Nov 25, 2009

அன்புக்காக - தீபாவளி சிறப்புப் பதிவு 2009 - நம்புங்க


இந்த வாரம்... தொடெர்ர்ர்ர்ர் வாரம்.... ம்ம்ம்ம் மாட்னீங்க.

அருமை தம்பி அன்பு அவர்களின் அழைப்பை ஏற்று இந்த பதிவினை தொடர்கிறேன்..ஏனெனில் அவர் எனக்கு அடுத்த தீபாவளிக்கு சிவகாசி பட்டாசு தர இருப்பதால்…
பதிவிற்கான விதிமுறைகள் :
1. கேள்விக‌ளுக்கு உங்க‌ள் வ‌லைத்த‌ள‌த்தில் புதிய பதிவில் ப‌திலளியுங்கள். –
அளிச்சாச்சு.. அளிச்சாச்சு.
2. 'தீபாவளி சிறப்புப் பதிவு - 2009' என்று தலைப்பிட்டால் நலம்.
இட்டாச்சு... இட்டாச்சு.
3. இத்தொடர் தொடருவதைத் தெரிவிக்க, இங்கிருக்கும் தீபப் படத்தை உங்கள் வலைத்தளத்தில் ஒட்டி, உங்கள் பதிவிற்கான சுட்டியும் தரவும்.
படம் காட்ட.. விளம்பர கட்டணம் டிடி எடுத்து அனுப்பவும்.
4. அனைத்து கேள்விகளுக்கும் (மனம் திறந்து) பதில் அளியுங்கள்.
திறப்பதற்கு மனம் இருந்தால்.. திறந்துவிடலாம்.
5. உங்கள் நண்பர்கள் நால்வரைத் தேர்ந்தெடுத்து தொடரைத் தொடர அழையுங்கள்.. அவங்க எழுதறதுக்குள்ள அடுத்த தீவாளி வந்துடும்றதால... ஆணியே புடுங்க வேண்டாம்.

**************************
1) உங்க‌ளைப் ப‌ற்றி சிறு குறிப்பு ?
பெயர் பீர் முஹம்மத். ஊர் மதுரை, குடிசை குவைத்.
**************************
2)தீபாவ‌ளி என்ற‌வுட‌ன் உங்கள் நினைவிற்கு வ‌ரும் (ம‌ற‌க்க‌ முடியாத‌) ஒரு ச‌ம்ப‌வ‌ம் ?
தளபதி.. அபூர்வ சகோதரர்கள்.
**************************
3)2009 தீபாவ‌ளிக்கு எந்த‌ ஊரில் இருக்கிறீர்க‌ள்/இருந்தீர்க‌ள் ?
குவைத்.
**************************
4)த‌ற்போது இருக்கும் ஊரில் கொண்டாடும் தீபாவ‌ளி ப‌ற்றி ஒருசில‌ வ‌ரிக‌ள்?
குவைத்ல பட்டாசு வெடிச்சா உள்ள தூக்கி போட்றுவானுக.. அதுமட்டுமில்லாம குடும்பத்த விட்டு பிரிஞ்சிருக்கிறப்போ (இப்பல்லாம்) எந்த பண்டிகையும் கொண்டாடுறதில்ல...
**************************
5)புத்தாடை எங்கு வாங்கினீர்கள் ? அல்லது தைத்தீர்க‌ளா ?
வாங்கவும் இல்லை. தைக்கவும் இல்லை.
**************************
6)உங்கள் வீட்டில் என்ன‌ ப‌ல‌கார‌ம் செய்தீர்க‌ள் ? அல்ல‌து வாங்கினீர்க‌ள் ?
மஃபின் பனானா நட் மற்றும் பேஸ்கின் ராபின்ஸ் ப்ராலின் க்ரீம் வாங்கினேன்.
**************************
7)உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் எவ்வாறு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறீர்கள். (உ.ம். மின்னஞ்சல், தொலைபேசி, வாழ்த்து அட்டை) ?
மின்னஞ்சல், தொலைபேசி, வாழ்த்து அட்டை.
**************************
8)தீபாவ‌ளி அன்று வெளியில் சுற்றுவீர்க‌ளா ? அல்ல‌து தொலைக்காட்சி நிக‌ழ்ச்சிக‌ளில் உங்க‌ளைத் தொலைத்துவிடுவீர்க‌ளா ?
தொலைக்காட்சி.
**************************
9)இந்த‌ இனிய‌ நாளில் யாருக்கேனும் ஏதேனும் உத‌வி செய்வீர்கள் எனில், அதைப் ப‌ற்றி ஒருசில‌ வ‌ரிக‌ள் ?
புதிய இடுகை வெளியிடுவதில்லை.
**************************
10)நீங்க‌ள் அழைக்க‌விருக்கும் நால்வ‌ர், அவர்களின் வ‌லைத்த‌ள‌ங்க‌ள் ?
அதுதான் சொல்லிட்டோம்ல... இதுவரை புடுங்கின ஆணியே ஒருவருஷத்துக்கு தாங்கும்...

