Jul 9, 2009

ஜிகர்தண்டா

நான் விரும்பி பருகும் ஜிகர்தண்டா இம்முறை என்னை பருகத் தவறியது விமான நிலையம் வந்த பின்புதான் நினைவு வந்தது.

<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>

சிங்கை பதிவர்கள் – தமிழ்வெளி இணைந்து நடத்தும் மணற்கேணி 2009 போட்டியில் வெற்றி பெறுபவர்கள், ஸ்ரீலங்கன் விமானத்தில் டிக்கெட் கேளுங்கள். அதில் தான் இறைக்க இறைக்க ஊறும் நீரைப்போல கேட்ட கேட்ட ஊற்றித்தருகிறார்கள், இல்லை என்று சொல்லாமல். அட ஆமாங்க, எப்போதும் இல்லாமல் கடந்த இரண்டு முறையாக அதுதான் நடக்கிறது. இருந்தாலும் இருக்கைகள் காலியாகவே இருந்தன. ரிஷிசன் தான் காரணமோ?

Manarkeni 2009

<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>

விமானத்தில் செல்பவர்கள் கூடவே மௌஸ் ட்ராப்பும் கொண்டு செல்ல வேண்டும் போல, பிரட்டனில் இருந்து இஸ்லாமாபாத் வந்த விமானத்தில் எலிகள் தொல்லை தாங்க முடியவில்லையாம். வழக்கமா கொசு தொல்லைதான் இருக்கும். இப்போ எலி… புலி… ஐயோ நானில்லை.

<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>

மறைந்த மைக்கேல் ஜாக்ஸன் சிறிது காலம் முன்பு இஸ்லாத்திற்கு மாறி தனது பெயரை மீகாயில் என மாற்றிக் கொண்டாராம். நெவர்லேண்ட் பண்ணை வீட்டில் அவரது ஆவியை பார்த்தாகவும், இன்னும் சாகவில்லை நாடகமாடுகிறார் என்று ஒரு கூட்டமும், அவர் கொலை செய்யப்பட்டார் என்று சிலரும், கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டார் என்பதாகவும் பல செய்திகள் வருகின்றன. இருக்கும் போதுதான் சர்ச்சையில் இருந்தார் இறந்த பின்பும் அது அவரை விடவில்லை.

<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>

தேர்தலுக்கு முன்பு நடந்ததாக சொல்லப்படும் சம்பவம். மதுரை A குடும்பத்துடன் AA என்ற தேங்காய் நாட்டை சேர்ந்த சர்வதேச நகைக்கடைக்கு போய் 15 L க்கு நகை வாங்கிவிட்டு, ‘பில்ல வீட்டுக்கு குடுத்தனுப்பு’ என்று சென்றுவிட்டாராம். இரண்டு நாட்களாகியும் பில் செட்டில் ஆகாம இருக்க, மூன்றாவது நாள் வீட்டுக்கு ஆள் அனுப்பி கேட்க போக, கடைக்கு முன்னால் வரிசையா குழி தோண்டி போட்டதும் இல்லாமல் பணமும் தர முடியாது என்று சொல்லப்பட்டதாம். விற்ற சரக்குக்கு பணம் வராதது மட்டுமல்லாது, புது சரக்கும் விற்க முடியாமல் போனதால AA பவரை காட்ட வேண்டியதாப் போச்சாம். D கிணற்றில் பதுங்கி இருக்கும் D காதில் விசயத்தை போட, ஒரு மணி நேரத்தில் குழி மூடப்பட்டு பில்லும் செட்டில் செய்யப்பட்டு விட்டதாம்.

<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>

திரை அரங்குகளில் பாருக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், நம்ம டெயில் டெரர் ஆகப்போவதாக வதந்தி.

<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>

வெல்லை பதிவரை விரட்டியதில், சமீப காலமாக கிசு கிசு எழுதியே கடை நடத்தும் நம்ம ஜன்னலுக்கும் முக்கிய பங்குண்டாம்.

