Jul 21, 2009

சுவாரஸ்ய பதிவு விருது

ஒளிஒருவற் உள்ள வெறுக்கை இளிஒருவற்கு அஃதிறந்து வாழ்தும் எனல். - குறள்

கலைஞர் விளக்கம்; ஒருவரின் வாழ்வில் ஒளி தருவது ஊக்கமேயாகும். ஊக்கமின்றி உயிர் வாழ்வது இழிவு தருவதாகும்.

மு.வ விளக்கம்; ஒருவனுக்கு ஒளி ஊக்கமிகுதியே ஆகும், ஒருவனுக்கு இழிவு அந்த ஊக்கம் இல்லாமலேயே உயிர்வாழலாம் என்று எண்ணுதலாம்.

award_interesting.2e2avjzomu

செந்தழல் ரவி ஆரம்பித்த தொடர் விருது, இன்று நண்பர் மணிகண்டன் மூலமாக எனக்கும் வழங்கப்பட்டுள்ளது. இதை நான், சுவாரஸ்ய பதிவு என நினைக்கும் 6 பதிவுகளுக்கு வழங்க வேண்டும். (ரவி, ஒரு சந்தேகம், இது சுவாரஸ்ய பதிவு விருதா? அல்லது சுவாரஸ்ய பதிவர் விருதா?)

விருதின் நோக்கம், அது வழங்கப்படுபவர்களுக்கு ஊக்கமளிக்க வேண்டும் என்பதே. அவ்வகையில் இந்த சுவாரஸ்ய பதிவு விருதானது, பதிவர்களுக்கு ஊக்கத்தை தரும் என்பதில் எந்த சந்தேகமும் எனக்கில்லை.

எனது வாசிப்பனுபவத்தை அதிகரிக்கவே ‘ஜெய்ஹிந்துபுரம்’ என்ற இந்த வலைப்பூவை தொடங்கினேன். பின்னர் பிற பதிவுகளில் பின்னூட்டம் இடவேண்டி எழுத்துப் பயிற்சிக்காகவே இங்கு எழுதவும் ஆரம்பித்தேன். இப்போது விருதும் வழங்கப்பட்டுள்ளது, இது என்னை ஊக்கப்படுத்துவதுடன், எனக்கிருக்கும் பொறுப்பையும் அதிகரித்துள்ளது. இனியாவது ஏதேனும் எழுத வேண்டும், வாசிக்கும்படியாய் எழுத வேண்டும் என்ற அச்சமும் கூடவே…

நன்றி மணி, (என்னையும் ஜீப்புல ஏத்திவிட்டீங்க :))

விருது வழங்கும் விழா;

செந்தழல் ரவி இந்த விருது விழாவை தொங்கிவைத்த போது அவரிடம் மொக்கையாக கேட்டிருந்தேன், ‘இந்த விருது கொடுக்கறவங்களுக்கு ஏதாவது தகுதி இருக்கணுமா, ரவி?’ என்று. (அவர் பதில் சொல்லவில்லை… பிரபலபதிவராச்சே…;)) விருது கொடுக்கப்படும் தகுதியே எனக்கு இருக்கிறதா என்று சந்தேகத்தில் இருக்கும் போது விருது கொடுக்கும் தகுதி எனக்கிருக்கிறதா என்று நிச்சயமாக தெரியவில்லை. ஆனால் எனக்கு பிடித்த சுவாரஸ்ய பதிவுகள் / பதிவர்கள் ஏராளம். அனைவருக்கும் கொடுக்கமுடியாதவாறு சட்டச்சிக்கல் இருப்பதால், ஆறு பேருக்கு மட்டும்.

மகா நக்கல் பேர்வழி. இரண்டு தனிநபர் பதிவுகளுக்கு சொந்தகாரர். இம்சையை கூட்டும் இம்சைக்கு விருது வழங்குகிறேன். செந்தழல் ரவி; அவர்கள் எங்கிருந்தாலும் மேடைக்கு வரும்படி அன்புடன் அழைக்கிறேன்.

