார்த்து ஏமாந்து விடாமல் அதுபற்றிய உண்மையை உணர்வதுதான் அறிவுடமையாகும்

3. இந்தச்சொல்லை இன்னொரு சொல் வெல்லாது என்று உணர்ந்த பிறகே அந்தச்சொல்லை பயன்படுத்த வேண்டும்.

4. ஒவ்வொர் சொல்லின் தன்மையை உணர்ந்துள்ள நல்ல அறிஞர்கள், (அவையையும்) அவையில் கூடியிருப்போரின் தன்மையையும் உணர்ந்து அதற்கேற்ப ஆராய்ந்து பேசுவார்கள்.

5. ஒருவர் எதைக்காத்திட முடியாவிட்டாலும் நாவையாவது அடக்கி காத்திட வேண்டும். இல்லையேல் அவர் சொன்ன சொல்லே அவர் துன்பத்துக்குக் காரணமாகிவிடும்.

6. பகைவர், அயலோர், நண்பர் எனப்பகுத்துப் பார்த்து ஒருதலைச் சார்பாக நிற்காமல் இருத்தலே நன்மை தரக்கூடிய நடுவுநிலைமை எனும் தகுதியாகும்.

7. அறிவாளிகள் கூடியிருக்கும் இடத்தில் முந்திரிக் கொட்டை போல் பேசாமல் இருக்கிற அடக்கமானது எல்லா நலன்களிலும் சிறந்த நலனாகும்.

<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>

1 = 5 2 = 25 3 = 125 4 = 625 5 = ?

சுவற்றில் எறிந்த பந்து, சேற்றில் வீசிய கல்.

தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.

நன்றி!

23 comments:

  1. அண்ணே, இதுக்கு பேருதான் சிம்பாலிக்கா சொல்றதா..?

    ReplyDelete
  2. வாங்க , சாலமன் பாப்பையா .., அருமையா விளக்கம் கொடுதிருக்கீர்க !

    ReplyDelete
  3. அம்மாடி,கணக்குன்னாலே அலர்ஜி எனக்கு,நான் வரலை இந்த விளையாட்டுக்கு. நகைச்சுவைகள் அருமை.

    ReplyDelete
  4. எல்லாமே அசத்தல்.. குறள்களும் நன்றாக இருக்கின்றன.. வாழ்த்துகள்

    ReplyDelete
  5. Kindly try to avoid third rated jokes. There are many other people for it. In future, your wards should love to read your writings and feel proud of you.

    The third part is nice and good.

    p viswanathan

    ReplyDelete
  6. ans=5, bcoz, 1=5, then 5=1

    ReplyDelete
  7. நல்லாயிருந்தது மொத்த கலவையும்

    //'லோக்கல் கால் இலவசம், நீ போகலாம்'
    //

    அப்போ எல்லாபதிவரும் நரகத்துலே இருக்காங்கனு சொல்ல வாறீகளா......

    டெஸ்ட் டியூப் மூடி படித்தது இருந்தாலும் இங்கே இன்னும் வித்தியாசமாய்

    ReplyDelete
  8. பதிவுலகதுக்கிட்ட வள்ளுவரே தோத்து போயிட்டாரே

    ReplyDelete
  9. வித்தியாசமா எழுதறீங்க பீர்...கலக்கல்.

    ReplyDelete
  10. //டக்ளஸ்....... said...
    அண்ணே, இதுக்கு பேருதான் சிம்பாலிக்கா சொல்றதா..?//

    ஹி.. ஹி...நேரடியா சொல்லி நம்மளயும் கட்டம் கட்டிட்டா...

    ReplyDelete
  11. //சுந்தர் said...
    வாங்க , சாலமன் பாப்பையா .., அருமையா விளக்கம் கொடுதிருக்கீர்க !//

    பாலமன் ஆப்பையா இல்லையே...

    நன்றி சுந்தர்.

    ReplyDelete
  12. நன்றி ஸ்ரீ,

    நன்றி Srini,

    நன்றி கார்த்திக், எல்லாம உங்க ஆதரவுதான்.

    இல்ல Mohankumar, பதில் தவறு. முயற்சிக்கு நன்றி.

    லோகு அசத்தல்... நீங்க புலியா? (கணக்குல கேட்டேன்)

    ReplyDelete
  13. நன்றி விஸ்வநாதன், அவற்றை தவிர்க நிச்சயமா முயற்சி பண்றேன். ஆமா இவ்வளவு நாளா எங்க போயிருந்தீங்க?

    நன்றி அனானி, சரியா சொன்னீங்க.

    நன்றி parimalan, :)

    ReplyDelete
  14. 3125 உங்க ஜோக்குகளூக்காக மதிப்பு ..குறள நல்ல விளையாடுறீங்க

    ReplyDelete
  15. //அபுஅஃப்ஸர் said...

    .... அப்போ எல்லாபதிவரும் நரகத்துலே இருக்காங்கனு சொல்ல வாறீகளா......//

    இல்லை என்று நாம் தீர்மானிக்க முடியாதில்லையா.

    தன்னை பின்நவீனத்துவவாதி என்று சொல்லிக் கொள்ளும் இவர்களுக்கு அதில் நம்பிக்கை இல்லையே, அபுஅஃப்ஸர்.

    ReplyDelete
  16. //மணிகண்டன் said...

    .... பதிவுலகதுக்கிட்ட வள்ளுவரே தோத்து போயிட்டாரே//

    இதில் பதிவர்கள் வென்றுவிட்டார்கள் என்று சொல்லுகிறீர்களா,மணி?

    எனக்கென்னமோ அனைவரும் தோற்றுவிட்டதாக தோன்றுகிறது. அறிவுரை சொல்லும் வள்ளுவனைத்தவிர.

    ReplyDelete
  17. நன்றி பனையூரான்,

    நன்றி செய்யது, எனக்கென்னமோ வித்தியாசமா இருக்கிற தெரியல...


    நன்றி சூரியன், 3125? கொஞ்சம் அதிகமா மதிப்பிட்டீங்களோ?

    ReplyDelete

மனம் திறந்து செதுக்குங்கள், என் எழுத்துக்களை.