<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>

ஒரு வரலாற்றுச் சம்பவம்; நபிகள் நாயகத்தின் சகாவாக இருந்த உமர் அவர்கள் ஒரு முறை 1000 ஒட்டகங்கள் வியாபாரத்திற்காக மொத்த விலைக்கு வாங்கி, அனைத்து ஒட்டகங்களையும் வாங்கிய விலைக்கே சில்லறைக்கும் விற்பனை செய்தார்கள். அதைப்பார்த்துக் கொண்டிருந்த உதவியாள், ‘இதனால் தங்களுக்கு என்ன லாபம்’ என்று கேட்ட, உமர் சொன்னாராம், ‘ஒட்டகத்தின் கழுத்தில் இருந்த கயிற்றை அவிழ்த்து வைத்துக்கொண்டு தானே அவற்றை விற்றேன், அந்தக்கயிறு தான் லாபம்’ என்பதாக.

<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>

ஒரு சிறு பயிற்சி; இருக்கையில் அமர்ந்து, வலது காலை தூங்கி கடிகார சுழற்சி திசையில் சுற்றியவாறே வலது கையால் 6 என்று காற்றில் எழுதிப்பாருங்கள்… முடிந்தால்.

<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>

ஒரு சிறு முயற்சி;

கடக்கவேண்டிய பாதை

பின் வர - நான்

எனக்காய்

என்றும் வாழாத

என் நாட்கள்

முன் வந்து

என்னைக் கொல்கிறது.

நன்றி!!!

12 comments:

 1. //மறைந்த மைக்கேல் ஜாக்ஸன் சிறிது காலம் முன்பு இஸ்லாத்திற்கு மாறி தனது பெயரை மீகாயில் என மாற்றிக் கொண்டாராம். நெவர்லேண்ட் பண்ணை வீட்டில் அவரது ஆவியை பார்த்தாகவும், இன்னும் சாகவில்லை நாடகமாடுகிறார் என்று ஒரு கூட்டமும், அவர் கொலை செய்யப்பட்டார் என்று சிலரும், கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டார் என்பதாகவும் பல செய்திகள் வருகின்றன. இருக்கும் போதுதான் சர்ச்சையில் இருந்தார் இறந்த பின்பும் அது அவரை விடவில்லை.//

  இதெல்லாம் பழசு. இப்ப அவர் இன்னும் இறக்கவில்லை. கடன் தொல்லையால் இப்படி ஒரு செட் அப் என்றும் “யாரோ ஒரு பரட்டை பத்தவச்சிட்டுது”.

  அவர் ஹிஸ்டரி ஆல்பத்தில் சொன்னது போல
  “before judge me, try hard to love me"

  ReplyDelete
 2. இந்த அலப்பறைக்கிடையில் பதிவர் கிசு கிசு வேறயா ??

  கலக்குறீங்க பீர்...

  ReplyDelete
 3. \\தேர்தலுக்கு முன்பு AA பவரை காட்ட வேண்டியதாப் போச்சாம். D கிணற்றில் பதுங்கி இருக்கும் D காதில் விசயத்தை போட, ஒரு மணி நேரத்தில் குழி மூடப்பட்டு பில்லும் செட்டில் செய்யப்பட்டு விட்டதாம்.\\

  இந்த மேட்டரத்தான் மேலமாசி வீதியில மேங்கோ விக்கிற மேனுகு கூடத் தெரியுமே தல....!
  ஆனா, இப்போ AA ஸைலன்ட்டாமே...!


  \\இருக்கையில் அமர்ந்து, வலது காலை தூங்கி கடிகார சுழற்சி திசையில் சுற்றியவாறே வலது கையால் 6 என்று காற்றில் எழுதிப்பாருங்கள்… முடிந்தால்.\\

  ஆபீஸ்ல எல்லாரும் சிரிக்கிறாங்கய்யா...!

  ReplyDelete
 4. //திரை அரங்குகளில் பாருக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், நம்ம டெயில் டெரர் ஆகப்போவதாக வதந்தி.//

  ஆமா!

  சாகும் வரை குடிக்கும் விரதம் இருக்கப்போறேன்!