பங்கு சந்தை நிலவரத்தையும் உலக நடப்புகளை முக்கியமாக நிதி நிலைகளையும் ஆலோசனைகளையும் மும்பையில் இருந்து எளிய தமிழில் மட்டுமல்லாது ஆங்கிலத்திலும் எழுதுகிறார். அவ்வப்போது சுவாரஸ்ய நிகழ்வுகளையும் எழுதும் இவர் சுரவாரஸ்யப் பதிவர். அண்ணன் சந்தைநிலவரம் பதிவர் அவர்கள் எங்கிருந்தாலும் மேடைக்கு வரும்படி அன்புடன் அழைக்கிறேன்.

நல்லவர், அன்பானவர், எனக்கு ஊக்கமளித்து வருபவர். என் மண்ணின் மைந்தர் தோழர் கார்த்திகைப் பாண்டியன்; அவர்கள் எங்கிருந்தாலும் மேடைக்கு வரும்படி அன்புடன் அழைக்கிறேன்.

இவரும் எங்கள் மண்ணுக்குச் சொந்தகாரர். சுவாரஸ்யம் குறையாமல் எழுதுவதில் மட்டுமல்ல பேசுவதிலும் வல்லவர். அனுபவஸ்தர் அண்ணன் ஸ்ரீ; அவர்கள் எங்கிருந்தாலும் மேடைக்கு வரும்படி அன்புடன் அழைக்கிறேன்.

சமகால பிரச்சனைகளை இஸ்லாம் எவ்வாறு அணுகுகிறது என்பதை குர்ஆன் மற்றும் நபிமொழி ஆதாரத்துடன் எழுதுகிறார். அனைவரும் விளங்கும் எளிய நடை. அண்ணன் சுவனப்பிரியன்; அவர்கள் எங்கிருந்தாலும் மேடைக்கு வரும்படி அன்புடன் அழைக்கிறேன்.

டக்ளஸ் என்ற புனைப் பெயரில் இருந்து ராஜூ என்ற சொந்த பெயருக்கு மாறியிருக்கிறார். எனக்கு நல்லது கெட்டது சொல்லும் பாசக்கார ஊர்காரர். ரொம்ப நல்லவர். நண்பர் ராஜூ; அவர்கள் எங்கிருந்தாலும் மேடைக்கு வரும்படி அன்புடன் அழைக்கிறேன்.

எப்போதும் எனக்கு பிடித்த பதிவர், கருத்தில் எந்த சமரசமும் செய்துகொள்ளாத பிடிவாதக்காரர். ஏற்கனவே விருது வழங்கப்பட்டவர். அண்ணன் சிங்கை சிங்கம் கோவி. கண்ணன்; அவர்கள் எங்கிருந்தாலும் மேடைக்கு வரும்படி அன்புடன் அழைக்கிறேன்.

சகாக்களே இனி பந்து உங்கள் முற்றத்தில்… ஆறு பேருக்கு வீசுங்கள், ஆயிரம் பேரை சென்றடையட்டும்.

நன்றி!!!

11 comments:

  1. மிக்க நன்றி, மிக்க நன்றி !

    :)

    நிறைய பேர் கொடுத்துட்டாங்க, இனிமே கொடுக்க விரும்புகிறவர்கள் பணமுடிப்பாக கொடுங்கன்னு பதிவு போடப் போறேன்.

    :))))))

    ReplyDelete
  2. // ரொம்ப நல்லவர். நண்பர் ராஜூ;\\

    இந்த வரிகள படிக்கும் போது, குடிச்சுக்குட்டு இருந்த டீ யை சட்டை மேல கொட்டிக்கிட்டேன் அண்ணே...!
    நன்றிகள் மற்றும் சகாக்களுக்கு வாழ்த்துக்கள்.
    :))

    ReplyDelete
  3. ஆஹா விருது கொடுத்தவருக்கே மீண்டும் விருதா?

    ReplyDelete
  4. அன்புள்ள பீர்!

    ''மனதில் உள்ளதை உள்ளபடியே இட்டுச்செல்லுங்கள்'' என்று வேறு சொல்லி இருக்கிறீர்கள். என்ன சொல்வது என்றே தெரிய வில்லை.

