Jul 2, 2009

கேள்வி யாரோ - பதில் நான்

நண்பர் டக்ளஸ் இதை எழுத அழைத்திருந்தார். நானும் எழுதுகிறேன் என்று வாக்கு கொடுத்துவிட்டேன், அதனால் தான் எழுதுகிறேன். இவற்றில் சில கேள்விகளில் எனக்கு உடன்பாடில்லை, அபத்தம் என்றே எண்ணுகிறேன். அவ்வாறு எண்ணும் கேள்விகளுக்கு பதில் எழுதாமல் விட்டிருக்கலாம், அவை நாகரிகம் காக்க இவை அனைத்திற்கும் பதில் எழுதியுள்ளேன். ஆனாலும் அவை நிறம் மாற்றப்பட்டுள்ளது.

1) உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ? பீர் முகம்மது ஆகிய நான், என் சகோதரிக்கு கிட்டத்தட்ட 20 வருடங்களுக்குப்பிறகு பிறந்திருக்கிறேன். என் தாய் தந்தை ஊரில் இருக்கும் கோயில் குளம் எல்லாம் சுற்றி கடைசியில் தக்கலை என்ற ஊரில் இருக்கும் பீர்முகம்மது ஒலியுல்லா தர்ஹா வுக்குச் சென்று வந்ததற்குப் பிறகு தான் பிறந்தேனாம். அதனால் அவர் நினைவாக பீர்முகம்மது என்ற பெயர் வைத்திருக்கிறார்கள்.

பிடிக்கும்.

பிற்பாடு, படைத்த இறைவனை மட்டுமே வணங்க வேண்டும் என்றும் படைப்புகளை (தர்ஹாக்களில் இருக்கும் ஒலியுல்லாக்களையும்) வணங்கக்கூடாது என்பதற்காக முழு மூச்சாய் பாடுபடுவேன் என்று அப்போது சற்றும் நினைத்திருக்க மாட்டார்கள். 2) கடைசியாக அழுதது எப்பொழுது? கி.பி 2000, சவுதியில் மூன்று வருட வியர்வைக்குப்பிறகு மூன்று மாத விடுப்பில் ஊர் சென்றுவிட்டு மீண்டும் சவுதி திரும்பிய போது குளியலறையில் அழுதது இன்றும் நினைவில் இருக்கிறது.

நீண்ட பிரிவிற்குப் பிறகான கூடல் மகிழ்ச்சியை மீண்டும் இழந்த போதுதான் பிரிவிற்கான முழு அர்த்தமும் விளங்கப்பெற்றேன். 3) உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?

என் கையொப்பம் பிடிக்கும். 4) பிடித்த மதிய உணவு என்ன? நெய்மீன் குழம்பும், சுடு சோறும்.

(குறிப்பிட்டு... நான் சமைக்கும் மீன் குழம்பு) 5) நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா? ஆம் 6) கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா? கடலில் இதுவரை குளித்ததில்லை எனவே அருவியில் குளிப்பதும் பிடிக்கும். 7) முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்? ஆணாக இருந்தால் கண்.

பெண்ணாக இருந்தாலும் கண்தான். 8) உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ? பொறுமை

சோம்பேறித்தனம். 9) உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது? பேச்சு

பேச்சு 10) யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ? மனைவி, மகன் 11) இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ? வெள்ளை சட்டை, கருப்பு கால் சட்டை. சீறுடை 12) என்ன பாட்டு கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ? எந்தப்பாடலும் இல்லை 13) வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை? நான் நானாக இருக்கத்தான் ஆசை 14) பிடித்த மணம்? மல்லிகை 15) நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ? போதும் இதோட நிறுத்திக்குவோம். 16) உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப்பிடித்த பதிவு ? டக்ளஸ்......இதெல்லாம் எழுதனும்னு என்னோட‌ விதி... 17 ) பிடித்த விளையாட்டு? இங்கு வேண்டாம். 18) க‌ண்ணாடி அணிபவரா? இல்லை. 19) எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்? திரைப்படம் அவ்வளவாக பார்ப்பதில்லை.

வெகுவாக பாராட்டப்பட்ட திரைப்படங்கள் மட்டும் அவ்வப்போது பார்ப்பதுண்டு. 20) கடைசியாகப் பார்த்த படம்? பசங்க 21) பிடித்த பருவ காலம் எது? இலையுதிர் காலம்

22) என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க? யுவகிருஷ்ணா - விஜயகாந்த் (புத்தகம் வாங்கிய பணத்தை ஆசிரமத்திற்கு கொடுத்திருக்கலாமோ?) 23) உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்? படங்கள் வைப்பதில்லை 24) பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்? மௌனம் 25) வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு? குவைத் மதுரையிலிருந்து 4316 கிமீ 26) உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா? ஒருவரை பார்த்து பேசியவுடன் அவரை தோராயமாக மதிப்படல். 27) உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்? பொய் 28) உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்? தூக்கம் 29) உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்? டெல்லி ஆக்ரா (இதுவரை சென்றதில்லை) 30) எப்படி இருக்கணும்னு ஆசை? இப்படித்தான் 31) மனைவி இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ? தூக்கம் 32) வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க? வாழ்க்கை வாழ்வதற்கேவாழ்ந்துபார்.