24 comments:

  1. அன்பின் பீர்

    இயல்பான பதில்கள்

    நல்ல நகைச்சுவையான இடுகை

    நல்வாழ்த்துகள் பீர்

    ReplyDelete
  2. அண்ணே, நீங்க நம்ம ஜாதிண்ணே.
    அதாண்ணே, கல்யாணத்துக்கு கூப்புட்டா, வலைகாப்புக்கு போற ஜாதி.

    ("ஜாதி" இந்த் வார்த்தைய யூஸ் பண்ணுனா உங்க "ஸ்ட்ரீட்காரர்" அடிப்பராண்ணே..?)

    ReplyDelete
  3. ஸ்விட் பேரக் கேட்டா, ஏன்ண்ணே கெட்ட கெட்ட வார்த்தைல திட்டுறீங்க..?

    ReplyDelete
  4. அட பொங்கலுக்கு முன்னாடி போட்டுட்டீங்க!!

    போன தொடர்ல என்னைக் கூப்பிடமுடியாமப் போயிருச்சேன்னு ரொம்ப வருத்தப்பட்டீங்க, இப்ப தொடரச் சொல்லிருவீங்களோன்னு பாத்தேன். நல்லவேளை (எனக்கல்ல).

    ReplyDelete
  5. நன்றி சீனா ஐயா,

    ராஜூ, என்ன்ன்னது ஜாதியா... மாட்னீங்க. எல்லாரும் வந்து கும்ம போறாங்க. மருவாதியா 'சாதி' ன்னு மாத்திடுங்க. இல்லைன்னா ஐ ஆம் சாரி... என்னால காப்பாத்த முடியாதுப்பா.

    ஹூசைனம்மா, ரொம்ப கவலைப்படாதீங்க. இந்த வாரம் முழுக்க தொடர்தான். ஒண்லயாவது மாட்டிவிடுறேன். மறுபடியும் உங்க பதிவில கொலைவெறிய பார்க்கணும்.

    ReplyDelete
  6. //மஃபின் பனானா நட் மற்றும் பேஸ்கின் ராபின்ஸ் ப்ராலின் க்ரீம் வாங்கினேன்//

    பேச்சு பேச்சாத்தான் இருக்கணும்..அது என்ன அரபியில திட்றது ??

    ReplyDelete
  7. ரொம்ப இயல்பான பதில்கள் பீர்

    ReplyDelete
  8. செய்யது, Muffin Banana Nut, Baskin Robbins - Praline Cream தெரியாதுன்னு சொல்லுங்க?

    அது கிடக்கட்டும், என்ன புதுசா போட்டோல்லாம்??? ஹூசைனம்மா பதிவ ப்ரிண்ட் போட்டப்பவே நினைச்சேன். :)

    நவாஸ் காக்கா, என்ன பண்றது.. சின்ன வயசுல இருந்தே.. இயல்பா பதில் சொல்லி பழக்கமாகிடுச்சு. :) (இப்பவும் சின்ன வயசுதான்றது வேற விஷயம்..)

    ReplyDelete
  9. //உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் எவ்வாறு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறீர்கள். (உ.ம். மின்னஞ்சல், தொலைபேசி, வாழ்த்து அட்டை) ?
    மின்னஞ்சல், தொலைபேசி, வாழ்த்து அட்டை.//

    அப்துல்லா அண்ணனுக்கும், கோவி கண்ணனுக்கும் நடந்த உரையாடல் ஞாபகம் இருக்கா!?

    ReplyDelete
  10. //இந்த‌ இனிய‌ நாளில் யாருக்கேனும் ஏதேனும் உத‌வி செய்வீர்கள் எனில், அதைப் ப‌ற்றி ஒருசில‌ வ‌ரிக‌ள் ?
    புதிய இடுகை வெளியிடுவதில்லை.//


    தினம் தினம் தீபாவளி வராதா என ஆவல் ஏற்ப்படுகிறது!

    (சும்மா லுலுலாயிக்கு)

    ReplyDelete
  11. பேனா முனை, தியாகத்திருநாள் வாழ்த்துக்கள் உங்களுக்கும்.

    வால், உரையாடல்... வாசித்த நினைவில்லை. சுட்டி கிடைக்குமா? யாருடைய பதிவில் நடந்தது?