    உங்களுடைய அன்புக்கு மிக்க நன்றி. திருக் குறளில் உள்ள படி, மற்றவர்களுக்கு ஊக்கம் அளிப்பது கூட ஒரு சிறப்பான தர்மமாகும்.

    உங்களைப் போன்ற பாசமிகு நண்பர்கள் கிடைத்ததுதான் சந்தைநிலவரத்தினால் எனக்கு கிடைத்த மிகப் பெரிய விருதாகும்! அந்த விருதின் முன்னர் மற்ற விருதுகள் பெரிதல்ல என்றாலும் உங்கள் அன்புக்கு தலைவணங்கி இந்தவிருதை பணிவுடன் ஏற்றுக் கொள்கிறேன்.

    மீண்டுமொருமுறை உங்கள் ஆதரவுக்கும் அன்புக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    ReplyDelete
  5. நன்றி கோ, பணமுடிப்பு தருவதாக இருந்தாலும் முதலில் உங்களுக்கத்தான் தரப்பட வேண்டும்.

    <<<>>>

    நன்றி ராஜு, சந்தோஷப்படுங்க டீ யோட போச்சே...

    <<<>>>

    நன்றி வால்,

    <<<>>>

    நன்றி ஸ்ரீ,

    <<<>>>

    நன்றி Maximum India சார்,

    ReplyDelete
  6. நன்றி கோ, பணமுடிப்பு தருவதாக இருந்தாலும் முதலில் உங்களுக்கத்தான் தரப்பட வேண்டும்.

    <<<>>>

    நன்றி ராஜு, சந்தோஷப்படுங்க டீ யோட போச்சே...

    <<<>>>

    நன்றி வால்,

    <<<>>>

    நன்றி ஸ்ரீ,

    <<<>>>

    நன்றி Maximum India சார்,

    ReplyDelete
  7. ***
    கொடுக்கப்படும் தகுதியே எனக்கு இருக்கிறதா என்று சந்தேகத்தில் இருக்கும் போது விருது கொடுக்கும் தகுதி எனக்கிருக்கிறதா என்று நிச்சயமாக தெரியவில்லை.
    ***

    இது எல்லாம் பார்த்து இருந்தா நான் கொடுத்து இருக்க முடியுமா !!!

    இத்தொடரை நிறுத்தாம கொண்டுபோனதுக்கு நன்றி.

    ReplyDelete
  8. பதிவர்களை அறிமுகம் செய்த விதம் ரொம்ப அருமை ,குறித்துக் கொண்டேன்.
    நல்ல பதிவு .
    ஒட்டு போட்டாச்சு

    ReplyDelete
  9. நன்றி மணி, நான்தான் சொல்லி இருக்கேன்ல... 'உங்ககிட்டருந்து கத்துக்க வேண்டியது நிறைய இருக்கு'

    <<<>>>

    நன்றி கார்த்திகேயன்.

    ReplyDelete
  10. திரு பீர்!

    இரண்டு மூன்று நாட்களாக பதிவு பக்கம் வரவில்லை. எனவே பின்னூட்டத்தை மட்டுறுத்தாமலேயே விட்டு விட்டேன். இன்றுதான் உங்களின் பின்னூட்டத்தைப் பார்த்து உங்கள் பதிவின் பக்கமும் வந்தேன். நன்றாக எழுதுகிறீர்கள். தொடர்ந்த வேலை காரணமாக பலரின் பதிவுகளையும் படிக்க நேரம் கிடைப்பதில்லை.

    சுவாரஸ்யமான பதிவுகளில் என் பதிவையும் சேர்த்ததற்கு நன்றிகள். தமிழ் தொடர்பு விட்டுப் போய் விடக் கூடாது என்ற நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட என் வலைப் பதிவு மூன்றாவது வருடத்தை தாண்டிவிட்டது. புலி வாலை பிடித்த கதையாக இதை விடவும் முடியவில்லை. இதன் மூலம் பல நண்பர்களையும் பெற்றுள்ளேன்.

    தேர்ந்தெடுத்தமைக்காக மீண்டும் நன்றி....நன்றி....

    ReplyDelete

மனம் திறந்து செதுக்குங்கள், என் எழுத்துக்களை.