14 comments:

  1. பீர்,
    தாமதமாக எழுதியிருந்தாலும் நன்றாக இருந்தது.

    //போதும் இதோட நிறுத்திக்குவோம்//
    இது நன்றாக இருந்தது.

    பிரிவின் துயர் சேர்தலில்தான் நிறைவுறும். மிகப்பெரும் சோகம் அது. நாம் வார்த்தைகளாலும், செயல்களாலும் வெளிப்படுத்தி ஆற்றுப்படுத்திக் கொள்கிறோம். மனைவி, பிள்ளைகளுக்கும் அதே பிரிவுத்துயர் நிச்சயம் இருக்கும்தான்.

    நன்றாக எழுதியிருக்கிறீர்கள்.

    ‘அகநாழிகை‘
    பொன்.வாசுதேவன்

    ReplyDelete
  2. பணியை சிறப்பா செஞ்சிட்டீங்க,!!!1

    ReplyDelete
  3. \\டக்ளஸ்......இதெல்லாம் எழுதனும்னு என்னோட‌ விதி... \\

    இதுல ஏதோ உள்குத்து இருக்குன்னு தோணுதே...!
    :)

    ReplyDelete
  4. எனது ஐம்பதாவது பின்தொடர்பவரே... வாழ்க மற்றும் நன்றிகள் பல.

    ReplyDelete
  5. /*இதுல ஏதோ உள்குத்து இருக்குன்னு தோணுதே...!
    :)*/

    இதுலே ஒரு குத்தும் இல்லேடி.... உண்மை உண்மை அப்பட்டமான உண்மை.

    ReplyDelete
  6. //என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?

    யுவகிருஷ்ணா - விஜயகாந்த் (புத்தகம் வாங்கிய பணத்தை ஆசிரமத்திற்கு கொடுத்திருக்கலாமோ?) //


    என்னா வில்லத்தனம்!

    ReplyDelete
  7. //போதும் இதோட நிறுத்திக்குவோம்//

    :-))))))))

    ReplyDelete
  8. பிற்பாடு, படைத்த இறைவனை மட்டுமே வணங்க வேண்டும் என்றும் படைப்புகளை (தர்ஹாக்களில் இருக்கும் ஒலியுல்லாக்களையும்) வணங்கக்கூடாது//

    Great !!!! Alhamdhulillah..

    ReplyDelete
  9. //கி.பி 2000, சவுதியில் மூன்று வருட வியர்வைக்குப்பிறகு மூன்று மாத விடுப்பில் ஊர் சென்றுவிட்டு மீண்டும் சவுதி திரும்பிய போது குளியலறையில் அழுதது இன்றும் நினைவில் இருக்கிறது.

    //

    என்ன‌ சொல்வ‌த‌ன்றே தெரிய‌வில்லை.இந்த‌ இர‌ண்டு வ‌ரிக‌ள் என்னை மிக‌வும் பாதித்து விட்ட‌து.

    அந்த‌ த‌ருணங்க‌ள் தான் எத்த‌னை வேத‌னை க‌ல‌ந்த‌ ம‌கிழ்ச்சி.

    ReplyDelete
  10. நன்றி! ‘அகநாழிகை‘ பொன்.வாசுதேவன்.

    நன்றி! ஆ.முத்துராமலிங்கம்.

    ReplyDelete
  11. இல்ல டக்ளஸ்.... நமக்குள்ள என்ன, ஏதாவது சொல்லனும்னா நேரா சொல்லிட போறேன். உள் குத்தெல்லாம் எதுக்கு?

    உன்னுடைய இந்தப்பதிவு எனக்கு மிகவும் பிடித்தது. எதார்த்தமாய் இங்கு அந்த வார்த்தைகளும் விளையாடிவிட்டது.

    நன்றி

    ReplyDelete
  12. நன்றி நைனா... நையாண்டி!!!

    இதுலே ஒரு குத்தும் இல்லேடி.... உண்மை உண்மை அப்பட்டமான உண்மை.

    ReplyDelete
  13. வில்லத்தனம் எல்லாம் ஒண்ணும் இல்ல வால்.

    நன்றி கார்த்திக்!!!

    நன்றி செய்யது!!!

    ReplyDelete

மனம் திறந்து செதுக்குங்கள், என் எழுத்துக்களை.