    தினம் தினம் தீபாவளி.. நான் சொன்னது போன தீபாவளி வரைதான். :)

    ReplyDelete
  12. //வால், உரையாடல்... வாசித்த நினைவில்லை. சுட்டி கிடைக்குமா? யாருடைய பதிவில் நடந்தது?//

    தேடுவதற்கு நேரமில்லை!

    சாராம்சம் என்னான்னா,
    மற்ற மதத்தினர் பண்டிகைகளுக்கு இஸ்லாமியர் வாழ்த்து சொல்லக்கூடாதாம், ஆனா அப்துல்லா அண்னே அப்படித்தான் சொல்லுவேன்னு அடம் பிடிக்கிறாரு!

    அவரை என் செட்டுல சேர்த்து விட்றுங்களேன்!

    ReplyDelete
  13. சொல்லக்கூடாதுன்னு சொல்றதுக்கு யாருக்கும் உரிமை இல்லை.

    நான் சொல்வேன்.

    ஆனா யாருக்கு சொல்றோம்கிறத பொருத்து இருக்கு. உங்களுக்கு சொல்லலாமா?

    ReplyDelete
  14. யாரையும் கூப்பிடல சரி...

    இந்த இடுகையை ஏன் தமிழ் மணம், தமிழிஷில் இணைக்கவில்லை.

    இயல்பான, நகைச் சுவை பதிலகள்...

    ReplyDelete
  15. இராகவன் அண்ணே, ஹிட்ஸ விட நட்புதான் முக்கியம். திரட்டில சேர்க்காமலேயே இத்தனை பேர் படிச்சிருக்கீங்களே.. மட்டுமில்லாம பல பேருக்கு போய் சேர இதுல ஒண்ணும் கருத்து இல்லையே.

    ReplyDelete
  16. பதிவுகள் அருமையுங்கோ பீரண்ணா..

    ReplyDelete
  17. \\\\\ஏனெனில் அவர் எனக்கு அடுத்த தீபாவளிக்கு சிவகாசி பட்டாசு தர இருப்பதால்…\\\\\\\\

    :-))))))))

    ReplyDelete
  18. <<<
    படம் காட்ட.. விளம்பர கட்டணம் டிடி எடுத்து அனுப்பவும்.
    >>>

    இது எப்பயிருந்து???? :D நல்லாத்தானே போய்கிட்டிருந்துச்சு.

    <<<
    குடும்பத்த விட்டு பிரிஞ்சிருக்கிறப்போ (இப்பல்லாம்) எந்த பண்டிகையும் கொண்டாடுறதில்ல...
    >>>
    so sad peerji.

    <<<
    புதிய இடுகை வெளியிடுவதில்லை.
    >>>
    சூப்பர்... இத நான் வன்மையா ஆதரிக்கிறேன் :D

    ReplyDelete
  19. அப்ப குவைத்ல குவைட்டா இருந்தேன்னு சொல்றீங்க...ஓகே... ஓகே ....

    (quiet)

    ReplyDelete
  20. யாரையும் கூப்பிடலையா தொடர் பதிவுக்கு. அடுத்த தீபாவளி வரைக்கும் இது போயிட்டிருக்குமே :)

    ReplyDelete
  21. வாங்கோ மலிக்கா தங்கச்சி, நன்றி.

    அன்பு, என்னா சிரிப்பு.. சின்ன புள்ளத்தனமா? பார்சல் வந்துடணும்.

    மஸ்தான், நீங்க வன்மையாக ஆதரிப்பதால்.. அடுத்த தீபாவளிக்கு ஸ்பெஷல் தொடர் பதிவு நானே ஆரம்பிக்கப்போறேன்.

    வாங்க ஊர்சுற்றி, (பெண்டிங்ல இருக்கிறது நினைவு இருக்கு)

    சாம், வர வர உங்க அலிம்பு தாங்க முடியல... (குவைத்ல.. குவைட்டா.. லைட்டா.. டைட்டா.. வர்ட்டா... [இன்னும் பத்து பதினஞ்சு இருக்கு, வேணா போதும்])

    சின்ன அம்மிணி, பொழச்சு போங்க.. (அன்பேசிவம் கமல்)

    ReplyDelete
  22. ஏய்... யார்ப்பா அது தமிழ்மணத்தில கோர்த்துவிட்டது? சரி.. கோர்த்ததுதான் கோர்த்தீங்க, ஒரு ஓட்டு கூடவா போடக்கூடாது?

    ReplyDelete

மனம் திறந்து செதுக்குங்கள், என் எழுத்துக்களை.