  ReplyDelete
 5. கடக்கவேண்டிய பாதை

  பின் வர - நான்

  எனக்காய்

  என்றும் வாழாத

  என் நாட்கள்

  முன் வந்து

  என்னைக் கொல்கிறது.
  ///
  நல்ல முயற்சி!!
  நன்றாக உள்ளது..

  ReplyDelete
 6. திரையரங்குல பாரையும் வெச்சுட்டா அவ்ளோதான். முடிஞ்சுபோச்சு..

  ReplyDelete
 7. கவிதை நன்றாக உள்ளது .

  ReplyDelete
 8. //ஒரு சிறு பயிற்சி; இருக்கையில் அமர்ந்து, வலது காலை தூங்கி கடிகார சுழற்சி திசையில் சுற்றியவாறே வலது கையால் 6 என்று காற்றில் எழுதிப்பாருங்கள்… முடிந்தால்.

  //

  என்னா தல நாங்க நல்லாயிருக்கிறது புடிக்கலியா
  டெர்ரர கிளப்புறீகலே

  அனைத்து கலவையும் சூப்பர்

  தொடருங்க‌

  ReplyDelete
 9. கலக்கல்.

  கிசுகிசு எல்லாம் எழுதுறீங்க கலக்குங்க.

  ReplyDelete
 10. நன்றி அருண்மொழிவர்மன்,

  //அ.மு.செய்யது said...

  இந்த அலப்பறைக்கிடையில் பதிவர் கிசு கிசு வேறயா ??

  கலக்குறீங்க பீர்...//

  இதுக்கு பேரெல்லாம் கிசு கிசு வா செய்யது? நன்றி.


  //டக்ளஸ்....... said...

  .... ஆனா, இப்போ AA ஸைலன்ட்டாமே...!//

  வேற வழி?

  //ஆபீஸ்ல எல்லாரும் சிரிக்கிறாங்கய்யா...!//

  ஹையா...


  //வால்பையன் said...

  ..... ஆமா!

  சாகும் வரை குடிக்கும் விரதம் இருக்கப்போறேன்!//


  சைடு டிஷ் தேவைப்பட்டால் சொல்லுங்க, சார்.


  //தேவன் மாயம் said...

  ....... நல்ல முயற்சி!!
  நன்றாக உள்ளது.//

  நன்றி டாக்டர்!


  //செந்தழல் ரவி said...

  திரையரங்குல பாரையும் வெச்சுட்டா அவ்ளோதான். முடிஞ்சுபோச்சு..//

  இதுக்கு வால்தான் கருத்து சொல்ல சரியான ஆள்.

  நன்றி ரவி!  //ஸ்ரீதர் said...

  கவிதை நன்றாக உள்ளது .//

  இப்புடி உசுப்பேத்தியே உடம்ப ரணகளப்படுத்த திட்டமா?
  நன்றி ஸ்ரீ,


  // அபுஅஃப்ஸர் said...

  ..... என்னா தல நாங்க நல்லாயிருக்கிறது புடிக்கலியா
  டெர்ரர கிளப்புறீகலே

  அனைத்து கலவையும் சூப்பர்

  தொடருங்க‌ //

  நன்றி அபுஅஃப்ஸர், உங்க பக்கத்துல இருக்கிறவங்களும் நல்லா இருக்கனுமேன்னுதான் இத சொன்னேன்.

  நன்றி கார்த்திக்,


  //அக்பர் said...

  கலக்கல்.

  கிசுகிசு எல்லாம் எழுதுறீங்க கலக்குங்க.//
  இதுக்கு பேரெல்லாம் கிசு கிசு வா அக்பர்? நன்றி.

  ReplyDelete
 11. /சாகும் வரை குடிக்கும் விரதம் இருக்கப்போறேன்//

  வாலுஜியுடன் போரட்டத்தில் குதிக்க ரெடிப்பா...

  அப்புறம் A மேட்டர்ல , A ஆடி இப்போ AA ஆடிப்போய் கிடக்குதாம்..

  ReplyDelete

மனம் திறந்து செதுக்குங்கள், என் எழுத்துக்களை.